ஒருமை பன்மை

மூன்றாவது சந்திப்பின்போது
அவளாகத்தான் கேட்டுக் கொண்டாள்,
'இந்த வாங்க போங்கவெல்லாம் வேண்டாமே,
ஒருமையில் அழைத்தாலே போதும்'.
ஆதிக்க ஏணியின் முதல்படியில்
அவன் கால்வைத்தது அப்படித்தான்.

பிறகொரு மஞ்சள் பூத்த முகத்தோடிருந்த
நாளொன்றில் அவள் மாறிக் கொண்டாள்,
இவனை வாங்க போங்க என்றழைக்க...
ஏணியின் பாதியை எட்டியிருந்தான் அப்போது.

பத்தாண்டு தாம்பத்தியம்
கடந்ததைக் குறித்த
வெறும் தேதியாகிவிட்ட திருமண நாளொன்றின்
விடியலுக்குப்பிறகு துவங்கிய
அன்றாடச் சண்டையில்
சினத்தை பரஸ்பரம்
முழுமையாக உணர்த்த வேண்டி
இருவரும் மாறியிருந்தனர்
அவள் ஒருமைக்கும்
இவன் பன்மைக்கும்....

- எஸ்.வி.வேணுகோபாலன். ஈமெயில்: sv.venu@gmail.com

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மிகவும் அருமையான கவிதை, இந்தக் கவிதை என்க்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த வாழ்வு இப்படித்தான், இந்த மாதிரி தீராத ரகசியங்களையும் வினோதங்களையும் உள்ளடக்கியது.

    //சினத்தை பரஸ்பரம்
    முழுமையாக உணர்த்த வேண்டி
    இருவரும் மாறியிருந்தனர்
    அவள் ஒருமைக்கும்
    இவன் பன்மைக்கும்....//

    இந்த வரிகளை மிகவும் அனுபவித்து எழுதியிருக்கிறார், இந்தக் கவிதையில் இருக்கும் அனுபவம் முழுவதுமே நுட்பமானது, ரசனையானது, உணர்வு ரீதியாக ஆழமாக மனதைத் தொடுவது.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா....!!! அனுபவம் பேசுது போல.....!!! கவிதை நெம்ப சூப்பர்.....!!! வாழ்த்துக்கள்...!!!!

    பதிலளிநீக்கு
  3. அனுபவக் கவிதை உண்மைகளை மென்மையா சொல்கிறது.
    யாத்ராவே அழகாக விளக்கியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  4. காதல் மிகவும் நுட்பமான உணர்வு. ஒன்றில் லயிக்கும் மனம் அதைத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது. பிறகு அதன் மீது ஆதிக்கம் செலுத்துவது அடுத்த நடவடிக்கை. பரஸ்பரம் அன்பு என்பது ஆதிக்கத்திற்கு இடமற்றது. அன்பு என்பது, விருப்பமான விஷயங்களில் சிரித்துக் கொன்டே பேசிக்கொன்டிருப்பது மட்டுமல்ல. விருப்பமற்ற கருத்தை நிதானத்தோடு எதிர்கொள்வது. கருத்தை மட்டும் விவாதிப்பது. கருத்தை விட்டுவிட்டு சொன்னவர்களை நொறுக்குவது அல்ல.

    இது சாத்தியப் படுகிறவர்கள் சிறப்பாக வாழ்கிறர்கள். மாற மறுப்பவர்கள் இப்படி கவிதை எழுதுகிறார்கள் அல்லது வாசிக்கிறார்கள் என்று சொல்லிவிடப் பார்த்தேன். அது நல்ல கிண்டலாக மட்டும் முடிந்து விடும். குடும்ப ஜன நாயகத்தின் மேன்மையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இதில் நிறைய செய்தி இருக்கிறது என்று சொல்லி வைக்கிறேன்.

    கவிதை சொந்த அனுபவமா என்று கேட்பவர்களே, அதை ரசிப்பவர்களுக்கு மட்டும் இந்த அனுபவம் இல்லையாக்கும்!

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  5. கவிதையை ரசித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி.
    எஸ்.வி.வி தொடர்ந்து எழுத இந்தப் பதிவு உத்வேகமூட்டினாலும், உற்சாகப் படுத்தினாலும், மிகுந்த சந்தோஷப்படுவேன்.

    வேணு சொன்னது : //கவிதை சொந்த அனுபவமா என்று கேட்பவர்களே, அதை ரசிப்பவர்களுக்கு மட்டும் இந்த அனுபவம் இல்லையாக்கும்!//

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. // Venugopalan said...

    கவிதை சொந்த அனுபவமா என்று கேட்பவர்களே, அதை ரசிப்பவர்களுக்கு மட்டும் இந்த அனுபவம் இல்லையாக்கும்! ///



    இல்லீங்கோவ்....... நானு இன்னுமும் பேச்சுலருங்கோவ்........

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!