-->

முன்பக்கம் , , , � கலைஞர் கருணாநிதியின் அசாத்திய தைரியம்!

கலைஞர் கருணாநிதியின் அசாத்திய தைரியம்!

இன்றைய தினகரன் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் தமிழக முதல்வர், டாக்டர், கலைஞர் கருணாநிதி அவர்கள் பெருமிதத்தோடு குறிப்பிட்டதாக கீழ்க்கண்ட செய்தி வந்திருக்கிறது.

“ஏழைகளுக்கு தொண்டாற்றும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே” என்பதுதான் அது.

கலைஞருக்கு அசாத்திய தைரியம்தான். அஞ்சாநெஞ்சனின் தந்தை ஆயிற்றே!

இப்போது சில கேள்விகள் எழுகின்றன. தயவு செய்து யாராவது பதில் சொல்லுங்களேன்.

1. ஏழை என்றால் யார்?
2. தொண்டு என்றால் என்ன?
3. இயக்கம் என்றால் என்ன?

Related Posts with Thumbnails

34 comments:

 1. 1. தன் குடும்பம்
  2. சொத்து சேர்த்து வைப்பது.
  3. சுயலாபத்துக்கு விலை போகும் அடிமைகளும்/அதுவுமற்ற அடியாட்களும். வயிறெறியுது சார்.

  ReplyDelete
 2. //
  இப்போது சில கேள்விகள் எழுகின்றன. தயவு செய்து யாராவது பதில் சொல்லுங்களேன்
  //

  இதற்குத் தான் கொஞ்சம் சமீபகால வரலாறும் படிக்க வேண்டும் என்று சொல்கிறோம்...எங்க கேக்கறீங்க?

  மாறன் மாறன் என்று ஒருவர் இருந்தார். சில பத்திரிக்கைகளில் வேலை பார்த்தார்..சில ஓடாத படங்களுக்கு வசனம் எழுதினார். சில வருடங்கள் கழித்து அவரது மகன் டி.வி கம்பெனி ஒன்று ஆரம்பித்தார். இன்றைக்கு அவரது சொத்து மதிப்பு நாலாயிரம் கோடி என்கிறார்கள். அது கணக்கில் காட்டிய பணம் மட்டுமே.
  காட்டாத பணம் நாற்பதாயிரம் கோடி இருக்கலாம்.

  இந்த சிறிய சரித்திர கதையிலேயெ ஏழை என்றால் யார், தொண்டு என்றால் என்ன, இயக்கம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே??

  :)))

  ReplyDelete
 3. 1) அவர்கள்.
  2) அவர்கள் செய்வது எல்லாம்.
  3) அவர்களால் அவர்களுக்காக நடத்தப்படுவது.

  ReplyDelete
 4. //1. ஏழை என்றால் யார்?
  2. தொண்டு என்றால் என்ன?
  3. இயக்கம் என்றால் என்ன? //

  இது எந்த மொழி?
  நாம் இருப்பது எந்த நாடு?

  ReplyDelete
 5. 1.நம் மக்கள்2.பணம் சம்பாதிப்பது3.ஒரே குடும்பத்தில் பதவி பகிர்வு

  ReplyDelete
 6. இன்றைய செய்தி பார்த்தீர்களா?

  79வயது மூதாட்டி இந்திய தேசத்திற்கு என்ன தீங்கு செய்துவிடமுடியும்? 'அது சரி'சொன்ன கதை நன்றாக இருக்கிறது:)உண்மைக்கதை ஆயிற்றே... உண்மைக்கு எப்போதும் தாக்கம் அதிகம்.

  ReplyDelete
 7. 1. இடைத்தெர்தலின் போது மட்டும் பணம் பெறுபவன்
  2. தேர்தலின் போது வாக்குறுதிகளும், பணமும் கொடுப்பது
  3. இதைத்தவிர்த்த அனைத்துபயன்பாட்டுக்கான மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம்

  ReplyDelete
 8. கவுண்டமணி : அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை
  சத்யராஜ் : இன்னும் கொஞம் ஸ்பீடா...
  கவுண்டமணி : அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை....

  ReplyDelete
 9. //1. ஏழை என்றால் யார்?
  2. தொண்டு என்றால் என்ன?
  3. இயக்கம் என்றால் என்ன?//

  கலைஞர் தமாஷா சிலேடைல ஏதாவது சொல்லி இருப்பார்... ரசிப்பீங்களா... அத விட்டுட்டு தைரியம்னு தலைப்பு போட்டுக்கிட்டு... தமாஷூன்னு போடுங்க...

  ReplyDelete
 10. மக்களை ஏமாற்றும் சூச்சுமம் அவருக்கு தெரிந்திருக்கும் வரை இதுவும் சொல்லுவார் இதற்கு மேலும் சொல்லுவார்.... நடுத்தர வர்க்கம் பாதிக்காத வரை அல்லது சகித்துகொண்டிருக்கும்... வரை ஒரு மாற்றமும் நிகழபோவது இல்லை....

  ReplyDelete
 11. /1. ஏழை என்றால் யார்?
  2. தொண்டு என்றால் என்ன?
  3. இயக்கம் என்றால் என்ன? /
  இதெல்லாம் தெரிஞ்சா இப்புடி இவங்களை எல்லாம் கட்சி நடத்த விட்டுருப்போமா????

  ReplyDelete
 12. ஏழைகள்

  கருணாநிதி,அழகிரி,மு.க.ஸ்டாலின்,கனிமொழி,
  தயாநிதி,கலாநிதி,தயாளு அம்மாள்,
  ராஜாத்தி அம்மாள்.

  தொண்டு

  தமிழ்மொழியை நல்ல விலைக்கு விற்பது,
  தம்ழ்நாட்டில் எல்லா தொழில்களையும்
  தாங்களே செய்வது,தடயம் இல்லாமல்
  ஊழல் செய்வது,பாகுபாடு இல்லாமல்
  தனது குடும்பத்தில் அனைவரும்
  மந்திரி பதவி வகிப்பது.

  இயக்கம்

  என்ன செய்தாலும் இவர்களை விட்டால்
  தமிழ் நாட்டுக்கு வேறு நாதி இல்லை
  என்று நம்பும் தொண்டர் படை.

  ReplyDelete
 13. // கலைஞர் கருணாநிதியின் அசாத்திய தைரியம்// உங்களால் மட்டும் எப்படி இது போல ஒரே வரியில் (அதுவும் தலைப்பிலேயே) மற்றவர்களைச் சிரிக்க வைக்க முடிகிறது....

  ReplyDelete
 14. அவிய நூறு ருவா குடுத்தாக நீங்களுங் குடுப்பியலா சொல்லுறன்.

  ReplyDelete
 15. //“ஏழைகளுக்கு தொண்டாற்றும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே”//

  அநாகரிகமாக இருந்தாலும் இதுதான் உண்மை, இதை படித்தவுடம் , வாயை தவிர மற்ற ஒரு உறுப்பும் சிரிக்கிறது. ஆனால் இதுக்கெல்லாம் அவர்கள் வெக்கபடவே மாட்டார்கள்.

  ReplyDelete
 16. கலைஞர் கருணாநிதி..
  ஒரு தொண்டு கூட செய்யவில்லையா?
  இப்படி ஒரே அடியாக விமர்ச்சிப்பது சரியான செயல்லக இருக்காது
  ஊழல் இல்லாத ஆட்சி திருடாதவன் யாரும் இல்லை
  அரசியல் வாதிகள் இரண்டு வகை 1 மோசமானவன் இன்னொன்று மிக மோசமானவன்

  " மாறன் மாறன் என்று ஒருவர் இருந்தார். சில பத்திரிக்கைகளில் வேலை பார்த்தார்..சில ஓடாத படங்களுக்கு வசனம் எழுதினார். சில வருடங்கள் கழித்து அவரது மகன் டி.வி கம்பெனி ஒன்று ஆரம்பித்தார். இன்றைக்கு அவரது சொத்து மதிப்பு நாலாயிரம் கோடி என்கிறார்கள். அது கணக்கில் காட்டிய பணம் மட்டுமே.
  காட்டாத பணம் நாற்பதாயிரம் கோடி இருக்கலாம்."
  இது ஒரு பாராட்டகூடிய விஷயம் சரியான நேரத்தில் சரியான வியாபாரத்தில் முதலிட்டு
  செய்தார்கள் பலமாடக்கனது இன்றைய நிலையில் சன் டிவி தான் தமிழகதில் நம்பர் 1 ஆதலால் கோடி கணக்கான பணம் சம்பாத்தியம் ஆனது இது தான் நான் சொல்லரது
  azeem

  ReplyDelete
 17. Comrade your party was with DMK in many polls.In 2006 also
  CPI(M) allied with DMK.Only in 2009 the left joined hands with ADMK.For all you know in 2012 the alliances might change.If congress supports ADMK, CPI(M) may support DMK.So dont make a fool of yourself by writing like this without thinking of the possible alliances in future.Are you not a loyal CPI(M) who swears by the party even if it says that world is flat.

  ReplyDelete
 18. வானம்பாடிகள் 1. தன் குடும்பம்
  2. சொத்து சேர்த்து வைப்பது.
  3. சுயலாபத்துக்கு விலை போகும் அடிமைகளும்/அதுவுமற்ற அடியாட்களும். வயிறெறியுது சார்.
  ////

  அண்ணனே பதில் சொல்லிபுட்டார்

  ReplyDelete
 19. ஏழை என்றால் யார்? - முட்டாள் தமிழன்
  தொண்டு என்றால் என்ன? - வோட்டுக்கு 5000 கொடுப்பது
  இயக்கம் என்றால் என்ன? - கருணாநிதி,அழகிரி,மு.க.ஸ்டாலின்,கனிமொழி,தயாநிதி,கலாநிதி,தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள்

  ReplyDelete
 20. தி.மு.க என்பது திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி ஆனப்பின்னே இயக்கம் தொண்டு ஏழ்மைன்னு பேசுகிறதை நீங்களுமா நம்பிட்டு இருக்கீங்க

  மாறன் குடும்பம் சன் டிவி
  ஸ்டாலின் குடும்பம் துணைமுதல்வர் சினிமா
  அழகிரி மத்திய அமைச்சர் சினிமா
  கனிமொழிக்கும் மற்றவர்களுக்கும் தொண்டாற்ற நினைக்கிறார் போலும்

  ஏதோ ஒரு கிழவியை திருப்பி அனுப்பினா ஏன் கூச்சல் போடுறீங்க அடுத்த தேர்தல்ல வோட்டுக்கு 2000 ரூ வாங்கிட்டு மூடிட்டு இருங்க

  எவன் செத்தா என்ன எழவு வீட்டில பிரியாணி கிடைக்குதான்னு பாருங்க

  ReplyDelete
 21. 1. ஏழை என்றால் யார்?

  "கலைஞரின் ஆட்சியில் ஏழைகளே கிடையாது" என்ற அரசின் அறிக்கையை காதில் கூட வாங்க முடியாமல் பசியில் சுருண்டு கிடக்கும் ஒரு ஜந்துகூட்டம்..!

  2. தொண்டு என்றால் என்ன?

  கலைஞர் ஸ்டாலினுக்கு செய்யறது..!
  ஸ்டாலின் அவர் பையனுக்கு செய்யறது...!
  அவரோட பையன் அவர் பையனுக்கு செய்யறது..!

  3. இயக்கம் என்றால் என்ன

  A private limited company owned by Mr.Kalaigar and his sons..!

  ReplyDelete
 22. ‍‍மாத‌வ்,
  க‌ல்ல‌குடி (க‌ள்ள‌) கொண்ட‌து,
  அண்ண‌விட‌ம் மோதிர‌ம், (வாங்கிய‌து),
  எம்ஜியாரால் முத‌ல்வ‌ரான‌து,
  சாராய‌ க‌டையை முத‌ன் முத‌லாய்
  திற‌ந்த‌து.(அண்ணாவுக்கு அர‌சு லாட்ட‌ரி)
  அண்ணாம‌லையால் டாக்ட‌ரான‌து,
  மூன்று ம‌ணித்துளி,துளி உண‌வின்றி
  அண்ணா ச‌மாதி அருகே ஏசியில்
  இல‌ங்கை த‌மிழ்ருக்காய் ப‌சியால் துடித்த‌து.
  (நல்ல‌ வேலை ப‌.சி, பொய் சொல்லி
  புசிக்க‌ வைத்தார்)
  இன்று ஆறு கோடி த‌மிழ‌ர்க‌ளுக்கு,
  த‌ங்க‌ளை ஆள‌, `இந்த‌` இருவ‌ரில்
  ஒருவ‌ர் ம‌ட்டும்தான் த‌குதியான‌வ‌ர்
  மீதி த‌மிழ‌ன் எல்லாம் இவ‌ர்க‌ளால்
  ஆள‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே!!
  என்ற‌ள‌வுக்கு த‌மிழ‌ர்க‌ளுக்காய்
  தெரிவு செய்து, அதை ம‌ட்டுமே
  செய்திக‌ளில் வ‌ருமாறு பார்த்துக்கொல்லுவார்.
  இப்ப‌டி தொண்டு செய்து கொண்டே இருப்பார்க‌ள்
  இப்போத‌வ‌து புரிகிற‌தா?
  ``ஆண்டான், அடிமை`` வ‌ச‌ன‌ம்.

  ReplyDelete
 23. ஏழைகள்... உதயநிதி,துரைதயாநிதி மற்றும் மாறன் குடும்பத்தினர்

  தொண்டு.. அடித்த பணத்தில் மக்களுக்காக சினிமா எடுத்து இலாபம் பார்த்து அதை சினிமாக்காரன்.(.......) வைப்பது.

  இயக்கம்... அது திரு முத்துவேலர் கருணாதியின் கம்பெனியை கவனமாக ஆட்டிவைப்பது.

  ReplyDelete
 24. பதிவும், பின்னூட்டங்களும், வெயிலுக்கு இதமாக இருக்கின்றன.


  \\கலைஞர் தமாஷா சிலேடைல ஏதாவது சொல்லி இருப்பார்... ரசிப்பீங்களா... அத விட்டுட்டு தைரியம்னு தலைப்பு போட்டுக்கிட்டு... தமாஷூன்னு போடுங்க..\\

  \\. இயக்கம் என்றால் என்ன

  A private limited company owned by Mr.Kalaigar and his sons..!\\

  :-))

  ReplyDelete
 25. வந்து கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  ஒவ்வொருடைய வார்த்தைகள் வேறு வேறாய் இருந்தாலும் பதில்களும், பார்வைகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவையாகவே இருக்கின்றன.

  அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 26. இங்கு நண்பர் ஏகலைவன் ஐந்தாறு பின்னூட்டங்கள் இட்டிருந்தார்.

  எதை எழுதினாலும், எதைப் பேசினாலும் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு சொன்னதையே சொல்லிக்கொண்டு பின்னூட்டமிடுகிறார்.

  முந்தைய பதிவிலேயே இதுகுறித்து சொல்லிவிட்ட பிறகும், அதே விஷயங்களைச் சுமந்து கொண்டு எல்லாப் பதிவுகளுக்கும் வந்து நிற்கிறார். அவருடன் விவாதம் செய்வது அர்த்தமற்றதாகவே இருக்கிறது. அது மட்டுமே என் வேலையுமல்ல. நோக்கமுமல்ல.

  எனவே அவருடைய பின்னூட்டங்களை இங்கே பிரசுரிக்கவில்லை. இனி எந்தப் பதிவிலும் பிரசுரிக்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 27. why don't you get the answers from CPI(M)? Hmmmm...before criticizing DMK, watch your back Comrade...

  ReplyDelete
 28. ஏழை: 2000 ரூபாய் இலவச டிவியை வாங்கி 1000 ரூபாய்க்கு விற்பவர்கள்

  தொண்டு: மேற்சொன்னவர்களுக்கு இலவச காப்பீடு செய்து கொடுப்பது

  இயக்கம்: இதையெல்லாம் செய்த ஒரு குடும்பமே இணைந்து புன்னகையோடு போஸ் குடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பாராட்டுவிழா
  நடத்திக்கொள்வது.

  நீங்க சாதனையை பத்தி எதுவுமே கேட்கலையே? :)))

  ReplyDelete
 29. ஏழைகள்

  கருணாநிதி,அழகிரி,மு.க.ஸ்டாலின்,கனிமொழி,
  தயாநிதி,கலாநிதி,தயாளு அம்மாள்,
  ராஜாத்தி அம்மாள்.

  தொண்டு

  தமிழ்மொழியை நல்ல விலைக்கு விற்பது,
  தம்ழ்நாட்டில் எல்லா தொழில்களையும்
  தாங்களே செய்வது,தடயம் இல்லாமல்
  ஊழல் செய்வது,பாகுபாடு இல்லாமல்
  தனது குடும்பத்தில் அனைவரும்
  மந்திரி பதவி வகிப்பது.

  இயக்கம்

  என்ன செய்தாலும் இவர்களை விட்டால்
  தமிழ் நாட்டுக்கு வேறு நாதி இல்லை
  என்று நம்பும் தொண்டர் படை.

  ReplyDelete
 30. 1. வாக்கு வங்கி
  2. வங்கியில் முதலீடு​செய்தல்
  3. முதலீட்டை பெருக்குதல்

  ReplyDelete
 31. மாதவ்,எனக்கு என்னவோ 'நாய் பிழைப்பு' என்ற பதிவுக்கும் இந்தப் பதிவுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதாக சத்தியமாக தோணுது. அப்புடியெல்லாம் இல்லைன்னு மட்டும் நீங்க பதறிப்போய் சத்தியமெல்லாம் பண்ணாதீங்க. அந்த பதிவோட (அசாத்திய தைரியம்...) தலைப்ப நாயும் பொழைக்கும் இந்தப் பொழைப்பு'ன்னு மாத்துனா பொருத்தமா இருக்கும்னு தோணுது. இப்புடி பலதும் தோணுது மாதவ். சரி, சரி, என்னோட பழைய பின்னூட்டம் ஒன்னு இப்போவும் பொருத்தமா தோனுதுங்கரதால அத கொஞ்சம் திருத்தி இங்க மறுபடியும் பதிவு செய்றேன், தயவு செஞ்சு என்ன தடுக்காதீங்க மகாஜனங்களே!
  ஒரு ஊர்ல ஒரு பக்காத்திருடன் இருந்தானாம். அவனுக்கு ரெண்டு மூணு பொண்டாட்டி இருந்தாகளாம். அது இல்லாம திருடப்போற எடத்துல எல்லாம் அவன் பொம்பளைகளை சேத்துகிடுவானாம். பக்காத்திருடனுக்கு இந்த வகையில ஏகப்பட்ட புள்ளைங்களாம். முக்காத்திருடன், அரைத்திருடன், காத்திருடன், முக்காலரைக்காத்திருடன், அரஅரக்காத்திருடன்...இப்புடி நெறைய புள்ளைக. குடும்பம் பெரிசாப் போனதுனால அவுகளுக்குள்ள திருட்டு நடத்த ஏரியா பிரிச்சுக்கிடுரதுன்னு முடிவு செஞ்சாங்களாம். அது படியே ஒவ்வொரு புள்ளைக்கும் ஒரு ஏரியான்னு பிரிச்சுக் கொடுத்தானாம் பக்காத்திருடன். இப்புடியே வண்டி ஓடுது. இவுகள ஜனங்க கையும் களவுமா புடிச்சுட்டுங்கன்னா என்ன செய்வாங்களாம், உடனே அவுகளுக்குள்ளேயே சண்டை போட்டு ஒருத்தர ஒருத்தர் ரத்தக்காயம் வர்ற மாதிரி அடிச்சுக்கிட்டு நிப்பாகளாம், பாக்குறவங்களுக்கு கொல நடுங்குமாம், அப்புடி ஒரு சண்ட நடக்குமாம். இந்த சண்ட ராத்திரி வர நடக்குமாம்.
  இப்புடி அங்க சண்ட நடக்கும்போது 'பாரு பாரு நல்லாப்பாரு பயாஸ்கோப்பு படத்தப்பாரு, மானும் மயிலும் ஆடும் பாரு, நயனுதாரா ஓடும் பாரு அசினப்பாரு பிசினப்பாரு ஐப்பிஎல்லு சண்டைய பாரு'ன்னு ஒரு சத்தம் கேக்குமாம். அது வேற யாரும் இல்ல, பக்காத்திருடனோட மச்சான்தான். அவன் பயாஸ்கோப்பு யாவாரி. அவன் புள்ளைங்களும் பயாஸ்கோப்பு யாவாரிங்கதான். ஜனங்கள்ளாம் ஒடனே சண்டைய மறந்துட்டு பயாஸ்கோப்பு பாக்க வரிசையில நிப்பாக. ஜனங்க இப்புடி மானு, மயிலு, அசினு பிசினுன்னு மயங்கிப்போய் கெடக்கும்போது இவுக என்ன செய்வாகளாம், சிரிச்சுக்கிட்டே ஒருத்தர ஒருத்தர் கட்டிப்புடிச்சுக்கிட்டே அவுக அவுக அன்னக்கி அடிச்ச கொள்ளைகள பிரிச்சு பங்கு போட்டுக்கிட்டே அடுத்த நாள் எங்க போய் கொள்ள அடிக்கலாம்னு திட்டம் போடுவாகளாம். ஜனங்கள்ளாம் இத மறந்து போயி மானாட மயிலாட, ஐ.பி.எல்.கிரிக்கெட்டுன்னு பாத்து பொழுத போக்குவாகளாம்...
  இக்பால்

  ReplyDelete