-->

முன்பக்கம் , � இது ஒரு படிப்பினை!

இது ஒரு படிப்பினை!

அதிர்ச்சி, ஆத்திரம், விருப்பு, வெறுப்பு, உண்மை, போலி, தியாகம், துரோகம் என பல பரிமாண நிகழ்வுகளுக்குள் நுழைந்து, புழுங்கி, வெந்து, தவித்துக் கிடந்த நாட்கள் மெல்ல உதிர ஆரம்பிக்கின்றன. தேவையற்ற வாதங்களுக்கும், விவாதங்களுக்குள்ளும் இடம் தந்து, பிரச்சினை திசை திருப்பப்பட்டது   வருத்தமளிக்கிறது. மங்களூர் சிவா, அபி அப்பா, லதானாந்த் போன்றோரை தேவையில்லாமல் இழுத்தது தவறு. இந்தக் காயங்களை நினைவில் இருத்திக்கொண்டு இனி எப்படி முன்னோக்கி நகர்கிறோம் என்பது முக்கியமானது.


முகில்!

எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்!  நிதானமும், பக்குவமும், அழுத்தமும் மிக்க அவரது ஒவ்வொரு எழுத்தையும் நானும், காலமும் போற்றிக் கொண்டு இருப்போம். மாற்றங்களுக்காக போராடிக்கொண்டு இருந்தாலும், இன்றைக்கு இது ஒரு ஆணாதிக்கச் சமூகம் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என நினைக்கிறேன். முகிலின் குரல் அதனை உணர்வுபூர்வ்மாக பல திசைகளிலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஒவொருவருக்குள்ளும் அழுத்தமானத் தடங்களை பதித்து இருக்கிறது. அனைவரையும் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் என அழைப்பதாகவே உணர்கிறேன்.


முல்லை!

மகாகவியின் அக்கினிக்குஞ்சு இவர்தான். போற்றுகிறேன். குடும்பம், கணவர், மனைவி, ஆண், பெண் உறவுகள் குறித்து அவர் இன்று பகிர்ந்திருப்பவைகளை நாம் அனைவரும் புரிந்துகொள்ளத் தலைப்பட வேண்டும். வாழ்வின் நுட்பமானப் பகுதிகளில், நாம் அறிவுபூர்வமாக நுழைய மறுப்பதையும், நுழைய வேண்டி இருப்பதையும் தெளிவாகவேச் சொல்லி இருக்கிறார். நம் காலத்துப் பெண் இவர் என்று சந்தோஷப்படுகிறேன்.
தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத அவரது பாங்கும், குணமும் மிக அரிதானது. அது வேண்டும். சட்டென்று இளகி, கரைந்து, தன்க்கான அடையாளத்தை இழந்து போகிறவர்களாகவே பெண்கள் பொதுவாகவே இருக்கிறார்கள். அதுதான் பெண்மை என்ற தவறான கற்பிதங்களுடன் நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த பொய்மையின், போலித்தனத்தின் உச்சியில் அவர் தீ வைத்திருக்கிறார்.


இவரை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், நாம் மாற்றங்களை எதிர்ப்பவர்கள் என்றே அறியப்படுவோம். ஆணாதிக்கத்தின் வேர்களில் அவரது கோபமும், சிந்தனையும் தாக்குதல் நடத்துகிறது. அதுதான் முக்கியமென பெருங்குரல் எழுப்புகிறார். காலத்தை சுத்தப்படுத்தும் காரியம் அது.

என் மகளுக்கு இவரை பெருமிதத்துடன் அடையாளம் காட்டுவேன்.

நர்சிம்!

செய்த தவறுக்கு மனம் வருந்தி, முகிலிடம்  மன்னிப்பு கேட்ட நீங்கள்
அதே தொனியில் முல்லையிடம் கேட்க தயக்கம் காட்ட வேண்டியதில்லை.  முல்லை மன்னிக்காவிட்டாலும் நீங்கள் அவரிடம் உங்களது தவறுக்கு வருந்துவதுதான் முறை.

அதற்காக எழுதாமல் எல்லாம் இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.  புதிய மனிதனாய் எழுதுங்கள்.  அதுதான் காலமும், இந்த நிகழ்வும் உங்களுக்குத் தந்திருக்கும் மாபெரும் படிப்பினை. நீங்கள் சுமத்திய களங்கத்தை,  மீதமிருக்கும் உங்கள் எழுத்துக்களால் துடைக்க முடியுமா என முயற்சி செய்யுங்கள்.


இப்பிரச்சினையை ஆத்திரமாக முன்வைத்த நான், இந்த நேரத்தில் என் கருத்தைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன். .இதுகுறித்து மேலும் பேச வேண்டியதுமில்லை என நினைக்கிறேன். நான் பேசப்போவது இல்லை. நாளை புதிய பதிவர்கள் அறிமுகத்தில் சந்திப்போம்.


(காயங்களை ஏற்படுத்துகிற, பிரச்சினைகளை சிக்கலாக்குகிற, தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிற பின்னூட்டங்களை இங்கு அனுமதிக்கப்போவதில்லை.)

Related Posts with Thumbnails

23 comments:

 1. அருமையான பதிவு!!

  முற்று புள்ளி வைத்ததற்கு நன்றி!!!

  இனி பல நல்ல பதிவுகளை எதிர் பார்கிறோம்....

  ReplyDelete
 2. அருமையான கருத்துக்கள்! இதுதான் தீர்க்கமான மற்றும் யதார்த்தமான முடிவும் கூட. நன்றி!

  ReplyDelete
 3. Surukkamaana arthamana pathivu.
  Narsim patri neengal (meendum yelutha solli) yelithi irukkum vaarthaigal ungalathu pakkuvamaana manapaanmaiyai kaatugirathu.
  Manadhukku niraivai unargiren.

  ReplyDelete
 4. thank you madhav

  balasubramanyan vellore

  ReplyDelete
 5. நன்றி!

  (சு)வாசிக்க காத்திருகின்றேன்
  மதுரை காற்றை!

  ReplyDelete
 6. வணக்கம் மாதவராஜ்,

  அப்பாடா என்றாகிவிட்டது.

  நிறைய இருக்கு உங்களுக்கு. சன்னமான நட்பு வட்டம் எங்களிடம் இருக்கு. உங்களைப் பற்றியும் பேசுகிறோம், அடிக்கடி.

  பேச வேண்டும் என்று ஆசை உங்களுக்கு நேரம் இடிக்காத பட்சத்தில்

  ReplyDelete
 7. //நர்சிம்!

  செய்த தவறுக்கு மனம் வருந்தி, முகிலிடம் மன்னிப்பு கேட்ட நீங்கள்
  அதே தொனியில் முல்லையிடம் கேட்க தயக்கம் காட்ட வேண்டியதில்லை. முல்லை மன்னிக்காவிட்டாலும் நீங்கள் அவரிடம் உங்களது தவறுக்கு வருந்துவதுதான் முறை.

  அதற்காக எழுதாமல் எல்லாம் இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். புதிய மனிதனாய் எழுதுங்கள். அதுதான் காலமும், இந்த நிகழ்வும் உங்களுக்குத் தந்திருக்கும் மாபெரும் படிப்பினை. நீங்கள் சுமத்திய களங்கத்தை, மீதமிருக்கும் உங்கள் எழுத்துக்களால் துடைக்க முடியுமா என முயற்சி செய்யுங்கள்.

  //

  ஆத்திரத்தைக் கொட்டி அவனே இவனே, ச்சீ தூ, "அவருடைய சில பதிவுகளில், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரியும். சில நேரங்களில் சுஜாதாவாக முயற்சிப்பார்." - கிட்டதட்ட காப்பி அடித்து எழுதுறார் என்பது போல, பிரபல எழுத்தளராக அவதாரம் எடுக்க முயற்சி செய்கிறான், வென்றெல்லாம் துப்பிவிட்டு அறிவுரை கூறுவது எந்த விதத்தில் ஞாயம் ?

  எப்பவுமே அறிவுரை சொல்லுபவர்கள் கண்டிப்பவர்களாக இருப்பதுடன் அரவணைப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆவேசப்படுபவர்கள் அறிவுரை சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பது இல்லை என்பதைவிட சிரித்துவிட்டும், முகம் சுளித்துவிட்டும் நகர்ந்து செல்வர். அதிலும் சிலர்

  நர்சிம்முக்கான உங்கள் உபதேசம் பதிவை படிப்பவர்கள் வேண்டுமானால் மாதவராஜ் எத்துனை பெருந்தன்மையாக எழுதி இருக்கிறார் என்று பாராட்டலாம்.

  - இதுவும் ஒரு படிப்பினை தான் சார்.

  ReplyDelete
 8. Thanks. Perfect for the current situation.

  "(காயங்களை ஏற்படுத்துகிற, பிரச்சினைகளை சிக்கலாக்குகிற, தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிற பின்னூட்டங்களை இங்கு அனுமதிக்கப்போவதில்லை)"
  -Everybody should do this. Usuppi vitte vedikkai paarkum janangal.

  ReplyDelete
 9. பதிவுலகில் மூன்று அல்லது 6 மாதங்களுக்கொரு புயல் அடித்து பலரது ஒப்பனைகளை கலைத்து செல்கிறது.

  வங்கங்கடலில் சென்னைக்கு அருகே தோன்றும் புயல் தமிழகத்திற்கு மழையை மட்டும் தந்துவிட்டு ஒரிசாவிலோ, ஆந்திராவிலோ ஊழித்தாண்டவாமாடி பேரழிவை ஏற்படுத்துவது போல இந்த பதிவுலகப் புயலும் நேரடியாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காயங்களை பரிசளித்துவிட்டு, பதிவுலகை வாசிக்கும், நேசிக்கும் சாதாரணமானவர்களுக்கு பல பிரபலங்களின் முகமூடியை கிழித்து உண்மை முகத்தை வெளிக்காட்டி நல்ல பணியைத்தான் செய்கிறது.

  கிழிந்து தொங்கிய முகமூடிகளுள் உங்களுடைய முகமூடியும் ஒன்று ஐயா.

  உணர்சி வசப்பட்டு நர்சிம் பதிவெழுதினார் என்பதற்காக அவனே இவனே என திட்டிய உங்களை என்ன சொல்வது? இது தேவையில்லாம வினவில் பைத்தியக்காரனால் இழுத்துவிடப்பட்டு இன்று வரை மங்களூர் சிவாவிற்கு பதிலளிக்காததை இன்று தான் உங்களால் சுட்டிக்காட்ட முடிந்துள்ளது.
  ஆகா நீங்களும் உங்கள் முந்தைய நாட்டமைகளில் உணர்சி மேலிட்டவராகத்தான் இருந்துள்ளீர்கள்.

  கிழிந்த முகமூடியை ஒட்டு போட முயன்றமைக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் முல்லையிடம் நர்சிம்மை மன்னிப்பு கேட்க சொல்லும் முன் நீங்கள் ஒரு மன்னிப்பை கேட்டுவிடுங்கள். ஏனெனில் உங்களுள் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்

  ReplyDelete
 10. நன்றிகள் பல மாதவராஜ். உங்களிடம் ஒரு வேண்டுகோள்!
  அப்படியே மே 30 மற்றும் ஜூன் 1 தேதிகளில் இட்ட இடுகைகளை எடுத்து விடுங்களேன்?
  என்றாவது ஒரு நாள் பின்நோக்கி பார்க்கும் போது இத்தகைய கருப்பு நாட்களின் கசப்பு நினைவுக்கு வரவேண்டாம்!
  இது வேண்டுகோள் மட்டுமே. புரிந்துகொள்வீர்கள் என நினைகிறேன்.

  ReplyDelete
 11. அவசியம் தேவையான தீர்க்கமான பதிவு நண்பரே.

  ReplyDelete
 12. படிப்பினை
  மூன்று பேருக்கும் மட்டுமல்ல.
  அனைவர்க்கும் தான்.
  காலம் தான் எல்லாவற்றுக்கும் மாமருந்து.
  தேவையான பதிவு.

  ReplyDelete
 13. Ennaku Advise pannalae pudiakathu. Athuvum ennai kadumai vimrasan saithvar advise pannale suthma pudikathu.

  Kovi Kannan Sonnathu Correct.

  ReplyDelete
 14. வெறுமனே வாசகியாக இருந்தாலும் கூட நிறையவே வருத்தமாக இருந்தது . சூழ்நிலையின் இறுக்கத்தை தவிர்க்க நல்ல" படிப்பினை "thanks

  ReplyDelete
 15. //

  அதிர்ச்சி, ஆத்திரம், விருப்பு, வெறுப்பு, உண்மை, போலி, தியாகம், துரோகம் என பல பரிமாண நிகழ்வுகளுக்குள் நுழைந்து, புழுங்கி, வெந்து, தவித்துக் கிடந்த நாட்கள் மெல்ல உதிர ஆரம்பிக்கின்றன. தேவையற்ற வாதங்களுக்கும், விவாதங்களுக்குள்ளும் இடம் தந்து, பிரச்சினை திசை திருப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. மங்களூர் சிவா, அபி அப்பா, லதானாந்த் போன்றோரை தேவையில்லாமல் இழுத்தது தவறு. இந்தக் காயங்களை நினைவில் இருத்திக்கொண்டு இனி எப்படி முன்னோக்கி நகர்கிறோம் என்பது முக்கியமானது.
  //

  ஏன், இவர்கள் மட்டும் தான் இதில் இழுக்கப்பட்டார்களா?? சந்தன முல்லை பிரச்சினைக்கும் கலகலப்ரியாவுக்கும் என்ன சம்பந்தம்?? அவர் ஏன் இழுக்கப்பட்டார்?

  வினவு கும்பலால் தூண்டி விடப்பட்டு அதற்கு பின் அவர் மீது வீசப்பட்ட கேவலமான வார்த்தைகளுக்கு யார் பொறுப்பு??

  என்ன காரணத்திற்க்காக அவர் பெயரை நீங்களும் விட்டீர்கள்??

  முன்னோக்கி நகர்கிறோம்??? இப்படி சொல்ல உங்களால் மட்டுமே முடியும்...பார்க்கலாம், உங்களின் நேர்மையை....

  ReplyDelete
 16. நான் இந்த இடுகைக்கு எதிர் வோட்டு போடுகிறேன்...

  ReplyDelete
 17. உங்கள் பார்வைக்காக...

  http://kalakalapriya.blogspot.com/2010/06/blog-post_07.html

  ReplyDelete
 18. பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டுரது இது தானா ? நடத்துங்க...

  ReplyDelete
 19. கோவி கண்னன்!
  ஜோசப் பால்ராஜ்!

  நான் எனக்கு நியாயம் எனத் தோன்றியதைச் செய்தேன். செய்கிறேன்.

  அதுசரி!
  உண்மைதான், கலகலப்பிரியா அவர்களின் பேரையும் சேர்த்தே குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

  ReplyDelete
 20. நண்பர்களே!

  என்னை விமர்சனம் செய்து வந்த கருத்துக்களை வெளியிடலாம் என நினைத்தேன். ஆனால் சில பின்னூட்டங்கள் வேறு நோக்கில் வருகின்றன. இனி பின்னூட்டங்களை அனுமதிக்கப் போவதில்லை.

  ReplyDelete