-->

முன்பக்கம் � மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி மற்றும் இன்னபிற (தீராத பக்கங்கள்-6)

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி மற்றும் இன்னபிற (தீராத பக்கங்கள்-6)

நீண்ட காலமாய் இழுத்துக்கொண்டு இருந்த குடும்பப் பிரச்சினை இப்போது செட்டில் ஆகிவிட்டது. மூத்தவருக்கு மத்தியிலும், இளையவருக்கு மாநிலத்திலும் என்று பாகப்பிரிவினை இனிதே நடந்தேறி இருக்கிறது. தமிழக வாக்காளர்களுக்கு புண்ணியம் சேரட்டும். மதுரையில் இறந்துபோன தினகரன் பத்திரிகை ஊழியர்களே பாவம் செய்தவர்கள் போலும். சரி.... மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்றதன் அர்த்தம் யாருக்காவது தெரிந்தால் இப்போது சொல்லுங்களேன்.

0000

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இந்தக் கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா? அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரஹாம் லிங்கன்! இந்த தகவலைத் தந்த நண்பர் எஸ்.வி.வி வேணுகோபால் அவர்களுக்கு நன்றி. நமது மந்திரிமார்கள் தங்கள் வாரிசுகள் படிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு என்ன அறிவுரைகள் தந்திருப்பார்கள் என அனாவசியாமாக யாரும் எதுவும் யோசிக்க வேண்டாம்.

0000

கேரளாவில் போக்குவரத்து அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த சுபையர் என்பவர் ரூ.25/- (ருபாய் இருபத்தைந்து மட்டும்) லஞ்சம் பெற்றதாக 1989ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை கேரள உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. போதிய ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லையென 20 வருடம் கழித்து இப்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்டர்..... ஆர்டர்....!

 

*

Related Posts with Thumbnails

11 comments:

 1. :-) கடிதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருக்கிறது போல!

  ReplyDelete
 2. நையாண்டி தூக்கலாக இருக்கிறதே! எனிவே.. சிரிக்கவும் யோசிக்கவும் வைக்கிறது!

  ReplyDelete
 3. நம்ம அரசியல்வாதிகளோட பிள்ளைகள் பள்ளிக்கு வேற போறாங்களா ?
  பிறகேனடா எல்லோரும் அரசியலுக்கு வந்துடுறாங்க ....

  ReplyDelete
 4. //மத்தியில் கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி//-வேறென்ன மத்தியில் இரண்டு பேர்,மாநிலத்தில் ஒருவர்..மேலும் கலைஞரின் தமிழ் பல அர்த்தங்களை தர வல்லது!

  ReplyDelete
 5. கருணாநிதியும், அவருடைய குடும்பங்களும் இன்னமும் பிரிந்தே இருந்தால் மட்டும் இறந்து போன தினகரன் பத்திரிகை ஊழியர்களின் மரணம் நியாயமாகிவிடுமா?

  ReplyDelete
 6. முதலிது அரசியல் எனக்குத் தெரியாது விட்டி விடுகிறேன்.

  இரண்டாவது. |நமது மந்திரிமார்கள் தங்கள் வாரிசுகள் படிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு என்ன அறிவுரைகள் தந்திருப்பார்கள் என அனாவசியாமாக யாரும் எதுவும் யோசிக்க வேண்டாம். |

  எப்படி யோசிக்காமல் இருக்க முடியும் அந்தச் செய்தியை படித்தி பின்பு, உங்கள் நையாண்டி புரியுது.

  மூன்றாவது செய்தி "அதெல்லாம் நம்ம நாட்டுல சகஜமுங்கோ"

  ReplyDelete
 7. //இறந்துபோன தினகரன் பத்திரிகை ஊழியர்களே பாவம் செய்தவர்கள் போலும்.//


  //கேரளாவில் போக்குவரத்து அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த சுபையர் என்பவர் ரூ.25/- (ருபாய் இருபத்தைந்து மட்டும்) லஞ்சம் பெற்றதாக 1989ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை கேரள உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. போதிய ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லையென 20 வருடம் கழித்து இப்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.//

  கேவலமாக இருக்கிறது.

  ReplyDelete
 8. இரண்டாம் பகுதி அற்புதம்.

  ReplyDelete
 9. செய்திகளும் சிந்தனைகளும் அருமை.

  ReplyDelete
 10. சந்தனமுல்லை!
  நன்றி..


  வெங்கிராஜா!
  உண்மையாகவா....!


  மயாதி!
  நன்றி.


  வேல்ஜி!
  ஆமாம் , அவரது நாக்கு எப்படியும் பேசுமே...


  செல்வக்குமார்!
  உண்மைதான்... நீங்கள் சொல்வது!

  ReplyDelete
 11. ஆ.முத்துரமலிங்கம்!
  அரசியல் என்ரால் காத தூரமோ....


  தீபா!
  பகிர்வுகளுக்கு நன்றி.


  வண்ணத்துப்பூச்சியார்!
  மிக்க நன்றி.

  ReplyDelete