நாடு சுதந்திரமடைந்து 63 ஆண்டுகள் ஆகப்போகின்றது. கல்வி உரிமைச்சட்டம் இப்போதுதான் அமலுக்கு வருவதாய் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி வழங்கப்பட்டாக வேண்டும். முற்போக்கு இயக்கங்களும், இடதுசாரிக் கட்சிகளும் வலியுறுத்தியும் போராடியும் வந்ததன் விளைவுதான் இந்த சட்டம் பற்றிய அறிவிப்பு.
“கல்வி பெறுவதை அடிப்படை உரிமை என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதைச் செய்லபடுத்த அரசு உறுதியுடன் பணியாற்றும்” என்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பெருமை பொங்கச் சொல்லி விட்டார்.
இந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
- நாட்டில் பள்ளிக்குச்செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்ட, இடையிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகள் உட்பட சுமார் 92 லட்சம் குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வியும், 6 வயது முதல் 14 வயது வரையிலும் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசியம் ஆரம்பக்கல்வியும் அளிக்க வேண்டுமென கல்வி உரிமைச்சட்டம் வரையறுத்துள்ளது.
- இச்சட்டத்தின்படி எந்தவொரு குழந்தைக்கும் எந்த பள்ளியும் அனுமதி மறுக்கக்கூடாது; பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் உடனடியாக பணியில் அமர்த்தப்படவேண்டும்; பள்ளிகள் போதிய அளவு ஆசிரியர்கள், மைதானம், அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்; குழந்தைகளின் இருப்பிடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அவசியம் ஒரு ஆரம்பப்பள்ளி இருக்க வேண்டும் என்பதை மாநில அரசும் உள்ளூர் நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும்.
- இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மாநிலத்தில் ஒவ்வொரு குழந்தையும் இலவச ஆரம்பக்கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசும், மாநில அரசுகளும் 55:45 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கிட வேண்டும்.
- இச்சட்டத்தின்படி தனியார் கல்வி நிறுவனங்களும் சமூகத்தில் ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
- ஒவ்வொரு பகுதியிலும் பள்ளி நிர்வாகக்குழு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் பள்ளி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இச்சட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வைக்கும் திட்டம் இதுதான்:
- தற்போதைய நிலவரத்தின்படி இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 22 கோடி குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 4.6 சதவீதம் பேர் (சுமார் 92 லட்சம்) மட்டுமே பள்ளிக்கூடத்திற்கு வெளியில் இருக்கிறார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறுகிறது.
- இச்சட்டத்தை அமல்படுத்த ரூ.25 ஆயிரம் கோடியை மத்திய நிதிக்கமிஷன் ஒதுக்கி உள்ளது. அடுத்த 5 ஆண்டு காலத்தில் இச்சட்டத்தை அமல்படுத்த ரூ.1.71 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்துள்ளது.
- இச்சட்டம் அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று கூறி தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. வழக்கு நடந்தாலும் சட்டம் அமலாகும் என்று அரசு கூறியுள்ளது.
சட்டத்தை நிறைவேற்ற அரசு உண்மையிலேயே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
- இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமானால் நாடு முழுவதும் அடுத்த 6 மாத காலத்திற்குள் 12 லட்சம் ஆசிரியர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தகுந்த பயிற்சியை பெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் வரையறை செய்திருப்பதால், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிற்கு ஆசிரியர் பயிற்சி திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
- அடுத்த மூன்றாண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதிய வகுப்பறைகள், நூலக ஏற்பாடு, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்தாக வேண்டும்.
சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதி காட்டுமா? சட்டத்தை அறிவித்த தேதி ஏபரல் 1ம் தேதி, முட்டாள்கள் தினம்.


even if 20% of the aimed number of children got education, that itself is a big achievement. Let us help to implement this great idea. Let us not waste our time to research on the loopholes, constraints on this great idea.
ReplyDeleteLet us help to implement this great idea. Let us not do research on finding out what are the constraints.
ReplyDeleteEven if 10% of the aimed children got educated that itself is a big achievement.
//Let us help to implement this great idea. //
ReplyDeleteமனதிற்கினிய தகவல்
நன்றி
ரொம்ப நல்லா முழுமையா சொல்லியிருக்கீங்க..ஆசிரியர்கள் இல்லாமத்தான் நிறைய கிராமப்புற பள்ளிக்கூடங்கள் இருக்கு!
ReplyDeleteதவறுதலாக 53 என்று வந்து விட்டது போல. நாடு சுதந்திரமடைந்து 63 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று மாற்றி விடுங்கள்.
ReplyDeleteஅண்ணா நீங்களும் முட்டாள் தினம் என்று ஒன்று இருப்பதாக சொல்கிறேர்கள்
ReplyDeleteபோலும் !!!!!! உதாரணம் சொல்வது கூட நல்லது இல்லை
அதற்கு பெரிய கசப்பான வரலாறு இருக்கிறது
அஜீம் --
ராம்ஜி யாஹூ!
ReplyDeleteபாஸிட்டிவாக யோசிப்பதற்கு நன்றி. வரலாறு, எச்சரிக்கையுடனும், கண்காணிப்புடனும் இருங்கள் என்ரு சொல்கிறதே.
Sabarinathan Arthanari:
நன்றி.
சந்தனமுல்லை!
ஆமாம். பல கிராமங்களில் பள்ளிட்க்கூடங்கள் இல்லை. பள்ளிட்க்கூடங்கள் இருந்தால் ஆசிரியர்கள் இல்லை.
மதன்!
மிக்க நன்றி. மாற்றிவிடுகிறேன்.
அஸீம்!
கல்வி என்பது முட்டாள்தனத்தை ஒழிப்பதற்குத்தானே. அதை ஏபரல் 1லிலா அறிவிக்க வேண்டும்?