-->

முன்பக்கம் , , � தமிழ்ச்சினிமாவின் கதாநாயகர்கள் 2

தமிழ்ச்சினிமாவின் கதாநாயகர்கள் 2

vijay

ரண்டு நாட்களுக்கு முந்தைய என் பதிவில் தமிழ்ச்சினிமா கதாநாயகர்கள் அறிவற்றவர்கள் என்னும் தலைப்பிட்டு சில் கருத்துக்களை தெரிவித்து இருந்தேன். பதிவை முழுவதுமாய் படித்து விட்டு,  பலர் அந்தக் கருத்துக்களோடு உடன்பட்டு பாராட்டியிருந்தனர். சிலருக்கு கோபமும், சிலருக்கு அதிர்ச்சியும், இன்னும் சிலருக்கு வருத்தமும் ஏற்பட்டு இருக்கிறது. அதுகுறித்து சில விளக்கங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நினைக்கிறேன். (அவர் இப்படி, இவர் இப்படி, தொழில், வியாபாரம் என்றெல்லாம் வந்த கருத்துக்களை விட்டு விட்டு, நான் எழுதியது குறித்து மட்டும்.)

 

பின்னூட்டங்களில், ஒருவர் என்னை stupid  என்று சொன்னார். அதற்கும் அறிவற்றவன் என்றுதான் அர்த்தம் வருகிறது. இன்னொருவர் இந்தத் தலைப்பு ridiculous என்று சொல்லியிருக்கிறார். மிக மோசமான கிண்டல் என்று புரிந்து கொள்ளலாம். அன்றாட வாழ்வில் மிகச் சாதாரணமாக, இயல்பாக நாம் நமக்கு நெருக்கமானவர்களைக் கூட எரிச்சலில் சொல்லும் வார்த்தைதான் இது. ஆனாலும் சினிமா நடிகர்களை சொன்னவுடன் எதோ தொந்தரவு செய்கிறது. (அவர்கள் நமக்கு மிக நெருக்கமாக  இருப்பவர்கள்தானே!).  “அறிவற்றவன்’ என்னும் பதம்  மோசமான விளிச்சொல்லாக உணரப்படுகிறது.

 

தெருவைச் சுத்தம் செய்யும் உழைப்பாளிகளோ, அன்றாடங்காய்ச்சிகளோ இது போன்ற சொற்களால் அடையாளம் காட்டப்பட்டிருந்தால் இங்கு ஒன்றும் கோபங்கள் பொத்துக் கொண்டு வந்துவிடாது. மிகச் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால் அவர்கள் குறித்து சமூகத்துக்கு மதிப்பும் கிடையாது, மதிப்பீடும் கிடையாது.  இந்தக் கதாநாயகர்கள் குறித்து தாறுமாறாய் பிம்பங்களும், பிரமைகளும் ஏற்றி வைக்கப்பட்டு இருக்கின்றன. உயரத்தில் கொண்டு போய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் எப்பேர்ப்பட்ட ‘அவர்களையே’ அறிவற்றவர்களாகச் சொல்வதா என்னும் பதைபதைப்பும், அவஸ்தையும் ஏற்படுகின்றன. நம் மனச்சித்திரங்களை அழித்துவிட்டுப் பார்த்தால், ’அறிவற்றவர்கள்’  கெட்ட வார்த்தைகளாகத் தோன்றாது.

 

நமது இலக்கியங்களில் இந்த ‘அறிவற்றவன்’ என்னும் வார்த்தை எவ்வளவு சாதாரணமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ஒரு பதிவல்ல,  ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு கொட்டிக் கிடக்கிறது. அவையெல்லாம் ஒன்றும் தவறாக நம் பிரக்ஞையில் தட்டுப்படவில்லையே?  உலர்ந்த தமிழன் ஒருவனைக் கூட பார்க்காத ஆத்திரத்தில் ஒட்டுமொத்த தமிழர்களையும் ‘எருமைகள்’ என மகாகவி தன் வசனகவிதையில் அழைக்கவில்லையா?  ஒருவரை, ஒரே ஒருவரை இத்தனை வருட கதாநாயகர்களில் அடையாளம் காட்டுங்கள். இவருக்கென்று சமூகப் பார்வை உண்டு என்று சொல்லுங்கள். அதைத் தன் படத்தில் வெளிப்படுத்தினார் என்று குறிப்பிடுங்கள். இவர் மக்களின் ரசனையை உயர்த்த முயற்சித்தார் என்று அடையாளம் காட்டுங்கள்.  ஒரு படம் பரவாயில்லை என நினைக்கும் முன்னர், அந்தக் கதாநாயகர் பத்துப்படம் தரம் தாழ்ந்து நடிப்பார். ஒரு படம் கூட சொல்லிக்கொள்கிற நடிக்காமல் வாழ்நாள் சாதனை செய்த தமிழ்க் கதாநாயகர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

 

இரண்டு படங்கள் வெற்றியடைந்து விட்டால், ரசிகர்கள் சேர்ந்து விட்டால் அரசியல் நாற்காலிகளே நம் கதாநாயகர்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் கனவாகவும், இலட்சியங்களாகவும் கருக்கொள்கின்றன. அதற்குப் பிறகு அவர்கள் நடை, உடை, பாவனைகள் எல்லாமே ஒரு மாதிரியாகி விடுகின்றன.  அவருக்கு ஏற்கனவே இருந்த அறிவு அந்த இடத்தில் காலியாகி விடுகிறது. போதையில் இருப்பவர்களுக்கு அறிவு இருப்பதில்லையே!.  காமிராக்கள் அவர்கள் காலடியில் விழுந்து கிடந்து படம் பிடிக்கின்றன. வானத்தின் அடியில் பிரம்மாண்டமாய் அவர் தெரிய ஆரம்பிப்பார். தியேட்டர்களில் விசில் சத்தங்கள் பறக்கும்.

 

நாம் என்ன செய்தாலும் ரசிப்பார்கள், நம்மைக் கொண்டாடுவார்கள் என்ற தைரியம் வருகிறது. இந்த ரசிகர்களுக்கு என்ன தெரியும் என்று மதம் பிடிக்கிறது. அவர்களின் ரசனை என்பது, தன்னை ரசிப்பது மட்டும்தான் என்னும் தெனாவெட்டு வருகிறது. வில்லன்களுக்கும், நகைச்சுவை நடிகர்களுக்கும்,  இயக்குனர்களுக்கும் இந்த நாற்காலிக் கனவுகள் எல்லாம் வருவதில்லை. அதனால்தான் நகைச்சுவை நடிகர்களில் ஒரு என்.எஸ்.கிருஷ்ணனை பார்க்க முடிகிறது. வில்லன் நடிகர்களில் ஒரு எம்.ஆர்.ராதாவை பார்க்க முடிகிறது. ( பிரகாஷ் ராஜாவையும், விவேக்கையும் கூட விட்டுவிடுவோம்). கதாநாயகர்களில் ஒருவரையும் பார்க்க முடியவில்லை.

 

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
என்று வள்ளுவர் நல்ல காரியங்களில் ஈடுபடச் செய்வதே அறிவாகச் சித்தரிக்கிறார். மக்களின் ரசனையை ஒரு அங்குலம் கூட உயர்த்தாமல், போட்டதைத் தின்னும் இழிபிறவிகள் போல இந்தக் கதாநாயகர்கள் தமிழ் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமுறை, தலைமுறையாக இந்தக் கதாநாய்கர்கள் நம்மை அறிவற்றவர்களாகவே பாவிக்கிறார்கள். நான் அறிவற்றவர்கள் எனச் சொல்ல மட்டும்தானே செய்தேன் ஐயா. தவறா?

 

 

*

Related Posts with Thumbnails

81 comments:

 1. நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.

  தொடர்ந்து உங்கள் பதிவைப் படித்துவருகின்றேன்.

  ReplyDelete
 2. மாதவராஜ்,

  சில உண்மைகள் கசக்கச் செய்யும், நாம் வலுக்கட்டாயமாக ஏற்படுதியிருக்கும் சில புனித பிம்பங்களின் மீதான புரிந்துணர்வில் பலத்த இடியை உண்டாக்கும்,அந்த சப்தமே உங்களுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் என நினைக்கிறேன்

  பெரும்பாலும் இது போன்ற வாதங்களில், நீ எப்படி சொல்லலாம் என்ற கேள்விதான் எழுகிறதே ஒழிய, அத்னை மறுப்பதற்கான எந்த ஆரோக்கியாமான பதிகல்களும் இருப்பதில்லை...

  நீங்கள் உண்மையை உரக்க பேசிக் கொண்டே இருங்கள்....

  நட்சத்திர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 3. தவறே இல்லை.. மிக சரியே..

  ReplyDelete
 4. முதலில் நட்சத்திர வாழ்த்துக்களை பிடிங்க!

  நான் கடவுளை விமர்சிக்கும் போதும் இப்படி தான் வந்து திட்டுவார்கள்!
  அவர்கள் கடவுளாக நினைக்கும் நடிகர்களை திட்டினாலும் உங்களுக்கும் அது தானே கிடைக்கும்.

  சினிமா ஹீரோக்கள் உண்மையில் பயங்கர மொக்கைசாமிகள் என்பது என்று தான் இவர்களுக்கு தெரியுமோ!

  ReplyDelete
 5. இதுக்கெல்லாம் விளக்கம் கொடுத்து உங்க நேரத்தை வீணாக்கவேண்டாம். தொடர்ந்து சாட்டையடி கொடுங்கள். சொரணை உள்ளவர்கள் திருந்தட்டும்

  ReplyDelete
 6. நீங்க சொன்னதுல தப்பே இல்லன்னு நான் நினைக்கிறேன்

  ReplyDelete
 7. எல்லாவருக்கும் எல்லாமும் புரிந்து விடுவதில்லை.

  கையில் இருக்கும் விரல்கள் போல ஒவ்வொருவருக்கும் ஒரு வித கருத்துக்கள் எண்ணங்கள் இருக்கலாம்.

  அத எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க.

  புரியிரவங்களுக்கு புரியட்டும்.

  ReplyDelete
 8. இந்த முண்டங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...உங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்....அவர்கள் திருந்தக்கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறார்கள்

  ReplyDelete
 9. நட்சத்திர வாழ்த்துகள்.

  நீங்க சொன்னதுல தப்பே இல்லை. வெறும் லாப நோக்கோட மட்டும் ஒரு நிறுவனம் இயங்குனா...அதை எவ்ளோ பேசுறோம். அதே மாதிரி வெறும் லாப நோக்கோடயும் அரசியல் நோக்கோடயும் மட்டும் ஒரு நடிகன் இயங்குறப்போ ... அதைப் பத்திக் கருத்துச் சொல்றதுல என்ன தவறு?

  அறிவற்றவர்னு சொன்னதுல தப்பு இருக்குறதா தெரியலை. நீங்க சொன்ன மாதிரி.. கலையுணர்வோட விஜய் தன்னைத் திரையுலகுல ஈடுபடுத்திக்கிட்ட காட்சியமைப்புகளைக் காட்டச் சொல்லுங்க. இவ்ளோதான் வரும். அத வெச்சிப் பண்றேன்னு அவர் சொன்னா...அது அவருடைய அறிவின் குறைவைத்தானே சுட்டிக் காட்டுது. புதுமையாக எதையாவது செய்யனுங்குற எண்ணத்தையாவது பாக்க முடியுதா? இப்படி தன் தொழிலில் பணம் பாக்குறதைத் தவிர வேற எதையுமே நினைக்க முடியாதவங்களை அறிவற்றவர்கள்னு சொல்றது பொருத்தம்தானே.

  ReplyDelete
 10. மீண்டும் இதை
  விவாதத்திறக்குட்படித்தியதற்கு
  மிக்க நன்றி மாதவராஜ்.

  ஆ.வியில் வெளியான
  பிரகாஷ்ராஜின் சொல்லாததும் படித்திருந்தால் நிச்சயம் அவரைப்பற்றி சற்று புரிந்து கொள்ளலாம் எப்படி என்றால் அவருடைய மொழி ஆழுமையும்
  உண்மையையும் சமூகச் சிந்தனையையும் அவ்வெழுத்துக்களில் பார்க்கமுடியும் (இதில் அவருடைய தாய் மொழி கன்னடம் என்பது
  நினைவுகூர்க) ஒருவர் தான் சார்ந்த தொழில் (அல்லது கலை)யில் விழுந்து எழுந்து ஊன்றி தனக்கென்று ஒரு இடத்தை வகுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தம்மை மட்டுமே வளர்த்துக் கொள்ளும் அற்ப்பத்திலிருந்து விலகி மாற்று சிந்தனையுடன் தான்சார்ந்த துறையை படிந்து போன சம்பிர்தாயங்களிலிருது மீட்டெடுக்கவும் அதை உலகின் கவன ஈப்பிற்க்கு
  கொண்டுசெல்லவும் துனிச்சலுடன் முயற்சிக்கும் அவரை பற்றிய எண்ணங்களை பின்புலமாகக் கொண்டுதான் நீங்கள் ‘…அறிவற்றவர்கள் கதாநாயகர்கள்’ என்ற தலைப்பில் உங்கள் எனங்களை எழுதியிருந்தீங்க
  அதை முழுமையாக புரிந்து கொண்டுதான் ஒருத்தர் அந்த ஆங்கில வார்த்தையை உபயோகித்தாரா என தெறியவில்லை. ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்திருக்கும் தப்பில்லை. ஆனால் நீங்கள் சொன்னதில்
  எந்த தப்பும் இருப்பதாக எனக்குத் தெறியவில்லை அது சரியே.
  நண்பர் ஆதவா சொல்லியிருந்தார் இது தொழில் தொழிலில் லாபமே முக்கியம் இதை நம்பி எத்தனை குடும்பங்கள் உள்ளது என்றும்
  இதை நான் ஒப்புக் கொள்கின்றேன் தொழிலுக்கா விஜையும் சிம்பும் தனுசுதம் உன்மையற்றவைகளை பூசி மொழுகி அழுகிய கத்தரிக்காயை நல்லது என்றதான் சொல்வார்கள் என்றும் சொன்னார் அதையேதான் நானும் கேட்கிட்கின்றேன் பிழைப்புக்காக ஏமாற்றும் தந்திரம் உள்ள ஒருவனை எப்படி சமூகத்தில் உயர்வானவனாக கொள்ளமுடியும் அவனுக்கு கலையை வளர்க்கும் அறிவும் மக்களின் நலன்களை கருத்திடும் தெளிவறிவும் எப்படி இருக்கும். இன்னுமொருவர் சொன்னார் காதலில் விழுதேன் படத்தை ஏற்றவர்கள் அபியும் நானுமை ஏன் ஏற்க்க வில்லை என்று அதற்க்கு நீங்கள் சொன்ன பூனைக்கு மைதடவி புலியாக்கும் வியாபார தந்திரம் தான். அதனால் தான் ஒவ்வொரு ரசிகனும் ஏமாற்றப்பட்டான் நாக்கமுக்க படம் பார்த்த ஒவ்வெருத்தனிடம் கேட்டுப் பாருங்கள் அவன் ஏமாற்றப்பட்டதை ஒப்புக் கொள்வான் இப்படி ஏமாற்றுபவர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னதில் என்ன தவறு.
  ரசிகர்கள்தான் முட்டாகள் அறிவற்றவர்கள் என்பதும் ஒரு கருத்து
  உண்மைதான் அப்படிப்பட்ட ரசிகர்களாகிய நம்மை எப்படி திருத்துவது
  எப்போது அறிவுகண் கொண்டு காண்பது என்றுமே இப்படி முட்டாலாகவே இருந்துவிட வேண்டியதுதானா?
  இன்னும் நிறையவே சொல்லலாம் நம்மை நேரமே நிர்வகிக்கின்றது
  அந்நேரம் என்க்கு மிக குறைவே. ஆதலால் இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 11. Ingu koorapattulla perumbaalaana karuthukkaludan naanum othu pogiren. Aanaal cinemaavin moolam makkal muthalil ethirpaarpathu thangal sogangalai marakkacheiyyum magizhchi., atharkku piragu thaan samooga vizhipunarvu, nallinakkam, ellaam..
  Oru kathaanaayagan oru makkal kootathaiye thathamathu prachanaigalai marakka cheithu thannai rasikka vaikkaiyil avanudaiya kadamai perumalavu niraivu peruginrathu enre naan ninaikkiren. Aanaal atharkaaga ennavo aagayathilirunthu kuthithavargal pol nadanthu kolvathu, arasiyal muyarchigal, punch dialogue, pidikkaatha nadigarukku savaal, araikurai ammaiyarudan aattam... ivaiellaam nichayam erichaloottum vishayangal thaan.
  Cinema pala per nambi irukkinra oru vyaabaaram. Ithil varuvaai kanakku thaan muthalil, appuram thaan makkal sevai.
  Nalla samooga karuthukkalai soll koodiya padangalai naanum ethipaarkiren.., antha padangalai kodukkinra nadigargalai varaverkka vendum.., atharkaaga palveru kaaranathukkaaga avvaaru seiyyathavariavargalai ellaam pothaam pothuvaaga 'arivarravargal' endru solvathu chatru kadumaiyaaga therigirathu.

  Iruthiyaaga.., Intha maathiri kathaanayagaragal ithe maathiri padangalil nadithu thodarnthu vetri pervathu avar entha alavu thannudaiya rasigargalai (TN makkalai) buthisaalithanamaaga purinthu vaithullaar enbathai allavaa kaatugirathu.., Ithil arivarravargal intha padangalai paarpathan moolam athai varaverpavargal thaane oliya antha nadigar alla :)

  Sorry to type in thaminglish.., enakku linux la vera vazhi illa

  ReplyDelete
 12. ஒரு நடிகன் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சொல்ல முடியாது,
  ஆனால் இரண்டு ,மூன்று படங்கள் வெற்றி அடைந்தவுடன், ஏதோ தாங்கள்தான் எதிர்கால முதல்வர்கள் என்று நினைக்கிறார்களே அதுதான் ஜீரணிக்க முடியாதது.
  இதற்கு நடிகர்களை மட்டும் குறை சொல்வது தவறு.ரசிகர்கள்,அதாவது மக்களாகிய நாங்களும்தான் காரணம்
  நடிகர்கள் நன்றாய் நடித்தால் நடிப்பை மட்டும் ரசிக்கலாம் ,படம் நன்றாய் இருந்தால் படத்தை ரசிக்கலாம் ,நடிகைகள் அழகாய் இருந்தால் அழகை மட்டும் ரசிக்கலாம்
  அதை விட்டு ,நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதும் ,நடிகைகளுக்கு கோவில் கட்டுவதும் ரசிகர்கள் எனப்படுகிற மக்கள்தானே.
  இந்த நடவடிக்கைகளை மக்கள் நிறுத்தினால் நடிகர்களும் தங்கள் புகழ் என்ற போதையில் இருந்து விடுபட்டு தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமான மதிப்பீடு செய்வதில் இருந்து விலகுவார்கள்.
  தமிழ் நாட்டு முதல்வர்களில் பலருக்கு சினிமா தொடர்பு இருப்பது உண்மைதான் ,ஆனால் ,அண்ணா,கருணாநிதி எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தமது திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பரப்புவதற்கு சினிமா என்ற ஊடகத்தை பயன்படுத்தினார்கள்.அவர்களுக்கு ஏற்கனவே அரசியல் என்ற தளம் அரசியல் கொள்கைகள் என்ற அடிப்படையான கருத்துகள் இருந்தன
  அரசியல் கொள்கைகளோ சமூக ஈடுபாடோ என்று ஒன்றும் இல்லாமல் நடிகராக இருந்து விட்டு பிறகு அந்த நடிகன் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் புகுந்து கொள்ள இப்போதைய சில நடிகர்கள் நினைக்கிறார்கள்.அரசியல் என்பது மார்க்கெட் இல்லாமல் போனவுடன் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் ஒரு தளமாக நடிகர்கள் நினைக்கிறார்கள் ,
  மார்க்கெட் போனால் அல்லது வயது முப்பதைக் கடந்தால் நடிகைகளுக்கு சின்னத்திரை,
  நடிகர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போனால் அல்லது வயது ஐம்பதைக் கடந்தால் அரசியல் பிரவேசம் என்ற மாதிரி நினைக்கிறார்கள்.
  நடிகர்களை அறிவற்றவர்கள் என்று நினைப்பதை விட அவர்களை சுயநலத்தோடு தங்கள் எதிர்காலம் பற்றி திட்டம் போட்டு ரசிகர்களை manipulate பண்ணப் பார்க்கிறார்கள் என்றும் சொல்லலாம் .
  இங்கே இந்த நடிகர்கள் ரசிகர்களைத்த்தான் அறிவற்றவர்களாகக் கருதி அவர்களை முட்டாள்கள் ஆக்க நினைக்கிறார்கள்.
  --வானதி

  ReplyDelete
 13. நீங்க புரிஞ்சுதான் எழுதுகிறீர்களா அல்லது புரியாமல் எழுதுகிறீர்களா என்று தெரிய வில்லை.

  நடிகர்கள், திரைப்பட கலைஞர்கள் (ஏன் எலா கலை சர்ர்ந்த துரியாகளிலும் இது பொருந்தும், பரதம், இசை, விளையாட்டு, எழுத்து, நாடகம்) இரு வகை படுவர்.

  முதலாமவர் கலை மீது உள்ள ஆசையால் அந்த துறைக்கு வருபவர் . உதாரணம் நடிகை ரேவதி, பாலு மகேந்திரா, இளையராஜா, அனுஹாசன், உன்னிகிருஷ்ணன்.எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், எஸ் ராமகிருஷ்ணன்.

  இரண்டாமவர் பணம், புகழுக்கு ஆசை பட்டு அந்த துறைக்கு வருபவர். உதாரணம் விஷால், பேரரசு, விஜய், அஜித், நமீதா, ரகசியா, நக்மா, பாக்யராஜ், ராமராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, புஷ்பா தங்கதுரை, ராஜேஷ்குமார்.


  விஜய், விஷால், சிம்பு, ரீமாசென், அர்ஜுன், கிரண், நமீதா போன்றோர் பணம், புகழுக்காக திரை படங்களில் நடிக்கின்றனர்.

  எனவே விஜய், விஷால் சிம்பு போன்றோரை நாம் ரேவதி, அனுஹாசன், நந்திதா டாஸ் வகையறாக்களுடன் ஒப்பீடு செய்வதே தவறு, தவறு நம் மீதே.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 14. //இந்தக் கதாநாயகர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னது தவறா?//

  தவறே இல்லை.

  இன்னும் வேண்டுமானால் முழு மூடர்கள் என்றே சொல்லலாம்..எம்.ஆர். ராதா மற்றும் கலைவாணரை இப்ப உள்ளவர்கள் படித்தாலே போதும்..தங்களை கூத்தாடி என்றே கூறுவார் எம்.ஆர். ராதா அவர்கள் அதற்கு விளக்கமும் அளிப்பார்.

  எல்லாரிடமும் நம்மை நிருபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை அப்படி நினைத்தால் நமது பொன்னான நேரம் வீணாகுமே தவிர வேறொன்றுமில்லை....நீங்கள் அந்த முகம் தெரியாதவர்களுக்கு விளக்கம் கொடுக்க தேவையும் இல்லை.

  ஏற்கனவே தந்தை பெரியாரின் கேள்விகளுக்கே பதில் கிடைக்கவில்லை..விவாதத்தை திசை திருப்புவார்களே தவிர பதில் கூற மாட்டார்கள். காரணம் புரிதல் இல்லாமை இலையெனில் புரியாததுபோல நடிப்பவர்கள். இந்த உலகத்தில் எல்லா மூலையிலும் நடக்கும் பல கலவரங்களுக்கு காரணமானவர்கள் இவர்களே..

  இந்த மனிதப் பிறவியில் நமக்கு கிடைத்துள்ள நேரம் வெறும் சொற்பமே..

  உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  தோழமையுடன்

  முகமது பாருக்

  ReplyDelete
 15. //முதலாமவர் கலை மீது உள்ள ஆசையால் அந்த துறைக்கு வருபவர் . உதாரணம் நடிகை ரேவதி, பாலு மகேந்திரா, இளையராஜா, அனுஹாசன், உன்னிகிருஷ்ணன்.எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், எஸ் ராமகிருஷ்ணன்.//

  இப்படின்னு உங்ககிட்ட தனியா வந்து பேட்டி கொடுத்தாங்களா?

  இளையராஜா எத்தனை படத்துக்கு இலவசமா இசையமைச்சார். ஏன் பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தார்.

  சுஜாதா எத்தனை படத்துக்கு இலவசமாக கதை,வசனம் எழுதினார்.

  துட்டுக்காக பாட்டு எழுதுறேன்னு சொன்ன வாலி தனது கலை பயணத்தில் என்ன குறை வச்சார்.

  அவுங்க அலட்டலவுட உங்க அலட்டல் ஓவரா இருக்கே!

  இதுக்கு பதில் சொல்லுவிங்களா ராம்ஜீ?

  ReplyDelete
 16. //மக்களின் ரசனையை ஒரு அங்குலம் கூட உயர்த்தாமல், போட்டதைத் தின்னும் இழிபிறவிகள் போல இந்தக் கதாநாயகர்கள் தமிழ் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமுறை, தலைமுறையாக இந்தக் கதாநாய்கர்கள் நம்மை அறிவற்றவர்களாகவே பாவிக்கிறார்கள் //

  WELL SAID!
  இதை நம் கதாநாயகர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் ப்டிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

  ReplyDelete
 17. முதலில் உங்கள் பதிவுக்கு
  வாழ்த்து(க்)கள்.

  சில உண்மைகள் கசக்கச் செய்யும்!!!

  நீங்கள் உண்மையை உரக்க பேசிக் கொண்டே இருங்கள்....

  இந்த முண்_________லாம்
  தொடர்ந்து சாட்டையடி கொடுங்கள்.

  வாழ்த்துக்கள்.!!!

  ReplyDelete
 18. தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்...
  சூடான பதிவு நண்பரே...
  எழுத்துகளில் உங்கள் உணர்வு தெரிகிறது...

  ReplyDelete
 19. நட்சத்திர வாழ்த்துகள்

  ReplyDelete
 20. Mr. Madhvaraj JI,
  Please write several article like this then only you can try to change these (oshopriyans and varun )Stupids.

  Dont be get tired.

  Please guide those people to add salt in their foods.
  Very nice post!!!
  Go ahead....JI!!

  முதலில் உங்கள் பதிவுக்கு
  வாழ்த்து(க்)கள்.

  சில உண்மைகள் கசக்கச் செய்யும்!!!

  நீங்கள் உண்மையை உரக்க பேசிக் கொண்டே இருங்கள்....

  இந்த முண்_________லாம்
  தொடர்ந்து சாட்டையடி கொடுங்கள்.

  வாழ்த்துக்கள்.!!!

  ReplyDelete
 21. அருமையாக எழுத அநேகர் இருக்கலாம்;
  சரியாகவும் எழுத சிலரே இருக்கிறார்கள்.

  நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். வாசித்துக்கொண்டிருப்போம்.

  நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகளும்.

  ReplyDelete
 22. எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்.நாமெல்லாம் கிணற்றுக்குள்ள கத்திகிட்டு இருக்கோமோன்னு. கலைஞர்,எம்..ஜி.ஆர் அரசியல் சண்டையும் கூட ஜெயலலிதாவுமே தமிழ்நாட்டின் பெரிய விபத்து.இப்ப இரண்டாம் தலைமுறை டெபாசிட்கள் இழந்தும்,திரை வாழ்க்கை இழந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையென்று மீண்டும் அரசியல் மல்லுக்கு நிற்கிறார்கள்.மூன்றாம் தலைமுறை இன்னும் ஊறப்போட்டு அரசியல் வருவது பற்றியெல்லாம் மோடிமஸ்தான் வேலையெல்லாம் இலை மறை காய நகர்த்திட்டிருக்காங்க.கேரளா தவிர தென்னக மாநிலங்கள் அறிவு பூர்வமா அரசியலையும் திரை உலகையும் தனிமைப் படுத்த தவறவிட்டு விட்டார்கள் என்றே சொல்லலாம்.என்ன நாம பதிவு எழுதி நம்மளுக்குள்ளேயே புலம்பிகிட்டு இருக்கோம் அதுமட்டுமே தமிழனை வித்தியாசப்படுத்துகிறது.

  (ஆமா!இரண்டு நாளைக்கு முன்னாடி கலைஞர் இந்தத் தேர்தலில் ஈழம் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தாதுன்னு சொல்லியிருந்தாரே யாராவது கவனிச்சீங்களா?)

  ReplyDelete
 23. //Ingu koorapattulla perumbaalaana karuthukkaludan naanum othu pogiren. Aanaal cinemaavin moolam makkal muthalil ethirpaarpathu thangal sogangalai marakkacheiyyum magizhchi.,//

  அனானிமஸ், சோகங்களை மறக்கக் கஞ்சா கூட அடிக்க்லாம். ஆனால் அந்தக் கஞ்சாவினால் எவ்வளவு தீங்கு? அதைப் போல தான் மோசமான படங்களும்.
  Sorry, எவ்வளவு தான் இந்த வெற்றுச் சால்ஜாப்பையே வைத்துக் கொண்டு தரமற்ற குப்பைகளை ஏற்றுக் கொண்டிருக்கப் போகிறோம்? சரி சீரியஸான சிந்திக்க வைக்கும் சப்ஜெக்டுகள் எடுப்பதற்கென்று சிலர் இருக்கிறார்கள். மற்றவர்கள் மனதுக்கு ரம்மியமான ஆனால் தரமான நல்ல படங்கள் எடுக்கலாமில்லையா?

  ReplyDelete
 24. hi mathav your thoughts its rights.but everybody have some knowledge thats why there achive something so dont irredate any others.your are best writer i have been always like ur thoughts.but some responsible to each person.

  ReplyDelete
 25. அறிவு என்ற சொல்லுக்கு பரவலான புழக்கத்தில் பல அர்த்தங்கள் உள்ளன

  அதை எல்லாம் விடுத்து விட்டு நீங்கள் கூறிய “அறிவு என்று நான் இங்கு சொல்ல வருவது, சினிமாவுக்குள் இருப்பவர்கள் அதையும் தாண்டி சிந்திப்பதை. சினிமாவில் தங்களால் முடிந்த அளவுக்கு பார்வையாளர்களை முட்டாளாக்காமல் ரசனையை மேம்படுத்த முயற்சிப்பதை. குறைந்தபட்ச ஐ.க்யுவோடு பொதுவெளியில் உரையாடுவதை.” என்பது பரவாலாக ஏற்றுக்கொள்ளப்படுவது கிடையாது

  நீங்கள் கூறுவது ஒரு நல்ல குணாதிசயமாக இருக்கலாம். ஆனால் அதற்கு அறிவு என்று பெயர் சூட்டுவது சரியல்ல என்பது என் கருத்து. சமூக பொறுப்பு, அக்கறை, தொண்டு என்று பல பெயர்கள் சூட்டிக்கொள்ளுங்கள்

  --

  அது உங்கள் கருத்து

  --

  அப்படி இருக்கையில் “இந்தக் கதாநாயகர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னது தவறா?” என்ற கேள்விக்கு என் பதில் “தவறுதான்”

  --

  உதாரணமாக நான் அறிவு என்பதற்கு
  நான் “கிண்டி முதல் தாம்பரம் வரை (திருப்பங்கள் உட்பட) இரண்டு கைகளையும் விட்டு மிதிவண்டி ஓட்டுவது” என்று ஒரு definition கொடுத்து விட்டு அறிவற்ற அவர்கள், அறிவில்லாத இவர்கள் என்று பதிவு எழுதினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா

  --

  ஆண்மை என்பது “ஒரு ஆயுதமும் இல்லாமல் ஒரே நேரத்தில் இரு சிங்கங்களுடன் சண்டை போட்டு வெல்வது” என்று எனக்கு நானே ஆண்மை என்பதற்கு ஒரு definition வைத்துக்கொண்டு ஆண்மையில்லாத மாதவராஜ்கள் என்றும் இந்த மாதவராஜ்களை ஆண்மையற்றவர்கள் என்று சொன்னது தவறா என்று கேட்டால் எப்படி இருக்கும்

  ReplyDelete
 26. ப்ளாக்கர் வழங்கும் இலவச சேவையும் கையில் ஒரு கணினியும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைப்பது சரியல்ல

  ReplyDelete
 27. //முதலாமவர் கலை மீது உள்ள ஆசையால் அந்த துறைக்கு வருபவர் . உதாரணம் நடிகை ரேவதி, பாலு மகேந்திரா, இளையராஜா, அனுஹாசன், உன்னிகிருஷ்ணன்.எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், எஸ் ராமகிருஷ்ணன்.//

  இந்தப் பட்டியலே வேடிக்கையாக இருக்கிறது!.கொஞ்சம் மூளை இருப்பதாக, அலட்டிக்கொண்டால் கலைத்துறையின் மீது ஆசையால் நடிக்க வந்ததாக எண்ணமா?. அதிலும் அனுஹாசன்,ரேவதி.... என்னக் கொடுமை சரவணா?...

  ReplyDelete
 28. முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள் மாதவராஜ். சொல்ல வந்த நல்ல கருத்தை சரியாக வெளிப்படுத்தினீர்களா என்ற சந்தேகம் எனக்கு முந்தைய பதிவைப் படிக்கும் போதே இருந்தது. சினிமா நடிகர்களை திட்டும்போது அவர்களை அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு நினைக்கும் ரசிகர்களையும் திட்டுகிறீர்கள் என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. முக்கிய காரணம், நடிகனைப் போற்றி அவர் முதலமைச்சராக ஆனால், ஒரு "ஒன்றியச் செயலாளர்" பிச்சையாவது கிடைக்கும் என்ற நப்பாசைதான் காரணம்.

  ReplyDelete
 29. //அவருடைய மொழி ஆழுமையும்
  உண்மையையும் சமூகச் சிந்தனையையும் அவ்வெழுத்துக்களில் பார்க்கமுடியும்// அதை பிரகாஷ்ராஜ் தான் எழுதினார் என்று நிச்சயமாகத் தெரியுமா? பொதுவாக இந்த மாதிரி கட்டுரைகள் "கோஸ்ட் ரைட்டர்" களால் எழுதப்படுவது. அதாவது மற்றவர்கள் கூலிக்காக எழுதி கொடுப்பது.

  ReplyDelete
 30. நீங்கள் உண்மையை உரக்க பேசிக் கொண்டே இருங்கள்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. Pettikalin podhu Nadigargalin aarivin latchanathai paarkka mudiyum...Madhan-vijayakanth interview vil orumurai idhai kankoodaga kaana mudindhadu...Rajiniyin niraya medai pechugal sirantha othranam..
  Manorama,saroaja devi,kala(dance master)..ippadi solli kondae pogalam..ivargalakkellam adippadai "aarivu" kooda irukiratha enbadhu sandhegame!
  ..Krish

  ReplyDelete
 32. மாதவராஜ் நீங்க சொல்ல வருவது புரிகிறது, ஆனால் இன்று திரைப்படம் ஒரு முழு வணிகம் ஆகி விட்டது. ஆறுதலாக சில படங்கள் வருகின்றன, வெய்யில், அபியும் நானும், நான் கடவுள், ஞானியின் பரிட்சா நாடக் குழு படங்கள்.

  வால்பய்யன் உங்களிடம் என்ன நான் வாதாட இருக்கிறது, இளையராஜா கமலிடம் சொல்வது போல நீங்க நம்ம சைடு சார் .நாம என்ன வாதாடினாலும் ஒரே பக்கம் வந்து நிப்போம்.

  இன்றுள்ள கதா நாய்கர்களும் சரி ரசிகர்கள், ரசிகர் மன்றமும் சரி எல்லாம் விவரம் தெரிந்தே உள்ளனர்.

  நடிகர் காசு தராவிட்டால் தோரணம், கட் அவுட் கிடையாது. அதேபோல கொடுத்த காசிற்கு போஸ்டர், கட் அவுட் பாலபிஷேகம் செய்யா விட்டால் கதாநாயகர்களும் அடுத்து பணம் கொடுப்பதில்லை.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 33. Nam rasiharhalai arivatravarhalena kathanaayaharhal ARINTHAthanaal kathaanaayaharhal arivullavarhal enpathu enkaruthu.

  Rasiharhalin arivai, ariyamayai sariyahave alanthu arinthu vaithiruppavarhal oar vahai arivullavarhale.

  antha ARIVAI moolathanamaahakkondu athihamaana kathaanaayaharhal medaihalilum eari alavillaathu elloarukkum kotti thalluhiraarhal thaam periya arignarhal enra atpa ennathaal. inkuthaan avarhal ARIVATRAVARHAL enpathai ariyavathullarhal. ithaithaan sahikka mudiyavillai.

  ReplyDelete
 34. ***தெருவைச் சுத்தம் செய்யும் உழைப்பாளிகளோ, அன்றாடங்காய்ச்சிகளோ இது போன்ற சொற்களால் அடையாளம் காட்டப்பட்டிருந்தால் இங்கு ஒன்றும் கோபங்கள் பொத்துக் கொண்டு வந்துவிடாது.***

  You are speculating too much. How do you know that??

  Nobody has any right to judge and make some sweeping statements like you did.

  Make fun of their movies. Criticize them when they talk nonsense. Just saying that these heros are fools is NOT CORRECT and UNNECESSARY.

  yes, there are so many to PLEASE YOU! That does not justify that your titles correct!

  Sure, you have the freedom of speech but please do not spectulate like what you have done (see quoted) above!

  If you have said like what you have projected, the sam reaction would ahve been there too. You cant say, it would not have been the case!

  Thanks!

  ReplyDelete
 35. துளசி கோபால்!

  வாழ்த்துக்களுக்கு நன்றி.
  தோடர்ந்து வாசித்து வருவதற்கு ரொம்ப சந்தோஷம்.

  ReplyDelete
 36. நரேஷ்!

  வாழ்த்துக்களுக்கு நன்றி. பகிர்வுக்கும், ஆதரவுக்கும் ரொம்ப நன்றி.

  கார்த்திகேயன்!

  நன்றிங்க.

  ReplyDelete
 37. வால் பையன்!

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  நீங்கள் சொல்வது உண்மைதான்.

  ReplyDelete
 38. நான் ஆதவன்!

  கீர்த்தி!

  எட்வின்!

  ராஜ்!

  ராகவன்!

  வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 39. ஆ.முத்துராமலிங்கம்.

  உங்கள் கருத்துக்கள் விரிவான அலசலுடன் இருந்த்து. இப்படி யோசிப்பது ஆரோக்கியமானது என நினைக்கிறேன்.

  ReplyDelete
 40. அனானி!

  நீங்கள் சினிமாவை பொழுது போக்காக பார்க்கிறீர்கள். நான் அப்படி பார்க்கவில்லை. கலையாக பார்க்கிரேன். கலை பொழுது போக்கிற்கு மட்டுமல்ல.

  ReplyDelete
 41. வானதி!

  //நடிகர்களை அறிவற்றவர்கள் என்று நினைப்பதை விட அவர்களை சுயநலத்தோடு தங்கள் எதிர்காலம் பற்றி திட்டம் போட்டு ரசிகர்களை manipulate பண்ணப் பார்க்கிறார்கள் என்றும் சொல்லலாம் .
  இங்கே இந்த நடிகர்கள் ரசிகர்களைத்த்தான் அறிவற்றவர்களாகக் கருதி அவர்களை முட்டாள்கள் ஆக்க நினைக்கிறார்கள். //

  மக்களை அறிவற்றவன் ஆக்க நினைக்கிறவன் எப்படி அறிவுள்ளவனாக இருப்பான்?

  ReplyDelete
 42. குப்பன் யாஹூ!

  உங்களுக்கு வால் பையன் கருத்து சொன்னதையும்,, அதற்கு நீங்கள் சொன்னதையும் ரசித்தேன்.

  ReplyDelete
 43. வால் பையன்!

  மிகச்சரளமாக நகைச்சுவை பொதிந்த வார்த்தைகளை கையாள்கிறீர்கள். ரசிக்கிறேன்.

  ReplyDelete
 44. முகமது பாருக்!

  தீபா!

  பொன்ராஜ்!

  வேத்தியன்!

  தங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி.

  ReplyDelete
 45. ஞானசேகரன்!

  தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 46. இப்னு ஹம்துன்!

  த்ங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
  ஆதரவுக்கும் நன்றி.

  ReplyDelete
 47. ராஜ நடராஜன்!
  //கேரளா தவிர தென்னக மாநிலங்கள் அறிவு பூர்வமா அரசியலையும் திரை உலகையும் தனிமைப் படுத்த தவறவிட்டு விட்டார்கள் என்றே சொல்லலாம்.//

  உண்மைங்க.

  ReplyDelete
 48. தீபா!
  //எவ்வளவு தான் இந்த வெற்றுச் சால்ஜாப்பையே வைத்துக் கொண்டு தரமற்ற குப்பைகளை ஏற்றுக் கொண்டிருக்கப் போகிறோம்? //

  அதானே!

  ReplyDelete
 49. ஓசைப் பிரியன்!

  எனக்கு யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பே இல்லை. சினிமா என்பது தனிப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டதல்ல. சமூகம் சம்பந்தப்பட்டது.அதனால்தான் என் கருத்தை, கோபத்தை சொல்ல வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 50. நல்ல தந்தி!

  யாருங்க சரவணன்?

  ReplyDelete
 51. அமர பாரதி!

  //முக்கிய காரணம், நடிகனைப் போற்றி அவர் முதலமைச்சராக ஆனால், ஒரு "ஒன்றியச் செயலாளர்" பிச்சையாவது கிடைக்கும் என்ற நப்பாசைதான் காரணம்.//

  ஓஹோ! அப்படி ஒன்று இருக்கிறதோ...!!

  ReplyDelete
 52. சுபன்!

  நன்றிங்க.

  ReplyDelete
 53. ஒரு நடிகன் என்பவன் யார்

  இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்னமும் ஜெயகாந்தனின் வாக்கியங்கள்தான் எவ்வளவு சத்தியமாக உள்ளன !

  வாழ்த்துக்கள் மாதவராஜ்.

  அன்புடன்
  முத்துக்குமார்

  ReplyDelete
 54. கிருஷ்!

  உண்மைதான். அந்த சந்தேகம் வரவேண்டும். கோபமும் வரவேண்டும்.

  ReplyDelete
 55. தமிழன் கறுப்பி!

  ஆமாம். மறுபடியும்தான்....
  எதையும் அரைகுறையாக விடுவதாக இல்லை.

  ReplyDelete
 56. குப்ப்ன் யாஹு!

  வணிகச் சு(சூ)ழலில் சிக்க் அப்படியே போவதா?

  ReplyDelete
 57. unearth!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 58. வருண்!

  உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். காலம் காலமாக, இப்படி இளைய தலைமுறையினரை சீரழிக்கும் அவர்கள் மீது ஒரு பிரஜை என்கிற முறையில் என் கோபத்தை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 59. ***தன் பசிக்காக குளத்தில் இருக்கும் அழுக்குகளை தின்று சுத்தப்படுத்தும் மீன் போல தனது படத்தின் ஓட்டத்துக்காக என்றாலும் நல்ல கருத்துள்ள பாடல்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி நல்ல இசையமைப்புடன் கொடுத்து கல்வியறிவு இல்லாத ரசிகனுக்கு கொடுத்த ந்ல்ல இதயமுள்ள நடிகர்களும் உண்டு. (அப்பா..... எம்ஜியாரையும் கலைஞ்ரையும் பேலன்ஸ் பண்ணியாச்சு)***

  ஆனாலும் நீங்க எமுசியாரை எக்குத்தப்பா புகழைனா உங்களுக்கு தூக்கம் வராது. :-)))

  சுரேஷ்: இது எம் ஜி ஆர் படத்தில் உள்ள பாடல் இல்லை. இருந்துஆலும் கேட்டுக்கோங்க!

  * படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு!

  பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

  ReplyDelete
 60. ***மாதவராஜ் said...
  வருண்!

  உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். காலம் காலமாக, இப்படி இளைய தலைமுறையினரை சீரழிக்கும் அவர்கள் மீது ஒரு பிரஜை என்கிற முறையில் என் கோபத்தை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

  March 24, 2009 10:39 PM***

  உங்கள் மேலே எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை. எனக்கு தோன்றியதை மறைக்காமல் சொன்னேன். உங்கள் உணர்வுகள் மற்றும் ஆதங்க புரிகிறது எனக்கு, நம்புங்கள்! :-)))

  இந்த வார * பதிவரான உங்களுக்கு என் இதயம் கனிந்த வாத்துக்கள் திரு. மாதவராஜ்!

  ReplyDelete
 61. நட்ச்சத்திர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 62. உங்கள் கருத்துகளில் எனக்கு கொஞ்சமும் ஒப்புதலில்லை...இங்கு பதில் சொன்னால் பதிவை விட அதிகம் போய் விடக்கூடும் என்பதால், தனியே பதிவிடுகிறேன்...

  ReplyDelete
 63. நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 64. //தெருவைச் சுத்தம் செய்யும் உழைப்பாளிகளோ, அன்றாடங்காய்ச்சிகளோ இது போன்ற சொற்களால் அடையாளம் காட்டப்பட்டிருந்தால் இங்கு ஒன்றும் கோபங்கள் பொத்துக் கொண்டு வந்துவிடாது//

  உண்மை!
  நீங்கள் தெளிவாகக் கூறியுள்ளீர்கள்.
  '' பாலாபிசேகக்'' கூட்டம் ,புரிந்தே கொள்ளாது.

  ReplyDelete
 65. மிகச்சரியாகவே கூறியிருக்கிறர்கள், ஒரு சமூகத்தின் ரசனையை உயர்த்த இம்மாதிரி கட்டுரைகள் அவசியம்

  ReplyDelete
 66. //இதை நம் கதாநாயகர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் ப்டிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
  //

  தீபா, இது செம ஜோக்!

  நம்ம நடிகர்கள் பல பேருக்கு தமிழ் படிக்க தெரியாது.

  ReplyDelete
 67. மாதவராஜ்,
  நீங்கள் எழுதியதில் தவறேயில்லை.

  "ஒரு மனிதனுக்கு எப்போதும் அவனுக்கு தகுதியான விஷயங்களே வாழ்க்கையில் கிடைக்கின்றன, அவன் ஆசைப்படும் விஷயங்கள் அல்ல." என்று ஒரு பொன்மொழி உண்டு. அதே போல மக்களின் தலைமையும் அவர்களின் தகுதிக்கேற்ப தான் அமைகிறது.

  மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை முட்டாள்கள் தான் அவர்களின் தலைவனாக இருப்பார்கள்.

  ReplyDelete
 68. தங்கள் கூற்றை முழுவதும் எற்க இயலாது. எனெனில் நம்மை மறக்கவே சினிமா செல்கிறோம். எவன் ஓருவன் தன்னை ஒரு முழு மனிதனாக எண்ண வில்லையோ அவனுக்கு தலைவன் எனும் ஒன்று தேவைப்படுகிறது. அதற்கு அவன் ஏற்பது வெண் திரை(வெற்று) வீரர்களை
  வணக்கம்,

  ReplyDelete
 69. தங்கள் கூற்றை முழுவதும் எற்க இயலாது. எனெனில் நம்மை மறக்கவே சினிமா செல்கிறோம். எவன் ஓருவன் தன்னை ஒரு முழு மனிதனாக எண்ண வில்லையோ அவனுக்கு தலைவன் எனும் ஒன்று தேவைப்படுகிறது. அதற்கு அவன் ஏற்பது வெண் திரை(வெற்று) வீரர்களை
  வணக்கம்,

  ReplyDelete
 70. neengal solvathi oppu kolla mudiyahu because
  1.A.R.rehman musicai nasithathan villaiyu oscar award.ethan mulam indru indiauku perumai serthrara? ellya?
  2.nadikargal kastabadubavarku uthavikal endrum seikirarkal.celar tharinthum,maraimukama kuda seikirarkal.ethu ungal kankalil padavilaya?enna?

  ETHARKU UNKAL ANSWER?

  ReplyDelete
 71. This comment has been removed by the author.

  ReplyDelete
 72. I read your previous blog. You are right in all the ways. Keep Rocking and don't bother about the stupid comments from stupid fans.

  All the Best.

  ReplyDelete
 73. Mathavaraj!
  I am a little confused about what do you consider as 'arivu'.
  is it knowledge?
  is it high IQ?
  is it craftiness and cleverness and use your cleverness to get maximum benefit for you ,ie use it with selfish intention?
  if your definition of 'arivu'means high IQ,then like any other group of people,actors also have wide range of IQ from high,medium to low.
  whereas ,if you mean that using your intelligence to help other people and to care for other people,then you are right!,there are not many Tamil heroes with 'arivu'. Most of them are only interested in making money and getting fame.
  By the way,
  I also read Prakashraj's life story in Vikatan.
  I thought it was well-written.
  I think his mother tongue is either Kannada or Tulu.
  He wrote it in excellent Tamil.
  As somebody asked, did he actually write it ?or was it written by a ghost writer?
  does anybody know the answer?
  -vanathy

  ReplyDelete
 74. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
  எச்சத்தாற் காணப்ப படும்.

  எல்லோரும்
  எல்லோருக்கும்
  நல்லவங்களா இருக்குறது ரொம்ப சிரமம்தான் ...

  இருப்பினும்
  சில விஷயங்களை சுட்டிக்காட்டினாலும்
  திருந்துறதுக்கு தயாரா இருந்தாலும்
  அவங்களை திருந்த விடாம ஒரு கூட்டம் கூடவே இருக்கும்...
  நீங்க
  நல்லது சொல்லனும்னு நெனச்சா சொல்றத சொல்லிட்டே இருங்க பிரதர்

  இருப்பினும்
  சொல்லுறதை

  முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
  இன்சொ லினதே அறம்.

  தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க ...

  ReplyDelete
 75. ஒருவரை, ஒரே ஒருவரை இத்தனை வருட கதாநாயகர்களில் அடையாளம் காட்டுங்கள். இவருக்கென்று சமூகப் பார்வை உண்டு என்று சொல்லுங்கள். அதைத் தன் படத்தில் வெளிப்படுத்தினார் என்று குறிப்பிடுங்கள். இவர் மக்களின் ரசனையை உயர்த்த முயற்சித்தார் என்று அடையாளம் காட்டுங்கள்// what about M.G.R?

  ReplyDelete
 76. Madhavaraj,
  I appreciate your writings & comments about tamil heroes. keep up your good work!!
  You should have added more like, these heros are utter idiots, self centered, no care attitude for the sociaty etc.

  ReplyDelete
 77. சினிமா என்பதை ஒரு பொழுதுபோக்கும் அம்சமாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்வின் தீவிர அம்சங்களில் ஒன்றெனக் கொண்டதால் வந்த வினைதான் ரசிகர்களின் மன்றங்களும், நடிப்புச் சித்தர்களின் நாற்காலிக் கனவுகளும்.
  நாமாவது சினிமாவை சினிமா என்று பார்ப்போமே!
  நடிகர்களை கதையின் நாயகர்களாய் மட்டும் பார்ப்போம்.
  போதும்!!!!!!

  ReplyDelete
 78. வானதி, மற்றும் வேலுமணி சொல்வதே என் கருத்தும்.

  ReplyDelete
 79. Ok you said is ok, actors are brainless, people who watching their movies are brainless.
  One small question what the socalled blog writers are doing differently from the actors, blogs are easily accessible with computer skills so blog writers are all genius. Other than writing about actors why you did not write about election how to elect a good candidate, because you will not so many visitors unless other wise the word "actor" is there...? Preaching is easy and habving so much headweight is the basic straits for a blogger starting from "baru online", sorry charu.

  ReplyDelete