Type Here to Get Search Results !

இதுவா செம்மொழியான தமிழ்மொழி, கலைஞரே?

"இந்த வாய்தானே கலைஞருக்கு எதிராகப் பேசியது” என்று கூறிக்கொண்டே எழுத்தாளரும், பேச்சாளருமான பழ.கருப்பையாவின் வாயில் குத்தியிருக்கிறார்கள் சில நபர்கள். அவரது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியும் இருக்கிறார்கள். அ.தி.மு.கவின் இலக்கிய அணித் தலைவரான அவர் செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பத்திரிகைகளில் எழுதி இருந்திருக்கிறார். மேடைகளில் பேசியும் வந்திருக்கிறார்.

தமிழக முதல்வரால் பாராட்டப்பட்ட சிறந்த பேச்சாளர்களில் ஒருவராய் கருதப்படுகிற,  தமிழருவிமணியனுக்கு அரசு ஒதுக்கிய வீட்டிலிருந்து, உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என்ற சப்பைக்கட்டு காரணம் ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இவரும் இந்த ஆட்சிக்கு எதிராக கட்டுரைகள்  எழுதி வந்திருக்கிறார். பேசியும் வந்திருக்கிறார்.

அரசின் நோட்டிஸை எதிர்த்து தமிழருவி மணியன், “ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு எந்த நோட்டிஸும் அனுப்பாமல், வெளியேறுமாறு உத்தரவிடுவது பாரபட்சமானது” என்று வழக்கு தொடுத்திருந்திருக்கிறார். விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அவர்கள் “வீட்டுவசதி வாரியத்தின் தலைமையலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற கோஷம் இடம்பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் தமிழ் எழுத்தாளர்கள், த்மிழ் அறிஞர்கள், தமிழ் சிந்தனையாளர்கள் காப்பாற்றப்பட வேண்டும். கொள்கைகளில் மாறுபாடு கொண்டிருப்பதால் சாதாரண காரணங்களைக் கூறி அவர்களுக்கு வாழ்விடங்களை மறுக்கக் கூடாது” என்று அறிவுறுத்தி, அரசின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறார். இந்த லட்சணத்தில்தான், தமிழைக் கொண்டாடுவதாகவும், தமிழை வளர்ப்பதாகவும் சொல்லி  இங்கே செம்மொழி மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது.

இத்தனை கோடி தமிழ்மக்களும் எவ்வளவு எவ்வளவு சகித்துக்கொண்டார்கள்! தமிழ்மண், தமிழிசை வாடையற்ற, ஏ.ஆர்.ரகுமானின் மேற்கத்திய பாணி இசையமைப்பில், கவுதம் மேனனின் மேட்டிமைப் பார்வையில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழர் வாழ்வு முறைகளும் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது. கலைஞரை புகழ்வதற்கென்றே எத்தனை அரங்க அமர்வுகள்!  ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் வள்ளுவரின் வரிகளால் அமைக்கப்பட்ட மாநாட்டில்தான், அற்புதமான பல கவிஞர்களின் படைப்புகள் கவனிக்கப்படாமல் இருக்க, கனிமொழியின் கவிதைகள் குறித்துக் கூட ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன். ‘வானமே, வையகமே, மேற்குத் தொடர்ச்சி மலைகளே’ என கூப்பாடு போட்ட வைரமுத்துவின் வெற்று வார்த்தைகளையெல்லாம் கேட்டுத் தொலைய வேண்டியிருந்தது. இத்தனை அலப்பறைகளுக்கும் இடையே, அமைதியான முறையில் தமிழுக்கு ஆக்கம் தரும் விதமாக எதாவது நடந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில்தானே எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார்கள்! த்மிழின் பாரம்பரியம், தொன்மை எல்லாம் நவீனகாலத்துக்கு ஏற்ப தகவமைக்கப்படும் என்ற் நம்பிக்கையில்தானே பொறுத்துக் கொண்டார்கள்!

ஆனால், ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ பாடலிசைக்க, பழ.கருப்பையா தாக்கப்பட்டதையும். தமிழருவி மணியன் வீட்டைவிட்டு விரட்டப்பட்டதையும், நீதிபதி கே.சந்துரு அவர்களின் தீர்ப்பின் வரிகளையும் காட்சிகளாக ஒடவிட்டுப் பார்த்தால், கலைஞருக்கு பொறுக்க முடியாதுதான். சகிக்க முடியாதுதான்.

அதிகாரத்தின் ருசி கொண்டவர்கள் பேசும் மொழி உலகம் முழுவதும் ஒன்றுதான். அதன் பேர் அடக்குமுறை!

கருத்துரையிடுக

39 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. அது அப்படித்தான்னு ஆயிப்போச்சு!

  அதுவே டிரண்டாவும் போச்சு!

  வேறு என்ன சொல்ல!

  பதிலளிநீக்கு
 2. செவிடன் காதில் சங்கு ஊதுவதால் பயனேதுமில்லை! :(

  பதிலளிநீக்கு
 3. தமிழனுக்கு தமிழனே எதிரி.... என்றும்!!!
  வருத்தம் அளிக்கிறது!!!!

  பதிலளிநீக்கு
 4. மிகவும் வருந்தக்கூடிய தகவலாகும். அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை தெளிவா எடுத்துரைத்திருக்கீங்க..! இவர்கள் திருந்தமாட்டார்கள் நாம்தான் திருந்த வேண்டும் முட்டாளக்கப்படுவதிலிருந்து....

  பதிலளிநீக்கு
 5. கருணாநிதியை ஒரு தலைவன் என்று நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இந்த நிகழ்வுகள் வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கலாம்.

  தமிழில் புதியதாக உருவாகியுள்ள அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தை “மு.கருணாநிதி”

  பதிலளிநீக்கு
 6. //அதிகாரத்தின் ருசி கொண்டவர்கள் பேசும் மொழி உலகம் முழுவதும் ஒன்றுதான். அதன் பேர் அடக்குமுறை!//

  நேர்மையான துணிச்சலான கருத்துக்கள்

  நன்றி

  பதிலளிநீக்கு
 7. தமிழுக்காக, நாதியற்ற தமிழனுக்காக
  இதை விட சிறப்பாக ஒரு பதிவு எழுத முடியாது. நன்றி.

  பதிலளிநீக்கு
 8. So much money wasted for CM family get together. I wonder when all this atrocity will end. :(

  பதிலளிநீக்கு
 9. காலங்காலமாக ஆதிக்க சக்திகள் செய்வதையே கருணாநிதியும் செய்துள்ளார். இதில் ஆச்சர்யப்பட என்ன உள்ளது.

  பதிலளிநீக்கு
 10. எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் தமிழையும் தமிழரையும் மறக்காத Dr . அப்துல் கலாமை அழைத்தாரா? . அவர் கலந்து கொண்டது போல் தெரியவில்லையே அதனால் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. தமிழ்ன‌க்கென்று ப‌ல‌ பெருமைக‌ளுண்டு.
  அதில் ஒன்றா 'பொறுமை'?
  சுர‌ண்டிச் சுர‌ண்டி சோதிக்கிறது அதிகார‌ம்.
  எப்போது வ‌ரும் தீர்வு?

  பதிலளிநீக்கு
 12. //‘வானமே, வையகமே, மேற்குத் தொடர்ச்சி மலைகளே’//
  இந்த அரசவைக் கவிஞர்களின் தொல்லை தாங்கமுடியல...

  பொழப்புவேணுமே..

  பதிலளிநீக்கு
 13. உண்மையிலயே திமுக தொன்டர்கள தான் தாகினரா அல்லது பழ கருப்பையாவே கொட நாட்டில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று ஆளை வைத்து நடத்திய நாடகமா என்று புரிய வில்லை.

  ஏனென்றால் பழ கருப்பையா போகாத கட்சி இல்லை, உடுத்தாத கரை வேட்டி இல்லை.
  ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்தார், பின்பு மதிமுகா வில் (வைகோ வை பார்த்தால் பாரதியார், வ வு சி, கட்டபொம்மன் போன்று தோன்றுகிறது என்றார், கூடவே இருந்தவர் சங்கரன்கோவில் தங்கவேலு, தி ஈ கே இலக்குமணன். ).

  பதிலளிநீக்கு
 14. கலைஞர் அவர் இந்த மாதிரியான விஷயத்தில் கில்லாடி. துதிபாட அவருக்கு கூட்டம் எப்போதும் வேண்டும்.

  கலைஞரின் காலத்திற்க்கு மெல்ல (பாதி) தமிழும் தமிழ்நாடும் பிழைக்கும்.

  அப்ப மீதி தமிழும் தமிழ்நாடும் எப்ப பிழைக்கும்னு கேட்ககூடாது..

  பதிலளிநீக்கு
 15. Mr.Madhavraj, kindly proof read my comment and then upload my comment.
  எல்லாம் முடிந்த பின்பு புலம்புவதே பழக்கம் ஆகி விட்டது நமக்கு. அட்டூழியம், அராஜகம், அதிகார துஷ் பிரயோகம் இது எல்லாம் தாய் தமிழ் பெயர் சொல்லி முந்நூறு கோடி செலவு செய்து உலக செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடத்தி முடித்து விட்டார்கள். போனது போனது தான். மக்கள் பணம் கொண்டு ஒரு மாபெரும் குடும்ப விழ நடந்து முடிந்தது. அதற்க்கு பதிலாக ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்கள் பதிப்பித்து இருக்கலாம், தொலைக்காட்சி யில் பேசப்படும் தமிழ் மொழியை சீர் படுத்தி தூர் வாரி இருக்கலாம், (மானாட மயிலாட புகழ் கலா அக்கா பேசும் தமிழ் முதல்வருக்கு புடிச்சி இருக்கலாம், ஆனா மக்களுக்கு இல்ல) , சன் தொலைகாட்சி யில் ஒளிபரப்பாகும் கேடு கேட்ட தொடர்கல் நிறுத்த பட்டு இருக்கலாம், கனி மொழி போன்ற சமுதாய சீர்திருத்த வாதிகள், கவிதாயினி கள் தமிழ்-ஆங்கிலம் பேசுவதை விட்டு நல்ல தமிழ் பேசலாம்.

  பதிலளிநீக்கு
 16. மாதவராஜ் வணக்கம், நல்ல பதிவு. இன்னும் நிறைய கூத்துக்கள் நடந்துள்ளது அதையும் பதிவது நல்லது என கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. //அதிகாரத்தின் ருசி கொண்டவர்கள் பேசும் மொழி உலகம் முழுவதும் ஒன்றுதான். அதன் பேர் அடக்குமுறை!//
  நெத்தியடி!

  பதிலளிநீக்கு
 18. இந்த அடக்குமுறை இன்று நேற்று ஏற்பட்டதல்ல..

  அரசு பணத்தில் குடும்ப விழா நடத்தி தமக்கு தாமே சொறிந்துக்கொள்வதும் வேறு பல சொறியர்கள் மூலம் சொறிந்துக்கொள்வதும் தவிர இவர்கள் வேறு என்ன செய்கிறார்கள்.

  செம்மொழி மாநாடு என்று சொல்வதை விட சொறிதல் மாநாடு என பெயரை மாற்றியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 19. இது உலக கலைஜர் ஜால்ராமொழி மாநாடு...

  பதிலளிநீக்கு
 20. அதிகாரத்தின் ருசி கொண்டவர்கள் பேசும் மொழி உலகம் முழுவதும் ஒன்றுதான். அதன் பேர் அடக்குமுறை!

  இந்த மொழிக்கும் மாநாடு நடத்துவாங்க, அதுக்கும் கூட்டம் கூடும் என்ன செய்ய???

  பதிலளிநீக்கு
 21. கருணாநிதிக்கு புத்தி சொல்லி ஒன்னும் ஆக போறதில்லை.
  ஆனா , இந்த "வைர சொம்பு " " கூலி " தொல்ல தாங்க முடியலடா சாமி ....

  பதிலளிநீக்கு
 22. கழுதை(களு)க்குத் தெரியுமா கற்பூரத்தின் வாசனை?
  ஒரு மாமனிதனை ஏகத்துக்கும் வசை பாடுவதில் அர்த்தமில்லை.

  பழ. கருபையாவெல்லாம் ஒரு மனுசனா? அந்தாளுக்கு அம்மா பெருசு. ஆனா இன்றய முதல்வரை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசுவார்? அவருக்கு வக்காலத்து வாங்க ஒரு கோஷ்டி! பின்னூட்டங்களைப் படிக்கும்போது வேத்னையாத்தான் இருக்கு.
  த்தூ....எப்படி உருப்படும் ?

  பதிலளிநீக்கு
 23. அண்ணே,யாரு கொந்தளிச்சு போவாங்கன்னு நம்பி இந்தக் கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
  நம்ம மக்களுக்கு இப்ப ரெண்டு வார்த்தை தான் காதுலையே விழும்.வோட்டுக்கு காசு,இலவசம்...
  வேற எதுவும் இவனுங்க காதுல ஏறாது...

  பதிலளிநீக்கு
 24. நல்ல பதிவு சார்.உங்க பங்குக்கு நீங்களும் செவிடன் காதில் ஊதியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 25. என்னவோ நடக்குது ...
  என்னவோ போங்க...

  பதிலளிநீக்கு
 26. அது செம்மொழி மாநாடு இல்லை.
  குடும்ப மாநாடு

  பதிலளிநீக்கு
 27. எங்கே அந்த தி.க. ஆளுக்க இதற்கு பதில் சொல்லாமல் ஓடிவிடுவார்கள். தேவைப்படும் போது முதல்வரை புகழ்ந்து கொள்வார்கள்.

  பதிலளிநீக்கு
 28. இலவசங்களுக்காகவும், காசுக்காகவும் மக்கள் வோட்டு போடும் வரை, இந்த துதிபாடல்கள் தான் தொடரும். எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற துணிவு தான் இப்படியெல்லாம் நடந்து கொள்ளச் செய்கிறது.

  பதிலளிநீக்கு
 29. தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா

  பதிலளிநீக்கு
 30. அதிகாரத்தின் ருசி கொண்டவர்கள் பேசும் மொழி உலகம் முழுவதும் ஒன்றுதான். அதன் பேர் அடக்குமுறை

  miga sariyaga sonneergal.anaiya pogum

  dheebam miga miga piragaasikkirathu.

  poruththu irungal.

  பதிலளிநீக்கு
 31. திரு. மாதவராஜ் அவர்களுக்கு,

  செம்மொழி மாநாடு என்பது கலைஞர் குடும்ப மாநாடு என்பது நாடறிந்த விஷயம். அவரின் துதிபாடிகள் அங்கும் பாடினார்கள். அதை குஷனில் அமர்ந்து குஷியாக ரசித்தார். அப்துல் கலாமுக்கு அழைப்பில்லை என்பது பரவலான செய்தி. தமிழ் தெரியாதோர் பலருக்கு அழைப்பு.

  உங்கள் கட்டுரை படித்து வேதனைப்பட்டேன்.

  தமிழை மதிக்காமல் தமிழுக்கு மாநாடு.

  தொடரட்டும் கலைஞர் துதிபாடிகளின் ஜால்ரா.

  பதிலளிநீக்கு
 32. அண்ணா,பக்கத்தில் ஒரு தமிழ் இனத்தை அழித்த போது தடுக்க துப்பு இல்லாதவர் எல்லாம் தமிழை செம்மொழியாக்கி விடவா முடியும், இந்த விழா, செழுமையகி குடும்ப விழாவாக அறங்கேறியது. ஆனாலும் இந்த குடும்ப விழாவில் முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர் கலந்து கொண்டது கொஞ்சம் வருத்தம்

  பதிலளிநீக்கு
 33. மாதவராஜ் தோழர் உங்கள் கருத்துக்கள் மிகச்சரியானவை.

  ஒரு சிலவற்றில் மட்டும் நான் வேறுபடுகிறேன். செம்மொழியான பாடல் குறித்த விமர்சனம் ஏற்புடையதாக இல்லை. இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்பதுதான் எனது எண்ணம்.

  அந்த மாநாட்டிற்கு நான் சென்றிருந்தேன். ஆனால் ஆய்வரங்குகளில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை, நீங்கள் சொன்ன அத்தனை அநியாயங்களைம் கண்டேன். சகிக்கவில்லை. கருணாநிதியின் இலக்கிய ஆளுமை குறித்து 20கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், செம்மொழியான கனிமொழியின் இலக்கிய ஆளுமை குறித்து 3 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன்,

  தலைவரை இடித்துரைத்து எழுதுகிறீர்கள், உங்கள் வீட்டிற்கும் ஆட்டோ வரலாம் உசாரா இருங்கள், பிளாக் பேண்ட்/வெள்ளை சட்டை போட்டு யாராவது வந்தால் உசாராகிவிடுங்கள், அந்த ரவுடிகளின் யூனிபார்ம் அது என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 34. //கழுதை(களு)க்குத் தெரியுமா கற்பூரத்தின் வாசனை?
  ஒரு மாமனிதனை ஏகத்துக்கும் வசை பாடுவதில் அர்த்தமில்லை.

  பழ. கருபையாவெல்லாம் ஒரு மனுசனா? அந்தாளுக்கு அம்மா பெருசு. ஆனா இன்றய முதல்வரை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசுவார்? அவருக்கு வக்காலத்து வாங்க ஒரு கோஷ்டி! பின்னூட்டங்களைப் படிக்கும்போது வேத்னையாத்தான் இருக்கு.
  த்தூ....எப்படி உருப்படும் ?//

  இந்த மாதிரி ஆட்களெல்லாம் திருந்தவே மாட்டாங்களா? நீங்க ஜெ துதியோ வேறெதுவோ செய்யவேண்டாம் . கொஞ்சம் நியாயத்த நெனச்சு பாக்ககூடாதா. உங்க மாதிரி ஆட்கள் இருக்கிற தைரியத்துல தான் இவங்க இந்த ஆட்டம் போடுறாங்க.

  பதிலளிநீக்கு
 35. 1 . தமிழர்களை எப்போதும் சாராய மயக்கத்தில் ஆழ்த்தி வேட்டி அவிழ தெருவில் புரள வைத்துவிட்டு, தமிழகத்தில் சனநாயக இயக்கங்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை போலீஸ் ப்ளஸ் தி.மு.க. ரவுடிகளை ஏவி ரத்தக்காட்டேறித் தனமாய் அடிதடி லத்திசார்ஜ் கேள்வி கேட்பார் இல்லாமல் லாகப்பில் அடைப்பு, கண்காணாத இடத்துக்கு கடத்தி கொண்டுபோய் வைப்பது போன்ற ரவுடித்தனமான ஆட்சியை நடத்திக் கொண்டு, இப்போதும் ஊருக்கு நடுவே ராட்சச தனமாய் திமிரோடு எழும்பி நிற்கும் சாதிப்பிரிவினைக் கோட்டை சுவரை உடைக்க துப்பில்லாமல் தமிழனை சாதி ரீதியாய் பிரித்துவைத்துவிட்டு , தமிழகத்தை தன் குடும்ப சொத்தாக மாற்றி மாவட்டத்துக்கு ஒரு பிள்ளை என கூறுபோட்டு விற்றுவிட்டு, சாதியையும் கடவுளையும் சாகும் வரை மறுத்த பெரியாரை குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு (கருணாநிதியின் குலதெய்வக் கோவிலில் வைத்து வணங்கிவிட்டுத்தான் செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ் வெளியே வினியோகிக்க பட்டதாம், பூஜை செய்த ஐந்து பூசாரிகளுக்கும் ஆயிரக்கணக்கில் தட்சணையை பகுத்தறிவுப் பகலவன் கருணாநிதியே தன் கையால் வழங்கியதாக ஒரு வாரஏடு சொல்கின்றது) தமிழகத்தில் அடிப்படையான நாகரீகம், அமைதி, சமத்துவ உணர்வு, மொழி உணர்வு, சகோதரதத்துவ உணர்வு, மனிதநேயம் போன்ற அனைத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு மக்கள் பணத்தைக் கோடிகோடியாக சீரழித்து கருணாதி குடும்பம் தமிழையும் சீரழிக்குது.
  2 . மாதவ், இந்தக் கூத்தில் முற்போக்கு கலாச்சார இலக்கிய இயக்கங்களும் பங்கு பெற்றதுதான் வேதனை. தொழிலாளர், வாலிபர், மாணவர், மாதர்களின் அமைதியான போராட்டங்களின்
  மீது போலீஸ் தடியடி, மண்டை உடைப்பு என செய்தி வராத நாளே இப்போது தமிழ்நாட்டில் இல்லை. அடிப்படை ஜனநாயகத்துக்கு நம்பர் ஒன் விரோதி யாரெனில் கருணாநிதியே. தமிழ் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இரக்கமின்றி அழித்துவிட்டு எவனுக்காக இந்த செம்மொழி மாநாடு என்று இடதுசாரி ஜனநாயக இயக்கங்கள் கேட்டிருக்க வேண்டும், இதையே காரணமாக காட்டி அசிங்கமான செம்மொழி மாநாட்டை புறக்கணித்திருக்க வேண்டும். ஒரு புறம் தமிழ் பேசுபவனின் முதுகை ஒடித்து ரத்தக்காட்டேரி ஆட்சி நிர்வாகம், மறுபுறம் தமிழின் பாதுகாவலன் என கருணாதி வேஷம் போடலாம், ஆனால் இதை அம்பலப் படுத்த வேண்டிய கடமை இடதுசாரி ஜனநாயக இயக்கங்களுக்கே உண்டு, அதற்கான வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் கிடைக்கும்போது அதை செய்யாமல் விட்டுவிடுகின்றோம் என்பதே எனது ஆற்றாமை. இதன்மூலம் கருணாநிதியின் ஜனநாயக விரோத செயல்களை மவுனமாக நாம் அங்கீகரிப்பது ஆகாதா?
  இக்பால்

  பதிலளிநீக்கு