-->

முன்பக்கம் , � பதிவர்களுக்கு அமைப்பு தேவையா?

பதிவர்களுக்கு அமைப்பு தேவையா?

சென்னையில் பிரத்யேகமாக நடத்தப்பட்ட கூட்டம் முடிந்த பிறகும்,  பதிவர்களுக்கான சங்கம் அல்லது குழுமம் குறித்த விவாதம் இப்போது வலைப்பக்கங்களில் நடந்துகொண்டிருக்கிறது.  குழப்பங்களும், சந்தேகங்களும், அதிரடியான கருத்துக்களும் மிஞ்சி நிற்கிற சூழலெனத் தெரிகிறது. சங்கம் அல்லது குழுமம் ஆரம்பிக்கும் முன்னரே இத்தனை மோதல்களா, முரண்பாடுகளா என பலர், “எதற்கு இதெல்லாம்,?” ,  “எப்போதும் போல இருக்கலாமே” என்று நடப்பவைகளிலிருந்து ஒதுங்கிவிட நினைக்கலாம். சென்னையில்தானே நடக்கிறது, நமக்கென்ன என்று புறக்கணிக்கலாம். ‘ஆடிவரட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என வேடிக்கை பார்க்கலாம். பலவித மனோநிலைகள் தெரிகின்றன.

எனக்கென்னவோ இவையெல்லாம் ஒரு முக்கிய நிகழ்வுக்கான விதையென்றேத் தோன்றுகிறது. ஆரம்பநிலையின் தடுமாற்றங்களே இவை. தொடர்ந்து இது குறித்து முயற்சிகள் தேவைப்படுகின்றன. சங்கமோ, குழுமமோ.... பதிவர்களுக்கான ஒரு அமைப்பு தேவை என்பது எனது கருத்து. நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளவும், நம்மை ஒன்றாக நிறுத்திப் பார்க்கவும், நமது சக்தியினை தெரிவிக்கவும், நமக்கான அடையாளங்களையும், உரிமைகளையும் நிலைநாட்டவும், நமக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் நிச்சயம் தேவையாகத்தான் இருக்க முடியும். பதிவுலகம் மிகுந்த கவனம் பெறத் துவங்கி இருக்கிற இந்த காலத்தின் தேவை இந்த அமைப்பு. அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியாவில், இந்திய மொழிகளில் இணையப் பதிவுகள் குறித்து வந்திருக்கும் கட்டுரை, இன்னும் சில காலத்தில் பதிவுலகம் மிக முக்கியமான ஊடகமாக பரிணமிக்கும் என்கிறது.

சிலகாலத்திற்கு முன்பு ஒரு பதிவருக்கு உடல்நலம் சரியில்லை என்றதும் பதிவுலகமே அவர் பின்னால் நின்று உதவிகள் செய்தது. இதுபோன்று எவ்வளவோ காரியங்களை இந்த அமைப்பே முன்னின்று செய்யலாம். எத்தனையோ புதிய பதிவர்கள் எழுத வருகிறார்கள். அவர்களை பலருக்கு தெரிவதே இல்லை. அப்படி எழுத வருகிற புதியவர்களை அறிமுகம் செய்யலாம். யோசித்துப் பார்க்க, பார்க்க எவ்வளவோ காரியங்களை, இந்த அமைப்பினால் ஆற்றமுடியும் என்றேத் தோன்றுகிறது.

அமைப்பு என்பது அந்தந்த துறை சார்ந்த தனித்தன்மைகளோடு இருந்தாக வேண்டும். இந்தப் பதிவுலகம் மற்ற யாவற்றையும் விட வித்தியாசமானதாகவும்,  கருத்துச் சுதந்திரத்தை பெருமளவில் சுவாசிக்கும் வெளியாகவும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பார்வைகளும், தனி அடையாளங்களும் இருக்கின்றன. பெண்கள் அதிக அளவில் தங்கள் சிந்தனைகளோடு வெளிவந்திருக்கும் இடமாகவும் இருக்கிறது. தொடர்ந்து புதியவர்கள் ஆர்வத்துடன் எழுத வந்துகொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற சிறப்பம்சங்களே பதிவுலகத்தின் அடையாளங்களாக இருக்கின்றன. இவற்றைப் பாதுகாப்பதும், மேலும் செழுமைப் படுத்துவதும்தான் அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருக்க முடியும். இருக்க வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்து விவாதிக்க ஆரம்பித்து முன்செல்லலாம்.

ஆனால் சென்னைக்கு மட்டும் சங்கம் அல்லது குழுமம் என்று யோசிப்பதை, இன்னும் விரித்து, தமிழ் வலைப்பதிவாளர்களுக்கான அமைப்பாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன். அடிக்கடி கூடி பேச வேண்டுமென்றெல்லாம் இல்லை. அதற்குத்தான் பதிவர் சந்திப்புகள் இருக்கின்றனவே. வேண்டுமானால் மண்டல அமைப்புகளை உருவாகிக் கொள்ளலாம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த அமைப்புக்கு பொதுமாநாடுகள் நடத்திக் கொள்ளலாம்.

அமைப்புக்கான பெயர், விதிகள் போன்றவற்றை உருவாக்க சென்னை, ஈரோடு, கோவை, மதுரை போன்ற இடங்களில் உள்ள பதிவர்கள் (அதிகபட்சம் பத்து பனிரெண்டு பேர். சரிசமமாக பெண்கள் அதில் இடம்பெற வேண்டும்) குழுவொன்றை அமைக்கலாம். அமைப்புக்கான கருத்துக்களை பதிவர்கள் அனைவரும் அவர்களிடம் தெரிவிக்கிற ஏற்பாட்டைச் செய்யலாம். அதன் அடிப்படையில் அந்த குழு உட்கார்ந்து விவாதித்து,. முறைப்படுத்தலாம். ஒரு அமைப்பு மாநாடு நடத்தி, அதில் முறைப்படுத்திய அமைப்புக்கான விதிகளைத் தீர்மானிக்கலாம்.

இவையெல்லாம் யோசனைகள்தான். ஆனால், அமைப்பு ஒன்று கண்டிப்பாக நம் அனைவருக்கும் வேண்டும் என்கிற கருத்துக்கு ஆதரவு தெரிவித்தபடி...

Related Posts with Thumbnails

23 comments:

 1. நிச்சயம் அவசியமான ஒன்று.

  ReplyDelete
 2. தெளிவான பதிவு.

  ReplyDelete
 3. அருமையான பதிவு. நண்பரே..

  சென்னை குழுமம் என்று இல்லாமல். இப்போது அதை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்றே மாற்றியமைக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
  http://tamilbloggersforum.blogspot.com

  ReplyDelete
 4. தோழர் வழிகாட்டுங்கள்..

  சென்னை குழுமம் என்று இல்லாமல். இப்போது அதை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்றே மாற்றியமைக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
  http://tamilbloggersforum.blogspot.com

  ReplyDelete
 5. நானும் ஆதரவு தெரிவித்தபடி...

  ReplyDelete
 6. சேலம் சிவகிரிMarch 30, 2010 at 11:27 AM

  பதிவர் அமைப்பு என்றூ சொல்வதை விட பார்ப்பணீயப் பதிவர்கள் பாதுகாப்பு அமைப்பு என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அங்கே அவ்வளவு அரசியல் இருக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல். சிலர் தாங்கல் தலைவர் ஆக வேண்டும் என்பதற்காகவே இதை மூச்சுபிடித்து செய்கிறார்கள். இங்கேயும் பாவம் அப்பாவி பதிவர் தொண்டர்கள்.

  ReplyDelete
 7. தங்களுடைய கருத்துக்களும் ஏற்புடையவை.

  ReplyDelete
 8. I hope we only have healthy initiatives through those gatherings and not the politics.

  ReplyDelete
 9. Let's have it only for health discussions and not for anymore politics.

  ReplyDelete
 10. விழியன்!
  நன்றி.

  ஷங்கர்!
  நன்றி.


  மோனி!
  நன்றி.


  க.பாலாசி!
  நன்றி.


  கீர்த்தி ஜெயராஜ்!
  தாங்கள் சொல்வதை அனைவரும் உன்னிப்பாக கேட்க வேண்டும்.


  D.R.Ashok!
  :-)))

  ReplyDelete
 11. கேபிள் சங்கர்/மணிஜி!

  நன்றி.
  அந்த வலைப்பக்கம் பார்த்தேன். அவசரம் மட்டுமே தெரிகிறது. இன்னும் நிதானமாகச் செயல்படலாம். முதலில் ஒரு ஒருங்கிணைப்புக்குழு அவசியம்.

  ReplyDelete
 12. சேலம் சிவகிரி!

  சட்டென்று ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடாமல், சகலருக்குமான அமைப்பாக எப்படி உருவாக்குவது என்றும் யோசிக்கலாமே நண்பரே!

  ReplyDelete
 13. நிதானமாக செய்ய வேண்டிய விசயம் அவசியமான ஒன்று. நல்ல பதிவு மாதவராஜ் சார்.

  ReplyDelete
 14. கருத்துக்களும், அறிவுரைகளுக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் ஸார்..!

  ReplyDelete
 15. ம‌திமிகு மாத‌வ்,
  ந‌ம‌க்கு நாமே திட்ட‌த்திற்கு, (ந‌ம்மை நாமே திட்டுவ‌த‌ற்க்கு),
  அர‌சிய‌ல்/அதிக‌ர‌ கும்ப‌ல், குள்ள‌ ந‌ரிக‌ளாய், எங்கே வேட்டை ந‌ட‌க்கிறது (கும்ப‌ல்/ஓட்டு)
  ஓசி இர‌த்த‌ம் குடிக்க‌லாம் என் அலையும் நிலையில், சிங்க‌த்திற்கு எதிராய்/ச‌ம‌மாய்
  நான்கு மாடுக‌ள் கூடி இருத்த‌ல் அவ‌சியத் தேவை என்றே தோன்றுகிற‌து.
  உங்க‌ளைப் போன்ற‌ அமைப்புக்க‌ள் ப‌ற்றிய‌ அனுப‌வமும், அறிவும் உடைய‌வ‌ர்க‌ளின் குர‌ல்க‌ள்
  ந‌ன்கு கேட்க‌ மேடைக்கு வாருங்க‌ள்.

  ReplyDelete
 16. தெளிவான கருத்துக்கள்!

  ReplyDelete
 17. நன்றி நல்ல கருத்துகளுக்காக.

  ReplyDelete
 18. அடடா,இது,இந்தவலைத்தளம், இன்னொமொரு தளத்திற்கு நகர்கிறது.

  ReplyDelete
 19. //அமைப்பு ஒன்று கண்டிப்பாக நம் அனைவருக்கும் வேண்டும் என்கிற கருத்துக்கு ஆதரவு தெரிவித்தபடி..

  ஏகோபித்த ஆதரவு தெரிவித்தபடி..

  wel said maadhu!

  ReplyDelete
 20. அட இதில் கூட இவ்வளவு அரசியல் தேவையா என தோன்ற வைத்து விட்டார்கள்...

  ReplyDelete
 21. /ஆனால் சென்னைக்கு மட்டும் சங்கம் அல்லது குழுமம் என்று யோசிப்பதை, இன்னும் விரித்து, தமிழ் வலைப்பதிவாளர்களுக்கான அமைப்பாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்//

  சரியான கருத்து. எங்களையும் சேர்த்தால் நன்றாய் இருக்கும் என்று நானும் நினைத்தேன்!

  ReplyDelete
 22. V.Radhakrishnan!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  உண்மைத்தமிழன்!
  நன்றி.

  வாசன்!
  மேடைக்கு வராமலேயே குரல் கொடுக்கலாம்.

  அன்புடன் அருணா!
  நன்றி.


  பா.ரா!
  நன்றி.


  என் நடைபாதையில்!
  ஆமாங்க.


  வெற்றிமகள்!
  பார்ப்போம்.

  ReplyDelete