-->

முன்பக்கம் , , , � ‘தலை’ விதி

‘தலை’ விதி

அருகில் செல்லவே முடியாத துர்நாற்றம் வீசும் கார்ப்பரேஷன் லாரியின் குப்பைக்குள்ளிலிருந்து தவறி கீழே விழுந்தது. காகிதம் என்று அருகில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டு,  ஃப்ளக்ஸின் காரநெடியில் முகம் சுளித்து, சின்னதாய் தும்மி அங்கிருந்து நகர்ந்தது கழுதை. மோப்பம் பிடித்து வந்த நாய் அதைக் கவ்விக் கொண்டு காய்ந்த மலங்களின் மீது  இழுத்தபடி ஓடி, கொஞ்சதூரத்தில் போட்டு விட்டுச் சென்றது. பஸ் ஒன்றை ஓவர்டேக் செய்த லாரியின் சக்கரத்தில் சிக்குண்டு, சிதைந்து, புழுதியோடு சுருண்டு முட்செடிக்குள் மாட்டித் தொங்கியது.

கடந்த இருபது நாட்களாக நகரம் முழுவதும் போகிற வருகிற மனிதர்களையெல்லாம் வானுயர நின்று பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த தலைவரின் ஆயிரக்கணக்கான தலைகளில் ஒன்று அது.

(வலைப்பக்கம் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதியதை ’தலை’ப்பு மாற்றி இட்ட மீள்பதிவு.)

Related Posts with Thumbnails

10 comments:

 1. கலக்கல்... இந்தமாதிரி (கிட்டத்தட்ட கவிதை போலவே) சொற்சித்திரம் உங்கள் பக்கம்தான் பார்க்க முடிகிறது. ஒரு குறுங்கதை போன்றும் இருக்கிறது.

  அன்புடன்
  ஆதவா.

  ReplyDelete
 2. அருமை, நன்றிகள்.

  கழுதைக்கு தெரியுமா கழகத் தலைவரின் சாதனை.

  ReplyDelete
 3. அந்தக் காட்சி, தலை தரையில் உருண்டாலும், மீசையில் மண்ணு ஓட்டலேன்னு சொல்லுற, நம்ம அரசியல்வாதிகளை பிரதிபலிக்கின்றது போலும்.

  ReplyDelete
 4. சிறியதாக எழுதினாலும் அதற்குள் ஆயிரம் கருத்துக்கள். அண்ணா உங்களது இதுபோன்ற பகிர்வுகள் மிகவும் அருமை. அடிக்கடி எழுதுங்கள்.

  ReplyDelete
 5. அந்த தலையின் விதி இத்தனை மோசமாக இருந்திருக்க வேண்டாம்.

  ReplyDelete
 6. கடந்த மே மாதம் எனது புத்திரனின் போட்டித் தேர்விற்காக மதுரை வந்திருந்தேன், தேர்வு முடிந்தவுடன் திருப்பரங்குன்றம் சுவாமியை தரிசனமும் செய்தேன், அப்போது திருப்பரங்குன்றத்தில் நான் கண்ட காட்சி என்னை அதிர வைத்தது சற்றே, காதணி விழா, பூப்பு நீராட்டு விழா போன்றவற்றிற்கு கூட பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார்கள், நமது மறத் தமிழர்கள், அதிலும் பூப்பு நீராட்டு விழா பெண்ணை அலங்கார கோலத்தில் பிளக்ஸ் பேனரில் பெரிய அளவில் வைத்து உள்ளதை என்னால் மறக்கவே இயலவில்லை , எங்கிருந்து வந்தது இந்த கலாச்சார சீரழிவு என்றே தெரியவில்லை , எனக்குதெரிந்த வரை வட நாட்டில் இந்த அளவு பிளக்ஸ் மோகம் இல்லை என நினைக்கிறேன், எதை தின்றால் பித்தம் தெளியும் என்று மக்களும் இருக்கிறார்கள், நம்மை ஆள்பவர்களும் இருக்கிறார்கள், மிகவும் வருத்தமாக உள்ளது

  ReplyDelete
 7. என்னதான் சொல்லுங்க.. கழுதைக்கு இருக்கிற தைரியம் நமக்கு இல்லாமப்போச்சே...

  ReplyDelete
 8. மன்னிக்கவும். ரசிக்க முடியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களை தர குறைவாக விமர்சனம் செய்வதை ஏற்க இயலாது.

  ReplyDelete
 9. really very nice information sharing and i am looking for such type of informative news and i get through this blog so i am very much thankful to you.
  - zen cart development

  ReplyDelete