-->

முன்பக்கம் , , , , , � எங்கோ தவறு நடக்கவில்லை, உள்துறை அமைச்சர் அவர்களே!

எங்கோ தவறு நடக்கவில்லை, உள்துறை அமைச்சர் அவர்களே!

 

இன்றைக்கு இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தின் கொட்டை எழுத்துக்கள் 75 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதாகவே இருக்கின்றன. “சட்டீஸ்கரில் பயங்கரம்”, “மாவோயிஸ்டுகள் கொடூரத் தாக்குதல்”, “நக்சலைட்டுகள் காட்டுமிராண்டித்தனம்” என்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வார்த்தைகளுடன் கூடிய செய்தியாகவே அது சொல்லப்பட்டு இருக்கிறது. “நக்சலைட்டுகளை இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழித்துக் கட்டுவோம்” என்று மத்திய அரசு அறிவித்த 48 மணி நேரத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்திருக்கிறார் என்பதும் கட்டம் கட்டப்பட்ட இதனுடனான இணைப்புச் செய்தியாக இருக்கிறது.

மாவோயிஸ்டுகளின் இத்தகைய தாக்குதல்களை ஆதரிக்க முடியாது. அவர்களுடைய இலட்சியங்களில், கொள்கைகளில், பிரகடனங்களில் எவ்வளவு நியாயங்களை அவர்கள் எடுத்துரைத்தாலும், ஆயுதமேந்தும் அவர்களது வழிமுறைகளை ஒத்துக்கொள்ள முடியாது. அங்கங்கு நடைபெறும் இதுபோன்ற செயல்கள், பொதுஜனப் பரப்பிலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தவே உதவும். விரிவாக பேச வேண்டிய இந்த தேசத்தின் முக்கிய விவகாரம் இது.

மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அப்படி யோசிப்பதாகத் தெரியவில்லை. “எங்கோ தவறு நடந்திருக்கிறது” என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். இந்த வார்த்தைகள் மூலம் என்ன சொல்ல வருகிறார் அவர். எல்லாம் சரியாக நடந்துகொண்டு இருப்பது போலவும், எதோ அறியாமல் சிறு கோளாறு நடந்துவிட்டது போலவும் புரிந்து கொள்ளலாம். மிகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கையில், எதோ ஒரு இடத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறது, அதை ஆராய்ந்து சரிசெய்ய வேண்டும் என்கிற எச்சரிகையாகவும் கொள்ளலாம். எப்படியானாலும், இது அரசின் நடவடிக்கையில் தெரியாமல் நிகழ்ந்த பிழையாகவும், அதில் 75 காவல்துறையினர் பலி ஆனதாகவும் அர்த்தம் வருகிறது.

“எங்கோ தவறு நடக்கவில்லை, மத்திய அமைச்சர் அவர்களே, எங்கும் தவறுகள் நடக்கின்றன” என்பதை உரக்கக் கத்திச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் அறுபதாண்டுகளுக்கும் மேலாக நீங்கள் ஆட்சி செய்த லட்சணத்தின் எதிர்வினைகளே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் என்பதை பகிரங்கமாய் அறிவிக்க வேண்டி இருக்கிறது. பழங்குடி மக்களும், விவசாயக் கூலிகளும் இந்த தேசத்தில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதன்  விளைவுகளே இவை என்பதை உங்கள் புத்தியில் கொஞ்சமாவது ஏற்றிக்கொள்ளுங்கள் என்று பாடம் புகட்ட வேண்டி இருக்கிறது. முதலாளித்துவத்தின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் இந்த அடித்தட்டு மக்களை வாழ்வின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இந்த அறுபதாண்டுகளில், வானம் பார்த்து, இந்த மண்ணில் விழுந்து கதறிய எளிய மக்களின் அழுகுரல்களை என்றைக்காவது மதித்ததுண்டா, உங்கள் அரசு? ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்து செயல்படும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும், புறம்பாகவும் நீங்கள் இதுவரை நடத்திய நேர்மையற்ற, அருவருப்பான அரசியலின் பக்க விளைவுதானே இது!

இந்தியாவில் கோடிஸ்வரர்கள் அதிகமாகிய கடந்த பத்தாண்டுகளில்தான் இங்கு மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளும் அதிகமாயிருக்கின்றன. குறிப்பிட்ட பிரதேசங்களில் அவர்களுக்கு செல்வாக்கும், ஆதரவும் கூடியிருக்கின்றன என்னும் யதார்த்தத்தை, உண்மையை முதலில் இங்கு அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பின்னாலும் மக்கள் திரளுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஜனநாயகத்தைப் பேசுபவர்கள் இதனை அலட்சியம் செய்துவிட முடியாது. தேசத்திற்கு விரோதமாய்ச் செயல்படும் தீவீரவாதிகளுக்கும், இந்த நக்சலைட்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களை புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் இந்தப் பிரச்சினையை சரியாக அணுக உதவும்.

பணத்தைக் கொட்டினால், தேர்தலில் வெற்றி என்றான பிறகு இங்கு யாருக்கு, எப்படி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரமுடியும்? காலமெல்லாம் பள்ளத்தில் விழுந்து கிடப்பவர்களுக்கு இந்த தேசத்தின் மீது என்ன பற்று வர முடியும்? மக்களிடம் தொடர்ந்து பாகுபாடுகளை நிறுவியும், அதைப் போற்றியும் வருவதே இந்திய அரசியலின் தன்மை என்றால் அதன் மீது எப்படி கேள்வி எழாமல் இருக்க முடியும்?

75 காவல்துறையினரின் குடும்பங்களின் அழுகையும், துயரமும் கொடியது. தாங்க முடியாதது. அதை எடுத்து, ஆட்சியாளர்களே உங்கள் கோர முகத்தை போர்த்திக்கொள்ள வேண்டாம். மக்கள் முன்னால் எல்லாவற்றையும் பேசுங்கள். நீங்கள் செய்த தவறுகளையும், சரியானவற்றையும் பேசுங்கள். உங்கள் நியாயம், அநியாயம் இரண்டையுமே சொல்லுங்கள்.  ‘எங்கோ நடந்த’ தவறை சரி செய்வார்கள் மக்கள்.

Related Posts with Thumbnails

32 comments:

 1. தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிற மாநில மக்களின் / அழித்தொழிக்கப்படுகிற பழங்குடிகளின் ஆதாரத் தேவைகளை குறித்து பிரச்சினையின் ஆணிவேரிலிருந்து ஆயாமல், தற்காலிக தப்பித்தல் தீர்வுகளை அரசு உருவாக்கிக் கொண்டிருக்கும் வரை இம்மாதிரியான வன்முறைகளை தவிர்க்க முடியாது. அதே சமயத்தில் பேச்சு வார்த்தைகளுக்கு முன்வராமல் வன்முறையே தங்களின் மொழியாகக் கொண்டால் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பிற்கு ஆளாகும் அபாயம் இருப்பதை மாவோயிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 2. அவர்கள் கோரிக்கை தான் என்ன?

  ReplyDelete
 3. “எங்கோ தவறு நடக்கவில்லை, மத்திய அமைச்சர் அவர்களே, எங்கும் தவறுகள் நடக்கின்றன” என்பதை உரக்கக் கத்திச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் அறுபதாண்டுகளுக்கும் மேலாக நீங்கள் ஆட்சி செய்த லட்சணத்தின் எதிர்வினைகளே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் என்பதை பகிரங்கமாய் அறிவிக்க வேண்டி இருக்கிறது. பழங்குடி மக்களும், விவசாயக் கூலிகளும் இந்த தேசத்தில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதன் விளைவுகளே இவை என்பதை உங்கள் புத்தியில் கொஞ்சமாவது ஏற்றிக்கொள்ளுங்கள் என்று பாடம் புகட்ட வேண்டி இருக்கிறது///

  சரியாகச் சொன்னீர்கள் !!

  ReplyDelete
 4. அணைத்து அரசியல் வா(வி)யாதிகள் இதனை ஒரு முறை படித்தால் போதும்
  தலைகுனிவார்கள் சரியான எழுத்துகள் (கொட்டு )
  இந்த போலி மாத்திரை விவகாரம் எப்படி போய்கொண்டு இருக்கிறது

  ReplyDelete
 5. நாணயத்தின் மறுபக்கத்தையும் அரசு உணரவேண்டும்.மாதவராஜ் அவர்களே!இயல்பாக நாட்டில் உருவாகும் போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் ஏன் மாவோயிஸ்ட் என்ற அடைமொழிகளைப் போட்டுக்கொள்கிறா(றீ)ர்கள்.இதன் காரணம் கொண்டே இந்தியாவை சீர்குலைக்கும் சீனாவின் பங்கும்,அதற்கு மாவோயிஸ்டுகள் பங்களிக்கிறார்கள் என்ற பொது புத்தியும் இயல்பாகவே வந்து விடுகிறது.அதைவிட நக்சலைட் என்பதையும் அதற்கான சரியான புரிதலை மக்கள் முன் கொண்டு வருவதும் அவசியம்.ஆனால் நக்சலிஸமும் மார்க்ஸ்,லெலினிஸத்துக்குப் பின்னால் போய் ஒளிந்து கொள்கிறது.
  மண்ணுக்கு சொந்தமில்லாத எவையும் மரணித்துப் போகும்.

  ReplyDelete
 6. மாவோயிஸ்ட் பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கது. இருந்தாலும் காங்கிரஸ் அதைக் கண்டிப்பது வெட்கக்கேடானது இந்திரா படுகொலையை ஒட்டி கொல்லப்பட்ட பஞ்சாபியர் எண்ணிக்கை 3000க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள்.

  ReplyDelete
 7. எழுந்து நின்று கைதட்டுகிறேன்
  ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.... இவர்கள் வெட்கம் இல்லாதவர்கள், இவர்களிடம் என்ன சொன்னாலும் ஏறாது. இந்தியாவை சீரழித்ததில் இவர்களின் பங்கு மிக மிக அதிகம்
  இவர்களின் ஒரே தேவை, பணம், மற்றும் பணக்காரர்களின் நலன். அம்பானி நல்ல இருக்கார் என்றால், இவர்களுக்கு நாடு நலமாய் இருக்கு என்று நினைப்பார்கள்..

  ReplyDelete
 8. மிகச்சரியான கருத்து. இந்நாட்டை கட்டியமைத்த பல கோடி விவசாயிகளையும் ஏழை நடுத்தர வர்க்கத்தினரின் நலனை புறக்கணித்துவிட்டு அம்பானியின் பின்னாலும் டாடாவின் பின்னாலும் இந்த பேராசை அரசியல் சாத்தான்கள் ஓடுவதினால் ஏற்ப்படும் எதிர்மறை விளைவுகள்தான் நக்சலைட்டுகள். பணத்துக்கு ஓட்டு போடும் கலாச்சாரத்தை மக்கள் எப்போது மாற்றுகிறார்களோ அன்றுதான் இந்த நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கும்.

  ReplyDelete
 9. தினமும் ஏதாவது கருத்து சொல்லவில்லையெனில் தூக்கம் வராதா தோழர்

  ReplyDelete
 10. //“எங்கோ தவறு நடக்கவில்லை, மத்திய அமைச்சர் அவர்களே, எங்கும் தவறுகள் நடக்கின்றன” என்பதை உரக்கக் கத்திச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.//
  ஆமாம் ஆமாம்!

  ReplyDelete
 11. //தினமும் ஏதாவது கருத்து சொல்லவில்லையெனில் தூக்கம் வராதா தோழர்//

  இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை தோழர்?
  ஏன் மறைந்துகொண்டு இப்படி கருத்தைத் தெரிவிக்க வேண்டும் தோழர்?

  ReplyDelete
 12. அதை எடுத்து, ஆட்சியாளர்களே உங்கள் கோர முகத்தை போர்த்திக்கொள்ள வேண்டாம்.

  எல்லோரிடமும் சென்று சேர வேண்டிய பதிவு இது .தமிழகத்திலும் இப்போதிருக்கும் நிலை நீடித்தால் இங்கேயும் இது போன்று நடக்கலாம் என்று வை கோ சொல்லியிருப்பதாக படித்தேன் சில நாட்களுக்கு முன்னால் .அச்சமேற்படுத்துவதாக இருக்கிறது இது .குண்டு துளைக்காத இடங்களில் ஒளிந்து கொண்டு தவறு என்று சொல்லி விடுவதும் அஞ்சலி என்று சொல்லுவதும் இழப்பீடு அளிப்பதும் எல்லாமே வெட்கக்கேடானதே

  ReplyDelete
 13. ஒரிஜினல் கம்யூனிஸ்ட்April 7, 2010 at 4:52 PM

  ”தினமும் ஏதாவது கருத்து சொல்லவில்லையெனில் தூக்கம் வராதா தோழர்”

  ரிப்பீட்ட்ட்ட்ட்டேஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 14. இந்த சமயத்தில் மிகத்தேவையான பதிவு தோழரே!

  ReplyDelete
 15. “மாவோயிஸ்டுகள் கொடூரத் தாக்குதல்"

  இனிமேலும் தொடர வேண்டும்!!! ஆனால் இதற்கு காரணமாக இருக்கும் அரசியல்வாதிகளை ஒழித்துக்கட்டுங்கள்!!

  பாவம் பொதுமக்கள்!!!

  திரு. மாதவராஜ் அவர்களே, தயவு செய்து இந்த கருத்தை தணிக்கை செய்து விடாதீர்கள்!!!!

  ReplyDelete
 16. பணத்தைக் கொட்டினால், தேர்தலில் வெற்றி என்றான பிறகு இங்கு யாருக்கு, எப்படி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரமுடியும்?
  65 % விவசாயத்தை நம்பி மக்கள் வாழும் நாட்டில் 12 மதத்தில் விவசாயம் 4 மதம் தான் (கிணறு இல்லதவர்கள்)
  அணைத்து செலவு செய்த பிறகு கடைசி தண்ணி பற்றாக்குறையால் அனைத்தும் நஷ்டம் அடைகின்றார்
  கையில் இருந்ததையும் இழந்து ஒரு வருடம் வீணாக போகின்றது பெரியார் விவசாய்களிடம் கேளுங்கள்

  ReplyDelete
 17. தோழ‌ர் மாத‌வ்ராஜ,
  அம்பானி ச‌கோத‌ர‌ர் குடும்ப‌ ச‌ண்டை தீர்க்க‌, ம‌ன்மோக‌ன் முத‌ல்
  சுப்ரீம் கோர்ட் நீதிப‌தி வ‌ரை, நான், நீ என தீர்வுக்கு போனார்க‌ள்.

  ம‌லையின் செல்வ‌ புதைய‌லை வெளி நாட்டு, உள் நாட்டு
  கொள்ளைய‌ர்க‌ளுக்கு விற்க‌ ப‌.சி. கைக‌ள் ஏன் ப‌ர‌ப‌ர‌க்கிற‌து, துறுதுறுக்கிர‌து
  ம‌லை ம‌க்க‌ள் ஏன் அவ‌ர்க‌ள் தாய் நாட்டை, வீட்டை விட்டு
  கொள்ளைய‌ர்க‌ளின் சுய‌ லாப‌த்திற்க்காய், சில‌ரின் வ‌ள‌த்திற்க்காய்,வெளியேர‌
  வேண்டும்? நாட்டின் வ‌ள‌ம் ஏன் சூறையாட‌ப்ப‌ட‌ வேண்டும்? சில‌ரின் பண‌க்குவிப்புக்காய்
  ஏன் இந்த‌ வீர‌ர்க‌ளின் பிண‌குவிய‌ல்? இந்த‌ பாவிக‌ளின் பாக்க‌ட் நிர‌ம்ப‌, எத்த‌னை
  அப்பாவிக‌ளுக்கு இர‌ங்க‌ட்ப்பாவோ!!
  பாக்ஸ‌ட், எடுக்க‌ இட‌த்தை புடுங்காதே என்றால், அவ‌ன் மாவோஸ்ட்!!
  அயல் நாட்டின‌ரின் எம் ஒ யு ஐ ஏன் அர‌சு பூட‌க‌மாக‌ வைத்திருக்கிற‌து?
  ஊடக‌த்துக்கோ, ப‌த்திரிகைகோ வெளியிடாமோ.
  இந்த‌ ல‌ட்ச‌க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை வெளியேற்றி ம‌லைக‌ளை அவ‌ர்க‌ளுக்கு
  மாலையாக்க‌ பி ஜெ பியும் ஒத்தூதுகிறது.
  மாத‌வ‌ராஜ் போன்ற‌வ‌ர்க‌ள் சங்கு ஊதுகிறார்க‌ள்.
  சேவிட‌ர்க‌ட்கும் கூட‌ கேட்க‌ க‌ட‌வ‌து.
  நாட்டின் எதிரிக‌ள் இப்போது அரிய‌ணைக‌ளில், அவ‌ர‌து மைந்த‌ர்க‌ள் ...... ?
  ஆனால் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள் எல்லாம் ப‌ராரியாய் ...

  ReplyDelete
 18. //ஆயுதமேந்தும் அவர்களது வழிமுறைகளை ஒத்துக்கொள்ள முடியாது//

  ஆயுதமேந்தும் வழிமுறைகளைப் போதித்தது மார்க்ஸா? லெனினா? மாவோவா? அதை ஒத்துக்கொள்ள முடியாத வகைக்கு உருவாகியுள்ள இந்தியச் சூழல் என்ன? அல்லது உங்கள் தத்துவம் என்ன?

  ReplyDelete
 19. This act of violence needs to be condemned tooth and nail. This post could have exposed the wrong policy and path of violence of these people taking which would lead to total disaster to the oppressed people, but the blog was more towards attacking the ruling class. There was a comprehensive speech by Mr.Prakash Karat in cpim.org sometime back which elaborates in detail the wrong policy of these Maoists. That speech of Mr. Karat would have been more appropriate in this post. He clearly explains “அவர்களுடைய இலட்சியங்களில், கொள்கைகளில், பிரகடனங்களில் எவ்வளவு நியாயங்களை அவர்கள் எடுத்துரைத்தாலும்," they are wrong in each and every one of them.
  I think your post just condemns their act of violence alone. I think it is important for everyone to know in detail.

  Swami

  ReplyDelete
 20. ‘எங்கோ நடந்த’ தவறை சரி செய்வார்கள் மக்கள்.

  மக்களை இங்கு யார் மதித்தார்கள் நண்பரே? எங்கோ நடந்த தவறில் சிதம்பரம் வீட்டினரின் மக்கள் இருக்கிறார்களா என்ன? மேல்தட்டு மக்களின் நலனுக்காகவே பட்ஜெட் போட்ட சிதம்பரத்திற்கு, எப்படித்தெரியும் பழங்குடியின மற்றும் கூலி தொழிலாள மக்களின் வயிற்றெரிச்சல்.

  ReplyDelete
 21. சானியா மிர்சாவுக்கும் சோயப்மாலிக்குக்கும் கல்யாணம் ஆகுமா ஆகாதாங்கற டென்சனில் இருக்கேன் நீங்க வேற மாவோயிஸ்ட்டாம் தீவிரவாதமாம், அரச பயங்கரவாதமான் பழங்குடி அழிப்பாம் வேற வேலையில்லையா? சானியா மிர்சாவுக்கு கல்யாணம் ஆகுமா ஆகாதா அதை சொல்லுங்க முதலில்

  ReplyDelete
 22. மாவோயிஸ்டுகள் பழங்குடியினரின் நிலங்களை பாதுக்க போராடுவாதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது முழு உண்மையல்ல. அவர்களின் நோக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மிக விரிவு செய்து, செம்புரட்சியை கொண்டு வருவதே. போலிஸார் அவர்களை பொறுத்தவரை ‘வர்க எதிர்களின்’ கூலிப்படையினர்’ ; எனவே கொல்லப்பட வேண்டியவர்கள்.

  பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் இருப்பது வேறு பகுதிகளில். இவர்களின் தாக்குதல்கள் வேறு பகுதிகளில். பல நூறு மைல்கள் தொலைவில்..

  நம் நாட்டில் சொத்துரிமை அடிப்படை உரிமையில் சேர்க்கப்படவில்லை. அதன் விளைவாக, பல இடங்களிலும் நில ரிக்கார்டுகள் சரியாக இல்லை. முக்கியமாக பழங்குடியினரின் நிலங்கள் சரியாக வரையருக்கப்படவில்லை. தனி நபர்களின் நிலங்களை அரசு கையகபடுத்துவது இங்கு சர்வசாதாரணனமாக நடக்கும் கொடுமை. உண்மையான லிபரல் ஜனனாயகம் மற்றும் சந்தை பொருளாதாரம் இருக்கும் மேறக்த்தைய நாடுகளுலும் கனிம வளங்களை வெட்ட சுரங்கங்கள், ஆலைகள் உள்ளன. ஆனால் அந்த நிலங்களை அந்நிறுவனங்கள் நேரடியாக நில உரிமையாளர்களிடம் பேரம் பேசி வாங்கி கொள்ளும். இங்கு போல அரசு கட்டாயமாக பிடுங்கி, சொற்ப தொகையை நஸ்ட ஈடாக அளிக்கும் முறை இல்லை. (நிலத்தின் சரியான மதிப்பை அளவிட முடியாமல் கருப்பு விலை ஒன்று இருக்கிறது. அதுவும் பெரிய சிக்கல்.) இங்கு இருப்பது உண்மையான ஜனனாயகமும் இல்லை. உண்மையான சந்தை பொருளாதார முதலீட்டியமும் இல்லை.

  ////பழங்குடி மக்களும், விவசாயக் கூலிகளும் இந்த தேசத்தில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதன் விளைவுகளே இவை என்பதை உங்கள் புத்தியில் கொஞ்சமாவது ஏற்றிக்கொள்ளுங்கள் என்று பாடம் புகட்ட வேண்டி இருக்கிறது. முதலாளித்துவத்தின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் இந்த அடித்தட்டு மக்களை வாழ்வின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது///

  இப்படி பொதுப்படுத்த முடியாது. வறுமை அளவு முன்பை விட தாரளமயமாக்கலுக்கு பின் மிக விரைவாக குறைந்து வருகிறது.
  Economic and Political Weekly என்ற முக்கிய, மிகவும் மதிக்கப்படும் இடதுசாரி பொருளாதார பத்திர்க்கையில் சமீபத்தில் இந்திய வறுமை அளவை பற்றிய கட்டுரை இது :
  http://epw.in/epw/uploads/articles/14445.pdf

  இரண்டாம் உலகப்போரில் முற்றாக அழிந்த நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, தைவான் போன்ற நாடுகள், சில தசாமசங்களில் முன்னேறிய நாடுகளாக வளம் பெற்ற வரலாற்றை பார்க்க வேண்டும். அந்நாடுகள், வறுமையை மிக மிக குறைத்து, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத என்ன சித்தாந்தத்தை அமலாக்கின என்று விவாதிக்கலாம்.

  //// ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்து செயல்படும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும், புறம்பாகவும் நீங்கள் இதுவரை நடத்திய நேர்மையற்ற, அருவருப்பான அரசியலின் பக்க விளைவுதானே இது!///

  ஜனனாயகப் பாதையை தேர்ந்தெடுத்த இடதுசாரி கட்சிகளும் இந்த தாரளமயமாக்கலை, அன்னிய முதலீடுகளை எதிர்க்கவில்லை. புத்ததேவ் பட்டாச்சாரியாவின் செயல் திட்டங்களை பார்த்தாலே புரியும். At present, we have no alternative to capitalism என்று கூறியுள்ளார். ஆனால் ஜனனாயக பாதையில் ஒழுங்காக அவர்களும், காங்கிரசும் செல்லவில்லை. ஃபாசிச பாதை பல சமயங்களில் தெரிகிறது. நந்திகிராமில் ஃபாசிச பாதைதான். ஜனனாயகப் பாதை அல்ல.

  //// இந்தியாவில் கோடிஸ்வரர்கள் அதிகமாகிய கடந்த பத்தாண்டுகளில்தான் இங்கு மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளும் அதிகமாயிருக்கின்றன.///

  இல்லை. இதற்க்கு அதற்க்கு நேரடி தொடர்பில்லை. The number of rich may be increasing (actually it is a healthy sign), but the poor are not becoming poorer. On the contary, the percentage of poor is decreasing dramatically.

  ///// பணத்தைக் கொட்டினால், தேர்தலில் வெற்றி என்றான பிறகு இங்கு யாருக்கு, எப்படி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரமுடியும்?///

  இந்த சீரழவு திடீரேன உருவாகவில்லை. தவறான பொருளாதார கொள்கைகளினால், படிப்படியாக உருவானது. பார்க்கவும் :

  http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html
  நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது
  ------------

  மற்றபடி நல்ல கட்டுரை. இது போல் அதிகம் எழுதப்பட வேண்டும்.

  ReplyDelete
 23. "" ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்து செயல்படும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும், புறம்பாகவும் நீங்கள் இதுவரை நடத்திய நேர்மையற்ற, அருவருப்பான அரசியலின் பக்க விளைவுதானே இது!""

  superb comrate....

  ReplyDelete
 24. மாவோயிஸ்டுகளின் செயல்களை நியாயப்படுத்தோவோர், ஒரு முன்னாள் மார்க்சிய போராளியின் பேட்டியை படிப்பது அவசியம் :

  A new beginning : The emerging democratic paradigm in Latin America

  http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm

  How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..

  ..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I'll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”

  ReplyDelete
 25. சி பி எம் மின் கருத்துக்களையே நீங்கள் எதிரொலித்துக் கொண்டிருங்கள். நிதர்சனம் வேறாக இருந்தாலும். முடிந்தால் மரிசிபி, நந்திகிராம் மற்றும் சிங்கூர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்
  http://www.openthemagazine.com/article/voices/left-out-by-the-left
  http://www.openthemagazine.com/article/nation/the-one-that-got-away
  http://www.youtube.com/watch?v=e-6nPWknqaE
  http://sanhati.com/articles/1305/
  http://www.outlookindia.com/article.aspx?224432
  http://indiainteracts.in/members/2008/01/21/Just-Visit-nandigram-United-to-have-the-Documents-on-Marichjhapi-Massacre/
  http://insightyv.com/?p=879

  ReplyDelete
 26. "மண்ணுக்கு சொந்தமில்லாத எவையும் மரணித்துப் போகும்"

  இந்த மண்ணுக்கு எது சொந்தம், Capitalism எந்த மண்ணிற்கு சொந்தம் இந்த மண்ணில் செழித்து வளர்கிறதே?

  எந்த ism எங்கு தேவை என்பதை காலமும் அதற்கு தகுந்த சூழலும் தான் முடிவு செய்யும்.

  ReplyDelete
 27. First P.Chidambaram must condemn the dual role of Mamta Bannerge and severe ties with her.He could used the ceasefire announcement of Maoists for 72 days. P.Chidambaram totally failed to even capture the opportunity of 72 HOURS CEASEFIRE and mutual discussion..Mamta Bannerji's role was clearly exposed by the W.Bengal CPI-M. All left parties unity is important at this globalization policies of Congress party for which all left forces shall come together under "Common Minimum programme".The CPI-M before taken initiative for the capitalist parties and succeeded in creating a "Common Minimum programme" .Now it can do the same for the left parties.

  ReplyDelete
 28. No time for blame-game: Buddha

  'தோழர்' மாதவராஜ் மேற்கு வங்க சிபிஎம் ன் அறிவுரைகளை பின்பற்றுவதில்லையோ?

  //முதலாளித்துவத்தின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் இந்த அடித்தட்டு மக்களை வாழ்வின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.//

  @@@
  http://thatstamil.oneindia.in/news/2010/04/04/tata-renews-singur-land-agreement.html

  ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 4, 2010, 11:46[IST]
  சிங்கூர் நிலங்களுக்கான ஒப்பந்தத்தை நீட்டித்தது டாடா

  ஆனால் பயன்பாட்டில் இல்லாத சிங்கூர் நிலத்தை டாடாவிடமிருந்து எடுத்துக் கொள்ளப்போவதாக மேற்கு வங்க தலைமைச் செயலர் அறிவித்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ரூ 1 கோடிக்கான காசோலையை அரசுக்கு அனுப்பியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிர்வாகம். இதனால் மேலும் ஒரு ஆண்டுக்கு டாடா குத்தகை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  @@


  சிபிஎம் அரசு சிங்கூரிலும், நந்திகிராமிலும் செய்து வருவது முதலாளித்துவ கொழுப்பில் தயாரிக்கப்பட்டது அல்லாமல் வேறெந்த கொழுப்பில் தயாரிக்கப்பட்டது 'தோழர்' மாதவராஜ்?

  ReplyDelete
 29. சுரேஷ் கண்ணன்!
  பகிர்வுக்கு நன்றி.


  வால்பையன்!
  நிறைய இருக்கிறது. பழங்குடி மக்களின் வாழ்வாதரங்களைப் பறிப்பதற்க்கு எதிராகவும், அவர்களது நிலங்களை பெருமுதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்கு எதிராக போராடுவதாகச் சொல்வதும் அதில் ஒன்று.

  ஹரிணி அம்மா!
  மிக்க நன்றி.  அசீம்!
  நன்றி. போலி மாத்திரை விவாகரத்தை மறக்கடிக்க இன்னொரு விவகாரம் முன்னுக்கு கொண்டு வரப்படும். அதுதானே இவர்களது அரசியல்.


  ராஜ நடராஜன்!
  மண்ணே இங்கு சொந்தமில்லையே நண்பரே..!


  கோவி.கண்ணன்!
  ஆமாம். அப்படி வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், இவர்களும் வன்முறையாளர்களே!


  ஆனந்த்!
  மிக்க நன்றி.  தமிழ்நாடன்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 30. உமா!
  நன்றி.


  பூங்குழலி!
  உங்கள் கோபம் வார்த்தைகளில் தெரிகிறது. நன்றி.


  ரவிக்குமார்!
  நன்றி.


  பொன்ராஜ்!
  தணிக்கை செய்யவில்லையே...  பூவலிங்கம்!
  இந்த தேசத்தில், விவசாயிகளுக்கு இழைத்த கொடுமைகளுக்காக ஆட்சியாளர்களை எவ்வளவு சபித்தாலும் தகும்!


  வாசன்!
  சங்கே முழங்கு!  ராஜசுந்தரராஜன்!
  வருகைக்கு நன்றி. ’இழப்பதற்கு எதுவுமில்லை. பெறுவதற்கு பொன்னுலகம் இருக்கிரது’ இந்த மார்க்ஸின் வார்த்தைகளில் எல்லாம் இருக்கிறது. அடக்குமுறைகளை பொறுக்கவே முடியாத மக்கள் ஆயுதம்தான் தீர்வு என்று நினைத்தால், அதுதான் விதி. அதுதான் தத்துவம். அப்படியான சூழல் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

  “ஒரு குறைந்த பட்ச ஜனநாயகம், அது குறைபாடுகளோடு இருந்தாலும் அங்கு ஆயுதமேந்திய புரட்சி சாத்தியமில்லை” என்கிறார் சேகுவேரா.

  யார் என்ன சொன்னாலும், அனுபவங்களே காலத்தையும், சூழலையும் அறிய வைக்கின்றன.

  ReplyDelete
 31. Bairave!
  சரியாகச் சொன்னீர்கள்.


  குழலி!
  இப்போது அவர்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதே. டென்ஷன் எப்படி இருக்கிறது.


  அதியமான்!

  //நம் நாட்டில் சொத்துரிமை அடிப்படை உரிமையில் சேர்க்கப்படவில்லை. அதன் விளைவாக, பல இடங்களிலும் நில ரிக்கார்டுகள் சரியாக இல்லை.//


  //வறுமை அளவு முன்பை விட தாரளமயமாக்கலுக்கு பின் மிக விரைவாக குறைந்து வருகிறது.//

  //The number of rich may be increasing (actually it is a healthy sign), but the poor are not becoming poorer. On the contary, the percentage of poor is decreasing dramatically.//


  //இரண்டாம் உலகப்போரில் முற்றாக அழிந்த நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, தைவான் போன்ற நாடுகள், சில தசாமசங்களில் முன்னேறிய நாடுகளாக வளம் பெற்ற வரலாற்றை பார்க்க வேண்டும். //

  மன்னிக்கணும். உங்களது இந்த வாதங்களை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மிக நீண்ட பின்னூட்டமாக இட வேண்டி இருப்பதால், தனிப்பதிவாக விரைவில் பேசுவோம்.


  இலக்கியா!
  நன்றி.


  சீனிமோகன்!
  சரி, நண்பரே தெரிந்து கொள்கிறேன். ஆனால் நான் இங்கு பதிவிட்டது என் தனிப்பட்ட கருத்துத்தான். சி.பி.எம்மின் கருத்து அல்ல.


  ஹரிஹரன்!
  சரியாகச் சொன்னீர்கள்.


  விமலவித்யா!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. தாங்கள் தமிழில் பின்னூடமிட்டால், சிறப்பாயிருக்கும் எனப்து எனது அபிப்பிராயம்.  வினோத்!
  திரும்பவும் சொல்கிறேன். இந்த பதிவில் நான் எழுதியவை என் தனிப்பட்ட கருத்தே.

  நான் 60 வருடமாக காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து முதலாளித்துவக் கொழுப்பு என்கிறேன். அதைப்பற்றி கொஞ்சமும் வாய் திறக்க மாட்டேன்கிறீர்கள். ஆனால் மேற்கு வங்கத்தை மட்டும் காண்பித்து “நீ மட்டும் என்னவாம்’ என்று சொல்கிறீர்கள். இது என்ன அரசியல்?

  இதே மேற்குவங்கம்தான் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கிறது, தொழில்துறையில் முன்னேற்றமில்லை, அங்கு கம்யூனிஸ்டு அரசு இருப்பதால் முதலாளிகள் யாரும் தொழில்துவங்க முன்வர மாட்டேன்கிறார்கள் என்று தொடர்ந்து அனைத்து ஊடகங்களும், கட்சிகளும் பிரச்சாரம் செய்துவந்தன. அதன் உள்நோக்கம், இடதுசாரி அரசை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதே. இப்போது, மாநிலத்தின் நலன் கருதி, தங்கள் நிபந்தனைகளுக்குட்பட்டு, முன்வருகிற முதலாளிகள் மூலம் தொழில்துவங்க (இந்தியாவில் அவர்கள் நினைத்தால்தானே தொழில் துவங்க முடிகிறது!) முயற்சித்தால், அதிலும் பிரச்சினை செய்து, இடதுசாரி அரசை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சிகள் அரங்கேறுகின்றன.

  எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதை விட்டு, மேற்குவங்க மாநிலத்தில் தொழில்துறை விரிவடைய ஆலோசனை சொல்வதற்கும், வழிமுறைகளை ஆராய்வதற்கும் யாரும் முன்வருவதில்லை.

  ReplyDelete
 32. //நான் 60 வருடமாக காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து முதலாளித்துவக் கொழுப்பு என்கிறேன். அதைப்பற்றி கொஞ்சமும் வாய் திறக்க மாட்டேன்கிறீர்கள். ஆனால் மேற்கு வங்கத்தை மட்டும் காண்பித்து “நீ மட்டும் என்னவாம்’ என்று சொல்கிறீர்கள். இது என்ன அரசியல்?//

  காங்கிரசு தன்னை கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொண்டு டாடா மற்றும் டௌ கெமிக்கல்ஸின் காலை நக்குவதில்லை. நீங்களும் உங்களது பெயரை மாற்றிக் கொண்டால் எமக்குப் பிரச்சினையில்லையே?

  காங்கிரசு செய்கின்ற அதே கேவலத்தை செய்துவிட்டு அவர்களை முதலாளித்துவ கொழுப்பு என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை வலியுறுத்தவே எனது அந்த பின்னூட்டம்.

  அவ்வாறில்லையெனில் நந்திகிராம், சிங்கூரில் நிகழ்ந்தவை என்ன வகை கொழுப்பு என்பதை விளக்க நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

  ReplyDelete