உட்கார்ந்த, நின்ற, நடந்த
ஒரு இடம் பாக்கியில்லாமல்
இரவு பகலென
நேரம் காலம் இல்லாமல்
கோடானு கோடியிடம்
கோடி கோடியாய்
கொள்ளையோ கொள்ளை
நிலமிழந்து
வீடிழந்து
வாழ்விழந்து
பிளாட்பாரத்தில்
கோடானு கோடி
ஒதுங்கிக்கொண்டே இருக்கிறார்கள்
கொள்ளை கொள்ளையாய் வந்த
பத்திரிகைச் செய்திகளில்
இந்தக் கொள்ளை
இடம்பெறவே இல்லை
பலநாள் திருடர்
ஒருநாளும் அகப்படவில்லை
போன இடம் தெரியாமல்
புலன் விசாரணைக்கும் வழியில்லை
கடவுளிடம் வேண்டுவதைத் தவிர
வேறுவழியும் அறியவில்லை
ஒருநாள்
திடீர் கோடிஸ்வரர்களும்
புதிய கோடீஸ்வரர்களுமாய்
நாடு வளர்ச்சியடைந்ததைப் பார்த்து
நமது கோடானு கோடி
அதிசயிக்க மட்டும் செய்கிறார்கள்
*


:-((
ReplyDeleteஎன்ன செய்வது :(
ReplyDeleteஅதுதான் தேர்தல்ல மக்கள் தீர்க்கமா மன்மோகன் சோனியா அழஅகிரி யை ஆடரிதாயிற்றே.
ReplyDeleteஇனிமேல் எழுதி என்ன பயன் சாமி.
உட்கார்ந்த, நின்ற, நடந்த
ReplyDeleteஒரு இடம் பாக்கியில்லாமல்
இரவு பகலென
நேரம் காலம் இல்லாமல்
கோடானு கோடியிடம்
கோடி கோடியாய்
கொள்ளையோ கொள்ளை
நிலமிழந்து
வீடிழந்து
வாழ்விழந்து
பிளாட்பாரத்தில்
கோடானு கோடி
ஒதுங்கிக்கொண்டே இருக்கிறார்கள்
வரிகள் உள்ளத்தை கசக்குகிறது
அருமையான வரிகள்
:((
ReplyDeletesuper
ReplyDeleteஒருநாள்
ReplyDeleteதிடீர் கோடிஸ்வரர்களும்
புதிய கோடீஸ்வரர்களுமாய்
நாடு வளர்ச்சியடைந்ததைப் பார்த்து
நமது கோடானு கோடி
அதிசயிக்க மட்டும் செய்கிறார்கள்
:((
//திடீர் கோடிஸ்வரர்களும்
ReplyDeleteபுதிய கோடீஸ்வரர்களுமாய்
நாடு வளர்ச்சியடைந்ததைப் பார்த்து
நமது கோடானு கோடி
அதிசயிக்க மட்டும் செய்கிறார்கள் //
ஹ்ம்ம்ம்...ஆதங்கத்தோடு !!
ஹ்ம்ம்ம்...ஆதங்கத்தோடு !!
ReplyDeleteபிரியாணிக்கும் , நூறு ரூவாக்கும் ...
ReplyDeleteஅப்பன் , மாமன் அரசாங்க வேலைக்கும் ...
கோடான கோடி அடிமைகள் !!!
தீபா!
ReplyDeleteமங்களூர் சிவா!
நன்றி.
குப்பன் யாஹூ!
அதனால் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்க முடியுமா... நம் கடன் இப்படி முணுமுணுப்பது என்பதாக இருக்கட்டுமே!
மோனிபுவன் அம்மா!
உங்கள் வருகைக்கும், உணர்வை வெளிப்படுத்திஒயமைக்கும் நன்றி.
தீப்பெட்டி!
நன்றி.
rapp!
நன்றி.
அமிர்தவர்ஷிணி அம்மா!
நன்றி.
சந்தனமுல்லை!
ஆதங்கத்திற்கு நன்றி.
அஹோரி!
உங்கள் கோபத்திற்கும் நன்றி.