மாதவராஜ் பக்கங்கள் 12

 

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘உலகநாயகன் உங்களில் ஒருவன்’ என்னும் நிகழ்ச்சி விஜய் டி.வியில் இன்று காலை நடத்தப்பட்டது. பார்வையாளர்களை நிரப்பி வைத்து கமல்ஹாசனிடம் கேள்விகள் கேட்பதாக நிகழ்ச்சி அமைத்திருந்தனர். சர்ச்சைகளும், விவாதங்களும் நிரம்பிய ‘உன்னைப் போல ஒருவன்’ படம் பற்றி கமல்ஹாசன் என்னதான் சொல்கிறார் என அறியும் பொருட்டு பார்த்தேன். விளம்பரங்கள், ஒரு சினிமா நட்சத்திரம் குறித்த பார்வையாளர்களிடம் இருந்த மயக்கங்கள், அவர்கள் கேட்ட அபத்தமான கேள்விகள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுதான் உட்கார வேண்டி இருந்தது. நிகழ்வில் கமல்ஹாசன் பேசியவை ஆபத்தானவையாக இருந்தன. கமல்ஹாசன் என்னும் கலைஞன் மீது நான் இதுவரை வைத்திருந்த பல மதிப்பீடுகள் தரைமட்டமாயின.

‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு விஷயங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி நான் விமர்சனம் செய்திருந்தபோதிலும்,  கமல்ஹாசன் படக்கதைகளின் எப்போதுமான குழப்பங்கள் அந்தப்படத்தில் மேலும் சிக்கலாகி இருப்பதாக உணர்ந்தேன். படத்தில் வேண்டுமென்றே முன்வைக்கப்பட்டு இருந்த வசனங்களும், காட்சிகளும் பிரச்சினைக்குரியவை என்ற போதிலும் ஒரு திறமையான கலைஞரை சட்டென்று முத்திரை குத்தி விடக்கூடாதே என்ற எச்சரிக்கையோடு அடங்கினேன். பிறப்பின் அடிப்படையில் அவரை விமர்சனம் செய்வதை விடுத்து, அவரது படைப்பின் தளத்தில் நின்று மட்டுமே விமர்சனம் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

வலைப்பக்கத்தில் ’உன்னைப் போல் ஒருவன்’ பற்றிய எனது புரிதல்களையும், கருத்துக்களையும் எழுதியவுடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர் ஒருவர் என்னிடம் கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டார். “படத்தை ஒழுங்கா பாத்துட்டுத்தான் எழுதினீங்களா தோழர்! வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் இடத்தில், சிகப்பு வயரையும், நீல வயரையும் சேர்த்துவிட்டு, பச்சை வயரை துண்டித்து விடுங்கள் எனச் சொல்லுவதாக வசனம் வருகிறதே, பச்சைக் கலர்னு எதை கமல்ஹாசன்  சொல்றார் தோழர்?’ என்று கேட்டார். A wednesdayவில் இல்லாத காட்சிதான் அது. விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சியில் அந்தக் கேள்வி எப்படியோ வந்துவிட்டது. அதற்கு, “பச்சைக்கலரை சேர்த்து விடுங்கன்னு சொன்னா மட்டும் பிரச்சினை தீர்ந்துருமா” என கமல்ஹாசன் வேகமாகச் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. இதுவா பதில்? நிறத்தோடு குறியீடு செய்து ஏன் சிந்தனைகள் வரவேண்டும்.?

படத்தில் காமன்மேன் துப்பாக்கி எடுப்பதை நியாயப்படுத்திய கமல்ஹாசன், இங்கே நிகழ்ச்சியில் காந்தியின் அஹிம்சை குறித்து புகழாரம் செய்தார். Mob violence  இருக்கிற இடத்தில் துணிச்சலாக சிலர் அதைத் தடுக்க முற்படுவதற்கு தனித்தைரியம் (bravery என்னும் ஆங்கிலச் சொல்லை பயன்படுத்தினார்) வேண்டும் என்றார். காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை, அந்தக் கூட்டத்தில் யாரும் அடித்துக் கொல்லவில்லை, கூட்டத்தின் கோபத்தையும் தடுத்து, அவரைப் பாதுகாப்பாக பிடித்து வைப்பதற்கு சிலர் இருந்தார்களே என்று சொன்னதும் விஜய் டிவியின் அரங்கத்தில் பலத்த கைதட்டல். கமல்ஹாசன் வழக்கம்போல் குழப்புகிறாரே என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போது ரௌத்திரம் குறித்து விவாதம் வந்தது. “முஸ்லீம்களின் கண்முன்னால் பெரும் கூட்டம் வந்து வன்முறையாட்டம் நிகழ்த்துகிறது. அந்த முஸ்லீமுக்கு ரௌத்திரம் வரும்தானே?” என்று ஒரு பெண் தயங்கித் தயங்கி கேட்டதற்கு கமல்ஹாசன் சட்டென்று “உண்மைதான். முதலில் அந்தக் கூட்டத்துக்கு ஏன் ரௌத்திரம் வருகிறது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது” என்று சொல்லிச் சிந்திக்க வைத்தார். “நாம் ஒருபக்கம் இல்லாமல் சகலப் பக்கங்களிலும் நின்று உண்மையத் தேட வேண்டியிருக்கிறது” சாதுரியமாகப் பேசவும் செய்தார்.

இப்போது கமல்ஹாசனைப் பார்க்க பயமாய் இருந்தது எனக்கு. காந்தியைக்கொன்ற இந்துவை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்கிறார். (இந்தக் காமன்மேனுக்கு கோட்சேவை விசாரணையின்றி உடனேக் கொல்ல வேண்டும் என கோபம் வரவில்லை!). முஸ்லீம்களைக் கொன்ற இந்துக்களின் கோபத்தில் என்ன நியாயம் என்று அறிய வேண்டும் என்கிறார். ஆனால் முஸ்லீம்களின் கோபத்தை மட்டும் துப்பாக்கியால் விசாரணையின்றி உடனடியாகத் தீர்த்துக் கட்டவேண்டும் என்கிறார். சினிமாவுக்கு வெளியேவும் கமல்ஹாசன் யாராக இருக்கிறார் என்பது இப்போது அப்பட்டமாக தெரிந்து விட்டது.

இன்னும் நிறையப் பேசினார். படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் வருவதையொட்டி விவாதங்கள் எழுந்த போது, ‘ஓலைச்சுவடித் தமிழை இன்னும் கட்டிக்கொண்டு இல்லாமல், செல்போன் ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார். உடனே தமிழை புறக்கணிக்க வேண்டும் எனச் சொல்லவில்லை என்றார். செல்போனிலும், கணனியிலும் கூட தமிழ் தனக்கான இடம் பெற்றுக்கொண்டு இருப்பதை அறியாதவரா அவர்? ஆங்கிலத்தை தவிர்க்க முடியாமல், ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையை உலகம் ஏற்படுத்தியிருந்தாலும் கமலிடம் வெளிப்பட்ட தொனி மோசமானது. எந்த மொழி மீதும் நமக்கு துவேஷம் வேண்டியதில்லை. அதிலும் நம் தாய்மொழி மீதா? ‘வானம் அறிந்ததனைத்தும் வளர்தமிழ் அறியும்’ என்றும், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல அறியக் காணோம்’ என்றும் பாடிய  மகாகவி வார்த்தைகளை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது. இந்த தேசத்தில் முதன்முதலில் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு படிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் இந்து மதத்தில் தீவீரமாய் இருந்தவர்களே. ஆங்கிலம் படித்து, ஆங்கிலேயனிடம் கரிசனத்தைப் பெற அவர்கள்தான் முயற்சித்துக் கொண்டு இருந்தார்கள். ஆங்கிலத்தைப் படிக்கவே முடியாது என்று அதையும் ஒரு போராட்டமாக நடத்தியவர்கள் முஸ்லீம்களே என்னும் வரலாறும் கூடவே நினைவில் ஓடுகிறது!

விஜய் டி.வியின் இந்த நிகழ்ச்சியை நடத்திய கோபி செய்த குறுக்கீடுகள் தாங்க முடியாதவை. விவாதங்களை முக்கிய இடத்தை நோக்கி நகரவிடாமல் பண்ணிய அலம்பல் எரிச்சலைத் தந்தன. எதையெல்லாம் எடிட் செய்து ஒளிபரப்பினார்களோ, தெரியாது. அர்த்தமற்று எழுந்த கேள்விகளுக்கே கமல்ஹாசன் கொட்டித் தீர்த்த வார்த்தைகளில் ஒருவித வன்மம் தெரிந்தது. தன்னை பெரும் அறிவுஜீவியாக நிலைநிறுத்திக்கொண்டு அவர் ‘கீதா உபதேசம்’ செய்து கொண்டிருந்தார். (படம் குறித்து எழும் நியாயமான கேள்விகளை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் இவரிடம் கேட்க முடிந்தால் என்னவெல்லாம் சொல்வாரோ!) மும்பை குண்டுவெடிப்பில் ரெயில்வே ஸ்டேஷனில் மாட்டிக்கொண்டு நேரில் பார்த்த ஒருவர் பார்வையாளர்களில் இருந்தார். அந்தக் கொடுமையை பெரும் வேதனையோடு விவரித்தார். கமல்ஹாசன் கண்கள் கலங்குவதாய் காண்பித்தார்கள். ஆஹா, எப்பேர்ப்பட்ட நடிகர்!

தங்கள் முன் இருப்பவர் கமல்ஹாசன்தானா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்ட விடலைகளே பலர் பார்வையாளர்களாய் இருந்தார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், ஒருவர் “தலைதெறிக்க அந்த சந்தோஷத்தில் ஓட வேண்டும் போலிருக்கிறது” என்றார். ஒருவர் கமல்ஹாசனைப் பார்த்த அதிசயத்தில் அழவேச் செய்தார். நிகழ்ச்சியின் முடிவில் நானும் மனசுக்குள் அழுதேன். அம்மணமாகிப் போன கமல்ஹாசனைப் பார்த்து!

*

கருத்துகள்

66 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நிகழ்ச்சியை இன்னொரு தடவை பாருங்கள் அவர் A wednesday ல் உள்ள இந்துத்துவா பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார். கமலை எதிர்க்கவேண்டும் எனப் பார்த்தால் இப்படித்தான் முட்டையில் மயிர் பிடுங்கவேண்டியிருக்கும். தொலைக்காட்சி அறிவிப்பாளர்களைக் கிண்டல் செய்ததெல்லாம் பார்க்கவில்லைபோலிருக்கிறது.

    அவரை ஒரு நடிகனாகப் பாருங்கள் அரசியல்வாதிபோல் பார்க்காதீர்கள். உடல் தானம் கொடுத்தார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவருடன் பேசினார் இதெல்லாம் உங்கள் கமல் எதிர்ப்புக் கண்களுக்குத் தெரியவில்லையா?

    பார்ப்பன மகளிர்களைக் கிண்டல் செய்தார் அது கூடவா தெரியவில்லை?

    குற்றம் சுமத்தவென வெளிக்கிட்டிருக்கிறீர்கள், சுமத்துங்கள் பரவாயில்லை நாங்களும் ரெளத்ரம் பழகியவர்கள்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் குறுஞ்செய்தி தகவல் வந்தது விஜய் டிவி பாருங்கள் என்று. வேலை இருந்ததால் பார்க்கவில்லை. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. வெடிகுண்டு முருகேசன்4 அக்டோபர், 2009 அன்று PM 6:52

    :)

    :)))

    பதிலளிநீக்கு
  4. இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தீர்ந்தது.
    ஆனால் சந்தோஷமாக இல்லை. ஏமாற்றமும் கோபமும் வருத்தமும் தான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  5. நானும் பார்த்தேன் நண்பரே! உங்களுக்கு தோன்றியதெல்லாம் எனக்கு தோன்றாதது பெரிதும் ஆச்சர்யம். தோன்றவேண்டுமென்று கட்டாயமில்லை, அவரவர் விருப்பம். ஆனாலும் இதுபோன்றெல்லாம் பார்த்தால் எதனையும் நம்மால் ரசிக்க இயலாது. அது ஓர் சினிமா, அவ்வளவுதான். அதை விடுத்து வேறு பார்வை தேவையில்லை என்பதுதான் என் எண்ணம். அவர் சாண்ட்விட்ச் சாப்பிடுகிறார், கொட்டாவி விடுகிறார், வீட்டுக்கு கிஸ்மிஸ் வாங்குகிறார் என்பது போன்ற கவனிப்புகள், விவாதங்கள் தேவையில்லை என எண்ணுகிறேன்.

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  6. //“முஸ்லீம்களின் கண்முன்னால் பெரும் கூட்டம் வந்து வன்முறையாட்டம் நிகழ்த்துகிறது. அந்த முஸ்லீமுக்கு ரௌத்திரம் வரும்தானே?” என்று ஒரு பெண் தயங்கித் தயங்கி கேட்டதற்கு கமல்ஹாசன் சட்டென்று “உண்மைதான். முதலில் அந்தக் கூட்டத்துக்கு ஏன் ரௌத்திரம் வருகிறது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது” என்று சொல்லிச் சிந்திக்க வைத்தார்.//

    கொடுமை...! :-(

    பதிலளிநீக்கு
  7. நீங்க ஆயிரம் சொன்னாலும் எழுதினாலும் எனக்கு தோணுவது எல்லாம் ஒன்றுதான்.

    நீங்கள் முடிவெடுத்த மூளையோடு (pre determined mind)இந்த திரைப்படத்தை அணுகுகிறீர்கள் என்பதே,.

    Also since you have seen wednesday film, it is difficult for you to erase (unlearn the registered scenes)

    என் பார்வையில் ஹிந்து முஸ்லிம் பிரச்சனயே அந்த படத்தில் தெரிய வில்லை. ஒரு வேலை இறுதியில் சண்டனபரதியாயை விடுவித்து மற்ற மூண்டு பேரை கொள்ள செய்து இருந்தால் கூட, அப்படியும் எனக்கு தோன வில்லை.

    இதே ஹிந்து பாசிஸ்ட் கமல் தான் டசாவாடரத்தில் உயரமான இஸ்லாமிய்டராக வந்தார். அதில் ஒரு அய்யங்கார் , சீக்கியர் இஸ்லாமிய பெண்ணுக்கு ரத்தம் கொடுத்தனர்.

    கமல் கலைஞர் தொலை காட்சியில் சொன்னாரே வன்முறை வேண்டாம் என்று சொல்லத்தான் இந்த படம் எடுத்தேன் என்று.

    ரமேஷ் அரவிந்த், நடிகை சந்தியா, பாடகர் மணி, இயக்குனர் சரண், ராம் குமார் தேவர் (சிவாஜி கணேசன் மகன்) போண்டோருக்கு புரிகிறது, மாடவ்ரஜிர்க்கு புரியலையே.

    என்னை போல குப்பன் சுப்பன்களுக்கு புரிகிறது.

    There are plenty of Muslim Kamal fans seeing this films more than 5 times.

    பதிலளிநீக்கு
  8. அதிர்ச்சியாக இருக்கிறது தோழர். கமலஹாசன் மீது, உங்களைப் போலவே நானும் வைத்திருந்த மதிப்பீடுகள் அதிர்ச்சிகரமாக தகர்ந்து விட்டன. வருத்தமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. நிறத்தோடு குறியீடு செய்து ஏன் சிந்தனைகள் வரவேண்டும். ///

    Did you ask the same question to the writer who has criticized your review, for skipping 'the green' color?

    பதிலளிநீக்கு
  10. I am not generally interested in watching kamal's confusing interviews ever..so today also, I had watched only a bit of this programme and skipped.

    However I would dare say that your review on the film and this post demonstrate that Leftists are utterly confused about the nature of terrorism in India.

    When 'a wednesday' was released, I could find none of these comments like "anti-islam", even in (N)Indian muslim websites.. I think movie goers in N.India are atleast able to differentiate the characterization of terrorists with real muslim people.

    Only our pseduo seculars like tamil leftists, think that every other muslim is innocent and every other guy who is critisizing the terrorism is a RSS goon.

    பதிலளிநீக்கு
  11. வந்தியத் தேவன்!

    குற்றம் சுமத்துவதற்காக இதனை எழுதவில்லை. நானும் தமிழ்நாட்டில் உள்ள எத்தனையோ பார்வையாளர்களில் ஒருவன். எனக்கு கமல் மீது சில மதிப்பீடுகளும், புரிதல்களும் இருந்தன. அதில் ஏற்பட்ட அதிச்சித்தான் இது. என்னுடைய புரிதலில் உள்ள தருணங்களில் இதுவும் ஒன்று. அப்படிப்பட்ட ஒரு பார்வையாளனுக்கும், கலஞனுக்குமுள்ள உறவாக இதனைப் பார்க்க வேண்டும் முதலில். இரண்டாவது, கமல் நிறைய சொல்லியிருந்தாஅர். உ.போ.ஓவில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்துச் சொன்னதில், எனக்குள்ள முரண்பாடுகளை சொல்லியிருக்கிறேன். உங்களது புரிதலில் தவறாக தெரியவில்லை என்றால், ஒன்றும் பிரச்சினையில்லை.


    கதிர்!
    மறு ஒலிபரப்பு செய்தால் பாருங்கள்.


    வெடிகுண்டு முருகேசன்!

    :-))))


    தீபா!
    எனக்கும்தான்.


    பிரபாகரன்!
    சண்ட்விச் சாப்பிடுவது, கொட்டாவி விடுவது போல விஷயங்களை நான் குறிப்பிடவில்லை.


    சென்ஷி!
    எனக்கும் பெரும் அதிர்ச்சி!


    ராம்ஜி!
    முடிவெடுத்த மூளையோடு நான் பார்க்கவில்லை என்பதை இந்த படம் குறித்து நான் எழுதியிருந்த கருத்துக்கள் எல்லாவற்றையும் படித்துக்கொண்டு வரும் உங்களுக்கு தோன்றவில்லையா?


    ஒப்பாரி!
    ஆம் தோழரே, அதிர்ச்சிதான்....

    பதிலளிநீக்கு
  12. // அந்தக் கொடுமையை பெரும் வேதனையோடு விவரித்தார். கமல்ஹாசன் கண்கள் கலங்குவதாய் காண்பித்தார்கள். ஆஹா, எப்பேர்ப்பட்ட நடிகர்! //

    இது முட்டாள்தனமான கருத்து, ஏன் அவருக்கு நிஜமான கண்ணீர் வரவே வராதா ?.

    பதிலளிநீக்கு
  13. //நிகழ்ச்சியின் முடிவில் நானும் மனசுக்குள் அழுதேன். அம்மணமாகிப் போன கமல்ஹாசனைப் பார்த்து!//

    உண்மை...

    அந்த வருத்தப்பட வைக்கும் நிகழ்ச்சியை நானும் பார்த்தேன் :(((

    சாதா உளறல் தனமான கேள்விகளுக்கே இப்படியென்றால்... ம்ம்

    பதிலளிநீக்கு
  14. // நிகழ்ச்சியின் முடிவில் நானும் மனசுக்குள் அழுதேன். அம்மணமாகிப் போன கமல்ஹாசனைப் பார்த்து! //

    கமல் மேல ஏன் உங்களுக்கு இவ்வளவு காண்டு? குறை கண்டுபிடிப்பதையே தொழிலாக வலைப்பதிவர்கள் வைத்திருப்பது வேதனைக்குரியது. இதே குறையை மற்ற நடிகர்களிடமும் கண்டுபிடியுங்கள், அப்பொழுது நான் உங்களை பாராட்டுகிறேன். சினிமா துறையில் கமலை விட ஒரு தெளிவான சிந்தனை உள்ள ஆள் என் கண்ணுக்கு தெரியவில்லை. அவர் கருத்தில் அவர் தெளிவாக உள்ளார், அவரை புரிந்து கொள்ளாமல் உங்களை மாதிரி ஆட்கள் கண்டதையும் எழுதி பேர் சம்பாதிக்க பார்க்கிறீர்கள்.

    கமல் அம்மணமாகவில்லை, இதை எழுதிய உங்கள் எண்ணம் அம்மணமாகி போனதை எண்ணி வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. கலைஞர் டிவி நிகழ்ச்சி பார்த்தே மிக வருத்தமடைந்தேன்.. இது வேறயா ? :(

    பதிலளிநீக்கு
  16. திரைப்படத்தை திரைப்படமாகவே அனுகுவதுதான் சிக்கல்களை உருவாக்காது.
    பேட்டியைப், பேட்டியாக அடியை அடியாக, துவேசத்தையும், பெரும்பானமையையும்
    எதையும் மனிதாபிமானத்தோடு பார்த்தால் சிக்கல்தான். களத்தூர் கண்ணம்மா முதல்
    உன்னைப்போல் ஒருவன் வரை பார்த்தால் மெல்ல மெல்ல தெளிவாகிறது.
    நீ இன்னும் அபூர்வ ராகங்களில் வந்த அந்த கமலஹாசனை நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
    அது அப்போதைய ஃபாசன். அப்போது தமிழ்நாட்டில் உபோஒ குரலுக்கான தேவையும், ரசிகர்களும் இல்லாமல் இருந்ததை கமல் கனித்திருந்திருக்கவேண்டும். கமலுக்கு முஸ்லீம் விசிறிகள் இருப்பதாகச் சொல்லுவதும்,
    பிஜேபியில் ஒரு முஸ்லீம் உறுப்பினராக இருப்பதாகச் சொல்லுவதும் ஒரே வகையான வாதம். பொதுக்குரல் நசிந்து போகிற காலம் இதுதானோ.

    பதிலளிநீக்கு
  17. இது வெறும் நடிப்புத்தான் என்று சொல்லும்போது எனக்கு அந்தக்காலத்தில் தியாகி விஸ்வநாததாஸோடு எந்த ஒரு நடிகையும் ஜோடியாக நடிக்கமுன்வரவில்லை எனும் செய்தி நினைவுக்கு வந்துபோகிறது.

    பதிலளிநீக்கு
  18. ஒரு நடிகரைப்பார்த்து எக்ஸைட் ஆகாமலிருக்கும் குணம் நமக்கில்லை. அதை அட்லீஸ்ட் பொது இடத்தில் காட்டாமல் இருக்கும் நாகரீகமுமில்லை. அதைப்படம்பிடிக்கும் புத்திசாலிகளுக்காவது அவற்றை எடிட் செய்துவிட்டு உருப்படியாக ஏதாவதை நிகழ்ச்சியில் காட்டலாம் என்ற எண்ணமிருக்கவேண்டும். என்ன செய்ய? அவர்கள் நோக்கமே அதுதானே.. தலையெழுத்து.

    கமலும் ஈயென்று இளித்துக்கொண்டிருந்தார் எனில் அப்படி உட்கார வைத்துக்கொண்டு பேசினால் என்னதான் செய்வது.? அவர் அப்படியெல்லாம் இல்லை என்று அவரது தன்னடக்கதையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்க எனக்கென்ன தலையெழுத்தா?

    படத்தை வைத்து ஒரு கும்மியடித்து முடிந்த சூழலில் பேட்டியிலும் அதை தொடர முடிவு செய்துவிட்டீர்கள் போலத் தெரிகிறது. பிரபாகர் சொன்னதைப்போல எனக்கு விபரீதமாக ஏதும் தோன்றவில்லை. மேலும் முன்னேற்பாடு செய்துகொள்ளாத எந்த பேட்டியும் இப்படித்தான் இருக்கும். சமயங்களில் முன்பின் சொல்லாடல்கள் விட்டுப்போகும். அர்த்தங்கள் திரித்துக்கொள்ள ஏதுவாகிவிடும். பேட்டி தந்தவர் ஏதும் சிக்கலாகி விளக்கம் தர முற்பட்டால் பல்டி அடிக்கிறார் என்ற வாதம் வேறு எழும். சரி விடுங்க..

    நான் பேட்டியின் ஒருபகுதியைத்தான் பார்க்கமுடிந்தது.நீங்க சொல்வதெல்லாம் ஒருவேளை உண்மையென்று கொண்டாலும் எந்த மனிதனும் 100% முழுமையாக இருந்துவிடமுடியாது. மேலும் அவர் ஒரு நடிகர் அவ்வளவே..

    இந்த ஒரு பேட்டியினால் மட்டுமே பல விஷயங்கள் குறித்தும் பல நேரங்களில் ஏற்பட்ட அவர் பிம்பத்தின் மீதான நேர்மையைச் சந்தேகிக்க என்னால் இயலாது.

    பதிலளிநீக்கு
  19. அவர் ஒரு நல்ல நடிகர் அவ்வள்வே.

    பதிலளிநீக்கு
  20. //பிரபாகர் said... 5
    ..... அது ஓர் சினிமா, அவ்வளவுதான். அதை விடுத்து வேறு பார்வை தேவையில்லை என்பதுதான் என் எண்ணம்.//

    பிரபாகர், அதை படைத்தவரே, அதில் தான் சமுதாயத்திற்கு கருத்து சொல்வதாகச் சொல்லும்போது.. அவரால் சொல்லப்படும் கருத்தை மாற்றுக்கருத்தால் எதிர்கொள்வதே சரியான விவாதமாக இருக்கும். நன்மை பயக்கும்.

    படைப்பாளனை விமர்சித்ததை தவறு என்ற தோழர் மாதவராஜ், அதே படைப்பாளன், மாற்று ஊடகத்தில் தனது 'பக்கச்சார்பு நிறக்' கருத்தை வெளிப்படையாகச் சொன்னபின்னர், அந்த திறமையான கலைஞரின் அபாய கருத்தாக்கத்தை எதிர்ப்பதை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. //பிரபாகரன்!
    சண்ட்விச் சாப்பிடுவது, கொட்டாவி விடுவது போல விஷயங்களை நான் குறிப்பிடவில்லை.
    //

    நீங்கள் சொல்வது புரிகிறது... ஆனால் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா என்பதே எனது ஆதங்கம்.

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  22. உன்னைப்போல் ஒருவன்" படம் பற்றிய பத்மசிறி கமலகாசனின் விபரிப்பு..

    Vijay TV யில் இடம் பெற்ற ஒரு உரையாடல்.

    http://mahanathi.blogspot.com/2009/10/blog-post_9071.html

    பதிலளிநீக்கு
  23. UPO was not upto your expectations.
    In the episode I saw in youtube he made fun of brahmin women and how they talk in Tamil. That sounded silly. Had he commented any such thing against minorities you all would have opposed it. Had he made a film showing Modi as demon and RSS as evil you would have appreciated it. But he made a film based on a hindi film, Wednesday. You would deny the existence of islamic fundamentalism and would blame ONLY USA, RSS etc. Some one else would blame ONLY muslims and islamic jihadi groups. The reality is different. In that sense your views and the views of the 'common man' are equally wrong. Islamic terrorism from Pakistan and jihadi terrorism are issues that cannot be wished away by mouthing secular slogans.

    பதிலளிநீக்கு
  24. குறைந்தது ஒரு 200 பின்னூட்டங்கள் உறுதி :)

    பதிலளிநீக்கு
  25. During British rule also Hindus and Muslims had indluged in communal clashes. Now it has become
    worse because of various factors.

    பதிலளிநீக்கு
  26. சரியான விவாதம். நானும் அவரின் நீண்டநாள் ரசிகன்தான். ஆனால் அவரின் இந்த அவதாரம் என்னை சிந்திக்க வைக்கிறது. அந்த 'பச்சை, சிகப்பு, நீல வயர்' வசனம் என்னை படம் பார்க்கும்போதே தூக்கி வாரிப் போட்டது.( அந்த நீலம்....?) ஆயிரம் சல்ஜாப்புக்கள் சொன்னாலும், நாத்திக கொள்கைப் பற்றி பேசினாலும் ஜீனும், டிஎன்ஏ கொஞ்சம் குறிக்கீடு செய்யவே செய்யும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இது உண்மையாய் இருக்கக்கூடாது என்று மனம் விரும்புகிறது.
    நாத்திகம் அவருடையக் கொள்கை என்றுக் கூறினால், அதை ஏன் படத்தில் காண்பிக்கவேண்டும். அதுவும் எல்லாப் படத்திலும் காண்பித்து விட்டு, விருமாண்டியில் மாத்திரம் திருவிழாவில் சாமி கும்பிடுகிறார். அது நடிப்பு என்றால், அவர் சினிமாவில் பேசும் நாத்திக வசனங்களும் நடிப்புத்தானே. தெனாலியில் தொலைகாட்சியில் தமிழ் படும் பாட்டை கேலிச் செய்து கைத்தட்டல் பெறும் கமல், தன் மகளுக்கு நல்ல தமிழ் பேசக் கற்றுக்கொடுப்பதுதானே? நாத்திகமும் தமிழும் அவரின் தனிப் பட்ட விருப்பம் என்றால், தொலைக்காட்சித் தமிழும் அவரவர்களின் விருப்பம்தானே? உன்னைப் போல் ஒருவன் விஷியத்தில் ஒரு நடு நிலைக் கலைஞனாக பேசாமல் ' இந்தக் கதை இந்தியில் இருந்து எடுக்கப் பட்டது, படம் நான்றாக இருந்ததால் அதைத் தமிழில் தயாரித்தேன், அடுத்த முறை, இதேக் கதையை வெறுத் திசையில் என்னால் எடுக்க முடியும்.' என்றுக் கூறிவிட்டுப் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுத் தானே.
    கமல் சார், உங்களின் சூழ்நிலையில் நீங்கள் எதுச் செய்தாலும், அது பல்வேறுக் கோணங்களிலிருந்து சீர்த்தூக்கிப் பார்க்கப்படும். அதுவும் தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில், இதுப் போன்ற சென்சிடிவான கதைக்கருவை மிகவும் சாதுரியமாக சொல்லவேண்டி இருக்கும். இன்னும் மக்களின் ரசிப்புத்தன்மை அந்தக் கால 'சகலக் கலா வல்லவன்' காலத்திலேயே இல்லை என்பது உங்களுக்கு தெரிந்த அப்பட்டமான உண்மை. கமல் என்ற மாபெரும் கலைஞன், காவிக்கொடி அல்லது பச்சைக்கொடி கீழ் நிற்ப்பதுப் போன்ற பிரமையை தொற்றுவிக்கவேண்டாம். ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  27. //பிரபாகர், அதை படைத்தவரே, அதில் தான் சமுதாயத்திற்கு கருத்து சொல்வதாகச் சொல்லும்போது.. அவரால் சொல்லப்படும் கருத்தை மாற்றுக்கருத்தால் எதிர்கொள்வதே சரியான விவாதமாக இருக்கும். நன்மை பயக்கும். //

    நண்பர் பீர்,

    இவ்வாறே விவாதித்தோமானால் நிறைய தேவையற்ற வாதங்களே முன் நிற்கும். பிடிக்கவில்லை என்றால் பார்க்கத்தேவையில்லை, பார்க்கவேண்டாம் என்று புரிந்தோர்க்கு அறிவுறுத்துவோம், அவ்வாறு செய்யின் அந்த படம் ஓடாது முடங்கிவிடும். அதைவிடுத்து அதற்கு நாமெல்லாம் அதீத முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? நடிகனாய் நடிக்கிறார்கள், ரசிகனாய் பிடித்திருந்தால் பார்ப்போம்.... அதுதான் என் கருத்து...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  28. ..அவரை ஒரு நடிகனாகப் பாருங்கள் அரசியல்வாதிபோல் பார்க்காதீர்கள். உடல் தானம் கொடுத்தார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவருடன் பேசினார் இதெல்லாம் உங்கள் கமல் எதிர்ப்புக் கண்களுக்குத் தெரியவில்லையா?

    பார்ப்பன மகளிர்களைக் கிண்டல் செய்தார் அது கூடவா தெரியவில்லை?

    குற்றம் சுமத்தவென வெளிக்கிட்டிருக்கிறீர்கள், சுமத்துங்கள் //

    //இதே ஹிந்து பாசிஸ்ட் கமல் தான் டசாவாடரத்தில் உயரமான இஸ்லாமிய்டராக வந்தார். அதில் ஒரு அய்யங்கார் , சீக்கியர் இஸ்லாமிய பெண்ணுக்கு ரத்தம் கொடுத்தனர்.//

    இந்தப்படத்தை மக்கள் எப்படிப்பார்க்கிறார்கள் என்பதுதான் இங்கே பேச்சு. ஏன் படத்திற்கு வெளியில் போகிறீர்கள்?


    //அது ஓர் சினிமா, அவ்வளவுதான். அதை விடுத்து வேறு பார்வை தேவையில்லை//

    Holocaust denial is probibited in European countries. Can a film be produced there on the theme? Can you say to the critics that they should see it as a film only?

    Hussain is 80. He cant return to his mother country India. His crime: depicting Saraswti nude. He said it is art. Will you accept that?

    தீவிரவாதம் இன்று ஒரு burning subject. There are fierce debates raging on both sides. Can terrorism be used against terrorism? Can Salva Judam be allowed to kill people in the name of containing Naxalism? Can people take law into their own hands and the govt support vigilantism?

    எனவே, சினிமாவை சினிமாக பாருங்கள் என்பது போலி வாதம்.

    இதே வந்தியத்தேவன், இதே கமல் ஒரு திரைப்படத்தில், இலங்கைத்தமிழ் மகளிரை கேடுகெட்ட நடத்தையுடைவர்களாகச் சிததரிக்கிறார்; பின்னர் நடிகரும், அவர்தம் இரசிக்ர்களும்,

    ‘சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்’ என்கிறர்ர்கள். இன்னும் ஒருவர், அவரின் முன் நடத்தையைக்காட்டி, எங்கு குருதி கொடுத்தார், எத்தனைப் பெண்களைக் காப்பாற்றினார், எனச் சொல்லி, அவர் ஒரு தெய்வம் என்று வழிகிறார்கள்.

    ஏற்றுக்கொள்வாரா வந்தியத்தேவன்?

    தலைவலியும், திருகு வலியும்....

    பதிலளிநீக்கு
  29. இங்கு கருத்துக்கள் தெரிவித்த பல நண்பர்கள், சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும், கமல்ஹாசன் ஒரு நடிகராக மட்டும் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ஆனால் கமல்ஹாசன் அப்படிப் பார்க்கவில்லை என்பதை இந்த நிகழ்ச்சி பார்த்தவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

    இது சினிமா மட்டுமல்ல, உங்களைப் போன்ற ஒருவருக்கு இந்தப் படத்தில் ஒரு செய்தி இருக்கிறது, அது இந்தக் காலத்தில் பேசப்படுகிற ஒரு முக்கிய விஷயம் குறித்து விவாதிக்கிறது என்று கமல்ஹாசனே சொல்கிறார்.

    அதுமட்டுமல்ல, அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் ஏன் நீங்கள் நடித்தீர்கள் என்று கேட்கப்படும்போது, மிகத் தெளிவாக ஓன்றை அவர் சொன்னார். இந்தப்படத்தில் நான் நடித்திருக்கும் காட்சியோடு பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் ஒத்துப் போவதால், அந்த பாத்திரத்தில் நடித்தேன் என்றார். தேர்தலில் நான் ஓட்டுப் போடமுடியாத விஷயத்தைச் சொல்லும்போது பார்வையாளர்களுக்கு அந்தப் பாத்திரம் நாந்தான் என்று தோன்றும் என்றும் என்றும் மிகத் தெளிவாக குறிப்பிட்டார்.

    இவ்வளவு நுட்பமாக காட்சி விவரிப்புகளைச் சொல்கிற கமல்ஹாசனே, இது சினிமா அல்ல, நான் நடிகன் மட்டுமல்ல என்று சொல்கிறார். அதனால்தான் இந்தப் படமும், அவரும் விவாதக்குட்பட வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  30. //இங்கு கருத்துக்கள் தெரிவித்த பல நண்பர்கள், சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும், கமல்ஹாசன் ஒரு நடிகராக மட்டும் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ஆனால் கமல்ஹாசன் அப்படிப் பார்க்கவில்லை என்பதை இந்த நிகழ்ச்சி பார்த்தவர்கள் புரிந்துகொள்ள முடியும். //

    இதை சினிமாவிலேயே தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார்! :-(

    பதிலளிநீக்கு
  31. Athennavo intha pathivulagam endbadhu adhipuththisaaligal koodum idam endra mayaiyai nijamaakkum muyartchiyiol ullatho endru thondrukirathu.
    Ottu moththa tamil makkalin prathinidhigal pola thiraipdangalai , nadigargalai koooru poduvathum athan moolam thangalin medhavithanathaiyum kaatum muyarchiyo???? ithil innum ulla avala nilai ennavendraal sila nadigargalin peyargal pothuvil ulle vishayam ithil ulladhu pol aalamaayi irundhaalum, illai endraalum thalaippil payanpaduthvadhu.
    Irandaavathu, Pathivulaga thaan thalaiyil samoogathirkku unmaai unardhum poruppai sumandhu kondirundhaal athi miga mukkiya samooga avalangaalai alasukiraargala endraal illai athargum oru kamal, ****** pondra natchathirangal thevai padukiraargal.
    Aanaal miga mukkiya vishayam ithu pol arivu jeevigal allatha saanayan thaan intha thirai padangalin pookaiyaum , vetriyaiyum nirnayikkiraan, avan ungal pondra methavigalai pol vimarisanangalukkaka kaathiruppathu illai. Aanaal edhir prasaradhirkku sila padangal pali aanadhu undu. Viravil indha padhi ulgathin petchum kaatril vittu vidum nilaikku pathiulgam nardndhu kondirukiradho endru achcahmaaga irukkiradhu.
    I am not a blog writer, but I read the blogs, but after reading the leg pulling, literal tapwater fights in this blog world, my regards are pulled down to just a reading for time pass. So it is really a pity Tamil writings are becoming worth for nothing except like Tea shop , brandhi shop talks with no social responsibility,
    Be a Leftisit, please project your left philosophy its success and why it is failing consecutively in the world, that will be really enlightening,knowledge building rather than pointing fingers to negatives that too especially against Actors. In a way this is a Publicity stunt used by the tamil blog world.

    பதிலளிநீக்கு
  32. //Sword Fish said...

    இதே வந்தியத்தேவன், இதே கமல் ஒரு திரைப்படத்தில், இலங்கைத்தமிழ் மகளிரை கேடுகெட்ட நடத்தையுடைவர்களாகச் சிததரிக்கிறார்; பின்னர் நடிகரும், அவர்தம் இரசிக்ர்களும்,

    ‘சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்’ என்கிறர்ர்கள். இன்னும் ஒருவர், அவரின் முன் நடத்தையைக்காட்டி, எங்கு குருதி கொடுத்தார், எத்தனைப் பெண்களைக் காப்பாற்றினார், எனச் சொல்லி, அவர் ஒரு தெய்வம் என்று வழிகிறார்கள்.

    ஏற்றுக்கொள்வாரா வந்தியத்தேவன்? //

    உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் Sword Fish . முதலில் நான் இலங்கையன் என்று தெரிந்தவுடன் உடனே கமல் இலங்கைப் பெண்களை நடத்தை கெட்டவர்கள் எனச் சித்தரித்தார் என ஒரு கருத்துச் சொன்னீர்கள் அதற்க்குப் பாராட்டுகள் ஏனென்றால் உங்கள் கருத்துகள் வற்றிப்போய் ஒரு இனத்தைச் சேர்ந்தவரை தனிநபர் அல்லது குழு நிலைத் தாக்குதல் செய்கின்ற அளவிற்க்கு உங்களிடம் கருத்துப் பஞ்சம்.

    கமல் மேல் எனக்கும் கோபம் இருக்கின்றது. தெனாலியில் ஏதோ ஒரு கோதாரித் தமிழை இலங்கைத் தமிழ் என குதறியிருப்பார். எந்த இலங்கையரும் அப்படிக் கதைப்பதில்லை. அதற்காக அவரின் ஏனைய நல்ல படைப்புகளை மட்டும் தட்டுவதில்லை. கமல் ரசிகன் கட்டாயம் கமல் படம் தான் பார்கக்வேண்டும் என்றில்லை எனக்கு ரஜனி படங்களும் பிடிக்கும்.

    ஐயா இதுவரை கமல் நற்பணி மன்றம் சார்பில் 10 லட்சம் லீட்டருக்கு மேலான இரத்தம் தானம் செய்திருக்கின்றார்கள். பரமக்குடியில் ஒரு பாடசாலையை எடுத்து நடத்துகின்றார்கள். இப்படிப் பல விடயங்களை ரசிகர்கள் செய்திருக்கின்றார்கள்.

    உங்களுக்கு அவர் மேல் என்ன கோபம்?

    A Wednesday யை எல்லோரும் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றீர்களே அதிலும் இஸ்லாமியர் தான் தீவிரவாதிகள் ஏன் வட இந்தியன் ஒருத்தனும் அதற்க்கு இப்படி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

    வலையுலகத்திற்க்குப் பிடித்த மனநோய் ஒருத்தர் நல்லாக இருந்தால் அவரை எதிர்ப்பது. விரைவில் வேட்டைக்காரன், எந்திரன் எனப் படங்கள் வர மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மனநோய் சினிமாக்காரர்களை மட்டும் தாக்குவதில்லை சாரு, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களையும் தாக்கி அண்மையில் சில வலைப்பதிவர்களையும் குறிவைத்து தாக்கும் அளவிற்க்கு முன்னேறியிருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  33. //Hussain is 80. He cant return to his mother country India. His crime: depicting Saraswti nude. He said it is art. Will you accept that?//


    சுடும் உண்மை. கசக்கும் நிஜம்.
    ஓவியமும் கலைதானென்பதை அ னா ஆவன்னாவிலிருந்து சொல்லித்தரவேண்டும்.
    கலை கலைக்காக இல்லை, மக்களுக்காக. சபதஷஸ்மியைக்கொன்றது எதற்காக கலைக்காகவா.
    சல்ஜாப்பை நிறுத்துங்கள். அனாதரவான உயிர்களின் குரல்கள் இந்தியாவெங்கும் அலைகிறது ஆவியாக.

    பதிலளிநீக்கு
  34. வழக்கம் போல் மற்றுமொரு காழ்ப்புணர்ச்சி பதிவு. 2, 3 நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் பேசும் போது, தமிழ் தான் தன் மூச்சு என்பது போல் சொன்னார். அமீர், சேரன் போன்ற இயக்குனர்களுடனான நிகழ்ச்சி அது. தன்னால் தமிழில் மட்டுமே சிந்திக்க முடிவதாகவும் அது தான் வசதியாக இருப்பதாகவும் சொன்னார்.முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் சுத்தமான தமிழில் பேசும் ஒரே நடிகர் கமல் தான். இப்போதைய தலைமுறை “ட” போன்ற எழுத்தை மோசமாக உச்சரிப்பதையும் கண்டித்தார்.

    வெடிகுண்டின் வயரின் நிறத்தோடு நிறுத்திக் கொண்டது சந்தோஷம். நல்ல வேளை அவர் உள்ளாடை நிறத்தை யாரும் ஆராயவில்லை.

    பதிலளிநீக்கு
  35. //பார்ப்பன மகளிர்களைக் கிண்டல் செய்தார் அது கூடவா தெரியவில்லை? //

    ”ட” உச்சரிப்பு பற்றிய பேச்சில் தான் இவர்களை விமர்சித்தார் என நினைக்கிறேன். சரியா வந்தி?

    பதிலளிநீக்கு
  36. யப்பா...சாமீகளா...அடுத்த படம் வர வரைக்கும் விடமாட்டிங்க போல...;)))

    ஜோ சொன்னது போல 200+ கண்டிப்பாக வரும். ;)

    பதிலளிநீக்கு
  37. இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்!
    சொல்ல வேறு ஒன்றுமில்லை!

    பதிலளிநீக்கு
  38. Had the film showed a shot where in green wire is fused with red wire and the saffron wire is cut and thrown away you would have liked it. You cannot think beyond the left's petty secular politics.
    That is why you judge everything with preconceived notions.

    பதிலளிநீக்கு
  39. திரைத்துறையில் இருப்பவர்கள் ஒரு வெறும் எண்டர்டெயினர்(கூத்தாடி) என்று இல்லாமல் அவர்களை அறிவு ஜீவிக்களாகவும், தங்களின் நாயகனாகவும், ஆன்மிகச் செம்மல்களாகவும் பார்ப்பதுதான் தவறு. அந்த நிலையில் இருந்து அவர்கள் மாறுவது மிகவும் சகஜம், ஆனால் அதை ஜீரனிப்பது என்பது மிகவும் கடினம். நேற்றுவரை தன் ஆதர்ச நாயகியாய் கற்பனையில் இருந்த பெண் இன்றும் விபச்சாரியாய் பத்திரிக்கையில் பார்த்தவுடன் புலம்பும் என் நண்பன் போலவே இருக்கிறது இந்த பதிவு. அவர் வெறும் நடிகர் , நல்ல நடிகர். அவரின் நடிப்பை பார்க்கலாம்,விமர்சிக்கலாம். அவரின் கருத்துக்களை விமர்சிக்க அவர் ஒன்னும் தேசத்தலைவர் அல்ல.

    பதிலளிநீக்கு
  40. //SanjaiGandhi said... 35
    //பார்ப்பன மகளிர்களைக் கிண்டல் செய்தார் அது கூடவா தெரியவில்லை? //

    ”ட” உச்சரிப்பு பற்றிய பேச்சில் தான் இவர்களை விமர்சித்தார் என நினைக்கிறேன். சரியா வந்தி?//

    அதே தான் சஞ்சே. அவர் பார்ப்பன மகளிர் எனும் போது அந்த கூட்டத்தில் இருந்த இளம் பெண்களில் சிலர் முகம் மாறியது கூடத் தெரிந்தது. கமலின் பிரச்சனை இவரை பார்ப்பனர்கள் நாஸ்திகன் எனத் திட்டுகிறார்கள். ஏனையவர்கள் பார்ப்பன் எனத் திட்டுகிறார்கள். இப்படிப் பலர் பலவிதமாகத் திட்டினாலும் அவர் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை.

    பதிலளிநீக்கு
  41. இந்தப் பதிவு எதோ, பின்னூட்டத்திற்காக எழுதப்பட்ட பதிவாக சித்தரிப்பது வருத்தமளிக்கிறது.

    கமல் மீது மதிப்பும், அவரது சினிமாத் திறமை மீது மரியாதை எனக்கும் இருந்தது.

    இந்தப் படம் குறித்து பெரும் சர்ச்சைகள் வந்தன. அதுகுறித்து சம்பந்தப்பட்ட கமல் நேரில் சொல்லிய விஷயங்கள் அதிச்சியளிப்பதாக இருந்தன. அவரது கருத்துக்கள் மீது எனக்கு வருத்தம். அதைப் பதிவு செய்தேன்.


    அவர் குறித்து எனக்குள் இருந்த மதிப்பீடுகளும், அதில் ஏற்பட்ட மாற்றங்களுமே இந்தப் பதிவு.

    இதில் என்ன தவறு?

    இங்கு கருத்துச் சொன்ன பலரும், நான் சொல்லியிருப்பது குறித்தே விவாதிக்காமல், மறுக்காமல் வேறு விஷயங்களையேச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

    ஆரோக்கியமான விமர்சனங்களையும், நான் சொல்லியிருப்பது குறித்த விவாதங்களையும் நான் நிச்சயம் வரவேற்பேன். பதிவுலகத்தை மனநோய் உலகம் என்பதையோ, தேவையற்ற வார்த்தைகள் கொண்ட பின்னூடத்தையோ இனி அனுமதிக்க முடியாது.

    எனக்கு, பின்னூட்டங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. அதில் உள்ள கருத்துக்களே முக்கியம்.

    பதிலளிநீக்கு
  42. நான் உங்களையோ உங்கள் பதிவையோ மனநோய் எனச் சொல்லவில்லை. வலையில் சிலர் இப்போ அதனைத் தான் செய்துவருகின்றார்கள் என்பது வெளிப்படை உண்மை.

    உன்னைப்போல் ஒருவனைக் குற்றம் சாட்டிய நீங்கள் ஏன் கமல் பார்ப்பன மகளிரைக் கிண்டல் செய்ததையும், தன் நற்பணி மன்றம் மூலம் செய்தவற்றையும், நம்மாழ்வார், ஜிதேந்திரனின் தந்தை போன்றவர்களுடன் உடல் தானம் இயற்கை விவசாயம் பற்றிப் பேசியதையும் குறிப்பிடவில்லை அதுதான் என்னுடைய ஆதங்கம்.

    அதே நேரம் உலகத் தரம் என்ற மனுஷ்யபுத்திரனின் கேள்விக்கு விஜய் டிவியில் கமல் சொன்ன பதிலும் கலைஞர் தொலைக்காட்சியில் அமீரின் அதே கேள்விக்கு கமல் சொன்ன பதிலும் வித்தியாசமானவை. அந்த இடத்தில் கமலின் பேச்சு அரசியல்வாதிகளின் பேச்சுப்போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
  43. வந்தியத் தேவன்!

    அந்த மொத்த பேட்டியையும் பற்றி நான் சொல்ல வரவில்லை. உன்னைப் போல் ஒருவன் குறித்து நான் பதிவுலகத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தேன். கமல், பேட்டியில் நேரிடையாக தெரிவித்த கருத்துக்கள், எனது கருத்துக்களை குலைக்கும்படியாய் இருந்தது. அதை மட்டும்தான் பதிவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். கமல் செய்த அந்த விமர்சனமும் எரிச்சலானவையே. பார்ப்பன மகளிராய் இருந்தாலென்ன.. எந்த மகளிராய் இருந்தாலென்ன. சென்னையில் சேரி மக்கள் பேசும் தமிழை கமல் எப்படிச் சொல்வாராம்? தான் ’அப்படிப்பட்ட’வர் இல்லை என்பதற்கு வலிந்து சொல்லப்பட்ட விஷயங்களாகவே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  44. கமலஹாசன் ஒரு நடிகர். தியேட்டருக்குள் அவரை நடிகராகத்தான் பார்க்கவேண்டும்.
    தியேட்டரைவிட்டு வெளியே வந்து அவர் பேசுவதெல்லாம் அவரது பொதுக்கருத்து, அதை விமர்சிக்க யாவருக்கும் உரிமை உண்டு.

    கமலஹாசன் ஒரு பட வசனமாக 'முதல்வர் ஒரு முட்டாப்பயல்' என்று சொன்னால் எப்படி? அதையே ஒரு பேட்டியில் சொன்னால் எப்படி?

    சிறப்பான இடுகை

    பதிலளிநீக்கு
  45. //உன்னைப்போல் ஒருவனைக் குற்றம் சாட்டிய நீங்கள் ஏன் கமல் பார்ப்பன மகளிரைக் கிண்டல் செய்ததையும், தன் நற்பணி மன்றம் மூலம் செய்தவற்றையும், நம்மாழ்வார், ஜிதேந்திரனின் தந்தை போன்றவர்களுடன் உடல் தானம் இயற்கை விவசாயம் பற்றிப் பேசியதையும் குறிப்பிடவில்லை அதுதான் என்னுடைய ஆதங்கம்.//

    நீதிபதி: அவரை நீ கத்தியால் குத்தியது சட்டப்படி குற்றம்
    Mr X: எதற்கு அதை பார்க்கிறீர்கள்? நான் ஒருமுறை ஏழைக்கு உதவி செய்தேனே அதைப்பார்க்கமாட்டீர்கள்?

    கமலஹாசனின் நற்பணிகள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவை.

    பதிலளிநீக்கு
  46. RGB தான் சினிமாவின் கலர் டோன்..விமர்சனம் எந்த கலரை சொல்லியிருந்தாலும் இப்படித்தான் வரும்.பொதுவாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர நாமே நிற சாயம் பூச வேண்டாமே தோழர்

    பதிலளிநீக்கு
  47. ஒரே கருத்தை எத்தனை பேர் திரும்ப திரும்ப சொல்வார்கள்? சினிமாவை சினிமாவாகப்பார் என்று.நீங்கள் போதுமான விளக்கங்கள் கொடுத்த பின்பும்.நண்பர் ஒருவர் சொல்லியிருப்பதுபோல் ஜீன்கள் அதன் வேலையை ஒரு போதும் நிறுத்துவதில்லை.பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் வந்த இந்தியா டுடே கிடைத்தால் படித்து பாருங்கள் சுப்பிரமணியசாமி என்ற கோமாளி rss க்கு எதிராக ஆடிய ருத்ர தாண்டவம் அடேங்கப்பா ரகம்.ஆனால் இன்றைய நிலை? இதே கமல்ஹாசனின் நிலையும் அப்படித்தான் இருந்தது ஒரு காலத்தில்.ஆணின் மீதான ஒரு பெண்ணின் ஆளுமை அல்லது வீர்யம் வியக்க வைக்கும் விஷயம்.கௌதமி சிறிது காலம் bjp யின் உறுப்பினராக இருந்தார்.இப்போதும் இருக்கிறாரோ என்னவோ? கரைப்பார் கரைத்தால்,,,

    பதிலளிநீக்கு
  48. கமலை பார்த்ததும் ரசிகர்கள் excite ஆனது கூட ok .ஆனால் அதை வளர்த்தி கொண்டே போன இம்சை அரசன் "கோபிநாத்" செயல்கள் எரிச்சல் ஊட்டின .கோபிநாத்
    கிட்ட இருந்து விஜய் டிவி யை யாரவது விடுவித்தால் தேவலை....

    பதிலளிநீக்கு
  49. கமல் முஸ்லீம்களுக்கு சொரிந்து கொடுத்து இந்துக்களை கிள்ளிவிடும் கருனாநிதி வேலைதான் இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  50. கமலஹாசன் அம்மணமானோரோ இல்லையோ, இங்கு கம்யூனிஸ்டுகள்,திராவிட இயக்கங்களின் போலிப் மதச்சார்பின்மைக் கொள்கைகள் மக்களுக்கு தெரியவந்துள்ளது எங்களைப் போன்றோருக்கு சந்தோஷம் தான் ! பச்சை வயர் என்று படத்தில் ஏதாச்சையாக சொன்னதை, தங்கள் கற்பனைகளுக்கு ஏற்ப வர்ணம் பூசி, திட்டும் அளவுக்கு போலி மதச்சார்பின்மை பலரின் எண்ணங்களில் இருக்கிறது என்பதையே தங்கள் விமர்சனம் உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  51. //நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். கமல் செய்த அந்த விமர்சனமும் எரிச்சலானவையே. பார்ப்பன மகளிராய் இருந்தாலென்ன.. எந்த மகளிராய் இருந்தாலென்ன. சென்னையில் சேரி மக்கள் பேசும் தமிழை கமல் எப்படிச் சொல்வாராம்? தான் ’அப்படிப்பட்ட’வர் இல்லை என்பதற்கு வலிந்து சொல்லப்பட்ட விஷயங்களாகவே இருக்கின்றன.//

    உங்கள் பார்வையில் தெளிவு இருக்கிறது என்பதற்கு இந்த வரிகள் சாட்சி. பாராட்டுக்கள்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  52. //முதலில் நான் இலங்கையன் என்று தெரிந்தவுடன் உடனே கமல் இலங்கைப் பெண்களை நடத்தை கெட்டவர்கள் எனச் சித்தரித்தார் என ஒரு கருத்துச் சொன்னீர்கள்//

    வந்தியத்தேவன்!

    நான் அப்படிச்சொல்லவில்லை.

    Suppose Kamal had said such a thing about Srilankan Tamil women...?

    என்றுதான் எழுதியிருந்தேன். அவர் அப்ப்டிச்சொன்னால், உங்கள் உணர்ச்சிகள் எப்படியிருக்கும் என்பதுதான்.

    இப்போது, இப்படம் இசுலாமியர் அனைவரைய்ம் ‘தீவிரவாதிகள்’ என ஐயுறும்படி செய்யுமோ, என நம்மில் பலர் பதைக்க, இசுலாமியரோ நடுங்குவர். இல்லையா?

    இதை நீங்கள் புரியவில்லை. சமூகவிளைவுகள் பயங்கரமானவை. மக்கள் கூட்டமாகும்போது நிதானமாக உண்மையென்ன என ஆராயமாட்டார்கள். யாரும் அவர்களை எதுவும் செய்யவைக்கமுடியும். இப்படம் இசுலாமியர்கள் தாங்கள் இந்தியாவில் வாழ முடியவில்லையே, என வருந்தவைக்கும்.

    சீக்கியர்களில் ஒருசிலர் இந்திராகாந்தியைச் சுட்டுக்கொன்றதால், பல்லாயிரக்கணக்கான சீக்கிய அப்பாவி பொதுமக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்கள் வீடுகள் தீக்கிரையாக்கபபட்டன. உயிரோடு எரித்துக்கொள்ளப்பட்டனர் நடுத்தெருவில். அவர்கள் எரியும் காட்சிகளையும் அவர்கள் வீடுகள் கற்களால் தாக்கப்பட்டதையும் பார்த்தோம்.

    நினவிருக்கிறதா?

    Socially conscientious citizens will hate this film. But fanatical fans will appalaud anything their hero does. The fans have nothing on their mind except the 'excitment' of seeing their hero on screen. The fans are anti-social in that sense.

    பதிலளிநீக்கு
  53. போலிமதச்சார்பின்மை.இதுதான் பெரிய காமெடி.15 அல்லது 20 பர்சன்ட் இருக்கிறவங்களை தாஜா பண்ணி என்ன ஆகப்போகுதாம்? கமல்ஹாசன் முஸ்லிம்களுக்கு சொறிஞ்சி வுட்டுருக்காராம்.இந்த ரேஞ்சுக்கு படம் எடுத்தும் உங்க ஆத்திரம் அடங்கலையா?

    பதிலளிநீக்கு
  54. படம் பார்க்கும் போது பச்சை, நீல வெயர் பத்தி வசனம் வந்த போது இவ்வளவு யோசிக்க வில்லை. சாதாரண வசனமாகத் தான் பார்த்தேன். ஆனால் என்ன கலர் சொல்லியிருந்தாலும் எதவத் காரணம் கற்பிக்க முடியுமென நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  55. //Sword Fish said...

    Suppose Kamal had said such a thing about Srilankan Tamil women...?//

    நீங்கள் சொல்வது புரிகிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தை தீவிரவாதிகளாகக் காட்டுவதில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் இதுவரை வெளிவந்த விஜயகாந்த், அர்ஜூன் படங்களில் தீவிரவாதிகள் முஸ்லீம்கள் என்றே காட்டியிருப்பார்கள். ஆனால் எந்த நடுநிலையாளரும் கேப்டனின் படங்களை இப்படி விமர்சிக்கவில்லை. (பலரும் எந்தப் படங்களைப் பார்த்திருக்கமாட்டார்கள்).

    மற்றும் படி சீக்கியர்கள் கொலைசெய்யப்பட்டதும் தெரியும் மாமியாரைக் கொன்ற இனத்தை எப்படி அவரின் மருமகள் நடத்துகின்றார் என்பதும் தெரியும்.

    பதிலளிநீக்கு
  56. வந்தியத்தேவன்!

    கமலஹாசன் படத்தை மட்டும் சொல்கிறார்கள். அர்ஜுன், அஜித் படங்களை விட்டுவிட்டார்கள் என்பது இங்கே out of context. அது கமல் இரசிகரான உங்கள் பிரச்சனை.

    வணக்கம். எழுதியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  57. // கபிலன் said... 50
    பச்சை வயர் என்று படத்தில் ஏதாச்சையாக சொன்னதை, ///


    // மாதவராஜ் said
    பச்சை வயரை துண்டித்து விடுங்கள் எனச் சொல்லுவதாக வசனம் வருகிறதே, பச்சைக் கலர்னு எதை கமல்ஹாசன் சொல்றார் தோழர்?’ என்று கேட்டார். A wednesdayவில் இல்லாத காட்சிதான் அது.

    விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சியில் அந்தக் கேள்வி எப்படியோ வந்துவிட்டது. அதற்கு,

    “பச்சைக்கலரை சேர்த்து விடுங்கன்னு சொன்னா மட்டும் பிரச்சினை தீர்ந்துருமா” என கமல்ஹாசன் வேகமாகச் சொன்ன பதில்///

    ***

    கமல் பச்சை என்பதை எதேச்சையாக படத்தில் பயன்படுத்தி இருப்பது உண்மையானல் அவர் இப்படிக் கேட்டிருக்கமாட்டார்....
    "அட அதுக்கு இப்படி ஒரு மதம் சார்ந்த அர்த்தமும் இருக்கா?" என்று கேட்டிருக்கக்கூடும்.

    அவர் சொன்னபதில் (மாதவராஜின் பதிவில் இருந்து) அவருக்குத் தெரிந்தே அந்த வண்ணம் ஒரு மதக் குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எண்ண சாதகங்கள் உள்ளது.

    ***

    எதைத் தொழுதால் பித்தம் தெளியும் என்று தொழுவதற்கான பிம்பங்களைத் தேடி அலையும் ஆவல் இருக்கும்வரை கமல் போன்ற நடிகர்கள் மீது ஒரு பிம்பத்தை தானாக வளர்த்துக் கொள்வதும் பின்னாளில் அது கலைந்துவிட்டது என்று பொம்மையை உடைத்த குழந்தைபோல அரற்றுவதும் தொடரும்.

    நடிகர்களையும்,கதை எழுதும் கருவாட்டு வியாபாரிகளையும் அல்லது இன்னபிற பொழுது போக்கு அயிட்ட வியாபாரங்களையும்( நீயா நாயா ) என்ன செய்தாலும் போக்கமுடியாத உங்களின் பொழுதப்போக்க மட்டும் பயன்படுத்துங்கள்.

    அவர்கள் இப்படித்தான் என்று எந்த ஒரு பிம்பத்தையும் நீங்களாகவே வளர்த்துக் கொண்டால்,
    பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ?

    பதிலளிநீக்கு
  58. அவ்வை ஷண்முகி படத்தில் முஸ்லிமாக இருக்கும் நாசரை ஐயர் வேடம் போட செய்தார்.

    முஸ்லிம்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். உங்களை தீவிரவாதியாக அடையாளமும் காட்டி ஐயராக மாற்ற முயற்சி செய்கிறார்.

    மை காட் , அனைத்து கமல் பட CD களையும் மீண்டும் மீண்டும் போட்டு பாருங்கள். கவனம் .. ஐயோ ... உஷார் ... உஷார் ...

    பதிலளிநீக்கு
  59. மிகச் சிறந்த பதிவு மாதவராஜ்...

    இந்த கமல்ஹாஸனின் அம்மணம் தங்களைப் போன்ற நண்பர்களுக்கு இத்தனை தாமதமாகவாவது புரிந்ததே என்பது கூடுதல் சந்தோஷம்...

    இவர்களைப் போன்றவர்களே சமூகத்தின் பிணிகள்...

    -Shiva

    பதிலளிநீக்கு
  60. தொலைகாட்சி, சினிமா பார்ப்பதை தவிர்த்தால் தம்மு, தண்ணி அடித்தாலும் ரொம்ப நாளைக்கு ஆரோக்கியமாக இருக்கலாம் என நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  61. kamal’s next NEW film’s ( நம்மைப்போல் ஒருவன் )’s story is : – கமலின் அக்கா புருகாவில் இருப்பதால் பட்டப்பகலில் மும்பை மார்கெட்டில் ஹிந்துத்வா தீவிரவாதிகளால் வெட்டிக்கொள்ளபடுகிறார். நீதி கேட்டு போலீசில் புகார் செய்ய கமல் சென்றால் அவரையே தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளி என சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறார்கள்.
    ஹீரோவாயிர்றே கமல்! ஜெயிலில் இருந்து தப்பித்து தன பெற்றோருடன் சொந்த ஊரான கோவைக்கு குடி பெயர்ந்து புதிய வாழ்க்கையை துவங்குகிறார். அவர் தந்தை தான் மும்பையில் செய்த அதே துணிக்கடை தொழிலை துவங்குகிறார். சில வருடங்கள் கழித்து ஒரு கலவரத்தில் அவரின் துணிக்கடை ஹிந்துத்வா கலவரக்காரர்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது. வீடு அவரின் அம்மாவுடன் சேர்த்து கொளுத்தப்படுகிறது. கமலின் அப்பா கடுங்கோபத்துடன் காவல் நிலையம் சென்று மீண்டும் மீண்டும் முறையிட, அவரை ஒரு குண்டு வெடிப்புக்கு காரணம் என்று சொல்லி போலிஸ் தடாவில் உள்ளே போட்டு விடுகிறது. தினமலரில் கமலின் முகம் பயங்கரவாதி என வருகிறது.
    கமல் இம்முறை அஹ்மதாபாத்திற்கு தப்பி செல்கிறார். அங்கு கவுசர் பானு என்ற புர்கா போட்ட முஸ்லிம் பெண்ணை
    சந்திக்கிறார். அவர் இவரை ஒருவாறு தேற்றி சகஜ வாழ்க்கைக்கு கொண்டு வருகிறார். திருமணமும் நடக்கிறது. ஒரு மிகப்பெரிய கலவரத்தில் அவர் க ரு வ ரு க் க ப் ப டு கி றா ர். இப்போது
    கமல் எந்த கம்ப்லைண்டும் கொடுக்காமலேயே என்கௌன்டரில் போட்டுத்தள்ள குஜராத் போலிஸ் துரத்துகிறது.
    எப்படியோ கமல் தப்பித்து டெல்லி செல்கிறார். பல வருடம் உச்ச நீதிமன்ற வாசலில் நீதி கிடைக்கும் என நம்பி நின்று நம் நாட்டின் போக்கையும் நீதியின் போக்கையும் பார்த்த கமல், தன் வாழ்க்கையும் இது போல பலர் வாழ்க்கையும் இருண்டு போனதற்கு காரணமான, அணைத்து அரசியல் தலைவர்களும் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தங்கள் இலாகாக்களை ஒதுக்கிக்கொள்ளும் ஆர்வத்திலும், பிரதமரை தேர்வு செய்யும் குஷியிலும் ஒரே இடத்தில் ஒன்றாக குழுமி இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில், தாமரை மலர் பேனர் கட்டப்பட்ட ஒரு பெரிய அரங்கத்துக்கு சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டை வைத்து விட்டு ரிமோட்டை அழுத்துகிறார். பேக்கிரவுண்டில் தீப்பிழாம்பாய் காட்சி தர காமன் மேன் தற்போது ஹீரோவாய் சுலோ மோஷனில் நடந்து வருகிறார்….. இப்போது மீண்டும் (கபிலனின்) முதல் பாராவை படிக்கவும்.
    இது ஜஸ்ட் ஒரு படம்தானே என்று சென்சார் எந்த கட்டும் இன்றி வெளியிடுமா? அல்லது இந்த கதையில் கமல் தான் நடிப்பாரா?

    பதிலளிநீக்கு
  62. kamal’s next(if so...) NEW film’s ( நம்மைப்போல் ஒருவன் )’s story is : – கமலின் அக்கா புருகாவில் இருப்பதால் பட்டப்பகலில் மும்பை மார்கெட்டில் ஹிந்துத்வா தீவிரவாதிகளால் வெட்டிக்கொள்ளபடுகிறார். நீதி கேட்டு போலீசில் புகார் செய்ய கமல் சென்றால் அவரையே தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளி என சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறார்கள்.
    ஹீரோவாயிர்றே கமல்! ஜெயிலில் இருந்து தப்பித்து தன பெற்றோருடன் சொந்த ஊரான கோவைக்கு குடி பெயர்ந்து புதிய வாழ்க்கையை துவங்குகிறார். அவர் தந்தை தான் மும்பையில் செய்த அதே துணிக்கடை தொழிலை துவங்குகிறார். சில வருடங்கள் கழித்து ஒரு கலவரத்தில் அவரின் துணிக்கடை ஹிந்துத்வா கலவரக்காரர்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது. வீடு அவரின் அம்மாவுடன் சேர்த்து கொளுத்தப்படுகிறது. கமலின் அப்பா கடுங்கோபத்துடன் காவல் நிலையம் சென்று மீண்டும் மீண்டும் முறையிட, அவரை ஒரு குண்டு வெடிப்புக்கு காரணம் என்று சொல்லி போலிஸ் தடாவில் உள்ளே போட்டு விடுகிறது. தினமலரில் கமலின் முகம் பயங்கரவாதி என வருகிறது.
    கமல் இம்முறை அஹ்மதாபாத்திற்கு தப்பி செல்கிறார். அங்கு கவுசர் பானு என்ற புர்கா போட்ட முஸ்லிம் பெண்ணை
    சந்திக்கிறார். அவர் இவரை ஒருவாறு தேற்றி சகஜ வாழ்க்கைக்கு கொண்டு வருகிறார். திருமணமும் நடக்கிறது. ஒரு மிகப்பெரிய கலவரத்தில் அவர் க ரு வ ரு க் க ப் ப டு கி றா ர். இப்போது
    கமல் எந்த கம்ப்லைண்டும் கொடுக்காமலேயே என்கௌன்டரில் போட்டுத்தள்ள குஜராத் போலிஸ் துரத்துகிறது.
    எப்படியோ கமல் தப்பித்து டெல்லி செல்கிறார். பல வருடம் உச்ச நீதிமன்ற வாசலில் நீதி கிடைக்கும் என நம்பி நின்று நம் நாட்டின் போக்கையும் நீதியின் போக்கையும் பார்த்த கமல், தன் வாழ்க்கையும் இது போல பலர் வாழ்க்கையும் இருண்டு போனதற்கு காரணமான, அணைத்து அரசியல் தலைவர்களும் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தங்கள் இலாகாக்களை ஒதுக்கிக்கொள்ளும் ஆர்வத்திலும், பிரதமரை தேர்வு செய்யும் குஷியிலும் ஒரே இடத்தில் ஒன்றாக குழுமி இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில், தாமரை மலர் பேனர் கட்டப்பட்ட ஒரு பெரிய அரங்கத்துக்கு சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டை வைத்து விட்டு ரிமோட்டை அழுத்துகிறார். பேக்கிரவுண்டில் தீப்பிழாம்பாய் காட்சி தர காமன் மேன் தற்போது ஹீரோவாய் சுலோ மோஷனில் நடந்து வருகிறார்…....( இதில் எந்த கற்பனையும் பொய்யும் இல்லை, எல்லாமே நடந்த சம்பவங்களே. கமல் உ.போ.ஒ படத்தில் சொல்லப்பட்டிருப்பது போன்ற முன்னுக்கு பின் முரணான சம்பவங்களுமில்லை ).
    இது ஜஸ்ட் ஒரு படம்தானே என்று சென்சார் எந்த கட்டும் இன்றி வெளியிடுமா? அல்லது இந்த கதையில் கமல் தான் நடிப்பாரா?அதிர்ச்சியாக இருக்கிறது.கமலஹாசன் மீது, உங்களைப் போலவே நானும் வைத்திருந்த மதிப்பீடுகள் அதிர்ச்சிகரமாக தகர்ந்து விட்டன.கலைஞர் டிவி நிகழ்ச்சி பார்த்தே மிக வருத்தமடைந்தேன். இது மேலும் வருத்தமாகவும் இருக்கிறது. கமல் தன் மெய்யான 'வர்ணத்தை" காட்டியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  63. நண்பரே
    நான் ஒரு கமல் ரசிகன் தான்,அநேகமாக அனைத்து கமல் படங்களும் பார்த்து இருக்கிறேன்.இந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன்.கமலுமா?????.கமல் சிந்தையில் மட்டுமா மாற்றம் இந்த படத்திற்க்காகவே தனது கம்பெனி லோகோவை முதற்கொண்டு மாற்றி இருக்கிறார்.தாமரையில் தான் மலர்கிறது ராஜ் கமல் இன்டர்நேஷனல்.நான் மாறி விட்டேன் என்று பழைய்ய லோகோ வையே மாற்றி இருக்கிறார்.படத்தில் எவ்வாறெல்லாம் பாசிசம் பேசி இருக்கின்றார் என்று இனிமேலும் சொல்ல தேவையில்லை.அவ்வளவு பேசியாகி விட்டது.கமலுமா? என்பதை நினைக்கும் போது தான் வருத்தம் வருகிறது

    பதிலளிநீக்கு
  64. "எனக்கும் இடது வலது பேதம் கிடையாது ஆனால் எழுதும் போது மட்டும்"
    கமலா????!!!!!
    இப்போதாவது காவியை மறைக்காமல் தெளிவாக சொன்ன வரைக்கும் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  65. Muslim got anger then we have to think about why he got angry. But it happens to Hindu we cann't think about. What a logic Mr.Seshvi?

    பதிலளிநீக்கு
  66. எனக்கும் கமலை மிகவும் பிடிக்கும் இந்த படம் பார்க்கும் முன் வரை, மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று சொல்ல முடியாது . இயற்க்கை குணம் என்றாவது வெளிப்பட்டே தீரும். படத்தை மிக கவனமாக தான் கையாண்டிருக்கிறார் எதேச்சையாக எந்த பகுதியையும் எடுக்கவில்லை என்பது அவர் பேட்டியில் நிரூபணம் ஆகிவிட்டது.

    \\கமல் பச்சை என்பதை எதேச்சையாக படத்தில் பயன்படுத்தி இருப்பது உண்மையானல் அவர் இப்படிக் கேட்டிருக்கமாட்டார்....
    "அட அதுக்கு இப்படி ஒரு மதம் சார்ந்த அர்த்தமும் இருக்கா?" என்று கேட்டிருக்கக்கூடும்.\\

    உண்மை தான்.(கல்வெட்டு) அவர் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்.

    \\கமலஹாசன் ஒரு பட வசனமாக 'முதல்வர் ஒரு முட்டாப்பயல்' என்று சொன்னால் எப்படி? அதையே ஒரு பேட்டியில் சொன்னால் எப்படி?\\

    இதற்க்கு என்ன பதில் சொல்வார்களாம் நடிகனை நடிகனாக மட்டும் பார்க்கவேண்டும் என் சொல்பவர்கள்.

    கமல் நாத்திகர் அல்ல அது ஒரு போலி முகத்திரை.

    இனி அவர் படங்களை தவிர்ப்பது தான் சிறந்தது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!