வேர் பிடித்த நாற்காலிகள்!

நாற்காலியைச் சுமந்தபடி
போகிறார்கள்
போகுமிடமெங்கும்

இறங்கி வைப்பதில்லை
உறங்கும் வேளையிலும்
கனவிலும் கூட

வேர் பாய்ச்சி விடுகிறது நாற்காலி
அவர்கள் தலையில்
அவர்களுக்குத் தெரியாமலே

நாற்காலி
அவர்களை விட்டுவிடும் ஒரு நாளில்
அவர்கள்
நாற்காலியை  விட்டுவிட இயலுமா
அதன் வேர் கலைந்து முற்றிலுமாய்..?

என கவலைப்பட்டு இந்தக் கவிதையை இருப்பவர் கவிஞர் கள்ளழகர்.
இன்றைக்கு இதைப் படிக்கும் போது எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

 

 

*

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. எனக்கும் சிரிப்பு தான் வருகிறது!

    பதிலளிநீக்கு
  2. ரொம்பவும் யோசிக்க வைக்கிறது இக்கவிதை... மிக அழகான கற்பனை..

    சரியான நேரத்தில் கொடுத்திருக்கிறீர்கள். இக்கவிதை ஒருவருக்கான கவிதையல்ல.. நூறுகோடிக்கான கவிதை.. எனக்கு சிரிப்பதைக் காட்டிலும் கோபமே வருகிறது..

    பதிலளிநீக்கு
  3. ஆதவா said...

    இக்கவிதை ஒருவருக்கான கவிதையல்ல.. நூறுகோடிக்கான கவிதை..

    இதுதான் எனக்கும் தோன்றுகின்றது.

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்..... நீங்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதியைதானே சொல்கின்றீர்கள்..

    நல்லா இருக்கு நண்பரே

    பதிலளிநீக்கு
  5. ஹ்ம்ம்..:-))
    அவர்களால் விட்டுவிட முடியாததால் தான் இத்தனைக் கூத்துகள் என்று நினைக்கும் போது எரிச்சல்தான் மிஞ்சுகிறது!!

    பதிலளிநீக்கு
  6. தோழர் மாதவராஜ்,
    நல்ல கவிதை.
    ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.
    இது கருணாநிதிக்கு மட்டுமோ, அரசியல்வாதிகளுக்கு மட்டுமோ அல்ல.
    அதிகாரம், புகழ் என்ற போதைக்காக எதையும் செய்யத்துணியும் அனைவருக்கும்தான்.
    நாற்காலி என்பது ஒரு குறியீடு மட்டுமே.
    இப்போதைக்கு அது அரசியல் என்ற பொருள் படுகிறது.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு கவிதையை பகிர்ந்திருக்கிறீர்கள் சரியான தருணத்தில்.

    பதிலளிநீக்கு
  8. வால் பையன்!
    தங்கள் சிரிப்புக்கு நன்றி.

    ஆதவா!
    தங்கள் கோபத்துக்கும் நன்றி.

    ஆ.முத்துராமலிங்கம்!
    உண்மைதான். எல்லோருக்குமான கவிதைதான்.ஆனால் இந்த நேரத்தில் யாருக்கு என்று சொல்லாமலே எல்லோருக்கும் புரிகிறமாதிரி நிகழ்வுகள் இருக்கின்றதல்லவா?

    ஆ.ஞானசேகரன்!
    சொல்லாமலே புரிகிறது. அவர் அப்படி இருக்கிறார்.

    சந்தனமுல்லை!
    விடாது கருப்புத்தான்!!!!!

    அகநாழிகை!
    நான் கலைஞருக்கு மட்டும் என்று சொல்லவில்லை. என்ன செய்ய... அவரைச் சட்டென்று நினைவுக்கு வருகிற மாதிரி அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன.

    கிருபா!
    நன்றி. விரைவில இனைகிறேன்.

    யாத்ரா!
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!