-->

முன்பக்கம் , , , � “ஒண்டிக்கு ஒண்டி வர்றியா” - அத்வானி

“ஒண்டிக்கு ஒண்டி வர்றியா” - அத்வானி

elections

“நேருக்கு நேர் என்னோடு வாதம் நடத்தத் தயாரா, அதை மக்கள் லைவ் ஷோவில் பார்க்கட்டும்” என்று அகோர யாத்ரீகர் அத்வானி மன்மோகன் சிங்கிற்கு தொடை தட்டி அழைப்பு விடுத்திருக்கிறார். தேர்தலையொட்டி அமெரிக்காவில் நடப்பது போல் இந்த ஷோ இருப்பது ஆரோக்கியமானதுதான் என அதிமேதாவிகள் கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

“நான் பார்த்ததிலேயே இந்தியாவின் ‘வீக்’கான பிரதமர் மன்மோகன் சிங்தான்’ என்று அத்வானி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்ததன் அர்த்தம் இப்போது விளங்குகிறது. கதவிடுக்கில் மாட்டிய எலி போல கீச் கீச்சென்று பேசுகிறவரைப் போட்டு புரட்டி புரட்டி எடுத்து விடலாம் என்று நினைத்திருக்கிறார். எல்லாவற்றையும் சோனியா காந்தியிடம் கேட்டுப் பேசுகிறவர் அங்கு வந்து அத்வானியிடம் எப்படி நேருக்கு நேர் பேசுவார் என்று கிண்டல்கள் பறக்கின்றன.

இந்த விவாதம் நடந்தால், இரு ‘மக்கள் தலைவர்களும்’ என்ன பேசுவார்கள்?

“இந்தியாவில் பாதுகாப்பின்மை அதிகரித்து விட்டது. காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனம்” என்பார் அத்வானி.
“உங்க ஆட்சியில மட்டும் என்ன வாழ்ந்துச்சாம். அப்போ வெடியே வெடிக்கலையா. இதுக்குல்லாம் காரணம் நீங்கதான்” என்பார் மன்மோகன்.
“பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணித்து வருகிறது” -அத்வானி.
“மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. தேச ஒருமைப்பாட்டிற்கு பா.ஜ.க ஊறு விளைவிக்கிறது. தேசப்பிதாவைக் கொன்றதிலேயே அவர்கள் ஆக்கம் தெரிந்து விட்டது.” -மன்மோகன்  சிங்.
“எம்.பிக்களுக்கு பணம் கொடுத்து காங்கிரஸ் அரசு குதிரை பேரம் செய்தது. பாராளுமன்றத்திலேயே அது லைவ் ஷோவாக காண்பிக்கப்பட்டது”- அத்வானி
“நீங்க மட்டும் யோக்கியமாக்கும். டெஹல்காவின் டேப்புகளை எடுத்துக் கொண்டு வரட்டுமா.’-மன்மோகன்சிங்

இப்படியே இந்த உரையாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். “நீ யோக்கியமா”, “நீ மட்டும் யோக்கியமா” என நடக்கும் அனல், புனல், மணல் விவாதங்களைப் பார்த்து அகில உலகமும் மூக்கு மேல் விரல் வைத்து, இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசிக்கும். கடைகோடி கிராமத்தில் இன்னமும் தண்ணீருக்கு எட்டு கி.மீ நடக்கும் பெண்கள் இதைப் பார்க்கப் போவதில்லை. விளைஞ்ச கரும்புக்கும், கோதுமைக்கும், நெல்லுக்கும் உரிய விலை இல்லாமல் நெருப்பின் தகிப்போடு வாழ்க்கை நடத்துகிறவர்கள் இதைப் பார்க்கப் போவதில்லை. ‘ஒருநாளைக்கு நூறு ருபாவுக்கு எதாவது வேல கெடைக்குமா’ என்னும் வேட்கையோடு தவிப்பவர்கள் யாரும் இதைப் பார்க்கப் போவதில்லை. இந்தப் புண்ணியர்களின் ஆட்சிகளால் சுதந்திர இந்தியாவில் வேட்டையாடப்பட்டவர்களே இவர்கள்.

நான் அத்வானி அவர்களுக்கும், மன்மோகன் அவர்களுக்கும் ஒரு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் யுத்தத்தில் களப்பலிகளாக நாளும் கழுவேற்றப்படுகிற கோடிக்கணக்கான அடித்தட்டு மக்கள் இங்கு இருக்கிறார்கள். அந்தச் சாமானியர்களில் ஒரே ஒருவரோடு நீங்கள் இருவரும் வாதம் நடத்தத் தயாரா?. இரத்தத்திலும், வேர்வையிலும், கனவிலும், வேதனையிலும், வெயிலிலும், மழையிலும் எழுதப்பட்ட வாழ்வின் வார்த்தைகளோடு, உங்கள் குளிர்பதன அறையின் வார்த்தைகள் மோதிப் பார்க்கட்டும். தயாரா?

ஒரு விறகுவெட்டியிடம் சோமநாதப் புலவரும், மன்னன் செண்பகப்பாண்டியனும் ஒருசேரப் புறமுதுகிட்டு ஓடுவதை நாங்கள் நேரில் பார்ப்போம் அப்போது.

Related Posts with Thumbnails

29 comments:

 1. அப்படிப் போடுங்க...

  ReplyDelete
 2. தக்க நேரத்தில், அருமையான பதிவு.
  அவர்களுடைய வாக்குவாதம் கண்டிப்பாக இப்படித்தான் இருக்கும்.

  ReplyDelete
 3. //அந்தச் சாமானியர்களில் ஒரே ஒருவரோடு நீங்கள் இருவரும் வாதம் நடத்தத் தயாரா?.//

  நச் வார்த்தைகள்.

  பாராட்டுக்கள் தல.

  ReplyDelete
 4. அதிரடியான பதிவு
  கலக்குரீங்க சார்

  ReplyDelete
 5. நன்று மாது.கூடவே மஞ்சள் துண்டாரையும் சைடுலே நாலு சாத்த வேண்டும்.கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண்டடி பட்டு செத்தான் அத்தான் என்று அந்தக்காலத்தில் வசனம் எழுதிவிட்டு இப்போது விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தில் கிராமப்புற ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மத்திய அரசு கொடுக்கிற காசை முழுசாகத்தா என்று கேட்ட கிராமத்து மக்கலை துப்பாக்கியால் சுட்டார் சுட்டார் சுட்டார்.

  மன்மோகன் பக்கத்தில் உட்கார்ந்து சிங்கி தட்டிக்கொண்டே இதையும் செய்கிறார் இந்தத் தமிழினத்தலைவர்.

  ReplyDelete
 6. சபாஷ் சரியான போட்டி

  ReplyDelete
 7. பொருளாதாரப்புலியும் மதவெறிப்புலியும் பாரளுமன்றத்தில் பேசிக்கொள்ளாமல் மேல்தட்டு மீடியாவிடம் தான் பேசவிரும்புகிறார்கள்.

  ReplyDelete
 8. sathiyama pathil solla anga evanukum till kidaiyaathu


  piramaatham anna

  nandriyuan
  bala

  ReplyDelete
 9. சுவையான, ஆனால் சிந்திக்க வைக்கும் பதிவு! தூள் கிளப்புங்க மாதவ்...

  ReplyDelete
 10. Good article>>these leaders are mere speakers only.No body in their 5 year term fulfilled the needs of the people.Again these men asking vote to finish their agenda>>>What is their ajanda >>Nothing >>This time these two are not going to get the people's vote and support.We experienced the life with poverty and job loss.Enough >>>Selvapriyan-Chalakudy

  ReplyDelete
 11. //அந்தச் சாமானியர்களில் ஒரே ஒருவரோடு நீங்கள் இருவரும் வாதம் நடத்தத் தயாரா?.//

  விசில் சத்தம் கேட்குதா???
  கலக்கல்!

  ReplyDelete
 12. //விளைஞ்ச கரும்புக்கும், கோதுமைக்கும், நெல்லுக்கும் உரிய விலை இல்லாமல் நெருப்பின் தகிப்போடு வாழ்க்கை நடத்துகிறவர்கள் இதைப் பார்க்கப் போவதில்லை//
  கரும்புக்கு சரியான விலை கிடைக்காதால் இந்த வருடம் நிறைய பேர் கரும்பு பயிரிடவில்லை. அதனால் தஞ்சாவூர் பக்கம் கரும்பாலைகளுக்கு கரும்பு வரத்து மிகவும் குறைந்து, 'கரும்பு விளைவியுங்கள் நல்ல விலை தருகிறோம்' என்பதாக கரும்பாலைகளே போஸ்டர் ஒட்டியுள்ளதாக மக்கள் டிவியில் சொன்னார்கள். இந்த நிலைமை தஞ்சாவூர் மட்டுமின்றி தமிழகம் முழுதும் வரும் என்றும் சொன்னார்கள்.

  ReplyDelete
 13. Though this may not be a good beginning for the public debate, if moderated by some one, it can be a good platform to showcase their vision. We should appreciate it anway.

  ReplyDelete
 14. நல்ல அலசலுங்க....

  இந்தமாதிரி ஒண்டிக்கு ஒண்டி வந்தா ரெண்டு பேருக்குமே அசிங்கமா இருக்கும்!!!! நாசூக்கான பதிவு..

  ReplyDelete
 15. சுவையான, ஆனால் சிந்திக்க வைக்கும் பதிவு!

  ReplyDelete
 16. //
  கடைகோடி கிராமத்தில் இன்னமும் தண்ணீருக்கு எட்டு கி.மீ நடக்கும் பெண்கள் இதைப் பார்க்கப் போவதில்லை. விளைஞ்ச கரும்புக்கும், கோதுமைக்கும், நெல்லுக்கும் உரிய விலை இல்லாமல் நெருப்பின் தகிப்போடு வாழ்க்கை நடத்துகிறவர்கள் இதைப் பார்க்கப் போவதில்லை. ‘ஒருநாளைக்கு நூறு ருபாவுக்கு எதாவது வேல கெடைக்குமா’ என்னும் வேட்கையோடு தவிப்பவர்கள் யாரும் இதைப் பார்க்கப் போவதில்லை. இந்தப் புண்ணியர்களின் ஆட்சிகளால் சுதந்திர இந்தியாவில் வேட்டையாடப்பட்டவர்களே இவர்கள்.
  //

  இதையெல்லாம் யோசிக்க அத்வானிக்கும் மண் மோகனுக்கும் நேரமில்லை..கோயில் கட்டினால் அத்வானிக்கு போதும்...அன்னையின் உத்தரவுக்கு தலை வணங்கினால் மண்ணு மோகனுக்கு போதும்...

  ReplyDelete
 17. //
  ஒரு விறகுவெட்டியிடம் சோமநாதப் புலவரும், மன்னன் செண்பகப்பாண்டியனும் ஒருசேரப் புறமுதுகிட்டு ஓடுவதை நாங்கள் நேரில் பார்ப்போம் அப்போது.
  //

  இப்படி ஒரு காலம் வந்தால் அன்று ஒரு விடிவு பிறக்கலாம்...

  ReplyDelete
 18. அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை, அவர்களுக்கு எவ்வளவு பணிகள் இருக்கிறது இதை விடவும்,,,,,,,,

  என்ன பண்றது நம்ம அரசியல்வாதிகளுக்கு எதிர் அரசியல் செய்வதற்கே நேரம் போதவில்லை.

  ReplyDelete
 19. Dear Madhavraaj,

  Yours is the best of all 'star week's.


  Keep it up.

  ReplyDelete
 20. கோயில் கட்டுவது, மணல் திட்டை ராமர் பாலம் ஆக்குவது, கலச்சாரத்தின் (அது என்ன கருமாந்திரமோ) ஒட்டு மொத்த பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்வது என ஒரு கூட்டம்.

  இத்தாலி மாபியா கும்பலுக்கு சேவை செய்வது, அப்பாவித் தமிழனின் பிணத்தின் மேல் வீரத்தை நிலைநாட்டுவது, போலிமதச்சார்பின்மை பேசி காலத்தை கழிப்பது, 'இந்தி'யாவை 60 ஆண்டுகளாக வருமையை ஒழிப்போம் என்னும் கோசத்தை மட்டுமே கேட்க செய்தது போன்ற அறிய சாதனைகளை செய்த இன்னொரு கும்பல்.

  அவர்களுக்கு, கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களைப் பற்றி என்றும் கவலை இல்லை. ஏனெனில் தேர்தல் சந்தையில் எப்படி ஓட்டுப் பொறுக்குவது என்பது அவர்களுக்கு கை வந்த கலை.

  நீங்கள் கூறியது போல்,
  //கடைகோடி கிராமத்தில் இன்னமும் தண்ணீருக்கு எட்டு கி.மீ நடக்கும் பெண்கள் இதைப் பார்க்கப் போவதில்லை. விளைஞ்ச கரும்புக்கும், கோதுமைக்கும், நெல்லுக்கும் உரிய விலை இல்லாமல் நெருப்பின் தகிப்போடு வாழ்க்கை நடத்துகிறவர்கள் இதைப் பார்க்கப் போவதில்லை. ‘ஒருநாளைக்கு நூறு ருபாவுக்கு எதாவது வேல கெடைக்குமா’ என்னும் வேட்கையோடு தவிப்பவர்கள் யாரும் இதைப் பார்க்கப் போவதில்லை. இந்தப் புண்ணியர்களின் ஆட்சிகளால் சுதந்திர இந்தியாவில் வேட்டையாடப்பட்டவர்களே இவர்கள்.//

  என்று இவர்கள் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கின்றார்களோ அல்லது சிந்திக்க ஆரம்பிக்கின்றார்களோ அன்று காணலாம் //ஒரு விறகுவெட்டியிடம் சோமநாதப் புலவரும், மன்னன் செண்பகப்பாண்டியனும் ஒருசேரப் புறமுதுகிட்டு// ஓடும் காட்சியை...

  ReplyDelete
 21. அவங்க ஏதோ தமாசாகக் காலமோட்டுகிறார்கள்.
  நீங்கள் அவர்களை மாட்டிவிடப் பார்க்கிறீர்கள்.

  ReplyDelete
 22. நீங்கள் கேட்பது அவர்களை டரியலாக்கிவிடும்

  ReplyDelete
 23. நாற்காலி சண்டையில் அடித்தட்டு மக்களை ஏன் வம்புக்கு இழுக்குறீர்கள்?

  அதென்ன ஒண்டிக்கு ஒண்டி?களத்தில் என்னையும் சேர்த்துக்கணும்ன்னு கம்யூனிஸ்ட் சத்தம் கேட்டேன்.

  ReplyDelete
 24. விவாதம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது ?

  3ம் அணியின் பிரதம மந்திரி வேட்பாளார் யார் என்று அறிவித்தால் அவரும் விவாதிக்கலாம் என்றே அத்வானி கூறியுள்ளார்.

  சாமானியனான நானோ நீங்களோ நாட்டை ஆளப்போவதில்லை. அதற்கு வாக்களிக்கிறோம். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் நம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடியவரா இல்லையா என்பதை அறிவது நமது அடிப்படை உரிமை.

  பிரதம மந்திரி சீட்டில் உட்காரும் தகுதிபடைத்தவர் இவர்களில் யார் என்பதை விவாததின் மூலம் ஓரளவுக்கு அறியமுடியும்.

  after all, ஒருவர் பேசுவதை வைத்துத்தானே அவர் எப்படிப்பட்டவர் என்று நாம் முடிவு செய்கிறோம்?

  சும்மா கட்சி மீட்டிங் என்று தன் கட்சி ஜால்ராக்களுக்கு நடுவில் உருமும் காகிதப்புலிகளுக்கு நடுவில் பொதுவில் பேசலாம் வா என்று அழைக்கும் தைரியம் ஒரு அரசியல் தலைவருக்காவது இருக்கிறதே என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்...அது தப்பா ?

  ReplyDelete
 25. இதுக்கு பேசாம எதுலயாவது அவங்களை அடிச்சிருக்கலம். இப்படியா மானத்தை வாங்கறது?

  ReplyDelete
 26. பத்திரிகைகளிலும், இணையப் பக்கங்களிலும் அத்வானியின் அழைப்பை படித்ததும் சட்டென்று தோன்றியதை பதிவு செய்தேன்.

  இந்த அரசியல்வாதிகள் என்னவோ தேவதூதுவர்கள் போல அவர்களுக்குள்ளாக மட்டுமே உரையாடிக்கொள்கிறார்கள்.
  மக்களிடம் உரையாடுவதில்லை.
  மக்களும் தங்களோடு யார் நெருக்கமாக இருக்கிறார்கள், யார் தஙகளோடு உரையாடத் தயங்குவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
  அது நல்ல அரசியலுக்கு வழி வகுக்கும் என நம்புகிறேன்.

  நாற்காலிச் சண்டைகள் அரசியல் அல்ல.... அல்ல... அல்ல...!  தமிழ்ச்செல்வன்!
  இலங்கை பிரச்சினையை முன்வைத்து சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காங்கிரஸ், தி.மு.கவை வெளியேற்ற வேண்டுமென நிர்ப்பந்தம் செய்தது. அப்போது குஜ்ரால் அரசும், இடதுசாரிகளும், அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை என திமுகவோடு நின்றன. தி.மு.க அதனுடைய வரலாற்றில் எப்போதாவது இப்படி உறுதியான நிலைபாட்டை எடுத்ததை பார்க்க முடியுமா?


  சுல்தான்!

  நீங்க சொல்வது உண்மைதான். இங்கு பாடுபடுகிற உழைப்பாளி கஷ்டப்படுவான். விலையை நிர்ணயிக்கிறவன் வசதியாய் இருப்பான். ரொம்ப பெருமையாய் இருக்கிறது.

  வித்யாசாகர்!
  இவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதைப் பார்க்க ஆசைப்படுகிறீர்களா?
  மக்கள் பிரச்சினையைப் பற்றி பேசுவார்கள் என நினைக்கிறீர்களா?


  கவனப்பிர்யன்!
  உங்கல் கோபம் மிக நியாயமானது.


  அதுசரி!
  நிச்சயம் விடிவு பிறக்கும்.

  யோகன்!
  முரளிக்கண்ணன்!
  உங்கள் இருவரின் கமெண்ட்களும் சிரிப்பு வரவழைத்தாலும் உண்மையாக இருந்தன.

  ராஜநடராஜன்!
  ம்காளிடம் பேச தயங்குகிறவர்களை மட்டுமே நான் குறிப்பிட்டேன்.


  வஜ்ரா!
  நாமெல்லாம் சாமானியர்கள். அவர்கள்தான் நாட்டையாளத் தகுதி படைத்தவர்களா? நாம் போடும் பிச்சை அவர்களுக்கு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

  நந்தா!
  அடித்தாயிற்றே!

  இந்தப் பதிவுக்கு ஆதரவு அளித்த மற்ற அனைவருக்கும் என நன்றிகள்.

  ReplyDelete
 27. //
  அவர்கள்தான் நாட்டையாளத் தகுதி படைத்தவர்களா? நாம் போடும் பிச்சை அவர்களுக்கு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
  //

  அவர்கள் தான் தகுதி படைத்தவர்கள் என்று நான் சொல்லவேயில்லை.
  அவர்களுக்கு அந்தத் தகுதி உள்ளதா என்பதை கணிக்க நமக்கு உரிமை உண்டு என்பதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

  அதன் முதல் படி பொது மேடையில் எதிர் கருத்துள்ள கட்சித் தலைவர்கள் விவாதம் நடத்துவது.

  பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும் என்பதே என் கருத்து.

  ReplyDelete
 28. வஜ்ரா!

  இந்த வாதம் தேவையில்லை. உபயோகமில்லை என்பதே என் கருத்து. நாடாண்டவர்கள் குறித்து மக்களுக்கு அனுபவம் இருக்காதா? ஐந்து வருடமாக தெரிந்து கொள்ளாதவர்கள் ஐந்து நிமிடத்திலா கணிக்கப் போகிறார்கள்? சரி. இவர்களது வாதங்களை அடித்தட்டு, சாமானிய மக்கள் யார் பார்க்கப் போகிறார்கள்?
  ஆனாலும்-
  //பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும் என்பதே என் கருத்து.//

  இதை ரசித்தேன். ஒப்புக்கொள்கிறேன்.

  ReplyDelete