-->

முன்பக்கம் , , � அம்மாவின் அவர்!

அம்மாவின் அவர்!

எனது 2001ம் ஆண்டு டைரியை எடுத்து இன்று புரட்டிக்கொண்டு இருந்தேன். ஒரு நாளில் பெ.கனகராசு எழுதிய இந்தக் கவிதையை குறித்து வைத்திருந்திருக்கிறேன். தொடர்ந்து டைரியை புரட்டாமல் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தேன்.

 

எதற்கெடுத்தாலும் அம்மா வேணும்
அப்பாவிற்கு
சகலவிதமான பசி தீர்க்க
கைகால் பிடித்துவிட
வைகறையில் எழுப்ப
உதைத்து வசைபாடி
கோபம் தணிக்க
கோவணம் துவைக்க
என எதற்கெடுத்தாலும்...

எதற்கும் தேவையில்லை அப்பா
அம்மாவிற்கு
விடியலில் வாசல் தெளித்து
கோலம் போட
சுள்ளி பொறுக்கி சோறு சமைக்க
எனக்கு நிலாச்சோறு ஊட்ட
இரவுமட்டுமறிய அழ
இப்படி எதற்கும்....

எனினும் அம்மா சொல்கிறாள்..
“எனக்கு எல்லாமே அவருதாங்க”

Related Posts with Thumbnails

21 comments:

 1. அடடா!என்ன அருமையான உணர்வின் வெளிப்பாடு.சிறந்த பகிர்வு!

  ReplyDelete
 2. அய்யா சாமி கொன்னுபுட்டிங்கலே கனகராசு

  ReplyDelete
 3. எனக்கு எல்லாமே அவருதாங்க..
  அங்கேதான் பஞ்ச்!

  ReplyDelete
 4. அருமையான பகிர்வுசார். திரும்பத் திரும்பப் படிக்கிறேன். ஹூம்...

  ReplyDelete
 5. அருமை .
  எல்லா அம்மாக்களும் இப்படிதான் எல்லா அப்பாக்களும் அப்படித்தான்

  ReplyDelete
 6. என்ன சொல்றதுன்னு தெரியல சார். நன்றி பகிர்ந்ததுக்கு.

  ReplyDelete
 7. ஒன்பது வருடங்கள் என்ன, நூறு வருடங்கள் கழித்து படித்தாலும் இனிமையாகவே இருக்கும் இந்த கவிதை

  மிகவும் அற்புதம்

  ReplyDelete
 8. அருமையான பகிர்வு மாது சார்

  ந. முத்துக்குமாரின் தூர் கவிதையும் இறுதியில் இதே உணர்வோடு முடியும்

  ReplyDelete
 9. நல்ல கவிதை..

  ReplyDelete
 10. படித்துவிட்டு சிறிது நேரம் என்னால் எதுவுமே செய்ய முடியாமல் அப்படியே அந்த கவிதையையே பார்த்துக்கொண்டிருந்தேன்...

  ReplyDelete
 11. அருமையான பகிர்தல் மக்கா!

  ReplyDelete
 12. அன்பின் மாதவராஜ்

  அருமை அருமை - கவைதை அருமை - கனகராசுக்கு வாழ்த்துகள்

  அம்மாக்கள் அப்பாக்கள் - இப்படித்தான் - ஏன் பல சமயங்களில் நாமும் இப்படித்தான். அவர்கள் இதற்காக வருத்தப்படுவதோ - நாம் வெட்கப்படுவதோ கிடையாது. என்ன செய்வது

  ReplyDelete
 13. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 14. மிக அருமையாக இருக்கிறது இந்த கவிதை
  ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வாழ்வின் வித்தியாசம் மிக சரியாக கையாலபட்டிருக்கிறது.
  வாழ்த்துக்கள் பெ.கனகராசு அவர்களே.

  நன்றியுடன்,
  வாகை பிரபு.

  ReplyDelete
 15. அன்பு மாதவராஜ்,

  அம்மாக்களும் அப்பாக்களும் எல்லோருக்கும் இதே இயங்கு தளத்தில் இருப்பதாக எனக்கு படவில்லை... அம்மாவை கொண்டாடி அப்பாவின் மேல் காழ்ப்புகள் வளர்க்கும் இந்த கள்ளிச்செடிகளின் பூக்கள் யார் கண்களுக்கும் ஏனோ தெரியவில்லை. எனக்கு வாய்த்தது ஒரு உன்னதமான பெற்றோர்கள்... எல்லா நிலைகளிலும் மிகச்சீரான நடையில் மிதக்கும் அவர்களின் சம்பாசனைகள், உணர்வு பரிமாற்றங்கள், தொடுதல்கள், அப்பாவிற்கு பிடித்த உணவை செய்து அவரை உண்ணச் செய்யும் அம்மாவின் கண் வழி புகுந்து காதலை பிரியங்களை சொல்லும் அப்பா எனக்கு. நாட்டு வெண்டைக்காய், வெத்திலை வல்லிகிழங்கு, நாட்டு கோழி குழம்பு, மிளகாய் சட்னி என்று எல்லா சுவைகளையும் உணர்வு வழி புகுத்திவல் அம்மா... அப்பாவை போல கிராம வாழ்க்கை பரிச்சயம் இல்லை அம்மாவிற்கு... நகரத்தின் பெருவழி சாலையில் அமைந்த வீட்டின் முகப்புகள் சாணி தெளித்து கோலம் இட்டு, பூசணி வைக்கும் பழக்கம் இல்லை அம்மாவிற்கு... அப்பா வாய்க்க பெற்றவர்... நிறைய அனுபவங்களில் விழுந்து எழுந்த பின்னும் ஒரு சுனை நீராய் சுத்தமாய் சுவையாய் இருந்தார் பலருக்கும்... அம்மாவின் விருந்தோம்பலில் மணக்கும் உறவுகள் அப்பாவழி சொந்தத்தில் தான் அதிகம் அவளுக்கு... அக்கா, அத்தை என்று உருகுவார்கள். அப்பா எல்லாவிதத்திலும் அம்மாவுக்கு உதவியாய் இருந்தார்... அம்மாவை சிறுவயதில் இழந்த என் அம்மாவுக்கு, அப்பா ஒரு தாயுமானவனாய் இருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை... நான் பிறக்க ஏழு வருஷங்கள் ஆன நிலையிலும், உறவுகள் மத்தியில் அப்பா அம்மாவை தன் செட்டைக்குள் வைத்து பார்த்து கொண்டார்... சில சண்டை சச்சரவுகள் இருந்தாலும்... இருவருக்கும் இடையே ஆன ஒரு பரஸ்பர புரிதல்கள், மற்றும் பரஸ்பர மதித்தல் அவர்கள் அடிநாதமான காதலை சுருதி பிசகாமல் இசைத்து கொண்டிருந்தது...
  ஒரு அழகான கவித்துவமான காதல், பிள்ளைகள் எங்களுக்குள்ளும் தொடர்ந்தது... இசை பட வாழ்கிறோம் அப்பா விட்டு சென்ற அதே புரிந்துணர்வுடன்...
  நல்ல கவிதை... பகிர்வுக்கு நன்றிகள் மாதவராஜ்!

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 16. நல்ல பகிர்வு மாதண்ணா.

  ReplyDelete
 17. நல்லதொரு பகிர்வு, பல அம்மாக்களின் நிலை!

  ReplyDelete
 18. கூட்டி மொழுகி, கோல‌ம் போட்டு,
  வில‌க்கி, விள‌க்கேத்தி, ப‌த்தி பொருத்தி
  ப‌டைச்சி,பூஜை, புன‌ஷ்கார‌ம்,செஞ்சி,
  ந‌ம்ம‌ உப‌வாசம் இருந்து, கும்பிடுரோம்.
  ஆனால், அந்த‌ சாமி எதையும்
  ச‌ட்டை செய்யாம‌ மர‌ச்ச‌ட்ட‌த்தில‌
  மாதிரி, புருச‌னும், அதே வாட்ட‌மாதான்.

  ReplyDelete