-->

முன்பக்கம் � � ஒரு செடியும் மூன்று பூக்களும்

ஒரு செடியும் மூன்று பூக்களும்

CryingBoy

"ஏன் இலைகளைப் பிய்த்துப் போடுகிறாய். இப்படிச் செய்யக் கூடாது என்று எத்தனை தடவை உனக்கு நான் சொல்லியிருக்கிறேன்" அவனது அக்கா சத்தம் போட்டாள்.

அவன் இலைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பார்...இந்தச் செடி அழுகிறது". பாவம் போல குரலை வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்.

"செடி அழுகிறதா?"

"ஆமாம். இதுதான் கண்ணீர்"

செடியையே பார்த்துக் கொண்டிருந்தான். அதன் காம்புகளில் பால் போன்ற திரவம் சொட்டிக்கொண்டிருந்தது. கன்னம் சுருங்க ஆரம்பித்தது. அண்ணாந்து அக்காவைப் பர்த்தான். அக்கா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடிபட்டது போல முகம் துடித்தது. கண்கள் கலங்கின.

"அக்கா, இந்தச் செடியை சிரிக்க வையேன்"

"செடியை நீதான் அழ வைத்தாய். நீயே சிரிக்க வை."

"எனக்கு சிரிக்க வைக்கத் தெரியலயே". அவன் சத்தமாய் அழ ஆரம்பித்தான். "அக்கா, ப்ளீஸ்... செடியை சிரிக்க வையேன்"

"எனக்கும் தெரியலயே"

உதடுகள் பிதுங்க, கண்ணீர் நிறைந்த கண்களுடன் செடியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"காற்று வீசினால் செடி சிரிக்கும்." அக்கா சொன்னாள்.

அவன் செடியை நோக்கி ஊதிக் கொண்டிருந்தான்.  "அக்கா செடி சிரிக்கிறதா".

 

பி.கு: இது ஒரு மீள் பதிவு

 

*

Related Posts with Thumbnails

Tags:

15 comments:

 1. கண்ணீர் நிறைந்த கண்களுடன் செடியையே பார்த்துக் கொண்டிருந்தான்\\

  உணர்ந்தேன் இவ்வாறே

  செடிகளுடான பழக்கம் உண்டு ...

  ReplyDelete
 2. மீள் சிறுகதை நல்லா இருக்கு.

  ReplyDelete
 3. excellent இருக்கு சார்.

  ReplyDelete
 4. ரொம்ப அருமையா இருக்குங்க!!! அந்த சிறுவனின் நிலையிலிருந்து யோசித்துப் பார்த்தேன்...

  ReplyDelete
 5. மிக அழகாக இருக்கிறது...ஒரு மரம் கூட அசைய மாட்டேங்குது என வெக்கைத் தாங்காமல் ஆயா சொல்லும்போது போய் கிளையை அசைத்துவிட்டு வரலாமா எனத் தோன்றும்! அதை நினைவு படுத்துவதுபோல் இருக்கிறது! :-)

  ReplyDelete
 6. நல்ல கதை. கடலோரத்தில் இருக்கிறேன் ஒரு இலை கூட அசைய மாட்டேன் என்கிறது.

  ReplyDelete
 7. இந்த குழந்தைகளுக்கு உள்ள பாசமும், நேசமும்
  அறிவும்
  பெரியவர்களான நமக்கு எவ்வளவு தூரம் இருக்கு?
  இல்ல அப்படி இருந்தா சுயநலம் இல்லாம இருக்கா

  ReplyDelete
 8. பல செடிக்களை நான் அழ வைத்திருக்கிறேன் அதில் சில செடிகள் என்னை அழ வைக்கின்றன இன்னமும்.

  ReplyDelete
 9. நட்புடன் ஜமால்!
  அ.முத்த்ராமலிங்கம்!
  மண்குதிரை!
  ஆதவா!

  அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 10. சந்தனமுல்லை!
  நல்ல நினைவு கூறல். அதற்கு தூண்டுதலாய் பதிவு இருந்ததில் சந்தோஷம்.

  அமுதா!
  கவிநயத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.

  புன்னகை!
  உண்மைதான். நீங்கள் சொல்வதில் இருக்கும் உண்மைகளை இன்னும் விளக்கமாக ஒரு பதிவு எழுதத் தோன்றுகிறது. தூண்டியிருக்கிறது.

  ReplyDelete
 11. இப்படியும் சிந்திக்க முடியுமா?? அருமை நண்பரே!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. வஞ்சம் இல்லை பிஞ்சின் நெஞ்சில் செடியின் வலியை உணர்ந்து அழுகிறது...அதை சிரிக்க வைக்க முயல்கிற்து..அக்கா அவள் அறிவுருத்த அது தவறு என்று அறிகிறது...ஆளாய் வளர்ந்து நிற்கிறோம் அறிவிலிகளாக இருக்கிறோம் வான் உயர்ந்து வளர்ந்த மரம்களை கூட நாம் வசதிக்காக வருத்தம் இன்றி அழிகிறோம்... நமக்கு வசந்தம் காட்டும் மரம் செடி கொடி வனம் வளர கொஞ்சம் முயன்றிடுவோம்....உங்கள் இந்த பதிவு உணர்ந்தவர்க்கு ஒரு தகவல்....மரம்களை வளர்த்திடுவோம் நம்மை மறந்து சிரித்திடுவோம்

  ReplyDelete
 13. வஞ்சம் இல்லை பிஞ்சின் நெஞ்சில் செடியின் வலியை உணர்ந்து அழுகிறது...அதை சிரிக்க வைக்க முயல்கிற்து..அக்கா அவள் அறிவுருத்த அது தவறு என்று அறிகிறது...ஆளாய் வளர்ந்து நிற்கிறோம் அறிவிலிகளாக இருக்கிறோம் வான் உயர்ந்து வளர்ந்த மரம்களை கூட நாம் வசதிக்காக வருத்தம் இன்றி அழிகிறோம்... நமக்கு வசந்தம் காட்டும் மரம் செடி கொடி வனம் வளர கொஞ்சம் முயன்றிடுவோம்....உங்கள் இந்த பதிவு உணர்ந்தவர்க்கு ஒரு தகவல்....மரம்களை வளர்த்திடுவோம் நம்மை மறந்து சிரித்திடுவோம்

  ReplyDelete
 14. மிகவும் பிடிச்சிருக்கு சார், எனக்கு இப்படியொரு அக்கா இல்லையே என ஏங்க வைக்கிறது.

  //"அக்கா, ப்ளீஸ்... செடியை சிரிக்க வையேன்" //

  ஒரு வேண்டுகோள், இம்மாதிரி தருணங்களை தாங்கள் குறும்படமாக எடுத்தால் மிக நன்றாயிருக்கும்.

  ReplyDelete
 15. தமிழரசி!
  தங்கள் வருகைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி.

  யாத்ரா!
  உண்மைதான். குறும்படமாக முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

  ReplyDelete