மாதவராஜ் பக்கங்கள் – 19

நிறைய பேர் செத்துக்கொண்டு இருக்கிறோம். உணவு இல்லை. தண்ணீர் இல்லை. போன் இல்லை. எதுவும் இல்லை. எங்களை யார் காப்பாற்றுவார்கள்” என ஒரு இளைஞன் கதறுகிறான். ஹைட்டி என்னும் அந்த சிறு தீவீல் நடந்த பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கில் அதிகமானோர் இறந்து போயிருக்கின்றனர். மீட்பு நடவடிக்கைகள் சரியாக இல்லை. எல்லா இடங்களிலும் மனித உடல்கள். ஹைட்டியின் அதிபர் பிரவல் ‘சேதங்களும், இழப்புகளும் கற்பனை செய்ய முடியாதவை” என்கிறார். சர்வதேச சமூகத்தின் உதவியை இறைஞ்சியபடி ஹைட்டி நிற்கிறது. பூமியின் உள் மடிப்புகளில் ஏற்படும் சிறு அசைவுகள் அதன் மேற்பரப்பில் எவ்வளவு பெரிய நாசத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதனை அறியமுடியாத மனித சமூகம் பெரும் இழப்புகளை சந்தித்தபடியே யுகங்களைத் தாண்டி பயணம் செய்து கொண்டு இருக்கிறது!

நேற்று அதிகாலையிலேயே பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று காலையில்தான் துயரச்செய்தி தெரியும்.  ‘இப்படித்தான் நாம் இருக்கிறோமா’என ஒருவித அவமானத்துடன் கனத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். செல் இசைக்கிறது. எடுக்கிறேன். “ஹேப்பி பொங்கல்” என்கிறார் திருநெல்வேலியிலிருந்து ஒரு நண்பர். நானும் பதிலுக்கு தமிழில் சொல்கிறேன்.

 

வீட்டுக்கு வெளியே பொங்கல் வைக்க வேண்டுமென்று ஆசையெல்லாம் கதைக்காகவில்லை. ஒவ்வொரு தடவையும் சொல்லிப் பார்ப்பேன். அம்முவுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது. சென்னையின் வளர்ப்பு அவள். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருமுறை, “ரொம்ப ஆசைப்படுறீங்க, இந்த தடவை நீங்க சொல்ற மாதிரி வச்சிருவோம் ஆனா ஒங்க பாடு!” என்றாள். அதன்பிறகுதான் அதில் உள்ள சிரமங்கள் புரிந்தது. அடுப்புக்கு செங்கல்களை மூன்று பக்கமும் வைத்துவிடலாம். ஆனால் விடாமல் எரியும் நெருப்புக்கு விறகு? காலையில்தான் நிலைமை உறைத்தது.

our pongal

அப்போது எங்கள் வீட்டிற்கு அருகில், இப்போது போல நிறைய வீடுகள் வரவில்லை. அங்குமிங்கும் சுற்றி கொஞ்சம் சுள்ளிகளைப் பொறுக்கினோம். வீட்டின் பின்பக்கத்தில் கொஞ்சம் சிரட்டைகள் இருந்தன. காய்ந்து போன தென்னை மட்டையும் கிடைத்தன. ஒருவாறு தேற்றி, அடுப்பு பற்ற வைத்து பொங்க ஆரம்பித்தோம். மகளும், மகனும் சுற்றி உட்கார்ந்து எரிய எரிய விறகு வைத்தார்கள். பொங்கல் அரிசி, வெல்லம், இதர சமாச்சர்ரங்கள் என அம்முதான் அங்குமிங்குமாய் சிரமப்பட்டாள். கண்களில் எரிச்சல் உண்டாக்கியது புகை. ஆனாலும் சந்தோஷமாய் இருந்தது. பொங்கலும் சரியான பக்குவத்தில் வரவில்லை என்பது வேறு விஷயம். பக்கத்து வீடுகளுக்கு ‘எங்கள் வீட்டுப் பொங்கல்’ என்று கொடுப்பதற்கு தயக்கமாகி விட்டது.

அடுத்த பொங்கலுக்கு வெளியே வைத்து பொங்க வேண்டாம் என அம்மு சொல்லிவிட்டாள். ‘எல்லாவற்றுக்கும் நீங்களே இருந்து, முதலிலேயே சகல ஏற்பாடுகளும் செய்வதாக இருப்பின் சரி’ என்றாள். என் பக்கம் பந்தை நகர்த்திவிட்டாள். நான்கு வருடங்களாக அப்படியே இருக்கிறது அந்தப் பந்து. கேஸ் ஸ்டவ்வில் பொங்கல் இதோ பொங்கிக் கொண்டு இருக்கிறது.

 

ருகில் என்.ஜீ.ஓ காலனியிலிருந்து சில இளைஞர்கள் நேற்று காலையில் வீட்டிற்கு வந்தார்கள். “சார். ஒவ்வொரு தடவையும் பொங்கல் விழான்னு குழந்தைகள் டான்ஸ், போட்டிகள் வைப்போம். இந்த தடவை பட்டி மன்றம் வைக்கலாம் என்று இருக்கிறோம். நீங்கள் பேச வரவேண்டும்” என்றனர். நான் பட்டிமன்றம் பேசுவதெல்லாம் கிடையாது என மறுத்து, காமராஜ் மற்றும் சில நண்பர்கள் பேசுவார்கள் என்றேன். “என்ன தலைப்பு” என கேட்டேன். நீங்களே சொல்லுங்கள் என்றனர். ‘நவீனச் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறதா, கொண்டாடவில்லையா’ என்பது போல வைக்கலாமே என்றேன். பிடித்துப் போயிருக்க வேண்டும். சரியென்று ஏற்பாடு செய்யப் புறப்பட்டு விட்டார்கள். முன்னர் விவசாயத்தை கொண்டாடினோம். விவசாயிகளைக் கொண்டாடினோம். இப்போது விவசாயிகளை யார் கொண்டாடுகிறார்கள். மாடுகள் எல்லாம் போய் டிராக்டரும் இன்னும் கதிர் அறுக்கும் மெஷின்களும் வந்து விட்டன. மாட்டுப் பொங்கலில் என்ன அர்த்தம் இருக்கிறது. நண்பர்கள் இன்று மாலை பேசுவதை கேட்கும் ஆவலில் இருக்கிறேன்.

இதோ ஹீ... ஹீயென்று சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் பொங்கல் கொண்டாட்டமாக ஆரம்பமாகிவிட்டது. நான் வா.மு.கோமுவின் “சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” நாவலை கையில் எடுத்துக் கொண்டேன். இன்னும் 70 பக்கங்கள் போல படிக்க வேண்டியிருக்கிறது.

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ////ஹைட்டி என்னும் அந்த சிறு தீவீல் நடந்த பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கில் அதிகமானோர் இறந்து போயிருக்கின்றனர்.////

    இறந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்தையும் தாண்டிவிட்டதாக செய்தியில். தொலைக்காட்சியில் பார்க்கவே பயமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு / பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பொங்கல் தின வாழ்த்துகள் சார்

    பதிலளிநீக்கு
  4. பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  5. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் மட்டுமா....

    எல்லா தொலைக்காட்சிகளிலும் பேசிப் பேசி தீர்க்கிறார்கள்

    இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. பொங்கலின் ருசி தெரிகிறது குழந்தைகள் முகத்தில்.

    பொங்கல் வாழ்த்துகள்..

    ஹைட்டி.. :(

    பதிலளிநீக்கு
  7. அவ்வளவு ஒரு சந்தோசமான பொங்கள் போல் இருந்தது மாது,இந்த பொங்கள்..

    :-)

    அருமை.சந்தோசம் நிறைந்திருக்கட்டும் மக்கா.

    பதிலளிநீக்கு
  8. ரசித்தேன். பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நவாஸூதீன்!
    ஆமாம், மிக வருத்தமளிக்கும் செய்தி. அதைப் பற்றி நினைத்தாலே அதிர்ந்து போகிறது......

    அன்புடன் அருணா!
    பொங்கல் வாழ்த்துக்கள்.

    ஆரூரன்!
    மிக்க நன்றி.


    ஞானசேகரன்!
    நன்றியும், வாழ்த்துக்களும். தாங்களும் பொங்கலை சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள்தானே!

    அம்பிகா!
    உன் பதிவைப் பார்த்தேன். நாமெல்லாம் சேர்ந்து கொண்டாடிய காலங்கள் நினைவுக்கு வந்தது.

    கதிர்!
    ஆமாம், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்.


    கையேடு!
    குழந்தைகளுக்குத்தான் பொங்கலும், பண்டிகையும் முதலில். இல்லையா?


    பா.ரா!
    உங்களோடு பேசிய அந்தக் கணக்கள் இன்னும் கரும்பின் தித்திப்பாய்.


    deepa!
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!