தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் பொய்களுக்கும், உண்மைக்கு புறம்பான அறிக்கைகளுக்கும் அளவில்லாமல் போய்விட்டது.
அண்மையில் உத்தப்புர தலித் மக்களுக்காக குரல்கொடுத்த சி.பி.எம் தோழர்கள் மீதும், அவர்களோடு அணிவகுத்த தலித் மக்கள் மீதும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தமிழக காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து கண்டனங்களும், பிரச்சாரமும் எழுந்தபோது போது த்மிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டார். நாளிதழ்களில் வந்திருந்தது.
மதுரையில் இந்த சம்பவம் நடந்த அதே நாளில் உத்தப்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கைய்ழுத்திட்ட பத்திரிக்கை குறிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் சொல்கிறார். ”உத்தப்புரத்தில் கடந்த சில வருடங்களாக இரு சாதி மக்களிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவிவருவதாக சில அரசியல் கட்சிகள் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் உண்மையில் உத்தப்புரத்தில் அனைத்து சாதியினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்திற்க்காகவும், சுயநலத்திற்காகவும் உத்தப்புரம் கிராமத்தை பயன்படுத்தி வருகிறார்கள். எங்களுக்குத் தேவையான அடைப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நல்ல முறையில் செய்து வருகிறது.” என அந்த பத்திரிகைக் குறிப்பு தெரிவிப்பதாகவும் சொல்லி இருந்தார்.
இரண்டு வருடங்கள் பிரச்சினையே இல்லை என்றால், இரண்டு வருடங்களுக்கும் மேலாக உத்தப்புரத்தில் காவல்துறையினரை இரவு பகலாக ஏன் வைத்திருக்க வேண்டும்? அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தருகிறது என்றால், ஏன் இன்று வரை பஸ் நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைத்துத் தரவில்லை? தலித் மக்கள் பகுதிக்குள் செல்லும் ஊரின் சாக்கடையை ஏன் மூடவில்லை?
இதையெல்லாம் மூடி மறைத்து, வெளியிட்ட முதலமைச்சரின் அறிக்கை இப்போது பொய்யோ பொய்யென அம்பலமாகியிருக்கிறது. .21.7.2010 தேதி ஜூனியர் விகடனில் உத்தப்புரம் பஞ்சாயத்துத் தலைவர் புஷ்பம் அளித்துள்ள் பேட்டி இது:
”எங்கள் ஊரில் அமைதி நிலவுறதா நான் அறிக்கை வெளியிடவே இல்லை. போலீஸ் உயர் அதிகாரி ஒருத்தர்தான் இந்த மாதிரி பேட்டி கொடுக்கச் சொன்னார். இப்படிப் பொய்யான பேட்டி கொடுத்தா, எங்க சாதி மக்களே என்னைத் திட்டுவாங்க. பேட்டி குடுத்துட்டு மருந்தக் குடிச்சிட்டுச் செத்துரவான்னு நான் நறுக்குத் தெறிச்ச மாதிரி கேட்டதும் அந்த அதிகாரி திரும்பிப் போயிட்டார். ஆனா அடுத்த நாளே பத்திரிகையில் என் பெயரில் சென்னையில் இருந்து அறிக்கை வந்துடுச்சு. என்னமோ குளறுபடி நடக்குது”.
இப்போது குளறுபடியும் தெளிவாகிவிட்டது.
குட்டும் உடைந்திருக்கிறது.
குத்தும் விழுந்திருக்கிறது!


இந்த மாதிரி கருணாவின் முகத்திரையை கிழிக்கும் அற்புதமான விஷயங்களை ஜெயா ஏன் கையில் எடுப்பதில்லை ?
ReplyDeleteபெருசுக்கு குத்து விட்டது யாரு? சிபிஎம்மா...போலிஸதிகாரியா...இல்ல அந்த ஊராட்சிமன்ற தலைவியா.. நானே ராஜா நானே மந்திரி போல..தானேகேள்வி..தானேபதில் கேசு ஆயிடுச்சி பெருசு.உட்டுத்தள்ளுங்கப்பா..
ReplyDelete'என் குடும்பத்துல வெட்டுக்குத்தே இல்ல, நாங்க எல்லாரும் சமாதானமாத்தான் இருக்கோம்' கருணாநிதி இப்புடி சொன்னா எப்புடி நாமள்லாம் ...ல சிரிப்போமோ அப்புடித்தான் இதப் பாத்தவுடனே ...ல நானும் சிரிச்சேன்...
ReplyDeleteஇக்பால்
இன்னும் பல குட்டுகள் வெளிப்படட்டும்... குத்துகள் நிறைய விழட்டும்... :-) (வாக்குகள் அல்ல)
ReplyDeleteசீசனோட சீசனா, ஒரு குத்து விட்டாச்சு போலயே.. :-))
ReplyDeleteElection timil mattume intha Communistugalukku "THEENDAAMAI" Patriya Vizhippunarvu varugirathu. (Veyil kalmunna verkkira maadiri), athuvum DMK dhayavaala MP -aana Rangarajan Iyangaar-kku.
ReplyDeleteEllam vesham! Evanum Inge Uththamanillai! Ida Othukkeedu irukkum varai, athaavathu Jaathiyaal payanadayum varai athu irukkum! athu appappo ippadi kadikkum!Communisttugal undiyal kulukka, Election Stunt adikka athu payanapadum!
Kadantha aatchiyil Pappa patti, Keeripttiyile therthale 10 years nadatha mudiyaamal irunthathe??? appo Rangarajan enge ponaar???Varatharajan Enge ponaar??.
Siruthaavoorile DALIT nilam akkiramikka patatharkku SATTAMANDRAM nokki nadaipayanam poyi manu koduthaanga??? Needibathi SIVASUBRAMANIYAM Commission arikkai-yila PANCHAMI NILAM akkiramippu unmay! athai arasu meettu baathikkapattavargalukku tharanamunnu sonnathu!
Kedu Ketta Communisttugal Enge adutha Electionil seattu koranjidummonnu OOMAY-ayittaanungo!
Ithellam Election STUNT-nnu Ella makkalukkum theriyum!
Innum Ezhutha naan ready! Edit pannaama Veliyida Neenga readyaa???
Note: Rangaraajan Iyangar than maganukko magaukko"Utthappuram DALIT veettil Pennedukka Sammathamaa?
Election timil mattume intha Communistugalukku "THEENDAAMAI" Patriya Vizhippunarvu varugirathu. (Veyil kalmunna verkkira maadiri), athuvum DMK dhayavaala MP -aana Rangarajan Iyangaar-kku.
ReplyDeleteEllam vesham! Evanum Inge Uththamanillai! Ida Othukkeedu irukkum varai, athaavathu Jaathiyaal payanadayum varai athu irukkum! athu appappo ippadi kadikkum!Communisttugal undiyal kulukka, Election Stunt adikka athu payanapadum!
Kadantha aatchiyil Pappa patti, Keeripttiyile therthale 10 years nadatha mudiyaamal irunthathe??? appo Rangarajan enge ponaar???Varatharajan Enge ponaar??.
Siruthaavoorile DALIT nilam akkiramikka patatharkku SATTAMANDRAM nokki nadaipayanam poyi manu koduthaanga??? Needibathi SIVASUBRAMANIYAM Commission arikkai-yila PANCHAMI NILAM akkiramippu unmay! athai arasu meettu baathikkapattavargalukku tharanamunnu sonnathu!
Kedu Ketta Communisttugal Enge adutha Electionil seattu koranjidummonnu OOMAY-ayittaanungo!
Ithellam Election STUNT-nnu Ella makkalukkum theriyum!
அருமையான பதிவு!!!
ReplyDeleteஆனால் நீங்களும் சுயநலவாதி தான்....
இந்த போராட்டத்தில் உங்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களுக்காக இரண்டு பதிவுகள்,
பல்லாயிரம் தமிழ் மீனவர்கள்,இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்காக ஒரு பதிவு எழுதலாமே?? அதற்கு கண்டனம் தெரிவிக்கலாமே... அந்த மீனவர்களும், உங்கள் கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டுமா? அப்போது தான் பதிவு எழுதுவீர்களா??
உத்தப்புரத்தில் இரண்டு ஆண்டுகளாக காவல்துறை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் அங்கு நடக்கும் கூத்துகளும் தமிழகமே அறிந்தவை. எனது ஊரைச்சேர்ந்த தம்பி ஒருவர் அங்கு காவலராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த முறை ஊருக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்தேன். அங்கு நடக்கும் கொடுமைகளை கதை கதையாகச் சொன்னார்.
ReplyDeleteஆட்சியாளர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்கிறார்கள். எப்படியாவது மக்களை நம்ப வைத்து மீண்டும் அரியணையிலேறும் தந்திரம் தவிர்த்து உருப்படியாக எதுவும் செய்வதற்காக யோசிப்பதேயில்லை. இன்னும் கூட பல குட்டுக்கள் வெளிப்படலாம். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் உத்தி நமது முதல்வருக்கு பல்லாண்டு கால வாடிக்கை.
'பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்று மகாகவியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
கலைஞரை பார்த்து எம துர்மன்னுகே பயம் .....எமலோகம் வந்தாலும் அங்கும் தனக்கும் தன் மகன்களுகும் பதிவி கேடுபறூ என்று தன் !!!!
ReplyDeleteபாப்பாபட்டி,கீரிப்பட்டி மற்றும் நாட்டார்மங்கலம் பஞ்சாயத்து தேர்தல்களை திறம்பட தான் நடத்தி முடித்ததாக கூறுகிறார். சி.பி.எம் கட்சியும் தமுஎச வும் போராட்டத்தை நடத்தி அதன் மூலமாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டதை (“வரலாற்றை” கலைஞர் முழுப்பூசணிக்காயை இட்லியில் மறைத்துவிட்டார்.
ReplyDeleteபஞ்சாயத்து தேர்தல் தொடர்பான ஆவணப்படத்தில் மாவட்ட ஆட்சியரே இயக்கம் நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தபுரம் தொடர்பான ஆவணப்படத்தை முதல்வருக்கு அனுப்பிவையுங்கள் தோழரே..
பதிவுலகின், இந்த குத்து வாரத்திலேயே, சிறந்த குத்து.
ReplyDeleteபெருசுக்கு குத்து விட்டது யாரு?
ReplyDeleteஐயா சாய் கோகுல கிருஷ்ணா அவர்களே,
ReplyDeleteதயவு செய்து குறைந்த பட்சம் தமிழ் செய்திதாள்களை படிக்கவும்
உத்தபுரம் பிரச்னையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த போது ஒரு தேர்தல் எழவும் இல்லை
நீங்கள் எங்கு எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் தயவு செய்து
சிறிதேனும் மார்க்சிஸ்ட் கட்சினரின் தீண்டாமைக்கு எதிரான போராட்ட வரலாறை
கொஞ்சமாவது படித்துவிட்டு எழுதவும்.
இட ஒதுக்கிடிர்க்கும் கொழுப்புடன் ஒரு குறிப்பிட்ட மனித இனத்தை பொது
பாதையில் நடக்கவிடாமல் அராஜகம் செய்வதற்கும் என்ன சம்பந்தம்?
சதியால் ஒடுக்குமுறை செயும்வரை இடஒதுகீடு இருக்கும். அதற்காக
ஒரு சமுதாய மக்களுக்கு நிழற்குடை கூட கட்டி தர மாட்டோம் என்பது
கோயில் எங்களுக்குத்தான் சொந்தம் என்பது எல்லாம் உத்தமதனமா? இது தான்
மனித நாகரிகமா? இந்த மாதிரியான செயல்களுக்கு கோபப்பட மனிதனாக இருந்தால் மட்டும்
போதும். சம்பந்தியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
தங்களது கோட்டை கழட்டிவிட்டு தயவுசெய்து மனதில் கைவைத்து பேசவும்
சிறுதாவூர் பஞ்சமி நிலத்தை பாதிக்க பட்டவர்களுக்கு திருப்பி தரவேண்டும் என்பதில்
CPMனருக்கு எந்த ஆட்சேபமும் இல்லை
மனிதன் பிறந்ததிளிருந்து இறப்புவரை அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும் காசு திருடி அரசியல்
பிழைப்பு நடத்துவதை விட கேவலமான கீழ்த்தரமான விஷயம் ஏதுமில்லை. மக்களிடம் வசூல் செய்து
மக்களுக்கு போராடுவது என்ன தவறு.
கண்டிப்பாக பதில் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
அழகுமுகிலன்