நாளை முதல் செல்போன்கள் அனைத்தும் செயலிழந்து போகின்றன என வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகள் என்னவாயிருக்கும்?


-->
முன்பக்கம் � என் கேள்விக்கு என்ன பதில்? , சமூகம் , தீராத பக்கங்கள் , நையாண்டி � என் கேள்விக்கு என்ன பதில்?
Posted by மாதவராஜ் on 8:44 PM // 29 comments
1.காதலர்கள் தற்கொலைசெய்துகொள்வார்கள்
ReplyDelete2.பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
3.இளைஞர்கள் தொங்கிய முகத்துடன் அலைவார்கள்
4.செல்போன் கடை வைத்திருப்பவர்கள் தலையில் துண்டு விழும்.
5.நீங்கள் வலைப்பதிவுகளை மொபைலில் வாசிக்க முடியாமல் அலுவலக பணிகளை கவனிக்க நேரிடும் அபாயம் ஏற்படும் :)
6.கடன் அட்டை விற்பனையாளர்கள் முழி பிதுங்குவார்கள்.
ஒன்றும் பிரச்சனை இல்லை, மக்கள் மாற்று வழி கண்டுபிடித்து விடுவார்கள்.
ReplyDeletePCO/STD Booth வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மீண்டும் உயிர் பிழைப்பார்கள்.
ReplyDeleteசெல்போன்கள் செயலிழந்து போனால்...
ReplyDeleteபேசாமல் இருப்போம். அவ்வளவு தான்.
நாலு நாளைக்கு கஷ்டமா இருக்கும். பிறகு சரியா போகும்.
ஒரு நாளைக்கு ஆறு மணி நேர மின்வெட்டின் போதும், என்ன பண்ணினோம்.
மின்சாரமில்லாம்ம வாழ்ந்தோமே. வாழ பழகிட்டோமே இரண்டரை வருஷங்களா...
கஸ்டமர் கேர் - பாவம்!
ReplyDeleteஇனிமேலு பிச்சைக்காரங்களுக்கு ஒரு ரூபாய் காயின் விழாதுங்கோ! காயின் பாக்ஸ் வச்சிருக்கிறவங்கோ காட்டுலே அடைமழைதான்! :-))
ReplyDeleteஸ்..ஸ்..ஸ்.. அப்பாடா..(பெருமூச்சுதான்) !!
ReplyDeleteமிஸ்ஸுடு கால் கொடுத்து டார்ச்சர் பண்ணுரவங்க தொல்லை இருக்காது.
ReplyDeleteதேவையற்ற பேச்சு தவிர்க்கப்படும். தேவையுள்ள பேச்சில்லாமல் போகும்.
ReplyDeleteசெல்போன் ஒரு தொடர்பு சாதனமாக எளியவர்களையும் சென்றடைந்திருப்பது செல்போனின் வலிமை. வானிலை அறிக்கை, மொபைல் பேங்கிங், விவசாயம் சார்ந்த தகவல்கள், மொபைல் மூலம் ஆர்டர் செய்வது, பணப்பட்டுவாடா செய்வது என்று இதுவரை இல்லாத அளவிற்கு எளியவர்களும் பயனாளியாகியிருப்பது செல்போனால் தான்.
ஆப்பிரிக்க நாடுகளில் மின்னஞ்சல் வசதி கிடைத்திருப்பதே பலருக்கு செல்போனால் தான். இந்தோனேசியாவில் செல்போனில் தான் விவசாயம் சார்ந்த தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இப்படி செல்போன் "Bottom of the Pyramid" என்று சொல்லப்படும் அடித்தட்டு மக்களை அடைந்திருப்பதை கவனிக்க வேண்டும்.
செல்போனின் தொல்லைகளை விடவும் வசதிகளே அதிகம்.
செல்பேசி என்பது உரையாடுவதற்காக என்ற நிலையைத் தாண்டி பாதுகாப்பிற்காக என்று ஆகிவிட்டது.
ReplyDeleteகுறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு செல்பேசி பெருந்துணை.
நடுவழிப்பயண இடையூறுகளில் செல்பேசி தரும் பாதுகாப்பு பெரிது.
செல்தான் கையில் இருக்கிற்தே என்று தைரியமாய் வெளியில் செல்லும் வயதானவர்களும் அதிகம் இன்று.
நீங்கள் குறிப்பிடுவதுபோல நடந்துவிட்டால் வெளிநாடுகளில் இருக்கும் எங்கள் நிலை கவலைக்குரியதாக ஆகிவிடும் மாதவ் அண்ணா.
ReplyDeleteஇங்கு செல் போன்கள் பெரும்பாலும் செயல் இழந்துதான் இருக்கும் மாது.நாட்டில் இருந்து போன் வரும்போது மட்டும் உயிர்க்கும்.ஹல்லோ மட்டும் கேட்க்கும்.பிறகு நாம் செயல் இழந்து விடும்படி இருக்கும். :-)
ReplyDeleteகாஞ்சிபுரம் குருக்கள் மாதிரி ஆட்கள் செய்யும் வேலை வெளிஉலகத்துக்கு தெரியாமல் போகலாம்.
ReplyDeleteபாலியல் தரகர்களின் கடித இலக்கியம் வளரும். அல்லது சிக்னலில் நின்று கையைப்பிடித்து இழுப்பார்கள்.
no sms
ReplyDeleteno problems
enjoy life
இதுவே நான் சென்னையில் இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தால் ஒரு வேளை என் ம்மா வேலைக்கு போகாதேன்னு சொன்னாலும் சொல்லுவாங்க.. :)
ReplyDeleteஎன்னைக்காவது எங்க வாப்பாவோ, தம்பியோ செல்ல வெச்சிட்டு போயிட்டா அவங்க ரொம்ப படபடப்பா ஆகிடுவாங்க. நான் வேலைக்கு கிளம்பும்போது எப்பவும் 'செல்ல எடுத்துட்டியா'ன்னு மறக்காம கேப்பாங்க.
கையடக்க கணிணி வந்தாச்சி அண்ணா
ReplyDeleteசாட் பரவ ஆரம்பிச்சிடும் எல்லோரிடமும்
இன்னும் சொல்ல போனா கம்ப்யூட்டர் விலை தான்
அதிகம் அதுவும் உற்பத்தி அதிகமான விலை குறைந்து விடும்
ஏற்கனவே voip(voice over internet protocol) வந்து செல்போன் ஆதிக்கம் குறைய ஆரம்பிச்சிருச்சு
உண்மையில் செல்போன்கள் செயலிழக்கும் சொன்னா சேட்டிலைட்கள் செயல் இழந்தா GSM போன்கள் மட்டும் தான்
செயலிழக்கும் CDMA போன்களுக்கு பாதிப்புகள் இல்லை
சேட்டிலைட்கள் செயல் இழந்தா இப்ப இருக்கிற முக்கால்வாசி டெக்னாலாஜிக்கள் பயன்படாமல் போகும்.
சந்தோசமான செய்தியா இருந்தா தொலைக்காட்சி தொல்லை இருக்காது
செல்போன் டவர்களால் சிறு உயிரினங்கள் அழிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு ஆரம்பிததுவிட்டது
இந்த குற்றச்சாட்டுகளை ஏற்று அரசாங்கமா நிறுத்துறதுக்குள்ள
வோடபோன் விளம்பரத்துக்கு வர்ற நாய் சோறு வெக்க ஆள் இல்லாம செத்து போய்டும்,சூர்யா ஏர்செல் விளம்பரத்துக்கு வர மாட்டாரு...சேல்ஸ் மேன்லாம் நிம்மதியா மேனேஜர் தொந்தரவு இல்லாம வேலைக்கு போவாங்க..எங்க இருக்கீங்கன்னு கேட்டு டார்ச்சர் பண்ற பொண்டாட்டிகல்டேர்ந்து அப்பாவி புருசங்க தப்பிசிருவாங்க...கடைசீல சன் டிவி குழுமம் ஒரு புது புறா பண்ணை ஆரம்பிசிருக்கறதா விளம்பரம் போடும்...அதோட முதல் புறாவ சோனியா காந்தி பறக்க விடுவாங்க..நம்ம வழக்கம் போல புறா வாங்க லைன்ல நிப்போம்..அன்னிக்கு செல் போன மறந்துருப்போம்.. இதான் மாதவராஜ் சார் உங்க கேள்வியோட விளைவுகளா இருக்கும்..!!
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteபதிவர்கள் அனைவருமே விளைவுகள், தீர்வுகள் குறித்து சிறப்பாக பின்னூட்டம் இட்டு உள்ளர்கள்.
மக்களின் சிண்டஹனையை சற்று எழுப்பிய உங்களின் இந்த பதிவிற்கு நன்றிகள் பல.
I forgot my kuppanyahoo id password, hence using this id
Life will be jolly without unnecessary phone calls and chat.
ReplyDeleteFine more time with family members..
But difficult to contact with loved ones in abroad. my brother is calling every alternative days..
We will accustomed to it..
மறுபடி தபால்காரர் எப்போ வருவார்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவோம்.
ReplyDeleteஅம்பிகா அவர்களின் கருத்துதான் எனக்கும்..
ReplyDeleteமீண்டும் கடித இலக்கியம் வளரும்..
செல் போன் மூலமா இணைய இணைப்பு உள்ளவங்க. இடுகைகளை வாசிக்க முடியாது.
ReplyDeleteஅன்பின் மாதவராஜ்
ReplyDeleteஇன்றைய சூழ்நிலையில் அலைபேசி இல்லை எனில் வாழ்க்கை ஸ்தம்பிக்கும் அளவிற்கு விளைவுகள் இருக்கும். இல்லை என மறுப்பதிற்கில்லை. ஏனெனில் அலை பேசி பயன் படுத்துபவர் அதிகம். தொடர்பு எண்கள் அனைத்துமே - தரைவழித் தொடர்பு உட்பட - அலைபேசியிலேயே சேமிக்கப்படுகின்றன. நினைவிலையோ குறிப்புகளாகவோ சேமிக்கப்படுவதில்லை. அலைபேசி நம்மைச் சோம்பேறிகளாக்கி விட்டது. புகைப்படமா - பாடல்களா - காணொளியா - குறுஞ்செய்திகளா - அலாரமா - வாய்ஸ் மெயிலா - அழைப்புகள் பட்டியலா - இணையத் தொடர்பா -நாட்காட்டியா - அலைபேசிகளின் தொடர்பா (புளூ டூத் ) - விளையாட்டுகளா - இத்தனை வசதிகளும் ஒரே அலைபேசியில் - பழகி விட்டோமே - இல்லாமல் உயிர் வாழ இயலுமா ?
சிந்திப்போம் - ஆனால் செயலிழக்க வழி இல்லை - அலைபேசிகள் செயலிழக்காது. - அப்படியே செயலிழந்தாலும் - இனி இல்லை என்ற நிலை வந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுச் சாதனங்கள் இருக்கின்றன - சில தினங்களில் - சில மாதங்களில் - செயல் படத் துவங்கி விடுவோம். சில வசதிகள் குறையும். அவ்வளவு தான்.
நாம் தான் எது வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - இல்லை எனறாலும் இல்லாமலேயே வாழ்வோம்.
அயலகங்கள் மாதிரி, அலைபேசியோ வேறு ஏதோ தொழில் நுடபம் இல்லை என்றால் மூச்சு கூட விட இயலாத நிலையில் நாம் இல்லை. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் கலை அறிந்தவர்கள் நாம்.
நட்புடன் சீனா
1)தமிழ் வளரும்.
ReplyDelete2) போஸ்ட்மேன்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.
3) இளையதலைமுறை எந்நேரமும் லேண்ட்லைனே கதியென்று இருப்பதாக பெற்றோர்கள் புகார் கூறுவார்கள்.
4) கண்ணுக்குத்தெரியாத நாய்ச்சங்கிலி கழற்றப்பட்டதாக நாஞ்சில் நாடன் மகிழ்வார்.
5) ஐ-பாட் விற்பனை அதிகரிக்கும்.
6) அஜீத்-விஜய் மானம் கொஞ்சம் காக்கப்படும்.
7) சாங் டெடிகேஷன் எனும் சானல் கடலை அதிகரிக்கும்
அட யோசித்து எழுதினால் 400 பக்கங்களுக்கு தேறும் போலிருக்கிறது. கொஞ்சம் உபத்திரங்கள் இருந்தாலும் செல்போன் ‘இண்டிஸ்பென்சபிள்’தான்! எனக்கு பைத்தியமே பிடித்து விடும்.
இப்படியும் BLOG கில் எழுதலாம்????
ReplyDeleteஅருமையான பொழுது போக்கு!!!!
But I am very Busy!!!
உங்களின் அடுத்த பதிவு என்ன???
1. தற்போது ம்யூசியமில் கொண்டு போய் வைத்திருக்கும் எங்கள் கல்லூரி ஹாஸ்டல் அலுவலகக் கறுப்பு டெலிஃபோனுக்கு மீண்டும் ராஜ மரியாதை கிடைக்கும்.
ReplyDeleteஞாயிறுகளில் அதைச் சுற்றி நைட்டியின் மேல் துப்பட்டா அணிந்து மாணவிகள் மணிக்கணக்காய் தேவுடு காப்பார்கள். (வீட்டிலிருந்து வரும் அழைப்புக்காக)
2. லன்ச் டைமில் மீண்டும் ஹாஸ்டல் வராந்தாவில் கடிதங்கள் இறைந்து கிடக்கும். எனக்கேதாவது லெட்டர் வந்திருக்காப்பா என்ற ஏக்கக் குரல்களும் கேட்கத் தொடங்கும்.
(ஸாரி, கொசுவத்தி தவிர்க்க முடியல.)
3.காதலர்களிடையேயும் கணவன் மனைவிகளுக்குள்ளும் வீண்பேச்சு, சண்டை குறையும். :)) கூடவே சின்னச் சின்னச் சந்தோஷப் பரிமாற்றங்களும்.
4. போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டும் வழக்கமுடைய மாக்கான்களுக்குக் கூடக் கொஞ்சம் ஆயுள் பிச்சை அளிக்கப்படும்!
எனக்கு வேலையில்லாமல் போகும்!
ReplyDeleteபதில் அளித்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteசமீபத்தில் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படட்ம் பார்த்தேன். அதில் பாக்கியராஜ் மற்றும் ரத்தி கயிறு கட்டிய தீப்பெட்டி வைத்துக்கொண்டு போன் மாதிரி பேசுவார்கள்.எதிர்கால சந்ததி இது குறித்து என்ன நினைப்பார்கள் எனத் தோன்றியது. அப்போதுதான் இப்படி ஒரு கேள்வி சட்டென எழும்பியது.
அடேயப்பா.... எத்தனை விதமான கருத்துக்கள், பார்வைகள்! சிரிப்பாகவும், சிலிர்ப்பாகவும் இருக்கு.
தொகுத்து வைக்கலாம்.
செல்போன் மூன்றாவது காதாக உடலோடு இணைந்து விட்டது. திடீரென்று அவ்வாறு ஏதாவது நடந்தால் மனநல மருத்துவமனையில் கூட்டம் அதிகரிக்கும்.
ReplyDelete