மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு,
கடன்களைத் திருப்பிக் கட்ட என்னிடம் பணமில்லதததால் என்னையே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். மழை இல்லாத காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளைச்சல் பொய்த்துப் போய்விட்டது. பாரத ஸ்டேட் வங்கியில் நான் வாங்கிய கடன் கட்டாமலேயே உள்ளது. எனது மகன் மற்றும் மனைவி ஆகியோரின் பெயரிலும் கடன்கள் உள்ளன.
வாங்கிய கடனைத் திரும்பப்பெற வங்கி ஊழியர்கள் இரண்டு முறை வந்தனர். நாங்கள் வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறோம் என்று நான் நினைத்துப் பார்த்தேன். இந்த நினைவோடு நான் இந்த உலகத்தை விட்டே செல்கிறேன்.
எனது மகன் மற்றும் மருமகளுக்கும் 2010 ஆம் ஆண்டில் வரும் விவசாயப் பருவத்திற்கான கடனை தயவு செய்து வழங்குங்கள். நான் எடுத்த முடிவுக்கு அவர்கள் வராமல் இருக்க இது உதவும்.
இப்படிக்கு
ரத்தன் ராமச்சந்திர ரவுத்
என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்த ரத்தன் ராமச்சந்திர ரவுத் என்ற விவசாயி. மற்ற விவசாயிகளைப் போல இதை வெறும் வெள்ளைக் காகிதத்தில் அவர் எழுதவில்லை. 100 ரூபாய்க்கான பத்திரத்தாளை வாங்கி அதில் எழுதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததோடு, பிரதமர், முதல்வர், எம்.பி., எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர், தாசில்தார், ஊராட்சித்தலைவர் என்று அனைவருக்கும் அனுப்பியுள்ளார்.
காவல்துறையினருக்கு தனியாக அவர் கடிதம் எழுதியுள்ளார். விசாரணை என்ற பெயரில் எனது குடும்பத்தினரை தொந்தரவு செய்துவிட வேண்டாம் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ள 2 லட்சம் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தைத்தான் எடுத்துக் கொண்டார்கள். அவர்களைப் போல ரவுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு விதர்பாவில் மட்டும் 2010 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து 300 பேருக்கு மேல் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலைகள் ஒருபுறம் இருக்க, அவர்களின் தற்கொலைக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களின் நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ அறிவியலுக்கான மகாத்மா காந்தி நிலையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான குடும்பங்கள் மனரீதியாகக் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.
டாக்டர் பிரகாஷ் பெஹரே மற்றும் டாக்டர் மாணிக் பிசே ஆகியோர் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. தூக்கமின்மை, களைப்பு, கவலை, எதிலும் ஆர்வமின்மை, பசியின்மை போன்றவை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றன. 31.5 விழுக்காட்டினர், அதாவது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் தாங்களும் தற்கொலை செய்து கொண்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் அவலம் இந்த ஆய்வில் அம்பலமாகியுள்ளது. (ஆதாரம் : தீக்கதிர் நாளிதழ்)
ரத்தன் ராமச்சந்திர ரவுத் அவர்கள் தற்கொலையா செய்து கொண்டார்? முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்குக் கவிஞர் நக்னமுனி அவர்கள் எழுதிய கவிதை வரிகளில், இந்தக் கேள்விக்கு விடை இருக்கிறது.
“சூர்யோதத்துக்கு முன் அதிகாலையில்
கலப்பையைத் தோளில் சுமந்துகொண்டு
எலும்பும் தோலுமான காளைகள் தொடர
காடுகளுக்குப் போகின்ற ஒவ்வொரு உழவனிடமும்
சிலுவை சுமக்கும் ஏசுவைக் காண்கிறேன், நான்.
ஆமாம்.
நான் கொலையைப் பற்றி பேசுகிறேன்
இறுதி விருந்தில் யார் காட்டிக் கொடுத்தார்?
ஏசுவுக்குத் தெரியும்.
கொலையாளிகள் யாரென நான் அறிவேன்.”
இந்த அறுபத்து மூன்று வருட சுதந்திர இந்தியாவில், விவசாயத்தைப் புறக்கணித்து, விவசாயிகளின் வாழ்வில் மண்ணள்ளிப் போட்டது யார் என உங்களுக்கும் தெரியும். அணுசக்தி, தொழில்நுட்பம், அந்நிய முதலீடு என ஆயிரமாயிரம் சலுகை அறிவிக்கிறவர்கள், நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்திற்குரிய கவனத்தை செலுத்துவதேயில்லை. மண்ணை நம்பி விதை விதைக்கிறவர்களின் மரணங்களைத்தான் இந்த தேசம் அறுவடை செய்துகொண்டு இருக்கிறது.


சமீபகாலமாக இது குறித்து ஏதும் செய்ய இயலாதவர்களிடம் மட்டுமே காணப்படும் அக்கறையாகிப் போய்விட்டது இந்த விடயம். இறக்குமதி செய்தாவது உண்ணமுடியும் என்பவர்களிடம் இதற்கு விடை கிடைக்குமெனத் தோன்றவில்லை. எங்கெல்லாம் காசு பார்க்க முடியுமோ அங்கெல்லாம் கடைவிரிக்கும் கார்ப்பரேட் அசுரர்களுக்குக் கூட விவசாயத்தில், காத்திருந்தாலும் லாபம் பெற முடியும் என்ற நம்பிக்கையில்லாமல் உதாசீனப் படுத்தப்படும் தொழிலாகிவிட்டது. இவர்களுக்குத் தேவை இலவசங்களல்ல. இலவசங்கள் இவர்களுக்கு உதவுவதும் இல்லை. எந்தக் கட்சியானாலும் முதலில் கஞ்சிக் கட்சி என உணரப்படும்போது உழவன் இருக்க வேண்டும்.
ReplyDeleteThe "HIndu" Rural Editor Mr.P.sainath has exposed with authenticated facts about the Vidharba "suicidal"deaths.They are very few examples of Indian poor farmers status...
ReplyDeleteநான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். உங்களின் உணர்வுகளை என்னால் முழுதாக புரிந்துகொள்ள முடிகிறது.
ReplyDeleteஜனாதிபதி அவர்களே!வங்கியில் கடனை வாங்கிவிட்டு கம்பெனியை மூடிவிட்ட கனவான்களை எனக்குத்தெரியும்.வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் அவர்கள் பெயர், தொங்குகிறது.மாருதி கார்களிலும்.பென்ஸ் கார்களிலும் அவர்கள் நகர்த்துவீதிகளில் பவனி வருகிறார்கள்.சிலர் மந்திரி யாய் வலம் வருகிறர்கள்.சிலருக்கு நீங்களே பதவி ஏற்பு விழாவில் கலந்து வாழ்த்தியுள்ளீர்கள்.அவர்களின்கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கில் மின்சார கட்டணம் பாக்கியுள்ளது தொழிலாளர்களுக்கு பாக்கியுள்ளது.அவர்களுக்கு எப்போதுமே வாங்கித்தான் பழக்கம்.நீங்கள் அவர்களிடம் கேட்கமாட்டீர்கள்.நாங்கள் கேட்கத்தான் போகிறோம்....காஸ்யபன்
ReplyDeleteநெஞ்சு கனக்கிறதய்யா; இந்த அரசியல்வா(வி)யாதிகளால் யாருக்குத் தான் லாபமோ தெரியவில்லை.
ReplyDeleteஜனாதிபதிக்கு எழுதினால் எதுவும் நடக்காதென்பது கூட எம் விவாசாயிகளுக்குத் தெரியலையே!!!!
ReplyDeleteI see the news in The Hindu today that Rahul Gandhi is touring Amethi with BillGates with the intention to make Amethi as an IT hub. May be the visit was intended for some other purpose too. I don't know. On one hand people of Amethi may see there is a prospect of development coming thru this visit(really ?). On the other hand one has to think how many will loose there lands for an IT hub if it really happens. Amethi is rural constituency.
ReplyDeleteMr. Rahul,
Please do something for rural development in your constituency in Education, Healthcare, irrigation, farming, micro finance, etc. BGates visit may give an impression that you are doing something for the constituency. Let the local people benefit. Thanks.
"மண்ணை நம்பி விதை விதைக்கிறவர்களின் மரணங்களைத்தான் இந்த தேசம் அறுவடை செய்துகொண்டு இருக்கிறது."
ReplyDeleteபளீரென முகத்தில் அறையும்
உண்மை!!
எம்மை போன்ற விவசாயிகள் தான் தேர்தலின் போது எட்டாயிரமும் ஓம்பதாயிரமும் வாங்கி கொண்டு எங்கள் வாக்குகளை விற்று விடுகிறோமே.
ReplyDeleteராம்ஜி!என் மகன் திருமணத்திற்கு,என்மகள் பேருகாலத்திற்கு செலவு இருக்கிறதே ஐயா! என்னசெய்ய?அவர்கள் கொடுக்கும் பணம் பத்தாதுதான்.நீங்கள் சொல்லுங்களேன் கூடுதலாகக்கொடுக்கும்படி....விவசாயி(காஸ்யபன்)
ReplyDeleteஎனக்கு ஒன்னுமே புரியல.... முக்கால்பாகம் விவசயத்தை நம்பி பிழைக்கும் தேசத்தில் விவசாயத்தை தவிர அனைத்து துறைகளுக்கும் ஊக்குவிப்புகளும், நிதியுதவிகளும் பாய்ச்சப்படுகிறது. இந்த வளர்ச்சிப்போக்கு எதை நோக்கி?!!
ReplyDelete//மண்ணை நம்பி விதை விதைக்கிறவர்களின் மரணங்களைத்தான் இந்த தேசம் அறுவடை செய்துகொண்டு இருக்கிறது.//
ReplyDeleteஇதயம் கனக்கிறது.
நானும் ஏர்பிடித்தவன் என்பதால் சொல்கிறேன்.
ReplyDeleteவிவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது. கஷ்டங்களின் முடிவு தற்கொலைதான் என்பதை அதிகம் சிந்திப்பவர்கள் அவர்கள்தான்.
மனதை பாதிக்கும் இடுகை இது.
இப்பல்லாம் எங்க ஊரில் விவசாயமே இல்லை.
வணக்கம்
ReplyDeleteநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
You can add the vote button on you blog:
http://thalaivan.com/button.html
THANKS
Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com