நெஞ்சுக்கு நீதி

முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு நினைத்தது. எனவே ஒரு சட்டம் இயற்றி முயலிடம் அறிவித்தது.

“முயலே நான் சொல்வதைக் கேள். நான் இனி மேல் முன்கூட்டியே சொல்லாமல் உன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன். கதவைத் தட்டி முன் அனுமதி பெற்றுத்தான் வருவேன். சொல்லாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால், நீ பயப்படாமல் என்னிடம் புகார் செய்யலாம். அந்த உரிமையை உனக்கு கொடுக்கிறேன்”

இப்படி ஒரு சட்டத்தையும், உரிமையையும் அறிவித்த பிறகு ’இந்தச் சட்டத்தை முயல் சரியாக பயன்படுத்துமா, பயன்படுத்தாதா?’ என யோசித்த பாம்பு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் முயலின் வீட்டுக்குள் புகுந்து முயலின் குட்டி ஒன்றை விழுங்கி விட்டது. பின்னர் வெளியே வந்து நின்று கொண்டது. முயல் புகார் செய்ய வருகிறதா இல்லையா என காத்திருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் முயல் வெளியே வரவில்லை. பாம்புக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. பொறுமையிழந்து முயலின் வீட்டுக்குள் பாய்ந்து சென்று முயலைப் பிடித்து கேட்டது.

“நான் கொண்டு வந்த சட்டத்தை நீ ஏன் பின்பற்றவில்லை?”

முயல் அமைதியாகப் பதில் சொன்னது.”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.”

பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் இப்படி அறிவித்தது:

“இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்”.

(இது ஒரு மீள் பதிவு. ‘எல்லாம் சட்டப்படிதான்’ என்னும் சீனப் பழங்கதை. தலைப்பு அதுவாகவே இப்படி மாறியிருக்கிறது!)

தமிழக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால்,  பழிவாங்கப்பட்டு இருக்கும் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கருக்கும்,  பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பதிவர் சங்கருக்கும் ஆதரவளிப்போம். அரசின் அடக்குமுறைக்கு நமது கண்டனங்களைத் தெரிவிப்போம்.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கு கண்டிக்கத் தக்கது.

    பதிவரொருவர் கைது செய்யப்பட்டிருக்கும் வேளையில் தமிழக பதிவர்கள் சென்னையில் ஒன்று கூடி, போராட்டம் நடத்தும் திட்டமிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  2. ஒரு காலத்தில் மனநிலை சரியில்லாதவர் என்று பொய்பிரச்சாரம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அதே உமாசங்கர்தானே? நான் முன்பு கூறிய அதே கருத்தையே இப்போதும் கூறுகின்றேன்: இதுநாள் வரையிலும் கொள்ளையடித்து சேர்த்த மக்கள் பணத்தை எப்படி பாதுகாப்பது என்ற கவலை கருணாநிதி குடும்பத்தை பிடித்து ஆட்டுகின்றது, எனவே நியாயம் பேசுபவர்களைக் கண்டாலே கருணாநிதிக்கு பேயைப் பார்த்தது போல கால் வழியே மூத்திரம் போகின்றது. ஆத்திரமும் கோபமும் இன்னும் அதிகரிக்கும் எனவே அடக்குமுறை ஆட்கடத்தல் அடிதடி பொய்வழக்கு எல்லாம் இன்னும் உச்சகட்டத்தை எட்டும். தமிழக மக்கள் இவற்றை சந்திக்க ஆயத்தமாக வேண்டும். (நக்கீரன் பத்திரிகை கருணாநிதி வீட்டு அடுப்படித் துணி ஆகி ரொம்ப நாள் ஆச்சு).
    இக்பால்

    பதிலளிநீக்கு
  3. நெஞ்செல்லாம் ”நிதி”யாகவே இருந்தால் நெஞ்சுக்கு ” நீதி” எங்கே இருக்கும்.இந்த மலைப்பாம்பு விழுங்கிய முயல்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகயிருக்கும்.அதில் லேட்டஸ்ட் முயல்தான் உமாசங்கர். பாம்புக்கு எனது கடும் கண்டணங்கள்.

    பதிலளிநீக்கு
  4. கொடுமையான ஆட்சி..

    ”சாப்பிட மட்டும் வாயை திறக்கவேண்டும்” என்று சட்டம் கொண்டுவந்து விடலாம்...

    பதிலளிநீக்கு
  5. சமீப கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌து, ந‌ட‌ப்ப‌வைக‌ளை
    நாட்டு ம‌க்க‌ள் அமைதியாய் க‌வ‌னித்து வ‌ருகிறார்க‌ள்.
    த‌மிழ்நாடு ஊட‌க‌ம், த‌விர்த்து, இள‌ம் த‌லைமுறை.
    முறைகேடுக‌ளை, கூகுள், யுடுயூப் என‌ ப‌ல‌வேறு
    த‌ள‌ங்க‌ளில் தேடி, ப‌ல‌ருட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறார்க‌ள்.
    ப‌ல்வேறு த‌ர‌ப்பிலும்,ம‌க்க‌ள் மிக‌ அமைதியாய்.
    இது புய‌ல் க‌ருக்கொள்ளும் அமைதிக்குப்பின் புய‌லாய்
    மாறும் சூழ‌லை அர‌சிய‌லும், காவ‌லும் அறிந்தோ,
    அறியாம‌லோ உருவாக்குகிறார்க‌ள். புய‌லின் தாக்க‌ம்
    த‌னுஷ்கோடியில்40 ஆண்டுக‌ளுக்கு முன்பு. அர‌சிய‌ல்
    புய‌லும் அடித்து ஓய்ந்த‌து அப்போதுதான்.
    த‌மிழ‌க‌ அர‌சு இல‌ச்ச‌ணை சொல்கிற‌து 'வாய்மையே வெல்லும்'

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான கதை. பகிர்ந்ததற்கு மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு
  7. //நெஞ்செல்லாம் ”நிதி”யாகவே இருந்தால் நெஞ்சுக்கு ” நீதி” எங்கே இருக்கும்.இந்த மலைப்பாம்பு விழுங்கிய முயல்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகயிருக்கும்.அதில் லேட்டஸ்ட் முயல்தான் உமாசங்கர். பாம்புக்கு எனது கடும் கண்டனங்கள்.//

    athey....

    பதிலளிநீக்கு
  8. வலியவன் எளியனை வீழ்த்துவதற்கு தனக்குத் தானே மகுடம் ஏற்றுவது இன்றன்று நடப்பதல்ல! ஆளுமை உடையவர்களது சட்டதிட்டங்களும் அவர்களது அரணே!

    பதிலளிநீக்கு
  9. கருணா அவர்கள் சொன்னதுபோல இந்த பாம்புகள் விழுங்கிய முயல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது போலயே..

    பகிர்வு அருமை. பதிவர் சவுக்கு சங்கர் கைதுக்கு கடுமையான கண்டனங்கள்.

    பதிலளிநீக்கு
  10. //charliecharlie2007 said...
    ஒரு காலத்தில் மனநிலை சரியில்லாதவர் என்று பொய்பிரச்சாரம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அதே உமாசங்கர்தானே? //

    நம்ம நாட்டுல நேர்மையானவங்கன்னாலே மனநிலை சரியில்லாதவங்கன்னு ஆயிருச்சோ?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!