-->

முன்பக்கம் , , , , � பொன்னாகரம்!

பொன்னாகரம்!

"என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!” என்று முடியும் புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையின் கடைசி வரி சமூகத்தின் மீது சாட்டையாய் பாய்ந்திருக்கும்.

இந்தக் கார்ட்டூனைப் பார்க்கும்போது அதே வரிகள் கொஞ்சம் மாறி நமக்குள் ஒலிக்கின்றன இப்போது.

“என்னமோ ஜனநாயகம், ஜனநாயகம் என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னாகரம்!”

 

ponnagaram copy 

(கார்ட்டூன் உபயம் : தீக்கதிர்)

(வாடாத பக்கங்கள் - 7

அன்புடன் அருணா, ஆடு மாடு, க.பாலாசி, காமராஜ், சந்தனமுல்லை, சரவணன், சித்ரன், சேரல், தோழி, பிரசன்னா இராசன், மாதவராஜ், முனைவர்.குணசீலன், முரளிகுமார் பத்மநாபன், ராகவன், ராமசாமி, ராமலஷ்மி, ரிஷபன், லேகா, விநாயக முருகன், வேல் கண்ணன், பாலமுருகன் ஆகியோரது பதிவுகள் நல்ல பதிவுகளாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன. வாருங்கள்.)

Related Posts with Thumbnails

17 comments:

 1. பண நாயகம் என்பதோ அல்லது அழகிரி வாக்குகளை விலை பேசுகிறார் , என்பது எல்லாம் கண்மூடி தனமான குற்றச்சாட்டுக்கள்.

  அழகிரி ஒரு வாக்கிற்கு ஆறாயிரம் கொடுத்தால், எட்டாயிரம் கொடுக்கும் அளவுக்கு ஜெயலலிதா, சசிகலா, மிடாஸ் விடம் பணம் இல்லாமல் இல்லை.

  இன்று வாக்கிற்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட அதிமுகவிற்கு வாக்கு அளிக்கும் மன நிலையில் மக்கள் இல்லை. அதுதான் நிதர்சனம்.

  பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதிமுக, போயஸ் தோட்ட அம்மா வின் நிலைமை வேறு. இன்றைய கோடா நாட்டு அம்மாவிற்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு வேறு.


  During MGR"s time or even During jayalaitha's 2nd ruling term (1st 2 years), even if you offer 10000 rupes per vote, no one was ready to vote for udayasooriyan. But today no comman man like ADMK.

  ReplyDelete
 2. ஆளும் கட்சி என்றால் அப்படிதான் இருக்கும்
  இதுல பெருசா ஒன்னும் சொல்லுரததுக்கு இல்லா....
  அதுதான் யாதர்தம்...
  இதை வைத்து அந்த ஊருக்கு யாதாவது நல்லது நடந்தால் சரி
  யாரு வந்தாலும் திருட போரஹா இதுதான் உண்மை...
  அஜீம்

  ReplyDelete
 3. //அழகிரி ஒரு வாக்கிற்கு ஆறாயிரம் கொடுத்தால், எட்டாயிரம் கொடுக்கும் அளவுக்கு ஜெயலலிதா, சசிகலா, மிடாஸ் விடம் பணம் இல்லாமல் இல்லை.//

  இருக்குல்ல, அப்ப அதான் பணநாயகம்!

  ராம்ஜியண்னே கொடுத்த காசுக்கு மேல கூவக்கூடாது!

  ReplyDelete
 4. மக்களுக்காக, மக்களால், மக்களுக்கே என்னும் ஜனநாயகத்தின் அர்த்தங்கள் எல்லாம் கண்முன்னே சிதைக்கப்படுவதைச் சொல்வதுதான் இந்தப் பதிவின் முக்கிய நோக்கம். தேர்தலில், இனி இதுதான் விதி என்பதாக நிச்சயித்த பெருமை தி.மு.கவுக்குத்தான் போய்ச் சேர முடியும். அதைத்தான் இந்தக் கார்ட்டூன் மூலம் பகிர நினைத்தது. அதைத்தான் ‘பணநாயகம்’ என ஒற்றை வார்த்தையில் சொல்கிறார் வால்பையன்.

  இது அ.தி.மு.கவை ஆதரிப்பதாக ராம்ஜி நினைக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பிசாசாகவும், கொள்ளிவாய்ப் பிசாசாகவும் இரண்டும் மாறி மாறி இங்கே காட்சியளிக்கின்றன. பிசாசுகள் அதிகாரத்துக்கு வரும்போது கொள்ளிவாய்ப் பிசாசுகளாகின்றன.

  ReplyDelete
 5. மாதவராஜ்,
  அய்யா உங்களுக்கு தனி மடல் அனுப்ப எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும்

  ReplyDelete
 6. வால்பையன் காசிற்கு கூவ வில்லை. சமரசத்தால் வந்த கூவல் இது.

  மாதவராஜ் சொன்னது போல கொள்ளிவாய் பிசாசை பார்க்கும் பொழுது , பிசாசே மேல் என்று சமரசம் செய்து கொண்டதால் வந்த கூவல் இது.

  இன்றும் கோபியிலோ, உடுமலை பேட்டையிலோ, கோவில்பட்டியிலோ இடை தேர்தல் வந்தால் அதிமுக ஜெயிக்கும், அங்கே பணமோ அதிகார பலமோ வெற்றியை தீர்மானிக்காது.

  ReplyDelete
 7. கரப்பான்பூச்சியின் மீசையாக தேர்தல் ஆணையம்... மிரட்டமுடியுமே தவிர வேறெதையும் புரட்டமுடிவதில்லை...

  ReplyDelete
 8. //இன்றும் கோபியிலோ, உடுமலை பேட்டையிலோ, கோவில்பட்டியிலோ இடை தேர்தல் வந்தால் அதிமுக ஜெயிக்கும், அங்கே பணமோ அதிகார பலமோ வெற்றியை தீர்மானிக்காது.//  பணமும் தீர்மானிக்காது, அதிகார பலமும் தீர்மானிக்காது, ஒருவேளை எம்.ஜி.ஆர் ஆவி வந்து தீர்மானிக்குமோ!?

  ReplyDelete
 9. "பொன்னாகரத்தில் நேர்மையாகத் தேர்தலை நடத்துவது பெரும் சவால்" நரேஷ் குப்தா.
  அட! இன்னுமா நாங்க இதையெல்லாம் நம்பிட்டிருக்கோம்னு நினைக்கிறீங்க!

  ReplyDelete
 10. நன்றி ...மாதவ்ராஜ் நல்ல பதிவாக அடையாளம் காட்டப்பட்டதற்கு!

  ReplyDelete
 11. எனது பதிவுகள் வாடாத பக்கங்களில் இடம் பெறாதது குறித்து எனக்கு வருத்தமே .. இருந்தாலும் .. தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கும், பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  அன்புள்ள மாதவராஜ் அவர்கள் ஏதேனும் விமர்சனம் இருந்தால் தெரியப்படுத்தவும் ... உதவியாக இருக்கும்.

  ReplyDelete
 12. http://azhiyasudargal.blogspot.com/

  போன்ற ஒரு நல்ல பதிவினை அறிமுக படுத்தி உள்ளீர்கள் நன்றி.

  “பொன்னகரம்” கருத்து செறிவு

  ReplyDelete
 13. இதெல்லாம தெரிந்த பிறகும் இந்த தேர்தல் முறையில் உங்க கட்சி ஏங்க நம்பிக்கை வச்சிருக்கு. நீங்க வச்சா கூட பரவாயில்ல• மக்களயும் வைக்க சொல்றீங்க‌
  -mani

  ReplyDelete
 14. யாருமே தேர்தல் ஆணையர் குறித்தோ ஆணையம் குறித்தோ பேசவில்லையே!
  /மக்களுக்காக, மக்களால், மக்களுக்கே என்னும் ஜனநாயகத்தின் அர்த்தங்கள் எல்லாம் கண்முன்னே சிதைக்கப்படுவதைச் சொல்வதுதான் இந்தப் பதிவின் முக்கிய நோக்கம்/ மாதவராஜ், முதலில் இந்த சொற்றொடரை சொன்னவர்கள் யாருக்காக சொன்னார்கள் என்று யோசியுங்கள். 'முதலாளிகளுக்காக, முதலாளிகளால், முதலாளிகளே' நடத்த வேண்டிய ஒரு ஆட்சிக்காக சப்பைக்கட்டுக் கட்டிய முதலாளித்துவ சிந்தனைவாதிகளால் அறிவாளிகளால் இட்டுக்கட்டப் பட்டதுதான் மேற்படி சொற்றொடர். பத்தாயிரம் சாதிகளையும் இருபதாயிரம் உட்சாதிகளையும் வைத்துக்கொண்டு, பேசப்படும் 'மேன்மைமிகு' 'மாண்புமிகு' ஜனநாயகத்தின் அர்த்தம்தான் என்ன? காசு சம்பாதிப்பதில் ஒரு இடத்தில் பிரச்னை என்றவுடன் ரத்தன் டாடாவால் குஜராத்துக்கு சென்றுவிட முடிகின்றது, ஆனால் உயிர் பிழைப்பதற்காகவே மட்டும் ஒரு குத்புதீன் அன்சாரி குஜராத்தில் இருந்து வங்காளத்துக்கு ஓட வேண்டியிருக்கிற இந்த தேசத்தில் என்ன ம.... ஜனநாயகம் பேச வேண்டியிருக்கு? இது அப்பட்டமான முதலாளித்துவ கருத்தாக்கம் என்பதைப் புரிந்துகொள்வோமாக. முதலாளித்துவம் நமக்கு கற்பித்த ஏகப்பட்ட 'ஒழுக்கங்கள்' 'நற்சிந்தனைகள்' 'தேசபக்தி' போன்ற கடைந்தெடுத்த கயவாளித்தனங்களில் ஒன்றுதான் இந்த மேற்படி 'மக்களுக்காக மக்களால்...' என்பதுவும். இங்கேயே கார்டூனில் கூட பாருங்கள், தேர்தல் ஆணையம் சுதந்திரமானது, யாருக்கும் கட்டுப்படாதது என்றெல்லாம் அள்ளி விடுகின்றார்கள். நான் சவாலாகவே கேட்கின்றேன்: பென்னாகரத்தில் தேர்தலை இனிமேல் நேர்மையாக நடத்துவது இருக்கட்டும், ஏற்கனவே உலகமே காறித்துப்பிய திருமங்கலம் விசயத்தின்போது நரேஷ்குப்தாவும் 'மேன்மைமிகு' 'யாருக்கும்கட்டுப்படாத' 'சுதந்திரமான' தேர்தல் ஆணையமும் எங்கே போயிருந்தார்கள்? அதனால்தான் சொல்கின்றேன், 'முதலாளிகளுக்காக, முதலாளிகளால், முதலாளிகளே' அல்லது 'அழகிரிகளுக்காக அழகிரிகளால் அழகிரியே' (கடந்த நாடாளுமன்றத் தேர்தல் உங்களுக்கு நினைவிருந்தால் சிதம்பரத்துக்காக சிதம்பரத்தால் சிதம்பரமே' என்றும் கூட வாசிக்கலாம்) நடத்துகிற ஒரு தேர்தலுக்கு நம்மை ஏமாற்ற இந்த அரசாங்கம் கற்பித்த சொல்தான் 'ஜனநாயகம்', இந்த அரசாங்கம் நிறுவிய ஒரு கண்துடைப்பு ஆபிசுதான் 'தேர்தல் ஆணையம்'. அப்படிப்பட்ட ஒரு கவருமெண்டு ஆபீசால் என்ன என்னத்த புடுங்க முடியும்?
  இக்பால்

  ReplyDelete
 15. மக்களின் பலவீனத்தை தங்களின் பலமாக பயன் படுத்துவதில் இரு திராவிட கட்சிகளுக்கு இடையே பேதம் ஒன்றும் இல்லை
  மக்களின் ஆட்சியாளர்களை தேர்வு செய்வதில் மக்களின் பிரச்சனைகள் முன்னுக்கு வராமல் செய்து, யார் எவ்வளவு தருவார்கள்
  என மக்களை மயக்கத்தில் வைத்தவரோடு சேர்ந்து, அதனை எதிர்த்து போர் புரியாத அனைவருமே குற்றவாளிகளே!!!
  எங்கு யார் பணம் வெற்றிபெற்று தரும் என்பதெல்லாம் வீண் பேச்சே!!!

  அழகுமுகிலன்

  ReplyDelete