-->

முன்பக்கம் , , , � நோபல் பரிசு பெற்றவரின் அசிங்கமான குடும்பக்கதை!

நோபல் பரிசு பெற்றவரின் அசிங்கமான குடும்பக்கதை!

 

புதிரும், சுவாரசியமுமாய் தொடங்கி, ‘என்னடா இது’ என்று கேலியாய் தொடர்ந்து, படித்து முடித்த பிறகு ஒரு மௌனச்சோகத்தில் ஆழ்ந்து போக வேண்டி இருக்கும். ‘என் குடும்பம்’ என்று அந்த எழுத்தாளர் எழுதிய சிறுகதை இது!  ஊர்க்காரர்களின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் ‘அசிங்கமான குடும்பத்தின்’ கதை. முதலில் படியுங்கள். பிறகு பேசுவோம்.

சரியாக பேச முடியாதவள் என் அம்மா. பாட்டிக்கு கண்களில் பூக்கள் விழுந்திருக்கின்றன. ஒரு கண்ணில் சாம்பல் பூ. இன்னொன்றில் பச்சை. தாத்தாவுக்கு ஓதம்.

இன்னொரு பெண்ணுக்குப் பிறந்த இன்னொரு குழந்தை அப்பாவுக்கு உண்டு. அந்தப் பெண்ணும், அந்தக் குழந்தையும் எனக்குத் தெரியாது. அந்தக்குழந்தை என்னைவிட மூத்தவள். அதனால்தான் நான் இன்னொருவருக்குப் பிறந்தவளாம்.

அப்பா கிறிஸ்மஸ் பரிசுகளை அந்தக் குழந்தைக்கு கொடுத்துவிட்டு, அதன் தகப்பன் வேறொருவன் என்று அம்மாவிடம் சொல்கிறார்.

புதுவருடத்திற்கு எனக்கு சாந்தா கிளாஸிலிருந்து தபாலில் பணம் வரும். ஆனால் அம்மா நான் வேறொருவனுக்குப் பிறந்தவள் இல்லை என்கிறாள்.

பாட்டி வேறொருவனுடன் காதலும், உறவும் கொண்டிருந்தாளாம். தாத்தாவுக்கு நிலம் இருந்ததால் அவரை திருமணம் செய்து கொண்டாளாம். அம்மா வேறொருவருக்கும், மாமா வேறொருவருக்கும் பிறந்தவர்களாம். இரண்டு வேறொருவரும் ஒரே ஆள் அல்ல.

அதனால்தான் தாத்தா, வேறொரு குழந்தையின் தாத்தாவாக இருக்கிறார். இதே தாத்தா வேறொரு குழந்தைக்கும் தாத்தாவாம். இரண்டு வேறொரு குழந்தையும்  ஒரே குழந்தை அல்ல.

என்னுடைய பாட்டியின் அம்மா சின்ன வயதில் இறந்து விட்டாளாம். அதுவும் இயற்கை மரணம் இல்லையாம். தற்கொலையாம். மரணமும் இல்லை, தற்கொலையும் இல்லை, கொலை எனவும் சொல்கிறார்கள்.

அவளது மரணத்திற்குப் பிறகு, தாத்தாவின் அப்பா உடனடியாக இன்னொரு பெண்ணை மணந்து கொண்டாராம். அவள் திருமணம் ஆகாமலேயே வேறொருவனுடன் குழந்தை பெற்றுக் கொண்டு இருந்தாளாம். தாத்தாவின் அப்பாவோடு அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆன பிறகு அவளுக்கு இன்னொரு குழந்தை பிறந்ததாம். அது வேறொருவனுக்குப் பிறந்ததாம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் தாத்தாவின் அப்பா பக்கத்தில் உள்ள சின்ன டவுணுக்குச் செல்வாராம். அங்கு இன்னொரு பெண்ணொடு அவருக்குத் தொடர்பு இருந்ததாம். அவர் எல்லோருக்கும் தெரியுமாறு அந்தக் குழந்தையின் கைபிடித்து வருவாராம். வேறொரு மொழியில் உரையாடுவாராம். ஆனால் அந்தப் பெண்ணோடு யாரும் பார்த்ததில்லையாம். அவள் விடுதியில் இருந்த விலைமகளாம். அதனால்தான் தாத்தாவின் அப்பா அவளை வெளியில் அழைத்து வருவதில்லையாம்.

ஒரு மனிதன் வேறொரு பெண்ணோடு, வேறொரு குழந்தையோடு அவனது ஊருக்கு வெளியே அப்படி இருந்ததற்கு பச்சையான உடல் இச்சைதான் காரணம் என்று  கேவலமாகவும் அசிங்கமாகவும் ஊரில்  பேசுகிறார்கள்.

herda mueller இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பெற்றிருக்கும் 56 வயது நிரம்பிய ஹெர்டா முல்லர் அவர்கள் 1982ம் ஆண்டில் எழுதிய ‘நிடருங்கன்’ என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பில் உள்ள மூன்றாவது கதைதான் இது. இந்த சிறுகதைத் தொகுப்பை அப்போது ருமேனியாவின் கம்யூனிச அரசு தடை செய்தது. 1984ம் ஆண்டு ஜெர்மனியில் இப்புத்தகம் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.  தவிப்பும், தனிமையும் மிக்க ஒரு குழந்தையின் நினைவில் படர்ந்திருக்கும் சுயவாழ்க்கைக் குறிப்புகளாகவே இத்தொகுப்பு இருந்திருக்கிறது.

1953ம் வருடம் ருமேனியாவில் பிறந்த ஜெர்மானியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹெர்டா முல்லர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் படைகளால் கடும் உழைப்பிற்கான முகாமுக்கு இவரது குடும்பம் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. அந்த கடந்த கால ருமேனிய அனுபவம் அழிக்க முடியாதது என்று கூறியுள்ளார் ஹெர்டா முல்லர். "தி லேன்ட் ஆஃப் கிரீன் பிளம்ஸ்" என்னும் அவரது நாவல் ருமேனியாவில் சியூஸ்கெயூவின் சர்வாதிகார ஆட்சியில் ஜெர்மனியினர் கண்ட அடக்குமுறையை சித்தரிப்பதாய் அமைந்து பல பரிசுகளை வென்றிருக்கிறது.

ருமேனியாவிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறி ஜெர்மனிக்கு குடி பெயர்ந்தாலும் இவரது கவிதைகளிலும், கதைகளிலும் தொடர்ந்து அடக்குமுறை, சர்வாதிகாரம் போன்ற கதைக்கரு இடம்பெற்று வந்துள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர். நோபல் பரிசுக்காக இவரை தேர்வு செய்த நீதிபதிகளும் "உடமையிழந்தவர்களின் நிலக்காட்சியை கவிதையின் செறிவுடனும், வெளிப்படையான உரை நடையிலும்" சித்திரப்படுத்தியுள்ளார் என்றே புகழ்ந்திருக்கின்றனர்.

கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச அரசாங்கங்கள் விழுந்து விட்ட இருபதாவது ஆண்டினைப் போற்றும் வகையில், வேண்டுமென்றே ஹெர்டா முல்லருக்கு இந்தப் பரிசு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்  சில  விமர்சனங்கள்  இருக்கின்றன.  சோஷலிச  அரசாங்கங்களின்,  ‘சுதந்திரமற்ற தன்மைகள்’ குறித்து பெரும் கவலை கொண்ட அவர் முதலாளித்துவ அமைப்பின் சீரழிவுகள் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பது தெரியவில்லை. அறிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

நோபல் பரிசு பெறும் ஹெர்டா முல்லருக்கு நாம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். இந்தப் பரிசினைப் பெறும் பனிரெண்டாவது பெண்மணி அவர். அடக்குமுறை எங்கிருந்தாலும், எந்த வடிவத்திலிருந்தாலும் அதனை எதிர்க்கிற, விமர்சனம் செய்கிற அந்த எழுத்தாளரைப் பாராட்டுவோம். அவர் சுட்டிக்காட்டி இருக்கும் குறைபாடுகளைக் களைந்து, புதிய அமைப்பாக சோஷலிசம் ஒருநாள் பரிணமிக்கத்தான் செய்யும். அதில் ஹெர்டா முல்லரின் பங்களிப்பும் இருக்கும் தானே!

*

Related Posts with Thumbnails

15 comments:

 1. ஒரே கள்ள உறவாக இருக்கிறது ...........ஆனாலும் அவருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //"உடமையிழந்தவர்களின் நிலக்காட்சியை கவிதையின் செறிவுடனும், வெளிப்படையான உரை நடையிலும்" //

  இதைப் பாராட்டுவோம்

  ReplyDelete
 3. aaaaaaa.... I dont have any words to express it.

  ReplyDelete
 4. அவருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. onrum thonravillai
  avarin marra ezhuththukkalaiyum patikka veentum

  ReplyDelete
 6. அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
  நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..

  ReplyDelete
 7. அவருக்கு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 8. எழுத்தாளார் அறிமுகம் அருமை...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சகபயணிகள் அனைவருக்கும் நன்றிகள். 300வது சகபயணியாய் இனைந்திருக்கும் அகநாழிகை அவர்களுக்கு சிறப்பு நன்றி. பயணத்தைச் சேர்ந்து தொடருவோம் மக்களே....

  ReplyDelete
 10. வணக்கம்.
  ஏராளமானவர்கள் படித்து அமைதியாக சென்றிருக்கிறார்கள் (அசிங்கமான கதை என்ற தலைப்பு இருந்ததாலா?). சிலர் பொதுவாக கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
  இதென்ன கதை?
  இதை ஏன் எழுதணும்?
  அதில் அப்படி என்ன சொல்லப்பட்டு இருக்கு?
  இதை ஏன் இவர் இங்கு குறிப்பிடணும்? என கேள்விகள் எழுந்திருக்க வேண்டும். ஆனால், என்னமோ, எதோ என அமைதியாய் இருப்பது உத்தமம் என நினைத்திருக்கலாம்.
  விஷயம் இதுதான்:
  ஹெர்டா முல்லர், ருமேனியாவில் ஜெர்மானியக் குடும்பத்தைச் சேர்ந்த மைனாரிட்டி. ருமேனிய அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போக, உடன்பட மறுக்கிறார்கள். எனவே, அந்த ஊர், அந்த குடும்பத்தைத் தூற்றி, அவதூறுகளை பரப்பி, அசிங்கமான குடும்பமாக சித்தரிக்கிறதாம். இதைத்தான் வேதனையோடு ஹெர்டா தனது கதையின் மூலம் குறிப்பிடுகிறார்

  ReplyDelete
 11. கதை ஒரு மாதிரியா இருக்கேன்னு நினைத்தேன். பின்னூட்டத்தை படித்த பின் தான் புரிந்தது. பிடிக்கவில்லையென்றால் கதை கட்டி விடுவதில் உலகமெங்கும் மக்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இத்தனையையும் தாண்டி ஜெயித்த அவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இதய சுத்தியோடு வெளிப்பட்ட வாழ்த்து. யார் தவறு செய்தாலும் இடிப்பாரை வேணும். ஏற்றுக்கொள்ளவும் வேணும்.

  ReplyDelete
 13. அன்பு மாதவ் கதையை இப்பத்தான் படித்தேன். ஏற்கனவே ருமேனியாவைல் அக்காலத்தில் நடந்தவைகளை பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்ததால் இக்கதைக்கு பின் ஏதோ இருக்கிறது என தோன்றியது.
  பல பதிவுகளை படித்தாலும் பொதுவாக பின்னூட்டங்கள் அதிகம் போடுவதில்லை.
  ஏனோ நீங்கள் குறிப்பிட்டப்பிறகு இப்பின்னூட்டத்தை போடவேண்டும் என தோன்றியது.

  இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் ஒபாமாவுக்கு கொடுத்ததில் தான் எனக்கு இன்னும் உடன்பாடு இல்லை.

  ReplyDelete
 14. Sorry for the offtopic post.
  Since you used the original Michael Moore's letter on Obama's Nobel prize, here is another one from him, softening the stand.
  Should be a good read.
  http://www.huffingtonpost.com/michael-moore/get-off-obamas-back-secon_b_316480.html

  ReplyDelete
 15. அம்பிகா!
  முதலிலேயே நன் பின்னூட்டம் இட்டிருக்க வேண்டும். அல்லது பதிவிலாவது உணர்த்தியிருக்க வேண்டும்.

  காமராஜ்!
  சரியாகச் சொன்னாய் தோழா!


  மஞ்சூர் ராசா!
  வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.


  Itsdifferent!
  பதிவு படித்தீர்களா. தகவலுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete