சுதந்திரத் திருநாடு, ஆங்கொரு சக்கிலிக் காடு!

நாமக்கல் தாலுக்காவில், ஏளூர் கிராமத்திலிருந்து நாட்டார் மங்கலம் மற்றும் சின்ன மணலி செல்லும் பாதையில் கல்லாங்குடி பிரிவு சாலையிலேயே ஒரு சிறு சாமி சிலை இருக்கிறது. அதைச் சுற்றிலும் இரும்புக் கம்பி போட்டு, அதில் ‘சக்கிலி காடு’ என எழுதப்பட்டு இருக்கிறது.

வேலகவுண்டன்பட்டியிலிருந்து வையப்பமலை வரை, புதன் சந்தை முதல் ஏளூர் பெரிய மணலி வரை அனைத்து கிராமங்களிலும் அருந்ததிய மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

சுதந்திரம் பெற்று பல வருடங்களாகியும், உயர் ஜாதியினரால இன்னும் மிக எளிதாக பறத் தெரு, சக்கிலியத் தெரு என அழைக்கப்படும் கொடுமை, இங்கு எழுத்து வடிவில் நிறுவப்பட்டு இருக்கிறது. 

மேற்கண்ட தகவலையும், இந்த புகைப்படத்தையும் நண்பர் விமலாவித்யா அவர்கள் மெயிலில் அனுப்பி, “உங்களை இது தொந்தரவு செய்கிறதா?’ என்ற கேள்வியையும் கேட்டு இருந்தார்.

sakkili kadu

அவஸ்தையாகவும், அவமானமாகவும் இருந்தது. சமூகத்தின் ஆழத்தில் மனிதர்களை அழுத்தி, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர்கள் மீதே பச்சைகுத்தி வைக்கிற வன்கொடுமையாகவே தெரிகிறது.

இந்த சாதிய கட்டமைப்பில், ஆதிக்க சாதியினர், தாங்கள் இன்ன சாதி என பெருமையுடன் பீற்றிக்கொள்ள முடியும்.. காலம்காலமாய் நசுக்கப்ப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கள் இன்ன சாதியென அறியப்படுவதில் அல்லது அறிமுகப்படுத்தப்படுவதில் எத்தனை வேதனையும், வலியும் கொண்டு இருப்பர்?

‘இந்த குளம் தாங்கள் குளிப்பதற்குரியதா, இந்த பாதை தாங்கள் நடப்பதற்கு உரியதா, இந்த சுடுகாடு தாங்கள் புதைக்கப்படுவதற்கு உரியதா” என நிற்கிற, நடக்கிற, சுவாசிக்கிற வெளியெங்கும் ஜாதிய பாகுபாட்டின் எச்சரிக்கையுடனே வாழ்வது எத்தனை கொடுமையானது.?

மனிதாபிமானமும், விடுதலை குறித்த ஞானமும் உள்ள யாரையும் இந்தச் செய்தி தொந்தரவு செய்யும். சில நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்ட ஆட்சியரைப் பாராட்டி, நண்பர் ஈரோடு கதிர் எழுதிய இடுகையை வாசித்தேன். இதனை அறிய நேரும்போது, அவரும் தொந்தரவு செய்யப்படுவார் என்றே நம்புகிறேன். அதனால் சக்கிலிக்காடு என்னும் எழுத்துக்களையாவது முதலில் அழிக்க நேரிடுமா?

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. எல்லாமே பழக்கப்பட்டு மனசு மரத்து போச்சு.... ஒரு கை தட்டின கண்டிப்பா ஓசை வராது...

    பதிலளிநீக்கு
  2. Thank you Madhav...Thank you.For publishing this news item I had a struggle with many persons including left magazines and persons...I really weeping after seeing this article.No words to add

    பதிலளிநீக்கு
  3. //தாங்கள் இன்ன சாதியென அறியப்படுவதில் அல்லது அறிமுகப்படுத்தப்படுவதில் எத்தனை வேதனையும், வலியும் கொண்டு இருப்பர்?//

    உண்மை பிறர் உணரமுடியாத வலியும் வேதனையும் அது...

    ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது. அதுபற்றி தனி இடுகையாகவே போடுகிறேன்..

    பதிலளிநீக்கு
  4. பார்ப்பனன், படையாச்சி,ரெட்டியார், கவுண்டர், முதலியார் போன்றே பறையர், சக்கிலியர் போன்றவைகளும் தமிழ்ச் சொற்களே.சாதிப் பெயர்கள். அந்தச் சொற்களில் எந்த இழிவும் கிடையாது. நம்முடைய முடிவுகள், அல்லது கற்பிதங்கள்.அவ்வாறாக நாம் எண்ணூவதைத்தான் நான் பிற்போக்காக கருதுகிறேன்.எல்லாமே சமம் என்கிறேன்.

    என்ன சொல்றீங்க தோழர்?

    பதிலளிநீக்கு
  5. //பார்ப்பனன், படையாச்சி,ரெட்டியார், கவுண்டர், முதலியார் போன்றே பறையர், சக்கிலியர் போன்றவைகளும் தமிழ்ச் சொற்களே.சாதிப் பெயர்கள். அந்தச் சொற்களில் எந்த இழிவும் கிடையாது. நம்முடைய முடிவுகள், அல்லது கற்பிதங்கள்.அவ்வாறாக நாம் எண்ணூவதைத்தான் நான் பிற்போக்காக கருதுகிறேன்.எல்லாமே சமம் என்கிறேன்.

    என்ன சொல்றீங்க தோழர்?//

    சமம் என்ற சொல் எழுத்தில் நல்லாகவே இருக்குது தோழர்!யதார்த்தம்?

    பதிலளிநீக்கு
  6. தோழனே..
    நம்ம சாத்தூருக்குப் பக்கத்தில் இருக்கும் மேட்டுப் பட்டியில்,
    'பகடை காளியம்மன்' கோவில்
    என்று பெயர் பதிக்கப்பட்டு
    அருள் பாலிக்கிறாள்.
    ஆங்கார ரூபினி
    ஆத்தா காளி.

    (தகவலுக்கு)

    பதிலளிநீக்கு
  7. //ச.முத்துவேல் said...
    பார்ப்பனன், படையாச்சி,ரெட்டியார், கவுண்டர், முதலியார் போன்றே பறையர், சக்கிலியர் போன்றவைகளும் தமிழ்ச் சொற்களே.சாதிப் பெயர்கள். //

    Sir, There is power and history behind these words and to use it is to bring someone down.

    பார்ப்பனன், படையாச்சி,ரெட்டியார், கவுண்டர், முதலியார், பறையர், சக்கிலியர், is all these words same? These words can never become same in our lifetime.. :(

    பதிலளிநீக்கு
  8. கோவை முல்லை நகரில் ஒரு சேரி இன்றும் "ச.. சேரி" என்று தான் குறிப்பிடபடுகிறது - ஊ.ம. ரேசன் கார்டு, டிரைவிங் லைசன்சில் கூட இருப்பதை ஒரு நண்பர் காட்டினார். முதலில் அரசாங்கத்தை ஜாதி பெயர், ஜாதி இட ஒதுக்கீடு ஆகியனவற்றை ஒழிக்க சொல்லுங்க.

    திருப்பூரில் சுப்பையா "வளயன்" காலனி என்று தான் சொல்கிறார்கள்... மரியாதையாக எஸ்.வி. காலனி.

    கவுண்டர் மில்ஸ் இருப்பதும் அங்கு தான்.

    செட்டியார் ஸ்கூல் இருப்பதும் அங்கு தான்.

    பதிலளிநீக்கு
  9. நாடு திருந்தாது...
    திருத்தவும் முடியாது!!!

    பதிலளிநீக்கு
  10. செட்டியார்பட்டி, கவுண்டன்பாளையம், சோலைசேரி, தேவர்குளம்.... என ஊரின் பெயரோடு சாதி சேர்ந்து கொண்டது. அரசு நினைத்தாலும் மாற்ற இயலுமா என்பதே சந்தேகம் தான்...

    பதிலளிநீக்கு
  11. ச‌.முத்துவேலுவின் பின்னோட்ட‌ம் மிக‌ச்ச‌ரியான‌து.
    சில‌ சாதிப் பொய‌ர் சொல்ல‌ வெட்க‌ம் ஏன்?
    இர‌யில்வே யூனிய‌ன் சார்பான சுவ‌ர் விள‌ம்ப‌ர‌ங்க‌ளில்
    'ப‌றைய‌ன்' என்று ப‌திந்த‌ த‌ன்மான‌த்த‌வ‌ரை பார்த்திருப்பீர்க‌ள்.
    நான் இன்ன‌ சாதிக்கார‌ன் என்று பெருமை பேசுப‌வ‌ன்
    த‌ன‌க்கென‌ ஒரு உப்புக்க‌ல்லுக்கும் பெறாத‌வ‌னாக‌த்தான் இருப்பான்.
    வேத‌ங்க‌ள், பேத‌ம் சொன்ன‌ நான்கு வ‌ர்ண‌ம் தானா, இன்னும்?
    ஆயிர‌க்க‌ண‌க்கில் சாதிக‌ள் ஏன், எப்ப‌டி வ‌ந்த‌ன‌?
    ஆள்ப‌வ‌ர்க‌ளுக்கு, பிரித்தாள‌ ந‌ல்ல‌ வ‌ழி.
    கோணார், தேவ‌ர், க‌வுண்ட‌ர், ஐய‌ங்கார், முத‌லியார்,
    செட்டியார், நாய‌க்க‌ர்,ஐய‌ர், நாடார்,நாயுடு, வோளால‌ர்,
    என‌ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி த‌ங்க‌ள் சாதி ப‌ற்றிய‌ உண‌ர்வு கொள்கிறார்க‌ளோ
    'அதே உண‌ர்வை' அவ‌ர‌வ‌ர்க‌ள் (ச‌க்கிலிய‌ர், ப‌றைய‌ர்) உண‌ர‌ட்டுமே.
    இங்கு எல்லோரும் ஒரு நிறை, ஒரே குல‌ம்.
    தேவைப்ப‌டின் உர‌க்க‌ச் சொல்லுங்க‌ள் உங்க‌ள் "முன்னோரின் சாதியை"
    நாம் சாதி பார்ப்ப‌வ‌ர்க‌ள‌ல்ல‌, சாதிப்ப‌வ‌ர்க‌ள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!