-->

முன்பக்கம் , � என்னடா பைத்தியக்கார உலகம் இது....

என்னடா பைத்தியக்கார உலகம் இது....

child 

உங்கள் குழந்தைகள், உங்களுடைய குழந்தைகள் அல்ல.
நீண்டு செல்லும் இந்த வாழ்வின் மகன்களும், மகள்களும் ஆவர்.
அவர்கள் உங்கள் வழியே வந்திருக்கலாம்,
ஆனால் உங்கள் மூலமாக அல்ல.
உங்கள் அன்பை அவர்களுக்குச் செலுத்தலாம்,
உங்கள் எண்ணங்களையல்ல.
அவர்களது உடல்களுக்கு நீங்கள் வீடு வைத்திருக்கலாம்,
ஆனால் ஆன்மாவுக்கல்ல.
நாளைய உலகின் வீடுகளில் அவர்கள் குடியிருப்பார்கள்,
அங்கு நீங்கள் கனவிலும் கூட பிரவேசிக்க முடியாது.
அவர்களைப் போல இருக்க நீங்கள் முயற்சிக்கலாம்,
ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வலியுறுத்தாதீர்கள்.
வாழ்க்கை பின்னோக்கிப் போவதுமில்லை; நேற்றோடு நிற்பதுமில்லை.
நீங்கள் அம்பறாத்துணிகள்.
குழந்தைகள் அம்புகள்.

கலீல் கிப்ரானின் இந்தக் கவிதையில் உள்ள ஒரு வரியையோ, வார்த்தையையோ அந்த நிரஞ்சனால் புரிந்திருக்க முடியாது.

மனைவி வேலைக்குச் செல்லத் தடையாய் இருக்கும் எனக் கருதி, பிறந்த நான்கு நாட்களாவதற்குள் பெற்ற குழந்தையைக் கொன்றிருக்கிறான் அவன். சென்னை சூளைமேட்டில் நேற்று நடந்திருக்கிறது. “அவனைத் தூக்கில் போடுங்கள்” என அவன் மனைவி கதறியிருக்கிறாள். தன் ஊனையும், உயிரையும் உருக்கி, அன்பையெல்லம் தேக்கி வைத்த அந்த சின்னஞ்சிறு மலரின் வாசம் தாய்க்குத் தெரியும்.

எதுவும் சொல்ல முடியாத இறுக்கமும், மௌனமும் சூழ்கிறது. கண்மூடித்தனமான கோபம் வருகிறது.

என்னடா பைத்தியக்கார உலகம் இது....

 

*

Related Posts with Thumbnails

28 comments:

 1. வணக்கம் மாதவராஜ்

  அருமை அருமை கலீல் கிப்ரானின் கவிதை

  சரியான இடத்தில் எடுத்தாண்டு இருக்கீங்க

  நன்றி

  ReplyDelete
 2. மீ த செகன்ட்...
  படிச்சுட்டு வரேன்...

  ReplyDelete
 3. நெஞ்சு பொறுக்குதில்லையே!!!!!

  ReplyDelete
 4. உங்கள் அன்பை அவர்களுக்குச் செலுத்தலாம்,
  உங்கள் எண்ணங்களையல்ல.//

  அழகான வரிகள்...

  ReplyDelete
 5. பிறந்த நான்கு நாட்களாவதற்குள் பெற்ற குழந்தையைக் கொன்றிருக்கிறான் அவன்.//

  கட்டாயமாக தூக்கில் போடவே வேண்டும்...
  இவனெல்லாம் வாழ்ந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறான்???

  ReplyDelete
 6. மனித ஜென்மமா அல்ல மிருகமா? பொருத்தமான கவிதை நண்பா..

  ReplyDelete
 7. என்ன ஒரு கொடூரம்.. அதற்குப் பதில் ஏதாவது ஒரு தொண்டு நல அமைப்பிடம் தத்து கொடுத்திருக்கலாமே..

  எங்கள் ஊரில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு குழந்தைகளை விற்றிருக்கிறார்கள்.

  பாவம்.. குழந்தைகள்... அவைகள் வாழட்டும். !!!

  ReplyDelete
 8. நேற்று இந்த செய்தியைக் கேட்டதில் இருந்து மனதே சரியில்லை

  ReplyDelete
 9. சமூகத்தின் மேல் நியாமான வெறுப்பும் அன்பும் உள்ள நல்லவர்களெல்லாம் துரோகத்துக்கு பெயர் பெற்ற கட்சியில் இன்னமும் இருக்கிறார்கள். என்னடா பைத்தியகார உலகம் இது...

  ReplyDelete
 10. என்ன கொடுமை சார்..

  ReplyDelete
 11. அலுவலகம் கிளம்புகையில் 'உம்' என்றிருந்தவளைக் கேட்ட போது அவள் சொன்னது இந்த செய்தி. அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. நமது கல்விக் கூடங்களில் முதலில் மனிதம் கற்பிக்கப் படவேண்டும். போலவே தன்னம்பிக்கையும். இவைகள் இல்லமற் போனதின் அடையாளங்களே இந்தக் கொலையும், சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் குடும்பம் முழுவதையும் கொன்று, தற்கொலை செய்துகொண்ட இந்திய இளைஞன் ஒருவனின் செயலும். Misplaced priorities in life.

  அனுஜன்யா

  ReplyDelete
 12. சமூக அடிப்படையில் உள்ள தவறுதானே இது? ..அத்தகைய தவறு அவன் மீது செய்த தாக்கத்தால் வந்த வெளிபாடு தானே இது?பணத்தின் தேவை அதிகமாகவே ..மனைவி வேலைக்கு செல்லாமல் இருக்கும் பாதிப்பை யோசிக்கிறான் ..நமது பயணங்கள் எல்லாம் எதை தேடி போகிறோம் என்பதை அறியாமலே உள்ளது ...ஏதோ ஒரு புள்ளியில் முரண்பாடுகளை உணரும் போது தான் இப்படி முரண் பட்டு விடுகிறோமோ?குற்றவாளியின் இந்த மனநிலைக்கு யாரெல்லாம் காரணம்?

  ReplyDelete
 13. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

  ReplyDelete
 14. //எதுவும் சொல்ல முடியாத இறுக்கமும், மௌனமும் சூழ்கிறது. கண்மூடித்தனமான கோபம் வருகிறது.

  என்னடா பைத்தியக்கார உலகம் இது.... //

  இத‌ற்கு மேல் என்ன‌ சொல்வ‌து.

  ReplyDelete
 15. தாங்க முடியல, மனசு பாரமா இருக்கு சார்

  ReplyDelete
 16. http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_4390.html

  நேரமிருந்தால் வந்து பார்க்கவும்...

  ReplyDelete
 17. வனம்!

  வேத்தியன்!

  கதிர்!

  கர்த்திகைப் பாண்டியன்!

  ஆதவா!

  இந்த வேதனையை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 18. முரளிகண்ணன்!

  அனுஜன்யா!

  ஆ.ஞானசேகரன்!

  இதுபொன்ற செய்திகளை தாங்க முடியாத நல்ல இதயங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 19. கனல்!

  யாரைச் சொல்கிறீர்கள், எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

  ReplyDelete
 20. பணம் தான் வாழ்வின் ஆதாரம் என்று கருத வைக்கிற இந்த அமைப்புதான் முக்கிய காரணம். அதையும் தாண்டி மனிதமும், அன்பும் இருக்கிறது என்பதை உணரமுடியாத இரக்கமற்ற இதயம் அடுத்த காரணம்.

  ReplyDelete
 21. தீபா!

  யாத்ரா!

  இதுபோன்ற துயரச்சம்பவங்களின் பொது மௌனம்தான் சூழ்கிறது.

  ReplyDelete
 22. நல்ல பதிவு மாதவராஜ்.

  அனுஜன்யா சொல்வது போல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மனிதம், அன்பு, கொடை, தர்மம், உதவல் போன்றவை கற்று கொடுக்க பட வேண்டும்.

  கல்லூரிகளில் மட்டும் அல்ல, பணி புரியம் நிறுவனங்களிலும் இவை கற்று கொடுக்க பட வேண்டும்.

  . அலுவலகங்களில் மிகுந்த போட்டி மனப்பான்மை, லாபம், பணம் ஒன்றே குறிக்கோள், நிறுவனங்கள் அந்த பண மனப்பான்மையை தங்கள் ஊழியர் மீதும் திணிப்பதால் வரும் விளைவுகள் இவை.

  எந்த நிறுவனத்தில் சிறந்த மனிதாபிமானம் உள்ள ஊழியரை அங்கீகரிக்கிறார்கள்.., நிறுவனங்கள் போட்டி மனப்பான்மை, ஒப்பீட்டை ஊக்குவிப்பதால் வந்த விளைவுகள் இவை.

  நிரஞ்சன் உருவாக நாமும் நம் சமூகமும் ஒரு காரணம்

  ReplyDelete
 23. வால் பையன்!
  வேத்தியன்!

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 24. சன் செய்திகளில் இந்த செய்தியை கேட்டு நானும் கொதித்துதான் போனேன்...

  என்ன சொல்வது அவனைப்பற்றி...
  "அவன்" என்ற உயர்தினையைக் கூடப் பெறத் தகுதியில்லாத அந்த மனித மிருகத்தை .....
  அவன் படித்து என்ன செய்ய..?
  அந்த பிஞ்சா வாழத் தகுதியற்றது...?
  இல்லை இல்லை அவன் தான்....
  எனக்கு மட்டும் தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் இருந்தால்
  நிச்சயம் அவனுக்கு "மரண தண்டனை" தான்...

  உலகம் எங்கே செல்கிறதென பயமாய் இருக்கு ஸார்.....

  ReplyDelete
 25. உலகம் பற்றிய பயத்தையும் விரக்தியையும், ஆத்திரத்தையும் ஒருங்கே கொடுத்த சம்பவம் இது! இவைகள்தான் உலகமெங்கும் நிகழ்கின்றன எந்த தினசரி நல்ல செய்திகளோடு வருகிறது... :(

  ReplyDelete
 26. டக்ளஸ்!

  தமிழன் கறுப்பி!

  வருகைக்கும், பக்ர்வுக்கும் நன்றி.

  ReplyDelete