-->

முன்பக்கம் , � அவமானம் அவமானம் ரஹ்மானின் ’ஜெய் ஹோ’வுக்கு அவமானம்!

அவமானம் அவமானம் ரஹ்மானின் ’ஜெய் ஹோ’வுக்கு அவமானம்!

congress hand ஆஸ்கர் விருது பெற்ற போது தலை நிமிர்ந்த தேசம், இவ்வளவு வேகத்தில் அதைத் தொலைத்து விடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கைகள் பவனிவர,  இனி இந்தியா முழுவதும் ’ஜெய் ஹோ’ ஒலிக்கப் போகிறது. தங்கள் கட்சிக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருக்கிறது.  நேரமில்லை என அவர் மறுத்திருக்கிறார் . தனது மரியாதையை, மரியாதையாக காப்பற்றி இருக்கிறார். ஆனாலும் காங்கிரஸ் விடவில்லை. ஸ்லம் டாக் மில்லியனரின் இயக்குனரான பிரிட்டிஷ்காரர் டேனி போயலிடமிருந்து பாடல் உரிமைகயை பிரத்யேகமாக காங்கிரஸ் வாங்கியிருக்கிறது. ’ஜெய் ராமர்’’ ஜெய் ஹனுமான்’ என் முழங்கிய மோடி இப்போது ’ஜெய் ஹோ’ என்று  முழங்க ஆரம்பித்திருந்தாராம்.  தான் மட்டுமே அதைச் சொல்லலாம் என மோடி மீது வழக்கு ஒன்றும் தொடுத்திருக்கிறதாம் காங்கிரஸ். ’ஜெய் ஹோ’வுக்குத்தான் உள்நாட்டில் எத்தனை கிராக்கி!  எப்பேர்ப்பட்டவர்களிடம் போட்டி!!

ஆசியாவிலேயே மிகப் பெரும் சேரிகளை உருவாக்கிய அற்புதமான கட்சியின் சுயபுராணத்திற்கு ’ஜெய் ஹோ’வா?

தற்கொலை செய்து இறந்து போன இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகளின் ஆதரவற்றக் குடும்பங்களின் அடி வயிற்றுக் கேவல்களை மூடி மறைக்க ‘ஜெய் ஹோ’வா?

1980களில் ஐ,டி,பி,ஐ வங்கியில் கடன் கொடுக்க மறுக்கப்பட்ட அம்பானி 29 வருடங்களுக்குப் பிறகு இப்போது ஐ.டி.பி.ஐ வங்கியையே வாங்குவதற்கு  முயற்சி செய்கிறார். இப்படிப்பட்ட மில்லியனர்களுக்குச் சேவகம் செய்ய ‘ஜெய் ஹோ’வா?

வாங்கும் சக்தியை குறைத்து, விலைவாசியை உயர்த்தி, சாமானிய மக்களை வாழ்வதற்கு தகுதியற்றவர்களாக்கிய ‘பாரம்பரிய மிக்க’ கட்சியின் சங்க நாதமாக ’ஜெய் ஹோ’வா?

எதிர்காலம் இருண்டு போய்க் கிடக்க, நம்பிக்கைகளை தொலைத்தபடி நிற்கும் தேசத்தின் இளைஞர்களுக்கு இருக்கும் குறைந்தபட்சக் கனவுகளையும் அழித்தொழிக்க ’ஜெய் ஹோ’வா?

அணுசக்தி உடன்பாடு குறித்த ஒட்டெடுப்பில், எம்.பிக்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த ’ஜெய் ஹோ’ மெட்டும், பாடலும் விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.  இனி மக்களின் ஓட்டுக்களும் விலைகொடுத்தே வாங்கப்படலாம்.

தேர்தலில் காங்கிரஸ் ஒருவேளை (படத்தின் கதாநாயகன் மில்லியனர் ஆனது போல்) வெற்றி பெற்றால், இப்படிப்பட்ட கட்சிக்கு குரல் கொடுத்ததற்காக ’ஜெய் ஹோ’வுக்கு அவமானம்.
காங்கிரஸ் தோல்வியடைந்தால், மக்கள் மனதில் பாடல் குறித்து எழுந்திருந்த பெருமிதச் சித்திரங்களை அழித்ததற்காக ’ஜெய் ஹோ’வுக்கு அவமானம்.

எப்படியிருந்தாலும்-
அவமானம் அவமானம் ரஹ்மானின் ’ஜெய் ஹோ’வுக்கு  அவமானம்!

Related Posts with Thumbnails

40 comments:

 1. நச் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

  சுதந்திரத்துக்குப்பின் அமைப்பைக் கலைத்துவிடலாம் என்ற காந்திக்கே அல்வா கொடுத்த கட்சியாயிற்றே!

  இன்னும் எத்தனை ஜெய்ஹோ கோஷ்டிகள் உருவாகுமோ?

  ReplyDelete
 2. ஜெய் ஹோ ரகுமான், படத் தயாரிப்பாளர் போன்றோரின் அனுமதியோடு தானே விலைக்கு விற்கப் பட்டிருக்கு / பயன்படுத்த அனுமதிக்கப் பட்டிருக்கு. அப்போ அவங்க மேல தான் தப்பு. அத்தோட ரகுமான் 'சாரே சகாச்சே..'லாம் இருக்கறப்ப வந்தே ஏமாத்துறம் பாடி பிரபலமாக்கியவர் தானே.
  இது அவருக்கு தேசிய அளவில்
  முன்னேற, பேரெடுக்க உதவியது. தன்னை எப்போதும் தேசியவாதியா தானே காட்டி கொண்டிருக்கிறார்? ஆகவே காங்கிரசும் ஒன்னு தான், ரகுமானும் ஒன்னுதான். விட்டுத் தள்ளுங்க!
  பாஜக இந்தியா ஒளிர்கிறதுனு தன்னக்குத் தானே ஆப்பு வச்சுக் கிட்ட மாதிரி, ஜெய் ஹோ சொல்லி தனக்குத் தானே மண்ண வாரித் தூத்திக்க போவுது காங்கிரசு.

  ஜெய் ஹோக்கு என்ன அவமானம்? அந்தப் பாட்டுக்கு ஏன் ஆஸ்கார் கெடச்சுதுன்னே இன்னும் புரியல.
  இதுல அவமானம் வேறயா? பேப்பர் ப்ளேன்ஸ் தான் உருப்படியா இருந்தது அந்தப் படத்துல,அதுக்கு விருது கொடுத்து இடதுசாரி, தீவிர ஈழஆதரவு பாடகியான மாயாவ மேடையேத்த
  வேணாம்னு கருதித் தான் ஜெய் ஹோவுக்கு ஆஸ்கார் கமிட்டி கொடுத்திருக்கலாம்னு தோணுது!

  ReplyDelete
 3. அவமானம்... நம்மாளுங்க செத்தா கூட அதில ஆதாயம் இருக்கானன பார்க்கிறவங்கதான...


  இந்த பதிவு சம்பந்தப்பட்டவர்களுக்கு முகத்தில் அறையும் பதிவு..

  ReplyDelete
 4. ////ஜெய் ஹோக்கு என்ன அவமானம்? அந்தப் பாட்டுக்கு ஏன் ஆஸ்கார் கெடச்சுதுன்னே இன்னும் புரியல.////

  அந்நியன் சார்...

  ஆஸ்கர் கமிட்டிக்காரங்கள விட உங்களுக்கு அறிவு ஜாஸ்திங்க. ஒருத்தன் விருது வாங்கினா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே!!

  ReplyDelete
 5. "அந்நியன் சார்...
  ஆஸ்கர் கமிட்டிக்காரங்கள விட உங்களுக்கு அறிவு ஜாஸ்திங்க."


  அறிவு மட்டுமா!

  ஆதவா, ரசிச்சேன் உங்க கமெண்ட்டை.

  ReplyDelete
 6. //ஆஸ்கர் கமிட்டிக்காரங்கள விட உங்களுக்கு அறிவு ஜாஸ்திங்க. ஒருத்தன் விருது வாங்கினா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே!! //

  அதி அறிவாளி ஆனியன் சார்.. சே சாரி ஆதவன் சார், தமிழ் சரியாப் புரியலன்னா இதான் பிரச்சன! ரகுமான் விருது வாங்கினது எனக்கு பொறுக்குது பொறுக்கலன்னு எங்க சொல்லி இருக்கேன்! பின்னணி இசைக்கு விருது வாங்கினது மகிழ்ச்சியானது! ரகுமான் இசையில் தமிழில் வெளியான சில படங்களின் பின்னணி இசை ஸ்லம்டாக் மில்லியனரை விட சிறப்பா இருக்கும். அது வேற விஷயம்! நான் பேசினது ஜெய் ஹோக்கு கெடச்ச விருது பத்தினது! ஆஸ்கார் கமிட்டிக்காரங்களுக்கு அறிவு
  மட்டுமில்ல, அரசியலும் ஜாஸ்தி இருக்குன்னு ஆஸ்கார் வரலாத்த வச்சு சொல்லாம்.
  உங்க ரசிகர் மன்றச் சண்டைய வேற யார் கூடவாச்சும் வெச்சுக்கோங்க ஆனியன் சாரு..

  ReplyDelete
 7. ///ஆசியாவிலேயே மிகப் பெரும் சேரிகளை உருவாக்கிய அற்புதமான கட்சியின் சுயபுராணத்திற்கு ’ஜெய் ஹோ’வா///

  Yes...
  Also, this Oscar is to expose (shining???)Indian slum to the world...

  Renga

  ReplyDelete
 8. 2004ம் ஆண்டுத்தேர்தலில் வாஜ்பாய் அன் கோ இந்தியா ஒளிர்கிறதுன்னு சொன்னாங்க, இப்ப என்னடான்ன காங்கிரஸ் ஜெய் ஹோன்னு சொல்லுது. ஆனா ஒன்னு மட்டும் மக்களுக்கு என்ன வேணுமோ அத சொல்லலியே....செய்யலியே..

  2004ம் ஆண்டில் டாடா, பிர்லா அம்பானிகள் ஒளிர்ந்ததைவிட இப்ப நல்லவே ஒளிர் ராங்க.. ஒரு வேளை இந்தியான்ன இவங்க மட்டும் தானா அப்ப நம்ம எல்லாம் சும்மா ஓட்டு மெஷின்ல இருக்கற பட்டன அமுக்க மட்டும் தானா???

  ReplyDelete
 9. எனக்கு குழப்பமாகவே இருக்கிறது.

  யோசித்து எதிர்வினை ஆற்றுகிறேன்

  ReplyDelete
 10. இலங்கைப் பிரச்சனைக்காக, ஜெய் ஹோ பாடலை சற்று மாற்றி
  கழகத்தினர் “அய்ய கோ...” என்று மாற்ற உள்ளதாகக் கேள்வி......

  ReplyDelete
 11. Rahman's "Jai Ho" song brought happiness/pride to our nation.No doubt.No dispute.But no political party is suppose to use it for their mere political gains.It should not be sold to any political party.If Rahman has any agreement with this "trade" he should be condemned.The political party which bought and use should also be condemned.We,the people,should also raise our voices to stop using for political urgencies.The literary mouths shall do the work without delay.---Selvapriyan-Chalakudy

  ReplyDelete
 12. மாதவ்ராஜ், நீங்கள் சிபிஎம் கட்சியை சேர்ந்தவர், தமுஎ(க)ச வில் இருப்பவர், கடந்த தேர்தலில் காங்கிரசை ஆதரித்தவர், கூட்டணி வைத்தவர், 4 வருடம் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்தவர்... அப்போதெல்லாம் காங்கிரசின் யோக்கியதை தெறியவில்லையா?
  இப்போது உங்கள் கட்சி காங்கிரசு கூட்டணி இல்லையென்றவுடன் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என நீங்கள் பேசுவதும் ஓட்டரசியல் தானே?

  ஒரு வேளை உங்களுக்கும் சிபிஎம்முக்கும் தொடர்பில்லையென்றால் இந்த பின்னைட்டத்துக்கும் வருத்தம் தெறிவிக்கிறேன். உங்கள் அரசியல் சார்பை வெளிப்படையாக அறிவிக்க வேண்டுகிறேன்!

  ReplyDelete
 13. ஆஸ்கர் “வாங்கிய” ஜெய் ஹோ ஒரு பாட்டு, அதைப் பத்தி பதிவு வேற போடணுமா.. போங்கப்பா போய் உருப்படியா எதாவது வேலையைப்பாருங்க

  ReplyDelete
 14. //இந்த பதிவு சம்பந்தப்பட்டவர்களுக்கு முகத்தில் அறையும் பதிவு..//

  சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்குமா!

  ReplyDelete
 15. அவமானம்.

  ReplyDelete
 16. அரசியல் அசிங்கம் எல்லாவற்றுக்குள்ளும் தன்னை கரைக்கவே அவதிப்படுகிறது.

  ReplyDelete
 17. போன நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய BJP "இந்தியா ஒளிருதுனு" சொல்லி அவங்க கட்சியே இப்போ இருண்டு போச்சு.

  இந்த முறை கோமான்களின் கட்சியான காங்கிரஸ் "ஜெய் ஹோ" னு வருது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் இது முதல் தடவை அல்ல சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இது மாதிரி நிறைய ஏமாற்று வேலையை இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் கொடுத்துள்ளது.

  பாப்போம் எல்லாம் மே இரண்டாம் வாரம் வரைதான்...

  தோழமையுடன்

  முகமது பாருக்

  ReplyDelete
 18. சுரேகா!
  //காந்திக்கே அல்வா கொடுத்த கட்சியாயிற்றே!//
  சரியாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 19. //பாஜக இந்தியா ஒளிர்கிறதுனு தன்னக்குத் தானே ஆப்பு வச்சுக் கிட்ட மாதிரி, ஜெய் ஹோ சொல்லி தனக்குத் தானே மண்ண வாரித் தூத்திக்க போவுது காங்கிரசு.//

  அப்படியே நடக்கட்டும் அனானிமஸ்.

  ReplyDelete
 20. நன்மனம்!

  இந்த வாலைப்பக்கத்தில் உங்கள் முதல் மறுமொழி. ந்ன்றி.

  ஆதவா!

  //சம்பந்தப்பட்டவர்களுக்கு முகத்தில் அறையும் பதிவு..//

  நன்றி.

  ReplyDelete
 21. ஞானசேகரன்!

  //’ஜெய் ஹோ’வா?//

  ஆமாம்.

  ReplyDelete
 22. ரெங்கா!

  //this Oscar is to expose (shining???)Indian slum to the world...//

  யோசிக்கணும்.

  ReplyDelete
 23. ஹரிஹரன்!
  //2004ம் ஆண்டில் டாடா, பிர்லா அம்பானிகள் ஒளிர்ந்ததைவிட இப்ப நல்லவே ஒளிர் ராங்க.. ஒரு வேளை இந்தியான்ன இவங்க மட்டும் தானா அப்ப நம்ம எல்லாம் சும்மா ஓட்டு மெஷின்ல இருக்கற பட்டன அமுக்க மட்டும் தானா???//

  புரிஞ்சுட்டா....

  ReplyDelete
 24. முரளிக்கண்ணன்!

  என்ன குழப்பம்?

  ReplyDelete
 25. //கழகத்தினர் “அய்ய கோ...” என்று மாற்ற உள்ளதாகக் கேள்வி......//

  அப்படியா அனானிமஸ்!

  ReplyDelete
 26. விமலாவித்யா!

  //The literary mouths shall do the work without delay//

  ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 27. புதிய ஈழவன்!

  சொல்லப்பட்ட கருத்து சரியானதா தவறானதா என்பதை விட சொன்னவர் யார் என்பதுதான் உங்களுக்கு முக்கியமானது போலும்.

  ReplyDelete
 28. கவனப்பிரியன்!

  இந்த வலைப்பக்கத்தில் உங்கள் முதல் மறுமொழி. நன்றி.

  ReplyDelete
 29. ஹேமா!
  அரசியல் அசிங்கம் கிடையாது. இங்கு அசிங்கப்படுத்தப்படுகிறது.

  அனானிமஸ்!

  நன்றி.

  ReplyDelete
 30. தம்பி முகமது பாருக்!

  //பாப்போம் எல்லாம் மே இரண்டாம் வாரம் வரைதான்...//

  பார்ப்போம்.

  ReplyDelete
 31. //சொல்லப்பட்ட கருத்து சரியானதா தவறானதா என்பதை விட சொன்னவர் யார் என்பதுதான் உங்களுக்கு முக்கியமானது போலும்.//

  இதை நான் உங்களிடத்தில் எதிர்பார்க்கவில்லை. நல்லது.
  கருணாநிதி வாரிசு அரசியல் கூடாதென்றாலோ, அத்வானி இஸ்லாமியர்களின் நல்வாழ்வை பற்றி பேசினாலோ நீங்கள் என்ன எழுதியிருப்பீர்கள்?
  இப்பொழுது அல்ல எப்பொழுதுமே சொல்லும் கருத்தைவிட சொன்னவர்தான் முக்கியமானவர். ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதகதைக்கு அர்த்தம் என்ன?

  பிறகு என்னுடைய கேள்விக்கு இன்னும் நீங்கள் பதிலளிக்கவில்லை.
  அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

  ReplyDelete
 32. புதிய ஈழவன்!

  நீங்கள் எதிர்பார்ப்பதையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

  நான் கருணாநிதி இல்லை. அத்வானி இல்லை. ஓநாயுமில்லை.

  ReplyDelete
 33. //நான் கருணாநிதி இல்லை. அத்வானி இல்லை. ஓநாயுமில்லை.//

  நீங்கள் யார்?
  அரசியல் கட்டுரைகளை எழுதும் உங்கள் அரசியல் சார்பு என்ன?
  எந்த கட்சிக்கு ஆதரவாளர் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்வதுதான் உங்களைப் போன்ற விமர்ச்சருக்கு அழகு. படிப்பவர்களை மதிப்பதற்கான அடையாளமும் அதுவே.

  ReplyDelete
 34. Hallo Puthiya Elavan Sir !
  When we r writing comments we not not mentioning our political affiliations and or interest.To my knowledge Madhavaraj Sir is a "LEFTIST" ideologist.Your questions are not towards the issues but personal.It could be avoided.Politically we shall discuss many things.Being a literary person he has written about the Rehman's "JAI HO" song..It should not be used in the election campaign.This is our wishes.---Selvapriyan

  ReplyDelete
 35. @vimalavidya I respect your comments... My point is that I need to know his Political Affiliation because I heard that he is from CPIM and a Part of Tha. Mu.Ea Sa. I had asked him that and he has not replied yet. The purpose of Asking him ... well here he is criticizing congress. but all 4 years his party has been supporting congress in the centre. Did he not know that congress was bad at that time. Now His party is affiliated to AIADMK so he has to say why AIADMK is good too.
  If he does not a part of CPIM or CPI he still needs to tell his Political affiliation because he writes about politics and criticizes politicians . And in these troubled times, when people are polarized on the Eelam issue
  he needs to open. WQe respect his writings, he respects us by being open about his Political background.

  ReplyDelete
 36. You belong to CPIM and a Part of Tha. Mu.Ea Sa.
  I am a supporter of Izhath thamizharkal.
  So Your articles is superb!!!!
  Nothing to say more...

  ReplyDelete
 37. You belong to CPIM and a Part of Tha. Mu.Ea Sa.
  I am a supporter of Izhath thamizharkal.
  So Your article is superb!!!!
  Nothing to say more...

  ReplyDelete