-->

முன்பக்கம் , , , � வம்பரங்கம் - 3

வம்பரங்கம் - 3

parliament food பாராளுமன்ற கேண்டீனுக்கு செல்லும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம். டீயும்  வடையும் அருமையாகவும், உயர் தரமாகவும் இருந்தது. வடை என்றால், பாதி தோசை அளவுக்கு.

“இந்த டீக்கும், வடைக்கும் விலை தெரியுமா” என எங்கள் அகில இந்திய சங்கத்தின் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த தோழர் அசிஸ்சென் கேட்டார். அந்தத் தொனியேச் சொல்லியது, மிகக் குறைந்த விலையாக இருக்கும் என்று.

ஆர்வமாக அவரைப் பார்த்தேன். சொன்னார். இரண்டின் விலையுமே ஒரு ருபாயின்  மதிப்பு கூட இல்லை. சில பைசாக்கள்தான். சிரித்தேன். “ரொம்ப அநியாயமில்ல” என ஹோவென்று சிரித்தார். “மக்களுக்காக, மக்களால், மக்களே” என்றேன். அவர் மேலும் பலமாய் சிரித்தார்.

இன்று ‘இந்தியா டூடே’ படித்த பிறகுதான் தெரிகிறது. அந்த விலைகள் ஒன்றும் பெரிதாய் இத்தனை வருடங்களில் கூடவில்லை என்பது. சிரிப்பு வரவில்லை.

  • டீ  - ரூ.1
  • சூப் - ரூ 5.50
  • பருப்பு - ரூ.1.50
  • சப்பாத்தி - ரூ.1.00
  • சாதம் - ரூ.2.00
  • தோசை - ரூ.4.00
  • வெஜ் புலாவ் - ரூ.8.00
  • தக்காளி சாதம் - ரூ.7.00
  • மீன் குழம்பு - ரூ.13.00
  • கோழி - ரூ.24.50

இப்படி நீள்கிறது அந்தப் பட்டியல். கடந்த 10 ஆண்டுகளாக இந்த விலைகளில் எந்த மாற்றமுமில்லையாம். பாராளுமன்ற வளாகத்திற்குள் விலைவாசி உயர்வுக்கு தடை செய்யப்பட்டு இருக்கிறது போலும்.

அந்தக் கட்டிடத்திற்குள் இருந்துகொண்டு இவர்கள் விலைவாசி உயர்வு பற்றி என்ன சிந்திப்பார்கள்? என்ன விவாதிப்பார்கள்?

Related Posts with Thumbnails

20 comments:

 1. புதிய பொருளாதார கொள்கையோ , பெட்ரோல் பொருட்களின் சர்வதேச விலையோ, பொருளாதார மந்தமோ எந்த வித பாதிப்பும் ஏற்படுத்திடாத இடம்

  ReplyDelete
 2. //பாராளுமன்ற வளாகத்திற்குள் விலைவாசி உயர்வுக்கு தடை செய்யப்பட்டு இருக்கிறது போலும். //

  ஒருவேளை பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் யாவரும் மக்களை விட ஏழைகளோ என்னமோ? :-))

  எனக்கு வேறுமாதிரி சிரிக்கத்தோன்றுகிறது..

  ReplyDelete
 3. அவர்கள் ஏழைகள்.. பாவம் :)

  ReplyDelete
 4. தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வலியுறுத்தி த.மு எ.ச,டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.அதில் கலந்து கொள்ளச் சென்றோம்.பேர.கதிரேசன்,டாக்டர்.ரவிகுமார்(ஸ்ரீ ரசா)நான்.ஆகியோரை மதிப்பிற்குரிய எம்.பி மறைந்த பி.மோகன் அவர்கள் நாடாளுமன்ற உணவு விடுதிக்கு அழத்துச்சென்றார்.கோழி பிரியாணி பதினைந்து ரூபாய். மாதவ்ஜி,எம்.பி களுக்கு நல்ல சம்பளம்தான்.ஆனால்,அசிஸ் சென்னும்,மோகனும் அதைக் கட்சிக்கு கொடுத்துவிட்டு,வெறும் 4500ரூ வண்டியை ஓட்டவேண்டுமே.அவர்களுக்காகவாவது "கேண்டீன்" நடக்கட்டுமய்யா..காஸ்யபன். .

  ReplyDelete
 5. பாராளுமன்றத்தில் நாற்காலிகளைத தூக்கிஎறியவே நேரம் போதாமல் இருக்கும்போது மக்களைப் பற்றிய சிந்தனை எதற்கு? இவர்கள் விலைவாசி உயர்வு பற்றி என்ன சிந்திப்பார்கள்? என்ன விவாதிப்பார்கள்? நல்ல கேள்வி.

  ReplyDelete
 6. From today's email recd:

  1 அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

  2 பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

  3 வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

  4 பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும்,தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

  5 ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

  6 நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

  7 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

  8 மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

  9 கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

  கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

  10 பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

  11 குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

  இந்த நிலை மாறுவது எப்போது?

  தூங்கும் பாரதமாதவைத்தான்(?) எழுப்பிக் கேட்க வேண்டும்!

  ReplyDelete
 7. இந்தக் கேண்டீன் மசால் வடைக்காகத்தான் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றம் பக்கம் செல்கிறார்கள் போலும்..

  ReplyDelete
 8. சேதுவின் பின்னூட்டம் செமையா இருக்குண்ணா..

  ReplyDelete
 9. Poor MPs. They spend their 24 hours thinking how to improve people's living status. So let them at least eat at a price not available for the poor people that they are working for.

  Vazga jananayakam

  ReplyDelete
 10. தம்பி சரவணக்குமார்!

  //இந்தக் கேண்டீன் மசால் வடைக்காகத்தான் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றம் பக்கம் செல்கிறார்கள் போலும்//

  உங்கள் கமெண்ட் மட்டும் என்னவாம்? :-))))))

  ReplyDelete
 11. //ஆனால்,அசிஸ் சென்னும்,மோகனும் அதைக் கட்சிக்கு கொடுத்துவிட்டு,வெறும் 4500ரூ வண்டியை ஓட்டவேண்டுமே.அவர்களுக்காகவாவது "கேண்டீன்" நடக்கட்டுமய்யா..காஸ்யபன். .//

  அந்த ரெண்டு பேருக்காக மீதி 542 பெரும் அனுபவிக்கனுமா? கம்யூனிஸ்ட் மாதிரியே யோசிக்க மாட்டேங்கிறீங்களே. 

  ReplyDelete
 12. "சேதுவின் பின்னூட்டம் செமையா இருக்குண்ணா.."
  இது எனக்கு வந்த ஈமெயில். இது வானம்பாடி ஐயாவின் பின்னோட்டத்துடன் கிடைச்சிருந்தா இன்னும் தூள் கிளப்பியிருபபாரு.

  ReplyDelete
 13. ஒருவேளை, எதிர்கட்சிக்காரர்களுக்கு அதிக விலையோ..? விலைவாசி உயர்வுக்காக ரொம்ப சண்டை போடுறாங்களே..!

  ReplyDelete
 14. அம்பிகா!
  //ஒருவேளை, எதிர்கட்சிக்காரர்களுக்கு அதிக விலையோ..? விலைவாசி உயர்வுக்காக ரொம்ப சண்டை போடுறாங்களே..//

  வம்பிகா!

  ReplyDelete
 15. //மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். //

  ithu suuuuper!


  //அம்பிகா!
  //ஒருவேளை, எதிர்கட்சிக்காரர்களுக்கு அதிக விலையோ..? விலைவாசி உயர்வுக்காக ரொம்ப சண்டை போடுறாங்களே..//

  வம்பிகா!//

  அதானே???! :-))))

  ReplyDelete
 16. உட்டாலங்கடி கிரிகிரிகிரி
  சைதாப்பேட்டை வடைகறி
  கேண்டீனு விலைய கேட்டு
  ஆடிப்பூட்டான் பக்கிரி
  இது இன்னா வெலவாசிங்கோ...
  நாம இதுக்கு முன்ன எப்ப பாத்தங்கோ..

  நாட்டின் மிக உயர்ந்த இடத்திலேயே இவ்ளோ கம்மியா கீதுன்னா மத்த எடத்துல எம்மாம் கம்மியா இருக்கும்னு பாத்துக்கப்பா...சுதந்திர நாளன்னக்கி கொடியேத்தி முட்டாயி குடுப்பாங்க..வாங்கிகினு..கம்முனுகடப்பா...

  ReplyDelete
 17. அவர்கள் ஏழைகள்.. பாவம் :)

  ReplyDelete
 18. ம்ம்!!!
  சேதுவின் பின்னூட்டம் செமை!!! நான் என்றைக்கோ பாராளுமன்ற கட்டடத்தை பிணங்களின் கூடாரமாக எண்ணிப் பழகிவிட்டேன்... அங்கே டீ ஒரு ரூபாய்க்கு விற்பது கூடுதல் விலைதான்.

  ReplyDelete
 19. I am looking for such type of informative news and i get through this blog so i am very much thankful to you for sharing such a great information.
  - ruby on rails development

  ReplyDelete
 20. Well said, They don't think about anything.

  ReplyDelete