-->

முன்பக்கம் , , , � வம்பரங்கம் -2

வம்பரங்கம் -2

என் நண்பர் ஒருவர் இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி இருந்தார். ஃபேஸ்புக்கில் இந்த விவாததை  ரவிசங்கர் எழுப்பி இருந்தார். நம் கல்வி முறை மட்டுமல்ல, நம் மனசாட்சி குறித்தும் எழுப்பப்பட்ட முக்கிய கேள்வி இது.

“நாம் நம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை. ஆனால் அரசு கல்லூரிகளில் சேர்க்க விரும்புகிறோம்”

இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

Related Posts with Thumbnails

18 comments:

 1. திரு. மாதவராஜ் அவர்களுக்கு...

  நமது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காததற்கு காரணம் அடிப்படை கல்வியை அரசுப்பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் நல்லமுறையில் தருவதே முக்கிய காரணம்.

  மேலும் அரசுப் பள்ளிகளில் ஏனோதானோ என்று நடத்தும் நிலை இன்னும் பல பள்ளிகளில் நீடிக்கிறது. (10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் அரசுப் பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன.)

  கிராமங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளை மதிய உணவுக்காகவே இயங்குகின்றன என்பதே உண்மை.

  இப்படிப்பட்ட சூழலில் ஆரம்பக் கல்வி நல்லா இருக்கவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பமே தனியார் பள்ளிகளை நாடக் காரணமாக இருக்கலாம்.

  அரசுக்கல்லூரிகளில் சேர்க்க ஆரம்பக்கல்வி நன்றாக கிடைத்த குழந்தைகள் கல்லூரி என்று வரும்போது எதில் சேர்த்தாலும் நன்றாக படிப்பார்கள். மேலும் பணமும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

  நட்புடன்,
  சே.குமார்
  http://www.vayalaan.blogspot.com

  ReplyDelete
 2. We don't have confidence in Government schools, because of poor infrastructure and quality of teachers. This is not in all schools, few are exceptional. But in the case of Colleges as far my knowledge lecturers are very much educated .So we

  ReplyDelete
 3. சே.குமார்!

  அரசுக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு பணம் ம்ட்டுமா காரணம்? placement காரனமில்லையா?

  இந்தக் கேள்வி சில விளக்கங்களுக்காக....

  ReplyDelete
 4. ksmanian!

  அரசுக் கல்லூரிகளில் infrastructure நன்றாக இருக்கிறதா?

  ReplyDelete
 5. இரண்டுக்குமே சுயநலம்தான் காரணம்.அரசு பள்ளிகளில் நல்ல கல்வி கிடைக்காது என்ற எண்ணம்.அரசு கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படித்துமுடித்துவிடலாம் என்ற பொருளாதாரக் கணக்கும் காரணம்.

  ReplyDelete
 6. Govt schools - Medium of instruction - Tamil (most of them)

  Govt colleges - Medium of instruction - English (most of them)

  And also the infrastructure needs for the school is minimal and you need only good teachers whereas the college needs much more along with good reputation to attract the companies for placement. And also, professors from the govt colleges are infinitely better than the ones from private colleges ( i suppose so !)

  ReplyDelete
 7. In Govt Engineering colleges, the infrastructure is much better than Govt Arts colleges. I think still people prefer Govt engineering and medical colleges. Also there was an impression created among the population that the Govt Arts colleges are for weaker section, and due to lack of investment or infrastructure improvement in govt arts colleges, the placement opportunity for them is also degraded.

  We do not have significant Govt schools opened in the cities considering the growth in urban population. Private institutions capitalized this. Whereas in rural areas, I think still population depends on the govt schools.

  Also the role of the Christian institutions in private education is significant because they do it with some dedication. This may be lacking in govt institutions which will also give an impression that Govt institutions are bad.

  When education is commercialized like in western countries, then it becomes highly competitive and it is important for the govt to play a significant role to improve the govt institutions.

  ReplyDelete
 8. பணம் (கட்டண செலவு) தான் முக்கிய் காரணம்.

  கலை, அறிவியல் சார்ந்த கல்விகளுக்கு (BA, BSC)_அரசு கல்வி , தனியார் கல்வி இரண்டும் ஓரளவுக்கு சமம் தான், அரசு கல்லூரிகளில் செலவு கொஞ்சம் குறைய ஆகும்.

  பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை போன்ற பட்டங்களுக்கு அரசு கல்லூரிகளில் கட்டணம் பெருமளவு குறைவு. அதுதான் மிகப் பெரிய காரணம்.

  5 years expenses in Madras Medical college or Palayamkottai medical college is 20% of the cost in Jagatratchagan/AGS's colege.

  தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம் இருந்தாலும், பெற்றோரின் வருமானத்திற்கு கட்டுப் படியாவதால் சேர்க்க முட்கிறது. தனியார் கல்லூரி கட்டணங்கள் வருமானத்திற்கு கட்டுப் படியாகதால் அரசு கல்லூரிகளை நாடுகின்றனர்.

  நாளையே ஹார்வார்ட், வார்த்டனில் இலவசம் என்று சொல்லுங்கள், எல்லாரும் அங்கே பிள்ளைகளை சேர்க்க தயரா தான்

  ReplyDelete
 9. மாதவராஜ் அவர்களே, நலமா?

  இக்கேள்விக்குப் பதில் எனக்குத் தெரியவில்லை, ஆகவே இந்த விவாதத்தில் நான் பங்கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை...

  அன்புடன்
  ஆதவா

  ReplyDelete
 10. தோழர் கருணா,

  இதனை அரசின் சுயநலப் பார்வையிலும் பார்த்தால், இந்தப் பிரச்சினையின் இன்னொரு பரிமானமும் தெரிய வரலாம் அல்லவா?

  ReplyDelete
 11. மணிகண்டன்!

  அரசுப்பள்ளிகளை விட ஏன் அரசுக் கல்லூரிகளை (தொழிற்கல்வி), ஏன் அரசு தரமானதாக வைத்திருக்கிறது?

  அதாவது ஆரம்பக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத அரசு, ஏன் பட்டதாரிப் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறது?

  ReplyDelete
 12. சேது!

  பல உணமைகளை உங்கள் பின்னூட்டம் சொல்கிறது.

  அரசுப் பள்ளிகள் கிராமப்புறங்களுக்காகவும், அரசுக் கலைக் கல்லூரிகள் பொருளாதாரத்தால் பின் தங்கியவர்களுக்காகவும் இங்கு கருதப்படுகிறது. யதார்த்தமும் அதுதான்.

  அரசு தொழிற்கல்வி கல்லூரிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன?

  ReplyDelete
 13. ராம்ஜி யாஹூ!
  //தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம் இருந்தாலும், பெற்றோரின் வருமானத்திற்கு கட்டுப் படியாவதால் சேர்க்க முட்கிறது. //

  எந்தவகை பெற்றோர்களுக்கு? எத்தனை சதவீத பெற்றோர்களுக்கு?

  ReplyDelete
 14. ஆதவா!
  நலமே.
  விவாதத்தில் பங்கெடுக்காவிட்டாலும், அறிந்துகொள்ளலாமே!
  வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 15. மிக முக்கியமான கேள்வியும், பதில்களும்.
  அவசியமான பகிர்வு.

  ReplyDelete
 16. //மாதவராஜ் ksmanian!
  அரசுக் கல்லூரிகளில் infrastructure நன்றாக இருக்கிறதா?//

  நான் கண்ட சில கல்லூரிகளில் மிக மோசம் என்று சொல்லாத முடியாத வகையில் இருக்கிறது. இருப்பினும் பெற்றோர்கள் அரசு கல்லூரிகளை தெர்ந்தெடுப்பதற்கான காரணம் குறைந்த கட்டணம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 17. //அரசுப்பள்ளிகளை விட ஏன் அரசுக் கல்லூரிகளை (தொழிற்கல்வி), ஏன் அரசு தரமானதாக வைத்திருக்கிறது? //

  நீங்கள் இப்படி பார்க்கறீர்கள். ஆனால் எனக்கு என்னவோ தனியார் தனது கல்லூரிகளை தரமானதாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதும் காரணம் என்று தோன்றுகிறது.

  ஒருவேளை ஆரம்பக்கல்விக்கு ஆசரியரின் அனுபவம் என்பது நெகடிவ் ஆக இருக்குமோ! தனியார் பள்ளிகளில் இளமையான ஆசிரியர்கள் - எளிதாக புதிய கல்வி வழிமுறைகளை புரிந்துக்கொள்கிறார்கள். அதுவே அரசு பள்ளி ஆசிரியர்கள்/ஆசிரியைகள் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மூன்று நாள் டிரைனிங்கை ஏதோ வேண்டாவெறுப்பாக போய் வருகின்றனர்.

  அடுத்தது பள்ளி குறித்த இந்த கேள்வியே சென்னைக்கு மட்டும் தான் பொருந்துமோ ? இன்றளவிலும் மற்ற ஊர்களில் அரசு சார்ந்த பள்ளிகளே பாப்புலர் ஆக இருக்கின்றனர்.

  ReplyDelete
 18. முதற்கண் உங்களது பிளாக்கில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு என்னுடைய தாமதமான நன்றி சார்,
  எங்கள் பகுதியானது கிராமபுறம் , இங்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் அவர்களின் ஆசிரியர் பணியினை செகண்டரியாகவும், வட்டிக்கு விடுதல் , கந்து வட்டி, சிட்பண்ட் நடத்துதல், 4,5 வீடு கட்டி வாடகைக்குவிடுதல் போன்றவைகளை பிரைமரியாகவும் செய்கிறார்கள். இவர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது, எந்த பிரச்சினையும்கிடையாது, ஆதலால் தலைமையாசிரியர் முதல் அனைத்து ஆசிரியர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், ஆதலால் தான் பொதுமக்கள் வெறுத்து போய் ஆரம்ப கல்வியினை காசு கொடுத்தாவது தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கிறார்கள், இவ்வளவு ஏன் அரசு பள்ளி ஆசிரியர்களே அவர்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் தான் படிக்க வைக்கிறார்கள், என்ன செய்ய 6ம் வகுப்பு படித்து முடித்து வெளி வரும் மாணவன் தமிழில் ஒரு பத்தி முழுமையாக எழுத தெரியாமல் தான் வெளி வருகிறான், யாருக்கும் வெட்கமில்லை சார், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜெனரல் டிரான்ஸ்பர், முறையான கண்காணிப்பு போன்றவைகள் இருந்தால் கிராம புற மாணவர்களின் படிப்பு ஓரளவாவிற்காவது நன்றாக இருக்கும் சார், இது என்னுடைய ஆதங்கம்
  இது என்னுடைய பிளாக்கில் பலமுறை எதிரொலித்திருக்கிரும் வேதனையின் வெளிப்பாடாக,
  ராகவேந்திரன்,தம்மம்பட்டி

  ReplyDelete