-->

முன்பக்கம் , , � அப்பா தி.மு.க! புதிய கட்சி உதயம்!!

அப்பா தி.மு.க! புதிய கட்சி உதயம்!!

அப்பாவைத் தவிர வேறு யாரையும் தனது தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கடமையோடு சொல்லிவிட்டார்.

அதற்காக அவரையேத் தலைவராக ஏற்றுக்கொள்வதா என கண்ணியத்தோடு உடன்பிறப்புகள் கேட்கிறார்கள்.

அப்படி இல்லையென்றால் அப்பா தி.மு.க என்று புதிய கட்சி உதயமாவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கட்டுப்பாடு மிக்கவர்கள் அறிவிக்கிறார்கள்.

இராமன் ஆண்டாலென்ன, இலட்சுமணன் ஆண்டாலென்ன, பரதன் ஆண்டாலென்ன? தசரதன் பேர் நிற்கும்.

Related Posts with Thumbnails

13 comments:

  1. அப்ப, அப்பா தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் அட்டாக் பாண்டின்னு
    சொல்லுங்க.

    :-)

    ReplyDelete
  2. கட்சிக்கு கொள்கையும் ரெடி.
    ஜனநாயக முறைப்படி நடக்கும் எந்த தேர்தலும் எங்களுக்கு பிடிக்காது. அது சட்டமன்ற/பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, உட்கட்சி தேர்தலாக இருந்தாலும் சரி....
    -- அப்பா தி.மு.க.

    ReplyDelete
  3. //இராமன் ஆண்டாலென்ன, இலட்சுமணன் ஆண்டாலென்ன, பரதன் ஆண்டாலென்ன? தசரதன் பேர் நிற்கும்.//

    தசரதன் பேரும் நிற்கும்.போருக்கு புறமுதுகு காட்டியது பேரன் வரையும் நிற்கும்.

    ReplyDelete
  4. ந‌ல்ல‌ வேளை த‌ச‌ர‌த‌னுக்கு, எந்த‌ ம‌க‌ளும், பேர‌ன்க‌ளும் இல்லை. ஆனால்,
    வ‌ர‌ம் வாங்கியிருந்த‌ ப‌த்தினி இருந்தாள், முடி சூட்ட‌லை மாற்ற‌.
    அப்ப‌, இங்கேயும்,அதே ராம‌ய‌ண‌ந்தானா?

    ReplyDelete
  5. இனி நான் அஞ்சா நெஞ்சன் அழகிரி இல்லை, அப்பா நெஞ்சன் அழகிரி. இதை சொல்வதற்க்கு நான் ஆஸ்திரேலியா போய் ரூம் போட்டு யோசிச்சேன்னு யாரும் நினைச்சிக்காதீங்க.

    ReplyDelete
  6. இதுவும் ஒரு

    அ.தி.மு.க தான் போல!

    :)

    ஆட்டுக்கிடாய்கள் பாவம்!

    பசுமதி அரிசி வியாபாரிகளுக்கு கொள்ளை லாபம்!

    இந்த ஏற்பாடே வசனகர்த்தாவின் ஸ்கிரிப்டாகத்தான் இருக்கும்!

    முதல்வர் - ச்டாலின்
    கழகத் தலைவர் - அஞ்சாநெஞ்சன்

    இது தான் ஸ்கிரிப்டின் பின் புதுமையியல்!

    ReplyDelete
  7. அப்பாவின் கட்சி ஒன்று.
    அம்மாவின் கட்சி ஒன்று.
    ஐயாவின் கட்சி ஒன்று.
    அப்பாவின் கட்சியில் அண்ணனுக்கும் தம்பிக்கும் அடிதடி
    அம்மாவின் கட்சியில் எல்லாமே எடுபிடி.
    ஐயாவின் கட்சியில் மகன் அடுத்தபடி.
    அப்பாவுக்கு அம்மா எதிரி
    அம்மாவுக்கு அப்பா எதிரி
    அய்யாவுக்கு இன்று அப்பா எதிரி
    ஐயாவுக்கு நாளை அம்மா எதிரி
    அப்பா கட்சியில் அண்ணனுக்கு தம்பி எதிரி
    ஒன்று மட்டும் நிச்சயம்
    இவர்கள் எல்லோரும் மக்களுக்கு எதிரி!

    ReplyDelete
  8. தி.மு.க. தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் யாருமே இல்லையா?

    http://seeprabagaran.blogspot.com/2010/04/blog-post_01.html

    ReplyDelete
  9. தன் வினை தன்னை சுடும்.

    ReplyDelete
  10. அப்பா என்ன. தம்பி என்ன எதிர் செய்தி வந்ததிற்கு தினகரன் பத்திரிக்கையை கொளுத்திய கூட்டம் தானே.. அடுத்த தலைவருக்கு போட்டியிடுவேன் என்பது ஜனநாயகம் மட்டுமல்ல.. பணம், அதிகாரம், அடியாள்பலம் உள்ளிட்ட சர்வாதிகாரத்தின் வழியில் செல்ல முடியும் என்பதால் ஜனநாயக முறையில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்கிறார். இதயத்தில் காயம் ஏற்படாமல் பதவி போட்டியை நடத்திக் கொள்ளுங்கள் பெரியவர் சொல்லிவிட்டார்,
    நல்ல ஆலோசனை சொல்லட்டுமா தலைவர் கலைஞர் அவர்களே.. எடுத்தற்கெல்லாம் மேற்குவங்கத்தை பார் என்பீர். புத்ததேவ் பட்டச்சார்யா முதல்வர் பதவி ஏற்க ஜோதிபாசு விட்டுக் கொடுத்து அழகு பார்த்தைப் போல நீங்களும் உடன் உங்கள் பதவியை விட்டுக் கொடுத்து மேற்குவங்கத்தை போல் நடந்து கொண்டால் உங்கள் குடும்ப சண்டையில் மாற்றம் வரலாம்.

    ReplyDelete
  11. இவ்வளவு அப்பாவி அரவிந்தனா நீங்கள்..

    யாரை யாரோடு ஒப்பீடுகிறீர்கள்..??

    ReplyDelete
  12. ஒரு ஊர்ல ஒரு பக்காத்திருடன் இருந்தானாம். அவனுக்கு ரெண்டு மூணு பொண்டாட்டி இருந்தாகளாம். அது இல்லாம திருடப்போற எடத்துல எல்லாம் அவன் பொம்பளைகளை சேத்துகிடுவானாம். பக்காத்திருடனுக்கு இந்த வகையில ஏகப்பட்ட புள்ளைங்களாம். முக்காத்திருடன், அரைத்திருடன், காத்திருடன், முக்காலரைக்காத்திருடன், அரஅரக்காத்திருடன்...இப்புடி நெறைய புள்ளைக. குடும்பம் பெரிசாப் போனதுனால அவுகளுக்குள்ள திருட்டு நடத்த ஏரியா பிரிச்சுக்கிடுரதுன்னு முடிவு செஞ்சாங்களாம். அது படியே ஒவ்வொரு புள்ளைக்கும் ஒரு ஏரியான்னு பிரிச்சுக் கொடுத்தானாம் பக்காத்திருடன். இப்புடியே வண்டி ஓடுது. இவுகள ஜனங்க கையும் களவுமா புடிச்சுட்டுங்கன்னா என்ன செய்வாங்களாம், உடனே அவுகளுக்குள்ளேயே சண்டை போட்டு ஒருத்தர ஒருத்தர் ரத்தக்காயம் வர்ற மாதிரி அடிச்சுக்கிட்டு நிப்பாகளாம், பாக்குறவங்களுக்கு கொல நடுங்குமாம், அப்புடி ஒரு சண்ட நடக்குமாம். இந்த சண்ட ராத்திரி வர நடக்குமாம். இதப் பாத்து பயந்து போற ஜனங்க ஒதுங்கி ஓரமாப் போயிருவாங்களாம். ஜனங்கள்ளாம் முழுசா கலஞ்சு போன பெறவு இவுக என்ன செய்வாகளாம், சிரிச்சுக்கிட்டே ஒருத்தர ஒருத்தர் கட்டிப்புடிச்சுக்கிட்டே அவுக அவுக அன்னக்கி அடிச்ச கொள்ளைகள பிரிச்சு பங்கு போட்டுக்கிட்டே அடுத்த நாள் எங்க போய் கொள்ள அடிக்கலாம்னு திட்டம் போடுவாகளாம். ஜனங்கள்ளாம் இத மறந்து போயி மானாட மயிலாட, ஐ.பி.எல்.கிரிக்கெட்டுன்னு பாத்து பொழுத போக்குவாகளாம்...
    இக்பால்

    ReplyDelete
  13. நண்பர்கள் அனைவருக்கும்

    வணக்கம்.

    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    இக்பாலின் பாக்தாத் கதை சிரிக்கவும் வைக்கிறது. வேதைப்படவும் வைக்கிறது.

    ReplyDelete