நரேந்திர மோடியின் ஆயுத பூஜை

 

Modi1

 

narendramodiweapon_afp 

ஜம்மு-காஷ்மீரில், தீவீரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்கள் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று கொஞ்ச காலத்துக்கு முன்பு பத்திரிகையில் வந்தது. ஜம்மு-ஜாஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அதற்கு கண்டனங்களையும், வருத்தங்களையும் தெரிவித்தார். “நான் நம் ஜனாதிபதி அவர்கள் குழந்தைகளோடு உரையாடுவது போன்ற புகைப்படங்களை பார்க்கவே விரும்புகிறேன்” என்று அவர் சொன்னார்.

இங்கோ, ஒரு மாநில முதல்வர் பயங்கரமான ஆயுதங்களை வைத்து பூஜையே நடத்தி போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். விஜயதசமியன்று குஜராத் முதல்வர் மோடி, தனது அதிரடிப்படையினரின் ஏ.கே 47 உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வழிபாடு நடத்தியிருக்கிறார்.

“ஒரு போர் வீரன் இப்படிப்பட்ட வழிபாடு நடத்தலாம், ஆனால் மோடி ஒரு சிவிலியன். எப்படி நடத்தலாம்” என்று சாத்திர ரீதியான, அரசியல் அமைப்பு ரீதியான விவாதங்கள் நடக்கின்றன.

“ஒரு காவலாளி எந்நேரமும் தன் ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும். எப்படி இன்னொருவரிடம் கொடுக்க முடியும்.” ஒழுக்க விதிகள் மீறப்பட்டு இருக்கின்றன என்பதும், இந்திய ஊடகங்களில் வெளிவந்து கொண்டு இருக்கின்ற முக்கியமான சர்ச்சைகளும் ஒன்று.

மோடி என்னும் ‘இந்து’ செய்தால் இங்கு அது வெறும் சடங்கு மட்டுமே!

இங்கே இந்துத்துவாவின், பாசிசத்தின் முகம் ஒன்று கோரப்பல்லைக் காட்டியபடி அப்பட்டமாய் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறதே, அது இந்த மேதாவிகளின் கண்களுக்குத் தெரியவில்லையா?  “தன் மக்களை காப்பதற்கு பயன்படும் ஆயுதங்களை வழிபடுவதில் என்ன தவறு” என்ற மோடியின் வசனங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?

தீவீரவாதம், பயங்கரவாதம் எல்லாவற்றுக்கும் சில முகங்களை வைத்தே காட்சிப்படுத்துபவர்கள் மோடியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். தீவீரவாதத்தின் ஊற்றுக்கண் எங்கு இருக்கிறது என்பது அப்போது புரியும்.

வாழ்நாளெல்லாம் அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணுக்கு இன்னொரு அவமானம்.

அபாயச்சங்குகள் அலறுகின்றன.

*

கருத்துகள்

53 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. முடியலை...


    வலிக்குது.,






    அழுதே தான் தீரணும்.

    :(

    பதிலளிநீக்கு
  2. யாரோ ஒரு காந்தியவாதி30 செப்டம்பர், 2009 அன்று AM 10:54

    நமது பகத்சிங்கை கொன்றவர் காந்தி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் போதித்துவிட்டு இங்கே வந்து அஹிம்சையின் உருவம் காந்தி என இரட்டை வேடம் ஏன்? இரண்டில் எது உண்மை?

    பதிலளிநீக்கு
  3. என்ன கொடுமை இது!!!


    /வாழ்நாளெல்லாம் அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணுக்கு இன்னொரு அவமானம். /

    :(

    பதிலளிநீக்கு
  4. இதுல என்ன தப்பு இருக்கு...எங்க வீட்ல இருக்க கத்தி, அரிவாள்மனை போன்றவற்றை வைத்து பூஜை செய்கிறோம். அவரும் ஆயுதத்தை வைத்து பூஜை செய்கிறார். இதுல என்னாங்க சார் தப்பு கண்டுபிடிச்சீங்க...இதுல எங்க இருக்கு ஹிந்து ஃபாசிசம்...

    மோடி மூக்கு சொறியுறதுல கூட தவறுன்னு சொல்லி எப்படித் தான் பலரால கதை எழுத முடியுதுன்னு தெரியல.

    பதிலளிநீக்கு
  5. இதே நேரம் நீண்ட தாடியுடன் தலையில் குல்லாயுடனும் ஒருவர் இத்தகைய‌ பூசை செய்வதாக ஒரு புகைப்படம் வந்திருந்தால் அது இந்த சமூகத்தில், ஊடகங்க‌ளில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கும்போது புரிய வரும் இந்து பாசிஸம்.

    பதிலளிநீக்கு
  6. அநாகரீகமான வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்களை அனுமதிக்க முடியாது. இந்துத்துவா எவ்வளவு நாற்றம் கொண்டது, அசிங்கமானது என்பதை வருகின்ற பின்னூட்டங்கள் சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. "இராம்கோபால் said...
    இதே நேரம் நீண்ட தாடியுடன் தலையில் குல்லாயுடனும் ஒருவர் இத்தகைய‌ பூசை செய்வதாக ஒரு புகைப்படம் வந்திருந்தால் அது இந்த சமூகத்தில், ஊடகங்க‌ளில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கும்போது புரிய வரும் இந்து பாசிஸம். "

    தோழரே இராம்கோபால், பூசை வழிபாட்டைக் கடைபிடிக்கும் சமயமல்ல நீங்கள் சொல்வது. ஆனால், இது காலாகாலமாக இருக்கும் நம் பழக்க வழக்கங்கள். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. இந்து ஃபாசிசம் என்றால் என்ன என்று மாதவ்ராஜ் அவர்களே உன்னைப் போல் ஒருவன் பதிவில் வெளியிட்டிருக்கிறார். அதைப் பாருங்கள் தோழரே !

    பதிலளிநீக்கு
  8. " மாதவராஜ் said...
    அநாகரீகமான வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்களை அனுமதிக்க முடியாது. இந்துத்துவா எவ்வளவு நாற்றம் கொண்டது, அசிங்கமானது என்பதை வருகின்ற பின்னூட்டங்கள் சொல்கின்றன. "

    ஐயா இந்துத்வா நாற்றம் கொண்டதில்லை, மனிதர்கள் நாற்றம் கொண்டவர்கள். உணர்ச்சி கொண்டவர்கள். ஒரு தலைப் பட்சமான, ஒரு குறிப்பிட்ட சமயத்தை மட்டும் இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எழுதும் போலி திராவிடர்கள் பெருகிவிட்டதால், பலர் அநாகரிக பின்னூட்டத்தை இடுகின்றனர். இதற்கும் இந்துத்வாவிற்கும் சம்பந்தம் இல்லை ஐயா.

    பதிலளிநீக்கு
  9. ஆகா ஆகா பெரிய கண்டுபுடிப்பு எல்லாம் கண்டுபுடிச்சுட்டாங்க ரொம்ப புத்திசாலிங்க !!!!.
    நம் நாட்டில் தீவிரவாதம் பெருக இதுதான் காரணம் ஜயா. இப்பதான் எனக்கு ஒரு உன்மை தெரிந்தது. இந்த மாதிரி ஆயுதங்களை தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள். ஆனா நம்ம பூஜைல வச்சு சும்மா கும்பிடறம்.அதான் காரணம். சுட்டா சரியாக போய்விடும். முதல அந்த ஆயுதங்களை எடுத்து சிறுபான்மை ஓட்டுக்காக அரசியல் நடத்தும் போலி மதச்சார்பின்மையாளர்களையும், இவனுகளுக்கு ஜால்ரா தட்டுர மீடியாக்களையும்,அப்புறம் போலிப் பகுத்தறிவுவாதிகளயும்,கடைசியா இருந்தா இதுக்கு ஜால்ரா போடற பதிவர்களையும் சுட்ட அட இங்க நமக்கு வேளை இல்லைனு தீவிரவாதி ஓடிப்போய்ருவான். இது எப்படி????
    மோடி தூங்குனா கூட அதைப் போட்டா எடுத்து ஒரு முதல்வர் இப்படி தூங்கினால் எப்படினு கேப்பாங்க. சத்தமில்லாம ஆயுத பூஜை கும்பிட்டா(பெண்ட்டாட்டி பேரைச் சொல்லி) அது பகுத்தறிவு, இப்படி வெளிப்படையா கும்பிட்டா அது இந்துத்துவா. நல்ல பண்பாடு.

    பதிலளிநீக்கு
  10. ’இங்கே இந்துத்துவாவின், பாசிசத்தின் முகம் ஒன்று கோரப்பல்லைக் காட்டியபடி அப்பட்டமாய் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறதே, அது இந்த மேதாவிகளின் கண்களுக்குத் தெரியவில்லையா? “தன் மக்களை காப்பதற்கு பயன்படும் ஆயுதங்களை வழிபடுவதில் என்ன தவறு” என்ற மோடியின் வசனங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?

    தீவீரவாதம், பயங்கரவாதம் எல்லாவற்றுக்கும் சில முகங்களை வைத்தே காட்சிப்படுத்துபவர்கள் மோடியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். தீவீரவாதத்தின் ஊற்றுக்கண் எங்கு இருக்கிறது என்பது அப்போது புரியும்’

    ஒரு முதல்வர் ஆயுத பூசையில்
    ஆயுதங்களை வைத்து பூசை செய்வதில் உங்களுக்கு என்ன
    பிரச்சினை. இதில் தீவிரவாதம்,
    ஹிந்த்த்துவா,பாசிசம் எங்கு வந்தன?.
    மோடி எது செய்தாலும் குறை
    சொல்வதே உங்களுக்கு வாடிக்கை.

    பதிலளிநீக்கு
  11. அப்பாவி முரு!
    ஏன் வலிக்குது....


    யாரோ குழப்பவாதி, ஸாரி காந்தியவாதி!
    என் கருத்தோடு உரையாடுங்கள்...


    சந்தனமுல்லை!
    கொடுமையை உணர்ந்ததற்கு நன்றி.



    கபிலன்!
    உங்களுக்கு இராம்கோபால் அருமையான எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.அதற்கு சரியான பதில் சொல்லாமல் திசை திருப்புகிறீர்கள். மோடி காலம்காலமாக இப்படி பூஜையை பகிரங்கமாக செய்யவில்லை. 2002க்குப்பிறகுதான் இந்த பூஜையைச் செய்ய ஆரம்பித்தார் என்றுதான் பத்திரிகைகள் சொல்கின்றன. அதாவது கோத்ரா, மற்றும் குஜராத் கலவரங்களையொட்டி. ’எம்மக்களைக் காப்பாற்றும் ஆயுதங்கள் எனக் குறிப்பிடுகிறார். அவர் மக்கள் யார் என்று தெரியும்தானே!

    இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு.இந்துத்துவா அசிங்கமானது மட்டுமல்ல அபாயகரமானது. அதைத்தான் நான் இந்த தேசத்தின் சாபம் என உன்னைப்போல் விமர்சனத்தின் போது தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    மோடி மூக்கைச் சொறியவில்லை. முஸ்லீம் மக்களின் உணர்வுகளைச் சீண்டுகிறார்.


    இராம்கோபால்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மனவிகாரம் கொண்டவர்களை அரசின் உயர் அதிகார மையத்தில் வைத்து 'அரோகரா' போடும் அவலம் இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த 21-ம் நூற்றாண்டிலும் நிகழ்வது வேதனைதான். குறிப்பாக குஜராத்தும், தமிழ்நாடும் இத்தகையோரது கைகளில் அகப்பட்டு பரிதாபகரமாகத் திணறுகிறது. இதனால், இப்பிரதேச மக்கள் மாந்தைகளாகவே உலக அரங்கில் நோக்கப்படுவது வேதனையிலும் வேதனைதான்!!
    -முகிலன்
    தோரணம்

    பதிலளிநீக்கு
  13. modiyai hero vaaka ninaikkum kabilan pondravarkalidamirunthu veru enna ethirpaarkkireerkal.

    பதிலளிநீக்கு
  14. மாதவ்ராஜ் ஐயா,
    இதில் புதியதாக இஸ்லாமியர்களை எதற்கு எடுத்துக் கொண்டு வருகிறீர்கள் என்று புரியவில்லை. இந்து சமய விழாவில் அவர் ஆயுத பூஜை செய்திருக்கிறார். அவ்வளவே விஷயம். இதற்கு கண் மூக்கு காது வைத்து பேசுவதே பலரின் வாடிக்கையாகிவிட்டது. நிஜம் தான், ஒரு முதல்வர் அவர் மாநிலத்தைக் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் ஆயுதமாக சொல்கிறார். குஜராத்தில் தீவிரவாதிகளை வாலை ஆட்டாதவாறு இருப்பதற்கு அதுவே காரணம்.

    காதை சுத்தம் செய்ய குச்சியை எடுத்தாலும், எங்களை அடிப்பதற்கே எடுக்கிறார் என சொல்லுபவர்களிடத்தில் என்ன சொல்ல முடியும். இப்பொழுதெல்லாம் நடுநிலை என்பதே இந்து சமயத்தை எதிர்ப்பதும் பழிப்பதும் தான் என்று கூறுவது தான் முற்போக்கு, சைடுபோக்கு, பகுத்தறிவுங்களா ஐயா?

    பதிலளிநீக்கு
  15. //மோடி மூக்கைச் சொறியவில்லை. முஸ்லீம் மக்களின் உணர்வுகளைச் சீண்டுகிறார்.//
    இந்துகளின் வழிபாடு எப்படி முஸ்லீம் மக்களின் உணர்வுகளைஸ் சீண்டும்.

    //மனவிகாரம் கொண்டவர்களை அரசின் உயர் அதிகார மையத்தில் வைத்து 'அரோகரா' போடும் அவலம் இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த 21-ம் நூற்றாண்டிலும் நிகழ்வது வேதனைதான். குறிப்பாக குஜராத்தும், தமிழ்நாடும் இத்தகையோரது கைகளில் அகப்பட்டு பரிதாபகரமாகத் திணறுகிறது. இதனால், இப்பிரதேச மக்கள் மாந்தைகளாகவே உலக அரங்கில் நோக்கப்படுவது வேதனையிலும் வேதனைதான்!!
    //
    தமிழ் நாட்டில்லா?.தமிழ் நாட்டில் நடப்பது பகுத்தறிவு வாதிகளின் ஆட்சிதானே!

    பதிலளிநீக்கு
  16. மோடியின் நோக்கம் எது என்று அவர் எதுவும் சொல்லாதபோது நாமாக அதை தப்பர்த்தம் செய்வது தேவையில்லாத ஒன்று. நாங்களும்தான் ஒவ்வொரு வருடமும் வீட்டில் இருக்கும் கத்தி, அரிவாள் வைத்து கும்பிடுகிறோம். அவர் அவரைச் சுற்றி எந்நேரமும் தென்படும் ஆயுதங்களை வைத்து கும்பிடுகிறார். சொல்லப்போனால் அவர் அவற்றை கும்பிடுவதுதான் நல்லது, அவை ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் அவருக்குதான் ஆபத்து.

    பதிலளிநீக்கு
  17. "Barari said... modiyai hero vaaka ninaikkum kabilan pondravarkalidamirunthu veru enna ethirpaarkkireerkal."

    பராரி அவர்களே.... அந்த மாநிலத்து மக்கள் அவரை மூன்றாவது முறையும் தேர்ந்தெடுத்து, ஹீரோ ஆக்கி இருக்கிறார்கள். மோடியை நாம் ஹீரோ ஆக்கவில்லை. அது நமக்கு வேலையும் அல்ல. போலி மதச்சார்பின்மை பேசுபவர்களையும், போலி திராவிட கும்பலையும் மக்களுக்கு வெளிக்கொணர்வதே நம் வேலை.

    பதிலளிநீக்கு
  18. //
    மோடி மூக்கைச் சொறியவில்லை. முஸ்லீம் மக்களின் உணர்வுகளைச் சீண்டுகிறார்.
    //

    நம்ம பிரச்சினை இதுதான். இந்து எதுவாவது செய்தால் முஸ்லீம்களின் உணர்வுகளைச் சீண்டுகிறான், முஸ்லீம் எதுவாவது செய்தால் இந்துவின் உணர்வைச் சீண்டுகிறான் என்பது. சொல்லப்போனால் இந்துத்வாவை விட இது போன்ற கருத்துகள் அபாயமானவை. :(

    பதிலளிநீக்கு
  19. //வாழ்நாளெல்லாம் அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணுக்கு இன்னொரு அவமானம். //

    நிச்சயமாக!

    பதிலளிநீக்கு
  20. கபிலன்...
    ஆயுத பூசை என்பது நான் என்னுடைய தொழிலுக்கு என்ன ஆயுதங்கள் பயன்படுத்துகிறேனோ அவற்றை வைத்து பூஜை செய்வது. நான் ஒரு மாணவன் என்றால், என்னுடைய புத்தகங்கள். நான் ஒரு உழவன் என்றால் என்னுடைய கலப்பை. மோடி ஒரு முதல்வர். அவர் ஆயுதங்களை வைத்துப் பூஜை செய்கிறார் அதில் இருக்கக்கூடிய அபத்தத்தை, நக்கலை, திமிரை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா தோழரே. நீங்கள் இந்து மதத்தில் உண்மையான நம்பிக்கை உள்ளவர் என்றால் மோடி மீது உங்களுக்குக் கோபம் வரவேண்டும் நண்பரே. மோடிக்கு ஆதரவாகப் பேசக்கூடாது. இங்கே ஆயுதம் என்பது கருவி என்கிற பெயரில் பயன்பட வேண்டும். ஆயுதம் என்பதற்காக துப்பாக்கி, கத்தி கபடா எல்லாம் வைத்து வழிபடுவது ஆபாசம்

    பதிலளிநீக்கு
  21. நரேந்திர மோடி என்ற தனிநபர், எந்த எழவ வச்சு பூச பண்ணினாலும் நமக்கு கவலையில்லை.

    பல்வேறு நம்பிக்கைகள், கொண்ட இந்த மதசார்பற்ற நாட்டில் இது, இந்த பக்தி இவ்வளவு பகிங்கரமாக தேவையா? என்பதே கேள்வி. சிறுபாண்மையினரிடையே ஒரு பயத்தையும் அதை ஒட்டி ஒன்றாய் வாழும் பல சமூக மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தாதா? என்ற நோக்கில் மட்டுமே தோழர். மாதவரஜ் இதை எழுதிருக்கமுடியும்.


    நேற்று கூட, சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும், தில்லி ராம் லீலா மைதானத்தில், ராவணவதம் செய்ய அம்பு எய்ததை பார்க்கமுடிந்தது. ராவண காவியம் பேசிய திராவிட தறுதலைகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    ராவணன் திராவிட மன்னன்.ஆரிய சூழ்ச்சியினாலே ராமாயணம் எழுதப்பட்டது என்று இந்த அயோக்கியர்கள் பேசியது மறந்திருக்காது. அண்ணாவும், மு.க வும், பலபேருக்கு ராவணன் என்று பெயர் வைத்தனர். ராவண காவியம் எழுதிய புலவர் குழந்தை தமிழறிஞர் ஆக ஆக்கப்பட்டார்.

    கேடு கெட்ட மனிதர்கள்......

    இளிச்சவாய் தமிழன் இருக்கும் வரை இவர்கள் கொட்டம் தீராது.

    பதிலளிநீக்கு
  22. மோடி பண்ணுவது பெரும்பான்மை தீவிரவாதம் அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ்சும் இப்படி தான் ஆட்டம் போட்டான் முதலில் இன்று அவன் இருக்கும் இடம் கூட தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  23. மோடி தும்மினால கூட இந்த்துத்துவா கிருமிகள் வாயிலிருந்து வெளியேரும்.

    ஒரு சிறிய உதாரணம். குஜராத்தின் மக்கள்தொகை ஐந்தரை கோடிக்கு மேல். ஆனால் மோடியின் எல்லா உரைகளிலும் ஐந்து கோடி குஜராத்திகள் என்று வரும். மீதம் ஐம்பது லட்சம் மக்கள் யாரேன்று உங்களுக்கே தெரியும்.

    பதிலளிநீக்கு
  24. @மாதவராஜ், மோடி செய்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அவரின் மதத்தின்படி வழிபாடு செய்கிறார் அவ்வளவே, இதில் ஏன் மற்றதை நுழைக்க வேண்டும்???

    நானும் ஆயுத பூஜை பற்றி படித்துள்ளேன், பொதுவாக நமக்கு, நமது வாழ்கைக்கு உதவும் ஆயுதங்களை வைத்து பூஜை செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  25. //வாழ்நாளெல்லாம் அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணுக்கு இன்னொரு அவமானம்.//

    கசாப்புக் கடைக்காரருக்கு ஆட்டை வெட்டும் கத்திதான் ஆயுதம். அதற்குத்தான் ஆய்த பூஜை போட முடியும். மோடிக்கு இதுதான் ஆயுதம். :‍))

    *****

    நீங்கள் ஏன் காந்தியை இழுக்கிறீர்கள்??

    பாண்டியன் கிராம வங்கியில் வேலை செய்கிறீர்கள் என்பதும் ஏதோ ஒரு தொழிற்சங்கத்தில் விரும்பி உங்களை இணைத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதும் உங்களின் பதிகள் வழியாகத் தெரிந்துகொண்டது. அது தவறாக‌வும் இருக்கலாம். அபப்டி என்றால் கீழே உள்ளது உங்களுக்கானது அல்ல.

    காந்தி பிறந்த மண்ணில்

    1.பீரங்கிகள்,அணுகுண்டு,கத்தி கப்படா எல்லாம் கொண்ட இராணுவம் பல ஆண்டுகளாக இருக்கிறது.

    2.அருவா, வீச்சருவா,வேல் , சக்கரம் போன்ற‌ கொலை ஆயுதங்கள் கொண்ட கடவுளர்கள் இதே இந்தியாவை ஆன்மீகவழியில் காக்கிறார்கள் பல்லாயிரம் வருடங்களாக.

    3.சீக்கியர்கள் (உங்கள் அமைப்பில் சீக்கியர்கள் உண்டா??) குறுவாள் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. அந்த குறுவாள் நகம் வெட்ட நான் வைத்திருக்கும் nail Cutter போல. எனவே உணர்ச்சி வசப்படவேண்டாம்.

    4.நீங்கள் வாழும் தமிழ்நாட்டில் மது அரசாங்கதாலேயே விற்கப்படுகிறது.

    நீங்கள் சார்ந்துள்ள அமைப்பு என்றாவது தமிழகத்தை ஆளும் , ஆண்ட அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருந்ததா?

    ஏன் என்றால் "காந்தி" படம் போட்ட நோட்டுக்களும் பிராந்திக்கடையில் எல்லா ஆட்சிக் காலத்திலும் சாராயத்திற்காக பண்ட மாற்று செய்யப்படுகிறது.

    மோடி செய்வது சுசுபிபீ மேட்டர்.

    காந்தியின் நோட்டு காலங்காலமாக பிராந்திக்கடைக்குப் போய்கொண்டே இருக்கிறது. உங்கள் இயக்கத்தில் யாரும் செக் கொடுத்து பிராந்தி வாங்கிகிறார்களா? அல்லது எல்லாமே கிரடிட் கார்டா? அல்லது யாரும் காந்திக்காக சோம சுரா பாணங்கள் சாப்பிடுவது இல்லையா? :-)))

    அல்லது அப்படிப்பட்ட தொண்டர்கள் உடைய எந்த இயக்கத்திலும் நீங்கள் நீங்களாக விரும்பி இருக்கவில்லையா?


    மோடியின் செயல் மோடியின் செயலே.

    எப்படி நீங்கள் விரும்பி இருக்கும் இயக்கவாதிகள் செய்யும் செயல்களுக்கு நீங்களோ இயக்கமோ பொறுப்பு ஏற்க முடியாதோ ( என்ன அப்ப‌டி ஏற்கிறதா... உடனே குடிப்பவர்களை இயக்கத்தைவிட்டு வெளியேற்றுங்கள்) அது போல இந்துத்துவாவும், இந்துவும் மோடியின் செயலுக்கு பொறுப்பல்ல.

    சரியா.

    மோடியின் செயல் நல்லதோ கெட்டதோ அவரை மட்டுமே சார்ந்தது.

    **

    என்ன, அவர் மாநில முதல்வர் இப்படிச் செய்யலாமா? என்கிறீர்களா? அதனால் என்ன, நீங்கள் சார்ந்துள்ள இயக்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் அருவா சாமியையோ அல்லது காந்தி நோட்டையோ பயன்படுத்துவது இல்லை என்கிறீர்களா ? அதுவும்சரிதான்.

    பதிலளிநீக்கு
  26. இந்துத்துவா மட்டும் அல்ல எல்லா மதங்களும் அப்படியே.

    **

    மோடி தேர்தல் பொதுக்கூட்டத்திலேயே மக்களை கேள்வி கேட்டு ஆம் கொலை செய்வோம் என்ற பதிலை வரவைத்த மகாயோக்கியர்.

    இராவண வதம் என்ற பெயரில் நடக்கும் கூத்தை வேடிக்கை பார்த்த சோனியாவின் செயல் என்ன சாத்வீகமானதா? அதுவும் இந்துத்துவா அரசியலே.

    கதைப்படி:
    ---------

    இராவணன்: அடுத்தவன் மனைவியை தூக்கிட்டுப்போனார்.

    இராமன்: தனது மனைவியையே சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பினார்.


    இராம பக்தர்கள் சீதை இராமனின் மனைவி என்பதனாலேயே இராவணனை எரிக்கிறார்கள்.

    சீதை இராமனால் துரத்தப்பட்டபின்னாலும் அவர்களுக்கு இராமன் பாத்திரம் போற்றுதலுக்கு உரியதே.எல்லாம் அரசியல்.


    ம த ங் க ள் :‍-((((((

    பதிலளிநீக்கு
  27. எனக்குத் தெரிந்து ak 47 சாமி இந்தியாவின் எந்த மூலையிலும் இல்லை.
    இன்னும் அந்தந்த முதல்வர்களுக்கு அவர்களின் கட்சிக்கொடி கட்டிய கார்
    அரசாங்கத்தால் கொடுக்கப்படவில்லை. ஒரு மோடிக்கு, தனிக்கட்சி, தனி மதம், தனி ஏகே 47
    இருக்கலாம் இருக்கும். ஒரு முதல்வருக்கு இவ்வளவு அதீதமாக இருப்பதை ஞாயப்படுத்துவது
    கவலைதரும் விஷயம். ஆயுதம் என்பது கருவி. அது இல்லையென்று உரையெழுதினால் கூட,
    காட்டுமிராண்டிக்காலத்தில், மிருகங்களோடு மல்லுக்கட்டிக்கொண்டு அலைந்த காலத்தில்
    ஆயுதங்கள் பூஜைக்கானதாக இருந்தது. மிருகங்கள் கூட அதுபாட்டுக்குப்போகும் அதைச்சீண்டாத
    வரை, இதுவரை படித்த அறிவியல் வரலாறு எல்லாம் இதைத்தான் சொல்லுகின்றன.

    பதிலளிநீக்கு
  28. //மோடியின் செயல் நல்லதோ கெட்டதோ அவரை மட்டுமே சார்ந்தது.

    **

    என்ன, அவர் மாநில முதல்வர் இப்படிச் செய்யலாமா? என்கிறீர்களா? அதனால் என்ன, நீங்கள் சார்ந்துள்ள இயக்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் அருவா சாமியையோ அல்லது காந்தி நோட்டையோ பயன்படுத்துவது இல்லை என்கிறீர்களா ? அதுவும்சரிதான்.//

    மாதவராஜையும் மோடியை ஒப்பிடுவது, ஆப்பிளையும் ஆரஞ்சுவையும் ஒப்பிடுவதாகும்.

    மோடி வெறும் முதல்வர் அல்ல. அவர் ஒரு ஹீரோ. இந்துத்தாவின் big symbol. இந்துத்தாவை குஜராத் முழுக்கப் ப்ரப்பி விட்டார். நல்லவேளை, பிரதமர் ஆகவில்லை. ஆயின், இந்தியா முழுக்க பரப்புவதே அவர் வேலை.

    அவர் யாருக்கு ஹீரோ என்பது வெட்ட வெளிச்சம்: மாதவராஜுக்கு அசிங்கமாக பின்னூட்டம் போட்டவர்களுக்கு. போடாதவர்களும் எக்கச்சக்கம்.

    இவர் ஆயுத பூசையும் நம் பூசையும் ஒன்றல்ல. இவர் பூசை ஒரு கருத்தை ப்ரவலாக அறிவிக்கிறது. அஃது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது சிலரால்.

    ‘முசுலீம்களுக்கு எச்சரிக்கை’ விடுகிறாது. உம் உயிர் எம் கையில்” என்பதுதான் அது.

    இந்து மதம் ப்ன்னெடுங்காலமாக பலரால் கெடுக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இப்படிப்பட்ட இந்துத்வாக்காரர்களால்.

    முசுலீம்களைவிட இந்துக்களே மோடி போன்றோரால் ப்யப்பட்வேண்டும். ஏனெனில், மோடி போன்றோரால் இம்மதம் உருமாறி, உருத்தெரியாமல் போகும் காலம் வரும். வருமுன் காப்பது இந்துக்களின் கடமையாகும்.

    பதிலளிநீக்கு
  29. My Dear Kabilan,

    Who said Hindutuva doesn't stink? People are good. This Hindutuva spoils them and even eradicting the basic virtue HUMANITY from the men who caught by Hindutuva. I am personally witnessing few of my close friends, who follow Hindutuva. It's terrible. They just see other religious persons as animals and imagine them they are symbol of sin. Hooo They just log in in internet and purpose meet with other religious people, keep abuse them in a uncivilised manner. Ridiculous.

    Same time if any opportunities or good things come up in the company, then they never mind anybody. They restore to selfishnes.

    I am very proud to born in T.N where our people are not much spoiled by this evil Hindutuva.

    If a religion doesn't teach Humanity, then it is nopt all a Religion. Now a days there is no problem at all by the athiest.

    If you cann't like and love a person whom you see, how can you love a God who cann't be seen.

    Alagumukilan

    பதிலளிநீக்கு
  30. //
    கள்ளபிரான் said...
    மாதவராஜையும் மோடியை ஒப்பிடுவது, ஆப்பிளையும் ஆரஞ்சுவையும் ஒப்பிடுவதாகும். //

    கள்ளபிரான்,
    மாதவராஜ் ‍த‍னிமனிதர் ஒரு இயக்கத்தில் உள்ளவர் அந்த இயக்கத்தில் பொறுப்பில் உள்ளவர். ஆப்பிள்

    மோடி த‌னிமனிதர் ஒரு இயக்கத்தில் உள்ளவர் அந்த இயக்கத்தில் பொறுப்பில் உள்ளவர். ஆரஞ்சு

    நீங்கள் சொன்னதுபோல இரண்டும் வேறு வேறு இயக்கங்கள் (பழங்கள்)

    **

    மோடியியின் செயலுக்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கம் அல்ல. அவரை ஆரஞ்சாக‌ நீங்கள் சொன்னாலும் அவரை நான் மனிதராக நினைக்கவே அஞ்சுகிறேன். என்னவோ அவர்பாடு அவர் மக்கள்பாடு. இந்துக்கள்பாடு.

    **

    எதற்கு காந்திவந்தார் இங்கே என்பதுதான் கேள்வி? அதுதான் மாதவராஜுக்கான கேள்வி.காந்து மதுவை ஒழிக்க நினைத்தார். காந்தியை இழுக்கும் மாதவராஜ் சார்ந்த இயக்கம் எப்படி என்பது காந்தியை நினைத்து வருத்தப்படும் மாதவராஜுக்காக. :-‍)))

    பதிலளிநீக்கு
  31. //
    காமராஜ் said...
    எனக்குத் தெரிந்து ak 47 சாமி இந்தியாவின் எந்த மூலையிலும் இல்லை.//

    என்ன கொடுமை காமராஜ் இது?

    விநாயகர் ஊர்வலத்தில் AK 47 விநாயகர் பார்த்தது இல்லையா?

    பதிலளிநீக்கு
  32. காமராஜ்,
    கம்மாச்சூர‌ன்குடி,புதுச்சூரன்குடி,மேடுப்பட்டி ஓத்தாயால்,இருக்கன்குடி என்று பொழுதைக்கழித்தால் இப்படித்தான் :-))

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை சென்னையில் கண்டுகளிக்கவும். AK 47 விநாயர் எல்லம் ரொம்ப சகஜம் பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டார்.
    (சென்னைவாசிகள் திருவல்லிக்கேணி ஜாம்பஜார் அக்கம் பக்கம் மக்கள் விளக்கவும்.
    )

    பதிலளிநீக்கு
  33. " Kiruthikan Kumarasamy said...
    கபிலன்...
    ஆயுத பூசை என்பது நான் என்னுடைய தொழிலுக்கு என்ன ஆயுதங்கள் பயன்படுத்துகிறேனோ அவற்றை வைத்து பூஜை செய்வது. நான் ஒரு மாணவன் என்றால், என்னுடைய புத்தகங்கள்."

    கிருத்திகன் அவர்களே, முதலில் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். மோடி செய்ததை எல்லாம் சரி என்று சொல்லவில்லை. ஆனால், அவர் எது செய்தாலும் தவறு என சொல்லுவது என்ன நியாயம்?
    உங்களின் கூற்றுப்படியே வருகிறேன். ஒரு அரசனுக்கு முக்கியமான வேலை என்ன அல்லது கடமை என்ன? மக்களை பாதுகாப்பது, அவர்களை வளப்படுத்துவது. இப்படி மக்களைப் பாதுகாக்கும் ஆயுதங்களை அவர் பூசை செய்கிறார். இதுல என்ன தப்பு...இதுல எங்க இருக்கு இந்துத்வா?

    பதிலளிநீக்கு
  34. "My Dear Kabilan,
    Who said Hindutuva doesn't stink? People are good. This Hindutuva spoils them and even eradicting the basic virtue HUMANITY from the men who caught by Hindutuva. I am personally witnessing few of my close friends, who follow Hindutuva. It's terrible. They just see other religious persons as animals "

    அழகு முகிலன் அவர்களே,
    நண்பரே, அது இந்துத்வாவால் வந்தது இல்லை. நம் மக்களிடையே சகிப்புத் தன்மை போய் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. குறிப்பிட்ட சமயத்தை குறி வைத்து தாக்குவது தான் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை என்று சொல்லி மக்களின் மனதை நோகடித்ததால் வந்த வினை. அது யாரால் ஏற்பட்டது என்பது ஊரறிந்த உண்மை, நீங்கள் சொன்ன அதே நாத்திகர்கள் போர்வையில் இருக்கும் திராவிட இயக்கங்களால் தான். எப்படி இருந்தாலும், எந்த சமயத்தவராக இருந்தாலும், சமமாக மதித்து பழகுவது தான் அடிப்படையே. அப்படி இல்லாதவன் இந்துவாக மட்டுமல்ல, மனிதனாகவே இருக்க தகுதியற்றவன்.

    அன்பு விஷயத்தில் நீங்க சொன்ன மேட்டர் சரி தாங்க.

    பதிலளிநீக்கு
  35. மங்களூர் சிவா!
    நன்றி.


    பித்தன்!
    வார்த்தைகளில் ஏன் இந்த வன்மமும் வெறியும்? இவ்வளவு உனர்ச்சி வசப்படத் தேவையில்லையே? இப்படித்தான் உரையாடுவீர்களென்றால், சாரி, உங்களோடு பேசிக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.


    அனானி!
    முதல்வராயிருந்து கொண்டு இதைச் செய்வதுதான் முதல் அபத்தம். ஆபத்து. மோடிய தினம் தோறுமா குறை கூறிகொண்டு இருப்பது மாதிரி சொல்வது வேடிக்கையானது.


    முகிலன்!
    நன்றி.


    barari!
    அதற்காக நாம் சும்மா இருந்துவிட முடியாதே..... உண்ண்மைகளைத் தொடந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறதே...

    கபிலன்!
    குஜரத்தில் முஸ்லீம்களை நரவேட்டையாடிவிட்டு, தீவீரவாதத்தை அடக்கப் போகிறோம் என பேசுவது பொருத்தம்தான். அவர் தனது சமய நம்பிக்கைகளை அவரோடு வைத்துக் கொள்ளட்டும். வீதிகளை மீறி ஆயுதங்களை வீரர்களிடமிருந்து வாங்கி, அதை இரண்டரை மணி நேரம் பத்திரிகைக்காரர்களின் முன்னிலையில் பகிரங்கமாகச் செய்வதற்கு நோக்கமே இல்லை என்கிறீர்களா!ndtvயில் வீடியோவைப் பாருங்கள். மோடி எதை செய்தாலும் நியாயமாகத் திர்யும் போலிருக்கிறது உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  36. சுரேஷ்குமார்!
    //இந்துகளின் வழிபாடு எப்படி முஸ்லீம் மக்களின் உணர்வுகளைஸ் சீண்டும்.//

    வெண்பூ!
    //மோடியின் நோக்கம் எது என்று அவர் எதுவும் சொல்லாதபோது நாமாக அதை தப்பர்த்தம் செய்வது தேவையில்லாத ஒன்று.//

    மோடியைப் பற்றி இந்தியாவுக்கு அல்ல, உலகத்துக்கே தெரியும். அமெரிக்காவே அவருக்கு விசா அளிக்க மறுத்த கதையெல்லாம் தெரியும் தானே!
    இந்த வழிபாட்டினை பகிரங்கமாக நடத்துவதன் மூலம் அவர் எதைச் சொல்ல வருகிறார்? எந்த முதல்வர் இதுபோல் இந்த நாட்டில் இப்படி வைழ்ப்பட்டு இருக்கிறார்கள்?
    அதுவும் மத மோதல்கள் மிக தீவீரத்துடனும், அழுத்தத்துடனும் இருக்கும் ஒரு மாநில முதல்வரின் இந்தச் செய்கை எதை அடையாளப்படுத்தும்? யாரைப் பிரதிநிதிப்படுத்தும்?


    கபிலன்!
    இந்துத்துவாவாதிகளை அமபலப்படுத்துவதே எம் வேலை!


    வெண்பூ!
    //நம்ம பிரச்சினை இதுதான். இந்து எதுவாவது செய்தால் முஸ்லீம்களின் உணர்வுகளைச் சீண்டுகிறான், முஸ்லீம் எதுவாவது செய்தால் இந்துவின் உணர்வைச் சீண்டுகிறான் என்பது. சொல்லப்போனால் இந்துத்வாவை விட இது போன்ற கருத்துகள் அபாயமானவை. :(//

    இல்லை வெண்பூ. எல்லாவற்றையும் அப்படிப் பார்க்கவில்லை. எதெல்லாம் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விலைவிக்கக் கூடியதாய் இருக்குமோ, அது பற்றி மட்டுமே பேசப்படுகிறது.


    வால்பையன்!
    நன்றி.


    கிருத்திகா குமாரசாமி!
    //மோடி ஒரு முதல்வர். அவர் ஆயுதங்களை வைத்துப் பூஜை செய்கிறார் அதில் இருக்கக்கூடிய அபத்தத்தை, நக்கலை, திமிரை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா தோழரே. நீங்கள் இந்து மதத்தில் உண்மையான நம்பிக்கை உள்ளவர் என்றால் மோடி மீது உங்களுக்குக் கோபம் வரவேண்டும் //
    இந்தப் பதிவின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  37. / /இதே நேரம் நீண்ட தாடியுடன் தலையில் குல்லாயுடனும் ஒருவர் இத்தகைய‌ பூசை செய்வதாக ஒரு புகைப்படம் வந்திருந்தால் அது இந்த சமூகத்தில், ஊடகங்க‌ளில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கும்போது புரிய வரும் இந்து பாசிஸம். //
    மாதவ் & இராம்கோவலுக்கு............
    மக்கா நீங்க எல்லாம் இந்த உலகதில் தான் இருக்கீங்களா இல்ல செவ்வாய், சனினு எங்கன போய்த் தொலைஞ்சுட்டிங்களா?
    இன்னாமா சரியா பேப்பர் எல்லம் கண்டுகின மாட்டிங்களா?
    நீண்ட தாடி தலையில குல்லா( பின் லேடன்) உடன் ஒருத்தர் பக்கத்துல துப்பாக்கியும் வைத்து தொழுகை நடத்தும் படமும், கேப்புக்காட்சியும் நீங்க பாக்கலில்யா இல்ல உங்களுக்கு கண்ணு அவிஞ்சு போச்சா. என்னமா டகிலு உடறிங்கப்பா?
    ஒரு ஆயுத பூஜை அது கூட கட்சியில் இல்லை மக்களின் நலன் காக்கும் காவல் துறையில், அதில் கலந்து கொண்டவர் மோடி என்றவுடன் பத்திரிக்கைகாரனுக்கு அரிக்குமாம். உடன பதிவர்கள் எல்லாம் அதை வச்சு சொறிவானுகளாம். என்னா படம் காட்டுறிங்க. எங்க ஊரு போலிசு ஸ்டேசன்ல கூடத்தான் பூசை போட்டு சுண்டல் தந்தாங்க, அதுக்கு மட்டும் வாயத்திறந்து துண்ணுட்டு வரலை.
    என்ன ஆளுக்கப்பா நீங்க ஒரு மனுசன் நின்னா தப்பு நடந்தா தப்புனு, ஆனா அவரு இதை எல்லாம் ஒரு ம.... கூட நினைக்கலை.
    அவர் சேவையை அவர் செய்யறார். அதுனாலதான் நாடு பூரா இடத்துக்கு தக்கன மாதிரி கும்மியடிக்கற எதிர்கட்சி ஆளுக இடைத்தேர்தல மண்ணைக் கவ்வினாக..
    ஒரு மக்கள் கூட்டம் செய்து வரும் பூசையை, அதை எல்லா தொழிலில் உள்ளவர்கள்லும் அவர்கள் கருவிகளுக்கு பூசை செய்தால் ,
    விலைமகள் எதை பூசை செய்வாள்னு கேட்ட மனவக்கிறம் புடிச்ச கூட்டம் தான நீங்க... உங்க கிட்ட போய்.

    பதிலளிநீக்கு
  38. மோடியையும் இந்துவா ரெண்டையும் வச்சு சும்மா கில்லாடி கணக்கா 40 பின்னூட்டம் வாங்கிட்டிங்க பாடா அளுப்பா.
    நீங்க மட்டும் இல்ல இப்ப எல்லாரும் இதை வச்சுத்தான் ஓட்டு வாங்கி தங்க வயித்துப் பொழப்பை நடத்துறாங்க. அவங்க புள்ள குட்டிக கூட வேற வேலைக்கு போக வக்கில்லாம இதை வச்சுதான் பொழப்பு ஓடுது. நீங்களும் பெரிய ஆளா வருவீங்க.
    ஆமா எந்த தேர்தல எங்க நிற்க்க போறிங்க, மறக்காம சொல்லுங்க களப்பணி ஆற்றிட விரைந்து வருகிறேன்.(டைய்லி குவாட்டரும் கோழி பிரியானியும் 500 ரூவா காசும் கொடுப்பிங்க இல்ல). நமது இந்த கலாச்சாரத்தையும் மொழியையும் மதச்சார்பின்மை காப்பதில் உங்களேடு எனக்கும் பங்கு உண்டு.

    பதிலளிநீக்கு
  39. ஆருரன் விசுவநாதன்!
    //பல்வேறு நம்பிக்கைகள், கொண்ட இந்த மதசார்பற்ற நாட்டில் இது, இந்த பக்தி இவ்வளவு பகிங்கரமாக தேவையா? என்பதே கேள்வி. சிறுபாண்மையினரிடையே ஒரு பயத்தையும் அதை ஒட்டி ஒன்றாய் வாழும் பல சமூக மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தாதா? என்ற நோக்கில் மட்டுமே தோழர். மாதவரஜ் இதை எழுதிருக்கமுடியும்.//

    அதுவேதான். மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.




    பழைய பதிவர்!
    ஒங்களுக்கு ஒன்று தெரியுமா.... இந்து பாசிஸ்ட் அசோக் சிங்கால் சொல்கிறார் : “இந்தியாவுக்கு புஷ்ஷைப் போல, ஏரியல் சரோனைப் போல, மோடியைப் போல ஒரு பிரதமர் வேண்டும்”. விளங்குமா நாடு?


    உறையூர்காரன்!
    அதுபற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தால் இந்தியாவைப் பிடித்த நோயை சரி பண்ணிவிடலாமே!


    Mãstän!
    கபிலனுக்கும், வெண்பூவுக்கும் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.


    கல்வெட்டு!
    காந்தி குஜராத்தில் பிரந்தவர் என்கிற அடிப்படையில் எழுதினேன். நீங்கள் இந்தியாவை குறிப்பீட்டுச் சொல்லி இருக்கிறீர்கள். காந்தியின் கொள்கைகள் இங்கு துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன என்பது உண்மைதான். நான் அஹிம்சை என்னும் அவரது கொள்கையை முன்வைத்து எழுதி இருக்கிறேன். அதுபற்றி பேசுங்கள். இல்லையென்றால் விவாத்தின் திசை மாறிவிடும். காந்தி குறித்து நாளை அவரது பிறந்த் நாளில் உரையாடுவோம் விரிவாக.


    காந்தி நோட்டை பயன்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் சொல்லி, எதை நியாயப்படுத்த முன் வருகிறீர்கள் எனத் தெரியவில்லை.


    //எல்லா மதங்களும் அப்படியே//. உண்மைதான். திரும்பவும் சொல்கிறேன். இந்து மதம் வேறு. இந்துத்துவா வேறு. நான் இந்துத்துவாவைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்.


    காமராஜ்!
    //ஆயுதம் என்பது கருவி. அது இல்லையென்று உரையெழுதினால் கூட,
    காட்டுமிராண்டிக்காலத்தில், மிருகங்களோடு மல்லுக்கட்டிக்கொண்டு அலைந்த காலத்தில்
    ஆயுதங்கள் பூஜைக்கானதாக இருந்தது. மிருகங்கள் கூட அதுபாட்டுக்குப்போகும் அதைச்சீண்டாத
    வரை, இதுவரை படித்த அறிவியல் வரலாறு எல்லாம் இதைத்தான் சொல்லுகின்றன//
    அருமை.
    மோடிக்கு பிற மத்தத்தவர்கள் எல்லோரும் விலங்குகள்தான் போலும்.



    கள்ளபிரான்!
    //இந்து மதம் ப்ன்னெடுங்காலமாக பலரால் கெடுக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இப்படிப்பட்ட இந்துத்வாக்காரர்களால்.//
    வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  40. அழகுமுகிலன்!
    நன்றி.


    பித்தனின் வாக்கு!
    வெறும் பின்னூட்டத்திற்காக இதை எழுதியிருப்பதாக கூறி, அர்த்தம் கெட்டுப் பேசும் உமக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    பதிலளிநீக்கு
  41. //விலைமகள் எதை பூசை செய்வாள்னு கேட்ட மனவக்கிறம் புடிச்ச கூட்டம் தான நீங்க... உங்க கிட்ட போய். //


    அப்படியா கேட்டானுங்க படுபாவி பசங்க,

    சரி பித்தன் அண்ணே லிங்கம்னா என்ன?
    அதை ஏன் கும்பிடுகிறோம்!

    பதிலளிநீக்கு
  42. விய‌ப்பும் வேதனையிலும் வாயடைத்துப் போகிறது; மோடியின் செய‌ல் அல்ல‌; அதை நியாய‌ப்ப‌டுத்தி உணர்வெழுச்சியோடு பேச‌ இத்த‌னை பேரா என்று?

    ஆனால், ச‌ரியாக‌ப் புரிந்து கொள்ள அதை விட‌ ஏராள‌ம் பேர் இருக்கின்ற‌ன‌ர் என்ப‌து ந‌ம்பிக்கையூட்டுகிற‌து.

    பதிலளிநீக்கு
  43. ....



    //
    மாதவராஜ் said...
    காந்தி நோட்டை பயன்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் சொல்லி, எதை நியாயப்படுத்த முன் வருகிறீர்கள் எனத் தெரியவில்லை.


    //எல்லா மதங்களும் அப்படியே//. உண்மைதான். திரும்பவும் சொல்கிறேன். இந்து மதம் வேறு. இந்துத்துவா வேறு. நான் இந்துத்துவாவைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்.

    //

    ..

    மாதவராஜ்,
    உங்கள் இயக்கத்தார் சாரயம் குடிக்க காந்தி நோட்டைப் பயன்படுத்துகிறார்களா?

    அப்படி செய்தால் மது விலக்கிற்கு ஆதரவான காந்தியின் கொள்கைக்கு இது ஒரு அவமானக் குறியீடு அல்லவா?

    அப்படி நீங்கள் நினைத்து இருந்தால் என்றாவது இதைக் கண்டு காந்தி பிறந்த நாட்டிலா இப்படி என்று பொங்கியுள்ளீர்களா?


    மோடியின் செயலை காந்தி பிறந்த மண்ணில் இப்படியா என்று கேட்கும் முன், ஆதே காந்தி பிறந்த நாட்டில் நாம் எப்படி இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.

    மோடியை கிழித்து தொங்கவிடுங்கள் காந்தி எதற்கு?


    காந்தி நோட்டை பயன்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் சொல்லி, எதையும் நியாயப்படுத்தவில்லை. உங்கள் பக்க ஓட்டையை அதே காந்தி உதாரணத்தை பயன்படுத்தி, உங்கள் இடத்திலும் காந்தி படும்பாட்டைச் சொன்னேன்.




    *****


    // இந்து மதம் வேறு. இந்துத்துவா வேறு. //

    ஓ அப்ப‌டியா ? தெரியாது எனக்கு.

    இந்துமதம் என்ற‌ ஒன்று உண்டா ?

    பீகாரில் கொண்டாடப்படும் இராவணலீலாவும் இந்துமதம்தான் டெல்லியில் நடக்கும் இராமலீலாவும் இந்துமதம்தான்.

    இந்துமத வெறியர்கள்தான் இந்துத்துவாக்கூட்டம் என்பது எனது புரிதல்.

    பாலும் தயிரும் வேறு வேறுதான்.

    ஆனால் தயிர் பாலில் இருந்து வந்தது என்பது பொய்யல்ல. பாலில் இருந்து தயிர் வந்தது உண்மை.



    ****

    ..

    பதிலளிநீக்கு
  44. அன்புள்ள தோழரே

    உங்களுடைய பதிவின் ஆதங்கத்தையும் நோக்கத்தையும் எவரும் சந்தேகிக்க முடியாது. எனினும் விமரிசனங்களை வாரியிறைப்பவர்களைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது. பொறுமையாக அனைத்திற்கும் பதிலளித்தது உங்களுடைய நேர்மையை, பதிவின் மீதான அக்கறையை காட்டுகிறது. மதவெறி/ பாசிசம் போன்ற வார்த்தைகளுக்கு அகராதியில் பொருள் தேட வேண்டியதில்லை.. சற்றே குஜராத்தின் கறுப்பு தினங்களை திரும்பிப் பார்த்தால் போதும்...

    பவித்ரா

    பதிலளிநீக்கு
  45. கொள்கை வேறுபாடுகள் தான் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டனவே தவிர ,தனிப்பட்ட விமர்சனத்தில் எந்த கருத்தையும் சொல்லவில்லை.
    தங்களின் பொறுமையான பதில்களுக்கு நன்றி மாதவ்ராஜ் ஐயா !

    பதிலளிநீக்கு
  46. ஆனாலும் அண்ணன் நீங்க இப்படி ஒரு ”தேசத்தலைவரைப்” பத்தி அநியாயத்திற்கு உண்மைய புட்டு புட்டு வச்சிருக்க கூடாது.என்னதான் இருந்தாலும் இது கொஞ்சமும் நல்லாயில்ல....அவரு யாரு தெரியுமா....?

    மோடி ஒரு மதச்சார்பற்ற மனிதர்.அவரை பொறுத்தவரை எல்லா உயிரும் இன்புற்றிருக்கவே விரும்புவார்.அவர் ஒரு அஹிம்சாவாதி.மதங்களை கடந்து மனிதநேயத்தால் அறியப்பட்டவர்.....வேறு என்ன வார்த்தை இருக்கு.....இருங்க தேடிப் பார்த்துச் சொல்றேன்....(நோ!நோ! சிரிக்க கூடாது நான் சீரியஸா பேசும் போது என்ன இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு)

    பதிலளிநீக்கு
  47. தீபா!
    இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. மதம் அப்படியொரு உணர்ச்சிவசப்படும்படியாக மனிதர்களை காலம் காலமாக வைத்திருக்கிறது.!!


    கல்வெட்டு!
    மகாத்மாவின் படத்தை ருபாய் நோட்டில் அச்சடித்ததே தவறு என்பது என் கருத்து. அதைவிட்டு, அதை இப்படி பயன் படுத்துகிறார்கள், அப்படி பயன்படுத்துகிறார்கள், இழிவு படுத்துகிறார்கள், அவர்கள் யோக்கியமா, இவர்கள் யோக்கியமா எனத் திரும்பத் திரும்பப் பேசுவது வெறும் வாதங்களுக்கும், பேச்சு சாதுர்யங்களுக்கு மட்டுமே உதவும்.





    பவித்ரா பாலு!
    மிக்க நன்றி.
    //மதவெறி/ பாசிசம் போன்ற வார்த்தைகளுக்கு அகராதியில் பொருள் தேட வேண்டியதில்லை.. சற்றே குஜராத்தின் கறுப்பு தினங்களை திரும்பிப் பார்த்தால் போதும்...//
    ஆமாம்.


    கபிலன்!
    நன்றி. எதற்கு இந்த ஐயாவெல்லாம்? மாதவராஜ் என்றே சொல்லலாமே நண்பரே!

    அண்டோ!
    இப்படியெல்லாம் சொல்லாதே. நரேந்திரமோடி பூஜைக்கு வைத்திருக்கிற துப்பாக்கியை எடுத்து உன்னைக் குறிபார்த்துவிடுவார்.

    பதிலளிநீக்கு
  48. நண்பர்களே!

    சிலர் மோடியைப் பற்றி எழுதியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். சிலர் காந்தியை ஏன் இங்கு இழுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர். மதரீதியாக, குஜாராத் போன்ற பிரச்சினக்குரிய நிலத்தில், அதுவும் ஒரு முதல்வரே ஆயுதங்களை போற்றுவதும் பூஜை செய்வதும் சரியா என்பதே நம் கேள்வி.

    தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது, இந்தியாவில் பஞ்சாப் ஒட்டிய பகுதியிலும் வங்காளத்தை ஒட்டிய பகுதியிலும் கலவரங்கள் ஏற்பட்டன. பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 55000 இராணுவவீரர்கள் கொண்டு வராத அமைதியை, வங்காளத்தில் ஒற்றை மனிதராக காந்திஜி கொண்டு வந்தார் என்பது கண் முன் நிகழ்ந்த சரித்திரம். அற்புதம்.

    அதனோடு, மோடியின் பூஜையை ஒப்பிட்டுப் பாருங்கள். எல்லாம் புரியும்.

    பதிலளிநீக்கு
  49. அன்புள்ள மாதவ் அவர்களுக்கு என் தரம் கெட்ட வார்த்தைகளுக்கு மன்னிக்கவும். நடுனிலையுடன் என் விமர்சங்களையும் பதிவிட்டமைக்கு நன்றி. கொஞ்சம் இதே நடுனிலையுடன் சிந்தியுங்கள்,
    இந்த குறைந்த பட்ச அநாகரிக வார்த்தைகளே மனக்குழப்பத்தை உண்டுபண்ணுகின்றன என்றால் கடந்த நாற்பது வருடமாக எங்களையும்,(இந்துக்களையும்)எங்களின் கடவுள்களையும், புராணங்களையும் நீங்களும் உங்களின் இயக்கமும் எவ்வளவு தரம் தாழ்ந்து, அச்சில் ஏற்ற முடியாத சொற்களில் பத்திரிக்கை மற்றும் பொதுக்கூட்டங்களில் விமர்சனம் செய்துள்ளிர்கள். இத்தனை நாள் பொறுமையாக இருந்தேம். இப்போது கேள்வி கேக்கின்றேம். அதுகூட உங்களின் பாணியில் பேசும் நாகரிகம் இல்லாமல் கொஞ்சம் கோவத்தைக் காட்டுகின்றேம்.அவ்வளவே எங்களின் கோபம் அநியாயம் என்றால் மன்னித்துவிடுங்கள். நானும் என் கோவத்தை கட்டுப் படுத்த முயற்ச்சிக்கின்றேன். ஆனாலும் சில சமயம் இதுபோன்ற கட்டுரைகள் அதன் தாக்கத்தை வெளிக் கொணர்கின்றது. மோடி ஒரு நல்ல தலைவர், அவர் முதல்வர் ஆனதில் இருந்து குஜராத் பல விசயங்களில் முதன்மை இடம் பெற்றியிருக்கின்றது, மின்வசதி,சாலை, கட்டுமானம்,முதலீடு, வர்த்தகம், சுகாதாரம் போன்றவற்றில் இன்று இந்தியாவில் குஜராத்துக்குதான் முதல் இடம். இதை தாங்களும் மறுக்க மாட்டிர்கள். அவர் குஜராத்தில் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும், அல்லது அவர்களின் கையை வெட்டு காலை வெட்டு என்று அறிக்கை கொடுத்தால் உங்களை வீட நாந்தான் முதலில் எதிர்த்து பதிவு இடுவேன். தனிப்பட்ட முறையில் அவரும் மிக எளிமையானவர்,திறமையானவர் மற்றும் நல்லவர். ஆனால் அரசியல் முதல் எதிரி என்ற முறையில் காங்கிரஸும், வலதுசாரி மீடியாக்களும் இந்து எதிர்ப்பு என்ற முறையில் நீங்களும் விமர்சனம் செய்கிறிர்கள். அதுகூட பரவாயில்லை அது உங்களின் பிழைப்பு. ஆனால் மக்களின் உயிர் காக்கும் ஆயுதங்களுக்கு அவர் பூசை செய்தது ஏன் தங்களின் கண்களை உறுத்திகிறது, அவர் என்ன ஆர் எஸ் எஸில் கட்சியில் முஸ்லிம்களை கொல்ல வைத்துருக்கும் ஆயுதங்களை பூஜை செய்வது போல ஒரு பில்டப் கொடுக்கின்றிர்கள். எதிர்கட்சிகளுக்கு இது பிழைப்பு அவர் என்ன செய்தாலும் எதிர்ப்பார்கள். உங்களுக்கு, ஒரு இந்தியன், இந்தியாவில் அவன் சம்பிரதாயப் படி ஒரு பூசை செய்கின்றான். அதில் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம். ஒரு முதல்வர் இப்படி பண்ணுகிறார் இது மூட நம்பிக்கை வளர்க்கும் என்று பதிவு இட்டு இருந்தால் நானும் வரவேற்று இருப்பேன், ஆனால் நீங்கள் உங்கள் பதிவை அமைதியாக நடு நிலையுடன் ஒருமுறை நீங்களே படியுங்கள் உங்களின் மனதின் வன்மம் புரியும். நன்றி. தாங்கள் என்னுடன் பேச மறுத்ததால் இனி நான் தங்களின் பதிவுகளை அமைதியாக படித்துப் போய்விடுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  50. பித்தனின் குரல்!
    நான் எதோ பின்னூட்டத்திற்காக இந்தப் பதிவை எழுதியது போலச் சொல்லி, ஒருவித கேலித் தொனியொடு எழுதியதனால்தான் நான் பதில் சொல்ல அவசியம் இல்லையெனச் சொன்னேன்.
    நண்பரே! நான் அனைவரின் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறவன் இல்லையென்றாலும், மதிக்கவேண்டும் என நினைக்கிறவன். பொதுவாகவே உரையாடல்கள் நாகரீகமாகவும், ஒருவரையொருவர் மதிக்கிற விதமாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசை.இங்கு என்ன மல்யுத்தப் போட்டியா நடக்கிறது? அவரவர் கருத்தை வெளிப்படுத்துகிறோம் அவ்வளவுதானே! நட்போடும், பிரியத்தோடும் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை போடலாமே! இப்போது நீங்கள் எழுதிய தொனியில் எழுதியிருந்தால் நிச்சயம் அதற்கான என் கருத்தையும் சொல்லியிருப்பேன்.

    முதலில் என்னை எந்த இயக்கத்தோடு சம்பந்தப்படுத்தி தாங்கள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. நான் சார்ந்த இயக்கம், ஜனநாயகரீதியான கருத்துக்களையும், போராட்டங்களையும் தான் வெளிப்படுத்துகிறார்கள் எனினும், இந்தக் கருத்து என் கருத்தாகவே மதித்து என்னோடு உரையாடுவதுதான் இங்கு சரி எனத் தோன்றுகிறது.

    அப்புறம் இப்படிச் சொல்லி இருக்கிறீர்கள்.//மோடி ஒரு நல்ல தலைவர், அவர் முதல்வர் ஆனதில் இருந்து குஜராத் பல விசயங்களில் முதன்மை இடம் பெற்றியிருக்கின்றது, மின்வசதி,சாலை, கட்டுமானம்,முதலீடு, வர்த்தகம், சுகாதாரம் போன்றவற்றில் இன்று இந்தியாவில் குஜராத்துக்குதான் முதல் இடம். இதை தாங்களும் மறுக்க மாட்டிர்கள். அவர் குஜராத்தில் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும், அல்லது அவர்களின் கையை வெட்டு காலை வெட்டு என்று அறிக்கை கொடுத்தால் உங்களை வீட நாந்தான் முதலில் எதிர்த்து பதிவு இடுவேன். தனிப்பட்ட முறையில் அவரும் மிக எளிமையானவர்,திறமையானவர் மற்றும் நல்லவர்.//

    இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிறையச் சொல்ல முடியும். முதலில் முடிந்தால் பொறுமையாக http://mathavaraj.blogspot.com/2009/04/blog-post_18.html என்னும் பதிவையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள http://video.google.com/videoplay?docid=3829364588351777769&q=final+solution+india லிங்க்கில் உள்ள படத்தையும் பாருங்கள். மோடி வெற்றி பெற்றவுடன், டிசம்பர் மாதக்குளிரில் பட்டாசு வெடித்து ஒரு எட்டு வயது சிறுவன் ’முஸ்லீம் தாய்மார்களை புணருங்கள்’ என்று சொல்கிறானே, அவனுக்குள் யார் இந்த வெறுப்பை ஏற்றியது? படித்துவிட்டும், பார்த்துவிட்டும் வாருங்கள், பேசுவோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  51. Modi is the great leader. He is the only person who can lead India without Terrorism. Hope he will be in PM office soon.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!