-->

முன்பக்கம் � வலைப் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு அன்பான அழைப்பு!

வலைப் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு அன்பான அழைப்பு!

 

 

வாசித்து வாசித்து தீராது போலிருக்கிறது. வலையுலகில் அப்படி எழுத்துக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கின்றன. வித விதமான எழுத்து மொழிகள், புதிய கருத்துக்கள், மாறுபட்ட சிந்தனைகள், பயண விவரிப்புகள், ஆரோக்கியமான விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. தினம் ஒரு புதிய வலைப்பக்கமாவது யார் மூலமாவது, எப்படியாவது அறிமுகமாகி மணம் வீசுகிறது. உலகம் விரிந்துகொண்டே இருக்கிறது.

 

நன்கு அறிமுகமான எழுத்தாளர்களிலிருந்து, ‘எழுதித்தான் பார்ப்போமே’ என்று எழுத்துப் பயணம் துவங்கியிருக்கிறவர்கள் வரை அனுபவமும், புதுமையும் சேர்ந்து அழகு சேர்க்கின்ற வெளி இந்த வலையுலகம். சுதந்திரமாக பறக்கின்ற அனுபவம் வாய்க்கிறது. எல்லோரிடமும் ஒரு மொழியும், ஒரு உலகமும், ஒரு காலமும் இருக்கிறது. தமிழ் இலக்கியத்திற்கு புதியச் சிறகுகள் விரிகின்றன.சிறுகதை, கவிதை என இந்த வடிவம்தான் என்றில்லாமல் அனுபவங்களாக, நிகழ்வுகளாக, விமர்சனங்களாக ஆயிரம் பூக்கள் மலர்ந்துகொண்டு இருக்கின்றன.

 

இவைகளில் முக்கியமானவற்றை தொகுத்தால் நன்றாக இருக்குமே என அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டு இருப்பேன். எழுத்தாளர் பவா.செல்லத்துரை அவர்கள் இப்போது முன் வந்திருக்கிறார். நல்ல பதிவுகளாக தேர்ந்தெடுத்துத் தொகுத்து தாருங்கள்,   ‘வம்சி புக்ஸ்’ மூலம் ஐந்து புத்தகத் தொகுதிகள் கொண்டு வருவோம் எனச் சொல்லியிருக்கிறார். ஆக, பூக்களிலிருந்து சில புத்தகங்கள் வர இருக்கின்றன.

 

from flowers to books

 

இந்த தொகுத்து அளிக்கும் பணியை நான் எப்படிச் செய்யப் போகிறேன் என மலைப்பு வந்தாலும், நீங்கள் அனைவரும் கூடவே இருக்கிறீர்கள் என்னும் தைரியமும் இருக்கிறது.

 

நண்பர்களே! இது குறித்த அறிவிப்புகள்:

 

 • பதிவர்கள், தாங்கள் எழுதிய முக்கியப் பதிவுகளை தெரிவிக்கலாம்.
 • வாசகர்களும் தாங்கள் ரசித்த பதிவுகளை தெரிவிக்கலாம்.
 • பின்னூட்டங்களில் தெரிவிக்காமல், எனது  jothi.mraj@gmail.com என்னும் முகவரிக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.
 • சிறுகதை, கவிதை, அனுபவப் பகிர்வுகள், புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், முக்கிய விவாதங்கள், நகைச்சுவை, பயண விவரிப்புகள்  என பல தளங்களில் இருக்கும் பதிவுகளை தெரிவிக்கலாம்.
 • பதிவர்களின் அனுமதியும், பதிவர்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளையும்  பெற்றுத்தான் பதிவுகள் அச்சிடப்படும்.
 • அக்டோபர் 31ம் தேதி வரையிலும் தெரியப்படுத்தலாம்.
 • ஜனவரி 2010, சென்னை புத்தகக்  கண்காட்சிக்கு புத்தகங்கள் வெளிவந்துவிடும்.

வாருங்கள்.... நண்பர்களே!
‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’ வரட்டும்...!

உங்கள் மேலான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்!

 

*

Related Posts with Thumbnails

77 comments:

 1. ஆஹா சிறப்பான முயற்சி சார்

  வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க

  ReplyDelete
 2. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  ஆரூரன்

  ReplyDelete
 3. அருமை மாதவராஜ்.

  வரவேற்கதக்க மிக சிறப்பான முயற்சி. மிக்க நன்றி. கண்டிப்பாக அனுப்புகிறேன்.

  வாழ்த்துகள்.

  அன்புடன்

  சூர்யா
  சென்னை.

  ReplyDelete
 4. மிக மிக சிறந்த முயற்சி.
  வலைத்தளம் வாசிக்க இயலாத எத்தனையோ வாசகர்களுக்கு புத்தக வடிவில் வலை எழுத்து சேர்ந்துவிடும்.
  நினைக்கும்போதே இனிக்கிறது.
  வலைப்பூவை அடுத்த தளத்திற்கு நகர்த்துவதற்கான மிக முக்கிய முயற்சி இது. வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்:)

  ReplyDelete
 5. இந்த முயற்சிகள் கைகூடட்டும். பவா.செல்லத்துரை அவர்களுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 6. மகிழ்ச்சியாக இருக்கிறது! மிக அருமையான முயற்சி! வாழ்த்துகள்!!

  ReplyDelete
 7. சிறந்த முயற்சி சார்.உங்கள் நோக்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. // jmraj_111@gmail.com//


  இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிய மடல் bounce ஆகிவிட்டதே!

  ReplyDelete
 9. கந்தர்மடத்திலிருந்து கவின்September 9, 2009 at 11:50 AM

  நல்ல முயற்சி.
  வாழ்த்துகள்....

  ஒரு சின்ன வேண்டுகோள் :

  தயவுசெய்து “துதிபாடல்”, “நன்றியுரை” “வாழ்த்து சொல்லுதல்” போன்ற நல்ல மொக்கைகளை சேர்க்காதீர்கள்.

  ReplyDelete
 10. சிறந்த முயற்சி ,தடையின்றி நிறைவேற வாழ்த்துகள்

  ReplyDelete
 11. சூப்பர் சார்.

  நல்ல முயற்சி.

  ReplyDelete
 12. !!!!!!!!

  அருமையான முயற்சி

  சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. சிறந்த முயற்சி...
  வாழ்த்துகள்..
  நன்றி.

  ReplyDelete
 14. இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிய மடல் bounce ஆகிவிட்டதே!

  சரி பார்க்கவும்...

  ReplyDelete
 15. நிலா ரசிகன்!
  திப்பெட்டி!

  மின்னஞ்சல் பதிவில் சரிசெய்து
  விட்டேன். . மன்னிக்கவும்.

  ReplyDelete
 16. வரவேற்கதக்க மிக சிறப்பான முயற்சி.
  gadget போட்டாச்சு!

  ReplyDelete
 17. ஆஹா! ரொம்ப நல்ல விஷயம் நண்பரே.

  ReplyDelete
 18. நல்முயற்சிக்கு வாழ்த்துகள்.!

  (அப்புறம் ஒரு சிறிய வேண்டுகோள். எனது எல்லா பதிவுகளையுமே புத்தகமாக போட அனுமதிக்கமுடியாது. வேண்டுமானால் ஒன்றிரண்டை போட்டுவிட்டு மற்ற பதிவர்கள் பதிவுக்கும் இடம் தரவும். உயிர்மையுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.. ஹிஹி..)

  ReplyDelete
 19. ரொம்ப நல்ல விஷயம்.. நன்றிகள்..!

  ReplyDelete
 20. முயற்சி சிறக்க என் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. புத்தக வாசகர்களையும் பூக்களை தேடி வரச் செய்யும் முயற்சியாகவும் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!
  நன்றி.

  ReplyDelete
 22. இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும். நல்லதொரு முயற்சி....

  செல்லதுரை அவர்களுக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள்...

  ReplyDelete
 23. மகிழ்ச்சியான செய்திக்கு நன்றி.

  ReplyDelete
 24. நல்ல முயற்சி. வாழ்த்துகள். நாம் எழுதுவது அச்சில் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியின் எல்லையே வேறு. அந்த மகிழ்ச்சி நமது பதிவர்கள் பலருக்கும் கிடைக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 25. மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. மிக மிக சிறந்த முயற்சி.பூங்கொத்து!

  ReplyDelete
 27. ஆஹா... நல்ல முயற்சி... நானும் எடுத்துத் தர முயல்கிறேன்!

  ReplyDelete
 28. மிக நல்ல முயற்சி...அடுத்த புத்தகத் திருவிழாவில் வாங்க வேண்டிய புத்தக லிஸ்டுக்கு முதல் புத்தகம் தயாராகிறது உங்கள் மூலமாக ,நன்றி .வாழ்த்துகள் மாதவராஜ் சார்.

  ReplyDelete
 29. thangal muyartchi vetri perattum.

  ReplyDelete
 30. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. அருமையான முயற்சி.
  வாழ்த்துக்கள்.

  --
  அன்புடன்
  விஜயஷங்கர்
  பெங்களூரு
  http://www.vijayashankar.in

  ReplyDelete
 32. sent mail, one or 2 English posts are also there, please try to accommodate.

  ReplyDelete
 33. மிக்க மகிழ்ச்சி, மிகச்சிறந்த முயற்சி, வாழ்த்துகள்.

  ReplyDelete
 34. வலைப்பதிவர்களை எழுத்தாளர்களாக மாற்றும் அடுத்த கட்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழர் !!

  ReplyDelete
 35. எனக்கு அவ்வளவு தகுதியிருக்கான்னு தெரியல!
  நண்பர்களின் பதிவுகளை அறிமுகம் செய்கிறேன்!

  ReplyDelete
 36. நல்ல முயற்சி ... வாழ்த்துகள்

  ReplyDelete
 37. மிக அருமையான ஒரு திட்டம் நண்பர் மாதவ ராஜ் . ஆனால் குறிப்பிட்ட காலகெடு அதாவது 31/09/09 என்பது குறிகியது அல்லவா? இன்றே 09/09/௦ ஆகி விட்டதே?

  ReplyDelete
 38. அருமையான யோசனை மாதவ். உங்களுக்கும் பவா அவர்களுக்கும் நன்றிகள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 39. நல்லதொரு முயற்சி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. நல்ல முயற்சி,

  தொழில் முறையில் இல்லாத நல்ல பதிவர்களையும் (எழுத்தாளர்களை) ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 41. SSUUPPEERRVVV COMRATE.....

  ITHU ITHU THAN MATHAVARAJ...

  ASATHTHUNGA..........

  ReplyDelete
 42. நண்பர்களே!

  உங்கள் அனைவருக்கும் எனது நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வளவு ஆதரவுக்குரல்களை நான் உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. உற்சாகமாய் இருக்கிறது.

  பவாசெல்லத்துரையும், இந்தப் பதிவையும், பின்னூட்டங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். புத்தகங்களின் எண்ணிக்கை பற்றி கவலைப்படாதீர்கள், நன்றாக கொண்டு வந்துவிடுவோம் என்று உற்சாகத்தோடு சொன்னார்.

  நண்பர்களே!
  இலக்கியத்தரமும், புதிய பார்வைகளும் கொண்ட பதிவுகளை சுட்டிக்காட்டி எனது மெயிலுக்கு அனுப்புங்கள்.

  நேற்றே பதினைந்து நண்பர்களுக்கு மேலே, கடிதம் எழுதி, ஆர்வத்தோடு இந்த முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள்.

  நிலாரசிகன சொன்னதுபோல், வலையுலக எழுத்தாளர்களுக்கும், வலையுலகத்திற்கும், இந்த முயற்சி முக்கியமானதாயிருந்தால் நாம் கொண்டு வரும் புத்தகங்கள் அர்த்தமுள்ளதாயிருக்கும்.

  எல்லோரும் சேர்ந்து பயணிப்போம்.வாருங்கள்.


  மீண்டும், அன்பும், ஆதரவும் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 43. thangal pani vetri pera vazhthukiren.

  ReplyDelete
 44. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 45. நல்ல முயற்சி.

  வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 46. நல்லதொரு விஷயம்...உங்களுக்கும் பவா சாருக்கும் நன்றிகள்...

  ReplyDelete
 47. சரவணன்!
  அமுதா!
  நட்புடன் ஜமால்!
  அதுசரி!

  நன்றி.
  நீங்கள் எழுதிய பதிவுகள், நீங்கள் ரசித்த பதிவுகளை சுட்டிக்காட்டி எனது மெயிலுக்கு அனுப்பி உதவிடுங்கள்

  ReplyDelete
 48. கட்டுரைகள் பிரசுரமாகும் பதிவர்களுக்கு காசு கொடுப்பீங்களா?

  ReplyDelete
 49. அண்ணா என்னையும் ஆட்டத்துல சேத்துக்குவீங்களா...?

  ReplyDelete
 50. shridi!

  நிச்சயம் காசு கொடுக்க மாட்டார்கள்.

  அண்டோ!
  பார்ப்போம்.

  ReplyDelete
 51. போற்றக்கூடிய முயற்சி. வாழ்த்துக்கள்
   
  ஒரு கேள்வி நண்பரே.. எழுதிய இடுகைகள் ஏற்கனவே இதழ்/மின்னிதழ்களில் வந்தவையாகக் கூட இருக்கலாமா?

  ReplyDelete
 52. அருமை மாதவன்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 53. தமிழ் இணைய வலையால் பிணைக்கப்பட்டுள்ள பதிவர்களின் படைப்புகள் அச்சேறி பொது வாசகர்களை அடைச்செய்யும் நல்ல முயற்சி. பாராட்டுகள்!!
  இன்று தமிழர்கள் பூமிப் பந்தெங்கிலும் விரவி வாழ்கிறார்கள். ஆங்கிலம் தவிர பிற பல மொழி அறிந்தவர்களாக புதிய அனுபவங்களுடன் வாழ்கிறார்கள். இதில் பலர் பதிவுலகில் தடம் பதித்தவர்களாகவே இருக்கின்றனர்.
  தொகுப்பு பன்முகத் தன்மையுடன் இன்றைய உலகில் தமிழ் பெற்றுக் கொண்ட நான்காம் தமிழான கணினித் தமிழால் நூலாகிறது. (இயல், இசை, நாடகம் இத்துடன் கணினி)
  வாழ்த்துகள்!
  -முகிலன்
  தோரணம்

  ReplyDelete
 54. அன்பு மாதவ்

  உண்மையிலேயே இது வித்தியாசமான முயற்சி தான்....
  பதிவுகளின் தன்மை, தளங்கள், உணர்வுகள், மொழி, கருத்தாக்கம், வடிவம்.......எல்லாமே வெவ்வேறானதாக இருக்கும் ஒரு தொகுப்பினை நானும் ஆர்வத்தோடு எதிர்நோக்கத் தொடங்கிவிட்டேன்.....

  எஸ் வி வேணுகோபாலன்
  18 09 2009

  ReplyDelete
 55. நல்முயற்சிக்கு வாழ்த்துகள்.!

  ReplyDelete
 56. அருமையான யோசனை. நல்வாழ்த்துக்கள்!

  _________________________________


  " உழவன் " " Uzhavan " said...
  //ஒரு கேள்வி நண்பரே.. எழுதிய இடுகைகள் ஏற்கனவே இதழ்/மின்னிதழ்களில் வந்தவையாகக் கூட இருக்கலாமா?//

  இதே கேள்வி எனக்கும் இருக்கிறது. தெளிவு படுத்துவீர்களா?

  ReplyDelete
 57. அருமையான யோசனை. நல்வாழ்த்துக்கள்!

  _________________________________


  " உழவன் " " Uzhavan " said...
  //ஒரு கேள்வி நண்பரே.. எழுதிய இடுகைகள் ஏற்கனவே இதழ்/மின்னிதழ்களில் வந்தவையாகக் கூட இருக்கலாமா?//

  இதே கேள்வி எனக்கும் இருக்கிறது. தெளிவு படுத்துவீர்களா?

  ReplyDelete
 58. ஏதோ சில இதழ்கள் உதிர்த்ததாகவும் ., அதை எங்கோ என் செவிகள் கேட்ததாகவும் ., சில உதடுகள் உலகமெங்கும் உளறிக்கொண்டுதான் இத்தனை நாட்கள் நடை போட்டது நமது பதிவர்களின் திறமையான எழுத்துக்களை .

  ஆனால் !

  அதே உதடுகளில் இன்றுவரை முகவரி அற்று உதிர்க்கப்பட்ட நமது வாசகர்களின் திறமைகள் .
  உங்களின் இந்த புதிய முயற்சியால் இனி வரும் நாட்களில் நிலையான முகவரிகளுடன் உலகம் முழுதும் வலம் வரும் என்ற நம்பிக்கையை உங்களது இந்த அறிவிப்பால் உணர்கிறேன் தோழரே ! உங்களின் இந்த புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் !!


  என்றும் அன்புடன் ,
  சங்கர்
  துபாய்

  ReplyDelete
 59. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 60. அருமையான முயற்சி.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 61. புத்தகம் சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 62. நன் முயற்சி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 63. நல்ல முயற்சி.
  வாழ்த்துகள்....

  ReplyDelete
 64. சிறப்பான முயற்சி.

  வாழ்த்துக்கள்.

  ஒரு சின்ன ஆலோசனை... எழதுகிறவருக்கே அவ்கருத்து சொந்தம், நல்லதோ கெட்டதோ ஒருவர் எழுதியதை வேறு யாரும் உபயோகபடுத்தவோ சொந்தம் கொண்டாடாவோ அனுமதிக்க மாட்டார்கள், உதாரணம் ஒருவர் எழுதியதை நான் உங்களுக்கு அனுப்பினால் நீங்கள் அதை வெளியிடுவீர்களா? அந்த எழுத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்தால் என்ன செய்வீர்கள்? இதை பற்றி விளக்கவும்.

  ReplyDelete
 65. அன்பின் மாதவராஜ்

  அருமையான நல்லதொரு முயற்சி

  செயல்படுத்துவோம்

  புத்தக வெளியீட்டு விழா வெற்றி பெற நல்வாழத்துகள்

  ReplyDelete
 66. உழவன்!
  //ஒரு கேள்வி நண்பரே.. எழுதிய இடுகைகள் ஏற்கனவே இதழ்/மின்னிதழ்களில் வந்தவையாகக் கூட இருக்கலாமா?/

  இருக்கலாம்!

  பா.ராஜாராம்!
  முகிலன்!
  வேணுகோபாலன்!
  பிரியமுடன் பிரபு!
  ராமலஷ்மி!
  சங்கர்!
  லோ!
  சுந்தரா!
  தமிழ்நாடன்!
  முனைவர் கல்பனா சேக்கிழார்!
  ஜெஸ்வந்தி!
  மஸ்தான்!
  சீனா!

  அனைவருக்கும் நன்றிகள்.தங்களது/தங்களைக் கவர்ந்த படைப்புகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 67. மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  ReplyDelete
 68. அருமையான முயற்சி, சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 69. நல்ல முயற்சி. எங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் தானே?!

  ReplyDelete
 70. நல்ல முயற்சி....வெற்றி பெற வாழ்த்துக்கள்........

  ReplyDelete
 71. நல்ல முயற்சி தான்...
  திறமையுள்ள பதிவாளர்கள் இதன் மூலம் வெளிப்படுவார்கள்........

  ReplyDelete
 72. அருமையான முயற்சிக்கு எமது நன்றி கலந்த வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் தூய தமிழ்ப்பணி!

  ReplyDelete
 73. அண்ணே..

  மெயில் அனுப்பியிருக்கேன். படிச்சுப் பாருங்க..!

  அப்பாடா.. ரெண்டு நாளாச்சு.. நான் எழுதினதையே தோண்டித் துருவிப் பார்த்து செலக்ட் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு..!

  ReplyDelete
 74. நண்பரே வணக்கம் ,

  நமது பூக்களிலிருந்து சில புத்தகங்கள் வளர்ச்சி பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் .

  ReplyDelete