Type Here to Get Search Results !

தமிழகத்தில் திடீர் பொது வேலைநிறுத்தம்

srilanka

“மத்திய அமைச்சரவையிலிருந்து மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள்”
“போரை நிறுத்த மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கின்றன”
“பிரபாகரன் தீவீரவாதியல்ல”
“இல்லை... போராளிகளாக வந்தவர்கள் பிறகு தீவீரவாதிகளாகி விட்டனர்”
எப்படியோ குட்டையை முடிந்தவரை குழப்பியாகிவிட்டது.

“போரை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம்”
மீன் பிடிக்க இப்படியொரு அறிவிப்பு.

“வாக்காளப் பெருமக்களே.... வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில்...”

 

*

கருத்துரையிடுக

12 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. //“வாக்காளப் பெருமக்களே.... வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில்...” //

  கரகரப்பான குரலில் சொல்ல வேண்டுமோ???

  இதை பற்றி இன்று நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். முடிந்தால்...

  http://abbaavi.blogspot.com/2009/04/blog-post_23.html

  பதிலளிநீக்கு
 2. இந்த விஷயத்தில் திமுகவை மட்டும் தனிமைப்படுத்திக் குற்றம் சொல்ல முடியுமா என்ன!

  பதிலளிநீக்கு
 3. //2.இந்த விஷயத்தில் திமுகவை மட்டும் தனிமைப்படுத்திக் குற்றம் சொல்ல முடியுமா என்ன!//

  மக்கள் ஆட்சியில் மக்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பது அவர் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடப்பதாக நம்புவதால் / கூறுவதால் தான். ஆட்சியில் இருப்பது திமுக

  பதிலளிநீக்கு
 4. தமிழகத்தில் " ஈழத் தமிழர்கள்" பிரச்சனையில், ஆட்சியை காப்பாற்ற திமுக இ-காங் க்கு அடிப்பணிந்தது. வரும் தேர்தலில் அதிமுக,பாமக, இடது-வலது கம்யூனிஸ்ட், மதிமுக,அவர் அவர் அரசியலுக்காக அதை சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.

  " ஈழத் தமிழர்கள்" பிரச்சனைக்க்கு யாரும் உண்மையில் அக்கரை காட்டவில்லை என்பதுதான் உண்மை!!

  இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  WHO KILLED INDHRA GANDHI?
  WHO IS THE PRIME MINISTER OF INDIA?

  SAME ANSWER FOR BOTH QUESTIONS. BUT WE ACCEPT IT.
  HOW AND WHY??
  BECAUSE FIRST ONE IS NEGATIVE AND SECOND ONE IS POSITIVE(!!? HE HE)MAY BE..

  SONIA SHOULD NOT TAKE REVENGE ON 'LTTE' BECAUSE OF HER HUSBAND'DEATH.

  WHY LTTE KILLED RAJIVGANDHI?
  RAJIV GANDHI SENT PEACE ARMY FORCE TO SRILANKA!!

  WHAT THEY DO IN SRILANKA,INSTEAD OF BRINGING PEACE THEY RAPED TAMILS LADIES AND KILLED THEM WITH THEIR CHILDREN.

  THIS IS WHOSE MISTAKE?

  IF RAJIVGANDHI MAY REFUSED TO SEND THE PEACE ARMY FORCE TO SRILNKA THAT TIME. I AM SURE THAT RAJIV GANDHI SHOULD ALIVE STILL TODAY.

  TODAY CONGRESS GOVERNMENT HELPING SRILANKAN ARMY FORCE TO DESTROY 'LTTE' BUT WHAT THEY DONE WHEN RAJIV GANDHI WAS ATTACKED BY SRILANKAN ARMY IN SRILANKA??

  THERE ARE SO MANY QUESTIONS AND DOUBTS RECORDING ILAM TAMILIANS PROBLEM.
  NO ONE IS READY TO HELP THEM REALLY,

  THATS A FACT FACT!!!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சார். பணிப்பளு.. அதனால பல பதிவுகள் படிக்கமுடியாமல் பெண்டிங்கில் கிடக்கு!!!

  வேலை நிறுத்தமெல்லாம் எதுக்கும் வேலைக்கு ஆவாது.. இதோ பாருங்க. நான் வேலைக்கு வந்துட்டேன். நானொ அல்லது மக்களோ வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஒண்ணும் ஆயிடப்போறதில்ல..

  முத்துக்குமார் இறந்தப்பவே சொன்னேன். அது வீண் சாவு என்று. இப்போ முத்துக்குமார் இறந்தபிறகு எத்தனையோ அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு கொன்னுடுச்சு! முந்தி விட இப்போ படுகொலை அதிகம்தான் ஆயிருக்கு!!!

  என்ன செய்யணும்?? இந்திய அரசு நேரடியா தீவிரமா தலையிடணும். யாருக்கும் இங்க அக்கறை இல்லைங்க...

  பதிலளிநீக்கு
 6. தன் சொந்த லாபத்துக்காக அப்பாவி உயிர்களைக் குடிக்கும் நீசன் அழகிரியின் உயிருக்காகக் கவலைப்படும் ஈனப்பிறவியின் தலைமையில் இருக்கும் நாம் வேறென்ன எதிர்பார்ப்பது?

  பதிலளிநீக்கு
 7. அறிவிப்பு வந்ததுமே எல்லோருக்குமே
  மெல்லிய சந்தோசம் கிட்டியிருக்கும் (முதலாலிகளை தவிர)
  அப்பாட இந்த வெயிலுக்கு வெளிய எங்க போக இப்படியே படுத்து கிடக்கலாம், அப்படியே போரடிச்சுடா
  ஒரு படம் பார்த்ததுக்களாம், நண்பர்களுடன் பேசி அரட்டை அடிக்ககளாம், தண்ணி பிரியர்கள் இன்னுமொரு பெக் கூட போட்டுக் கொண்டு எந்த சிரத்தையுமின்றி நடு ஹாலில் முட்டி தேய உருண்டு புரலளாம் எப்படியோ இந்த லீவை முடிந்த மட்டும் நம்மலுக்கு உகந்ததாக கழிப்போம்.
  இதை தவிர வேறு என்ன நடந்திடும் இந்த வேலை நிறுத்ததில்.

  பதிலளிநீக்கு
 8. //
  இதுமட்டுமல்லாது நாளை (எப்ரல் 23) வேலை நிறுத்தத்திற்கு அழைப்பும் விடுத்திருக்கிறார். இது யாரை ஏமாற்றுவதற்காக? யாரை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம்? மத்திய அரசைக் கண்டித்தா? உங்கள் கூட்டணியிலிருக்கும் சோனியாஜியைக் கண்டித்தா? இல்லை இலங்கை அரசைக் கண்டித்தா?

  சாதாரண பேருந்து பயணத்திற்கே 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யப்படுகிறது. ரயில் பயணத்திற்கு 90 நாட்கள். இவ்வளவு ஏன்.. ஒரு சினிமாவுக்குச் செல்லக்கூட மூன்று நான்கு நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால்தான் செல்லமுடியும். இப்படி திட்டமிடலோடு வாழ்க்கை நடத்தி வரும் மக்களிடம், திடீரென நாளை நீ எங்கும் செல்லாதே, எதுவும் செய்யாதே என்றால் எப்படி?

  திடீரென இப்படி எதாவது போராட்டங்களை அறிவிக்கும் கழகத் தலைவர்களே.. உங்களுக்கு போராடவேண்டும் என்ற உணர்வு திடீரென வந்தால், ஒரு ஓரமாகச் சென்று உண்ணா விரதம் இருங்கள்; கூட்டம் போடுங்கள்; குட்டிக் கரணம் போடுங்கள்; தண்ணீர் குடியாமல் இருங்கள்; தந்தி அடியுங்கள். ஆனால் பொது மக்களையும் இது போன்ற பொதுக்காரணங்களுக்காக போராட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும் என்று நினைத்தால், அதற்கு தகுந்த கால அவகாசம் கொடுங்கள்.//

  மேற்கண்டவை எப்ரல் 22 விகடனில் வெளிவந்த என் கட்டுரை. இதனை முழுமையாகப் படிக்க
  http://tamizhodu.blogspot.com/2009/04/blog-post_22.html

  பதிலளிநீக்கு
 9. அப்பாவி முரு!
  வருகைக்கு நன்றி. தங்கள் பதிவு படித்தேன். பின்னூட்டம் இடுவேன்.

  ஜ்யோவ்ராம்சுந்தர்!
  உண்மைதான். இந்த விஷயத்தில் தி.மு.கவை மட்டும் சொல்ல முடியாதுதான். இங்கு வெளிப்படையான அரசியல் இல்லை என்ற விமர்சனம் எனக்கும் உண்டு. விடுதலைப்புலிகள் ஆதரவு, விடுதலைப்புலிகள் மீது எதிர்ப்பு இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதை வெளிப்படையாக பேசி அரசியல் நடத்துவது இல்லை. இதுதான் இங்கு பிரச்சினையே. அங்கு இருக்கும் பாதிப்புகளைவிட, தேர்தலில் தங்கள் வாக்கு பாதிப்படையுமோ என்ற அச்சத்தில் நடவடிக்கைகளும், இயக்கங்களும் அமைகின்றன. அதில் சமீபத்தில் அதிரடியாய் இறங்கியிருக்கிறது தி.மு.க.


  கோவி.கண்ணன்!
  வருகைக்கு நன்றி. பகிர்வுக்கும் நன்றி.

  ராஜநடராஜன்!
  தொடர்ந்து தடுமாறுகிறார் என்பதுதான் உண்மை.

  ஜான் பொன்ராஜ்!
  விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று அர்த்தம் முன்வைக்கப்படுகிறது. அதிலிருந்தே பார்வைகளும், விமர்சனங்களும் துவங்குகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்லத் தயங்கி அரசியல் நடத்துவதுதான் பிரச்சினையாகிறது. போலியாகவும் தோன்றுகிறது. கலைஞர் இரண்டுக்கும் நடுவில் நின்று தத்தளிக்கிறார்.

  ஆதவா!
  வருகைக்கும் , பகிர்வுக்கும் நன்றி.

  தீபா!
  கோபம் முற்றிலும் நியாயமானது.

  ஆ.முத்துராமலிங்கம்!
  நம் மக்களின் மனோநிலைமை இப்படியிருந்தால்.....


  உழவன்!
  உங்கள் கருத்துக்கள் படித்தேன். அந்த அவசரத்தில் ஆயிரம் அரசியல் பண்ணுவார் அவர். சாணக்கியர் அல்லவா!!!!

  பதிலளிநீக்கு
 10. என்னத்த சொல்லுறது...
  கொடுமைதான்.
  தாமரை சரியா சொல்லீருக்கங்க.
  கவனிச்சீங்களா...

  பதிலளிநீக்கு
 11. உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

  பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

  பதிலளிநீக்கு