-->

முன்பக்கம் , , , , � இதுதான் உங்கள் சமத்துவமோ, கலைஞரே!

இதுதான் உங்கள் சமத்துவமோ, கலைஞரே!

மிருகவெறியோடு, தமிழக காவல்துறை தாக்கியிருக்கிறது. சமத்துவபுரத்தைத் தந்தவர் என்றும், வாழும் பெரியார் என்றும் அழைக்கப்படுகிறவரின் ஆட்சியில்தான் இந்த கொடூரத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

உத்தபுரம் குறித்து ஏற்கனவே தீராத பக்கங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. ஆதிக்கசாதியினரால் எழுப்பப்பட்ட சுவரின் ஒருபகுதி, சி.பி.எம் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தின் வருகையொட்டி இடிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் அதன் வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பேருந்துகள் நிற்கும் அரச மரத்தின் அருகே ஒரு நிழற்குடை அமைக்க வேண்டுமென தலித மக்கள் கேட்கிறார்கள். அரசு மறுத்து வருகிறது. ஆதிக்க சாதியினரோ, அங்கு நிழற்குடை கட்டக் கூடாது, பரம்பரை பரம்பரையாய் புழங்கிவரும் அரசமரத்தையொட்டிய அந்த பகுதியை தங்களுக்கு பட்டா போட்டுத் தர வேண்டுமென  எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அதாவது தலித் மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உட்காரக் கூடாது,  நிற்க வேண்டும் என்பதுதான் இதன் சூட்சுமம்.

இந்தப் பிரச்சினையை நேர்மையாக, சமத்துவமாக தீர்த்து வைக்காமல் உத்தப்புரத்தில் எப்போதும் காவல்துறையினரை நிறுத்திவைத்து அமைதி காத்துக்கொண்டு இருக்கிறது தமிழக அரசு. இதுகுறித்து ஆதிக்கசாதியினருக்கும், தலித் மக்களுக்கும் பிரச்சினை வரும்போதெல்லாம் காவல்துறை தலித் மக்களை தாக்கும். கைது செய்யும். பொய்வழக்கு போடும். தலித் மக்கள் குடியிருப்புகளை நொறுக்கும். இதுதான் ‘அமைதி’ காக்கும் லட்சணம்!

இந்தக் கொடுமைகளை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. நேற்று சி.பி.எம் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவருமான தோழர். சம்பத், சி.பி.எம் பாராளுமன்ற உறுப்பினர் தோழர். டி.ஏ.ரெங்கராஜன், எம்.எல்.ஏக்கள் நன்மாறன், எஸ்.கே மகேந்திரன்  ஆகியோர் கலந்துகொண்ட முற்றுகைப் போராட்டம் மதுரை ஆட்சியர் வளாகத்தில் நடந்திருக்கிறது.

உத்தப்புரத்தில் பஸ் நிறுத்தத்தில் ஒரு சின்ன நிழற்குடை அமைக்க மறுத்த அரசு, காவல்துறையை ஏவிவிட்டிருக்கிறது. பெண்கள், தோழர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டு இருக்கின்றனர். தோழர். சம்பத், தோழர். டி.கே ரெங்கராஜன் ஆகியோரும் தாக்குதல்களுக்குள்ளாகி  இழுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர்.

uthapuram sampath[2]

  தாக்கப்ப்பட்டு வீழ்ந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர் சம்பத் இழுத்துச் செல்லப்படுதல்
uthapuram 14[2]

  டி.கே ரெங்கராஜன் எம்.பியை இழுத்துச் செல்லுத்ல்
uthapuram 3[2] எம்.எல்.ஏ மகேந்திரன் தூக்கிச் செல்லப்ப்படுதல்
uthapuram 8[2] எம்.எல்.ஏ நன்மாறன் இழுத்துச் செல்லப்படுதல்

சாதீயத்தின் வேர்கள் புரையோடிப்போயிருக்கும் இந்த மண்ணில் அதனை எதிர்த்துப் போராடுகிறவர்களுக்கு இந்த அரசு கொடுத்திருக்கும் வெகுமதி இது. ‘சமத்துவம்’ என்பதற்கு இங்கே காவல்துறையினரின் தடிகளே அர்த்தம் எழுதி இருக்கின்றன. இந்த அரசுகளுக்கு மனு வழங்கியிருக்கும் கொடைதான் இந்தத் தடிகளூம்!

(இதுகுறித்து எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் கண்டன்ம் இங்கே)

Related Posts with Thumbnails

16 comments:

 1. Is there any rule of law in Tamil nadu ??No..No..Only a BARBARIC RULING IS GOING ON..We shame for your ruling M.Karunnanithi..You will have to answer to Tamil nadu people.
  We strongly condemn the BARBARIC ACTIONS OF POLICE AND DMK REGIME..The incidents totally exposed the anti SC STANDS OF M.kARUNANIDHI,Police and DMK combinations..No democratic values in Tamil nadu .
  The High court must take the incidents suo mottu and send notice to Tamil nadu government for undemocratic actions and Police excess violating human rights

  ReplyDelete
 2. The excellant photos send to you were taken by YOUNG DYNAMIC PHOTOGRAPHER com.Lenin of Theekkathir MADURAI .

  ReplyDelete
 3. சாதி தீண்டாமைக்கு எதிரான தங்களது பங்களிப்புகளுக்கு வாழ்த்துக்கள். உங்களது சட்டமன்ற முன்னாள் தலைவர் திருப்பூர் எம்.எல்.ஏ வை நேற்று முன்தினம்தான் கருணாநிதியை பாராட்ட போகிறார் என்பதற்காக நீக்கியதாக அறிந்தேன். இச்செய்தி உண்மையானால் அவரை நீங்கள் சட்டமன்ற தலவைர் பொறுப்பிலிருந்து நீக்கிய அன்றே அல்லவா கட்சியிலிருந்தும் நீக்கி இருக்க வேண்டும்.  ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்கு தவறின் தன்மை பற்றிய பீரியாரிட்டியில் தெளிவு இருப்பது அவசியம்.

  எந்த குற்றம் முதன்மையானது (அதாவது கட்சியை விட்டு நீக்குமளவிற்கு) கருணாநிதியை பாராட்டி விழா நடத்துவதா அல்லது 25 இலட்ச ரூபாய் முதலாளிகளின் சார்பில் வசூலித்து தொழிலாளிகளின் எட்டு மணி நேர வேலையை அதிகரிக்க சட்டபூர்வ அங்கீகாரம் கோரி முதல்வரை சந்தித்து கையளித்த்தா...

  ReplyDelete
 4. அன்பு மாதவ்

  அராஜக வன்முறை வெறியாட்டத்தில் காவல் துறை இறங்குவதில் வியப்பில்லை. அதை ஊக்குவிக்கிற, தூண்டிவிடுகிற, வேடிக்கை பார்க்கிற அரசையும், அதை அம்பலப்படுத்தாத சாதுரியத்துடன் செய்தி வெளியிடும் அல்லது வெளியடாது தவிர்க்கும் ஊடங்களையும் அறிந்தே இருக்கிறோம்.

  புகைப்படங்கள், நடந்து கொண்டிருக்கும் கொடுமையைக் காட்டுவதை விடவும் இன்னும் தீவிரமாய் வலுக்க வேண்டிய போராட்டங்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றன.

  காங்கியனூரில் கைவரிசை காட்டிய
  காக்கிப் படைக்கு
  இடதுசாரிகளின் ரத்த ருசி விடவில்லை போலும்

  சமத்துவம் பேசும் சாகசக்காரர்களின் ஆட்சியில்
  சாதியத்தின் நிரூபணம்
  உத்தபுரத்தில் மட்டுமல்ல
  ஒவ்வொரு புரத்திலும்

  மரபணுவில் பாய்ந்திருக்கும்
  சாதியத்தின் வெறித்தனம்....

  ஓங்கித் தாக்குகிற சாதியத்தின் கரங்களை
  ஒடித்துப் போடும் வரை
  ஓயப் போவதில்லை
  சாதியத்திற்கு எதிரான சமர்களும்...


  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 5. தமிழர்களின் நம்பர் ஒன் விரோதி யாரெனில் கருணாநிதிதான். தன் குடும்பத்துக்கோ ஆட்சிக்கோ கேடு எனில் உயிரை எடுக்கவும் தயங்காத குடும்பம் கருணாநிதி குடும்பம். பூலாவரி சுகுமாரன் தொடங்கி, சிம்சன் தொழிற்சாலை, டி.வி.எஸ். தொழிற்சாலை வழியாக செத்து மடிந்த 18 மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் உட்பட கருணாநிதியால் செத்த தமிழர்கள் ஏராளம் ஏராளம். இவர் தான் தமிழகத்தில் மே தினத்துக்கு பூங்கா கட்டியதாக, மே தினத்துக்கு விடுமுறை விட்டதாக வெட்கம் ஏதும் இன்றி அவ்வப்போது கதைப்பார்.
  இப்போதும் ஊருக்கு நடுவே ராட்சச தனமாய் திமிரோடு எழும்பி நிற்கும் சாதிப்பிரிவினைக் கோட்டை சுவரை உடைக்க துப்பில்லாமல் தமிழனை சாதி ரீதியாய் பிரித்து வைக்கும் கருணாநிதி, பெரியார் என்ற மேன்மை மிகு சொல்லை வாயால் சொல்லவும் தகுதியற்ற கருணாநிதிதான் தான் தலித்துக்கு சம்பந்தி என்று ஒரு போர்டை எடுத்து அவ்வப்போது கழுத்தில் மாட்டிக்கொள்வார்.
  தமிழ் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இரக்கமின்றி அழித்துவிட்டு, தமிழர்களை எப்போதும் சாராய மயக்கத்தில் ஆழ்த்தி வேட்டி அவிழ தெருவில் புரள வைத்துவிட்டு, தமிழகத்தில் சனநாயக இயக்கங்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை போலீஸ் ப்ளஸ் தி.மு.க. ரவுடிகளை ஏவி ரத்தக்காட்டேறித் தனமாய் அடிதடி லத்திசார்ஜ் கேள்வி கேட்பார் இல்லாமல் லாகப்பில் அடைப்பு, கண்காணாத இடத்துக்கு கடத்தி கொண்டுபோய் வைப்பது போன்ற ரவுடித்தனமான ஆட்சியை நடத்திக் கொண்டு, தமிழனை சாதி ரீதியாய் பிரித்துவைத்துவிட்டு , தமிழகத்தை தன் குடும்ப சொத்தாக மாற்றி மாவட்டத்துக்கு ஒரு பிள்ளை என கூறுபோட்டு விற்றுவிட்டு தமிழகத்தையும் தமிழையும் கருணாதி குடும்பம் சீரழிக்குது.
  குரங்கு கையில் பூமாலை.
  உடன்பிறப்பே, நமக்கென்ன மனக்கவலை? குறளோவியமும் நெஞ்சுக்குநீதியும் முரசொலியும் படித்து டாஸ்மாக் சரக்கடித்து தெருவில் தூங்குவோமாக! வாழ்க கலைஞர்! வளர்க செம்மொழி!
  இக்பால்

  ReplyDelete
 6. Nice post...

  Your question is correct.

  Then, How are you posting every day???

  ReplyDelete
 7. மிக சூடான பதிவு!!!

  உத்தபுரம் தீண்டாமைக் கொடுமையை இன்னும் நீடிப்பதைக் கண்டிக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே. ரங்கராசன் மற்றும் தோழர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம்!!!

  ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்காக தாங்கள் எழுதிய பதிவுக்கு நன்றி!!!

  அதே போல், தமிழனாக இருந்து,

  தமிழனை கொலை செய்த சிங்கள கடற்படையில் தலைவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினால் கைது!! இது தான் இந்திய தேசியம், திராவிட தேசியம்... தமிழக அரசின் சனநாயக விரோதப் போக்குகளுக்கு எதிராக,முடிந்தால் தாங்கள் ஒரு பதிவு எழுதலாமே???

  ReplyDelete
 8. Mr. Mathavaraj
  Pl understand Our Cm is a great oratt a votetor but not a doer. I can tell u CPI leaders had intercast marriages eg Comrade Mr.PR married a Thevar lady. But these people had marriages in their own circles inc Mr CNA. But I pity on dalits their leaders and other political leaders encahs situvations and made them votebank.Even in CPI & CPI M sincere workers are peanlised. I am seing from outside. I may not be able toasses the real problems with theseexpelles leaders. We should educate the people to vote for real socia workers. In this connection we cn try to support Mr.Abdulkalam real patriot and a scientist. This is my view.

  ReplyDelete
 9. கிட்டத்தட்ட 25 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகின்ற பிரச்சினை இது.
  தமிழக அரசால் மிகச்சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு பிரச்சினையை அரசியல் உறுதி இல்லாத காரணத்தாலும் ஆதிக்க சக்திகளின் வாக்குகளை பெறுவதற்காக
  மட்டுமே பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறது. உத்தமபுரமாக திகழும் என தான் சட்டசபையில் பேசியதை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாத இவர் உலகத் தமிழர்களின் தலைவராம். பல புயல்கள் இன்று தன்னிடம் அடங்கிப்
  போய் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் இலங்கைத்
  தமிழர்களை வைத்து அரசியல் செய்கிற போது மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தீண்டாமை குறித்து நடத்துகின்ற இயக்கங்கள் கலைஞருக்கு நெருஞ்சி முள்ளாய் உறுத்துகிறது.அடக்குமுறை மூலமாக மவுனமாகி விடுவார்கள்
  என்று மனப்பால் குடிக்கிறார், அடக்குமுறையையும் அராஜகத்தையும் சந்தித்தே வளர்ந்த இயக்கம் இதற்கெல்லாம் சளைக்காது. சில துரோகிகளை தம் வசம்
  இழுத்ததன் மூலம் பலவீனப்படுத்தலாம் என்ற எண்ணமும் பலிக்காது. நாளை
  சிதம்பரத்தில் நடைபெறவுள்ள நந்தன் பாதை வழியே நடராஜர் ஆலயம் நுழையும் போராட்டம் செங்கொடியின் உறுதியை அவருக்கு மீண்டும் புரியவைக்கும்.

  ReplyDelete
 10. உத்தப்புரம் உத்தமபுரமாக இருக்கும் என்று முதலமைச்சர் கலைஞர் கூறினார், நாள் அணுதினமும் அங்கு காவல்துறையின் காட்டுமிராண்டி தனம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது, நீதி நியாயம் கேட்டால் இதுதான் நடக்கும் என்று மு(முட்டாள்).கருணாநிதி கூறியுள்ளார். இவர்தான் தமிழகத்தில் அளப்பரிய சாதனை செய்ததாக ஓடுகாலி ஒருவர் ஓடிக் கொண்டு இருக்கிறார், மக்களின் மவுணம் வெடிப்பாக மாறும்,

  ReplyDelete
 11. மிக கொடூரமான செயல், வண்மையாக கண்டிக்கிறேன்.இதற்கெல்லாம் 2011 ல் தக்க பதிலடி கொடுக்கவேண்டும்

  ReplyDelete
 12. பதவிக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் கருணாநிதியுடன் எந்தகாலத்திலும் கூட்டு இல்லை என்று cpm கூறுமா.

  ReplyDelete
 13. 1) தோழர், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மட்டுமே உத்தபுரம் பிரச்னையில் தொடக்கத்தில் இருந்தே முனைப்பு காட்டி வருகின்றன, களத்தில் இறங்கியும் போராடியது, போராடுகின்றது. மற்ற கட்சிகளின் 'கொள்கைகள்', சாதி குறித்த அவற்றின் பார்வைகள் யாவும் உத்தபுரம் பிரச்னைக்கு பிறகு அம்மணமாக தெரிகின்றன. குறிப்பாக 'உலகத்தமிழ் தலைவர்' கட்சியும் 'உலகத்தமிழ் தலைவரும்' பெரியாரின் சிஷ்யர்களாக இருக்கின்றார்களா அல்லது உத்தபுரம் உயர்சாதிக்காரர்களின் அடியாட்களாக இருக்கின்றார்களா என்பதை கடந்த இரண்டு வருட சம்பவங்கள் தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.
  2) இதன்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே கட்சியும் இயக்கமும் நடத்துவதாக கச்சை கட்டிக்கொண்டும் மீசையை முறுக்கிக்கொண்டும் திரிகின்ற வாய்ப்பேச்சு வீரர்களின் 'கொள்கை'யும் அம்பலமாகின்றது. 'உலகத்தமிழ் தலைவரு'க்கு அம்பேத்கர் விருது, சமூகநீதி விருது, அந்த விருது இந்த விருது என்று விருதுகளை கொடுத்து வண்ணமய விழா நடத்தவே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கின்றதே! இதனை புரியாதது போல் நடிக்கும் குறுக்குச்சால் ஓட்டும் வாய்ப்பேச்சு வெத்துவேட்டு புரட்சிக்காரர்களையும் இங்கே சாடாமல் இருக்க முடியாது. அவர்கள் எப்போதும் போல காடுகளுக்குள் இருந்து கொண்டு தங்கள் 'புரட்சி'யை நடத்திக்கொண்டே இருக்கின்றார்கள், அரிப்பை தீர்த்துக்கொள்ள அவ்வப்போது ப்ளாக்குகளில், மக்களோடு நிற்கும் இயக்கங்களை வசைபாடுவதையும் தங்கள் பிழைப்பாக நடத்திக்கொண்டே இருக்கின்றார்கள். இந்த வகையில் அவர்களும் 'உலகத்தமிழ் தலைவருக்கு' ஆதரவாகத்தான் இருக்கின்றார்களே தவிர அடிவாங்கி சாகும் தாழ்த்தப்பட்ட மக்களோடு இல்லை.
  3) வெகுஜனங்களின் மீதும் வெகுஜன இயக்கங்களின் மீதும் வளர்ந்து வரும் தாக்குதல், ராஜராஜசோழன் உள்ளூர கதிகலங்கி இருப்பதையே காட்டுகின்றது. இப்போது அவரது ஒரே கவலை அடித்த கொள்ளையை எப்படி காப்பாற்றுவது, குடும்பத்துக்குள் சச்சரவு இல்லாமல் கொள்ளை பணத்தை எப்படி பங்கு போடுவது என்பதுதான்.
  இக்பால்

  ReplyDelete
 14. மக்களோடு நிற்கும் இயக்கங்களை வசைபாடுவதையும்

  neengal seivathai neengalae sollum avalamthaan thaanga mudiyavillai

  ReplyDelete
 15. அட போங்கய்யா! இவ்வளவும் நடந்துபோச்சு! மார்க்சியக் கட்சித் தலைவர்களைத் தெருவில் இழுத்துட்டும் போயாச்சு! பின்னூட்டங்களில் சொன்னாப்ல கருணாநிதி தம் குடும்பத்துக்காக யாரையும் கொலை பண்ணத் தயங்காத கொலைஞர்... இனியும் அவரைப் போய்க் 'கலைஞரே கலைஞரே' னு எழுதுறீங்க... கருணாநிதியே னு எழுதுங்க...இல்ல அடுத்த தேர்தல்ல அவர் கூடக் கூட்டணி வச்சாலும் வப்போம் னு 'கலைஞரே' னு எழுதுறீங்களா?

  ReplyDelete
 16. நீங்கள் இயக்கியுள்ள 'இது வேறு இதிகாசத்தை' நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு பார்த்தேன். படம் நெஞ்சைத் தொட்டது... 'எங்க தொகுதிய பொதுத்தொகுதியாக்கீருங்க..' என்று தாழ்த்தப்பட்டவர்கள் கேட்பது எந்த அளவுக்கு அவர்கள் மன அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியது. இந்த மண்ணின் மைந்தர்களுக்காகத் தொடர்ந்து போராடிவரும் உங்களுக்கும் தோழர்களுக்கும் நெஞ்சம் நிறை பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

  ReplyDelete