மதுரை முன்னாள் எம்.பி மோகன் அவர்கள் காலமாகிவிட்டார்

 

mohan mp உடல்நலம் குறைவாயிருந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மதுரைத் தொகுதியின் முன்னாள் எம்.பி மோகன் அவர்கள் சிறிது நேரத்துக்கு முன்பு காலமாகிவிட்டார். 1999 முதல் 2009 வரை இருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியாய் இருந்த எளிமையான அரசியல்வாதி அவர். யாரும், எந்த நேரத்திலும் அணுகக்கூடியவராய் இருந்தவர். அவரோடு இருந்த சில தருணங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. துயரம் தருகின்றன. சாதாரண மக்களின் கஷ்டங்களில் பங்குகொண்டு அதைத் துடைப்பதற்கு தன்னால் ஆன பங்காற்றுவதில் தன் வாழ்நாட்களை கழித்தவர். அவருக்கு வயது அறுபது.

mohan pm1

எங்கள் சங்கப் பொதுக்குழுவிற்கு அவர் வந்திருந்த போது..

 

1999 ஜனவரி 21ம் தேதி சண்டே இந்தியன்’ பத்திரிகையில் அவரைப்பற்றி இப்படி சொல்லப்பட்டு இருந்தது.

“முன்பெல்லாம் நாடாளுமன்றத்திற்கு எனது அப்பா நடந்தே போவார். இப்போது அவரிடம் சைக்கிள் ஒன்று உள்ளது. டில்லியில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்வது போல அவரது புகைப்படம் ஒன்றை மலையாள பத்திரிகை வெளியிட்டிருந்தது” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மோகனின் இளைய பெண் பாரதி.
புகைப்படக் கலைஞர்களைப் பொறுத்தவரை, அது டில்லியாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி சந்தோஷமாக கிளிக் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் கட்சியால் வழங்கப்பட்ட பஜாஜ் எம்80 வண்டியில்தான் இன்னும் அவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு முறை, ரேசன் கடையில் பொருள் வாங்கிக் கொண்டு செல்லும் வழியில் வண்டி நின்று விட்டதால் இறங்கி அவரே சரி செய்ய முற்பட்டார். அந்த வழியாக சென்று கொண்டிருந்த நாளிதழின் புகைப்படக்கலைஞர் அதைப் படம் பிடித்தார். அடுத்த நாள் முதல் பக்க புகைப்படமானது.

டில்லியில் இருக்கும்போது நாடாளுமன்றத்திற்கு நடந்து செல்வதைப் பார்க்கலாம். மூன்று முறை தேர்தலில் தோல்வியுற்று, 1999 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினரான பி.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கத்தில் தனது பணியை 1973 ஆம் ஆண்டு துவக்கினார். கடந்த சில ஆண்டுகளில் மதுரையின் வளர்ச்சிக்கு அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை மதுரைக்காரர்கள் சொல்லி வருகிறார்கள்.

மதுரையில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தனது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியை இந்தத் தொகுதிகளுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கிறார். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கித் தருகிறார். இந்தப் பணிகள் நடைபெறுவதையும் தொடர்ந்து கண்காணிக்கிறார்.
கிராமம் ஒன்றில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வந்தது. அப்பணியை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் சிமெண்டுடன் அதிக மணலைக் கலந்து வந்தார். உங்கள் பணம் எவ்வளவு வீணாகிறது பாருங்கள் என்று மக்களிடம் மோகன் கூறினார். மக்களே அந்த ஒப்பந்ததாரர்களை தூக்கி எறிந்தார்கள்.

மழை பெய்து கொண்டிருந்த நாள் ஒன்றில் ஜோதி கணேஷ் என்ற வங்கி ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் ஒரு நபர் மட்டும் வேட்டியை மடித்துக் கொண்டு அதை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் மோகன்தான்.

யாரிடமிருந்தும் அவர் பணத்தை வாங்கியதில்லை என்பதற்கு நான் சாட்சியாகும். அவருக்கு எதிரான கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், இதைச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகம் குறிப்பிடுகிறார்.

அப்பழுக்கற்ற அந்த அரசியல்வாதிக்கு நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம்!!!

கருத்துகள்

39 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மிகவும் வேதனையாக உள்ளது.

    சாவுக்கு அப்படி என்னதான் பசியோ..? இப்படி நல்ல மனிதர்களையெல்லாம் ஈர்த்துக் கொண்டால் உலகில் மனிதம் என்னாவது..?

    என்னமோ போங்க.. வெறுப்பா இருக்கு..!

    பதிலளிநீக்கு
  2. காணக் கிடைக்காத அரசியல் தலைவர்களில் ஒருவர் திரு மோகன்.

    கண்ணீர் அஞ்சலி...

    -சிவா

    பதிலளிநீக்கு
  3. திரு.மோகன் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவரின் எளிமை மதுரைக்காரர்களுக்கு நன்கு புரியும். அவரது இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதல்கள்

    பதிலளிநீக்கு
  4. உண்மை தான் நண்பரே,

    பல நேரங்களில் அவ்ரை நேரடியாக கண்டிருக்கிறேன்,மிகவும் எளிமையானவர்.தொகுதி மக்களுக்கு எப்பொழுதும் மரியாதை செய்தவர். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    பதிலளிநீக்கு
  5. திரு மோகன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

    மதுரையில் கட்சி அலுவலகம் அருகே என் வீடு இருப்பதால் அடிக்கடி அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். மிகவும் எளிமையான் மனிதர்.

    மதுரையின் பல பேருந்து நிறுத்தங்களும், தண்ணீர் தொட்டிகளும், அரசு மருத்துவமனை கட்டிடங்களும் அவர் புகழ் பாடி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் எளிமையான மனிதர்!

    ரோடோர டீகடைகளில் கூட அவரை பார்க்கலாம்!

    நடந்து முடிந்த தேர்தலின் போது மூன்று கோடி வாங்கி ஒதுங்கி விட்டார் என வதந்தி பரவியது!

    அண்ணாரின் மறைவு அவரது களங்கத்தையும் சேர்த்து துடைத்து சென்றது!

    எனது ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  7. பெரிய அதிர்ச்சி மாதவன்...ஆழ்ந்த அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  8. ஆழ்ந்த வருத்தத்துடன்,,,,,,,
    பழனி எல்.ஐ.சி ஊழியர் சங்கம்

    பதிலளிநீக்கு
  9. மிகச் சிறந்த மக்கள் ஊழியரை, சிறந்த பண்பாளரை மதுரை மக்களும், மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழக அரசியலும் இழந்து விட்டது மிகப் பெரும் அதிச்சியைத் தருகிறது. மரணம் இயற்கை என்றாலும் இப்படி இடையிலேயே எம்மை கலங்கடிக்கிறதே! அன்புத் தோழரை இழந்து வாடும் சக தோழமைகளுக்கு ஆழ்ந்த இரங்களும், வீர வணக்கமும்.

    பதிலளிநீக்கு
  10. ஆழ்ந்த வருத்தத்துடன்
    பழனி எல்.ஐ.சி ஊழியர் சங்கம்

    பதிலளிநீக்கு
  11. ஆழ்ந்த அனுதாபங்கள். திருப்பூரில் என் அண்ணனோடு சந்தித்த ஞாபகம் உண்டு.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் வருத்தமாக இருக்கிறது...

    அஞ்சலிகள்...

    பதிலளிநீக்கு
  13. எளிமை என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தகளில் ஒன்று உதிர்ந்து போனது...


    :(

    பதிலளிநீக்கு
  14. இந்த காலத்தில் இப்படியொரு அரசியல்வாதியா?
    வியக்கவைக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. நல்லதோர் தலைவர். உண்மையில் அவர் இழப்பு பேரிழப்புதான். வேதனையிலும் வேதனை.

    பதிலளிநீக்கு
  17. ரொம்பவும் வருந்துகிறேன் மாதவராஜ் அண்ணா... அவர் நேர்மையானவர் மட்டுமல்ல... மதுரையின் உண்மையான அஞ்சா நெஞ்சனும் கூட. அதிகாரத்திற்கு மண்டியிட்டவர் அல்லர் அவர். மதுரைக்காரர்களுக்கு பெரிய இழப்பு!

    பதிலளிநீக்கு
  18. பல வருடங்களுக்கு முன்னர் தோழர் மோகனை அவரது கட்சி அலுவலகத்தில் முதன்முதலில் சந்தித்தபோது ஜெர்மனியின் சமூக, அரசியல், மற்றும் நீதி/நிர்வாக விடயங்களை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.பின்னர் சில தடவைகள் அவருடன் தொலைபேசியில் பேசியதுண்டு. மதுரையில் புதிய நீதிமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டபோது எங்கள் உரையாடலைக் குறித்து, ஜெர்மனியின் நீதித்துறை நடைமுறைகளைப் பற்றி அவர் பேசியதாக அறிந்தேன். இறுதியாக அவரையும் திருமதி மோகனையும் சென்னை விமானநிலையத்தில் பார்த்ததை நினைத்துக்கொள்கிறேன். அமைதிகொண்ட அவரது முகம் அப்படியே நிற்கிறது. இப்படித்தான்....

    பதிலளிநீக்கு
  19. அவர் ஒரு இலக்கணம்....பொது வாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு, எளிமைக்கு, பொறுமைக்கு, அஞ்சாமைக்கு இன்னும் இன்னும்....
    இது ஒரு பேரிழப்பு நம் தேசத்திற்கு...
    என் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல வருத்தமாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள் :-(

    பதிலளிநீக்கு
  20. மதுரைல ரொம்ப அறிமுகம் ஆனவர், கடைசி தேர்தலில் மதுரை மக்களை ரொம்பவே நம்பினார்.

    நாம ஏன் ஒருவர் இறப்புக்கு அப்புறம் தான் அவரை பற்றி நல்ல விஷயம் பத்தி பேசுறோம் ? , நாலு மாசத்துக்கு முன்னாடி தான் தேர்தலில் அவரை கொன்னோம்.

    பதிலளிநீக்கு
  21. :(


    அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...அஞ்சலிகள்!

    பதிலளிநீக்கு
  22. நல்ல மனிதரின் இழப்பு, ஈடு செய்ய இயலாத இழப்பு...

    பதிலளிநீக்கு
  23. KAMARAJAR-II, LIFE COMES TO THE END!!1

    பதிலளிநீக்கு
  24. SECOND KAMARAJAR-II LIFE COMES TO THE END!!!

    PONRAJ-TUTICORIN.

    பதிலளிநீக்கு
  25. மறைந்த தோழர் மோகன் அவர்களின் எளிமையைப் பற்றி பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. மிகவும் எளிமையான நேர்மையான ஒரு சமூகபோராளியை இந்த சமூகம் இழந்துவிட்டது. அரசியல் வாழ்க்கையில் ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்து மறைந்த தோழர் பெ.மோகன் அவர்களுக்கு வீரவணக்கம்

    பதிலளிநீக்கு
  27. //அப்பழுக்கற்ற அந்த அரசியல் வாதிக்கு நாம் அனைரும் அஞ்சலி செலுத்துவோம்!!!//

    அப்பழுக்கற்ற அரசியல் வாதிக்கு
    அஞ்சலி செலுத்துவது நம் கடமை.

    மதுரை முன்னாள் எம்.பி.மோகன் அவர்களை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கும்,இழந்து வாடும் மதுரை மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  28. துயரத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், ஆஞ்சலி செலுத்திய உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  29. கம்யூனிஸ்டுகளுக்கு மரணமே இல்லை.
    காசுவாங்காத மோகனுக்குத் தி.மு.க.வினர் அஞ்சலி செய்தது சாத்தான் வேதம் ஓதினாப்போல.

    பதிலளிநீக்கு
  30. நண்பர்களே ..

    மோகன் ஏன் தேர்தலில் தோற்றார் என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    அவர் ஆளும் கட்சியை சேர்ந்தவரல்ல• ஆகவே ஆளும்கட்சிக்கு எதிரான மக்களது கோபம் அவரை தூக்கி எறியவில்லை. முந்தைய இரு தேர்தல்களிலும் பணமுதலைகளை எதிர்த்துதான வெற்றி பெற்று இருக்கிறார். அப்படியும் அழகிரியை தேர்வு செய்த மக்கள் மோகனை அதனை விட மோசமாக கருதியது எதனால்..

    ப‌ணம்தான் என்றால் இருமுறை பணக்கார்ர்ரகளை எதிர்த்து மோகன் வெற்றிபெற்றுள்ளார்,

    மிரட்டல் என்றால் கூட அது அதிமுக வின் கோட்டை. கடந்த தேர்தலில் அவர்களை எதிர்த்துதான் வென்றார்.

    கட்சி கூட்டணிதான் அவரை தோற்க வைத்த்து என்றால் இதே அதிமுக கூட்டணியில்தனா 99 ல் வென்றார்..

    தோழர்களே சிந்தியுங்கள்

    -mani

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!