-->

முன்பக்கம் , , , � புதிய பதிவர்கள் அறிமுகம் -3

புதிய பதிவர்கள் அறிமுகம் -3

புதிய பதிவர்களை அடிக்கடி அறிமுகம் செய்ய ஆசைதான். குறைந்தபட்சம் ஐந்து பதிவர்களையாவது அறிமுகப்படுத்த வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதிருக்கிறது. அதுதான் இந்த கால் இடைவெளிக்கு காரணமாகிறது.

இந்த பதிவில் அறிமுகமாகும் புதிய பதிவர்கள்.....

16.சித்ர குப்தன்:

மதுரையைச் சேர்ந்த இந்த பதிவரின் வலைப்பக்கம் ஒன்று சேர். இதுவரை ஒரு பதிவு எழுதியிருக்கிறார். தொழிற்சங்க இயக்கம் வலுப்பெற வேண்டிய அவசியத்தை தனது முதலாவது பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார். சமூக அக்கறையும், பார்வையும் இவரிடம் வெளிப்படுகிறது

17.prabhadamu:

ஆழ்கடல் களஞ்சியம் என்பது இவரது வலைப்பக்கத்தின் பெயர். சிங்கப்பூரில் இருக்கிறார். உடல்நலம், இயற்கைவளம், உணவுவகைகள், பெண்கள் நலம் குறித்த பதிவுகள தொடர்ந்து எழுதி வருகிறார். ஆறு மாதத்திற்குள் 200 பதிவுகள் எழுதி இருக்கிறார். தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த வலைப்பக்கத்தில் இருக்கின்றன.

18. சுடுதண்ணி:

இவரது வலைப்பக்கத்தின் பெயரும் சுடுதண்ணி தான்!  இவரது பதிவுகள் தொழில்நுட்பம் சார்ந்து இருப்பது பொதுத்தன்மையாய் இருந்தாலும் சுவாரசியமாக இருக்கின்றன. விமானம், கணிணி, மென்பொருள் குறித்து பேசும் பதிவுகளில் ராஜசேகர் ரெட்டி மரணம், மங்களூர் விமான விபத்து, கண்ணியில் தொடர்ந்து இயங்குபவர்களுக்கான பிரச்சினைகள் என ஆராய்வதாக பதிவுகள் இருக்கின்றன.

19. கோபி:

கவிதை என்பதுதான் இவரது வலைப்பக்கத்தின் பெயரும். திருச்செங்கோட்டுக்காரர்.  ஹைக்கூ கவிதைகளாக பொழிந்து கொண்டு இருக்கிறார். சில நல்ல கவிதைகளை தவறவிட முடியாது.
‘’நிலவுக்குள்
நட்சத்திரம் - என் அன்பியின்
மூக்குத்தி.’’ என்கிறார்.

20. சுப்புராஜ்

சென்னையில் வசிக்கும் கட்டிடப் பொறியாளரான இவரது வலைப்ப்க்கம் சில்வியாமேரி. நாற்பதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். பெரும்பாலும் சிறுகதைகள்தாம். நடப்புச் செய்திகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் நேரிடையாகச் சொல்வதாக இருக்கின்றன.

21. பார்வையாளன்:

இவரது வலைப்பக்கம் பிச்சைக்காரன். நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். வினைகளும், எதிர்வினைகளுமாய் இவரது பதிவுகளில் விவாதங்களுக்கான வெளி இருக்கிறது. சினிமா , இலக்கியம்,  நடப்புச் செய்திகள் என இவரது பார்வைகள் படர்ந்திருக்கின்றன.

22. ராகவேந்திரன்:

துர்வாசர் என்னும் வலைப்பக்கத்தை கொண்டு இருக்கும் இவர் 2008ல் இருந்து பதிவுலகில் இயங்கி வந்தாலும் மிகச் சொற்பமாகவே எழுதி இருக்கிறார். ஆக்டோபஸ்,  போலி மதிப்பெண் சான்றிதழ், சமீபத்திய ஜெயமோகன் கட்டுரை குறித்து என இப்போது  தொடர்ந்து எழுதுகிறார்.

பதிவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரவேற்போம். ஆதரவளிப்போம்.

(புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை jothi.mraj@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தீராத பக்கங்களில் அறிமுகப்படுத்த முடியும்.)

Related Posts with Thumbnails

11 comments:

 1. நல்ல அறிமுகங்கள் அன்பரே..

  ReplyDelete
 2. சுடுதண்ணியைத்தவிர மீதமுள்ள அனைவரும் புதியவர்கள். பகிர்தமைக்கு நன்றி..

  //ஆறு மாதத்திற்குள் 200 பதிவுகள் எழுதி இருக்கிறார். //

  அடேயப்பா... கண்டிப்பாக பார்க்க வேண்டிய வலைப்பக்கம்...

  ReplyDelete
 3. அறிமுகங்கள் தொடரட்டும்..

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள்!

  நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. nalla sevai seigireergal. neengal arimuga paduthiyavargal silarai naan padiththen. Nalla padivugal. ennoda blog siteai neram irunthaal paarungal.:http://www.ramyamani.wordpress.com. nanri, Ramya

  ReplyDelete
 6. அறிமுகங்களுக்கு நன்றி அண்ணா.

  நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. தலைவா நானும் புதியவன் தான் தலைவா...

  ReplyDelete
 8. இடுகையை பார்த்தேன் ரசித்தேன். மேன்மேலும் அருமையான பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். என் கவிதைகளை படிக்க http://abhiyumnanum.blogspot.com வரவும். நன்றி

  ReplyDelete
 9. என் இனிய தோழரே,
  என்னை வலைப்பக்கத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல...
  மற்றும் சிலரை அறிமுகப்படுத்தியதற்கு
  நன்றி........

  ReplyDelete
 10. அறிமுகத்துக்கு நன்றி சார்

  ReplyDelete