முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, “இது பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக இல்லை” என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கோபத்தோடு கருத்து தெரிவிக்குமளவுக்கு போபால் வழக்கில், அநீதி அப்பட்டமாய் தோலுரிந்து போயிருக்கிறது.. மிகப்பெரும் துயரங்களையும் காலம் ஆற்றிவிடும் என்பதும் பொய்யாகி இருக்கிறது. ‘இதுவும் கடந்து போகும்’ என்று சமாதானம் செய்ய முடியாமல் 26 ஆண்டுகள் கழித்தும், கொந்தளிக்கச் செய்கிறது. ஆறாத ரணங்களைக் கீறித் துடிக்க வைக்கிறது.
1984 டிசம்பர் இரண்டாம் நாள் குளிர் இரவில், இந்தியாவே துயில் கொண்டிருந்த நேரம், போபால் மரணத்தின் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தது. யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து நாற்பதாயிரம் கிலோவுக்கும் அதிகமான ‘டாக்சிக்’ வாயு கசிந்து, வெள்ளைப் புகை மண்டலமாய் விரிந்து, அயர்ந்து கிடந்த மனிதர்களுக்குள் நுழைய ஆரம்பித்தது.. தொண்டை காந்தலெடுக்க இரும ஆரம்பித்தவர்கள் உடலின் தசைத் துணுக்குகளெல்லாம் மிளகாயின் காந்தலெடுக்க துடித்துப் போனார்கள். கண்கள் எரிய, எங்கும் “ஐயோ, ஓடுங்கள், ஒடுங்கள் என கூப்பாடுகளும், இதயம் அறுந்து வெளியே வந்து விழுமாறு இருமல்களுமாய் கேட்டன. என்ன, ஏது என்று அறியாமல், இலக்கற்று ஓடியபடியே விழுந்தார்கள். மாடுகளும் கதறியபடி, மனிதர்களை முட்டித் தள்ளி ஓடின. யார், எங்கே என யோசிக்க முடியாமல் புத்தி பேதலிக்க, குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின. விடிந்த போது ஈசல் பூச்சிகளைப் போல நகரமெங்கும் மனித உடல்கள் அங்கங்கு கிடந்தன. இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோக, ஆறு லட்சத்துக்கும் மேலே மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயிருந்தனர். உலகமே விக்கித்துப் போனது.
இப்படியொரு பயங்கரம் நிகழக்கூடும் என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. செப்டம்பர் 1982ல் ராஜ்குமார் கேஷ்வானி என்னும் பத்திரிக்கையாளர், “விழித்துக்கொள்ளுங்கள் போபால் மக்களே, நீங்கள் எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என யூனியன் கார்பைடின் ஆபத்து குறித்து விளக்கியிருந்தார். 1984 நவம்பர் கடைசி வாரம் வரைக்கும், இது குறித்து நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். விபத்து நடப்பதற்கு முன்னர் பலமுறை யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ‘பாதுகாப்பு நடவடிக்கைகள்’ குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இருபத்தைந்துக்கும் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அவைகளை சரிசெய்யத் தவறியதன் விளைவுதான் இந்த பேரிழப்புகள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு தடித்த பெரும் சட்ட புத்தகங்கள் தேவையில்லை. நேர்மையும், இதயசுத்தியும், குறைந்தபட்ச விஞ்ஞான அறிவுமே போதும். ஆனாலும் சாலை விபத்துக்குரிய லட்சணத்துடன் வழக்கு நடத்தப்பட்டு, ‘கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து’ என்ற தீர்ப்பாகி இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஏழு உயரதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ருபாய் (2000 டாலர்!) அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத முதலாளித்துவத் திமிரில் செய்யப்பட்ட படுகொலைகளுக்கும், பஞ்சமா பாதகத்திற்கும் கொடுக்கப்பட்ட தண்டனையாம் இது. இந்த தேசத்தையும், இந்த மண்ணையும் தங்கள் வீட்டு குப்பைத் தொட்டியாகக் கூட மதிக்காத அந்நிய, அமெரிக்க அயோக்கியர்களுக்கு வழங்கப்பட்ட அபராதமாம் இது! வாழிய பாரத மணித்திரு நாடு!
கைது செய்யப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபரான் ஆண்டர்சனை அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் இருந்த காங்கிரஸ் அரசு யாருக்கும் தெரியாமல் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, ’காணாமல் போனவராக’ அறிவித்து தங்கள் அமெரிக்க விசுவாசத்தைக் காப்பாறிக்கொண்டது. அப்படி அனுப்ப ஏற்பாடு செய்தவர் அப்போது மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த அர்ஜீன்சிங் என்றும், அதற்கான உத்தரவிட்டவர் ராஜீவ் காந்தி என்றும் இப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. சம்பந்தப்பட்ட விமான பைலட்டிலிருந்து, மாஜிஸ்டிரேட் வரை பலரது வாக்குமூலங்கள் பத்திரிகைகளில் வந்து கொண்டு இருக்கின்றன. ஆண்டர்சனை அரசு காப்பாற்றியது என முன்னாள் சி.பி.ஐ டைரக்டர் பி.ஆர்.பால் சொல்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்களை அதற்கே உரிய வரலாற்று குணத்தோடு வேகவேகமாக மறுத்து அறிக்கைகள் விடும் காங்கிரஸ் கட்சி, இந்த அநீதியான தீர்ப்பு குறித்து வாயைத் திறக்கவில்லை. மக்களைவிட, மகராஜாக்களே அவர்களுக்கு எப்போதும் முக்கியம்.
அந்த விஷக்காற்றின் உக்கிரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் இப்போதும் பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்கும் அது தாவி இருப்பதை, குழந்தைகளிடம் தென்படுவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாதபடி மோசமாகி இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை கிடைத்த நிவாரணம் என்பது தலா இருபத்தையாயிரம் மட்டுமே. அதுவும் இரண்டு தவணகளாக 1994 மற்றும் 2004ல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போபால் துயரத்தை எதிர்த்து ஒரு அமைப்பை நிறுவி இன்று வரை போராடி வருகிற ஜெயப்பிரகாஷ் இதனைச் சொல்லி இருக்கிறார். அதுவும் இறந்து போனவர்கள் வெறும் மூவாயிரம் என்ற கணக்கில் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த உணமைகளையும், புள்ளி விபரங்களையும் அறிய அறிய, இந்த அமைப்பின் கோரமுகமும், கொடூர குணமும் வெட்ட வெளிச்சமாகிறது.
நமது சட்டத்தில், இதுபோன்ற தவறுகளுக்கு criminal liability சுமத்தும் ஷரத்துக்கள் இல்லையெனவும், அதை சரிசெய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து ஆராய்ந்திட அமெரிக்க் பக்தரும், பெருமுதலாளிகளின் விசிறியுமான ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைத்திருப்பதாகவும் சொல்லப்ப்படுகிறது. நீதிக்கு குழி தோண்டியாகிவிட்டது. இனி புதைக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான்!
இந்தத் தீர்ப்பு இன்னொன்றையும் சூட்சுமமாக தெரிவிக்கிறது. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் குறித்த சட்ட வரையறைகளில் அரசின் நிலைபாடு குறித்த விளக்கம் இருக்கிறது. போபால் விஷக்காற்றை விடவும் பல நூறு மடங்கு ஆபத்து விளைவிக்கும் அணு உலைகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ‘கவனக்குறைவால்’ விபத்து ஏற்பட்டாலும், இதே தீர்ப்புதான் அந்த முதலாளிகளுக்கும் என தெளிவாக்குகிறது. தன் வீடு எரிந்து சாம்பலானாலும், அமெரிக்காவுக்கு குடைபிடிக்கும் இந்த அயோக்கியத்தனந்த்தை என்னவென்பது? “விழித்துக் கொள்ளுங்கள் மக்களே”- இதுதான் போபால் துயரமும், போபால் தீர்ப்பும் நம் அனைவருக்கும் சொல்லியிருக்கும் செய்தியும், எச்சரிக்கையும்..
இந்த பெருந்துயரத்திற்கும், பேரிழப்புகளுக்கும் காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தருவதும்தான் நேர்மையான அரசின் கடமையும் நெறியுமாகும். அந்த யோக்கியதை இதுவரை இருந்த எந்த மத்திய அரசுக்கும் இருக்கவில்லை. நீதி கிடைக்கும் வரை உக்கிரத்துடன் இயக்கங்களை நடத்த ஜனநாய்க சக்திகளும், சமூக ஆர்வலர்களும் முன் வரவேண்டும்! “மக்களின் கொந்தளிப்பும், ஆவேசமும் அதிகமாகியதால்தான், ஆண்டர்சனை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி ஆகியது” என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போது சொல்கிறார். ஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்!
அப்போதுதான் இது நமது தேசமாக இருக்கும்!


//அணு உலைகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ‘கவனக்குறைவால்’ விபத்து ஏற்பட்டாலும், இதே தீர்ப்புதான் அந்த முதலாளிகளுக்கும் என தெளிவாக்குகிறது.//
ReplyDeleteஅப்படி ஒரு திட்டம் நாட்டுக்குத் தேவையா?
//“மக்களின் கொந்தளிப்பும், ஆவேசமும் அதிகமாகியதால்தான், ஆண்டர்சனை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி ஆகியது” என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போது சொல்கிறார்.//
இந்த ஆளு கேசாபையும் இதே போல் விட்டு விடுவோமே ..
சிங்கம் ஆட்சி செய்தாலும் பரவாயில்லை...இது ஓநாய்களின் ஆட்சி இன்னும் என்ன என்னவோ காட்சிகள் அரங்கு ஏற காத்துக்கொண்டிருகின்றன...
ReplyDeleteமிக தெளிவான விளக்கம். நினைக்கையில்
ReplyDeleteநெஞ்சம் பதறுகிறது.
////அணு உலைகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ‘கவனக்குறைவால்’ விபத்து ஏற்பட்டாலும், இதே தீர்ப்புதான் அந்த முதலாளிகளுக்கும் என தெளிவாக்குகிறது.////
இதுவும் நடந்து போகும்....
இதற்கு தீர்ப்பும் இதுபோலவே கடந்து போகும்....
இது பொன்ற நேர்மையான விடயங்கள் மக்களின் அறிவை எட்டினால்தானே.... மாற்று பிறக்கும்?
மக்கள்தான் காசுக்கு ஓட்டளிக்க பழகிவிட்டார்களே!
அன்புள்ள மாது,
ReplyDeleteமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை விளித்து கட்டுரை செல்கிறது அவரைப்பற்றிய குறிப்பில்லாமலே. அவர் ஜனாதிபதியாக இருந்த காலங்களில்தான்(ஜுலை25, 2002) அந்த கோத்ரா கலவரங்கள் (பிப்ரவரி 27,2002)மற்றும் அதன் எச்சங்கள் கோலோச்சிக்கொண்டிருந்தன மதவாத பயிற்சிக்கூடம் என்னும் பெயரில் மோடி என்னும் வெறி பிடித்த மனிதனால். கீதையையும் திருக்குறளையும் போற்றும் அளவுக்கு சிறுபான்மையினர் மீது நடந்த கலவரத்தைக்கண்டித்து குரல் எழுப்பாதவர் என்பதால் அவரை முதல் வரியில் நினைத்தீர்களா என்பது தெரியவில்லை.
கலாமும் வாஜ்பாயும் என்ன செய்து கொண்டு இருந்தார்கள போபால் makkalukku, அவர்கள் பதவி காலத்தில்.
ReplyDeleteநினைத்து இருந்தால் நீதிமன்றங்களுக்கும், டோவ் chemicals kkum அழுத்தம் கொடுத்து நீதி கிடைக்க செய்து இருக்கலாமே முன்னரே.
திலிப் நாராயனன்!
ReplyDeleteஅதனால்தான் //அவர்களே// என்று சொல்லியிருந்தேன்.
இந்த தேசத்தில் நடந்த எந்தக் கொடுமைகள் குறித்தும் கவலைப்படாதவர், அணு ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்தவர் அந்த மகான். அவரே இப்படிச் சொல்லுமளவுக்கு நீதி கிழிந்து கிடக்கிறதே என்று உணத்தவே அப்துல் கலாமை குறிப்பிட்டு ஆரம்பித்து இருந்தேன்.
புரிதலுக்கு நன்றி.
ராமன், Vellore
ReplyDeleteஅர்ஜுன் சிங்கை பலிகடாவாக்கி ராஜீவ் காந்திக்கு களங்கம் வரக்கூடாது
என்பது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டமாக உள்ளது. இந்த சர்ச்சையில் தீர்ப்பின் அராஜகம் குறித்த மக்களின் விவாதத்தை திசை
திருப்புவது என்பது இன்னொரு கேடு கெட்ட தந்திரம்.
அணு உலை விபத்து ஏற்பட்டால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கேள்விகள் எதுவும் வரக்கூடாது. எல்லாமே சட்டபூர்வமானது என்று சொல்லத்தான் அணுசக்தி பொறுப்பு மசோதாவே. நம் கோடீஸ்வர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வேளை மனசாட்சி இருப்பின் அவர்கள் அம்மசோதாவை முறியடிக்க வேண்டும்
தோழர், அளவறியா கோபமும் குமுறலுமாக மனசு கொந்தளிக்குது. தோழர் ஈ.எம்.எஸ். பல பத்தாண்டுகளுக்கு முன்னால் தயவுதாட்சண்யம் பாராது பளிச்சென விண்டுவைத்த அந்த கருத்து நாடெங்கும் பெரும் சர்ச்சையை கிளப்பியதாகவும் புனிதமான உயிரினும் மேலான (உடன்பிறப்பு அல்ல) இந்திய அரசியல் சட்டத்தை தோழர் ஈ.எம்.எஸ் ஒரு முதலமைச்சராக இருந்துகொண்டே அவமதித்ததாகவும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கும்பல் கூச்சலிட்டதாகவும் வரலாறு சொல்கின்றது. "நீதிமன்றங்களும் இந்த முதலாளித்துவ அரசுஎந்திரத்தின் ஒரு பகுதியே, இந்த நீதிமன்றங்கள் முதலாளித்துவ அமைப்பையே பாதுகாக்கும்' ... இந்தப் பொருள்பட தோழர் ஈ.எம்.எஸ். சொன்னதாக தகவல். மாண்புமிகு இந்திய நீதிமன்றங்கள் இப்போது யாரை பாதுகாத்துள்ளன என்பது அம்மணமான வெளிச்சம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் அடிவருடிகளான மன்மோகன் வகையறாக்களையும் பாதுகாத்துள்ளன. வீசி எறியப்பட்ட ரொட்டித்துண்டுகளுக்கு நாய்கள் விசுவாசமாக இல்லாமல் நடந்திருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன் நான்.
ReplyDelete2 ) நீதிமன்றம், போலீஸ், ராணுவம்... இவை யாவும் இந்த முதலாளித்துவ அரசுஎந்திரத்தின் ஒரு பகுதியே, இந்த அரசு எந்திரங்கள் முதலாளித்துவ அமைப்பையே பாதுகாக்கும், தாராளமயம்-தனியார்மயம்-உலகமயம் என காலம் மாறும்போது எல்லைகடந்த ஏகாதிபத்தியத்தையும் காப்பாற்ற முதலாளித்துவ நீதிமன்றங்கள் தயங்காது தம் கடமையை செய்யும் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.
3 ) கொஞ்ச நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் (ஆதவன் தீட்சண்யாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் சொச்ச நீதிமன்றம்) சில நீதிபதிகள் "தாராளமயம்-தனியார்மயம்-உலகமயம்" என்ற புதிய சூழலில் வேலை இழந்த அதாவது வேலை பிடுங்கப்பட்டு துரத்தப்பட்ட அப்பாவிகள் இப்போதெல்லாம் நீதிமன்றங்களுக்கு வழக்காட வந்தால் அவர்களது வழக்குகள் நீண்டகாலம் இழுத்தடிக்கப் படுவதாகவும், இறுதியில் ராட்சச பகாசுர கம்பெனி முதலாளிகளுக்கே சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் கொடுமை அதிகரித்து வருவதாகவும், அதே நேரத்தில் தொழிலாளிகளுக்கு எதிரான வழக்குகளை இந்திய- பன்னாட்டு கார்பொரேட் கம்பெனிகள் கொண்டுவந்தால் வழக்குகள் அதிவிரைவில் முடிக்கப்படுவதாகவும் (அதாவது தொழிலாளர்களுக்கு எதிராக) கவலைப் பட்டிருந்தனர். 1991 முதல் LPG திணிக்கப் பட்டதில் இருந்து தொழில் தகராறு சட்டம் 1947 , தொழிற்சாலைகள் சட்டம் 1948 போன்றவற்றை முற்றிலும் துடைத்துப்போட முடியாதுபோனாலும் அதில் உள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான அம்சங்களை வெட்டிஎறிந்துவிட அமெரிக்க அடிமைகளான மன்மோஹனும் சிதம்பரமும் முடிந்தவரை கரணம் அடிக்கிறார்கள். இந்த சட்டங்கள் எல்லாம் ஏதோ முன்னால் நேரு குடும்பம் இட்ட பிச்சைகள் அல்ல, நீண்ட போராட்டம்,அடக்குமுறைகள், சிறைகொட்டடி, உயிர்த்தியாகம் என இந்திய தொழிலாளி வர்க்கம் உயிர்கொடுத்து வென்றெடுத்த உரிமைகள். தோழர் ஈ.எம்.எஸ்! இப்போது நீங்கள் இல்லாமல் போய் விட்டீர்களே!
இக்பால்
"சாலை விபத்துக்குரிய லட்சணத்துடன் வழக்கு நடத்தப்பட்டு, ‘கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து’ என்ற தீர்ப்பாகி இருக்கிறது "
ReplyDelete"இறந்து போனவர்கள் வெறும் மூவாயிரம் என்ற கணக்கில் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது "
"நீதிக்கு குழி தோண்டியாகிவிட்டது. இனி புதைக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான்! "
தீராத கேள்விகள் அனைவரிடமும் தோன்றினால் நமது தேசம் உருவாகும் நாள் விரைவில் !
வருகிறேன் மாதவ் !
.......
போபால் விபத்தில் எந்தவொரு பெண்ணும் உயிரிழக்க வில்லை
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_14.html
இன்று கட்சி என்றால் சோனியா தான்.
ReplyDeleteநாளை பிரதமர் என்றல் ராகுல் தான்.
இந்த நேரத்தில் ராஜீவ் 25000 பேரை சாவுக்கு காரணமான
வாரன் ஆண்டர்சனை தப்பிக்க வைத்தார் என்ற "தேச துரோத்தை"
மக்கள் அறிந்தால், நாட்டு மக்களின் மொத்தக் கோவமும், ஆத்திரமும்
சோனியா மீது திரும்பும். நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த குடும்பம் போல்
காட்டிக் கொள்ளும் இவர்கள் தேசத்திற்கு எதிராய், துரோகிகளாகி விடுவார்கள்.
பின் இவர்களது, ராகுல் பிரதமர் கனவு, தற்போதையா மந்திரிகளின் வாரிசுகளுக்கு
பதவிகள் என்ற வாரிசு ஆட்சி (மன்னராட்சி)கலைந்து விடுமே!
கட்சியையும், அரசையும், கனவுகளையும் காக்க, இறுதியில்,
அர்ஜுண் சிங், பழி, பாவத்தை ஏற்று நேரு குடும்ப புனிதத்தை
காப்பாற்றி விடுவார் (நஷ்டம் ஈடு செய்யப்படும்).
///முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே///
ReplyDeleteமிக அருமை!!!
உங்கள் பதிவை படிக்கும் போது,மிகவும் வேதனையாக இருக்கு.
இனி எப்படி நடவாமல் இருக்க, ஒன்று ஆட்சியாளர்களை மாற்ற வேண்டும் அல்லது காந்தியின் கொள்கையை மறக்க வேண்டும் (அகிம்சை). நம் மக்கள் சிந்திக்க வேண்டும்!!! அது நடக்குமா??
சட்ட ஒழுங்கை நிலைநாட்ட ஆண்டர்சனை தப்ப விட்டதாக அந்த ஆள் சொல்கிறார்.
ReplyDeleteரைட்டு! அப்படியே தமிழகத்தில் கலவரம் செஞ்சா சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நளினி,முருகனையும் அனுப்பிடுவாங்களா? கொஞ்சம் யாரும் தெரிஞ்சவங்க இருந்தா கேட்டு சொல்லுங்க...
//“மக்களின் கொந்தளிப்பும், ஆவேசமும் அதிகமாகியதால்தான், ஆண்டர்சனை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி ஆகியது” என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி//
ReplyDelete20,000 பேர் உடனடியாக இறந்தும் மீதி பேர் பாதிப்புல்லாகியும், என்ன நடந்தது என்று யோசிப்பதற்கும் சில நாள்கலாகியிருக்கும், அதற்குள் என்ன எழவு சட்ட ஒழுங்க கெட்டிருக்கும்????
நல்ல கொடுக்குராங்கயா டீடைலு
டோவ் chemicals நிறுவனத்தோடு குஜராத்தில் இருக்கும் அரசு நிறுவனமான குஜராத் அல்கலீஸ் நிறுவனம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறது என நினைக்கிறேன்...
ReplyDeleteஇந்த விஷயத்தில் நம்முடைய கோவத்தை சரியான ஆளிடம் காட்டவில்லையோ எனத் தோன்றுகிறது (அல்லது எனக்கு சரியான செய்திகள் கிடைக்கவில்லை) . நான் அறிந்தவரை யூனியன் கார்பைடு UCC என்கிற அமெரிக்க கம்பெனியின் CEO ஆண்டர்சன் . UCIL என்கிற இந்திய கம்பெனியின் 49% பங்குகளை UCC யும் மீதி பங்குகளை இந்திய அரசும், இந்திய வங்கிகளும் மற்றும் இந்திய மக்களும் வைத்திருந்தார்கள். UCIL நிறுவனத்தின் சேர்மன் கேஷூப் மஹிந்திரா. போபால் தொழிற்கூடம் UCIL நிறுவன ஊழியர்களால் மேற்பார்வை இடப் பட்டு வந்தது. இதில் ஆண்டர்சனை விட அதிக பொறுப்புள்ளவர்கள் கேஷூப் மஹிந்திரா மற்றும் UCIL நிறுவன CEO, COO தானே என்று தோன்றுகிறது.
ReplyDeleteடாடா ஸ்டீல் UK வில் உள்ள கோரஸ் என்கிற நிறுவனத்தை போன வருடம் வாங்கியது. ஆனால், கோரஸ் நிறுவனம் இன்னமும் அதற்கென்ற தனியான நிர்வாகத்தை கொண்டது - தனி CEO, COO . நாளைக்கு கோரஸில் ஒரு விபத்து நடந்தால், "ரத்தன் டாடாவை தூக்கில் இட வேண்டும் அனுப்பி வையுங்கள்" என்று UK மக்கள் கேட்டால் நாம் அனுப்பி வைப்போமா?
இது முழுக்க முழுக்க ஒரு அறியா வினா. தவறிருந்தால் மன்னியுங்கள்.
"வெள்ளைப் புகை மண்டலமாய் விரிந்து" என்று எழுதி இருக்கிறீர்கள். MIC is colourless என்று படித்த ஞாபகம். இப்பொழுது உள்ள Media அந்த காலத்தில் இல்லாததால், இந்த கொடும் விபத்து பற்றிய முழு விவரங்கள் நமக்கு இன்னமும் கிடைக்காமலேயே இருக்கிறது.
ReplyDeleteவிபத்து நடந்து 26 ஆண்டுகள் ஆகி இழுத்தடித்து நீதியையும் எரித்தே விட்டார்கள், இப்படி தீர்ப்பு வழங்கியவர்கள் நீதிமான்கள்? இவர்களை விமர்சிக்காமல் எப்படியிருக்க முடியும். பல்லாயிரக்கணக்காண மக்களின் மரண ஓலத்தை விடவும் சில கார்ப்பரேடுகளின் நலன்கள் நீதிமான்களுக்கு முக்கியமாகிவிட்டது.
ReplyDeleteசரியான தலைப்பு...
வலையுலகில் இன்றைய டாப் இருபது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
ReplyDeleteபாலா அறம் வளர்த்தான்!
ReplyDeletebhopal.netல் தான் From the factory which so many had learned to fear, a thin plume of white vapor began streaming from a high structure என்று படித்தேன்.
ஆண்டர்சன் குற்றவாளி இல்லாத்து போல் இருக்கிறது உங்கள் தொனி. இல்லை நண்பரே. யூனியன் கார்பைடு என்னும் அமெரிக்க நிறுவனத்தின், தொழிற்சாலைகளில் ஒன்றுதான் போபாலில் இருந்தது. 49சதவீதம் என்பது, இங்கு ஒரு வரையறையாக வைத்திருக்கின்றனர். 51 சதவீதம் ஆண்டர்சனிடம் இல்லாததால் அதன்மூலம் இந்திய நிறுவனம் போல தோற்றமளிக்கக் கூடும். உண்மை அதுவல்ல.
நீங்கள் சொல்வதுபோல் கேஷூப் மஹிந்திராவும் முக்கியமானவரே. அவர் இனி எந்த நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்திருப்பதாக இரண்டு நாட்கள் செய்தித்தாள்களில் படித்தேன். அவ்வளவுதான்!!
உண்மைகளை அறிய அறிய ஆத்திரம் பொங்கித்தான் வருகிறது!
the constitution of India should be changed(Alahum pitiyum maatri amaikkanum) E.M.S said.this means the leave of the 'mannvetti" and its hand should be changed far improving the farming activities.For improving the condition of Indian people he suguessted the change inthe constitution.The five authorities on marxism at that time are Suslov,Mao,Togloity,Liosushi,and that Great "Puththi Rakshasan"E.M.S. In their judgement the learned (!) judges of S.C extensively quoted Marx and sentenced him.....kashyapan.(addition to charlies pinnuttam.)
ReplyDeleteSorry Madhavji,if my tone was like that. I'll also read more about it.
ReplyDeleteI didnt mean in that way. Somehow, I have a feeling that everybody tries to save the real Indian Industrialists and the management of UCIL who is responsible for day to day operations, by targetting one man Warren Anderson. (I could be wrong too)
பாலா அறம் வளர்த்தான்!
ReplyDeleteநீங்கள் சொல்வதும் உண்மைதான். இதற்கு உடந்தையாகவும், கூட்டாளிகளாகவும் இருந்த இந்தியர்களையும் நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தத்தான் வேண்டும்.
//அப்படி அனுப்ப ஏற்பாடு செய்தவர் அப்போது மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த அர்ஜீன்சிங் என்றும், அதற்கான உத்தரவிட்டவர் ராஜீவ் காந்தி என்றும் இப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.// ஈழத்தில் மூன்றே நாளில் முப்பதாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டபோது அதைப்பற்றிக் கவலைப்படாமல் 'உலகமகா உத்தமர் இராசிவ்காந்தியின்' ஆன்மாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த ஈரோட்டு இளங்கோவன், 'மெகா' தங்கபாலு போன்ற காங்கிரசுக்காரர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்...
ReplyDeleteஉயிரோடு இருக்கும்போது மூன்றே நாள்களில் முப்பதாயிரம்பேர் போபாலில் துடிதுடித்துச் சாவதற்குக் காரணமாயிருந்த இராசிவ்காந்தி, செத்தபின் ஈழத்தில் மூன்றே நாள்களில் நாற்பதாயிரம் பேர் கொன்றழிக்கப்பட (மறைமுகக்) காரணமாக இருந்திருக்கிறார்.. வாழ்க காங்கிரசுக் கட்சி... வளர்க இராசிவின் புகழ்...
ReplyDeleteமும்பையில் நூறுபேரைக் கொன்றவனைத் தூக்கில் போடவேண்டும் என்று வாய் கிழியக் கூவிக்கொண்டே இருந்த ஆங்கில ஊடகங்கள் இப்போது ஏன் அடக்கி வாசிக்கின்றன... முப்பதாயிரம்பேரைக் கொன்றவன் அமெரிக்கன் என்பதாலா இல்லை நூறுபேரைக் கொன்றவன் இசுலாமியன் என்பதாலா..
ReplyDeleteகாங்கிரஸ் கட்சியும் மத்தியஅரசும் மண்ணை அள்ளி அள்ளி போடப் போட புதுப் புது எலும்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கிறது. அர்ஜுன் சிங்கை பலிகடாவாக்கி ராஜீவ் காந்தியின் செயல்பாடு பற்றி யாரும் பேசக்கூடாது என முயற்சிக்கிறது காங்கிரஸ் கட்சி. ராஜீவ் காந்திக்கு தெரியாமல் வாரன் ஆண்டர்சனை அர்ஜுன் சிங்கால் அமெரிக்காவிற்கு அனுப்பிவிட முடியுமா?
ReplyDeleteராஜீவ் காந்தி என்ன மன்மோகன்சிங் போல டம்மி பீஸா என்ன? இறந்து போய் விட்டதால் அவரது அராஜகம் எல்லாம் மறந்து போய் விடுமா என்ன? சர்வசாதாரணமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் ஏ.பி. வெங்கடேஸ்வரனை தூக்கிஎறிந்தவர்தானே அவர்? கொடூரமாகக் கொல்லப்பட்டதால் தியாகியாகி விட்டார். அவருக்குத் தெரியாமலேயே ஆண்டர்சனை அமேரிக்கா அனுப்பி விட்டார்கள் என்பதெல்லாம் மக்களை முட்டாளாக்கும் முயற்சி.
இப்போது வந்துள்ள புதிய செய்தி அவரது அம்மா இந்திரா காந்தியை நோக்கியும் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவிலேயே காலாவதியான தொழில் நுட்பத்துடன் கூடிய யுனியன் கார்பைட் ஆலைக்கான அனுமதி அவசர நிலை கொண்டுவரப்பட்ட மூன்று மாதங்களிலேயே தரப்பட்டுள்ளது என்பதுதான் அச்செய்தி.
ஒரு பழைய கவிதை நினைவுக்கு வருகிறது.
ஒரு குடும்பம்
தன சொத்துக்களை
தேசத்திற்கு அளித்து விட்டு
தேசத்தையே
தனது சொத்தாக்கிக் கொண்டது.
அக்கவிதையை இப்போது மாற்றிட வேண்டும்.
ஒரு குடும்பம்
தேசத்திற்காக
தங்கள் உயிர்களை அளித்ததாக
சொல்லிக்கொண்டே
தேசத்தையே
சுடுகாடாக மாற்றி விட்டது.
1 ) நான் பள்ளி செல்லும் வயதில்தான் பெரியன்னை இந்திராகாந்தி நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய எமர்ஜென்சி டிக்ளேர் செய்தார். அப்போதெல்லாம் நானும் நண்பர்களும் இதை வேறு மாதிரி பேசிக்கொண்டிருப்போம். "டே, சர்வாதிகாரம் வருதாண்டாம்! இனிமே நாட்டுல எவனும் லஞ்சம் வாங்க முடியாதாம்! லஞ்சம் வாங்குனா நடுத்தெருவுல நிக்கவச்சு துப்பாக்கியால சுட்றுவாய்ங்க டோய்!" இப்படியான சிறுபிள்ளை பேச்சுக்கள். கூடவே நிதமும் தெரு முனையில் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் நிற்கின்றார்களா என்று தேடிக்கொண்டே இருப்பேன். ரேடியோவில் ஆகாஷவாணி டெல்லி செய்தி முடிந்தவுடன் சீர்காழி கோவிந்தராஜன் "அறுபது கோடி வயிறு நிறைந்திட இருபதம்ச திட்டம் வந்ததம்மா.." என்று பெரும்குரல் எடுத்து பாடுவார்.
ReplyDeleteஅந்தப்பாடலில் ஒரு வரி: அரசாங்க எந்திரம் ஆடம்பரம் இன்றி அன்பு பணி செய்ய வேண்டுமம்மா... இப்போதான் இதுக்கு அர்த்தம் புரியுது... 1970 லேயே யூனியன் கார்பைடு இந்தியாவில் நச்சுவாயு தொழில் தொடங்க அனுமதி கேட்டதாகவும் ஆனால் எமர்ஜென்சி டிக்ளேர் செய்த ஒருசில மாதங்களில்தான் பெரியன்னை இந்திரா காந்தி லைசென்ஸ் கொடுத்ததாகவும் இப்போது தகவல்கள் நாறுகின்றன. பெரியன்னையின் பேரை காப்பத்த விமானத்தில் இருந்து குதித்த சீனியர் சிவப்பழகன் வாரன் ஆண்டர்சன் பத்திரமாக வூடு போய் சேர விமானம் ஏத்தி உட்டதாகவும் தெருத்தெருவாய் நாறுது, நாத்தம் தாங்கல. ஆடம்பரம் இன்றி எந்த மாதிரி அன்பு பணி செய்தாங்கன்னு இப்போதான் தெரியுது. சரி, இன்னொரு விஷயம், இவங்களுக்கெல்லாம் மூத்தவரு பேரு ஜவஹர்லால் அவரு என்ன செஞ்சாருன்னு தெரியனுமா? ஏன்னா அவரு ஒரு இடதுசாரி , சோசலிஸ்ட்-டுன்னு இப்போவும் பலபேரு நெனச்சுக்கிட்டு இருக்காங்க. அவரும் ஜேம்ஸ்பாண்ட் போல துப்பாக்கி தூக்குன கதை ரொம்ப பேருக்கு தெரியாது, தெரியனுமா? இங்க போங்க http://www.confederationhq.blogspot.com/ THE FIVE GLORIOUS DAYS OF 1960.
2 ) இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் கல்வியாளர்களும் இப்போது உடனடியா செய்ய வேண்டிய வேலை ஒன்னு உள்ளது: மத்திய மாநில அரசுகளின் பள்ளி கல்லூரி பாடங்களில் இருந்து இந்திரா காந்தி ராஜீவ் காந்தி பற்றிய பாடங்களை உடனடியாக அகற்ற வேண்டும், பள்ளி கல்லூரிகளில் இவர்களது படங்களை நீக்க வேண்டும் என்று ஒரு பிரச்சார இயக்கத்தை தொடங்க வேண்டும். தேசத்துரோகிகளின் படங்கள் நம் பிள்ளைகள் படிக்கும் இடத்தில் எதற்கு? வேண்டுமானால் அம்பானி, டாட்டா போன்றவர்களின் வீடுகளில் இருக்கட்டும், அதுதான் பொருத்தமான இடம். இப்படியே உட்டோம்னா நாளைக்கு வாரன் ஆண்டர்சன் படத்தை இந்தியர்கள் அனைவரும் உடம்பில் முக்கிய பாகங்களில் பச்சைகுத்தனும்னு சட்டம்போட்டாலும் போடுவாய்ங்க.
3 ) சொச்சநீதிமன்றங்கள் இப்போது பச்சையாகவே அமெரிக்க எஜமானை குஷிப்படுத்த அவுத்துப்போட்டுவிட்டு அம்மணமாக நிற்கும்போது, அடுத்த முயற்சியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களை உடனடியாக கலைத்துவிட வேண்டும் என்றும் இனிமேல் இந்தியாவில் அகராதிகளில் நீதி, நியாயம், வழக்கு போன்ற அசிங்கமான சொற்களை நீக்கிவிட புனிதமான (பசுமாடு அல்ல) அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும், எனவும் உத்தரவு இடலாம். எனவே ஏற்கனவே இருக்கின்ற நீதிமன்றக் கட்டிடங்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். அந்தக் கட்டிடங்களை இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்க முதலாளிகள் கழிப்பறையாக பயன்படுத்த அரசியல்சட்டத்தை திருத்தலாம். அப்படியானால் நாடெங்கும் வீணாக மிஞ்சிப்போகும் லட்சக்கணக்கான கருப்பு அங்கிகளை என்ன செய்யலாம் என்ற கேள்வி எழக்கூடும். அவற்றை இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்க முதலாளிகளின் காலணிகளை கார்களை துடைக்க பயன்படுத்தலாம். இதற்கு ஒரு விழா ஏற்பாடு செய்யலாம். அதற்கு தலைமை தாங்க வாரன் ஆண்டர்சனை அழைக்கலாம், மந்திரியாக இருக்கும் நேரம்போக மற்ற நேரங்களில் பெரும் பணமுதலைகளுக்கு வக்கீலாக வாதாடும் தொழிலை செய்யும் ப.சிதம்பரம் இந்த விழாவில் தனது கருப்புகோட்டால் வாரன் ஆண்டர்சனின் செருப்பையும் முடிந்தால் அவனது ஆசனவாயையும் துடைத்து விழாவை தொடங்கி வைக்கலாம். இதற்கு உலகவங்கி ஏஜெண்டும் அமெரிக்காவின் இந்திய அடிமை நம்பர் ஒன் ஆன மன்மோகன் சிதம்பரத்துக்கு உதவி செய்யலாம்.
இக்பால்