-->

முன்பக்கம் , , � கண்களை ஈரமாக்கிய ஒரு எஸ்.எம்.எஸ்

கண்களை ஈரமாக்கிய ஒரு எஸ்.எம்.எஸ்

 

தனது புத்தம் புதுக்காரை அவர் துடைத்துக் கொண்டு இருந்தார்.
அருமை மகனோ கல்லைக் கொண்டு காரின் இன்னொரு பக்கத்தில் கிறுக்கிக் கொண்டு இருந்தான்.
கோபம் வந்த தந்தை மகனின் விரல்களைப் பிடித்து, கையில் கிடைத்தது ஸ்பானர் என்பது கூட அறியாமல் மாறி மாறி கோபத்தில் அடித்து விட்டார்.
ஆஸ்பத்திரியில் கட்டுப் போட்டு இருந்த தன் கையினைப் பார்த்து “என் விரல்கள் திரும்பவும் வளருமா, அப்பா” என்றான் மகன்.
அழுகையை அடக்கிக் கொண்டு வெளியே வந்த தந்தை காரைக் கால்களால் ஓங்கி மிதித்தார்.
மகன்காரன் காரில் கிறுக்கி இருந்த எழுத்துக்கள் அப்போது அவரைப் பார்த்தன.
“ஐ லவ் யூ டாடி”

பி.கு: தூத்துக்குடியிலிருந்து பொன்ராஜ் அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸில் இருந்த குட்டிக்கதை இது. யார் எழுதியதோ தெரியவில்லை. காலையில் படித்தேன். சட்டென்று கண்கள் ஈரமாகின. நினைக்கும்போதெல்லாம் கலங்கிப் போகிறேன்.

Related Posts with Thumbnails

23 comments:

 1. மாதவராஜ் சார்,

  நான் ஏற்கனவே இதை எழுதியுள்ளேன்.

  இதொ அதற்கான லிங்க்:

  http://www.iniyavan.com/2009/03/blog-post_31.html

  ReplyDelete
 2. குட்டிக்கதையாக தெரியவில்லை. குட்டிக்கவிதையாகவே தெரிகிறது.

  படிக்கும் ஒவ்வொருவருக்கும் உங்களின் நிலை ஏற்படுவது இயல்புதான்.

  ReplyDelete
 3. kankalai iramakkum kutti kathai. ithargumun engo padiththa nabagam. iruppinum napagaththirgu nabagamuttiya thagalukku nanri.
  thodarttum...

  natpudan,
  S.kumar

  ReplyDelete
 4. unmaiyaagave alugai vanthuruchu

  ReplyDelete
 5. மனிதனின் மிகப் பெரிய எதிரி, கோபம். அதற்கு இந்தக் கதை மிகப் பெரிய உதாரணம்.

  ReplyDelete
 6. என்ன கொடுமையான நிகழ்வு. படிக்கவே சகிக்கமுடியவில்லை. இது கற்பனையாகவே இருந்துத் தொலையட்டும்.!

  ReplyDelete
 7. ///என்ன கொடுமையான நிகழ்வு. படிக்கவே சகிக்கமுடியவில்லை. இது கற்பனையாகவே இருந்துத் தொலையட்டும்.///

  சரியாய் சொன்னிங்க சார்.நினைத்து பார்க்கவே முடியல.

  ReplyDelete
 8. வாஸ்த்தவம் மாதவன்....: : -((

  ReplyDelete
 9. உள்ளத்தை தொட்ட பதிவு .....நன்றி.

  ReplyDelete
 10. இது ஆங்கிலத்தில் கொஞ்ச நாட்கள் முன்பு மெயிலில் வந்துகொண்டிருந்தது. கற்பனையாகவே இருக்கட்டும்.

  ReplyDelete
 11. அன்பு மாதவராஜ்,

  அழகான குறியீட்டுக்கதை. நிறைய படிக்க வேண்டும் இது போல. உறவுகளை சரியாக புரிந்து கொள்ள பெரியவர்களுக்கான நீதிக்கதைகள்.

  வாழ்த்துக்கள்

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 12. கண்கள் ஈரமானது உண்மைதான்...

  ReplyDelete
 13. செம டச்சிங் சார்.....
  சான்ஸே இல்லை....
  :-(

  ReplyDelete
 14. இதை நான் ஈமெயிலாக வாசித்திருக்கிறேன், கலங்க முடியாமல் இருக்க முடியவில்லை:(

  ReplyDelete
 15. THANK YOU VERY MUCH !!!

  PONRAJ- TUTICORIN

  ReplyDelete
 16. வந்து இந்த உருக்கமான கதையோடு தங்களை கரைத்துக்கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

  உலகநாதன் சார், நான் உங்கள் பதிவை அறிந்திருக்கவில்லை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 17. இதையும் கூட படித்துப் பாருங்கள். என்னுடைய ஸ்டைலில் எழுதியிருக்கிறேன்.

  http://www.nilacharal.com/ocms/log/07280807.asp

  ReplyDelete