-->

முன்பக்கம் , � கத்திகளுக்குத் தெரியுமா கவிதையின் ருசி?

கத்திகளுக்குத் தெரியுமா கவிதையின் ருசி?

nanmaran attacked

இரண்டு வருடங்களுக்கு முன்பு நானும் எழுத்தாளர்.காமராஜும் கடலூர் சென்று விட்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டு இருந்தோம். வழியில் எதோ ஒரு இடத்தில் டீக்குடிக்க நிறுத்தினார்கள். தூக்கம் கலந்து நாங்களும் பஸ்ஸிலிருந்து இறங்கினோம்.

அப்போது அவரைப் பார்த்தோம். டீக்கடையருகே ஒரு ஒரமாய் தனியே யாரோ போல நின்றிருந்தார். அழுக்கும் வியர்வையும் கலந்த அந்த வெள்ளைச் சட்டை அவரது அலைச்சலையும், பிரயாண அசதியையும் சொல்லின. பன் ஒன்றை வாங்கி டீயில் முக்கி முக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு எம்.எல்.ஏ என்பது இன்றைய அரசியல் கூத்துக்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியம்தான். சாதாரண வட்டங்களுக்கே தலைக்குப் பின்னால் ஒளிவட்டமும்,  ‘அண்ணே’க்ளை உதிர்க்கின்ற கரைவேட்டிகளும், கார்களும் சுற்றிக்கொண்டிருக்கின்ற காலக்கிரகத்தில் அவர் ஒரு அதிசயம்தான். மதுரை சட்டம்ன்ற உறுப்பினர் நன்மாறன்தான் அவர்.

அருகில் போய் “தோழர்” என்றோம். “வாங்க...மாதவராஜ், வாங்க காமராஜ்” என்று குழந்தை போல சிரித்துக்கொண்டு அழைத்தவர் “டீ சாப்பிடுறீங்களா” என்றார். ”எந்த பஸ்ல வந்தீங்க” என்றார். கைகாட்டினோம். “நானும் அதுலத்தான் வந்தேன் உங்களப் பாக்கலியே” என்று சொல்லிக் கொண்டார்.  குழந்தைகளுக்கு அவர் எழுதிய கவிதைகள், எங்களது ‘இது வேறு இதிகாசம்’ ஆவணப்படம் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். பஸ் புறப்படும்போது, “நிறைய எழுதுங்க...” என்று கைகொடுத்துவிட்டுச் சென்றார். மிக எளிமையான அவரது  தோற்றம் அந்த இரவில் எங்களுக்குள் மின்னிக் கொண்டிருந்தது.

பிறகு ஒருமுறை நான் பணிபுரிந்த சங்கரலிங்கபுரத்திற்கு, அவரது மிக நெருக்கமான உறவினர் ஒருவர் இறந்ததற்கு துஷ்டி கேட்க வந்திருந்தார். நான் அந்த ஊரில் இருக்கிறேன் என்றவுடன் வங்கிக்கிளைக்கு வந்தார். வரவேற்று,  வங்கிக்குள் அழைத்து பேசிக்கொண்டிருந்தேன். கூட பணிபுரிபவர்கள் யாரோ என்று உட்கார்ந்திருந்தார்கள்.அவர்களுக்கு அறிமுகப்படுத்தியவுடன் கிளையே பரபரத்தது. மேனேஜர் மிகப் பணிவுடன் அருகில் வந்து “யார்னு தெரியல.. ஸாரி சார்.. என்ன சாப்பிடுறீங்க..” என்று எதோ உளறிக் கொட்டினார். “ஐயோ... இதிலென்ன இருக்கிறது.... ஏன் தெரிந்திருக்கணும்”  என்று மிக அமைதியாக சமாதானப்படுத்திவிட்டு  கிளம்பினார். வெளியே வந்த பிறகு “அவங்க பாட்டுக்கு இயல்பா இருந்திருக்கலாம்... நீங்க கெடுத்திட்டிங்க..” என்றார். வழியனுப்பி வைத்து விட்டு வந்தபோது அந்த எளிமை என்னை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.

எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பிருந்து அவரைத் தெரியும். அப்போது எப்படி இருந்தாரோ, அதே போலத்தான் இன்றும். டி.வி.எஸ் ஃபிப்டிதான். அதே இனிமையும், நெருக்கமும்தான். இரண்டுமுறை எம்.எல்.ஏ வாக இருந்தவர், தன் பையன் தொழில் செய்ய ”எதாவது உங்கள் வங்கியில் லோன் கிடைக்குமா” என்று கேட்கிற அற்புதமான அப்பாவி.

மேடைக்கலைவாணர் என்ற பேர் அவருக்குண்டு. மிக ஆழமான விஷயத்தையும் மிகுந்த எள்ளலுடன் புரிய வைப்பார். பல வருடங்களுக்கு முன்பு அவர் பேச்சைக் கேட்ட முதல் அனுபவத்தை இப்ப்போதும் மறக்க முடியாது. லிபியா அருகே போர்க்கப்பலை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. கடாபி அதனைக் கண்டித்தார். அதைப் பற்றிச் சொல்லும்போது “ஐயா..! நீங்க பாட்டுக்கு உங்க வீட்டுல இருக்கீங்க.. எவனோ ஒருவன் தினமும் காலைல உங்க வீட்டு வாசலில் வந்து தண்டாலும், பஸ்கியும் எடுத்தா உங்களுக்கு எப்படி இருக்கும்” என்று கேட்டார். இப்போது நினைத்தாலும் சிரிப்பும்,  தீட்டப்பட்ட அந்தச் சித்திரத்திற்குள் இருக்கும் அர்த்தமும் யாருக்கும் சட்டென உறைக்கும்.

அவரைத்தான் நேற்றிரவு சில லும்பன்கள் கத்தியால் தாக்கியிருக்கிறார்கள். மதுரையில் அழகிரியை எதிர்த்து தங்கள் கட்சி வேட்பாளர் மோகன் அவர்களுக்காக தேர்தல் பணிகள் செய்து விட்டு வீடு திரும்பும் போது இந்த கொடுமை நிகழ்ந்திருக்கிறது. நேற்று நான் எழுதியிருந்த பதிவில் குறிப்பிட்ட லும்பன்களின் ராஜ்ஜியம் இதோ எழுந்தருளியிருக்கிறது. 

மனிதர்களின் சிறப்புகள் பற்றி லும்பன்களுக்கு என்ன தெரியும். காசுக்கும், விசுவாசத்திற்கும் அவர்கள் எதுவும் செய்வார்கள். அந்த மனிதரின் தத்துவ ஞானம், சர்வதேச பார்வை,  எளிமை குறித்தெல்லாம் எதாவது மரியாதை அவர்களுக்கு இருக்குமா? தேர்தல் களத்தில் ஜெயிப்பதற்கு எதையும் செய்வார்கள். கத்திகளுக்கு அவரது கவிதையின் ருசி தெரியாது. அவர் எழுதிய கவிதைகளுக்குத் தெரியும், இந்தக் கத்தியின் பசி.

இருக்கட்டும். அவரது அறிவின் ஒரே ஒரு துளியைக் கூட அவர்களால் வெல்ல முடியாது. மக்களோடு கலந்திருக்கும் அவரது அன்பை அவர்களால் வீழ்த்த முடியாது. ஒளிபொருந்திய அவரது எளிமையின் சிறப்புக்கு முன்னால் அவர்களில் எவருமே  நிற்க முடியாது. அவர்கள் ஏற்கனவே தோற்றுப்போனவர்கள்.

Related Posts with Thumbnails

32 comments:

 1. நிச்சயம் நன்மாறனின் அரசியல்/பொதுவாழ்வு தூய்மை/எளிமை போற்றத்தக்கது. மிகச்சிலரே இப்படி இருப்பார்கள். வாழ்க அவர்.

  **

  மோகனையும் குறை சொல்லமுடியாது. அரசியல்/பொதுவாழ்வு தூய்மை/எளிமை போற்றத்தக்கது.

  **

  இப்படி நல்லவர்கள் ஏன் ஜெயல‌லிதா போன்றவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும்?

  தன்மானம் இல்லாதவர்கள் அல்லது தங்களுக்கு என்று ஒரு கொள்கை இல்லாதவர்கள் அல்லது வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்கள் அல்லது அதிகாராம் பதவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் .... தனி வாழ்வில் நல்லவர்களாக அறியப்பட்டாலும் அவர்கள் ஒரு கேடுகெட்ட தலைமையின் கூலியாட்களாக இருக்கும் வரை அவர்களை பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்.

  நேற்று தி.மு.க இன்று அ.தி.மு.க என்று சொந்தக் கொள்கை ஏதும் இல்லாமல் அரசியல் இருப்புக்காக அலையும் இவர்களைப் பார்த்தால் பாவமாய்த்தான் இருக்கிறது ...அவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும்.

  //மனிதர்களின் சிறப்புகள் பற்றி லும்பன்களுக்கு என்ன தெரியும். காசுக்கும், விசுவாசத்திற்கும் அவர்கள் எதுவும் செய்வார்கள். //

  லும்பன்களுடன் கூட்டணி வைத்தபோது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு.

  மக்கள் சேவை செய்வதற்கு கட்சி தேவை இல்லை. குத்தம்பாக்கம் இளங்கோவைத் தெரியுமல்லாவா? அப்படி இருந்தாலே போதும். இது என்ன பொழப்பய்யா ...சோத்துக்கு இல்லை என்றால் கூலி வேலை பார்த்துக்கூட வயுறு கழுவலாம். பணம் பதவிதான் பெருசு என்றால் லும்பன்களாகவே ஆகிவிடலாம். ஏன் லும்பன்களிடம் கூலி வேலை செய்ய வேண்டும்?

  **

  ReplyDelete
 2. //அவர்கள் ஏற்கனவே தோற்றுப்போனவர்கள்.//

  தோற்கடிக்கப் படவேண்டியவர்களும் கூட (தேர்தலில் மட்டுமல்ல)

  ReplyDelete
 3. இதை விட நாகரிகமாகவும்,அழுத்தமாகவும் ஒரு ‘’ஆதரவாளரின்’’ கோபம் வெளிப்படுத்த படுவதில்லை, நம் இன்றைய அரசியல் அரங்கில்.
  உன் நண்பர்கள் யார் என்று சொல் நீ எப்படி பட்டவன் என்பதை நாங்கள் அறிந்து கொள்கிறோம் - இது பழசு
  உன் ஆதரவாளர்கள் யார் என்று சொல் நீ எப்படி பட்ட அரசியல் செய்கிறாய் என்பதை நாங்கள் அறிந்து கொள்வோம்-இது புதுசு
  நீங்கள் நன்மாறனின் ஆதரவாளர்,அவரை தாக்கிய குண்டர்கள் தவறு தொண்டர்கள் யார் என்று ஆதரவாளர்கள் என்று............................சே! கண்டேபிடிக்க முடியவில்லையே(சத்தியமா! நான் போலீஸ் இல்லீங்கோ)

  ReplyDelete
 4. இதை விட நாகரிகமாகவும்,அழுத்தமாகவும் ஒரு ‘’ஆதரவாளரின்’’ கோபம் வெளிப்படுத்த படுவதில்லை, நம் இன்றைய அரசியல் அரங்கில்.
  உன் நண்பர்கள் யார் என்று சொல் நீ எப்படி பட்டவன் என்பதை நாங்கள் அறிந்து கொள்கிறோம் - இது பழசு
  உன் ஆதரவாளர்கள் யார் என்று சொல் நீ எப்படி பட்ட அரசியல் செய்கிறாய் என்பதை நாங்கள் அறிந்து கொள்வோம்-இது புதுசு
  நீங்கள் நன்மாறனின் ஆதரவாளர்,அவரை தாக்கிய குண்டர்கள் தவறு தொண்டர்கள் யார் என்று ஆதரவாளர்கள் என்று............................சே! கண்டேபிடிக்க முடியவில்லையே(சத்தியமா! நான் போலீஸ் இல்லீங்கோ)

  ReplyDelete
 5. மிகவும் வருத்தமாயிருக்கிறது.

  ReplyDelete
 6. அவரைப்பற்றி தெரியும்..அவரின் எளிமையும் நம்பகத்தன்மையும் கூட...யாரரிவார் இந்த கொள்ளை கும்பலின் நடுவே..
  மனம் பதைக்கிறது.கூடவே கண்களும் கலங்குகின்றன..இது ஓர் எச்சரிக்கையாக இருக்கக்கூடும்...
  கத்தியால் கீரியவர்களுக்கு ஆழப் பதிப்பது ஒரு நேரமே ஆகாது.
  ஆனால் இது ஓர் எச்சரிக்கை மட்டுமேயென எல்லோர்க்கும் தெரியும்..
  ஆனால் இது குறித்து கலங்காதவர் அவரென எத்தனை பேருக்குத்தெரியும்..?

  ReplyDelete
 7. //இருக்கட்டும். அவரது அறிவின் ஒரே ஒரு துளியைக் கூட அவர்களால் வெல்ல முடியாது. மக்களோடு கலந்திருக்கும் அவரது அன்பை அவர்களால் வீழ்த்த முடியாது. ஒளிபொருந்திய அவரது எளிமையின் சிறப்புக்கு முன்னால் அவர்களில் எவருமே நிற்க முடியாது. அவர்கள் ஏற்கனவே தோற்றுப்போனவர்கள்.//


  உயர்ந்த மனிதரொருவரை அறிமுகம் செய்ததற்கு ந்ன்றி. அவர் உடல் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

  பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 8. தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் MLA க்களுக்கு ஜீப் வேணும், வீடு வேணும் என்று கேட்ட பொழுது அதை கண்டித்து மக்களுக்காக பேசுங்கள் என்று சட்டமன்றத்தில் குரல் எழுப்பியவர் நன்மாறன் என்ற மக்கள் சேவகர்.

  ReplyDelete
 9. ஒரு சிறந்த மனிதரை நீங்களும் தமிழ்செல்வன் அவர்களும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்....

  ஆனால், எளிமை, கத்தி, கவிதை, பசி, ஒளி என்றெல்லாம் சொல்வதனால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் பேசும் மொழி வேறானது....

  ஏனெனில், அறுவாள், கத்தி, துப்பாக்கியெடுத்த உங்கள் பாணியில் லும்பன்கள் என்றழைக்கப்படும் பொறுக்கி, ரவுடிகளுக்கு, அஞ்சா நெஞ்சன் என்று பெயரிட்டு அழைக்கும் அற்புதமான இனமான தமிழர்கள் அவர்கள்...

  அவர்களுக்கு தெரிந்த மொழியில் பதிலளித்தால் மட்டுமே அவர்களுக்கும் தெரியும் அடுத்தவரின் வலி. அந்த நாட்களை விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

  ReplyDelete
 10. பெயருக்கு ஏற்றார் போல் தோழர்.ஆனாலும் அங்கே அ(ழு)கிய மலையும் உள்ளது.அது என்று சிலையாகுமோ?அல்லது தொலையுமோ?

  ReplyDelete
 11. ஒழுக்கமானவர்கள், சமுதாயத்தின் மீது அன்பும்,அக்கறையும் உடையவர்கள் இனி இருக்க வேண்டிய இடம் ஒன்று ஜெயில் அல்லது மருத்துவமனை என்றாகிவிட்டது.
  எவன் ஆட்சி செய்தாலும் இது தான் நிலைமை. ஆனாலும் நன்மாறன் தமிழ் சமுகத்தால் போற்ற பட வேண்டியவர்.அவருக்கே ........... ..........யா?

  ReplyDelete
 12. ஒழுக்கமானவர்கள், சமுதாயத்தின் மீது அன்பும்,அக்கறையும் உடையவர்கள் இனி இருக்க வேண்டிய இடம் ஒன்று ஜெயில் அல்லது மருத்துவமனை என்றாகிவிட்டது.
  எவன் ஆட்சி செய்தாலும் இது தான் நிலைமை. ஆனாலும் நன்மாறன் தமிழ் சமுகத்தால் போற்ற பட வேண்டியவர்.அவருக்கே ........... ..........யா?

  ReplyDelete
 13. நண்பர் கல்வெட்டு-வின் கருத்துகளிக்கு கன்னா பின்னா ரிபீட்டு.

  பாதைகள் பல மாறிய கம்யூனிஸ்ட்களால் இந்தியாவில் கம்யூனிசமே அழிந்து வருகிறதே...

  கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இளமை, இளைஞரகள் துளிகூட இல்லாமல் போனதன் காரணம் என்ன?

  ReplyDelete
 14. நண்பர் கல்வெட்டு-வின் கருத்துகளிக்கு கன்னா பின்னா ரிபீட்டு.

  பாதைகள் பல மாறிய கம்யூனிஸ்ட்களால் இந்தியாவில் கம்யூனிசமே அழிந்து வருகிறதே...

  கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இளமை, இளைஞரகள் துளிகூட இல்லாமல் போனதன் காரணம் என்ன?

  ReplyDelete
 15. படிக்க துவங்கியதும் ஒரு நல்ல 'மனிதரை' பற்றி நினைவுகூர்வதாக அவரின் எளிமை பன்புகளை என்னி மனம் நிம்மதி கொண்டு வந்தது. கடையிசில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அக்கிரம செயலை பாராத்து மீண்டும் கவலையளித்துக் கொண்டது. ஏன் இன்னும் ஒரு நல்ல மனிதனால் தன் இயல்பில் வாழ இயலவில்லை அப்பகுதி இளைஞர்கள் ஏன் இவரின் பின்னால் நிர்க்க கூடாது? போன்ற கேள்விகள் எழுந்து வேதனை கொள்கின்றது.

  ReplyDelete
 16. கல்வெட்டு சரியாக பின்னுட்டம் போட்டு இருக்கிறார் .

  இருந்தாலும் இந்தியாவின் அரசியல் அநாகரிகமான அரசியல் .ரௌடிகளின் ராஜ்ஜியம் .

  ReplyDelete
 17. வருந்தத்தக்க நிகழ்வு !

  ReplyDelete
 18. இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு உங்கள் எதிர்ப்பை உறுதியாக வைத்திருக்கிறீர்கள். என்னுடைய கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 19. இந்நாளில் இப்படியும் ஒரு மனிதரா ? அறிமுகப்படுத்தியதற்கு நன்றி .

  ReplyDelete
 20. dear Mathav

  kindly read my reflections (Sorkal thorkum idangalil ongum kolai aayuthangal) mailed to you yesterday.

  You have done a nice registry in this matter.

  s v venugopalan

  ReplyDelete
 21. சொற்கள் தோற்கும் இடங்களில்

  ஓங்கும் கொலை ஆயுதங்கள்.................


  எஸ் வி வேணுகோபாலன்
  சொற்கள்

  கூர்மை தீட்டிக் கொள்ள முடியும் -

  சத்திய ஆவேசங்களால்

  எளிமையின் கம்பீரத்தால்

  நேர்மையின் வெளிச்சத்தால்...

  அகந்தையும், ஆத்திரமும்,

  அதிகாரமும் கொண்டு

  சொற்களைத் தீட்டத் துவங்கியவர்கள்

  தடுமாறி விழுந்த இடத்தருகே

  அவதூறுகளின் சாயத்திலும்

  ஆபாச சாக்கடையிலும்

  நனைந்தெழுமாறு சபிக்கப்பட்ட

  சொற்களும் நிற்கின்றன

  தலைகுனிந்து!

  உள்ளத்தில் ஒலிக்காத

  வாக்குறுதிகளை

  உதடுகளில் மட்டும்

  நெய்து பிழைப்போருக்கு

  ஆயுதங்களாக உதவ

  மறுக்கும் சொற்கள்.  கைத்தட்டலுக்காகவும்

  கைத்தாங்குதலுக்காகவும்

  காலகாலமாய்க் கவியரங்குகளைக்

  காயப்படுத்திக் கொண்டிருந்த

  புண்மொழியின் மிச்ச சொச்சங்கள்

  எய்யப்பட்ட வேகத்திலேயே

  திரும்புகின்றன கேவலப்பட்டு

  சொற்கள் தோற்றவிடங்களில்

  தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டாதோரின்

  ஏவலாளிகள்

  புறப்பட்டிருக்கின்றனர்

  உண்மையான கொலை ஆயுதங்களோடு....

  ஆயுதங்களின் முனையை முறித்த

  அடக்கத்தோடும்

  எளிமையின் கம்பீரத்தோடும்

  அஞ்சாத புன்னகையோடும்

  நடைபோடுகிறது

  செங்கொடியின் இயக்கம்.

  ReplyDelete
 22. மிகவும் வருத்தமான செய்தி
  :(((

  ReplyDelete
 23. இந்தக் காலத்தில் இப்படியொரு அரசியல்வாதி போற்றப்பட வேண்டியவர் !
  கத்திகளுக்குத் தெரியுமா கவிதையின் ருசி ? :(

  ReplyDelete
 24. //அந்த எளிமை என்னை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது. //


  கொள்ளு பேரன்களுக்கும் சொத்து சேர்த்து, நித்திரையிழந்து உடல் வருந்தி வாழ்வதை விட இந்த எளியைமா மனிதரைப்போல் வலிமையாய் வாழ்வதற்கு கோடி கொடுத்தாலூம் வராது


  //அவரைத்தான் நேற்றிரவு சில லும்பன்கள் கத்தியால் தாக்கியிருக்கிறார்கள்//

  வேசிமக்களுக்கு தெரியுமா மனிதருள் மணிக்கத்தை பற்றி...
  காசுகொடுத்தால் தாயோடு கூட கல்ல உறவாடும் கூட்டம் நாம் நாட்டில் பெருகிவிட்டது...
  இதுபோல் கூட்டம் உடல் தினவிருக்கும் வரை ஆடிவிட்டு அடிமாடு போட் அடிபட்டு செத்தொழியும்....
  இவர்களுக்கு தெரியுமா வையத்துள் வாழ்பவரை பற்றி...

  ReplyDelete
 25. மதிப்பிற்குரிய கல்வெட்டு,

  சாதரண மனிதன் மீது இந்த தாக்குதல் நடைபெற்றிருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது தான்

  கட்டுரையின் வருத்தமே இந்த சமுதாயதிர்க்கும் இன்றைய அரசியல் வாதிகளுக்கும் எடுத்துகாட்டாக விளங்கும் ஒரு மாமனிதனின் மீது தாக்குதல் நடந்துவிட்டதே என்பதுதான்

  நேற்று தி.மு.க இன்று அ.தி.மு.க என்று கூட்டணி மாறிவிட்டதால் மட்டும் தத்துவமும் இல்லாதவர்கள் தலைமையின் அடியாட்கள் என ஆகிவிட மாட்டர்கள் என்பது பல முறை நிருபிக்கப்பட்ட உண்மை

  கூட்டணி மாறி நன்மாறனின் தலைமையோ அல்லது அவரோ நடத்தை தவறவில்லை என்பதே கசப்பான உண்மை

  தி.மு.க அணியில் இருந்த போதோ அல்லது அ.தி.மு.க அணியில் இருந்த போதோ, அவர்கள் தவறு செய்தபோது கண்டிக்கவும் போரடவும் தவறாத கண்ணியவான்கள் என்பதை மறந்து விடக்கூடாது

  தனிமனிதனால் சில தர்மகரியங்கள் செய்யலாமே தவிர சமுதாய மாற்றம் என்பது சாத்தியமன்று.

  கம்யூனிஸ்ட் கட்சிகளில் இளைஞர்கள் இல்லை என்பது கண்ணை மூடி கொண்டு, உலகம் இருட்டு என்பதற்க்கு சமம்

  அழகுமுகிலன்

  ReplyDelete
 26. அனைவரின் வருகைக்கும், இந்த கொடூரத் தாக்குதலைக் கண்டித்த, வருத்தம் தெரிவித்த அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 27. The terror acts unleashed against a simple ,humble and a sincere political worker.What the so called m.Karunanithi government going to say about this murder attack?
  He-mu.ka- is a clever man.His party already taken a "rowdyism " in politics.From Aruna,Lelavathi to krishnan>>>their thirst not stopped.
  N.Nanmaran is the best example of COMMUNIST Movements.His life and services are milestones in the history.Certainly The M.Karunanidhi government will not take any actions against the attack.--R.SELVAPRIYAN-CHALAKKUDY

  ReplyDelete
 28. கத்திகளுக்கு அவரது கவிதையின் ருசி தெரியாது. அவர் எழுதிய கவிதைகளுக்குத் தெரியும், இந்தக் கத்தியின் பசி.

  ReplyDelete
 29. எளிமையானவர்கள் ஒருசிலரே இருக்கின்றார்கள்!
  அவருள் நன்மாறனும் ஒருவர்!
  கலைவாணர் திரைக்கு
  மேடைக் கலைவாணர் இவர்! நல்ல ரத்தினச் சுருக்கமான மேடைப் பேச்சாளர்களின் சிறந்தவர்! நல்ல இலக்கியப் படைப்பாளியும் கூட,இலக்கியப் படைப்பாளர்களுக்கு கிரியாவூக்கியும் கூட,இந்த தலைமுறைக்கு சிறந்த அரசியல்,தத்துவ,கலை இலக்கிய வழிகாட்டியும் கூட!
  நன்றி மாதவராஜ் அவர்களே நானும் அவரோடு அரசியல் கைதியாக இருந்திருக்கின்றேன் என்பதில் பெருமை அடைகின்றேன்.

  ReplyDelete
 30. நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் தோழர் நன்மாறன் மதுரை பெத்தானியாபுரத்தில் இருந்த எங்களது அறைக்கு எப்போதாவது வருவார். ஒரு ஜோல்னா பையுடன் எளிமையான வேட்டி, சட்டையில் இருப்பவர். சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அந்த சைக்கிளையும் யாரே திருடிக் கொண்டு போய்விட்டார்கள். அந்த சைக்கிளை எப்படியாவது கண்டு பிடித்துக் கொடுக்க சொல்லி போலீசில் புகார் கொடுத்து விட்டு அலைந்து கொண்டிருந்தார். அந்த சைக்கிள் களவு போன பிறகு கொஞ்ச நாள் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தார். பல நேரங்களில் இவர் எம்.எல்.ஏ இலவச பேருந்து பாஸை காட்டும் போது தான் அவர் எம்.எல்.ஏ என்பதே பேருந்தின் நடத்துனருக்கு தெரியவரும். அவர்கள் வியந்து போய்விடுவார்கள்.இவ்வளவு தாக்குதல் நடந்தும் இப்போது கூட மதுரையில் அவரது வீடு உள்ள மேலப்பொன்னகரம் பகுதியில் அவர் எந்த கவலையும்படாமல் நடந்து தான் போகிறார். மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்கும்!

  ReplyDelete
 31. நேற்று அதிமுக அதற்கு முந்தைய தினம் திமுக என்று மாற்றி மாற்றி கூட்டணி அமைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் இவருக்கென்ன வேலை. அதற்கு பதிலாக மேற்சொன்ன கட்சிகளுடன் கூட்டே சேராத மிக பரிசுத்தமான வித்யாசமான கட்சி பி ஜே பி யுடன் இவர்கள் கூட்டணி சேர்ந்து தேசத்தை RSS கூறும் வழியில் காப்பாற்றட்டும். ஏனெனில் பிஜேபியில் தான் இளைஞர்கள் ஏராளமாய் உள்ளனர்.இதையேன் இந்த கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக்கொள்ள மாட்டேன்கிறார்கள்.

  தேசிய கட்சிகளுடன் அணிமாறுவது அதிமுகவா அல்லது திமுக வா?

  நன்மாறனின் கட்சியில் கொள்கை உள்ளது. அது காங்கிரஸை எதிர்ப்பது மதவாத கட்சிகளை எதிர்ப்பது அந்த கூட்டணியை எதிர்ப்பது. இது எனது புரிதல்.

  அரைவேக்காட்டுத் தனமாய் அட்டை மட்டும் படித்து விட்டு முழு புத்தகத்தை விமர்சனம் செய்யவேண்டாம். நுனிப்புல் மேய்தல் நல்லதல்ல.

  இளைஞர்களே இல்லை என்றால் திமுகவும் அதிமுகவும் ஏன் நன்மாறனின் கட்சியை தனது அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

  ஊடங்களால் ஊதிப் பெருத்து காண்பிக்கபட்ட புலிவால் வைகோவையும், இளைஞர் பட்டாளத்தால் நிறைந்துள்ள பிஜேபியையும் அதிமுகவும் திமுகவும் கண்டு கொள்ளவில்லை.

  ஒரே குழப்பமாய் உள்ளது.

  மாதவராஜ் புரியவைப்பீர்களா?

  ReplyDelete