சொல்லித் தெரிவதில்லை - 3

அவன் கண்விழித்தான். அவள் எழுந்துபோய்விட்டிருந்தாள். படுக்கையில் சில பூக்கள் இருந்தன. குண்டு குண்டாயிருந்த அந்த அத்தை நேற்றிரவு இங்கே செண்ட்டை அடித்து,  “இப்போ உள்ள போங்க மாப்பிள்ளை..” என கண்ணடித்து அனுப்பிவைத்தபோது இருந்த கிறங்க வைக்கும் வாசம் அறை முழுக்க இன்னும் இருந்தது. அய்யோ, அந்த அத்தை அவனைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. “நிறைய சாப்பிட்டு தூங்கிறாதீங்க மாப்பிள்ளை...”, “கொஞ்சம் கடலைமிட்டாய் சாப்பிடுங்க மாப்பிள்ளை. இன்னிக்கு நல்லது..” இப்படியே கலாய்த்திருந்தார்கள். பெண்ணின் சித்தியா, பக்கத்து விட்டு அக்காவா என்று சரியாகத் தெரியவில்லை அவனுக்கு. நேற்றிரவு என்ன நடந்தது என்பதையெல்லாம் அவள் இப்போது அந்த அத்தையிடம் சொல்லியிருப்பாளோ என்றிருந்தது. வெளியேச் செல்ல கூச்சப்பட்டான்.

சிறிது நேரத்தில் அவளே வந்தாள். முகத்தைப் பார்க்க அவனுக்கு முடியவில்லை. காபியை வைத்துவிட்டு, கொஞ்சம் தயங்கி நின்ற மாதிரியிருந்தது, சட்டென்று பொங்கி வந்த சிரிப்பை அடக்கி, வாயைப் பொத்திக்கொண்டு வேகமாகச் சென்றாள். படபடவென்று ஆனான். “என்ன, மாப்பிள்ள இன்னும் தூங்குறாரா..” என்று அத்தையின் குரலும், “இல்ல முழிச்சுட்டாங்க’ என்று அவள் சொல்வதும் லேசாய் காதில் கேட்டது.

அவன் வெளியே வந்தபோது சரியாக அந்த அத்தைதான் எதிரே சில பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். “ஆனாலும் நீங்க இவ்வளவு நல்லவராயிருப்பீங்கன்னு நெனைக்கலய மாப்பிள்ள...” என்று போகிற போக்கில் சொன்னார்கள். குத்தியது என்றாலும் அதற்குள்ளாகவா எல்லாவற்றையும் அவள் சொல்லியிருப்பாள் எனவும் பட்டது. அத்தையை தவிர்ப்பது என்று உறுதி செய்துகொண்டான். குழந்தைகளுடன் பேசுவது, அவர்களுடன் விளையாடுவது என்றிருந்தான். “மாப்பிள்ள குழந்தைங்க கூடவே இருந்து குழந்தையாகவே ஆயிராதீங்க. கொஞ்சம் எங்கள மாரி பெரியவங்கக் கிட்டயும் பேசுங்க, பழகுங்க..” என்றார்கள் அத்தை வலிய வந்து. எப்போது இந்த வீட்டை விட்டுத் தங்கள் வீட்டிற்கு செல்லலாம்  என்றிருந்தது அவனுக்கு.

மதியம் சாப்பிட்டு முடித்ததும், வெத்திலையை கொண்டு அவன் முன் வைத்துவிட்டு “இந்த ஆடு, மாடு, கோழிக்குத் தெரிறது கூட உங்களுக்குத் தெரியலயா” என்று வேறு அத்தை கேட்டார்கள். அவமானமாய் இருந்தது. அவள் எல்லாவற்றையும் சொல்லி விட்டாள் என்பது புரிந்தது. அவளை அழைத்து, “இதையெல்லாமா சொல்வார்கள்....” என்று முறைப்பாக சொல்ல நினைத்து முணுமுணுத்து முடித்தான்.

சாயங்காலத்திலிருந்து அத்தையின் அட்டகாசங்கள் அதிகமாயின. இப்போது அவனைப் பார்க்கும் போதெல்லாம் “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத் தங்கமே” என்று பாட ஆரம்பித்தார்கள். அய்யோ, அய்யோ என்றிருந்தது அவனுக்கு. வீட்டிலும் சிலர், “என்ன இந்தப் பாட்டையே திரும்பத் திரும்ப பாடுறீங்க..” என்று கேட்டார்கள். அத்தை சிரித்துக் கொண்டு அவனைப் பார்த்தார்கள்.

அவளுக்கோ தனது மனிதனை பார்க்க பாவமாயிருந்தது. ஆனாலும் ரசித்தாள். எப்படியும் அவனே ஞானம் பெற்றுவிடுவான் என்பதையும் அந்த அத்தையே அவளிடம் சொல்லி இருந்தார்கள்.

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. எவ்வளவு அழகாக சொல்லாமல் சொல்லுதல் கைவரப் பெற்றிருக்கிறீர்கள் நீங்கள்

    :)

    பதிலளிநீக்கு
  2. this is Very very important ""post"".The nation is going to gain many things from this article..This article is the need of the hour..Otherwise the nation would have lost many things..One of the best article in last 10 years---vimalavidya

    பதிலளிநீக்கு
  3. நேசமித்ரன்!

    நன்றி.


    விமலவித்யா!
    மிக்க நன்றி தோழர். ஏன் ‘நாட்டோடு’ நிறுத்திவிட்டீர்கள். ‘உலகத்துக்கே’ என்று சொல்லி இருக்கலாமே....! :-)))))

    பதிலளிநீக்கு
  4. //this is Very very important ""post"".The nation is going to gain many things from this article..This article is the need of the hour..Otherwise the nation would have lost many things..One of the best article in last 10 years---vimalavidya//

    இது தேசத்தை பற்றிய இடுகை என்று எங்காவது சொல்லி இருக்கிறாரா? இதையும் தேசத்தையும் எதற்காக முடிச்சு போடுகிறீர்கள்? எந்நேரமும் தேசிய கீதம் பாடிக்கொண்டிருப்பீர்களா? குத்தம் கண்டு பிடிக்கறதுக்குன்னே சில பேர் கிளம்பிவிடுகிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  5. In film parlance comofloged kissing will be shown.In the nextshot the lady love run for the watercloset and profusly vomit.It used to baffle me.It took weeks for me to identify.Any way there are people who may enjoy such writings.(The mappillais ignorence thrown over him depicts the young lads innocence.)There are also people who may despice such writings.Mathavji!have patience.Afterall vimala is our corade.ILLAIYA....kashyapan

    பதிலளிநீக்கு
  6. மேலே நேசமித்ரன் சொன்னதை வழிமொழிகிறேன் மாதவ் அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. உங்க்ள் பதிவு மிகவும் அருமை!!!!!
    ரசித்தேன்..... ரசித்தேன்....!!!!!

    பதிலளிநீக்கு
  8. என்ன மாது.
    இந்த அத்தைகள் என்ன இப்படி அடாவடி பண்ணுகிறார்கள்.
    நல்லாத்தானே இருக்கு மாது.

    பதிலளிநீக்கு
  9. nanaraaka eluthi irukkeenka. kathai solluvathil ungkalai ponru nerthi vendum. athu mika selaarukke vaaikkum. nanri .

    பதிலளிநீக்கு
  10. மன்மதக் கலைதான். முதலிரவுகளின் காமடிகள் சொல்லி மாளாது. அறியாமையிலிருந்து சிறகு பருத்து வரும் காமம் அப்புறம் பட்டாம்பூச்சியாகிறது. அத்தைகள் வாழ்க!
    இந்த மாதிரியான இலைமறை காய்மறை பகிர்தலில்களில்தான் உண்மையான கலவிக்கல்வி ​சொல்லித்தரப்படுகிறது. டிவியில் உட்கார்ந்து​கொண்டு 'நான் உங்களுக்கு அப்பா மாதிரி.. எங்கிட்ட வாங்கப்பா.. கரெக்ட் பண்ணிடறேன்' என்று அழுகும் சித்த ​வைத்தியர்களிடம் எதுவும் இல்லை.

    நல்ல பதிவுங்க மாது!

    பதிலளிநீக்கு
  11. ரசித்தேன்!

    அதை விட வெடிச்சிரிப்பை வரவழைத்தது ஜெகநாதனின் பின்னூட்டத்தின் கடைசி வரி! :-D

    பதிலளிநீக்கு
  12. நிலா ரசிகன்!
    விமலவித்யா அருமையான தோழர். அவர் என்னிடம் வேறு முக்கிய விஷயங்கள் எழுத வேண்டுமென்று எதிர்பார்க்க்கிறார்.... எப்போதும் என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்..அவ்வளவுதான்.


    ஜ்யோவ்ராம் சுந்தர்!
    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.


    காஸ்யபன்!
    தோழர் நான் விமலவித்யா அவர்கள் சொன்னதை ரசிக்கத்தான் செய்தேன். அதுதான் ஸ்மைலி போட்டேன்.


    செ.சரவணக்குமார்!
    நன்றி தம்பி.


    பொன்ராஜ்!
    நன்றி.....
    ரசனைக்கும் நன்றி...



    காமராஜ்!
    ரசிக்கிற அடாவடிகள்தானே தோழா!



    மதுரை சரவனன்!
    நன்றி.



    ஜெகநாதன்!
    சந்தோஷம். நன்றி.


    அம்ருதா!
    நன்றி.


    ஜோ!
    நன்றி.
    ஜெகநாதன் எழுதிய கடைசி வரி.
    //நல்ல பதிவுங்க மாது//
    :-)))))))

    பதிலளிநீக்கு
  13. அண்ணே,
    வேணும்னே வம்பு பண்ணலாமா? நான் சொன்னது முதல் பத்தியின் கடைசி வரி.

    //
    டிவியில் உட்கார்ந்து​கொண்டு 'நான் உங்களுக்கு அப்பா மாதிரி.. எங்கிட்ட வாங்கப்பா.. கரெக்ட் பண்ணிடறேன்' என்று அழுகும் சித்த ​வைத்தியர்களிடம் எதுவும் இல்லை.
    //

    பதிலளிநீக்கு
  14. அண்ணா!உங்க பதிவில் இருந்த குசும்பை விட.................. //ஜோ!
    நன்றி.
    ஜெகநாதன் எழுதிய கடைசி வரி.
    //நல்ல பதிவுங்க மாது//
    :-)))))))//

    இது சூப்பர்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!