நாலு தட்டு

 

 

நான்கு புரோட்டா சாப்பிட்டுவிட்டு, காசு இல்லாமல் நின்றான் அந்தச் சிறுவன். அந்த மவனே, இந்த மவனே என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் தன் ஆத்திரத்தை தீர்த்துப் பார்த்த ஓட்டல்காரருக்கு அடங்கவில்லை. எதிரே இருந்த காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று, ‘இவனை நாலு தட்டு தட்டுங்க சார்...’ என்று இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்தார்.

 

அடுத்த நாள் காலை, கான்ஸ்டபிள் ஒருவன் ஒட்டல் வந்து, “ஐயா, நீங்க கொண்டு வந்த பையன் ஸ்டேஷன்லதான் இருக்கான். அவனுக்கு ஒரு நாலு தோச கொடுத்து அனுப்புங்க.” என்றார். இதென்னடா வம்பு என நினைத்த ஓட்டல்காரர், தோசையை கொடுத்து அனுப்பினார். மதியம் இன்னொரு கான்ஸ்டபிள் வந்து “அந்த தம்பிக்கு மதியச் சாப்பாடு கொடுத்தனுப்புங்க...” என்றார். வேறு வழியில்லாமல் முனகிக்கொண்டே கொடுத்தனுப்பினார் ஓட்டல்காரர்.

 

இரவும் அதுபோலவே கட்டளை காவல் நிலையத்திலிருந்து வரவும், நான்கு புரோட்டாக்களை பார்சல் செய்துகொண்டு ஓட்டல்காரரே காவல் நிலையம் எடுத்துச்சென்று “என்ன சார் இது...! நாலு தட்டு தட்டி அவன விட்டுருவீங்கன்னு பாத்திங்கன்னா... இப்படியே இங்கேயே வச்சிக்கிட்டு... இதென்ன சார் நியாயம்...?’ என்று மெல்ல இன்ஸ்பெக்டரிடம் தன் வருத்தத்தை தெரிவித்தார்.

 

“இப்பத்தானே அவன விட்டுருங்கன்னு சொல்லியிருக்கீங்க.... சாப்பிட்டு முடிச்சவுடன அனுப்பி வச்சிர்றேன்..” என்றார் இன்ஸ்பெக்டர். இந்த அளவோடு பிரச்சினை முடிந்ததே என்று நிம்மதியடைந்த ஓட்டல்காரருக்கு “அவனோட ஊரு மதுரப்பக்கமாம். பஸ்செலவுக்கு பணம் கொடுத்துருங்க..”  என்று நாலாவது தட்டு விழுந்தது.

 

*

கருத்துகள்

23 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. குறுங்கதை என்ராலும் நல்ல குறும்புக்கதை. பல சுவைகளோடு அவ்வப்போது இதுபோன்ற நகைச்சுவை
    உண(ர்)வும் பகிர்ந்திடுங்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. :)) நல்லாருக்கு..நிஜமா இருந்தா இன்னும் நல்லாருக்கும்!

    பதிலளிநீக்கு
  3. ஆஹா... பல அர்த்தம் உள்ளே பொதிந்திருந்தாலும்..

    மனசு விட்டு ரசித்து சிரித்தேன்

    பதிலளிநீக்கு
  4. நான்கே பத்திகளில் நாலு தட்டு....ரசிக்க முடிந்தது !!!

    பதிலளிநீக்கு
  5. சின்னதா அருமையாய் இருக்கு சார்.

    பதிலளிநீக்கு
  6. கடுகு சிறுத்தாலும் காரம் குறையலை
    நன்று வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. i dont think its really nice story. y does the hotel owner need to do everything free??? i dont understand

    பதிலளிநீக்கு
  8. ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
    அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

    உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

    விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு. நன்றாக தட்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. இன்னும் கூட அந்தச்சிரிப்பு ஓயவில்லை

    பதிலளிநீக்கு
  11. படிப்பதற்கு ஸ்வாரஸ்யமாக இருந்தது மாதவ்

    பதிலளிநீக்கு
  12. அண்ணா! நறுக்குனு நாலு தட்டு தட்டியிருக்கீங்க சூப்பர்...!

    அப்புறம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....வேறு ஒன்றுமில்லை இந்த பதிவிற்காக ஒரு அனானி இட்ட கமெண்ட்
    //i dont think its really nice story. y does the hotel owner need to do everything free??? i dont understand//சம்பந்தமான என் பார்வையிது....

    அனானி அவர்களே!
    மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத பிற்போக்கு சிந்தனை கொண்டவனல்ல நான்.ஆனால் அதே நேரத்தில் மாற்றுக் கருத்து சொல்கிறோம் என்ற பெயரில் மூடத்தனமாக உளரி கொட்டுவதையும் பார்த்துக் கொண்டு கடந்து செல்லும் பழக்கம் எனக்கு கிடையாது.உங்களுக்கு இந்த பதிவில் என்ன பிரச்சனை என்றே எனக்கு விளங்கவில்லை.... நான் நேரடியாகவே சொல்கிறேன்...எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் உங்களுக்கு இந்த பதிவின் மேல் உள்ள மாற்றுக் கருத்தை விட பதிவரின் மேல் ஏதோ காரணமில்லாத கோபமும்,வெறுப்பும் இருப்பதாகவே எண்ணுகிறேன்.அப்படி இருக்குமானால் அதை முடிந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்....
    இல்லையில்லை இது என் கருத்து சுதந்திரம் நான் எனக்கு தோன்றுவதை கிறுக்குவேன் என்றால்....O.k... நல்லா கிறுக்குங்க...உங்க கைவலிக்கும் வரை கிறுக்குங்க.....உங்கள் கிறுக்கல்கள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  13. புரோட்டா மேலும் ருசிக்கின்றது அண்ணா

    பதிலளிநீக்கு
  14. Similar incident happened 10-12 yrs ago when I was in my 6th grade @ Coimbatore. Three of my classmates escaped from school and were caught by police in Madurai. They were kept in custody and were provided with food and care till their parents turned up there...

    This post reminded me of that incident :)

    பதிலளிநீக்கு
  15. துபாய் ராஜா!
    சந்தனமுல்லை!
    அப்பாவி முரு!

    கதையல்ல. நிஜம் இது. நன்றி.


    ராம்ஜி!
    கதிர்!
    செய்யது!
    இளவட்டம்!
    பித்தன்!
    தியாவின் பேனா!

    நன்றி.


    அனானி!
    எல்லாவற்றையும் ஓட்டல்காரர் இலவசமாகக் கொடுக்கச் சொல்லவில்லையே!

    ராம்!
    செந்தில்குமார்
    முத்துலட்சுமி!
    காமராஜ்!
    வால்பையன்!
    நந்தா!
    அண்டோ!
    அருண்!

    நன்றி.


    ஆடுமாடு!
    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.


    உழவன்!
    நன்றி.

    ck!
    ஆம்.அதுதான் வழக்கம்.


    மங்களூர் சிவா!
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!