காலையில் விநாயகமுருகனின் ‘சிரிப்பு வருது’ கவிதையைப் படித்தாலும் படித்தேன், இன்று முழுவதும் நகைச்சுவை மிக்க காட்சிகளும், செயுதிகளும், அரட்டைகளும் அதிகமாகவேப் போய்விட்டது..
கவிதையைப் படித்த சிறிதுநேரத்தில் தினகரன் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் இப்படியொரு செய்தியோடு இந்தப் படங்களையும் படிக்க நேர்ந்தது.
சென்னை அண்ணா நகரில் புதுப்பிக்கப்பட்ட விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்காவை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பந்துவீச, துணை முதல்வர் ஸ்டாலின் உற்சாகமாக பேட் செய்வதை பிரமுகர்கள் ரசிக்கின்றனர்.
![]() | ![]() |
’பிரமுகர்களோடு’ இப்போது நீங்களும் இதனை ரசித்திருப்பீர்கள்.
சரி, இந்த அற்புதமான ஆட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் தமிழில் நேரடி வர்ண்னை செய்தால் என்ன சொல்வார்?
ஆட வர்றீங்களா?


Mr.Mathavaraj
ReplyDeleteThis family loots alot of money and enjoy life at the cost of public. After Mr.Kamaraj nobody is conscious about the state . Particularly Mr.M.Kor DMK sowed the worst culture of paying money for votes. I am much ashamed of this. But unfortunately people felt atleast this fellow is paying some money from looted public money. I pray to almighty these two parties should be burried and Mr.Abdul Kalam should be made the head of our nation.This is my reply to this photo.
K.Subramanian
என் அன்பு உடன்பிறப்பே..மானாட..மயிலாட..பார்த்துக்களித்திருக்கும் உனக்கு ,செம்மொழி மாநாட்டு பணிகளுக்காக நான் மூழ்கியிரு ந்த வேளையில் போரடித்திருக்கும்.அதனால் நீ கண்டுகளிக்க..இதோ எனது புதிய இலக்கியப்புதையல் “மகனாட..பேரனாட..”.எப்படியிருக்கு என்று எனக்கு கடுதாசி போடு./அன்புடன்..மு.க
ReplyDeleteகருணா!
ReplyDeleteஆஹா.... !
தமிழின துரோகிகளாம் சிங்க்ளவர்களை புறம் காண செய்திட போயிருக்கும் என் உயிரினும் மேலான இளம் சிங்களான தம்பிகள் டெண்டுல்கருக்கும், திராவிட சிங்கம் டிராவிட்டுக்கும் பயிற்சி அளிக்கும் நம் கழக கண்மணிகளான இளவல் ஸ்டாலினும், தம்பி தயாநிதியும் விளயாடுவதை பாருங்கள் என் உடன்பிறப்புகளே.
ReplyDelete@ இராமசாமி கண்ணன்..
ReplyDeleteசான்ஸே இல்ல.. கலக்கிட்டீங்க. ரொம்ப நேரம் சிரிச்சேன்.
மாதவ் அண்ணா புதுத் தலைப்பா? ரைட்டு நடத்துங்க. நம்ம மக்கள் கலக்கப்போறாங்க.
கே.எஸ்,மணியன்!
ReplyDeleteவருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
இராமசாமிக் கண்ணன்!
டைமிங்....!
செ.சரவனக்குமார்!
தம்பி, மிக்க நன்றி.
ha ha...
ReplyDeleteஅருமையான நக்கல்...
ReplyDeletehttp://www.striveblue.com/tawp/blog/2010/07/17/246/
wat is the point of voting this article. there r a lot of article which r needed for our society and tamil ...
ReplyDeleteplease allow those article to reach our society
இதோ அருமைப்பேரன் தயாநிதி பந்து வீசுகிறார். எதிரில் உள்ளவரின் ஆட்டத்தை சாய்ப்பதற்கான பந்து அல்ல அது. என்றென்றும் உமக்கு துணையாய் நான் இருப்பேன். உன் அண்ணனின் ஆக்ரோஷத்திலிருந்து என்னைக் காப்பாற்று என அபயம் கேட்டு வரும் பந்து அது.
ReplyDeleteஇதோ எனக்கு துணையாகவும் முதல்வராகவும் உள்ள ஸ்டாலின் மட்டையை ஓங்கி அடிக்கிறார். பந்து மைதானத்தை விட்டு
வெளியேறுகிறது. பால்கனிப்
பாவையின் மூக்கை மட்டுமல்ல, அமைச்சர் பதவி கேட்டும் மாநிலங்களவை பதவி கேட்டும் குடைச்சல் கொடுக்கும் காங்கிரஸ்காரர்கள், பா.ம.க முகத்தையும் பந்து பதம் பார்க்கும். இவ்வளவு சிறப்பான மட்டை வீரர் சொந்த அணியின் அழகிரி சென்னை மைதானம் வரும் போது மட்டும் பதட்டம் அடைவதை தவிர்க்க வேண்டும்.
நல்ல வேலையாக இவர்கள் கால்பந்து விளையாடவில்லை. யார் ஸேம் சைட் கோல் போடுவார்களோ என்ற அச்சம் இல்லாமல் வர்ணனை செய்ய முடிகிறது.
அடுத்த வருடம் எலக்சன் வரப்போகுது. இவங்கதான்
ReplyDeleteவரப்போறாங்க. தமிழ்நாடு சிரிப்பா சிரிக்க போகுது.
பார்த்து எழுதுங்க. நல்ல கண்ணுவும் மகேந்திரனும் , தா பாண்டியனும் எந்த நேரமும் உதய சூரியன் பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது.
ReplyDeleteநான்கு வருடங்களுக்கு முன்பு இடது சாரிகள் தி மு கா வினரிடம் கூட்டணியில் இருந்தனரே, அப்போது மு க ஸ்டாலின் தயாநிதி மாறன் பற்றி தெரியாதா .
டி ராஜாவிற்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கு கு க ஸ்டாலின் முன்மொளிந்தாரே , அப்போது எல்லாம் ஸ்டாலின் நல்லவராக இருந்தாரா.
விநாயக மூர்த்திக்கு எழுதிய
ReplyDeleteஅதே பின்னேட்டம்:
சிரிப்பு வருது, சிரிப்பு வருது,
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது.
சின்னமனுசர், பெரிய மனுஷர்,
செயலைப் பாத்துச் சிரிப்பு வருது.
நல்லாப் பாடுனாய்யா, சந்திரபாபு.
(முதல்வர் மாதிரி வருணனை
பண்ணத் தெரிந்திருந்தா பின்னோட்டமா
எழுதுவோம்? ஒரு திரைக் கதையளவாது
எழுதியிருப்பமில்ல!!)
ஐயா ராம்ஜி! எத்தனை முறைதான் த.பாண்டியன்,டிராஜா பற்றி எழுதுவீர்கள்.ராஜா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்பவர்.சிறந்த கல்விமான்.மாதம் 4500ரூ கட்சி கொடுக்கும் .அதில் தான் அவருடைய வண்டி ஓடுகிறது.எம்.பி யானதால் மாதம் முப்பதயிரமோ,நாற்பதாயிரமோ கிடைக்கும்.அதையும் கட்சியிடம் கொடுத்துவிடவேண்டும்.அதே 4500ல் தான் வண்டியோடுகிறது.1952ம் ஆண்டு தேர்தலில் மெட்றாஸ் மாகாணத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான கூட்டணி வேற்றி பெற்றது.நேரு ராஜாஜியோடு பேசினார்.மாணிக்கவேலர்,படையாச்சிகால்களில் ரஜாஜி விழுந்தார்.முதலமைச்சர் ஆனார்.நேருவும்,பத்திரிகைகளும் அவரை சாணக்கியர் என்று புகழ்ந்தனர்.
ReplyDeleteராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார்.குல்லுகபட்டர்,மனுநீதி காப்பவர் என்று அண்ணாதுரையும்,மு.கவும் அர்ச்சனை செய்தார்கள்.1967ல் அதே ராஜாஜியை மூதரறிஞர் என்று புகழ்ந்து காலில் விழுந்து ஆசிபெற்று அண்ணாதுரை முதலமச்சரானார்.வயத்தேரிச்சலை கிளப்
பாதேயும்.மீண்டும் டி.ராஜா,என்று ஆரம்பித்தால் உமது வீட்டு வாசலில் இந்த பின்னூட்டதை நண்பர்கள் மூலம் ஒட்டச்சொல்வேன் ....எச்சரிக்கை._____காஸ்யபன்.