-->

முன்பக்கம் , � “நீட்டிய கைகள் வெட்டப்படும்”

“நீட்டிய கைகள் வெட்டப்படும்”

varun3

இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தைகள் இவை இன்று. “இந்துக்களுக்கு எதிராக யாராவது கைநீட்டினால், இந்துக்கள் பலவீனமானவர்கள் என்றோ அவர்கள் பின்னால் யாருமில்லை என்றோ யாராவது நினைத்தால், பகவத் கீதை மீது ஆணையாகச் சொல்கிறேன்... நான் அவர்களது கைகளை வெட்டுவேன்” என முழங்கி இருக்கிறார் அவர்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக பேசிய கூட்டத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் நேரு குடும்பத்தின் வழித்தோன்றல்களில் ஒருவரும், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் பேரனும், உயிரோடு இருந்திருந்தால் பிரதமராகி இருக்கக்கூடிய சஞ்சய் காந்தியின் மகனும் ஆகிய வருண்காந்திதான் இந்த வார்த்தைகளை  உதிர்த்திருக்கிறார். எப்பேர்ப்பட்ட அரசியல் தெளிவையும், பக்குவத்தையும் அந்தக் குடும்பம் போதித்து வளர்த்திருக்கிறது!

இந்துக்களுக்கு எதிராக யார் இங்கு கை நீட்டினார்கள் என்று தெரியவில்லை. இந்துக்கள் பலவீனமானவர்கள் என்று யார் கருதினார்கள் என்றும் தெரியவில்லை. கீதை மீதான சத்திய ஆவேசம் ஏன் என்று புரியவில்லை. ‘நான் இந்துக்கள் பக்கம் நிற்கிறேன்’ என்று உணர்ச்சிகரமாக உறுதி செய்து கொண்டிருக்கிறார் அவர் என்பது மட்டும் தெளிவாகிறது.

தேசத்தின் அரசியல் புரியாமல், இரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு துளி கூடத் தெரியாமல் பித்துக்குளித்தனமாக பேசிய பேச்சு இது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையே தெரியாமல் அள்ளித் தெளித்த வார்த்தைகள் இவை. அவர் மீது நடவடிக்கை இருக்கும் என்பதாய் பத்திரிக்கைச் செய்திகள் சொல்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் அகப்பட்டவர்களின் வழக்கமான “அவை திரித்துக் கூறப்படுகின்றன” சொல்லி,  தான் ஒன்றும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும் வருண் அறிவித்திருக்கிறார். பெரிய போராளிதான். பா.ஜ.கவில் இருக்கும் முஸ்லீம் தலைவர்களான நக்வி போன்றவர்கள் ‘வருண் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கட்சியிடம் முறையிட்டிருப்பதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பா.ஜ.கவோ ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றும் ‘அவர் பேசிய வீடியோ காட்சிகளை முதலில் பார்க்க வேண்டும்’ என்றும் எதுவும் தெரியாத புண்ணியமூர்த்தியாய்  கருத்துக்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. “அப்படி பேசியிருந்தால் தப்பு” என்று கூட சொல்ல வாய் வரவில்லை. வருண்காந்தியின் பேச்சு, இந்துக்களிடையே ‘எழுச்சி’ ஏற்படுத்தினால், அதில் ஆதாயம் தேடுவது என்பதும், வருண்காந்தி சிறையிலடைக்கபட்டால், அவரையே பலிகிடாவாக்கி தேர்தல் களத்தில் சூடான பிரச்சாரம் செய்து ஆதாயம் தேடுவது என்பதும் அவர்களது மௌனத்தின் அர்த்தமாக இருக்கும். எப்படியாவது ஓட்டுக்கள் வேண்டும், அவ்வளவுதான்.

சாதாரண மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இங்கு சொல்ல முடியாத துயரங்களோடு கவனிப்பாரற்றுத் தெருவில் காட்சியளிக்கின்றன. சுதந்திரம் அடைந்த தேசத்தில், இதோ நம் பிரஜைகள் வானமே கூரையாய் பிளாட்பாரத்தில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தையே குடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள் இலட்சக்கணக்கில் விவாயிகள். நாளை என்பது எப்படி விடியும் என்று கற்பனை கூட செய்ய முடியாமல் வாழ்வின் விளிம்பில் நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். ஆரோக்கியமற்ற சூழலில் பல கோடி குழந்தைகள். இவர்களில் யார் இந்துக்கள்... யார் இந்துக்கள் அல்லாதவர்கள்? யாருக்கு எதிராக யார் கைகளை நீட்டுவது? யார் கைகளை யார் வெட்டுவது?

காந்தியின் பேர்களோடு அறியப்பட்ட நேருவின் குடும்பத்தில் இருந்து கோட்சேவின் குரல் ஒலிக்கிறது. கோட்சேவும் கைகளில் பகவத்கீதையின் மீது சத்தியம் செய்துதான் காந்தியைக் கொன்றது சரி என்றான்.

என்ன செய்ய..! கவலையெல்லாம் இப்போது மக்களைப் பற்றியும், காந்தியைப் பற்றியும்தான். காந்தி என்றால் மகாத்மா காந்தி.

 

*

Related Posts with Thumbnails

45 comments:

  1. எனக்கு அரசியலை பற்றி
    ஒன்றும் தெறியாது ஆனால் இது போன்ற பிரிவினையான பேச்சும்
    மதவெறி சொற்க்களும் இப்படி முக்கிய நபர்களே எந்த ஒரு பொது சிந்தனையுமின்றி மிருகங்களைப்போல்
    பிளிருவது மிகவும் வருத்தமளிக்கின்றது இதை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது.

    உங்கள் இப்பதிவை படித்ததிலிருந்து
    ஒன்று புரிகின்றது அரசியலுக்கு யார் வந்தாலும் (இளைஞர்களும்) எந்த மாற்றமும் நிகழாது போல..

    ReplyDelete
  2. மதம் என்ற மதம் பிடித்திருக்கிறது என்பதுதான் பேச்சில் தெரிகிறதே...! அரசியல்.. கடவுளே இந்த அரசியல்... (இல்லாதவன் பெயரை என்னையறியாமல் கூப்பிட்டுவிட்டேனோ)

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Excellent article Sir !
    you have done a marvelous job to expose the bad elements of politics.And also it is current topic to be condemned by all people.
    kindly write a second article about the "so called innocent BJP/SIVA SENA" AND THEIR REACTIONS TOWARDS THIS SPEECH
    -selvapriyan-Chalakudy

    ReplyDelete
  5. Timely article sir
    selvapriyan-chalakudy

    ReplyDelete
  6. வடிவேலு சொல்றமாதிரி, சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..
    விவேக் சொல்றமாதிரி,யாரும் இல்லாத கடயில யாருக்குடா டீ ஆத்துற - தான் நினைவுக்கு வருது.

    தம்பி, ஒங்க பூட்டன், பாட்டி வரலாற கொஞ்சம் புத்தியில ஏத்திக்கோப்பா.

    ReplyDelete
  7. Do you think India will Develop??
    Specialy these south Asians are mad dogs,i,m not telling like this europians are telling like this!

    ReplyDelete
  8. A correction thet are religious mad dogs

    ReplyDelete
  9. One thing every one should consider in the same time. There are so many "sangangal" in our country. Even we have blue cros to protect animals. But there is no one politiican is ready to save "Hindus". It is easy to "naiyandi" any hindu gods in our country by politician, cinema and drama. Anyone can do the same towards muslim and chrisitians in our country. Because they are united and our politicians know that they will be against if any thing happened. For example one denish paper made a cartoon of prophit mohammad in their news paper and for that there was riot and all the muslim countries banned their products to import in the world. But in one american film, they use gayathri manthre for one sex sceen and they use the picture of our god in their shoes. No one asked about this?. including you editor, where you were on that time. do you think that you guys all become famous when you support minorirties?. He is correct, Varum was correct. Dont take that he has told you about our brothers muslim in our country, he satated about this against pakistan only. it is my opiniion only and it may differ by person to person. I regret if i mean any thing wrong to you

    ReplyDelete
  10. நம்ம நாட்டில் நடைமுறையைச் சொல்லி யாரும் வாக்கு கேட்பதில்லை உணர்ச்சியைத் தூண்டி அதில் ஆதாயம் தேடும் ஈனப் பிறவிகள் மட்டுமே இந்த மாதிரி இளைஞர்களை தூண்டி விடுகிறார்கள்..உதாரனமாக சமீத்தில் நடக்கும் சம்பவங்கள் பாகிஸ்தானில் இலங்கை வீரர்களை சுட்ட மத அடிப்படைவாத இளைஞர்கள், மும்பையில் தாக்குதல் நடத்திய கசாபின் வயது 21. என்ன செய்ய பாக்கிஸ்தானில் மத அடிப்படைவாத முட்டாள்களுக்கு நிகரான துப்பாக்கி நமது நாட்டில் வருன்காந்தி போன்ற இளைஞனின் கைகளில் உள்ளது போல..

    தனது தந்தையை மிஞ்சிவிடுவார் போல..

    //இதோ நம் பிரஜைகள் வானமே கூரையாய் பிளாட்பாரத்தில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தையே குடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள் இலட்சக்கணக்கில் விவாயிகள். //

    சத்திய வார்த்தைகள் தோழரே..காலத்தின் குழந்தைகளான நம்மால் இயன்றதை செய்ய முயல்வோம்..

    பதிவுக்கும் பகிர்விற்கும் நன்றி தோழரே..

    தோழமையுடன்

    முகமது பாருக்

    ReplyDelete
  11. தீர்க்கமான பார்வை!

    //ஆதாயம் தேடுவது என்பதும், வருண்காந்தி சிறையிலடைக்கபட்டால், அவரையே பலிகிடாவாக்கி தேர்தல் களத்தில் சூடான பிரச்சாரம் செய்து ஆதாயம் தேடுவது//

    சரியாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  12. முத்துராமலிங்கம்!
    //எனக்கு அரசியலை பற்றி
    ஒன்றும் தெறியாது ஆனால் இது போன்ற பிரிவினையான பேச்சும்
    மதவெறி சொற்க்களும் இப்படி முக்கிய நபர்களே எந்த ஒரு பொது சிந்தனையுமின்றி மிருகங்களைப்போல்
    பிளிருவது மிகவும் வருத்தமளிக்கின்றது இதை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது.//

    இந்த அரசியல் தெரிந்தால் போதும். யாரெல்லாம் கண்டிக்கிறார்களோ அவர்கள் பக்கம் நில்லுங்கள். மாற்றங்கள் நிகழும்.

    ReplyDelete
  13. த்மிழ்நதி!

    இல்லாதவர்களின் பெயரால்தான் இங்கு பிரச்சினையே!

    ReplyDelete
  14. விமலாவித்யா!

    நன்றி... வழக்கம்போல் உங்கள் பாராட்டுக்களுக்கு.

    ReplyDelete
  15. buginsoup !

    மறந்து விடுவது மக்கள் இயல்பு. அதை நினவுபடுத்தி தூண்டிக்கொண்டே இருக்க வேண்டியது வரலாற்று ஆசிரியர்கள் கடமை. இதை நான் சொல்லவில்லை. உலகப்புகழ்பெற்ற எரிப்ஹோஸ்வாம் சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
  16. அனானி!

    moulefrite!

    தயவுசெய்து நாய் என்ற வார்த்தைகளை எல்லாம் உபயோகிக்க வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  17. சூர்யா!

    தவறாகச் சொல்லியிருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும் என நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். அதற்குப் பிறகு நான் என்ன சொல்ல?

    ReplyDelete
  18. தம்பி முகமது பாருக்!

    சந்தனமுல்லை!

    வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  19. அரசியலே சாக்கடை என்பது முற்றிலும் உண்மை, குடும்பப்பூசலில் ஆதாயம் தேடும் அரசியல் சூழலில், தன் பாரம்பர்யம் அறிந்து பேசியிருக்க வேண்டாமா, இந்த வம்சத்தில் வந்து பிறந்துட்டயேன்னு நேருவின் குரல் கேக்குது

    ReplyDelete
  20. ரொம்ப அருமையான அலசல்.

    என்னதான் இருந்தாலும் வருண் அப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாதுதான்....

    அவரை வைத்தே கபடி ஆட நினைக்கும் பா.ஜ.க வந்தாலும், கூட்டணிக் கூத்திடும் காங்கிரஸ் வந்தாலும் நிலைமை ஒண்றும் பெரியதாக மாறப்போவதில்லை

    ReplyDelete
  21. நான் உங்களிடமிருந்து இந்த பதிவை எதிர்பார்த்தேன்.

    "காந்தியின் பேர்களோடு அறியப்பட்ட நேருவின் குடும்பத்தில் இருந்து கோட்சேவின் குரல் ஒலிக்கிறது. கோட்சேவும் கைகளில் பகவத்கீதையின் மீது சத்தியம் செய்துதான் காந்தியைக் கொன்றது சரி என்றான்"

    காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்ப்டுத்திவிட்டான்.

    ReplyDelete
  22. பிணங்களின் மத்தியில் வோட்டுகளை பொறுக்கும் கும்பலின், மற்றும் ஒரு முயற்சின் முகத்திரை கிழிக்கும் பதிவுஇவர்களை மக்களிடம் அம்பலப்படுத்துவது, இணையதளத்து வாசகர்களின் கடமை என நினைக்கிறேன்

    நா.நாராயணன்
    அருப்புக்கோட்டை

    ReplyDelete
  23. இந்தப் பேச்சு நல்லதோ கெட்டதோ,

    பிஜேபி நினைத்ததை சாதித்து விட்டது என்றே தோன்றுகிறது. தான் சொன்னதை திரித்து சொன்னதாக நாடகமும் ஆடலாம், அதே சம்யம் இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பில்லாத தன்மை இருப்பதாக கற்பனையை நிலை நிறுத்தி, அவர்களின் வழக்கமான இந்துத்வாவை நிலை நாட்டலாம்

    இருக்கவே இருக்கிறது, அயோத்தி பாபர் மசூதி, கொஞ்சம் கொஞ்சமாக அதையும் உள் கொண்டு வந்தால் இந்த தேர்தல் ஓடிவிடும்...

    மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் கையில் இருந்ததை விட கொடிய ஆயுதம்தான் இவர்களது வார்த்தைகள்...

    ReplyDelete
  24. dear friend

    all hindus r watching what is happening when muslims terroists killing hindu peoples and how the politicians r reacting to that. if any one persons even talk against muslims all r supporting them only becz of vote bank. surrely hindus need more varun gandhi... it will hapenn soon...
    jaihind

    ReplyDelete
  25. //
    சாதாரண மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இங்கு சொல்ல முடியாத துயரங்களோடு கவனிப்பாரற்றுத் தெருவில் காட்சியளிக்கின்றன. சுதந்திரம் அடைந்த தேசத்தில், இதோ நம் பிரஜைகள் வானமே கூரையாய் பிளாட்பாரத்தில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தையே குடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள் இலட்சக்கணக்கில் விவாயிகள். நாளை என்பது எப்படி விடியும் என்று கற்பனை கூட செய்ய முடியாமல் வாழ்வின் விளிம்பில் நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். ஆரோக்கியமற்ற சூழலில் பல கோடி குழந்தைகள். இவர்களில் யார் இந்துக்கள்... யார் இந்துக்கள் அல்லாதவர்கள்? யாருக்கு எதிராக யார் கைகளை நீட்டுவது? யார் கைகளை யார் வெட்டுவது?
    //

    உங்கள் உணர்வுகள் புரிகிறது...ஆனால் எரிகிற வீட்டில் பிடுங்குவதே அரசியல்...வீடு எரியாவிட்டால் கொளுத்து, அப்ப தான் பிடுங்க முடியும் என்பது சமீப கால அரசியல்...இதில் வருண் காந்தி விதிவிலக்கல்ல..

    அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் பற்றியோ, ஆறு வயதில் பஞ்சு மில்லில் பதினாறு மணி நேரம் வேலை பார்க்கும் குழந்தையை பற்றியோ இந்தியாவில் எந்த அரசியல் வியாதிக்கும், எந்த அரசு அதிகாரிக்கும் கவலை இல்லை. இந்த தேசத்தின் மற்றொரு புற்று நோய் கட்டியே வருண்காந்தி எனும் போது இதில் பெரிய ஆச்சரியமில்லை.

    ReplyDelete
  26. இந்தியா எனும் தேசம் எப்படி இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம்....உங்கள் பதிவிற்கு விழுந்த எதிர் வோட்டுகள்...நான் பார்க்கும் போது 5/25 என்று இருக்கிறது...

    உங்கள் பதிவு ஒரு நல்ல பதிவு, நேர்மையான எழுத்து என்று எண்ணுவதால் நான் பாசிட்டிவ் வோட்டு போட்டேன்...ஆனால், மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு உங்கள் எண்ணங்கள் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது...இது தான் இந்தியா...இவர்களின் மற்றொரு பிம்பமே வருண் காந்தி, அத்வானி, மதச்சார்பின்மை பேசிக் கொண்டே மத அமைப்புகளுடன் கூட்டணி ஏற்படுத்தும் காங்கிரஸ்...

    இந்திய அரசியலுக்கும் விபச்சாரத்திற்கும் அதிகம் வித்தியாசமில்லை...முன்னதில் சில நியாயங்கள் இருக்கிறது...பின்னதில் அதுவும் இல்லை...

    (விபச்சாரம் என்ற வார்த்தையில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் மன்னிக்கவும்!)

    ReplyDelete
  27. What a degeneration in the present generation of Nehru-Gandhi family.I do not thing Varun Gandhi's speech would be extempore one.Having come to know the mood of the electorate BJP is using him as a tool to spread communal hatred.This is a calculated effort of BJP to divert attention of the people from real issues facing them.

    ReplyDelete
  28. மக்களை மதங்களின் பெயரால் அடையாளப்படுத்தி அந்த அடையாளத்தின் பெயரில் கலவரங்ளையும் படுகொலைகளையும் நடத்தி. அதன் மூலம் பதவிக்கு வந்துவிடாலம் என்ற கணக்கில் நாடும் முழுவதும் வகுப்புவாத செயல்களை அமுல்படுத்திவரும் பாசக உண்மை முகம் இதுதான் என்பதை ஆர்.எஸ்.எஸ் வகுப்புக்கு வெளியே வெளிப்டையாக பேசிய வருண்னுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்க்கவேண்டும்

    ReplyDelete
  29. 11:38 am (5 hours ago)
    Thirunavkuarasu.

    ReplyDelete
  30. This is My India.---

    Afzal Guru is a Patriot.
    Bhagat Singh, Purohit, Sadhvi are Terrorists.

    SIMI and Indain Mujahiddhin are Social Service Organizations.
    RSS and VHP are Terrorist Organization.

    Godhra incident is an Accident.
    Gujarat riots are pre planned.

    Five Muslims die in Malegaon are Important.
    Thousands died in other blasts are Craps.

    Reservation for Muslims.
    Blasts for Hindus.

    Crores of Rupees subsidy for Haj Pilgrimage.
    Bullets & Blasts for Amarnath Pilgrimage. Not even Land for infrastructure.

    Supporting Islamic Terrorists is Secularism.
    Killing Indians is Patriortism.

    Babri Masjid is a Big Issue.
    Hundreds of Hindu Temples Demolished is Development.

    ALLAH IS GOD.
    RAMA IS FICTIONAL CHARACTER.


    -----------A Poor Hindu.

    ReplyDelete
  31. நல்ல பதிவு.

    1947 க்கு முன்பும், பின்பும் இப்படி பேசியும், செயல்பட்டும், கணக்கிடலங்கா கலவரங்களை நடத்தி, அமைப்பை வளர்த்தது ஆர்.எஸ்.எஸ்.

    ஆர்.எஸ்.எஸ். ஐ ஒழித்து கட்டும்வரை, இந்தியாவிற்கு பெரிய விடிவில்லை.

    ReplyDelete
  32. காந்தியின் பேர்களோடு அறியப்பட்ட நேருவின் குடும்பத்தில்..

    இதுபோல காந்தி பெயரை ஒட்டவைத்துக்கொண்டது கூட அரசியல்தான்.மற்றபடி நேருவின் குடும்ப பாரம்பர்ய பெயர் ஒன்றும் இல்லை.அதிகாரம் கைக்கொள்ள இந்த ஒட்டவைக்கப்பட்ட பெயரெ ரொம்ப உதவியாக இன்றுவரை இருந்து வருகிறது.

    ReplyDelete
  33. வருணுக்கு முன் ஜாமீன் கிடைத்துவிட்டதாமே? மத வெறியர்களை நீதிமன்றம் காப்பாற்றுகிறது.

    ReplyDelete
  34. சபாஷ் வருண்,பாரளுமன்றத்துக்கு குண்டு வைத்தவன் இன்னும் தூக்கிலிடவில்லை,அப்படி செய்தால் முஸ்லிம் ஓட்டு கிடைக்காது.70சதவீதம் இந்துக்கள் வாழும் நாட்டில் எப்படி முஸ்லிம் தீவிரவாதி இங்கு வந்து குண்டு வைப்பான்,இங்குள்ள முஸ்லிம்களீன் உத்வியில்லாமல்.

    ReplyDelete
  35. யாத்ரா!

    //அரசியலே சாக்கடை என்பது முற்றிலும் உண்மை//

    நல்ல நீரில் அசுத்தங்கள் கலந்திருப்பதால் சாக்கடையாயிற்று.

    ReplyDelete
  36. ஆதவா!
    ஹரிஹரன்!
    நாராயணன்!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  37. நரேஷ்!

    //மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் கையில் இருந்ததை விட கொடிய ஆயுதம்தான் இவர்களது வார்த்தைகள்...//

    உண்மைதான்.

    ReplyDelete
  38. அனானி!
    //all hindus r watching what is happening when muslims terroists killing hindu peoples and how the politicians r reacting to that.//

    தீவீரவாதிகளினால் இறந்தோரில் முஸ்லீம்களும் உண்டு நண்பரே!

    ReplyDelete
  39. அது சரி!

    உங்கள் கவலையை நானும் புரிந்து கொள்கிறேன். பகிர்ந்து கொள்கிறேன்.
    எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பது தெரியும் போதுதான், நமது பணி எத்தனை கடுமையானது என்பதும் தெரியும்.

    ReplyDelete
  40. அனானி!
    //Having come to know the mood of the electorate BJP is using him as a tool to spread communal hatred.//

    உண்மை.

    விடுதலை!

    தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  41. குரு!

    ஆரம்பமே தவறு. பக்த்சிங்கை தீவீரவாதி என எவன் சொன்னவன்?

    ReplyDelete
  42. குருத்து!
    கும்க்கி!
    அனானி!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  43. முருகா!

    //70சதவீதம் இந்துக்கள் வாழும் நாட்டில் எப்படி முஸ்லிம் தீவிரவாதி இங்கு வந்து குண்டு வைப்பான்,இங்குள்ள முஸ்லிம்களீன் உத்வியில்லாமல்.//

    எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி! முஸ்லீம்கள் அனைவரையும் வெறுக்க வைக்கும் இந்துத்துவாவின் லட்சியம் அப்பட்டமாய் வெளிப்பட்டு இருக்கிறது.

    ReplyDelete
  44. Is he told he will kill all the muslims? If any of Hindu has been affected by muslim terrorism then will give moral support to that Hindu. Whats wrong with his speech?
    If someone told in the reverse then all of you will apperiate that person. I don't know why all the so called communist takes double standards. Only thing is Vote Bank Politics.

    ReplyDelete