சென்னையில் இரண்டு, கோவில்பட்டியில் ஒன்று!

ம்சி புக்ஸ் சார்பில் சென்னையில், அண்ணாசாலையில்,  புக்பாயிண்ட் அரங்கத்தில் (ஸ்பென்சர் எதிரில்) இரண்டு அமர்வாக புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

முதல் அமர்வு ஜனவரி 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.

1. எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் ‘கனகதுர்கா’வை இயக்குனர் மகேந்திரன் வெளியிட பத்திரிகையாளர் ஞானி பெறுகிறார். கவிஞர் யுகபாரதி மற்றும் இயக்குனர் சிம்புத்தேவன் அவர்களும் புத்தகம் குறித்து உரையாற்றுகிறார்கள்.

2.எழுத்தாளர் க.சீ.சிவக்குமாரின் ‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’யை கவிஞர் சுகுமாரன் வெளியிட கு.கருணாநிதி பெறுகிறார். கவிஞர் இரா.சின்னச்சாமி புத்தகம் குறித்து உரையாற்றுகிறார்.

3.எழுத்தாளர்.லட்சுமணப்பெருமாள் அவர்களின் கதைகளின் தொகுப்பை பத்திரிகையாளர் விஜயசங்கர் வெளியிட, கவிஞர் நா.முத்துக்குமார் பெறுகிறார். இயக்குனர் ராம் புத்தகம் குறித்து உரையாற்றுகிறார்.

இரண்டாம் அமர்வு ஜனவரி 31ம் தேதி அதே புக் பாயிண்ட் அரங்கில் ஜனவரி 31ம் தேதி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது.

1. சா.தேவதாஸ் மொழிபெயர்த்திருக்கும் லூயி புனுவலின் ‘இறுதி சுவாசம்’ புத்தகத்தை இயக்குனர் பாலுமகேந்திரா  வெளியிட கவிஞர் இந்திரன் பெறுகிறார். எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் உரையாற்றுகின்றனர்.

2. சா.தேவதாஸ் மொழிபெயர்த்திருக்கும் ஹென்றி ஜேம்ஸின் ‘அமெரிக்கன்’ நாவலை எழுத்தாளர் எஸ்.சண்முகம் வெளியிட, எழுத்தாளர் கிருஷாங்கினி  பெறுகிறார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பத்திரிகையாளர் கடற்கரய் அவர்களும் உரையாற்றுகிறார்கள்.

3.எழுத்தாளர் உதயஷங்கரின் ‘பிறிதொரு மரணம்’ சிறுகதைத் தொகுப்பை ஓவியர் ட்ராஸ்கி மருது வெளியிட பால்வண்ணம் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். மணிமாறன் அவர்கள் உரையாற்றுகிறார்.

நிகழ்ச்சிக்கு பாரதி.கிருஷ்ணகுமார் தலைமை தாங்க, பவா.செல்லத்துரை நன்றியுரையாற்றுகிறார்.

 

ன்னொரு புத்தக வெளியிடு  ஜனவரி 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் (ராஜ் மஹால், ராமதாஸ் பூங்கா அருகில்) மாலை 5 மணிக்கு நடக்கிறது. எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி மற்றும் நாடகக் கலைஞர் முருகபூபதி அவர்களின் தந்தை எம்.எஸ்.சண்முகம் அவர்கள் எழுதிய ‘பெரிய வயல்’ நாவல் வெளியீடுதான் அது. 75 வயதுக்கும் மேலான திரு.எம்.எஸ்.சண்முகம் அவர்களின் மூன்றாவது படைப்பு இது. இதற்குமுன் ‘பூட்டுப் பாம்படம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பும், ‘நிலம் மறுகும் நாடோடிகள்’ என்னும் நாவலையும் தந்திருக்கிறார். நிலம் அளக்கும் சர்வேயராயிருந்த அவரின் வாழ்வனுபவங்கள் ததும்பி நிற்கும் எழுத்துக்கள்தாம் இவை.

periya nilam

உற்சாகமான ஒரு இலக்கிய சந்திப்பு நிச்சயம் என்பதாய், நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒரு பெரும் பட்டியல் இருக்கிறது அழைப்பிதழில்.

எழுத்தாளர்கள் மேலாண்மை பொன்னுச்சாமி, வண்ணதாசன், எஸ்.ஏ.பெருமாள், சு.வெங்கடேசன், வேல.ராமமூர்த்தி, எஸ்.லட்சுமணப்பெருமாள், ஆதவன் தீட்சண்யா, யவனிகா ஸ்ரீராம், ஷாஜஹான், மாதவராஜ், காமராஜ், ஜனகப்ரியா ஆகியோரும் கவிஞர்கள் சமயவேல், தேவேந்திரபூபதி, கிருஷி, இலட்சுமிகாந்தன் ஆகியோரும் பேராசிரியர்கள் தொ.பரமசிவன் மற்றும் சிவசுப்பிரமணியன் ஆகியோரும் அன்று வாழ்த்திப் பேசுகிறார்கள். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில்  தோழர்.ஆர்.நல்லக்கண்ணு மற்றும் தோழர்.பி.சம்பத் அவர்களும் இருக்கிறார்கள்.

புத்தக வெளியிட்டிற்கு இடையேவும், முடிந்த பிறகு நடக்கும் அன்பான விசாரிப்புகளுக்காகவும், உரையாடல்களுக்காகவும் காத்திருக்கிறேன். ஞாயிறு இரவெல்லாம் நீளும் சந்திப்பு, திங்கட்கிழமை காலையில் கண்களை சொக்க வைக்கும். இருக்கட்டும். இது போன்ற நிகழ்ச்சிகள்தானே நாட்களை சுவராசியமாக்குகின்றன.

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மகிழ்ச்சியாக இருக்கிறது

    அங்கு இல்லாதது வருத்தமளிக்கிறது

    பதிலளிநீக்கு
  2. வாசிக்கும்போதே மிக சந்தோஷமாக உணர்கிறேன் மாதவ் அண்ணா. இப்போதி சிவகாசியில் இல்லாமல் போய்விட்டோமே என ஏங்க வைத்துவிட்டீர்கள். விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சென்னைக்கு அருகில் இருப்பதால் 'புக் பாயின்ட்' நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

    தகவலுக்கு நன்றி மாதவராஜ்.

    பதிலளிநீக்கு
  4. வாசிப்பு மட்டும் இல்லாவிட்டால்.. நினைக்கவே தலை சுற்றுகிறது.. அப்புறம் எதுக்கு மனுச பொறவி..

    பதிலளிநீக்கு
  5. புத்தக வாசிப்​பை இ​ணையம் ​தொலைத்துவிடும் என்ற கவ​லை​ ​மெல்லிய புக்மார்க்காக மாறிவிட்டாற் ​போலிருக்கு. புதுப் புத்தகங்களின் ​வெளியீடும், புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளும் ​தெம்பளிக்கின்றன!

    பதிலளிநீக்கு
  6. கோவில்பட்டி விழாவில் பாமரன் அவ்ர்கள் குடும்பத்துடன் பங்கேற்கிறார்.கே.ஜி பாஸ்கரனும் வருகிறார்.

    பதிவுக்கு மிக்க நன்றி தோழா

    பதிலளிநீக்கு
  7. பதிவைப் படிக்கும் போதே உற்சாகம் தொற்றிக்கொள்கிறது :)

    பதிலளிநீக்கு
  8. ஆமாம், தோழர்.தமிழ்ச்செல்வன்! அவர்கள் இருவரையும் குறிப்பிடாமல் விட்டு விட்டேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மண்குதிரை!
    செ.சரவணக்குமார்
    கிருஷ்ணபிரபு!
    ரிஷபன்!
    ஜெகநாதன்!
    அமிர்தவர்ஷிணி அம்மா!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. புக்பாயிண்ட் அரஙக்த்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், வம்சி புத்தக வெளியீடுகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து நேற்று இரவு ஒரு பதிவில் தெரியப்படுத்தி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!