கோர்ட்டுக்கு வந்த நித்தியானந்தா மீது ஆத்திரத்துடன் மக்கள் செருப்பு வீசிய அன்றைக்குத்தான், ‘அமைச்சர் அழகிரி எங்கே?’ என்னும் கேள்வி இந்த நாட்டின் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாறி மாறி ஒலித்திருக்கிறது. அதுபற்றியெல்லாம் மூச்சு விடாமல், நமது தினகரன் பத்திரிகை நித்தியானந்தாவை மட்டும் பக்கம் பக்கமாய் செய்தி போட்டு, வெறியைத் தீர்த்துக்கொண்டது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கும்போதெல்லாம், அந்தத் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா அவர்களே பதிலளித்துக் கொண்டு இருந்திருக்கிறார். எனவே இப்போது கேள்வி ‘அமைச்சர் அழகிரி எங்கே?’ என்பதாகியிருக்கிறது. அவரது திருமுகத்தை ஒருதடவைகூட பார்த்ததில்லை என சிலர் தெரிவித்து இருக்கிறார்கள். மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் அவரே இருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.
மாநிலங்களவைத் தலைவர் மீராகுமார் ‘அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியாது’ எனச் சொல்லி இருக்கிறார்.’அவைக்கு வராதது குறித்து அழகிரி எதாவது தங்களுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறாரா?’ என்று கேள்வி தொடர்ந்திருக்கிறது. அவைத்தலைவர் ‘அவைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை’ என எரிச்சல்பட்டு இருக்கிறார். பிரதமர் கூட வெளிநாடு சென்றால் அவைத்தலைவருக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என விதி இருக்கிறது. கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. அழகிரியோ, அவர் பாட்டுக்கு மாலத்தீவுக்கு ஜாலியாக ‘டூர்’ சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் அழகிரி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு ரசாயனத்துறை அமைச்சகம் கீழ்க்கண்டவாறு தகவல்கள் தந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது:
அழகிரி பதவியேற்ற 6 மாதத்தில் உள்ளூர் விமானங்களில் 61 முறையும். சர்வதேச விமானத்தில் 6 முறையும் பறந்திருக்கிறார். அதற்கான மொத்த கட்டணம் 145 லட்சம் ஆகும்! அமைச்சராக அலுவலகத்துக்கு எத்தனை முறை வருகை தந்திருக்கிறார், எத்தனை அமைச்சரவைக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு இருக்கிறார் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.
ஒரு அரசகுடும்பத்தின் ராஜகுமாரர்களின் சண்டையைத் தீர்க்க மக்களும், மக்களின் வரிப்பணமும், நாடாளுமன்றமும் கேலிக்குரியதாகி இருக்கிறது. இந்தியா உலகத்திலேயே பெரிய்ய்ய ஜனநாயக நாடு என்று ஒரு சர்டிபிகேட் வேறு. போங்கய்யா வெங்காயம்!


இறுதி வரிகள் இன்னும் கொஞ்சம் காரமாயிருந்திருக்கலாம்.....காஸ்யபன்.
ReplyDeleteஇங்கே நடப்பது ஜனநாயகமல்ல, கையெழுத்து போடுவதற்க்கு அவர் அடியாள் வைத்திருக்கிறார்!
ReplyDeleteஅவரை சொல்லி குற்றம் இல்லை... ஓட் டு போட்ட மக்களும் அவரை சுற்றி உள்ள அல்லக்கைகளும் தேர்தலும், தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் தான் சனநாயகம் என்று அவருக்கு புகட்டியா கருணாநிதியும் தான் காரணம்....
ReplyDeleteஆள் செத்தாலும் பரவாயில்ல, திரும்பவும் பத்திரிக்கை ஆபிஸை கொழுத்திபோட்டுடா என்ன செய்யுறது!
ReplyDeleteஏற்கனவே ஒருக்கா முறைச்சு, வருமானம் வரும் துறை போச்சு, இருக்குறதும் போக விடுவானுங்களா!
இன்னொரு சந்தேகம், மக்களுக்கு அழகிரி டெல்லி போலேன்னு வருத்தமா இல்ல ரஞ்சிதா இன்னும் மாட்டலைன்னு வருத்தமா!?
yes.This is the reward and award service to the Madurai constituency people.Our chief minister must reply to this question..He cannot simply escape from the confusion and absent.
ReplyDeleteNext year the DMK and karunanithi may give him the award of "outstanding Parliamentarian " to Alagiri..Democracy Zindabad.
தமிழிலே பேசுவதென்றாலே மிகக் கடினம், இதில டெல்லில போய் ஹிந்தி, ஆங்கிலத்தில் பேசு என்றால் அவர் என்ன செய்வார் பாவம்... ;-)
ReplyDelete"மாநிலத்தில் நடக்கும் ஊழல்களில் நூறு கோடி சுருட்டலாம் என்றால், மத்தியில் ஆயிரம் கோடி என்று துவங்கலாம் மகனே" என்று பெரியவர் அறிவுரை கூறியும் எடுபடவில்லை போல?
அடுத்த பஞ்சாயத்து மாநில தலைநகரில் எப்போது ஆரம்பிக்குமோ?
கட்டப்பஞ்சாயத்து அங்கே தேவைப்படவில்லையாதாதால் எங்கள் அண்ணன் டெல்லிக்கு சென்று மக்கள் பணத்தை வீண்டிக்க விரும்பவில்லை.
ReplyDeleteவெளங்கிடும் போங்க மக்களே!
ReplyDeleteஇடைதேர்தல் வந்தால் நிச்சயம் வருவார்..
ReplyDeleteநல்லா சொன்னீங்க .
ReplyDelete:((((
ReplyDeleteஅதான் கையெழுத்து போடுகிறாராமே!
ReplyDeleteஅதைவிட வேறு என்ன வேண்டும் மக்களுக்கு! பிரியாணியா?
அரசியற் கூத்துகளைச் சகியாமல் தான் நான் செய்தித்தாள், தொலைக்காட்சி போன்றவைகளைக் கூட நிறுத்தி விட்டேன். ஆனால் நீங்கள் எழுதுவது ஏனோ பிடிக்கிறது. அது அரசியல் பற்றியதென்றாலும் கூட, அதில் தெறிக்கும் அக்கறைத் துளிகளுக்காக!
ReplyDeleteதி.மு.க வில் ஒரு நல்ல தலைவர், ஆங்கிலம் தெரியாமல் அவர் படும் பாடுதான் வேதனை. பொறுத்து இருந்து பாருங்கள், தென் தமிழ் நாட்டில் பல நல்ல திட்டங்களை கொண்டு வருவார்
ReplyDeleteமாதவ்,
ReplyDeleteநாம் ஒன்றை கவனிக்க தவறுகிறோம்.
முகலாய `அரசுரிமை` சண்டைகளில்,
பலியாவது, தந்தையோ, சகோதரனோ,
அல்லது மற்ற வாரிசு உரிமைகளோ தான்.
ஆனால், ஆறு கோடி தமிழர் உரிமைப் போரில்
பலியானது இதுவரை கட்சியினர் அல்லது
அப்பாவிகள் மட்டுமே.
சாணக்கிய தலைவர், மக்கள் முன்னிறுத்துவது,
இருவரை மட்டுமே. வேறு மாற்று நபர்களே
களத்தில் இல்லாமல், இந்த இருவரில்
யார் அந்த ஒருவர்? என்று மட்டுமான தளத்திற்க்கு
வந்தாகி விட்டது. அவர்களும் நம்மை குழப்ப
நல்ல/கெட்ட போலீஸ் விளையாட்டு நடத்துகிறார்கள்.
கட்சிகாரர்கள் மட்டும் குழம்பிய அந்த மாயா வலைக்குள்
.........நாமும் இப்போது!!
சிவகங்கை-மதுரை 45 கி.மீ.
ReplyDeleteநாப்பத்தஞ்சு கிலோ மீட்டர் ஆட்டோ ஓடுமா மாது?
ஓடாது எனில் பின்னூட்டம் போடுறேன். :-)
கட்-அவுட் வைத்து வரவேற்காத
ReplyDeleteஇடங்களுக்கு அண்ணன் போவதே
இல்லை என்பது பாராளுமன்றத்தில்
யாருக்குமே தெரியவில்லை.
amaichcharaay irunthaal enna?naadaalumandram poy bathil soolanumaa enna? vimaanathil paranthu sevai seyyalame!appothu thaane thamizhnaattil muthal panakkaraakudumbam silaaandukalil india alavil panakkarak kudumbamaaga uyyyyara mudiyum?
ReplyDeleteகாஸ்யபன்!
ReplyDeleteபெரியாரின் கோப வார்த்தைகளாலே இவர்களை அழைக்க வேண்டும் போல இருந்தது. அதுதான்....
பிள்ளையாண்டான்!
அது வேறா...! அப்படியே பதில் சொல்வதற்கும் ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே!
ராசராசசோழன்!
ஒப்புக்கொள்கிறேன். இந்த ஜனநாயகம் இப்படியானவர்களையெல்லாம் பெரிய மனிதர்களாக்கும்!
வால்பையன்!
வருத்தங்கள் இங்கு ஊடகங்களால் தானே உருவாக்கப்படுகின்றன.
விமலாவித்யா!
கொடுத்தாலும் கொடுப்பார்கள். அதற்கும் நடிக நடிகையர் வந்து ஆடினாலும் ஆடுவார்கள். முப்பத்து முக்கோடி தமிழர்களும் கண்டு களிப்பார்கள் தொலைக் காட்சிகளில்!
ஜோ!
ReplyDeleteஆமாம். கொள்ளையடிக்கவும் மொழி தேவைப்படுகிறதே.....
ஹரிஹரன்!
அப்படியானால் டெல்லியில் கட்டப் பஞ்சாயத்துக்களே நடக்கவில்லையா...!
ரோஸ்விக்!
மக்கள் விளங்கினால், எல்லாம் விளங்கிரும்தானே!
butterfly surya!
அப்போதுதான் சாமிகள் மலை இறங்கி வருகின்றன.
நண்டு@ரொண்டு!
நன்றி நண்பரே!
யாசவி!
:-)))))
அத்திவெட்டிஜோதிபாரதி!
ஹா...ஹா....ஹா... மக்கள் எதையும் கேட்பதில்லை. அவரே தருவார்!
மதன்!
ReplyDeleteமிக்க நன்றி. எனக்கும் இதையெல்லாம் எழுதிக்கொண்டு இருக்க வேண்டுமா எனத் தோன்றுவதுண்டு. ஆனால் யாரிடமாவது சொல்லி ஆற்றிக்கொள்ளத் தோன்றும்.
பொன்ராஜ்!
ஆமாம். மக்கள் ரொம்ப பொறுமையாகத்தான் இருக்காங்க. ஒருநாள் பார்க்கத்தான் போறாங்க.
வாசன்!
மிக தெளிவாகம், அருமையாகவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த ஜன்நாய்கத்தில் பலிகிடாக்கள் மக்களே!
பா.ரா!
ஆட்டோ இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.:-)))))
விஜயராஜ்!
அருமையான், மிக முக்கியமான தகவல். அப்படியே டெல்லிக்கு சொல்லிவிட வேண்டியதுதானே!
புதுவை ஞானகுமாரன்!
ஆமாம். அதுதான் உயர உயர பறக்கிறாரா?