Type Here to Get Search Results !

செம்மொழி மாநாடு தேவையா?

இப்படியொரு தலைப்பில், ’புத்தகம் பேசுது’ பத்திரிகையின் ஆசிரியர் குழு ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. அதில், இந்த மாநாடு அதன் உண்மையான அர்த்தத்தில் நடைபெறவேண்டுமானால், இந்த அரசு என்ன செய்ய வேண்டும் என சின்னதாய் ஒரு பட்டியல் போட்டு இருக்கிறது.

* முதலில் அது குடும்ப மாநாடு அல்ல..... தமிழின் ஒட்டு மொத்த மக்களின் பெரும் குடும்ப மாநாடு எனும் நிலையை ஏற்படுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியல், அறிவு  காழ்ப்புணர்ச்சி இன்றி இடம்தந்து... மதிப்பளிக்க வேண்டும்.

* தமிழ் மொழியின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து மட்டங்களிலும் ‘தமிழ் கல்வி’ எனும் ஒப்பற்ற லட்சியத்தை அடைய அடுத்த பத்தாண்டு களுக்கான செயல்திட்டத்தை வரைந்திட மாநாட்டில் கல்வியாளர்களுக்கான ஒரு செயல் அரங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.

* ஊனும் உயிரும் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவனுக்கான பிரதிநிதித்துவம் என்றால் என்ன எனும் திறந்த விவாதம் நடக்க இதுவே நல்ல தருணம் ஆகும்.

* இன்று ஒரு மொழியின் இருப்பு கணினி வழியான செயல்பாட்டில் தான் உள்ளது... இணையத்தை சீன தேசத்தையும், ஜப்பானையும் போல நாம் நமது தமிழிலேயே முழுவதும் பயன்படுத்த தகுதியான மொழிபெயர்ப்பு தமிழ் எழுத்து வகை (திளிழிஜி) இன்னமும் சர்ச்சையானதாகவே இருப்பது நல்லதல்ல. இந்த மாநாடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழ் இலக்கண எளிமைப்பாடு பற்றி ஆராய்வதும் அதன் ஒரு பகுதியாகும்.

* தமிழின் தொன்மையும் அதன் மொழிவளமும் வரலாறும் அனைவரும் அறிந்ததே. அதை இளைய தலை முறையினருக்கு எடுத்துச்செல்வது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாணவர் - குழந்தைகள் ஆகியோர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதோடு.... அதை அவர்களது தமிழ் புத்தக வாசிப்போடு இணைத்து புத்தக வாசிப்பையும் சேர்த்து வெளிப்படுத்த வேண்டும்.

வாடாத பக்கங்களின் இன்றைய பக்கம் படித்துவிட்டீர்களா?
உங்களுக்குப் பிடித்த பதிவையும், அதுகுறித்த கருத்துக்களையும் பகிர வாருங்கள்!!!

* அறிவியல் தமிழுக்கென்று ஓர் இதழ் தமிழில் இல்லை. அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரிக்க தனியே தமிழ் அறிவியல் ஆய்வு இதழை தோழர் சிங்காரவேலர்தான் முதலில் நடத்தினார் என்கிற வரலாற்று உண்மையை கருத்தில் கொண்டு, தமிழ் அறிவியலின் பிதாமகனான தோழர் சிங்காரவேலரை அறிவித்து அவர் வழியில் அறிவியல்தமிழ் ஆய்விதழ் உட்பட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான செயல் அறிக்கை தயாரித்து அதை அமல்படுத்த மாநாடு முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்.

* நைஜீரியா போன்ற ஒரு சிறிய நாட்டில் ஒரு புத்தகம் வெளிவந்தால் 25 ஆயிரம் பிரதிகளை அரசு தனது நூலகங்களுக்கு வாங்கும்  நிலை இருக்கிறது. நமது தமிழின் ‘வீடுதோறும் புத்தகம்’ எனும் நிலை உருவாக இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தது போல நல்ல தமிழ் நூல்கள் வழங்கும் ஒரு திட்டத்தை செம்மொழி மாநாடு முன்மொழிய வேண்டும்.

* பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் நல்ல பல நூல்களை மொழி பெயர்த்து வளம் பெற ஒரு சரியான சுதந்திரமான அமைப்பை - சாகித்ய அகடாமியை முன்மாதிரியாக கொண்டு, ஆனால் அதன் பலவீனங்களை களைந்த அமைப்பாக - ஏற்படுத்தி தமிழை உலக அரங்கிற்கு உயர்த்தும் ஒரு செயல் திட்டம் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட வேண்டும்.

* தொலைக்காட்சி சினிமா உட்பட பிற ஊடகங்களை தமிழ் மண் சார்ந்த தகுதிகளோடு- கலாசார சீரழிவு நோய்களில்லாத சாதனங்களாக்கி அதே சமயம் தமிழ் கலையின் அங்கங்களை சாகடித்து விடாத - சுய கட்டுப்பாடு அமைப்பாக ஆக்கிட தகுந்த ஆலோசனைகளை வழங்கிடும் மாநாடாக அது அமைய வேண்டும்.

* இப்போது பலமாக தம்பட்டம் அடித்து பறைசாற்றிக் கொள்ளும் ‘வரலாற்று சிறப்பு மிக்க’  ‘உலக தலைநிமிர்வு’ போன்ற அம்சங்களை செம்மொழி மாநாடு பெறவேண்டுமென்றால் அது மந்திரிகள் மற்றும் அவர்களின் எடுபிடிகளின் மாநாடாக இல்லாமல், தமிழ் அறிஞர்களும், படைப்பாளிகளும் பெரு மக்கட்திரளும், எதிர்கால சந்ததியும் கைகுலுக்கும் சகல ஜனநாயக அம்சங்களும் பொருந்திய மாநாடாக நடத்தப்பட வேண்டும். தமிழ் மொழிக்கும் அதன் வாசக பெரு உலகிற்கும் எவ்வளவோ செய்யத் துடிக்கும் இந்த அரசு கட்டாயம் இவற்றைக் கருத்தில் கொள்ளும் என்று நம்புவோம்.

இப்படி அந்த தலையங்கம் முடிந்து விடுகிறது!

சரி, நீங்கள் சொல்லுங்கள்...
அரசு இதையெல்லாம் கருத்தில் கொள்ளுமா?
நாம் அப்படி நம்பலாமா?

(வாடாத பக்கங்கள் – 3 இப்போது (20.2.2010) பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வாருங்கள்)

கருத்துரையிடுக

16 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. இங்குதான் முறையாக அழைப்பு விடுத்தாலும் எதிர்க் கட்சிகள் ஆக்க பூர்வமாக துணை தருவது இல்லையே இந்த தமிழ் மாநாட்டிற்கு.

  இதற்கு முந்திய ஆட்சியில் நடந்த மாநாடுகளும் இதே ரகம் தான்.

  பதிலளிநீக்கு
 2. முறையாக அழைப்பது என்றால் என்ன? குப்பன் அவர்களே!.பத்திரிகை அனுப்புவது மட்டும் தானா?ஆட்சியதிகாரம் கையில் இருப்பதால் எடுபிடிகளின் புகழ் மாலையைக் கேட்க ஒரு விழா.உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை உடைத்தாகி விட்டது.ஒன்று பட்டு நிற்கவேண்டிய நண்பர்களை துரோகியாக்கியாகி விட்டது.நல்லா இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 3. The Article explore the opportunities to focus the TAMIL in the conference.the views are more democratic and justifiable one.The government must come forward to conduct it as "conference". But the things are going on to glorifying mr.M.karunanidhi only.What to do.

  பதிலளிநீக்கு
 4. வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டாம்
  ஆளவிடுங்க சாமி

  பதிலளிநீக்கு
 5. //நமது தமிழின் ‘வீடுதோறும் புத்தகம்’ எனும் நிலை உருவாக இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தது போல நல்ல தமிழ் நூல்கள் வழங்கும் ஒரு திட்டத்தை செம்மொழி மாநாடு முன்மொழிய வேண்டும்.//

  நம்மாளுக தொலைக்காட்சிப் பெட்டியவே வேறு ஒருத்தருக்கு விற்று காசு பார்க்கறவங்க.., புத்தகத்தை எடைக்கு எடை போட்டு ஐஸ் வாங்கி சாப்பிட மாட்டாங்கண்ணு என்ன நிச்சயம் ஐயா?

  பதிலளிநீக்கு
 6. நிச்சயமாக நீங்கள் சொன்ன எதுவுமே நடக்கப் போவதில்லை..!

  அதுவொரு குடும்ப விழாவாகத்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தி.மு.க.வின் தலைவர் தன்னை தமிழ்நாட்டுக்காரர்கள் அரும்பாடுபட்டு வாழ்த்தியது போதாது என்று உலகில் தெரியாத்தனமாக தமிழ் மொழியைப் பேசித் தொலைக்கும் அனைவரும் தன்னை வாழ்த்தியே தீர வேண்டும் என்று தண்டனை கொடுத்திருக்கும் வைபவம் அது..

  நிச்சயம் அவர் என்ன நினைத்திருக்கிறாரோ அதுதான் நடக்கும்..!

  ஆனால் அதற்கு நமது பணம், அரசுப் பணம் 300 கோடி ரூபாய் ஸ்வாகா என்பதுதான் மிகக் கொடுமை..

  என்ன செய்றது.. கேக்குறதுக்குத்தான் ஆளே இல்லையே..!!!

  பதிலளிநீக்கு
 7. //இலங்கையில் அவனுக்கான பிரதிநிதித்துவம் என்றால் என்ன எனும் திறந்த விவாதம் நடக்க இதுவே நல்ல தருணம் ஆகும். //
  Sounds ridiculous. Why weren't the past 6 decades a good time? And what was the outcome of those "open/closed discussions" that happened in the past? - well, got to ask the Editor :)

  பதிலளிநீக்கு
 8. It is not a question of weather to have? It is how to have it? I remember the conference held at Madurai. Tha.MU.Ye.Sa was given the status of Observer.I was one Who attended as an observer.Navaler,S.D.somasundaram are mates of K.M at Annamalai Uty.He attended one session.Tha.Mu.Ye.Sa gave a public reception at Goripalayam Masjith ground which was attended by Dr.Kanaga sabapathi,Dr.Sivathambi and others.Interaction with Chinese delegates and East Eropean delegates was also there.In fact it was the inter actionbetween Tamil scholors writers intelectuals and artists was the highlight. i do not know what is in store for us?.....kashyapan.

  பதிலளிநீக்கு
 9. இது மொழிப்பற்றால் நடக்கும் மாநாடு என்பது சுத்தப் பம்மாத்து. கலைஞருக்கு அரசியல் ஆதாயமும் விளம்பரமும் புகளும் வேண்டி நடத்தப்படுகின்றது. இம்மாநாட்டில் குடும்ப வாரிசு கனிமொழியை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டிற்கு இளவரசியாக அறிவிக்க முனைகின்றனர்.

  பதிலளிநீக்கு
 10. நம்பலாமான்னு கேட்கறீங்களே....அப்புராணிங்க. நீங்க...

  பதிலளிநீக்கு
 11. தொலைக்காட்சி சினிமா உட்பட பிற ஊடகங்களை தமிழ் மண் சார்ந்த தகுதிகளோடு- கலாசார சீரழிவு நோய்களில்லாத சாதனங்களாக்கி அதே சமயம் தமிழ் கலையின் அங்கங்களை சாகடித்து விடாத - சுய கட்டுப்பாடு அமைப்பாக ஆக்கிட தகுந்த ஆலோசனைகளை வழங்கிடும் மாநாடாக அது அமைய வேண்டும்.
  ////////

  நடக்காதது

  பதிலளிநீக்கு
 12. ///ஊனும் உயிரும் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவனுக்கான பிரதிநிதித்துவம் என்றால் என்ன எனும் திறந்த விவாதம் நடக்க இதுவே நல்ல தருணம் ஆகும்.//


  நல்ல தருணம் அல்ல!!! கண்டிப்பாக செய்ய வேண்டும்!!!!
  இலலையன்றால் இந்த மாநாடு தேவை இல்லை!!!

  பதிலளிநீக்கு
 13. kashyaban dont forget the Madurai manadu where cut oput and baners were made for MGR by palakkadai pandi and kaalimuthu.

  No one will forget how the Tanjore maanadu was conducted and there was big fight between alagu tirunavukkarasu, tangamuthu and vaithilingam for cut out place competition.
  aT last Trichy MLA prince only got more place for cut out fixing.

  பதிலளிநீக்கு
 14. Kuppan yahu!Pl.Taste the Vadai.Dont count thulai..Kashyapan.

  பதிலளிநீக்கு
 15. பதிவைப் படித்தவர்களுக்கும், கருத்து சொன்னவர்களுக்கும் என் நன்றிகள்.

  இது புத்தகம் பேசுது பத்திரிகையில் வந்த கட்டுரை. எனது சொந்த புத்தியில் இருந்து புறப்பட்டது அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
  இந்த மாநாடு குறித்து, அக்கறையும், ஆலோசனைகளும் இருந்ததால் இதனை நண்பர்களுக்குத் தெரிவிக்க ஆசைப்பட்டேன்.

  பெரும்பாலான நண்பர்கள், இந்த மாநாடு இப்படியெல்லாம் நடந்து விடாது, இப்படியெல்லாம் நம்பிக்கை தேவையில்லை என்றே சொல்லி இருக்கிறார்கள்.

  அரசின் மீதான் விமர்சனங்களாகவே அவை இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 16. அறிவிய‌ல் த‌மிழ் குறித்த‌ த‌ங்க‌ள் ப‌திவு அருமை, க‌ண‌னியில் த‌மிழின் ப‌ய‌ன்பாட்டை அதிக‌ரிப்ப‌து அல்ல‌து எளிமை ப‌டுத்துவ‌து ம‌ட்டுமே அறிவிய‌ள் த‌மிழ் என்ற‌ பிர‌ம்மையில் நிறைய‌ த‌மிழ் புலிக‌ளின்
  ( இங்க‌ புலி என்று வ‌ல்லுந‌ர்க‌ளை தான் குறிப்பிட்டேன்) க‌ருத்தாக‌ உள்ள‌து.அறிவிய‌ல் த‌மிழ் வ‌ள‌ர்ச்சி என்ப‌து சாதார‌ன‌ ஏழை எளிய‌ ச‌ன‌ங்க‌ளின் எட்டா க‌ணியாக‌வும், ஏக்க‌ பெருமூச்சாக‌வும் உள்ள‌ அறிவிய‌ல் க‌ண்டு பிடிப்புக‌ள் ம‌ற்றும் அறிவிய‌ல் தொழில் நுட்ப‌த்தின் ப‌ய‌ன் பாடுக‌ள் அந்த‌ ம‌க்க‌ளை சென்று அடைவ‌த‌ற்க்கான‌ விணையூக்கியாக‌ செய‌ல்ப‌ட‌ வேன்டும் என்ற‌ புரித‌ல் வேண்டும்

  பதிலளிநீக்கு