நித்யானந்தாவை நன்றாக பாருங்கள்!

nithyananda

நித்யானந்தா தயாராக இருந்தான். ஹரித்துவாரில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கான புனித பயணத்தை பக்தகோடிகள் புடைசூழ, இந்த மார்ச் 4ம்தேதி தலைமை தாங்கிச் செல்ல வேண்டும் அவன். ஒன்பது கோடி பேர் வருவார்கள் என பீற்றிக்கொள்ளும் அந்த வைபவத்தில், செய்த பாவங்களையெல்லாம் கங்கையில் கழுவி எழுந்திருக்க முடியும். அதற்குள் அந்தப் பாவங்களில் கொஞ்சத்தை சன் டி.வி பிட்டு பிட்டுக் காண்பித்துவிட்டது.

எவ்வளவு பரபரப்பும், ஆர்வமும் நம் மக்களுக்கு. நடக்கவே நடக்காத விபரீதம் போல, ‘குமுதத்தில் எழுதிய அவரா இவர்’ என்பது போல  பார்த்தாலும், அந்தக் காட்சி குறித்த ரகசிய ஆர்வம் கொப்பளித்துக் கொண்டு இருந்தது. அதைப் பார்க்காதவர்கள் பாவம் செய்தவர்களைப் போல துடித்துத்தான் போனார்கள். இந்த இயல்புகள் தெரிந்துதானே சன் டி.வி அறுவடை செய்கிறது. தங்கள் வியாபார ரீதியான வெற்றிகளுக்கு, முதலாளிகள் தாங்கள் கட்டியமைத்த புனிதங்களையும் போட்டு உடைப்பார்கள். அவர்கள் நலன் சார்ந்தே இந்தக் காரியத்தை செய்வார்கள்.

இந்துத்துவா சக்திகளுக்கு அடிவயிறு பற்றிக்கொண்டது. சில இடங்களில்  நித்யானந்தாவின் மடங்களை முற்றுகையிடவும், அவனது படங்களை நடுத்தெருவில் எரிக்கவும் வெறி கொண்டு நின்றனர். நேற்று வரை அவர்கள்தான் இந்த நித்யானந்தாக்களுக்கு ஆராதனை செய்துகொண்டு இருந்தவர்கள். இப்படிப்பட்ட போலிச்சாமியார்களுக்கு எதிரானவர்கள் என்பதை உடனடியாக காட்டிக் கொண்டால் மட்டுமே, தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதும், இனியும் தொடர்ந்து மற்ற சாமியார்களைக் காப்பாற்ற முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் நலன் சார்ந்தே இந்தக் காரியங்களைச் செய்கிறார்கள்.

இதுவரை அவனைப்பற்றி ‘ஆஹோ ஓஹோவென்றும்’, ‘அப்படியாம், இப்படியாம்’ என்றும் பிம்பங்களை கட்டமைத்த, புத்திசாலிகள் என அறியப்பெற்றவர்கள் இப்போது என்ன செய்வதென்று அறியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கலாம். அறிவித்த ஆருடங்களும், பிரமைகளும் நாலுபேர் நடுவில் பொய்த்துப் போய் தங்கள் சிந்திக்கும் திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து அவமானப்படலாம். அவர்களும் தங்கள் நலன் சார்ந்தே இருப்பார்கள்.

பொதுவாக யோசிக்க வேண்டிய பல விஷயங்களை வெகுஜனப்பரப்பில் இருந்து விலக்கி விடுகிற இயல்புகளுக்கு நாமே ஆளாகிவிடுகிறோம். பரபரப்பிலும், அந்தரங்கங்கள் பொதிந்தச் செய்திகளிலும் அடிபட்டுப்போகிற ஒரு கேள்வியை மட்டுமே இந்த இடத்தில் கேட்கத் தோன்றுகிறது.

சென்ற வருடத்தின் இறுதிநாளில் நித்யானந்தா எழுதிய ‘முக்தி வாழ்வு’ என்னும் நூலை கர்நாடகாவின் முதன் மந்திரி எடியூரப்பா பயபக்தியோடு வெளியிடுகிறார். அவனது பிறந்தநாளோடு புத்தாண்டு துவங்கும் அடுத்த நாளில் ‘அவர் கல்பதரு தரிசனம் தருவார்’ என தினமணி நாளிதழ் செய்தி வாசிக்கிறது. “நாம் வாழும் காலத்திலேயே பரம்ஹம்ச நித்யானந்தா போன்றவர்கள் பெரும் ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று ஒருவர் பெருமிதம் கொள்கிறார். அவனது எழுத்துக்களைத் தொடராக படிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் ஒரு ஜனத்திரள் இருக்கிறது. அமெரிக்காவில், கொலம்பஸில் 2007ல் இந்த நித்யானந்தா கோவிலைக் கட்டி பிரண பிரதிஸ்டை செய்தது குறித்து இன்னொருவர் குறிப்பிடுகிறார். ஏராளமான கல்வி, மருத்துவச் சேவைகள் அவனது பெயரில் நடக்கின்றன. கோடி கோடியாய் சொத்துக்களோடு பல நிறுவனங்கள் அவன் பெயரில் இயங்குகின்றன. அவன் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், என எல்லாவற்றையும் தரிசனமயமாக பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் இலட்சக்கணக்கான மக்கள் அவன் முன்னால் கூடுகிறார்கள். இந்த சிவராத்திரி அன்று அவனது தரிசனத்தை யூடியுபில் பார்த்துவிட்டு, வந்திருக்கும் கமெண்ட்களைப் பார்த்தால் இன்னும் தெளிவாகும். 33 வயதில் அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்து உட்கார வைத்தது யார் அல்லது எது?

அவனது தியானபீடம் சென்று அங்கு அவன் என்ன நிகழ்த்திக்கொண்டு இருக்கிறான் எனப் பாருங்கள். சன் டிவி வீடியோவில் கதனகுதூகலமாக பார்த்த ஆள் அங்கே ஒரு பெரிய ஆசனத்தில் எப்படி வீற்றிருக்கிறான் என பாருங்கள். அதற்குள் மேலும் சென்றால் கண்களை மூடி மெல்லத் திறந்து அருட்பெருஞ்ஜோதியாய் அந்த முகம் எப்படி சிரிக்கிறது என பாருங்கள். உண்மைகள் தெரிய வரலாம். அப்போதாவது கோபம் வருகிறதா என பாருங்கள்.

தயவுசெய்து அவனோடு இருக்கும் அந்த நடிகை யார் என்பதை மட்டும்  ஆராய்ச்சி செய்து காணாமல் போகாதீர்கள்.

கருத்துகள்

45 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஆராய்ச்சி செய்தாலும் நமக்கு என்ன நன்மை தலைவரே. போலிகள் ஒழியவேண்டும்

    பதிலளிநீக்கு
  2. //தயவுசெய்து அவனோடு இருக்கும் அந்த நடிகை யார் என்பதை மட்டும் ஆராய்ச்சி செய்து காணாமல் போகாதீர்கள்.//

    க்ளாப்ஸ்...

    பதிலளிநீக்கு
  3. /இந்த சிவராத்திரி அன்று அவனது தரிசனத்தை யூடியுபில் பார்த்துவிட்டு, வந்திருக்கும் கமெண்ட்களைப் பார்த்தால் இன்னும் தெளிவாகும். 33 வயதில் அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்து உட்கார வைத்தது யார் அல்லது எது?/

    Very very true!

    பதிலளிநீக்கு
  4. அண்ணா இது ஆசிரமம் அல்ல.கார்ப்பரேட்.

    உரிமை மறுக்கப்படும் தொழிலாளிக்குக்கூட போனால்போகட்டுமென கூல் குடிக்கும் அளவிற்கு பிச்சையிடும் முதலாளித்துவம் இங்கு செல்லும் மக்களுக்கு எதுவும் தருவதில்லை ஏமாற்றத்தைத் தவிர.

    பதிலளிநீக்கு
  5. தயவுசெய்து அவனோடு இருக்கும் அந்த நடிகை யார் என்பதை மட்டும் ஆராய்ச்சி செய்து காணாமல் போகாதீர்கள்.//

    well said.

    பதிலளிநீக்கு
  6. கதவைத் திற காற்று வரட்டும்! என்பது போய்க் கதவைத் திற காவல்துறை வரட்டும் என்றாகிவிட்டது.... ஒரே சிரிப்புத்தான் போங்கள்

    பதிலளிநீக்கு
  7. மாட்டியவன் மட்டும்தான திருடனா?
    இன்னும் மாட்ட வேண்டியவனுங்க ஏழெட்டு பேரு இருக்கானுங்க.

    பதிலளிநீக்கு
  8. மாதவராஜ், தெளிவான பார்வையில் எழுதின அற்புதமானதொரு பதிவு.

    ஆனால் ஒன்று மாத்திரம் பாசாங்கின்றி சொல்லுங்கள். அந்தச் செய்தியை பார்க்கும் போது யார் அந்த நடிகை என்ற குறுகுறுப்பு உங்களுக்கு எழவேயில்லையா? :-)

    பதிலளிநீக்கு
  9. அப்பொ யார் தான் நல்லவர்கல் ஓன்னும் புரியல? ஆன்மிக பொர்வை பொர்திகொண்டு ஏன் இண்த புலப்பு.... சரியான தண்டனை வலகவேண்டும்
    அஜ்ஜிம்

    பதிலளிநீக்கு
  10. நம் பதிவுகள் சமூகக் கோபத்தைத் தட்டி எழுப்ப வேண்டுமே தவிர வெறும் பரபரப்புக்காகனவை அல்ல.
    அவ் வகையில் முக்கியமானது தங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  11. I am not a supporter of Nithyanadha nor that actress.

    But the way in which Sun News channel alone giving importance to this episode gives doubts to me.

    It looks like some personal enemity and there is no social service motive to Sun News.

    The same way they showed Madurai dinakaran office violence and after one year now kalanidhi and alagairi are freinds, same thing can happen after one year with Nithyanandha too

    பதிலளிநீக்கு
  12. /இந்த சிவராத்திரி அன்று அவனது தரிசனத்தை யூடியுபில் பார்த்துவிட்டு, வந்திருக்கும் கமெண்ட்களைப் பார்த்தால் இன்னும் தெளிவாகும். 33 வயதில் அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்து உட்கார வைத்தது யார் அல்லது எது?/

    நிச்சயம் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் பணக்கார பொழுது போகாத அடிவருடிகளும்தான்.
    எல்லாவற்றுக்கும் மேலாக மனிதனை மனிதனாகப் பார்க்காமல் 'மகானா'க்கும் நம் மக்களின் மூடத்தனும் தான்.

    பதிலளிநீக்கு
  13. //தங்கள் வியாபார ரீதியான வெற்றிகளுக்கு, முதலாளிகள் தாங்கள் கட்டியமைத்த புனிதங்களையும் போட்டு உடைப்பார்கள். அவர்கள் நலன் சார்ந்தே இந்தக் காரியத்தை செய்வார்கள்//This is true.We have to congratulate the "SUN TV".You can write more J.M...expecting more in the part-2 ---R.Vimala vidya

    பதிலளிநீக்கு
  14. //தயவுசெய்து அவனோடு இருக்கும் அந்த நடிகை யார் என்பதை மட்டும் ஆராய்ச்சி செய்து காணாமல் போகாதீர்கள்.//

    அதே அதே.

    ஆனால் ஆராய்ச்சிகள் இன்னும் அது தொடர்பாகத்தான் அமைந்துகொண்டிருக்கிறது :(((((((

    பதிலளிநீக்கு
  15. இந்த்துவா ஆதரவாளரின் செயல்பாட்டு காரணத்தை சரியாக அலசியுள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
  16. Dear Mr. Madav,
    Charu the self styled writer/Genius proclaimed THIS Nithya as HIS family deity as well a LIVING GOD, The leading Tamil Magazine praised even its founder is HIS ardent devotee.
    Are they going to eat their words, which spreads and spoiled so many innocent readers so much by their propaganda. We thought CHEATING rules only in POLITICS, We seldom never learn even the same repeats again and again. Some rumor that a greedy guy bargained the cd for 2 C to SUN. tanna .... tan.

    பதிலளிநீக்கு
  17. இதெல்லாம் ஒரு பதிவா? சாமியார் உடலுறவுகொள்ளக் கூடாதென்று எவன் சொன்னான்?

    பதிலளிநீக்கு
  18. ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் மனைவிகள் இருந்தனர்! சாமியார்கள் மட்டும் ஏன் பிரம்மச்சாரிகள் வேடமிட்டு தன் இயற்கையான ஆசா பாசங்களை மறைத்து வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டு சிக்கலில் சிக்கி அவமானப்பட வேண்டும்?

    பதிலளிநீக்கு
  19. சாமியாருன்னா...அப்படித்தாங்க இருப்பானுங்க.... நாமத்தான் கொஞ்சம்....கவனமா இருந்துக்கனும்.

    பதிலளிநீக்கு
  20. இந்தியா எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஏனைய (ஆ) சாமிகள் விசுபரூபம் எப்போ வெளிப்படும்.
    கதவைத் திற காற்று வருமெனத் தெரிந்த இவனுக்கு கெமராவும் வருமெனத் தெரியாமல் போயுள்ளதே!
    காமகேடி;தேவநாதன்;திரிவேதி,நித்தியானந்தன் அப்பாடா? மூச்சு முட்டுதே!!!
    இன்னும் சாமிமார் பின் அலையும் கேவலங்களை எதாலடிப்பது. தூ..

    பதிலளிநீக்கு
  21. this is reply to IYNDINAI>>>Anybody can have wife and lead a life..But they should not cheat the society and hide the facts of their life.Many like these NITHYANANDAS doing illegal activities, having illegal ,illicit relations with many women.Many things not come out openly.
    Such duplicate SAMIYARS are prevailing everywhere.They must be searched ,identified and removed from the scene..women must be saved from such frauds.So the ANGRY IS correct and justifiable..R.Vimal vidya.

    பதிலளிநீக்கு
  22. தீண்டாமை கருவறையில் அல்ல

    தீண்டாமையில் திருநீரை

    தொட்டு வைப்பதில்லை
    ஆனால் -
    பூசுமந்து பூஜைக்கு வரும்
    பூவையரை பூணூல்
    விட்டு வைப்பதில்லை
    கடவுள் கருவறையை
    காம அறையாக்கியவர்கள்
    கோவில் தளத்தை
    கொலைக்களமாக்கிய கொடியவர்கள்
    பக்தியைச் சொல்லி
    பாதம் பிடிக்கச் சொல்லும்
    வேதம் படித்த வெங்காயங்கள்.

    ஆனந்த ரவி
    azeem

    பதிலளிநீக்கு
  23. ஆசாமிகளை முதலில் தலையில் தூக்கி கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்; அது வெறும் ஆசாமி என்றாலும் சரி சாமியார் என்ற போர்வையிலும் சரி...

    பதிலளிநீக்கு
  24. எனக்கு 'அவனை' ரொம்ப பிடிச்சிருக்கு மாது.

    பதிலளிநீக்கு
  25. "அம்மா" என்று சொல்லும் சாமியார், வேலூரில் (தங்க கோவில்)உள்ள ஒரு சாமியார் மற்றும் பலர் வரிசையில் இருக்கிறார்கள்...
    பொருத்து இருந்து பாருங்கள்!!!!!

    அதே போல்
    இன்று ரஞ்சிதா??? நாளை பலர்......!

    பதிலளிநீக்கு
  26. மாதவ்,
    நான் இப்போ சொல்லப்போறது பலருக்கு கோவத்த கிளப்பும். இருந்தாலும் சொல்லுறத சொல்லிப்புடறேன். இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சு அரெஸ்ட் ஆன பிரபல சாமியாருங்க எல்லாம் பூணுல் போடாதவங்கதான். பிரேமானந்தா, இப்போ நித்யானந்தா. பூணுல் போட்ட ஒரு சுப்பிரமணிய அரெஸ்ட் பண்ணவும் கூட அதே சமூகத்த சேந்த ஜெயலலிதவாலதான் முடிஞ்சுது. கொஞ்சம் இப்படி கற்பனை செஞ்சு பாருங்களேன்... ஜெயேந்திரனை கருணாநிதி அரெஸ்ட் பண்ணியிருந்தா...? தமிழ்நாடு மட்டும் இல்ல மாதவ், இந்தியா பூராவும் சங் பரிவாரும் பிஜேபியும் தீ வச்சு கொளுத்தி இருக்க மாட்டாங்களா? ஒன்னும் இல்ல, வடக்க ஒரு சாமியாரு, பேரென்ன? ஆங், பாபா ராம்ஜி (ராமா ராமா!), கொடுத்த மருந்துல மாட்டு சாணம், குதிர சாணம், மனுஷ எலும்பு, மயிறு மட்ட எல்லாம் இருக்குன்னு பிருந்தா காரத் ஒரு புகார் சொன்னதுக்கு இதே பிஜேபி கும்பல் ஏன்னா குதி குதிச்சுது? சரி, விசயத்துக்கு வர்றேன்... பல வருசங்களுக்கு முன்னால 'வெள்ளை பிரேமானந்தா'வான சத்தியசாயிபாபா ஆசிரமத்துல நாலு காலேஜ் பசங்கள சுட்டு கொன்னாங்களே, அது என்னாச்சு? ஊத்தி மூடியாச்சே? ஏன்? ஏன்னா, பெரிய ரகசியம் மண்ணாங்கட்டி ஒன்னும் இல்ல, அதே சாயிபாபா கால்ல போயி ஜனாதிபதியா இருந்த சங்கர் தயாள் சர்மா உளுந்தாரே, கருகருன்னு மீசையும் காலப்பாக்க முடியாத தொப்பையும் இருக்கிற எந்த போலிசுக்காரநுக்குயா சாயிபாபா மேல கைவைக்க, மவனே தில்லு இருக்கும்? சன் டிவி இதப் பத்தி ஒரு கதை சொல்லலாமே? 'நடந்தது என்ன'ன்னு திகிலடிக்க வக்கிரவங்க இதப்பத்தியும் புட்டபர்த்தி வர ஒரு நட போய் பாத்துட்டு வந்து ஒரு எபிசொட் போட்டா டி.ஆர்.பி.ரேட் எகிருமே? கொஞ்சம் யோசிங்கப்பா.
    ஐயா நான் சொல்ல வர்றது இதான்: பிரேமானந்தா ஒரு கருப்பு சாயிபாபா, சாயிபாபா ஒரு கருப்பு பிரேமானந்தா! என்ன தலை சுத்துதா! மவனே, நீ பூணுல் போட்டேன்னா ஜனாதிபதி உன் கால்ல உளுவாறு, இல்லியா, உனக்கு கட்டம் போட்ட சட்டையும் கேப்பை களியும்தான்! திருந்துங்கப்பா!
    சார்லி

    பதிலளிநீக்கு
  27. அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.
    இன்னும் நிறைய இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. முந்துன பின்னூட்டத்துல கடைசி வரிய இப்புடி மாத்திபடிங்க மகாஜனங்களே:
    ஐயா நான் சொல்ல வர்றது இதான்: பிரேமானந்தா ஒரு கருப்பு சாயிபாபா, சாயிபாபா ஒரு வெள்ளை பிரேமானந்தா!
    சார்லி

    பதிலளிநீக்கு
  29. இதுக்குபேர் தான் துறவரமா? karumam.

    anbudan
    ram

    www.hayyram.blogspot.com

    பதிலளிநீக்கு
  30. எத்தனை ஆனந்தாக்கள் மாட்டினாலும், எதுவும், யாரும் மாற மாட்டேன்கிறார்களே!
    நாளை ஒரு சதானந்தா, மறுநாள்
    ஒரு சாதானந்தா. அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  31. @@@@கண்களை மூடி மெல்லத் திறந்து அருட்பெருஞ்ஜோதியாய் அந்த முகம் எப்படி சிரிக்கிறது என பாருங்கள்.அப்போதாவது கோபம் வருகிறதா என பாருங்கள்.///

    ஒரு சின்னபையன கடவுளாக்குன முட்டாள் பக்தர்களுக்கு ,அந்த பையன் பண்ற தப்புக்கெல்லாம் கோவப்பட தகுதி இருக்குன்னு எனக்கு தோணல..நீங்க என் சார் அவன சாமியார பார்கறீங்க..பாவம் சின்ன பையன் சார்..அவன் தொழில் காச வாங்கிட்டு ஆன்மீகத்த குடுக்கறது...அவ்ளோதான்...!!

    பதிலளிநீக்கு
  32. எத்தனை பேர்
    அவனை நம்பினார்களோ அத்தனை பேரையும் அவன்
    திருத்தி விட்டான். அவன் அல்லவோ மகான்

    பதிலளிநீக்கு
  33. அவரது அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி ஏன் இவ்வளவு ஆர்வம் நீங்கள் விளம்பரப்பிரியரா?

    ஆன்மிக அனுபவத்தை போலியாக அனுபவித்த சில முட்டாள்கள் அவரை மகானாக பார்த்தது
    இன்று அதே முட்டாள்கள் அவரை திட்டுகிறது.
    {மன்னிக்கவும் முட்டாள் என்கிற வார்த்தையைவிட வேறு வார்த்தைகிடைக்கவில்லை}

    சுவாமி நித்யானந்தா அப்படி என்ன தவறு செய்து விட்டார் ? நித்யானந்தா ஒவ்வொருவரிடமும் சென்று, எனக்கு பாலியல் உணர்வுகள் கிடையாது என்று சொன்னாரா ?

    பதிலளிநீக்கு
  34. //எத்தனை பேர்
    அவனை நம்பினார்களோ அத்தனை பேரையும் அவன்
    திருத்தி விட்டான். அவன் அல்லவோ மகான் //best comment of the year..Brilliant comment J.M
    ---vimalavidya

    பதிலளிநீக்கு
  35. ரோமியோ!
    வேர்களின் வியாதி தெரியாமல் இலைகளுக்கு எப்படி வைத்தியம் செய்ய முடியும்?


    சென்ஷி!
    நன்றி.


    சந்தனமுல்லை!
    நன்றி.


    எம்.எம்.அப்துல்லா!
    அது புரியாததால்தானே.... இந்த லீலைகள்!


    காவேரி கணேஷ்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ஆதி!
    நன்றி.

    ராஜா!
    மாட்டட்டும். அதற்குள் அவர்களைப் போன்ரவர்களிடம் மக்கள் மாட்டாமல் இருக்கட்டும்.

    நிலா ரசிகன்!
    நன்றி.


    அஜீம்!
    அவர்களைத் தண்டிப்பது இருக்கட்டும். நம் மக்கள் மீண்டும் மீண்டும் தடுக்கி விழாமல் இருக்கட்டும்.


    சுசிலா!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  37. சுரேஷ் கண்ணன்!
    என்ன இப்படி கேள்வி கேட்டு விட்டீர்கள். சட்டென்று புன்னகை வந்தது. நாமும், இந்த சமூக அழுக்குகள் சுமந்த மனிதர்கள்தானே. குறுகுறுப்பு சட்டென்று வந்தது உண்மை. அதற்காக மெனக்கெடும் ஆர்வம் இல்லை. அலுவலகத்தில், தெருவில் அதுகுறித்து விவாதங்கள் நடந்தபோது கடந்துபோக முடிந்தது. சில பிரக்ஞைகள் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  38. யாஹூ ராம்ஜி!
    ஆமாம், சன் டிவிக்கு இதில் இருக்கும் அதிக ஆர்வம் வேறு சிலவற்றையும் எச்சரிக்கிறது.

    கண்மணி!
    நன்றி.


    விமலவித்யா!
    சரிதான் தோழர். ஆனால் யாஹூ ராம்ஜி சொல்வதைக் கேட்டீர்களா?


    அமித்து அம்மா!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வால்பையன்!
    மிக்க நன்றி.


    gulf tamilan!
    நன்றி.


    வாசன்!
    நித்யானந்தாவுக்கு இணையாக வலைப்பக்கத்தில் கிழிக்கப்பட்டவர் சாருவும்தான். எனக்கு அவர் மீது எப்போதுமே பிரமைகளோ, அவர் எழுத்துக்கள் மீது மதிப்போ இருந்ததில்லை.


    ஐந்திணை!
    நான் நிச்சய்மாக சொல்லவில்லை. என் பதிவில் எங்காவது அதை சொல்லி இருக்கிறேனா? இந்த கடவுள் உயரத்திற்கு சாதாரண மனிதன் எப்படி வந்தான் என்பதுதான் என் கேள்வியே.


    சங்கே முழங்கு!
    நியாயம்தான். அவசியமில்லைதான். அசிங்கப்பட வேண்டாம்தான். மனிதர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே.


    கருணாகரசு!
    கவனமாக இருப்பதைவிட்டு, சாமியார்களையே மக்கள் கண்டுக்காமல் விட்டு விட்டால்...?

    பதிலளிநீக்கு
  40. யோகன்!
    நன்றி.


    விமலவித்யா!
    சரியாகச் சொன்னீர்கள்.


    அஜீம்!
    அருமை. பகிர்வுக்கு நன்றி.


    அமுதா!
    சரிதான். நன்றி.

    காமராஜ்!
    புரிகிறது.


    பொன்ராஜ்!
    நான் ஒன்றும் இதையெல்லாம் பொறுத்து இருந்து பார்க்கப் போவதில்லை.


    சார்லி!
    நீங்கள் சொல்வதும் ஆராயப்பட வேண்டிய முக்கிய விஷய்ம்தான்.


    டாக்டர் ருத்ரன்!
    மிக்க நன்றி. ஆமாம், பேச வேண்டி இருக்கிறதுதான்.

    பதிலளிநீக்கு
  41. ஹே ராம்!
    நன்றி.


    அம்பிகா!
    நாம் திருமப்த் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கணும். ஒருநாள் கேட்பாங்க. அல்லது புரிஞ்சுக்குவாங்க.



    வெளியூர்க்காரன்!
    நான் அவனைச் சாதாரண மனுஷனாகத்தான் பார்த்திருக்கிறேன்.


    முத்துக்குமார்!
    ஆஹா.... ஆஹா! என்ன தெளிவு!


    smart!
    நீங்கள் பதிவை ஒழுங்காப் படித்தீர்களா? நான் எங்கேயும் நித்யானந்தா என்ற மனிதன் மீது குற்றம் சாட்டவில்லை. இந்த இடத்திற்கு அவனைக் கொண்டு வைத்தது யார் என்றே கேள்விகள் எழுப்பியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  42. அவதார் நித்தியானந்தா என்று சொல்கிறார்கள் , அவுத்தார் என்பதே பொருத்தமாக இருக்கும்.அவ்வப்போது இது போல் போலி சாமியாற்கள் மாட்டினாலும் மக்கள் வெள்ளம் போல் சென்று இவனைப் போன்ற ஈனபிறவிகளை நம்புவது மன வருத்தத்தை தருகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!