-->

முன்பக்கம் , � உலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும்!

உலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும்!

இதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த சொற்சித்திரத்தை எஸ்.வி.வேணுகோபால் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். படிக்கிற போதெல்லாம் அம்மாவின் அன்பில் நனைந்து உருக வைக்கும் வரிகளாக இருக்கின்றன.

மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தேன்.
‘ஏன் குடையை எடுத்துக்கொண்டு செல்லவில்லை?’ என்று அண்ணன் கேட்டான்.
‘மழை நிற்கும் வரையில் காத்திருந்திருக்கலாமே’ என்று அக்கா சத்தம் போட்டாள்.
‘சளிபிடித்து சங்கடப்பட்டால்தான் உனக்கெல்லாம் புரியும்’ என்று கோபப்பட்டார் அப்பா.
நனைந்த தலையை துவட்டியபடியே ‘முட்டாள் மழை! பிள்ளை வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கக் கூடாதோ?’ என்றாள் அம்மா.

தனிமனிதர்களுக்கு வாய்க்கின்ற தாயின் ஸ்பரிசம் ஒரு சமுகத்திற்கே கிடைத்தால் எப்படி இருக்கும் என கனவு பொங்க எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் ஒருமுறைக் குறிப்பிட்டது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது!  உலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும்!!

 

 

*

Related Posts with Thumbnails

12 comments:

 1. நிச்சயமாக... வரிகள் குறிப்பிட்டிருக்கும் அந்த தாயைப் போன்றே அனைவரும் அமையவேண்டும்!

  இந்த பதிவை நீங்கள் இன்னும் நிறைய எழுதியிருக்கலாமே!

  ReplyDelete
 2. அருமையான சொற்சித்திரத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்,

  //நனைந்த தலையை துவட்டியபடியே ‘முட்டாள் மழை! பிள்ளை வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கக் கூடாதோ?’ என்றாள் அம்மா//

  இவ்வரிகளை வாசிக்கையில் திரண்டு வழிவதற்கு தயாராயிருந்தது கண்ணீர். தாய் மனசு,,,,,

  ReplyDelete
 3. ‘முட்டாள் மழை! பிள்ளை வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கக் கூடாதோ?’

  really nice line
  and touch in our mind those beautiful rain days....

  ReplyDelete
 4. no words to say............

  i love my mom...........

  ReplyDelete
 5. அருமை, உண்மையில் தாய் ஒருவர்தான் தன்னலம் கருதாது பாசம் அன்பு காடும் ஒரே உயிர்.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 6. //நனைந்த தலையை துவட்டியபடியே ‘முட்டாள் மழை! பிள்ளை வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கக் கூடாதோ?’ என்றாள் அம்மா. //

  இதுபோல் தாய்க்குத்தான் மகனாகப்பிறந்தேன் ஆனால் இப்பொழுது அவரது பேச்சைக்கேக்கமாமல் --சிக்கூட்டத்தில் மாட்டிக்கொண்டென். எனக்கு கிடைத்த தாய்போல் அனைவருக்கும் அமைய பிராத்திக்கின்றேன்

  ReplyDelete
 7. very good.
  Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

  ReplyDelete
 8. அற்புதமான கவிதை.

  வேலைக்காக வேறு நகரங்களில் தங்கியிருப்போருக்கு, ஒரு நிமிடம் அம்மா மடியில் சாய முடியாதா என்ற எண்ணத்தை தூண்டியிருக்கும், உங்கள் பதிவு.

  ReplyDelete
 9. என்ன செய்ய? அம்மா நினைவினை அதிகப்படியாகத் தூண்டி விட்டீர்கள்..!

  ReplyDelete
 10. அம்மா என்ற சொல்லே வாழ்வை எவ்வளவு அழகாக்குகிறது!

  ReplyDelete
 11. ஆதவா!
  நீங்கள் சொன்ன மதிரி இன்னும் நிரைய எழுதியிருக்கலாம்தான்.

  யாத்ரா!
  அந்தக் கண்ணிர்தான் உங்கள் அடையாளம் கவிஞரே!

  புதுவை சிவா!
  புரிதலுக்கு நன்றி.

  என்பக்கம்!
  எல்லோரும் தாயை நேசிக்கிறோம்.

  குப்பன் யாஹு!
  பகிர்வுக்கு நன்றி.

  தமிழ்சரவணன்!
  எங்கே மாட்டிக் கொண்டீர்கள்?

  நாகேந்திரபாரதி!
  வந்து பார்த்தேன். நன்று. கருத்துக்கள் இடுவேன்.

  ஜோ!
  உண்மைதான். நானும் ஏங்கி இருக்கிறேன்.


  ஓவியா!
  ஆமாங்க....

  ReplyDelete
 12. ரிஷான்!

  எப்படியிருக்கீங்க.
  நலம் தானே!
  உங்களை மீண்டும் இங்கு சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

  ReplyDelete