தமிழ்ச்சினிமாவின் கதாநாயகர்கள்!

rajini

யோசித்துப் பார்க்கும் போதும், தமிழ்ச்சினிமாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் போதும் இதுதான் உண்மையாகத் தெரிகிறது.


இதை எனக்கு உறுதிப்படுத்தியதும், நிச்சயமாக்கியதும் நடிகர் பிரகாஷ்ராஜ் தான்! அவரது தொலைக் காட்சிப் பேட்டிகளாட்டும், ஆனந்த விகடனில் எழுதிய தொடராகட்டும், அந்த மனிதர் மீதான மதிப்பும், மரியாதையும் கூடிக்கொண்டே இருக்கிறது. அவர் பேசுவதில் இருக்கிற வாழ்வின் உண்மைகள் ‘அட’ என வியக்க வைக்கிறது. சினிமா குறித்த பார்வைகளும், விமர்சனங்களும் அவரை  நமக்கு மிக நெருக்கமாய் உணரவைக்கிற்து. அதே நேரம் நடிகர் விஜய்யோ, சிம்புவோ பேசுவதை ஒரு கணம் கூட கேட்க சகிக்கவில்லை. வாந்தியெடுக்கதான் வருகிறது.

 

“இது வரைக்கும் தமிழில் வந்திராத டிஃப்ரண்டான மூவி இது, இதுவரை நான் நடித்திராத டிஃபரண்டான கேரக்டர் இது, தமிழ்ச் சினிமாவுல ரொம்ப வித்தியாசமா என்னைப் பாக்கப் போறீங்க” என இந்த அரைகுறைகள் கொடுக்கிற பில்டப்கள் இருக்கிறதே தாங்க முடியவில்லை சாமி! (இயக்குனர் பாலாவைத் தவிர இதைச் சொல்வதற்கு இங்கு பலருக்குத் தகுதியில்லை). அதே மாதிரி டுயட்கள், அதே மாதிரி பைட்கள், அதே மாதிரி பழிவாங்கல்கள், அதே மாதிரி ஹிப் மூவ்மெண்ட்கள்தான் படங்கள் முழுக்க நிரம்பியிருக்கும். பார்த்துவிட்டு கேமிரா முன் நின்று “சூப்பர்”., “விஜய்க்காக பாக்கலாம்”, “அசத்தல்”. “நல்ல மெஸெஜ்’ என்று செல்லும் ரசிகர்களைப் பார்த்து “ஐயோ, ஐயோ  என் தமிழ்ச் சமூகமே” என பரிதவிக்கத்தான் முடிகிறது.

 

பிரபலமான இந்த கதாநாயகர்களுக்கென்று சமூகப்பார்வையும்,  தெளிவான கருத்துக்களும் இருப்பதில்லை. உலகமே இடிந்து விழுந்தாலும் வாயைத் திறக்காமல், எவனோ ஒரு டூப் தனக்காக சண்டை போடுவதைப் பார்த்து காலரை தூக்கிவிட்டுக் கொண்டிருப்பார்கள். தப்பித் தவறி எதாவது சொல்கிறேன் என வாய்ஸ் கொடுத்தால், தலையில் ஒங்கி ஒங்கி அடித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது. குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமல் இவர்கள் எல்லாம் கதாநாயகர்களாக வலம் வர முடிவது அவமானம்தான். அவர்களின் பிறந்த நாளுக்கு காவடி எடுப்பதும், அபிஷேகம் செய்வதும், அலகு குத்துவதும் அசிங்கம்தான்.

 

அதே நேரம் தமிழ்ச்சினிமாவில் அற்புதமான மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள். சமகால உலகம் குறித்த கவலையோடும், பிரக்ஞையோடும் வாழ்ந்த கலைஞர்களாக அவர்கள் வலம் வந்திருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, சந்திரபாபுவிலிருந்து பெரும் பட்டியலே சொல்ல முடியும். இப்போதும் நாசர், விவேக், பிரகாஷ்ராஜ் என அவர்கள் தொடர்கிறார்கள். கதாநாயகிகளாக நடித்தவர்கள், இயக்குனர்கள். நகைச்சுவை நடிகர்கள், வில்லன்களில் இப்படிப்பட்டவர்களை அதிகம் காண முடிகிறது. கதாநாயகர்களில் கமலஹாசனைத் தாண்டி யாரையும் யோசிக்க முடியவில்லை.

 

இங்கு கதாநாயகனாவதற்கு அறிவொன்றும் தேவையில்லையோ?

 

 

*

கருத்துகள்

80 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சபாஷ் மாதவராஜ் சார் உண்மையா சொன்னீங்க.

    எல்லாமே வியாபாரம்தான் அவங்க வங்கி இருப்பை உயர்த்துவதற்க்கும் நிலங்களில் விதைப்பதற்க்கும்(காசை) சொகுசு வாழ்க்கை நடத்துவதற்க்கும்
    அவர்கள் வாய்கூசாம இப்படி பல அரிதாரம் பூசிய சொற்க்களை அள்ளிவீசுகின்றனர் பாவம் நன்றியுள்ள விசுவாச ரசிகர்கள் (அல்லது வெறியர்கள்) அதில் மயங்கிபோய் தங்களில் உழைப்பை பாழாக்குகின்றனர்.

    அதிலும் இன்னொன்று மாதவராஜ் எங்காவது உதவிபன்னுவாங்க பாருங்க அய்யையோ தாங்க முடியல எல்லார்த்தையும் நிக்க வைத்து போட்டோ எடுப்பாங்க செய்திதாளில் கொட்டை எழுத்தில் போடுவாங்க
    அதுலவேர அவங்க (யாரும் எழுதி கொடுக்காமலே) வசனம் வேர பேசுவாங்க பாருங்க அதவிட கொடும வேரெதுவுமில்ல. உண்மையா அவங்களுக்கு மனசிருந்தா மொதல்ல அவங்க வாங்கிர சம்பலம் நியாயமானதா என்று யோசிக்கட்டும் (இங்கு சம்பலம் அவர்கள் திறமைக்கு அல்ல அவர்கள் ரசிகர் கூட்டத்தை வைத்தும் அடுத்த நடிகர் எவ்வளவு வாங்ககுகின்றார் என்ற போட்டியிலும் தான் அளவிடப்படுகிறது இந்த போட்டியில் பல படஅதிபர்கள் தற்க்கொலைக்கு கூட போய்யுள்ளார்கள் இல்லியா) அடுத்தது அவர்கள் இப்படி வெறிஏத்திரமாதிரி 'பஞ்டைலாக்கை' விட்டு ரசிகர்களை முட்டாலாகுவதை நிறுத்தட்டும் நல்ல படங்கள் கொடுத்து தமிழ் ரசிகர்களின் ரசனையை மாற்ற முயற்ச்சிக்கட்டும், அடுத்தது அவர்கள் உள்ள தொழிலை உலகலவில் கொண்டு செல்ல முயற்சிக்கடும் இன்னுமொன்று சக நடிகர்களுடன் நட்புடன் இருக்கட்டும் இது எல்லாம் இல்லாம எப்படி ஒருவன் ஒழுக்கமானவ்வானாகவும் உண்மையாகவானாகவும் அடுத்தவர்களுக்கு உதவுபவனாகவும் இருக்க முடியும் (அதிலும் ஏதாவது ஆதாயம் இருக்கு பின்னாளில் அவர்கள் அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் பட்டியலிட வசதாயாஇருக்குமில்ல அதான்)

    இப்படி இன்னும் பல சொல்லலாம் மாதவாராஜ் சார்.. ச்ச நான் வேர பிண்ணூட்டமிடுடான்னா தொடர்பதிவுபோல நீட்டிட்டேன்.
    அரசியல்வாதிங்களும் இவங்களும் ஒன்னுதான் போல.

    பதிலளிநீக்கு
  2. //கதாநாயகர்களில் கமலஹாசனைத் தாண்டி யாரையும் யோசிக்க முடியவில்லை.//

    இதில் நடிகர் சூரியாவையும் சேர்க்களாம்ங்கரது என் கருத்து

    பதிலளிநீக்கு
  3. அறிவு என்று நீங்கள் எதை கூறுகிறீர்கள்

    40 வயதில் ஒரு கண்டெய்னர் மற்றும் போக்குவரது நிறுவனத்தை நிர்வாகிக்கும் திறன் “அறிவு” என்ற பதத்திற்குள் வருமா

    பதிலளிநீக்கு
  4. அறிவு என்று நீங்கள் எதை கூறுகிறீர்கள்

    40 வயதில் ஒரு கண்டெய்னர் மற்றும் போக்குவரது நிறுவனத்தை நிர்வாகிக்கும் திறன் “அறிவு” என்ற பதத்திற்குள் வருமா

    பதிலளிநீக்கு
  5. இந்த நிலைமைக்கு கதாநயகர்கள், கதா நாயகிகள் (சதை நாயகிகள்) ஒரு காரணமாக இருந்தாலும், முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள்.

    இன்றைய தயாரிப்பாளர்கள் யாரும் கலை நோக்கத்தோடு வருவதில்லை. சினிமாவை வியாபாரமாக பார்க்கின்றனர். அதுவும் கார்பர்டே நிறுவனகள், மல்டிப்ளக்ஸ் திரை அரங்குகள உரிமையாளர்கள், பணம் பண்ணுவதையே நோக்கமா கொண்டு உள்ளனர்.

    சண் pictures, reliance, பிரமிட் நடராஜ போன்ற நிறுவனகள் கலை படங்களான வீடு, எழாவது மனிதன், ஒருவீடு இரு வாசல் போன்ற படங்களை தயாரிக்க முன் வருமா.

    ஒரு காலத்தில் கலை ஆர்வத்தோடு இருந்த ஏ வி எம் நிறுவனமே இன்று அயன் போன்ற வணிக படங்கள் தயாரிக்க வந்து விட்டன.

    எனவே வரும் காலங்களில் கலை சார்ந்த சினிமா பார்ப்பது மிக அரிது.

    இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகின்றன, காதல், கல்லூர்ரி, நான் கடவுள், தமிழ் எம் ஏ.

    தயாரிப்பளர்களை கேட்டால் ரசிகர்களாகிய நம்மை குறை கூறுவார். ரசிகர்களாகிய நாம் கலை படங்களை ஆதரிக்க வேண்டும்.

    நமீதா படமும் நந்திதா டாஸ் படமும் வந்தால் நாம் முதலில் ஓடுவது நமீதா படத்திற்கு தான்.

    விஜய் படமும் பசுபதி படமும் வந்தால் நாம் முதலில் ஓடுவது விஜய் படத்திற்குதான்.

    எனவே மாற்றம் நம்மில் இருந்து வர வேண்டும் முதலில்.

    குப்பன்_யாஹூ

    பதிலளிநீக்கு
  6. சமீபத்திய உதாரணம், அபியும் நானும் & காதலில் விழுந்தேன் (நாக்க முக்க ).

    நாம் எல்லாரும் காதலில் விழுந்தேன் படத்தையே ஆதரித்தோம். நிலைமை இப்படி இருக்க ராத மோஹனுக்கு எப்படி இன்னொரு அபியும் நானும், மொழி போன்ற படங்கள் தயாரிக்க மனம், பணம் வரும்..

    எனவே அறிவற்றவர்கள் ரசிகர்களாகிய (பார்வையாளர்கள்) நாமே.

    நமது அறியாமையை, (நமது அறிவற்ற ரசிப்பு தன்மையை) விஜய், சிம்பு, விஷால் , நயன்தாரா, நமீதா, ப்ரியா மணி போன்றோர் நன்றாக பயன் படுத்தி கொள்கிறார்கள்.

    குப்பன்_யாஹூ

    பதிலளிநீக்கு
  7. // இப்போதும் நாசர், விவேக், பிரகாஷ்ராஜ் என அவர்கள் தொடர்கிறார்கள்//

    இதுல விவேக் எங்க இருந்து வந்தார்னு புரியலை. எல்லா படத்துலயும் டபுல் மீனிங் பேசி எல்லாரையும் நெளிய வைக்கிறவரை போய் NSK, ராதாவோட எல்லாம் ஒப்பிடறீங்களே சார்.

    ராதா அளவுக்கு ஒரு கலைஞன் தமிழ் சமூகத்துக்கு கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.

    கமல் என்னை பொருத்த வரை இன்றும் குழப்பவாதி தான். தசாவதாரம்ல அந்த குழப்பம் இன்னும் தெளிவா தெரியும். ராதாக்கு இருந்த தைரியும் இந்த சினிமா கூட்டத்துல யாருக்கும் கிடையாது. பாலாக்கு கூட கிடையாது.

    ரஜினியை வாய்ஸ் கொடுக்க சொல்றதுல இருந்து அதை தெளிவா பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. ஓசைபிரியன்!

    எதற்கு ஸ்டுப்பிட் என்று சொல்லியிருந்தால், இந்த ஸ்டுப்பிட் பதில் சொல்வதற்கும் வாய்ப்பு இருந்திருக்கும்.

    கமல் குறித்து உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.

    நல்ல நடிகர், நல்ல மனிதர் என்கிற விவாதத்திற்குள் நான் வரவில்லை.

    சமகால வாழ்க்கை, இலக்கியம் குறித்து பிரக்ஞையுள்ளவராகவே அவரைப் பார்த்தேன். சினிமாவை சினிமாவாக பார்த்திட அவருக்கு ஞானம் இருப்பதாகவேப் படுகிறது, இன்றும் தன்னை நாத்திகனாக காட்டிக்கொள்ளத் தயங்கியதில்லை. முஸ்லீம்கள் அந்நியர் என்று இந்துத்துவாதிகள் சொன்னபோது, அப்படியென்றால் ஆரியரும் அந்நியரே என்று தைரியமாக சொல்ல முடிந்தது அவரால். எந்த சினிமா நடிகரும் பேசத் தயங்குகிற விஷயத்தில் வெடிப்புற பேசியது எனக்குப் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  9. ஆ.முத்துராமலிங்கம்!

    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    உங்கள் பார்வையில் சூர்யாவைப் பிடித்திருந்தால் சேர்த்துக் கொள்ளூங்கள்.

    பதிலளிநீக்கு
  10. புருனோ!

    கண்டெய்னர் மற்றும் போக்குவரத்து என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

    அறிவு என்று நான் இங்கு சொல்ல வருவது, சினிமாவுக்குள் இருப்பவர்கள் அதையும் தாண்டி சிந்திப்பதை. சினிமாவில் தங்களால் முடிந்த அளவுக்கு பார்வையாளர்களை முட்டாளாக்காமல் ரசனையை மேம்படுத்த முயற்சிப்பதை. குறைந்தபட்ச ஐ.க்யுவோடு பொதுவெளியில் உரையாடுவதை.

    பதிலளிநீக்கு
  11. குப்பன் யாஹூ!

    நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். தயாரிப்பாளர்கள்முக்கிய காரணம்தான். வியாபார நோக்கம் முக்கிய காரணம்தான். அதையும் மீறி, வில்லன் நடிகர்களிலும், நகைச்சுவை நடிகர்களிலும் ஒருசிலர் ஒருவித சமூகப் பிரக்ஞையோடும், தெளிவான சிந்தனைகளோடும் கானப்படுகிறார்களே... அந்த அலவுக்குக் கூட கதாநாயக நடிகர்களில் காணமுடிவதில்லையே... என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. வெட்டிப்பயல் அவர்களுக்கு!

    உண்மைதான். விவேக் அப்படித்தான் பேசுகிறார். கூடவே சில படங்களில் சில பொறுப்புள்ள கருத்துக்களும் சொல்லவும் செய்கிறார். அவருடைய வசனங்களை அவரே தீர்மானித்து சினிமாவில் உரையாட முடிவது முக்கியமானதாய் தோன்றியது.தொலைக்காட்சிப் பேட்டிகளில், அசட்டுத்தனமாக பேசாமல் மிக இயல்பாக பல விஷயங்களை சொல்ல முடிகிறது அவருக்கு. என்.எஸ்.கே அருகில் வைத்தெல்லாம் பார்க்கவே முடியாதுதான். இருக்கிற சொத்தைக் கத்தரிக்காயில் எது பரவாயில்லை எனத் தேடும்போது தேறியவர். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  13. சினிமா ஒரு தொழில்.. அவரவர் முதலீடு அவரவருக்கு முக்கியம்.

    விஜயோ சிம்புவோ யாராக இருந்தாலும் படம் அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது என்று பில்டப் செய்தால்தான் படம் ஓடும்.. படம் ஓடுவதால் அதற்குப் பின் இருப்பவர்கள் பிழைப்பார்கள்.. உங்களுக்குத் தெரியாததல்ல. சினிமா என்பது எத்தனையோ குடும்பங்களின் நம்பிக்கை!

    மளிகைக் கடையில், கத்திரிக்காயை விற்பவர்கள், அது நல்ல கத்திரியோ, அழுகின நிலையில் இருக்கிறதோ அதன் உண்மை நிலையைக் கூறி எவரும் விற்பதில்லை... எதுவாக இருந்தாலும் நல்ல கத்திரிக்காய் என்று சொல்லிதான் விற்கிறார்கள். அவரவர் வியாபாரம் அவரவர்க்கு. இதில் சினிமா மட்டும் விதிவிலக்கல்ல.

    சாதாரண மக்களுக்கும் கவிஞர்கள்/படைப்பாளிகளுக்கும் உள்ள வித்தியாசம் தான், விஜய்க்கும், பிரகாஷ்ராஜ்ஜுக்கும் உள்ள வித்தியாசம்.

    சினிமா என்பது எல்லா தட்டு மக்களுக்குமானது... உங்களுக்கு ப்ரகாஷ்ராஜ் என்றால், இன்னொருவருக்கு விஜய். அந்த இன்னொருவர் என்று நல்ல தரத்தை எதிர்பார்க்கும் நாள் வருகிறதோ, அன்று எல்லாமே மாறும்.... வித்தியாசம் விரும்புபவர்களுக்கென்றே பாலா, ராதாமோகன், பாலாஜி சக்திவேல் போன்ற புதியவர்களும், மணிரத்னம் போன்ற பழையவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் நாடவேண்டியது அவர்களைத்தான்... மசாலாக்களை விரும்பும் மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்களை, இலக்கியவாதிகள் பார்த்து, நொள்ளை சொல்லுவது தவறுதான்...

    நீங்கள் விஜய் சிம்பு போன்றவர்களைக் குறை சொல்லும் முன்னர், அவர்களைச் சொல்ல வைத்தவர்களையும் கொஞ்சம் பார்க்கலாமே!!!

    இது என் கருத்து மட்டுமே!

    பதிலளிநீக்கு
  14. /////வில்லன் நடிகர்களிலும், நகைச்சுவை நடிகர்களிலும் ஒருசிலர் ஒருவித சமூகப் பிரக்ஞையோடும், தெளிவான சிந்தனைகளோடும் கானப்படுகிறார்களே...///////

    அப்படி எல்லோரும் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல.. அப்படி நாம் எதிர்பார்த்திருப்பதும் தவறுதான்..

    நீங்கள் வசிக்கும் தெருவில் எத்தனை பேர், தெளிவான சிந்தனைகளோடு இருக்கிறார்கள்? சமூக அக்கறை, பண்பாடு, கலாச்சார கடைபிடிப்பு என்று எத்தனைபேர் இருக்கிறார்கள்???? அங்கங்கே ஓரிருவர் இருப்பதால் எல்லோரையும் அப்படி எதிர்பார்க்க முடியுமா?

    வில்லன் நடிகராவது, நகைச்சுவை நடிகராவது.... நடிப்பு என்று வந்துவிட்டாலே எல்லாம் ரோல்களும் ஒன்றுதான்... ஏனெனில் நீங்கள் காண்பது அவர்களின் பொய்யான வாழ்க்கையே தவிர, உண்மை நிலை அல்ல.

    அப்படியே உண்மையில் அவர்கள் சமூக அக்கறையின்மையோடு திரிந்தால் அதைப் பற்றி கவலைப்பட நமக்கு அவசியமே இல்லை. ஏனெனில் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள பல கேள்விகள் உண்டு! அதற்கான விடையை நாம் வைத்திருக்கிறோமா என்று முடிவு செய்துவிட்டுத்தான் மற்றவர்களை விமர்சிக்கவும் வேண்டும்!!!

    (இந்த பதிவுகள் தங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)

    பதிலளிநீக்கு
  15. ஒரு மாறுதலுக்காக சில நேரங்களில் இப்படியான படங்களுக்கு சென்று பாதியில் வந்த அனுபவங்கள் இருப்பதால் முன்யோசனையோடு தரமான இயக்குனர்களின் படங்களுக்கே செல்கிறேன்.

    மாற்றுச்சினிமாக்கள் மேலும் அங்கீகரிக்கப்பட்டால் தான் இன்னும நல்ல படைப்புகள் வரும். வணிகச்சினிமாக்களை கொண்டாடும் வரை இப்படித்தானிருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. Hi ,

    I strongly accept ur views... but dont include Vivek in that list....
    anyways good lines keep rocking....

    பதிலளிநீக்கு
  17. ஹா! நல்ல தமாஷ், அய்யா மாதவராஜ் உங்கள் தமுஎச கோடம்பாக்க புன்னிய பூமியில் தமுஎகச ஆன கதையை மறந்து விட்டீர்களே... அப்பொழுது தமிழ்சினிமா நாயகர்கள் அறிவாளிகளாக இருந்தனரா? உங்கள் கூட்டனிக்காக புரட்சித்தலைவி உள்ளிட்டு தமிழ் சினிமா நடிகர்களை பிரசாரத்துக்கு அழைக்காமல் ஓட்டு கேட்பீர்களா? தமிழ் சினிமா நடிகர்கள் முட்டாள்களாக இருக்கட்டும் உங்கள் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை பற்றி பேசுவோமா?

    பதிலளிநீக்கு
  18. What you said is correct. These Cine Stars doesn't have any basic knowledge also. Without any talent and brains, these actors are cheating and surviving in this field. Its all simply by luck - a good example is Rajinikanth, Vijay, Ajith, Simbu and Vivek. They are real idiots. Even the fans of these idiotic actors are the biggest idiots.

    பதிலளிநீக்கு
  19. யார் வேண்டுமானாலும் நாயகனாக முடியும், வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் ஒரே துறை இதுதான்

    பதிலளிநீக்கு
  20. ஆதவா!

    உங்கள் இரு பின்னூட்டங்களும் படித்தேன். நீங்கள் புண்படுத்துகிற மாதிரி எழுதுபவரா? நான் என் கருத்தைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்கிறீர்கள். அதற்குத்தானே இந்த பதிவு, பின்னூட்டங்களெல்லாம்...!


    சினிமா ஒரு தொழில் என்று நீங்கள் பார்க்கிறீர்கள். நான் கூடவே அது கலையென்றும் பார்க்கிறேன். ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய பார்வைகளும், சிந்தனைகளும் இல்லாமல் அசடுகளாக இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில்தான் எழுதினேன். அறிவற்றவர்கள் என்பதற்குப் பதிலாக அசடுகள் என்று குறிப்பிட்டு இருக்கலாமோ?

    இன்னொன்று, இவையெல்லாம் இயல்பு, அப்படித்தான் இருப்பார்கள் என்றும், இதில் ஏன் வருத்தம் என்று உங்கள் கருத்தின் தொனி இருக்கிறது. பூமி உருகுகிறது, இயல்பு என்று சும்மா இருக்கிறீர்களா? ஒரு கவிதையை வேதனையோடு எழுதுகிறீர்கள்தானே!

    சரி, நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டே எல்லோரும் பேசுகிறார்கள். நான் சினிமாவை மதிக்கிறேன். அதற்கு இருக்கும் ஈர்க்கும் சக்தி கண்டு பிரமித்துப் போகிறேன். அங்கிருந்து எத்தனை மேதைகள் வந்திருக்கிறார்கள். சார்லி சாப்ளினிலிருந்து எப்ப்பேர்ப்பட்ட மனிதர்கள் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். த்மிழ்ச்சினிமாவின் இத்தனை நெடிய வரலாற்றில் அப்படியொருவரை கதாநாயகர்களிலிருந்து காண முடியவில்லையே என்ற எரிச்சல்தான் என் பதிவு.

    பதிலளிநீக்கு
  21. யாத்ரா!

    இவர்களின் படங்களைப் பார்க்கலாம், பார்க்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. த்மிழ்ச் சினிமாவின் கதாநாயகர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது மட்டுமே நான் சொல்ல வந்தது.

    பதிலளிநீக்கு
  22. megha babu!
    anonymous!
    சுரேஷ்!

    தங்கள் வருகைக்கும் , புரிதலுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பிகில்!

    என்னுடைய தனிப்பட்ட கருத்தைச் சொன்னால், உடனே தமுஎச, கட்சி என்று ஏன் வரிந்து கட்டிக்கொண்டு ஏன் வருகிறீர்கள். தமுஎச, சினிமாவை ஒரு கலையாக பார்க்கிறது. இந்த அசட்டுத்தனமான கதாநாய்கர்களை அழைத்து முன் நிறுத்துவதில்லை. தமிழில் நல்ல படங்களுக்கு விருது கொடுக்கிறது.. தமிழில் குறிப்பிடும்படியான இயக்குனர்கள் மற்றும் கலைஞர்களோடு நட்புரீதியான உறவு வைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. அட்டகாசமான பதிவு!

    அறிவு மட்டும் அல்ல, கொஞ்சம் கூட சுயமரியாதையும் அற்றவர்கள் என்பது என் கருத்து! ஆனால் மாறாக அநியாயத் திர்மிரும் ஆணவமும் கொண்டவர்கள்.
    ஊமைக்கு உளறு வாயன் சண்டப்பிரசண்டன் என்பது போல காலம் காலமாக ஊமையாய் இருக்கும் நமது தமிழ்ச் சமூகம் இவரகளின் உளறல்களைக் கண்டு வாய்பிளக்கிறது. அது தான் இவர்கள் இஷ்டத்துக்கு ஆடுவதற்குக் காரணம்.

    பதிலளிநீக்கு
  25. //தமிழ்ச்சினிமாவில் அறிவற்றவர்கள் கதாநாயகர்கள்!//

    //அறிவு என்று நான் இங்கு சொல்ல வருவது, சினிமாவுக்குள் இருப்பவர்கள் அதையும் தாண்டி சிந்திப்பதை.//

    பள்ளி ஆசிரியர்கள் --> ‍இவர்கள் தஞ்சாவூர் எலிக்கறி பிரச்சனைக்கு போராடினார்கள்.

    பேங்க் குமாஸ்தாக்கள் -->இவர்கள் முல்லைப் பெரியார் பிரச்சனைக்காக போராடினார்கள்.

    போக்குவரத்து ஊழியர்கள் -->இவர்கள் கண்டதேவி பிரச்சனைக்காகப் போராடினார்கள்.

    எழுத்தாளர்கள் --> இவர்கள் திண்ணியத்தில் மலம் திணிக்கப்பட்டதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர்ந்தார்கள்.

    கதைப்புத்தம் போடும் பதிப்பாளர்கள், பெரிய இலக்கிய வெங்காயங்கள்/ முன்/பின்/பக்க வாட்டுச் சிந்தனைக் குவியல்கள் --> பிராபாகரன் புத்தகத்தை ஏன் விற்கக்கூடாது என்று கேட்டு வழக்குப் போட்டுள்ளார்கள். அம்பானி சம்பந்தமான புத்தகம் ஏன் தடை செய்யப்பட்டது என்று வழக்குப் போட்டுள்ளார்கள்.

    ஆனால்....

    இந்த சினிமாக்காரன்கள் மட்டும் சினிமா தாண்டி சிந்திப்பது இல்லை. எனவே அவர்கள் அறிவற்றவர்கள்.

    ****

    //ஆனந்த விகடனில் எழுதிய தொடராகட்டும், அந்த மனிதர் மீதான மதிப்பும், மரியாதையும் கூடிக்கொண்டே இருக்கிறது. அவர் பேசுவதில் இருக்கிற வாழ்வின் உண்மைகள் ‘அட’ என வியக்க வைக்கிறது.//

    பிரகாஷ்ராஜ் சினிமா தாண்டி சிந்தித்து நடத்திய சமூகப் போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அவைகளைப்பற்றி சொல்ல பக்கங்கள் போதாது, எனவே அவர் ஆனந்த விகடனில் எழுதிய தொடரை வைத்து அவரை அறிவாளி என்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. தீபா!

    //ஊமைக்கு உளறு வாயன் சண்டப்பிரசண்டன் என்பது போல காலம் காலமாக ஊமையாய் இருக்கும் நமது தமிழ்ச் சமூகம் இவரகளின் உளறல்களைக் கண்டு வாய்பிளக்கிறது.//

    ஆஹா.. எவ்வளவு எளிமையாக உண்மை புரிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  27. கல்வெட்டு!

    உங்கள் கோபம் கலந்த நையாண்டியை ரசித்தேன். நண்பரே! இங்கு சிந்திக்கவே மாட்டேன்கிறார்கள். பிறகு எப்படி போராடப் போகிறார்கள். நான் சிந்திப்பதே பெரிய விஷயமாக பார்த்திருக்கிறேன்.

    ஆனால் அரசு ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களும், வங்கி ஊழியர்களும் தங்கள் பிரச்சினைகளைத் தாண்டியும் இப்போது போராடத் துவங்கியுள்ளனர்.

    பதிலளிநீக்கு
  28. இதை நான் ஏற்றுக்கொண்டாலும் பேட்டி காண்பவர்களிலும் சில விடயங்கள் தங்கி இருக்கின்றன. அஜீத்தை எடுத்துக்கொண்டால் நீயா நானா கோபிநாத் எடுத்துக்கொண்ட பேட்டி மிக தரமானது.

    அதுபோல பாலகுமாரனும், மதனும் ரஜினியிடமெடுத்த பேட்டிகள், தொடர்ந்து மூன்று வாரங்களாக மதன் எடுத்த ரஹ்மானின் பேட்டி போன்றவை......

    பதிலளிநீக்கு
  29. Your comments is biased , As the very *good person* PrakashRaj is not a real life hero did you know this?.

    So far in my assumption Mr.Sivakumar falls in this category.

    Chumma naalu ezhuthu nallavithamaa ananda vikatanla ezhuthitta avaru nallavaraa,

    பதிலளிநீக்கு
  30. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  31. //சமீபத்திய உதாரணம், அபியும் நானும் & காதலில் விழுந்தேன் (நாக்க முக்க ).

    நாம் எல்லாரும் காதலில் விழுந்தேன் படத்தையே ஆதரித்தோம்//

    குப்பன் அதிகமாக சன் டிவி பார்ப்பாரோ?
    காதலில் விழுந்தேன் படத்தை விட அப்யும் நானும் நல்லபடியாக ஓடியது.
    முதல் படத்துக்கு வெட்டி விளம்பரம் அதிகமே தவிர படம் மண்ணைக் கவ்வியது தான் உண்மை.

    பதிலளிநீக்கு
  32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  33. தமிழ்மண நட்சத்திரத்திற்கு உள்ளம் கணிந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  34. நட்சத்திர வாழ்த்துக்கள்!

    முதல் பதிவே உங்கள் பாணியில் காரசாரமான கருத்துக்களுடன் இருக்கிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  35. நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை ,உதாரணம் ரஜினி,தன்னுடைய படம் ரிலீஸ் ஆகணும் னு காவிரி பிரச்னை க்காக பேசிட்டு,அப்றம் என்னை மன்னிச்சிடுங்க சொன்ன தமிழ் துரோகி ..

    பதிலளிநீக்கு
  36. //அதே மாதிரி ஹிப் மூவ்மெண்ட்கள்தான் படங்கள் முழுக்க நிரம்பியிருக்கும். //

    இதுல எல்லாம் வெரைட்டி எதிர்பார்க்கிறீங்கன்னு தான் மூவ் மெண்டை மாற்றாமல் இடுப்பையே மாற்றுகிறார்கள் :)

    பதிலளிநீக்கு
  37. ஒரு பழமொழி ஞாபகம் வருது
    ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ன்னு
    அப்பதான் அவங்களோட வருமானம் பெருகும்
    அதுக்காக சொன்ன பழமொழி
    சின்னபிள்ளையா இருக்கும் பொழுது ஒவ்வொரு ரேடியோ உள்ளிருந்து
    ஆள் பேசுறாங்க நினைத்ததுண்டு
    அதுபோல தான் திரையில் நடப்பவை உண்மையான உருவம்னு
    நம்புறோம்
    அவங்க பொழப்பு பாத்துகிட்டு அவங்க போய்கிட்டு இருக்காங்க

    பதிலளிநீக்கு
  38. தமிழ் சினிமா நாயகர்கள் குறித்தான நல்லதொரு பார்வை.

    //இந்த அரைகுறைகள் கொடுக்கிற பில்டப்கள் இருக்கிறதே தாங்க முடியவில்லை சாமி! (இயக்குனர் பாலாவைத் தவிர இதைச் சொல்வதற்கு இங்கு பலருக்குத் தகுதியில்லை)//

    மிகச் சரி. ஆனால் நிறைகுடம் தளும்பாது என்பதனைப் போல இயக்குனர் பாலா சபை நிறைந்த இடங்களிலெல்லாம் மிகவும் அமைதியாக இருக்கிறார். இந்த அறிவற்றவர்கள் இவரிடமிருந்தாவது பாடம் கற்றுக்கொண்டால் என்ன?

    பதிலளிநீக்கு
  39. முதலில் வாழ்த்துகளை சொல்லிவிடுகிறேன்.

    என்னமோ போங்க,எழுத்தாளர்கள்தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாய்
    சவுண்டு விட்டுக் கொண்டு இருக்கீறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  40. மாதவராஜ் சார்,
    உங்கள் கருத்து நம்மை போன்ற அதிஅறிவுஜிவிகளின் கருத்து.அதனால் நாம் தரம் எதிப்பார்க்கிறொம். ஞாயம்தான் ஆனால் நமக்கு பொழுதுப்போக்காக இருக்கும் சினிமா எத்தனையோ பேர்களின் அன்றாட பிழைப்பு.

    ஆதவன் சார் நான் உங்கள் கருத்துக்கு
    தலை வணங்குகிறேன்

    சினிமா மாற வேண்டுமென்றால்
    பார்வையாலனின் தரம் மாறவேண்டும்
    தற்போது அது ஒவ்வொருவனுக்கு
    ஒரு விதமாய் இருக்கிறது.அத்னால்
    இப்போதைக்கு நாம் சினிமாவில்
    எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க
    முடியாது.அதுவரையில் இந்த
    ஒரு தடவை சொன்ன?,,,,
    வாழ்கை ஒரு வட்டண்டா,,,
    நான் அருவாடா,,,,
    அடிச்சிட்டுதான் ஒக்காருவேன்,,,
    போன்ற இம்சைகளை தாங்கித்தான் ஆகவேண்டும்

    பதிலளிநீக்கு
  41. //அறிவு என்று நான் இங்கு சொல்ல வருவது, சினிமாவுக்குள் இருப்பவர்கள் அதையும் தாண்டி சிந்திப்பதை. சினிமாவில் தங்களால் முடிந்த அளவுக்கு பார்வையாளர்களை முட்டாளாக்காமல் ரசனையை மேம்படுத்த முயற்சிப்பதை. குறைந்தபட்ச ஐ.க்யுவோடு பொதுவெளியில் உரையாடுவதை.//

    இது தான் நீங்கள் கூறும் அறிவா

    அப்படி பார்த்தால்

    இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று பார்த்தால் வித்தியாசம் இருக்கிறதா

    --

    பதிலளிநீக்கு
  42. //// இப்போதும் நாசர், விவேக், பிரகாஷ்ராஜ் என அவர்கள் தொடர்கிறார்கள்//

    இதுல விவேக் எங்க இருந்து வந்தார்னு புரியலை. எல்லா படத்துலயும் டபுல் மீனிங் பேசி எல்லாரையும் நெளிய வைக்கிறவரை போய் NSK, ராதாவோட எல்லாம் ஒப்பிடறீங்களே சார்.//

    மாதவராஜ் சார்!நீங்கள் பார்க்கும் பார்வை திரைக்கும் அதற்கும் அப்பாலும் என்ற நோக்கில் நடிகனை அலசுகிறீர்கள்.வெட்டிப்பயல் இரண்டு வசனங்களின் வார்த்தைகளை பின்னூட்டமிடுகிறார்.விவேக் காமெடியன் என்ற முகத்துக்கும் அப்பால் ஒரு நல்ல சிந்தனைவாதி.

    பதிலளிநீக்கு
  43. அருமையான சாட்டையடி.. யாருக்கு இது புரியப் போகிறது?

    விவேக் காட்டிக் கொள்கிறாரே தவிர அவர் இந்த வரிசையில் வருவாரா தெரியவில்லை..
    கமலைப் பற்றி பலர் இங்கே குழம்பி இருக்கிறார்கள்..தமிழ் சினிமாவில் புரிந்து கொள்ளப்படாத ஒருவராக கமல் இருக்கிறார்..

    புத்திஜீவிகள் பேசினால் பலருக்கும் புரிவதில்லை தானே..;)
    இல்லாவிட்டால் குண தோற்க,அதே மசாலாவை எடுத்து அரைத்த காதல் கொண்டேனை நாம் வெல்ல வைப்போமா?

    பதிலளிநீக்கு
  44. வடிவேலு தனது காமெடியில் கூறுவாரே :- ‘எனக்குதான் கோபம் வராதுன்னு சொல்றனே. அப்புறம் ஏன் அதை எதிர்பார்க்கிறீங்க ?’

    அது போல, தமிழ்த் திரை நடிகர்கள் பலருக்கும் அறிவு இல்லை என்பது தெரியுமே, அதை ஏன் அவர்களிடம் எதிர்பார்க்க வேண்டும் ?

    பதிலளிநீக்கு
  45. விவேக்கை இந்த பட்டியலில் சேர்த்ததில் தவறு ஒன்றுமில்லை. சராசரிக்கும் கொஞ்சம் மேம்பட்ட அறிவாளி என்பதை அவருடைய மேடைப் பேச்சுகள் காட்டுகின்றன. தான் இசையமைக்கும் வாய்ப்பு கேட்டு சென்றபோது பிரகாஷ் ராஜ் எவ்வளவு அலட்சியமாக நடந்துகொண்டார் என்பதை ஜேம்ஸ் வசந்தன் மனம் நொந்து கூறியிருக்கிறார். ஆகவே, பிரகாஷ் ராஜின் மேதைத்தனம்தான் அவருடைய மிகச்சிறந்த நடிப்பு.

    பதிலளிநீக்கு
  46. 'இருக்கிற சொத்தைக் கத்தரிக்காயில் எது பரவாயில்லை எனத்
    தேடும்போது தேறியவர். அவ்வளவுதான்'

    இதைத்தானே தேர்தல் வரும் போது கூட்டணி அமைக்கும் தத்துவமாக
    உங்கள் கட்சி கடைபிடித்து வருகிறது.
    ஆகவே நீங்கள் அதை இங்கும் கடைப்பிடிப்பது சரிதான்.
    விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி
    அமைக்க முயன்றவர்கள் சிபிஎம்
    கட்சியினர்.

    தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் அறிவற்றவர்களா இல்லை வெறும்
    சுயநலவாதிகளா என்ற கேள்வி நியாயமானதுதான். அதைக் கேட்பவர்
    விவேக்கை புகழும் போது சிரிப்புதான்
    வருகிறது.ஏனென்றால் கிட்டதட்ட
    எல்லா கதாநாயகர்களும் மக்களுக்கு
    தத்துவம் சொல்லுபவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  47. 'இருக்கிற சொத்தைக் கத்தரிக்காயில் எது பரவாயில்லை எனத்
    தேடும்போது தேறியவர். அவ்வளவுதான்'

    இதைத்தானே தேர்தல் வரும் போது கூட்டணி அமைக்கும் தத்துவமாக
    உங்கள் கட்சி கடைபிடித்து வருகிறது.
    ஆகவே நீங்கள் அதை இங்கும் கடைப்பிடிப்பது சரிதான்.
    விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி
    அமைக்க முயன்றவர்கள் சிபிஎம்
    கட்சியினர்.

    தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் அறிவற்றவர்களா இல்லை வெறும்
    சுயநலவாதிகளா என்ற கேள்வி நியாயமானதுதான். அதைக் கேட்பவர்
    விவேக்கை புகழும் போது சிரிப்புதான்
    வருகிறது.ஏனென்றால் கிட்டதட்ட
    எல்லா கதாநாயகர்களும் மக்களுக்கு
    தத்துவம் சொல்லுபவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  48. நல்லப் பதிவு...தமிழ் ரசிகர்களை நல்லாவே கெடுத்து வைத்திருக்கிறார்கள்...பல அரைகுறைகள்...

    ஒரு சில உருப்படியானவர்களில் எங்கே உலகநாயகனை விட்டுவிடுவீர்களோ என்று நினைத்தேன்..
    குறிப்பிட்டுவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  49. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  50. ***"தமிழ்ச்சினிமாவில் அறிவற்றவர்கள் கதாநாயகர்கள்!"***

    I am sorry to say, this is a ridiculous title I have ever come across!

    What do you mean by a guy who is brainy?!


    ***அவரது தொலைக் காட்சிப் பேட்டிகளாட்டும், ஆனந்த விகடனில் எழுதிய தொடராகட்டும், அந்த மனிதர் மீதான மதிப்பும், மரியாதையும் கூடிக்கொண்டே இருக்கிறது.***

    I hear that he is NOT PUNCTUAL AT ALL . I am sure that should make you appreciate him more as that is the SIGNATURE of quality tamils, I guess!

    பதிலளிநீக்கு
  51. அருண்மொழிவர்மன்!

    //இதை நான் ஏற்றுக்கொண்டாலும் பேட்டி காண்பவர்களிலும் சில விடயங்கள் தங்கி இருக்கின்றன. //

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  52. அனானி!
    //Your comments is biased , As the very *good person* PrakashRaj is not a real life hero did you know this?.//

    நான் நல்லவரா, கெட்டவரா என்றே பேசவில்லை.நகைச்சுவை நடிகர்களிடமும், வில்லன் நடிகர்களிடமும் இருக்கும் சமூகம் குறித்த சிந்தனைகள், இந்த கதாநாயகர்களுக்கு ஏன் இல்லை என்று மட்டும்தான் குறிப்பிட்டு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  53. SP.VR. SUBBIAH !

    ஜோ!

    டக்ளஸ்!

    வெயிலான்!

    சீனிவாசன்!

    மங்களூர் சிவா!

    கோவி கண்ணன்!

    புன்னகை!

    ரிஷான் ஷெரிப்!

    பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  54. ramachandranusha(உஷா) !

    வாழ்த்துக்கு நன்றி.

    சவுண்டு இருந்தாலும் ஆனால் எழுத்தாளர்களில், சமூகப் பார்வை கொண்டவர்கள் எத்தனையோ பேரை பார்க்க முடியுதே!

    பதிலளிநீக்கு
  55. moulefrite!

    நீங்கள் சொல்வது ஆழமான விஷயங்கள் கொண்டது. அது குறித்து ஒரு பதிவு எழுதுவேன்.

    நான் தமிழ்க் கதாநாயகர்களின் பரிதாபகர நிலை பற்றி மட்டுமே சொல்ல் வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  56. புருனோ!

    //அப்படி பார்த்தால்

    இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று பார்த்தால் வித்தியாசம் இருக்கிறதா//

    ஒரு படத்தில் எத்தனையோ பேரின் உழைப்பும், திறமையும், அறிவும் செலுத்தப்பட்டு இருந்தாலும், இந்தக் கதாநாயகன் நடித்த படம் என்று குறிப்பிட்டுப் பேசுவதே நமது ரசிக தர்மமாயிருக்கிறது. அவ்வலவு முக்கியமானவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்ல வந்ததே என் பதிவின் மிக நேரான நோக்கம்.

    பதிலளிநீக்கு
  57. ராஜநடராஜன்!

    லோஷன்!

    பாவேந்தன்!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  58. அனானி!
    //இதைத்தானே தேர்தல் வரும் போது கூட்டணி அமைக்கும் தத்துவமாக
    உங்கள் கட்சி கடைபிடித்து வருகிறது.
    ஆகவே நீங்கள் அதை இங்கும் கடைப்பிடிப்பது சரிதான்.//

    அப்படியா!

    பதிலளிநீக்கு
  59. வருண்!

    //I am sorry to say, this is a ridiculous title I have ever come across!//

    உண்மைதான். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  60. ‍‍‍-----> அனானி!
    //Your comments is biased , As the very *good person* PrakashRaj is not a real life hero did you know this?.//

    ------>>>> மாதவ‌ராஜ்
    //நான் நல்லவரா, கெட்டவரா என்றே பேசவில்லை.நகைச்சுவை நடிகர்களிடமும், வில்லன் நடிகர்களிடமும் இருக்கும் சமூகம் குறித்த சிந்தனைகள், இந்த கதாநாயகர்களுக்கு ஏன் இல்லை என்று மட்டும்தான் குறிப்பிட்டு இருந்தேன்.//

    **************


    பிரகாஸ்ராஜின் ஆனந்தவிகடன் வியாக்கியானங்களை வைத்து உங்களுக்கு அவர்மீது மதிப்பு.


    சிலருக்கு விவேக்கின் "என் பின்னால இத்தனைக் கோடி மக்கள் உள்ளார்கள்" என்ற சாதி சார்ந்த பேச்சு ( சன் டிவீ தகராறின் போது விட்ட சவுண்டு) பிடித்து இருக்கலாம்.


    **************



    அது போல சிலருக்கு சிலரிடம் ஏதோ ஒன்று பிடித்து இருக்கலாம்.


    ஏன் உங்களின் ஆகச்சிறந்த அறிவுக்கான அளவுகோலைத் தூக்கிக்கொண்டு எல்லாவற்றையும் அளக்க முயல்கிறீர்கள்?

    ___________


    http://mathavaraj.blogspot.com/2009/02/blog-post_23.html

    .... நீங்கள் இப்படித்தான் அழ வேண்டும், இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது......என் வேதனையை புரியவைக்க, என் நெஞ்சைப் பிளந்தெல்லாம் காண்பிக்க முடியாது. அல்லது தீக்குளித்தெல்லாம் நிரூபிக்க முடியாது.....

    ______

    மேலே சொன்னது நீங்கதானே?

    எல்லா நடிகர்களும் ஆனந்தவிகடனில் எழுதியோ , அல்லது மேடைப்பேச்சுப் பேசியோ உங்களிடம் உங்கள் அளவுகோலின்படி அறிவாளி என்று நிரூபிக்க வேண்டுமா?

    என்ன கொடுமை?

    பதிலளிநீக்கு
  61. இந்த பதிவுக்கான பின்னூட்டம் முடிந்தால் எழுதுகிறேன்...

    இப்பொழுது நட்சத்திர வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  62. முதலில் என்னுடைய நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

    நீங்கள் சொல்லியிருக்கும் கூற்றுக்கள் ஓரளவிற்கு உண்மையானது...

    கண்ணைக் காட்டில் விட்டதுபோல, எந்த பக்கம் திரும்பினாலும், எந்த தியேட்டர் திரும்பினாலும்.. ஹேய், ஹேய் என்று சவுண்டு விடும் மசாலா படங்களே நிறைந்திருக்கும்போது, பொழுதுபோகாமல் படம் பார்க்க போகும் விரும்பிகள் என்ன செய்யமுடியும், இப்படியான ஏதாவது ஒரு படத்திற்குதான் போகமுடியும்... அத்திபூத்தாற்போல எப்போதாவது வரும் சில படங்களான, மொழி, அபியும் நானும், பூ போன்ற படங்கள்... கவனியுங்கள்... மக்கள் அந்த படங்களை தோல்வியடைய செய்வதில்லை... இப்படிப்பட்ட படங்கள் வந்தாலும் நாங்கள் பார்ப்போம் என்று சொல்லதக்க வகையில் ஆதரவினை தரவே செய்கிறார்கள்....

    எனவே பொதுமக்கள் நல்ல படங்களை ஆதரிக்கவே செய்கிறார்கள்...

    என்னைப்பொருத்தவரை தயாரிப்பாளர்கள் கதாநாயகர்களுக்காக படம் எடுக்க முன்வராமல் நல்ல கதைகளுக்கு படம் எடுக்க முன்வருவர்களானால்... மாற்றம் நிச்சயம் வரும்....

    இது தயாரிப்பாளர்களின் கையில்தான் உள்ளது....

    நல்ல பகிர்வு தோழரே!

    பதிலளிநீக்கு
  63. //நாம் எல்லாரும் காதலில் விழுந்தேன் படத்தையே ஆதரித்தோம்//

    யார் சொன்னது இப்படி?? சன் தொலைக்காட்சி மட்டும் தான் "காதலில் விழுந்தேன்" படத்தை ஆதரித்து ஒரே விளம்பரமா போட்டது.. படம் ப்ளாப்ங்க..
    இன்னொன்று சொன்னால் சிரிக்கக் கூடாது. நேற்றைய சன் டிவியின் டாப் டென் மூவீஸ் ல தீ படந்தான் முதலிடம்.
    "அபியும் நான்" படத்தை பாராட்டாதவர்களே இல்லை.

    விஜய், சிம்பு, விஷால் , நயன்தாரா, நமீதா, ப்ரியாமணி போன்றோருக்கு கலைமாமணி கொடுத்து ஊக்குவிக்கும் அரசாங்கத்தை கேட்பாரில்லையா??

    பதிலளிநீக்கு
  64. Mr. Madhvaraj JI,
    Please write several article like this then only you can try to change this (oshopriyans and varun )Stupids.

    Dont be get tired.

    Please guide those people to add salt in their foods.
    Very nice post!!!
    Go ahead....JI!!

    பதிலளிநீக்கு
  65. நட்சத்திர வாழ்த்துகள் மாதவராஜ் சார்.

    பதிலளிநீக்கு
  66. கல்வெட்டு!

    இது குறித்து இன்னும் விளக்கமாகவும், தெளிவாகவும் இன்னொரு பதிவு இன்று போஸ்ட் செய்திருக்கிறேன். அதையும் படித்துவிட்டு அங்கே வாருங்கள். பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  67. தமிழன் கறுப்பி!

    ஷீ-நிசி!

    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  68. உழவன்!

    இந்தப் பதிவின் தொடர்ச்சியாய் இன்றும் ஒரு பதிவு இன்று விளக்கமாய் எழுதியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  69. பொன்ராஜ்!

    வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி.

    ஓஷோப் பிரியனையும், வருணையும் தவறாக விளிக்க வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  70. வல்லி சிம்ஹன்!

    உங்களிடமிருந்து வாழ்த்துப் பெறுவது மிக்க சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  71. Hi Madavaraj. I accept ur view on our stupid actors like vijay,simbu and vishal. They are living in dreams and thinking like leaders. Villu movie is a great example that is enough to show his build-up.

    VIJAY is cheating and misleading his fans by his foolish punch dialogues

    பதிலளிநீக்கு
  72. அடிப்படையில் இப்பதிவு, தங்களது உண்மையான தகுதியை உணர்ந்துகொள்ளாமல் செய்யும் ஆர்ப்பாட்டத்தையும், அலட்டலையும் குத்திக்காட்டுவதோடு அவர்கள் பின்னால் சக்தி விரயம் செய்தபடி அலைந்துகொண்டிருக்கும் புலைத்தனமான ரசிக கும்பலை எண்ணி வேதனைப்படவும் செய்கிறது என்றே நினைக்கிறேன்.

    அவர்கள் வணிகர்கள் ; வணிகம் செய்கிறார்கள் ; அதற்கான அனனத்து தந்திரங்களிலும் ஈடுபடுகிறார்கள் ; அப்படி செய்தால்தான் வணிகம் செய்யமுடியும் ; இந்த கனவுத்தொழிற்சாலையிலுள்ள பலநூறு குடும்பங்கள் பிழைக்கும் ...

    எல்லாம் சரிதான்.

    அவரவர்கள் அவரவர்க்குரிய இடத்தில் மட்டும் இருந்தால் சரியே ! தம் தகுதி, திறமை மற்றும் எல்லையை உணர்ந்து அதற்கேற்ற இடத்தில் சிறந்து விளங்குதல் நலம் பயக்கும்.

    அன்புடன்
    முத்துக்குமார்

    பதிலளிநீக்கு
  73. நட்சத்திர வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  74. தமிழ் கதநாயர்களை அறிவற்றவர்கள் என்று சொன்ன நீங்கள், அதில் கமலையும், இயக்குனர் பாலாவையும் தவிர்த்து நீங்கள் அறிவற்றவர் ஆகிவிட்டீர்களே?

    இயக்குனர் பாலா அதிகம் பேச மாட்டார், ரவுடிகளை வைத்துதான் பேசுவார் (அஜித்தை மிரட்டியது போல) :)

    கமலை பற்றி பேசவே தேவை இல்லை, ஷகீலா படங்கள் தமிழ் நாட்டில் இல்லாத நேரங்களில் , தரமான படங்களை கொடுத்து தமிழர்களுக்கு சிறந்த சமூக கருத்துக்களை சொன்னவர். :)

    இவருடைய தசாவரம் ஆடியோ வெளியீட்டின் போது, விஜய் , மம்முட்டி, மல்லிகா ஆகியோரை அழைத்து, நீங்கள் குறை கூறும் விஜயை "குருவியே, பருந்தே" னு ஜால்ரா அடிச்சாரு இல்ல?
    அடுத்தவங்களுக்கு புரியாத மாதிரி பெசுரவந்தான் "அறிவு ஜீவி" னா, கீழ்பாக்கத்துக்கு போனா நிறைய பேரை பார்க்கலாம்.

    எவனுமே யோக்கியன் இல்ல இங்க

    The percentage only differs

    பதிலளிநீக்கு
  75. மிகவும் லேட்டாக தான் உங்களின் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது. இப்படி, தமிழ்ச்சினிமாவின் கதாநாயகர்களை அறிவற்றவர்களாய் பார்க்கும், உங்கள் அறிவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    ஒன்றை நிதானமாய் யோசித்து புரிந்துக்கொள்ளுங்கள். எல்லா கதாநாயகர்களும் வருமானத்திற்கு தான் நடிக்கிறார்கள். மற்றொன்று, கட்-அவுட் வைக்கும், பாலூற்றும் ரசிகர்கள் அவ்வாறு செய்வது எல்லாம் விளம்பரத்திற்காக தான். சுற்றிலும் யாரும் இல்லாவிட்டால், எந்த ரசிகனும் தனிமையில் கட்-அவுட்டிற்கு பாலூற்ற மாட்டான். மற்றும், நடிகனால், இப்போதெல்லாம், எந்த ரசிகனும் வாழ்க்கையை அழித்துக்கொள்வதில்லை.

    முதல் நாளன்று, கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, அடிச்சு புடிச்சு படம் பார்ப்பதெல்லாம், ஒரு த்ரில் மட்டும் தான். தீபாவளி பண்டிகை அன்று கிடைக்கும் ஒரு சந்தோஷம் போன்றதே. ஒன்று தெரியுமா, நீங்கள் சொல்லுகிற ரசிகர்கள் எல்லாம் அந்தக்காலத்தில் இருந்தார்கள். இப்போதெல்லாம் நிறைய பேர் சினிமாவுக்கே போறதில்லை.

    நல்ல நல்ல படங்கள் (முன்பை விட) வந்துக்கொண்டு தான் இருக்கின்றது. அவற்றை முடிந்த வரை தவறாமல் பாருங்கள்.

    கடைசியாக, சம்பாத்தியம் புருஷ லட்சணம். அதை, பெரும்பாண்மை இன்றைய கதாநாயகர்கள் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில், ஓட்டாண்டியாக போனவர்கள் ஏராளம்.

    அதனால், உங்கள் அறிவை மேன்மையாக்குங்கள். இன்னும், பழைய அறிவோடே எதையும் ஆராய்ந்தால், புதிய மாற்றங்கள் உங்களுக்கு புரியாமலேயே போய் விடும்.

    பதிலளிநீக்கு
  76. நீங்கள் சொல்லும் கமல்ஹாசன் ஜாதிய உணர்வு கொண்டவர் . தான் மட்டுமே தெரிய வேண்டும் என்று
    இருப்பவர் . அவர் படங்களில் ஜாதி வெறி உருண்டோடும் .......... விவேக் என்ன பேசினார் மேடையில் என்று
    உங்களுக்கு தெரியும் ....பேசுவது பகுத்தறிவு போவது காஞ்சிபுர மடம்...........என்னைக்கேட்டால் இவர்களுக்கு விஜய் சிம்பு தேவலை .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!