-->

முன்பக்கம் � விருதும், தர்மசங்கடமும்!

விருதும், தர்மசங்கடமும்!

புன்னகை J அவர்கள் எனக்கு சுவராசியமான பதிவர் என்று விருது வழங்கி இருக்கிறார். அவரது உணர்வுகளுக்கும், விருப்பத்திற்கும் என் மரியாதையை செலுத்துகிறேன். நன்றி J.

இப்போது இந்த விருதை நான் மேலும் ஆறு பதிவர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி ஒரு விதி.

பத்து மாதங்களுக்கு முன் வலைப்பக்கங்களில் எழுத ஆரம்பித்தபோது,  நான் பிற பதிவர்களின் வலைப்பக்கங்களுக்குச் சென்று அனேகமாய் வாசிப்பது கிடையாது. பின்னூட்டம் எழுதியவர்கள் மூலமாக ஒன்றிரண்டு பேர்களே தெரியும். யார் யாரெல்லாம் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரியாது. வடகரை வேலன் அவர்கள்தான் அந்த ஜன்னலைத் திறந்து வைத்தவர்.

நான் இஷ்டத்துக்கு மேய்ந்து திரிய ஆரம்பித்தேன். ஒன்றிலிருந்து ஒன்றாய் அருமையான வலைப் பக்கங்கள் அறிமுகமாயின.  சில பக்கங்கள் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டன. சில பக்கங்கள் புதிய எழுத்துக்களை அறிமுகமாக்கின. சில பக்கங்கள் சட்டென்று சிரிப்பை வரவழைத்தன. சில பக்கங்கள், சாதாரண விஷயங்களையும் சுவராசியமாய்ச் சொல்லின. சில பக்கங்கள் கொம்பு முளைத்து விரட்டின. எல்லாமே சுவராசியமான அனுபவங்கள்தான். இன்னமும் தேடித் திரிந்து கொண்டே இருக்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனைகள், கருத்துக்கள் இருக்கின்றன. அவைகளோடு வெகு எளிதாக ஒத்துப் போய்விடுகிறது மனித மனம். கருத்துக்கள் வேறுபட்டாலும், ரசனைகள் ஒத்துப் போனால் அதையும் கொண்டாட ஆரம்பிக்கிறது தெளிவு. புதுமைகளைத் தேடுவதில் ரசனையையும், கருத்துக்களையும் தாண்டிச் செல்கிறது பக்குவம். எல்லாவற்றையும் ரசிக்கின்றன குழந்தையின் கண்கள். தருணங்களில் நாம் இந்த எல்லாமுமாகவே இருக்கிறோம். வெவ்வேறாக அல்ல!

இப்படியான, எனது வாசிப்பின் வழியே நான் அறிந்த பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லையெனத் தெரியவில்லை. என்னைத் தாண்டிச் செல்ல முடியாமல், இந்த தொடர் கண்ணி அறுந்துபோவதில் மிகுந்த வருத்தமே! மன்னியுங்கள்.....

*

Related Posts with Thumbnails

21 comments:

 1. congrats and best wishes,

  Definitely your writing deserve for the award.

  ReplyDelete
 2. ஸ்வாரஸ்யமான மற்றும் பிரபலமான விருது கொடுக்கப்பட வேண்டியவை தான் உங்கள் பதிவுகள் ... சங்கிலியை அறுத்தது எனக்குப் பிடித்தது :)

  ReplyDelete
 3. எனக்கும் அதே தர்மசங்கடம்தான்.

  ReplyDelete
 4. அண்ணா!வாழ்த்துக்கள்.... நீங்கள் சுவாரஸ்யமான பதிவர் மட்டுமல்ல சுவாரஸ்யமான மனிதரும் கூட....

  ReplyDelete
 5. //அண்ணா!வாழ்த்துக்கள்.... நீங்கள் சுவாரஸ்யமான பதிவர் மட்டுமல்ல சுவாரஸ்யமான மனிதரும் கூட....//

  அண்ணா நான் சொல்ல வேண்டியதை anto சொல்லிவிட்டார்.

  ReplyDelete
 6. //
  என்னைத் தாண்டிச் செல்ல முடியாமல், இந்த தொடர் கண்ணி அறுந்துபோவதில் மிகுந்த வருத்தமே! மன்னியுங்கள்....
  //

  எல்லா சங்கிலிகளும், தொடர் கண்ணிகளும் யாரோ ஒருவரால் என்றோ ஒரு நாள் அறுக்கப்படும்....இது தொடர்பதிவு சங்கிலிக்கு மட்டுமல்ல, எல்லா சங்கிலிகளுக்கும் பொருந்தும்...

  இதில் வருத்தப்பட ஏதுமில்லை!

  ஆனால் பிரச்சினை என்னவென்றால், ஒரு சங்கிலி அறுந்தால், அடுத்து ஒரு சங்கிலி வந்து விடும்....இதுவும் எல்லா சங்கிலிகளுக்கும் பொருந்தும்!

  ReplyDelete
 7. உங்களின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை...உண்மையில், வெகு நேர் எதிரான நிலை...

  ஆனால் உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது....உங்கள் எழுத்து மிக நேர்த்தியான, சுவராசியமானதே...அதே போல நீங்கள் விவாதத்துக்கு எடுக்கும் விஷயங்களும்...

  வயதிலும், அனுபவத்திலும், அறிவிலும் மூத்தவர்களை வாழ்த்துவது ஒரு விதமான திமிர்த்தனம் என்று நான் கருதுவதால்..வாழ்த்த வயதில்லை...வ‌ணங்குகிறேன்.

  ReplyDelete
 8. வாழ்த்துகள் தோழர்.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 9. வாழ்த்துகள்!

  நானும் பதிவெழுது(?) துவங்கிய காலத்தில் நீங்கள் என்னுடைய ஃபாலோயராக கூட இருந்தீர்கள், பிறகு உங்களை இங்கு தான் பார்க்க இயலுகிறது.

  நன்றாக எழுதும் நீங்கள் - மென்மேலும் எழுதுவதே எங்கள் அவா!

  ReplyDelete
 10. சுவாரசியம் என்பது உங்கள் தளத்திற்குப் பொருத்தமானதுதான்.
  அதேபோல் தர்மசங்கடமான நிலையென்று சொல்லியிருப்பதும் பொருத்தமான சொல்தான்.

  ReplyDelete
 11. :-) புரிகிறது...உண்மையில் தங்கள் தளம் சுவாரசியத்திற்கு சற்றும் குறைவானது அல்ல. அதே சமயம், இந்த விருதெல்லாம் கடந்த தளம்தான் தங்களுடையது என்பது எனது கருத்து! வால்ஸ்ட்ரீட்-இன் நிகழ்வுகள் ஈரோடில் எதிரொலிக்கிறதென்ற தங்களது இடுகையிலிருந்து தொடர்ந்து வாசிக்கிறேன்....எப்போது தங்கள் தளத்தைத் திறந்தாலும் அதில் பிரமிப்பூட்ட ஏதாவதொரு புதிய இடுகை இருந்துக்கொண்டேதான் இருக்கிறது!

  ReplyDelete
 12. இந்த இடுகைக்கான எனது தொடர் வினையைத் தனி இடுகையாகப் போட்டுள்ளேன்!

  http://kalaaythal.blogspot.com/2009/07/blog-post_20.html

  ReplyDelete
 13. அது ஏன் சார் அப்படி! காசா பணமா எத்தனையோ புதுசு புதுசா எழுதறாங்க! உங்க புது படத்துக்கு ஸ்க்ரின் டெஸ்ட் பண்ற மாதிரி ஒரு 4 -5 பேர்த்த தேர்ந்தெடுத்து உங்க வாயால ஒரு பாராட்டு பாரட்டினா, அந்த அப்பாவி ப்ளாக்கன் சந்தோஷப்படுவான். நீங்க வாங்கின விருத அவனும் வாங்கியிருக்கறதா நினைச்சு பெருமை படுவான். எனக்கு தெரிஞ்சு நீங்க ஈகோ பாக்கற ஆள் கிடையாது! ஐயாம் பிஸீங்கறவனுக்குதான் நேரம் கிடைக்காது! நீங்கள்லாம் சமுகத்த பத்தி மெனக்கெட்டு யோசிக்கறவங்க! யாராவது ஒரு 5 பேர் ஏதாவது எழுதனும்னு முயற்சி செய்யற, பரிச்சயமேயில்லாத 5 பேர்த்துக்கு நீங்க நினைச்சா உற்சாகம் குடுக்ககலாமே! இது ஒரு பாவப்பட்ட சமூகம் சார்! கை காட்டறதுக்கும் ஆள் குறைவு, கொடுமை கைதட்டறதுக்கும் ஆள் குறைவு! ப்ளீஸ், சும்மா யாரையாவது பாராட்டுங்க சார்.

  ReplyDelete
 14. தருணங்களில் நாம் இந்த எல்லாமுமாகவே இருக்கிறோம். வெவ்வேறாக அல்ல!

  தொடராததைக் கூட இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கீங்க. சார்.

  ஆனா உங்களோட வலைதளத்துல பிறரின் அறிமுகமிருந்தா மோதிரக்கையால குட்டுப் பட்டா மாதிரி
  சந்தோஷப்பட்டிருப்பாங்கல்ல சார்.

  ஏன்னா உங்களோட பின்னூட்டம் என் பதிவுல இருந்தாலே சில சமயம் நான் பிரமிச்சுப்போய்டுவேன்.

  ReplyDelete
 15. துணிச்சலான முடிவு!

  ReplyDelete
 16. வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. புரிந்து கொண்ட நெஞ்சங்களுக்கும் நன்றி.

  அதுசரி அவர்கள் சொல்லியிருப்பது போல், இன்னொரு கண்ணி... இன்னொரு தொடர் ஒட்டம்... இதுதானே வாழ்வு! உண்மையானது. வாழ்த்துவதற்கு என்னங்க வயது?

  நட்புடன் ஜமால், நீங்கள் சொல்வதை மனதில் கொள்கிறேன்.

  சந்தனமுல்லை அவர்களின் வரிகள் மிகுந்த உற்சாகமளிக்கின்றன.

  அமித்து அம்மாவும், தங்கமணி பிரபுவும் வேற் வேறு அர்த்தங்களில் சொல்லியிருந்தாலும், புதியவர்களை அடையாளம் காட்டியிருக்கலாமே எனச் சொல்லியிருப்பது சரியானதுதான். எனக்குத் தெரிந்த பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டுவிட்டதைத்தான் தர்மசங்கடம் எனச் சொன்னேன். தெரியாமலும், வாசிக்காமலும் சுவராசியமானவர் என்று சொல்வது சரியல்லவே.

  ஆனலும் வலையுலகத்தில் நான் படித்து வரும் பதிவுகளைப் பற்றியும், பதிவர்களைப்பற்றியும் தனியாக ஒரு பதிவிட வேண்டும் எனத் திட்டமிருக்கிறது.

  ReplyDelete
 17. அன்பின் மாதவராஜ்

  வலையுலகத்தில் படித்து வரும் பதிவுகளைப் பற்றியும் பதிவர்களைப் பற்றியும் எழுதுவதாகத் திட்டம் இருப்பதாக அறிகிறேன்.

  இதற்கென வலைச்சரம் என்றொரு வலைப்பூ இருக்கிறது - அதில் நாந்தான் பொறுப்பாசிரியர் - விரும்பினால் அங்கு எழுதலாம்.

  சற்றே சென்று பார்க்க

  http://blogintamil.blogspot.com

  ReplyDelete
 18. நன்றி. எழுதும்போது தொடர்பு கொள்கிறேன்.

  ReplyDelete
 19. அமித்தம்மாவுடன் நான் உடன் படுகிறேன் மாதவன்.பதிவர் குழுமம் நம் குடும்பம்.புன்னகை j உங்களுக்கு சுவராசிய பதிவர் விருது தருகிறார் எனில்,அவர் பார்வையில் நீங்கள் சுவராஸ்யம் ஆகிறீர்கள்.உண்மையில் நம் குடும்பம் மிக பெரியது.அளவீடுகளில் கொண்டுவர இயலாதது.எல்லா தளத்திற்கும் போக யாராலும் இயலாதது.நீங்கள் தெரிந்த வரையில், உங்கள் சுவராசியம் குறித்து பேசுவது இந்த சந்தர்பத்தில் அவசியம் என கருத்திருக்கிறது.அமித்தம்மா போலவே,உங்களின் ஒரே ஒரு பின்னூட்டத்தில் என் குடும்பம் வரையில் அதிர்ந்தது.உங்கள் எழுத்தின் தீவிரம் அது.முக்கியமாய்,மனசின் நுட்ப்பம் உணர்ந்தவர் என உங்கள் எழுத்து அறிய தருகிறது எனக்கு.உங்கள் ஒருவரின் தலை தடவல் நிறைய குழந்தைகளை ஆரோக்யபடுத்தலாம்.அதை தள்ளி போட்டது,நம் குடும்பத்தின் ஆரோக்ய குறைச்சலே..வேறு எதுவும் சொல்ல தரியலை மாதவன்.அன்பு நிறைய!

  ReplyDelete
 20. பா.ராஜாராம்.............

  / சொல்வதையும் யோசிக்ககலாமே நட்பே! //

  ReplyDelete
 21. இனிய நட்பே! நான் என்ன சொல்ல நினைத்தேனோ, அதே விடயங்களை , மிகுந்த ஆணித் தரமாக நிரூபித்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete