-->

முன்பக்கம் , , , � ஏழை இளம்பெண்கள் என்ன, அவர்கள் பரிசோதனைக்கான எலிகளா?

ஏழை இளம்பெண்கள் என்ன, அவர்கள் பரிசோதனைக்கான எலிகளா?

merck logo

அமெரிக்க மருந்து நிறுவனமான ‘மெர்க்’ (MERCK ) இடுப்பெலும்பு புற்று நோய்க்கான மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு சோதனைக் களமாக இந்திய பெண்களை பயன்படுத்தவது என்று முடிவு செய்து இந்தியாவிற்குள் கால் வைத்திருக்கிறது. இதன் விளைவு தற்போதும் மட்டும் ஆந்திரம் மாநிலம் கம்பம் மாவட்டத்தில் 4 பெண்களின் உயிர் காவு கொடுக்கப்பட்டுள்ளது. 120 பெண்களுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கொடுமை என்னவென்றால் இந்த பரிசோதனைக்கு 10 - 14 வயது கொண்ட 32 ஆயிரம் இந்திய சிறுமிகள் உட்படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் இந்தியாவின் ஏழைப்பெண்கள் பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். பொது சுகாதார திட்டத்தில் இல்லாத எச்பிவி தடுப்பூசியை எப்படி மக்களுக்கு போட சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அனுமதித்தது. இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் எழுப்பியுள்ளார்.

ஒரு மருந்தினை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன் அது அறிவியல் ரீதியாக முழு பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதும் தெளிவு படுத்தியிருக்க வேண்டும். மேலும் அது எந்த அளவு உடலுக்கு பாதுகாப்பானது என்பதையும் நிருபித்திருக்க வேண்டும். அதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கும் அரசு நிறுவனத்திடமிருந்து தரச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான சட்ட திட்டங்கள் இருக்கிறது. இவை எதுவுமே அமெரிக்காவின் மெர்க் நிறுவனத்திற்கு பொருந்தவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் நேரடியாக அப்பாவி ஏழை பெண்களுக்கு நிருபிக்கப்படாத ஒரு மருந்தை செலுத்த அனுமதித்து இருக்கிறது. குறைந்த பட்சம் அந்த நிறுவனத்தின் தரம் தராதரம் என்னவென்றாவது பார்த்திருக்க வேண்டுமல்லவா? அதைக்கூட ஆந்திராவின் காங்கிரஸ் அரசும், குஜராத்தின் பாஜக அரசும் பார்க்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் ஏற்கெனவே எவ்வளவு மோசடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது என்ற பட்டியல் நீள்கிறது.  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மெர்க் நிறுவனம் ‘ வயாக்ஸ் ‘ என்ற வலிநிவாரணி மருந்தை (Non Steroidal anti inflammatory drug) தயாரித்து விற்பனை செய்து வந்தது. ஆனால் இந்த மருந்தை உட்கொண்டவர்களுக்கு இதய நோய் சார்ந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சந்தையில் இருந்த வயாக்ஸ் மருந்து திரும்ப பெறப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொன்றாக மெர்க் நிறுவனத்தின் மோசடித்தனங்கள் வெளியில் வரத்துவங்கியது. சந்தையில் உள்ளவர்களை நம்பவைக்க வேண்டும் என்றால் அறிவியல் ரீதியாக வெளிவரும் பத்திரிகையில் ஒரு மருந்தின் தரம் உறுதிபடுத்தப்பட்டால் அதனை நம்பி வாங்குவதற்கு யாரும் தயக்கம் காட்ட மாட்டார்கள். அதை எப்படி உருவாக்குவது என்று எண்ணிய மெர்க் நிறுவனம் ஏற்கனவே அறிவியல் நிகழ்வுகளை பிரதானமாக தாங்கி வரும் ஒரு பத்திரிகையை தேர்ந்தெடுத்தது. ஆனால் அந்த பத்திரிகையில் செய்தியை இடம் பெறச் செய்வதற்கு பதிலாக அந்த பத்திரிகையையே போலியாக தயார் செய்தது என்பதுதான் உச்சகட்டம்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனுபவ மிக்க பிரபல மருத்துவர் ஒருவர், மெர்க் நிறுவனம் அளித்த நான்கு விஞ்ஞான பத்திரிகைகளை ஆழமாக அலசி ஆராய்ந்த போது சில நெருடல்கள் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட பத்திரிகையை தொடர்பு கொண்டு கேட்ட போது ஆஸ்திரேலிய மருத்துவர் கையில் இருந்த பத்திரிகை தங்கள் பத்திரிகை அல்ல என்பதை உறுதிபடுத்தினர். அது போலி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது வழக்காக மாறியது. அந்த வழக்கில் தனக்கு எதிராக இருந்தவர்களை எப்படி ‘கவனித்து’ கவிழ்த்தது என்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் சிலரின் மேற்படிப்புக்கு பணமும், அவர்கள் ஆய்வு செய்வதற்குரிய பணமும், அவர்கள் மருத்துவ பள்ளி நடத்துவதற்கு உதவியும் என்று சகலவிதத்திலும் மருத்துவர்களை கவனித்துள்ளது. இந்நிறுவனம் விரித்த ‘அன்பு’ வலைக்குள் சிக்காத மருத்துவர்களை அவதூறு செய்தும், மிரட்டியும் சமாளித்துள்ளது. தனது பலத்தை அனைத்து விதங்களிலும் பயன்படுத்தியது

இது மட்டுமல்ல ஒரு நாட்டின் அமைச்சர்களையே தனது பணத்தால் கவிழ்த்த கதையும் உண்டு. இங்கிலாந்து நாட்டிலுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தி கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள விஷயம் அப்போது இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வயாக்ஸ் மருந்து சாப்பிட்டதன் காரணமாக இதயநோய் சம்பந்தமாக பக்கவிளைவு இங்கிலாந்திலும் ஏற்பட்டது. இது பெரும் பிரச்சனையாக மாறியது. அப்போது சில அமைச்சர்கள் இந்த பிரச்சனையை கையிலெடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர். அந்த அமைச்சர்களை குறிவைத்த மெர்க் நிறுவனம் அவர்களை தனது வலைக்குள் விழ வைத்தது. அவர்களை அந்தர் பல்டி அடிக்கும் அளவிற்கு கவனித்திருந்தது என அந்த பத்திரிக்கை கூறுகிறது.

அப்படிப்பட்ட நிறுவனம் இந்தியாவிற்குள் பாஜக ஆளும் குஜராத்திலும், காங்கிரஸ் ஆளும் ஆந்திராவிலும் எவ்வித அரசின் சட்டத்திட்டங்களுக்கும் உட்படாமல் தனது சோதனையை நடத்தியிருக்கிறது. ஏழை இளம் பெண்களை பரிசோதனை எலிகளாக பயன்படுத்தியிருக்கிறது. அப்படியென்றால் சட்டங்களையும், அரசு விதிமுறைகளையும் மீறுவதற்கு யார் யாரை எல்லாம் ‘கவனித்திருக்கும்’? பாரபட்சமற்ற நீதி விசாரணையே உண்மையை வெளிக்கொண்டு வரும்.

(நன்றி: தீக்கதிர்)

Related Posts with Thumbnails

20 comments:

 1. அதிர்ச்சி அடைந்தேன்.... தமிழகத்தில் மட்டும் எழுபத்தைந்து பொருளியல் மண்டிலங்கள், செய்தித்துறையில் நேரடி வெளிநாட்டு முதலீடு என்று தொடங்கி மான்சான்டோவின் மரபணு மாற்றுக் கத்திரிக்காய், மெர்க்கின் இடுப்பெலும்புப் புற்றுநோய் மருந்து என இந்தியாவை அமெரிக்காவிற்கு விற்றுவிடத் துடிக்கிறது அரசு என்றே தோன்றுகிறது. 'இந்திய நாட்டில் வணிகம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்தார்கள்... அரசியல் செய்ய வந்தவர்கள் வணிகம் செய்கிறார்கள்' என்னும் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

  ReplyDelete
 2. Those women and men have accepted the test with consent due to poverty.

  So the communists party should come forward to remove the poverty.

  ReplyDelete
 3. sir, the vaccine in news HUMAN PAPILLOMA VIRUS vaccine is against cervical cancer. and not against cancer of hip bone

  ReplyDelete
 4. ithai pola innum ethanai nigalvugal nadanthu kndirukirathu endru theriya villai namathu naatil ulla partys ithai udane kavanathil kondu vanthu merkai tadai seyya vendum.........

  ReplyDelete
 5. ஆதி!
  சரியாகச் சொன்னீர்கள். இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு, எளிய மக்கள் குறித்து கிஞ்சித்தும் கவலையில்லை, அக்கறையில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் சொல்கின்றன.


  ராம்ஜி யாஹூ!
  அப்படியானால், மற்றக் கட்சிகள் எல்லாம் ஏழ்மையில் குளிர் காய்கின்றன என அர்த்தம் கொள்ளலாமா?

  ReplyDelete
 6. அண்ணா ,
  இது தான் முதல் வருகை ,இந்த மாதிரி செய்தால் அவர்கள் ,ஆயுதம் ஏன் எடுக்கபோகிறார்கள்???அரசியல்வாதிகளின் குள்ளனரிதனத்தால் அப்பாவி பொதுமக்களும் ,ஏழை பழங்குடியினரும் தான் பாதிக்கபடுகிறார்கள்..,மிகவும் வருத்தம் அடைய செய்கிறது ..,நேற்று ஒரு ஆங்கில தொலைகாட்சியில் தண்டகரன்யத்தில் வாழும் மக்களை காண்பித்தார்கள் ,மனது மிகவும் வேதனை அடைந்தது சார் ...,அவர்களை போய் வெளியேற்றிவிட்டு ,நான்கு முதலளிகளுக்காக இந்த அரசு ஏன் இந்த படு பதாக செயல்களை செய்கிறது என்று தெரியவில்லை ,

  ReplyDelete
 7. விஸ்வநாதன்!

  பத்திரிகையில் தரப்பட்டுள்ள செய்தியைத்தான் பகிர்ந்திருக்கிறேன். மருத்துவம் குறித்த technical விஷயங்கள் தெரியாது. ஆனால், இந்த அரசு மக்களை வஞ்சிக்கிறது எனபது தெளிவாகத் தெரிகிறது.

  ReplyDelete
 8. அதிர்ச்சி தகவல் ...! மக்கள் மேல் அக்கரைகொள்ளாமல் இதுபோன்ற விசயங்களை அரசு அனுமதிக்கும்போது மாவோயிஸ்டுகள் போன்ற அமைப்பினர் ஏன் உருவாக மாட்டார்கள்??

  ReplyDelete
 9. அண்ணா,
  உங்கள் இடுகையைப் படித்ததும் மனசு கொதிக்கிறது.....
  டே வீணாய்ப்போன அரசியல்வாதி சாவு கிராக்கி நாய்களா ..... உங்க ஆத்தாவுக்கும், உன் பொண்டாட்டிகிட்டேயும் இந்த மருந்த போட்டு ஆராய்ச்சி செய்ய வேண்டியதுதானே....ஏழை மக்களன்ன இளிச்சவாயங்களா....??

  //Blogger ராம்ஜி_யாஹூ said...

  Those women and men have accepted the test with consent due to poverty.

  So the communists party should come forward to remove the poverty.

  April 11, 2010 10:46 AM //
  யோவ்...ஏழைகளுக்கு சாப்பாடு கூட கிடைக்காத அளவுக்கு இந்த அரசாங்கம் கிழித்த கிழிப்பு உங்களுக்கு தெரியவில்லையா... கம்யூனிஸ்ட் மட்டும் தான் போராடனுமா,,,,,ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை செய்யாமல் இந்த மாதிரி பிராடு தனத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா.....


  நல்லவன் கருப்பு

  ReplyDelete
 10. அதிர்ச்சி ........அதிர்ச்சி .............அதிர்ச்சி................... என்ன செய்ய போகிறோம் நண்பர்களே......இதை நாம் அனுபவித்து ஆகவேண்டிய கட்டாயம்......... என்ன செய்வது..... ஒரு பார்சல் பிரியாணியும்.......நூறு ரூபாய்க்கும் ஒட்டு போடும் இந்த மனிதர்களுக்கு இது தேவைதான்,.......... பாவப்பட்ட நாம் ஏன் சிந்தக்கவில்லை ....... நாம் செய்யும் தவறுகள் நம்மை எப்படி ஆள்கிறது என்று..... நண்பர்களே......நீங்கள் ஒன்று நன்றாக சிந்தியுங்கள்.... இப்போ நடக்கும் தேர்தல் எப்படி நடக்கிறது என்று..... ஒட்டு இயந்திரம் மூலம்... ....உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.... ஒட்டு இயந்திரத்தில் தில்லு முள்ளு செய்யமுடியாது என்று தேர்தல் ஆணையர் கூறுவார்......ஆனால் தில்லுமுல்லு கண்டிப்பாக செய்யமுடியும்...நண்பர்களே....இதுவும் உங்களுக்கு தெரியும்... இதை யாராவது ஒரு பிளாக்கர் கூறியதை நான் இது வரை நான் பார்த்தது இல்லை.... அப்படி கூறினாலும் ஆதாரம் வேண்டும் என்பார்கள்.... ஒன்று சொல்லுகிறேன் கண்டிப்பாக ஒட்டு இயந்திரத்தில் தில்லு முள்ளு செய்யமுடியும்... அது கணிப்பொறி தெரிந்த, தொழில்நுப்பம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். ஓரளவு மைக்ரோ ப்ரோசெச்சொர் ப்ரோக்ராம்மிங் தெரிந்தவர்கள் இதை சுலபமாக ஓட்டை மாற்றி போட்டு விடலாம்.... இவர்கள் செய்யும் இந்த அநியாயத்தை படித்த நாமே கேட்கவில்லை....அதை சொல்லுவதுமில்லை...இனிமேல் நாம் என்ன செய்யபோகிறோம்... நடப்பது நாம் அனைவரும் அனுபவிக்க போகிறோம்.. அதற்க்கு நாம் நம் மனதை தயார் படுதிகொல்லுவோம்.... இனிமேல் தவறுகளை சுட்டிகட்டுவோம்.... நண்பர்களே.. வணக்கம்.....

  ReplyDelete
 11. நம் நாட்டில் சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லாததே இதற்கெல்லாம் முக்கிய காரணம். அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக வெளிநாட்டுப் பேய்களின் பணத்தை பெற்றுக்கொண்டு ஓநாய்களாக மாறிவிடுகின்றனர். அவ்வாறு பெறும் பணத்தையும் சுவிஸ் வங்கியில் போட்டுவிட்டு இந்தியாவை இன்னமும் ஏழை நாடாக மாற்றி வருகின்றார்கள். கண்டிப்பாக இதற்கெல்லாம் ஒருநாள் விடியல் உண்டு. காத்திருப்போம்......

  ReplyDelete
 12. மருந்துக் கம்பெனிகளின் புது கண்டுபிடிப்பை இது போன்று இந்திய மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் உள்ள ஏழை மக்களிடம் பரிசோதிப்பது காலம் காலமாய் நடந்து வருகிறது. இதற்காக இந்தியாவில் உள்ள Reddy 's laboratories கூட கண்டனத்திற்கு உள்ளானது. மக்கள் நலனுக்காக மட்டும் அமையும் ஒரு அரசாங்கத்தினால் மட்டுமே இதை போன்ற செயல்களை கட்டுப் படுத்த முடியும். அதுவரை மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றி அமையாதது.
  அன்புடன் சுவாமி.

  ReplyDelete
 13. தகவல் உண்மை எனும்பட்சத்தில் இது அரசியல் மொள்ளமாரித் தனத்தின் உச்சம் என்றே தோன்றுகிறது.. இருபது முப்பது வருட அரசியல் வாழ்க்கையில் மனிதன் என்ன ஆட்டம் போடுகிறான் பாருங்கள்..

  ரத்தம் கொதிக்கிறது... மனிதம் எதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது..

  அந்த நிறுவனத்தின் மீது கொஞ்சம் குற்றம் என்றால், அதற்க்கு முதுகெலும்பை வளைத்துப் பணிபுரிந்த புல்லுருவிகள் மீது தான் அனைத்து குற்றமுமும்..

  அனைவரும் குஷ்ட ரோகம் வந்து சாக வேண்டும் என்று விரும்புகிறேன்..
  இதற்குத் தீர்வே இல்லையா.. மனிதன் மன நிலைமையை குழந்தையிலிருந்தே மாற்றி நல்லவர்களாக வளர்க்க வேண்டும்.. நாளைய சமுதாயம் இது போன்று கண்டிப்பாக இருக்க கூடாது....
  நன்றி..

  ReplyDelete
 14. என் அவர்கள் நாட்டு மக்களிடமும், குழந்தைகளிடமும் இதைச் சோடனை செய்து பார்க்க வேண்டியது தானே.. அவனுக்கு பாத்ரூம் போனால் கழுவி விடக் கூட இந்தியன் தேவைப் படுவான் போல.. அதற்க்கு நாம் தயாராய் இருப்பது நிதர்சனமான உண்மை.. பொறுக்கமுடியவில்லை மாதவன்.. யாரிடமாவது பொரிந்து தள்ள வேண்டும் போல் உள்ளது...

  இந்த அரசியல் வாதிகள் ஏன் இப்படி மனசாட்சியைத் தொலைத்து விட்டு பணம் பணம் என்று அலைகிறார்கள்..
  "கூடு விட்டு ஆவிதான் போயின பின்னே யாரெ அனுபவிப்பார் பாவிகள் அந்தப் பணம்...?"

  ReplyDelete
 15. இதை போன்ற பல சம்பவங்கள் பல காலங்களாக நடந்துகொண்டிருக்கிறது .... மேலே குரியவை தவிர பல COMBINATION மருந்துகள் இந்தியாவில் மட்டுமே பரிசொதிக்கபடுகிறது ..... அது பரிசோதனை என்பதை சதாரண மக்கள் அறிவது கடினம்........தன சுய லபதுகாக மக்களை ஏமாற்றும் சாமியார்கள் ஒரு பக்கம் டாக்டர்கள் ஒரு பக்கம..... என்ன செய்வது?....... நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள மேலே கூறிய விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியமே

  ReplyDelete
 16. அதிர்ச்சியாக இருக்கிறது..?

  இங்கேயெல்லாம் அரசுகள் என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்றுதான் சந்தேகம் வருகிறது..!

  இந்த லட்சணத்தில் ஜனநாயக நாடாம்.. கர்மம்..!

  ReplyDelete
 17. அரசியல்வாதிகளை குற்றம் சொல்லாதீர்கள் அவர்களை தேர்ந்தெடுத்தவர்கள் மக்களே. இன்னும் சாதி ஓட்டும் மதவாரி ஓட்டும் பிரியாணி குவாட்டர் ஓட்டும் சைக்கிள் டிவி பெட்டி ஓட்டும் தலைவர்களை தீர்மானிக்கும். என்றோ ஒருநாள் சத்துணவில் வாத்தியார் முட்டை போட்டதுக்காக இன்னைக்கும் ரெட்டை இலைதான் முடிவென்று இருக்கிற ஜனங்கள என்னவென்று சொல்ல?

  மானாட மயிலாட ஜேடி நம்பர் வண் டீலா நோ டீலா எல்லாக் கண்றாவியும் மேற்கு நாட்டு டிவிப் பெட்டிகள காப்பி பண்ணித்தான் போய்கிட்டிருக்கு. பீட்சா போக்கர் கோலா என்னு பெருகி நாட்டில பாதிபேர சக்கரவியாதிக்காரங்களா மாத்திகிட்டிருக்காங்க.

  உண்மய சொன்னாக்கா இந்தியாவ அமெரிக்காவுக்கு வித்து ரொம்ப நாளாச்சு. புதுசா குழந்த பெத்துக்கிறவங்களாச்சும் கொஞ்சம் யோசியுங்க என்னும் இருபது வருசத்தில சாதராணமா வாழக்கூடிய நிலம இருக்குமான்னு. பத்து வருசமா இந்தியா அபரிமிதமா வளர்ந்து வருதென்னு சொல்றாங்க ஆனா பத்து வருசத்தில காய்கறியோட வில எவ்ளோ கூடியிருக்கு? எத்தனை ஆயிரம் விவசாயிகள் தற்கொலை பண்ணியிருக்காங்க? எவ்ளோ நிலம் விவசாயத்தில் இருந்து கைவிடப்பட்டிருக்கு? வளர்ந்து வருவதற்கு அடயாளமா நதிகளை ஒருங்கிணைக்க முடிஞ்சுதா? நிச்சயமாக கம்யூட்டருக்கால உணவை வரவைக்க முடியாது என்கிறத புரிஞ்சுகிட்டாலே இந்தியாவின் முன்னேற்றம் எப்படி பட்டதென்று புரியவரும்.

  இப்போ நடக்கிறது எரியிற வீட்டில புடுங்கிறது வரை லாபம் என்கிற அரசியல். இனி ஒண்ணும் பண்ண முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவ திருத்தி அனைத்து மக்களும் பலன்பெறுவது என்கிறது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.

  ReplyDelete
 18. அணு ஆராய்ச்சி காப்பீட்டுத்திட்டம் என்கிற "தில்லாலங்கடி" ...!!!
  மான்சாண்டோ மரபுப் பொறியியல் மரக்கறி வகைகள் .... !!!
  மெர்க் (MERCK ) இடுப்பெலும்பு புற்று நோய்க்கான மருந்து ...!!!
  இப்படி எதற்காக அமெரிக்காவுக்கு கூஜா தூக்குராங்களோ??? மக்களை அரசியல் வியாதிகள் மட்டுமில்லாமல் ... இந்த அந்நிய நாட்டு முதலீடு என்னும் வியாதிகளும் இணைந்து செய்ய இன்னும் எத்தனை கொடுமைகள் இருக்கின்றனவோ !!!

  அறிவுடைநம்பி

  ReplyDelete
 19. சமீபத்தில் என் உறவினப் பெண், பிரசவம் ஆகி ஒன்றரை மாதத்தில், அவளுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்று சொன்னார்களாம் மருத்துவமனையில். எனக்குத் தெரிந்து இப்படியொரு ஊசி போடுவதில்லையென்றதால், என்ன ஊசி என்று விசாரித்து வரும்படிச் சொன்னேன். கர்ப்பப்பை கேன்ஸர் தடுப்பூசி, மூன்று ஊசிகள் ஒரு மாத இடைவெளியில், ஒரு ஊசி ரூ. 2500 என்றும் சொன்னார்களாம்.

  கேன்ஸருக்கு ஏது தடுப்பூசி என்பதால், போடவேண்டாம் என்று சொன்னேன். அவர்கள் சரியென்றதற்கு அதன் கட்டணமும் ஒரு காரணம்!! இதுதான் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊசியா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 20. .
  ///
  /// அந்த அமைச்சர்களை குறிவைத்த மெர்க் நிறுவனம் அவர்களை தனது வலைக்குள் விழ வைத்தது. அவர்களை அந்தர் பல்டி அடிக்கும் அளவிற்கு கவனித்திருந்தது என அந்த பத்திரிக்கை கூறுகிறது. அப்படிப்பட்ட நிறுவனம் இந்தியாவிற்குள் பாஜக ஆளும் குஜராத்திலும், காங்கிரஸ் ஆளும் ஆந்திராவிலும் எவ்வித அரசின் சட்டத்திட்டங்களுக்கும் உட்படாமல் தனது சோதனையை நடத்தியிருக்கிறது. ஏழை இளம் பெண்களை பரிசோதனை எலிகளாக பயன்படுத்தியிருக்கிறது. அப்படியென்றால் சட்டங்களையும், அரசு விதிமுறைகளையும் மீறுவதற்கு யார் யாரை எல்லாம் ‘கவனித்திருக்கும்’? பாரபட்சமற்ற நீதி விசாரணையே உண்மையை வெளிக்கொண்டு வரும்.///

  எம் குலப்பெண்கள் என்ன கிள்ளுக்கீரையா ?

  எதை எதையோ பெரிதாக்கும் மீடியாக்கள் இதை மிகைப்படுத்த மறந்தது ஏன்?

  முன்னெடுத்துச்செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete